| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2807 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஸர்வேச்வரனைக் கொண்டாடப் பிறந்த ஆழ்வார் தம் திருவுள்ளத்தைக் கொண்டாடடுகிறாரிப்பாட்டில். ஏனெனில் கைங்காரியச் செல்வத்திற்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாளாக இழந்து கிடந்த நமக்கு இந் நெஞ்சினாலன்றோ இன்று பேறுவாய்த்தது என்ற உவப்பினால். ராஜ்யத்தை இழந்து கிடந்த வொரு ராஜகுமாரனை ஒருவன் ராஜ்யத்திலே புகுவித்தால் ‘இவனாலேயன்றோ நாம் இப்பேறு பெற்றது’ என்று அவனைக் கொண்டாடுவர்களன்றோ, அதுபோல.) 1 | ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1 | ஊனில்,Oonil - மாம்ஸ ரூபமான சரீரரத்தில் வாழ்,Vaazh - வாழ்கின்ற உயிரே,Uyire - நெஞ்சமே! நல்லை போ,Nallai po - நீ நல்லவன் காண்; (ஏனென்றால்) உன்னை பெற்று,Unnai petru - உன்னை ஸ்வாதீனமாகப் பெற்றதனால், வான் உளார்பெருமான்,Vaan ulaarperumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும் மதுசூதன்,Madhusoodhan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும் என் அம்மான் தானும்,En ammaan thaanum - எம்பெருமானாகிய அவனும் யானும்,Yaanum - (அவனுக்கு அடிமைப்பட்ட) நானும் தன் உள்ளே,Than ullae - தனக்குள்ளே எல்லாம்,Ellaam - எல்லா வகை யினிமையுமாம்படி தேனும்,Thenum - தேனும் தேனும் பாலும்,Paalum - பாலும் பாலும் நெய்யும்,Neyyum - நெய்யும் நெய்யும் கன்னலும்,Kannalum - அக்காரமும் அமுதும்,Amudhum - அம்ருதமும் அம்ருதமும் ஒத்து,Othu - ஒன்று சேர்ந்தாற் போன்று கலந்தொழிந்தோம்,Kalanthozhindhom - கலந்து விட்டோம் |
| 2808 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் நெஞ்சைக் கொண்டாடினார் சிறிது ஆராய்ந்து பார்த்தவாறே அந்த நெஞ்சை இசைவித்ததும் ஸர்வேச்வரனே யாதலால் அந்த எம்பெருமானையன்றோ கொண்டாடவேணுமென்று அது செய்கிறாரிப்பாட்டில்) 2 | ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா! ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து, அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே–2-3-2 | ஒத்தார் மிக்காரை,Othaar mikkarai - ஸமான மானவர்களையும் மேற்பட்டவர்களையும் இலை ஆய,Ilai aaya - உடையனல்லாத மா மாயா,Maa maaya - பெரிய ஆச்சர்ய குணங்களை யுடைவனே! எப்பொருட்கும்,Epporutkum - எல்லாப் பொருள்களுக்கும் ஒத்தாய்,Othaay - ஒப்பாக அவதரித்தவனே! (எப்பொருட்கட்கும்) உயிர்ஆய்,(Epporudhukkum) uyir-aaya - எல்லார்க்கும் பிராண பூதனாய் என்னைப் பெற்ற,Ennaip petra - என்னை யுண்டாக்கின அ தாய் ஆய்,A thaai aay - அந்தத் தாயாகியும் தந்தை ஆய்,Thandhai aay - பிதாவாகியும் அறியாதன அறிவத்த அத்தா,Ariyadhan ariyatha athaa - ஆசார்யனாகியும் உபகார கனானவனே! நீ செய்தன,Nee seidhana - நீ செய்த உபகாரங்களை அடியேன் அறியேன்,Adiyaen ariyaen - அடியேன் அளவிட்டறியகில்லேன் |
| 2809 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (தம் விஷயத்தில் எம்பெருமான் செய்தருளின நன்மைகளைப் பேசுகிறாரிதில்.) 3 | அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவி யுள் கலந்தே–2-3-3 | அறியாமை,Ariyaamai - (தனது உண்மையை பிறர்) அறியாதபடி குறள் ஆய்,Kurral aay - வாமன மூர்த்தியாகி மாவலி,Maavali - ‘மகாபலியே! மூ அடி நிலம் என்று,Moo adi nilam endru - மூன்றடி நிலம் (வேணும்) என்று சொல்லி அறியாமை,Ariyaamai - (கபட குணத்தை பிறர்) என்று சொல்லி வஞ்சித்தாய்,Vanjithaay - வஞ்சித்து நிலத்தைக் கவர்ந்தவனே! எனது ஆவி உள் கலந்து,Enadhu aavi ull kalanthu - எனது நெஞ்சினுள்ளே சேர்ந்து அறியா மா மாயத்து அடியேனை,Ariya maa maayathu adiyenai - அறியாமையை விளைவிப்பதான ஸம்ஸாரத்திலாழ்ந்து கிடந்த என்னை அறியா காலத்துள்ளே,Ariya kaalathulle - தொண்டு படுதற்கு அறியா அந்தக் காலத்திலே அடிமைக் கண்,Adimai kan - தொண்டு செய்யும் தொழிலிலே அன்பு,Anbu - ஆவலை செய்வித்து வைத்தாய்,Seyvithu vaithaay - உண்டாக்கி வைத்தாய் ஆல்,Aal - ஆச்சர்யம் |
| 2810 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (உலகத்தில் ஒருவர் ஒரு உபகாரஞ்செய்தால் உபகாரம் பெற்றவர் பிரதியுபகாரஞ் செய்வதென்று ஒரு முறைமை யுண்டாதலால் அதன் படியே ஆழ்வாரும் எம்பெருமானுக்குக் கைம்மாறு செய்யக் கருதி ஆத்ம ஸமாப்பணமாகிற கைம்மாறு செய்ததாக முந்துறக் கூறி, உடனே ஆராய்ந்து பார்த்து, ஆத்ம வஸ்து நம்முடைய தாகிலன்றோ நாம் கொடுத்ததாக ஆகும் நாமும் நம்முடைமையுமெல்லாம் அவலுடைய சரக்காகவே யிருக்கும் போது நாம் கொடுத்ததாகக் கூறுவது பிசகு என்று அநுதபித்து ‘உன் வஸ்துவை நீயே கைப் பற்றிக் கொண்டா யத்தனை யல்லது நான் ஸமர்ப்பித்ததாகச் சொல்லுவது உசிதமன்று’ என்று தலைக் கட்டுகிறார்.) 4 | எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே? என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்! எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–2-3-4 | பொழில் ஏழும் உண்ட,Pozhil ezhum unda - (பிரளயத்தில்) ஏழுலகங்களையும் வயிற்றில் வைத்து நோக்கின எந்தாய்,Endhaay - எம்பெருமானே! எனது ஆவிஉள் கலந்த,Enadhu aavi ull kalandha - என் ஆத்மாவுக்குள்ளே நீ ஒரு தன்மையாய்க் கலக்கப் பெற்ற பெரு நல் உதவி,Peru nal udhavi - நல்ல மஹோபகாரத்திற்கு கைம்மாறு,Kaimmaaru - பிரதியுபகாரமாக எனது ஆவி,Enadhu aavi - என் ஆத்மாவை தந்தொழிந்தேன்,Thandhozhindhaen - உனக்கு அர்ப்பணஞ் செய்து விட்டேன் இனி,Ini - இனி மேல் மீள்வது என்பது உண்டே,Meelvadhu enbadhu unde - கொடுத்ததை மீட்டுப் பெற்றுக் கொள்வதென்பது உண்டோ? இல்லை; எனது ஆவியும்,Enadhu aaviyum - எனது ஆத்மாவுக்கும் ஆவி,Aavi - ஆத்மாவாயிருப்பவன் நீ,Nee - நீ (ஆதலால்) எனது ஆவி? யார்,Enadhu aavi? Yaar - என் ஆத்மா யார்? யான் ஆர்,Yaan aar - யான் ஆர் தந்த நீ,Thandha nee - படைத்துக் கொடுத்த நீ தானே கொண்டாக்கினை,Kondakkinai - கவர்ந்து கொண்டவனானாய். |
| 2811 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பிரளய வெள்ளத்திலே மூழ்க நின்ற ஜகத்தை யெடுத்தருளினாப் போலே ஸம்ஸார ஸாகரத்திலே மூழ்கிக் கிடக்கிற என்னை உன் திருவடிகளில் உறவையறிவித்து எடுத்தருளுகையாலே இனி யுன் திருவடிகளைப் பெற்றேனென்று மகிழ்ச்சி தோற்றப் பேசுகிறார்.) 5 | இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்! கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே! தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5 | யார்,Yaar - எப்படிப் பட்டவர்களுடையவும் ஞானங்களால்,Gnaanangalal - ஞான விசேஷங்களாலும் எடுக்கல் எழாத,Edugal ezhadha - க்ரஹிக்கப் பார்த்தாலும் க்;ரஹிக்க முடியாத எந்தாய்,Endhaay - எம்பெருமானே ! கனிவார்,Kanivaar - (உன் பக்கலில்) மனங்கனிந்தவர்களுக்கு வீடு இன்பமே,Veedu inbamae - மோக்ஷ ஆனந்தமே வடிவெடுத்தது போலிருப்பவனே கடல் படா,Kadal padaa - உப்புக் கடலிலுண்டாகாத என் அமுதே,En amudhe - எனக்கு போக்கியமான அம்ருதமே! தனியேன்,Thaniyaen - அத்விதீய பக்தனான என்னுடைய வாழ்,Vaazh - வாழ்ச்சிக்கு முதலே,Mudhale - முதற் காரணமே! பொழில் ஏழும்,Pozhil ezhum - ஏழுலகங்களையும் ஏனம் ஒன்று ஆய்,Enam ondru aay - ஒப்பற்ற வராஹ ரூபியாகி நுனி ஆர்,Nuni aar - கூர்மை மிகுந்த கோட்டில்,Kotil - கோரப்பல்லிலே வைத்தாய்,Vaithaay - வைத்தெடுத்தவனே! இனி,Ini - இது முதலாக உன பாதம்,Un paadham - உனது திருவடிகளை சேர்ந்தேனே,Saerndhaenae - அடியேன் பிரியா திருப்பவனே. |
| 2812 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நான் எம்பெருமானைப் பெற்றது இன்றைக்கோ? இவ் வாத்மாவுள்ள போதே பிடித்து எம்பெருமானைப் பெற்றவனல்லேனோ என்கிறார். நெடுநாளாகப் பிரிந்திருந்த பிரிவின் வருத்தம் ஒன்றும் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே கலந்ததனாலுண்டான களிப்பு இங்ஙனே பேசுவிக்கின்றது காண்மின்.) 6 | சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத் தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே–2-3-6 | சேர்ந்தார்,Serndhaar - பக்தர்களினுடைய தீ வினைகட்கு,Thee vinaikatku - கொடிய பாவங்களுக்கு அரு நஞ்சை,Aru nanjai - ஆற்ற வரிதான விஷமாயிருப்பவனும் திண் மதியை,Thin madhiyai - திடமான அத்யவஸாயத்தை அளித்தருள்பவனும் நீர்ந்தார் தம் மனத்து பிரியாது,Neerndhaar tham manathu piryaadhu - தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களான பரமை காந்திகளின் மனத்தை விட்டுப் பிரியாமல் அவர் உயிரை,Avar uyirai - அவர்களுக்கு உயிராயிருப்பவனும் சோர்ந்து போகல் கொடா,Soarndhu pogal koda - தன்னைப் பிரிந்து விஷயங்களில் போகக் கொடாத சுடரை,Sudarai - ஒளி யுருவாக வுள்ளவனும் அரக்கியை,Arakkiyai - ராக்ஷஸியான சூர்ப்பணகையினது மூக்கு,Mookku - மூக்கை ஈர்ந்தாயை,Eerndhaayai - அறுத்தவனுமாகிய வுன்னை அடியேன்,Adiyaen - நான் முதல் முன்னமே,Mudhal munname - அநாதி காலமாக அடைந்தேன்,Adaindhaen - சேரப் பெற்றவன் |
| 2813 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்றார் அதனால் தம்முடைய நித்ய ஸம்ச்லேஷத்தைத் தெரிவித்துக்கொண்ட ஆழ்வார் இக்கலவிக்கு விச்சேதம் பிறந்தால் என்செய்வது? என்று சங்கித்து, அப்படி ஒருகால் விச்லேஷம் பிறக்குமாகில் தாரிக்கமாட்டேனென்று திருவுள்ளத்திலே கொண்டருள வேணுமென்று இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 7 | முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே! பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே! கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா! நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7 | முன்,Mun - அநாதியாய் நல்,Nal - விலக்ஷணமாய் யாழ் பயில்,Yaazh payil - வீணையைப் பற்றி நூல்,Nool - ஸங்கீத சாஸ்த்ரத்தின் படியேயான நரம்பில்,Narambil - தந்திக் கம்பியிலே வருடப்பட்டு முதிர்,Mudhir - முதிர்ந்த சுவையே,Suvaiye - சுவை போன்றவனே! (பரம போக்யனே)!) பல் நல்லார்,Pal nallaar - பல விலக்ஷணர்கள் பயிலும்,Payilum - நித்யானுபவம் பண்ணப் பெற்ற பரமனே,Paramane - பரம புருஷனே! பவித்திரனே,Pavithirane - பரிசுத்தனே! கன்னலே,Kannale - கரும்பின் சாறு போன்றவனே! அமுதே,Amudhe - அமிருதம் போன்றவளே! கார்முகிலே,Kaarmugile - காளமேகத் திருவுருவளே! என் கண்ணா,En kanna - எனக்கு நித்யானுபவத்திற்கு உரிய கண்ண பிரானே! நின்னலால்,Ninnalaal - உன்னை யன்றி இலேன் காண்,Ilaen kaan - (வேறொருவரைத் தஞ்சமாக) உடையனல்லேன் காண் என்னை,Ennai - இப்படிப்பட்ட என்னை நீ குறிக்கொள்,Nee kuri kol - நீயே திருவுள்ளத்தில் கொண்டருள வேணும். |
| 2814 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நெடுங்காலம் வருந்தி ஸாதிக்க வேண்டிய புருஷர்ர்த்தத்தை இந்த ஜன்மந் தன்னிலே அற்பகாலத்தில் எளிதாகப் பெற்றேனென்று பகவத் கடாக்ஷத்தின் பெருமையைப் பேசுகிறார்.) 8 | குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும் கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான் உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித் துண்ணும் அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8 | உறி கொண்ட,Uri konda - உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெய்,Vennai - வெண்ணெயையும் பால்,Paal - பாலையும் ஒளித்து உண்ணும்,Ozhithu unnum - மறைந்திருந்து அமுது செய்த அம்மான் பின்,Ammaan pin - எம்பெருமான் பின்னே நெறிக் கொண்ட,Nerik konda - அவன் போன வழியே போகிற நெஞ்சன் ஆய்,Nenjan aay - மனத்தை யுடையேனாய் பிறவி துயா,Piravi thuya - ஸம்ஸாரத் தொல்லைகளை கடிந்து,Kadindhu - நிராகரித்து குறிக்கொள் ஞானங்களால்,Kuri kol gnaanangalal - யம நியமாதிகளாலே கொள்ளப் படுவதான ஞானங்களால் -விசேஷங்களாலே (உபாஸநாதிகளாலே) எனை ஊழி,Enai oozhi - அநேக கல்ப காலங்களில் செய்,Sey - செய்யப்பட வேண்டியதான தவமும்,Thavamum - பக்தி யோகமாகிற தவத்தின் பயனை கிறிக் கொண்டு,Kirik kondru - (பகவத் க்ருபையாகிற) உபாயத்தைக் கொண்டு இப் பிறப்பே,Ippirappe - இந்தப் பிறவியில் தானே சில நாளில்,Sila naalil - சில நாட்களில் யான்,Yaan - அகிஞ்சநனாகிய அடியேன் எய்தினன்,Eydinan - அடைந்தேன். |
| 2815 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பரம பதத்திலே ப்ராப்தமாகக் கூடிய பகவத் குணாநுபவத்தை நான் இந் நிலத்திலேயே பெற்றேனென்று களித்துப் பேசுகிறாரிதில்.) 9 | கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9 | கடி வார்,Kadi vaar - பரிமளம் மிக்க தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய திருத் துழாய் மாலையை யுடையனான கண்ணன்,Kannan - ஸ்ரீ க்ருஷ்ணனாய் விண்ணவர் பெருமான்,Vinnavar perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வானம்,Vaanam - பரம பதத்திலும் படி இறந்த,Padi irandha - ஒத்தார் இல்லாதவனான பரமன்,Paraman - பரம புருஷனாய் பவித்திரன்,Pavithiran - பரிசுத்தனான எம்பெருமானுடைய சீர்,Seer - திருக் குணங்களிலே செடி ஆர்நோய்கள் கெட,Chedi aarnoygal keda - தூறு நெருங்கினாற்போலே நெருங்கி யிருக்கின்ற ஸம்ஸார வியாதிகள் தொலையும்படி படிந்து,Padindhu - கிட்டி குடைந்து ஆடி,Kudaindhu aadi - அவகாஹத்து அடியேன்,Adiyaen - தாஸனாகிய நான் வாய் மடுத்து பருகி,Vaai maduthu parugi - வாயாரப் பருகி களித்தேன்,Kalithaen - களிக்கப் பெற்றேன். |
| 2816 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! பாரிபூர்ணமான பேறுபெற்று விட்டீரன்றோ? இனியொரு குறையில்லையே; இனியுமக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லையே’ என்ன அதற்கு ஆழ்வார், ‘பெருமானே! இவ்விபூதியில் தான் இப்போது ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கிறேனென்பதில் ஸந்தேஹமில்லை; ஆனாலும் வி‘யாந்தரங்களின் நடுவே என்னை வைத்திருக்கின்றாயாதலால் இவ்வானந்தம் இங்கே நித்தியமாய்ச் செல்லாதாகையாலே ஒரு அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்று அங்கு அடியார்களின் கோஷ்டியிலே அந்வயிக்க வேண்டிய தொன்றுண்டு அது எப்போது ப்ராப்தமாகுமோ? என்கிறார்.) 10 | களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10 | களிப்பும்,Kalipum - அல்ப ஸந்தோஷமும் கவர்வும்,Kavarvum - மனக் கவலையும் அற்று,Attru - ஒழிந்து பிறப்பு,Pirappu - ஜன்மமும் பிணி,Pini - வியாதிகளும் மூப்பு,Moopu - கிழத் தனமும் இறப்பு,Irappu - மரணமும் அற்று,Attru - ஒழிந்து ஒளிக் கொண்ட சோதியம் ஆய்,Olik kondta sodiyam aay - ஞானம் முதலிய ஒளிகளுக்கு ஒளியைத் தருவதாய் தான ஒளி யுருவை யுடையோமாய். துளிக்கின்ற,Thulikkindra - மழை பொழிகின்ற வான்,Vaan - ஆகாசத்தையும் இ நிலம்,I nilam - இந்தப் பூமியையும் சுடர்,Sudar - ஒளி மிக்க ஆழி சங்கு,Aazhi sanggu - திருவாழி திருச்சங்குகளை ஏந்தி,Yendhi - தாங்கி அளிக்கின்ற,Alikkindra - ரஷித்தருள்கின்ற மாயன் பிரான்,Maayan piran - ஆச்சர்ய சேஷ்டிதனான பரம புருஷனுடைய அடியார்கள்,Adiyaargal - பக்தர்களினுடைய குழாங்களை,Kulangalai - கூட்டங்களை உடன் கூடுவது,Udan kooduvadhu - சேர்த்து அநுபவிக்கப் பெறுவது என்று கொல்,Endru kol - என்றைக்கோ? |
| 2817 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஒவ்வொரு பதிகத்திலும் ஈற்றுப் பாசுரத்தில் பயனுரைத்து வருகின்ற ஆழ்வார் இப் பதிகத்திற்குப் பயன் கூறாது, இத்திருவாய்மொழி, பாகவதர் பெருந்திரளாக இருந்து அநுபவிக்கத்தக்கது என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். இதற்கொரு பலன் எதிர்பார்க்கவேண்டா; பெரிய கோஷ்டியாக இருந்து இதனை அநுபவிப்பதுதானே ஸ்வயம் ப்ரோயஜனம் என்று தெரிவித்தவாறு. அன்றியே, இத்திருவாய்மொழியைக் கற்கப் பெறில் என்னைப் போல் தனியே யிருந்து துவளாமல் பாகவத கோஷ்டிகளுடன் கூடி அனுபவிக்கும்படியான பெரும்பேறு பெறுவீர்கள் என்று இதனை இத்திருவாய்மொழி கற்கையின் பயனாகவே அருளிச்செய்தாரென்றுங் கொள்ளலாம். ஆடுமின் என்றது ஆடப் பெறுவீர்களாக என்றபடி.) 11 | குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக் குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக் குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11 | அடியீர்,Adiyir - பக்தர்களே! குழாம் கொள்,Kulam kol - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட பேர்,Per - மிக்க பெருமை பொருந்திய அரக்கன்,Arakkan - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய குலம்,Kulam - குடும்பம் வீய,Veeya - தொலையும்படி முனிந்தவனை,Munindhavanai - சீறி யருளின பெருமான் விஷயமாக குழாம் கொள் தென்குருகூர்,Kulam kol thenkurukoor - (ஸ்ரீவைஷ்ணவ) கோஷ்டிகளை யுடைத்தான திரு நகரிக்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் தெரிந்து,Therindhu - ஆராய்ந்து உரைத்த,Uraitha - அருளிச் செய்த குழாம் கொள் ஆயிரத்துள்,Kulam kol aayiraththul - பாசுரங்களின் கூட்டம் நிரம்பிய இவ் வாயிரத்தினுள் இவை பத்தும்,Ivai pattum - இப் பத்துப் பாட்டையும் உடன்,Udan - பொருளுடனே பாடி,Paadi - பாடி குழாங்கள் ஆய்,Kulangaal aay - பெரிய கோஷ்டியாய் உடன் கூடி நின்று,Udan koodi nindru - ஒரு மிக்கக் கலந்திருந்த ஆடுமின்,Aadumin - கூத்தாடுங்கள். |