Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஊரெல்லாம் துஞ்சி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3150திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஜகத்தடங்கலும் இருள்மூடி நின்றது; ரக்ஷகனென்று பேர் பெற்றிருக்கும் ஸர்வேச்வரனோ வந்து ரக்ஷித்தருள்கின்றிலன்; இனியென்னை ரக்ஷிப்பார் ஆரென்கிறாள்.) 1
ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1
ஊர் எல்லாம் துஞ்சி,Oor ellam thunji - ஊர் முழுவதும் உறங்கிப்போய்
உலகு எல்லாம்,Ulagu ellam - உலகம் முழுவதும்
கள் இருளாய்,Kal irulaay - காடாந்தகராம்மிக்கு
நீண்டது,Neendathu - நெடுகிச் செல்கின்றது;
ஆல்,Aal - அந்தோ!, (இந்நிலைமையில்)
பார் எல்லாம் உண்ட,Paar ellam unda - பூமி முழுவதையும் (பிரளயகாலத்திலே) வயிற்றிலே வைத்து ரக்ஷித்த
நம் பாம்பு அணையான்,Nam paambu anaiyaan - சேஷசாயியான எம்பெருமான்
வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலம்
நீர் எல்லாம் தேதி,Neer ellam thedi - நீர் நிலமெல்லாம் அலையடங்கித் தெளிந்து
ஓர் நின் இரவு ஆய்,Oor nin iravu aay - (பகல் கலசாத) ஒரே காளராத்ரியாய்
இனி,Ini - இப்படியான பின்பு
வல் வினை யேன்,Val vinai yaen - கொடும்பாவியான என்னுடைய
ஆவி,Aavi - உயிரை
காப்பார்,Kaappaar - ரக்ஷிப்பவர்
ஆர்,Aar - யாவர்?
எல்லே,Elle - என்னே!
3151திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இத்தசையிலே கிருஷ்ணனும் வந்திலன் –மஹா பாபியான என்னோட்டை சம்பந்தத்தால் நெஞ்சே நீயும் பாங்கு இன்றியே ஒழியா நின்றாய் – என்கிறாள்) 2
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2
ஆழ் கடல்,Aazh kadal - ஆழ்ந்த கடலையும்
மண்,Man - பூமியையும்
விண்,Vin - ஆகாசத்தையும்
மூடி,Moodi - மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி)
மா வீசாரம் ஆய்,Maa veesaram aay - பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு
வல்,Val - வலிதான
ஓர் இரவு ஆய்,Or iravu aay - ஒரே ராத்திரியாய்
நீண்டது,Neendadhu - நெடுகிச் செல்லா நின்றது;
ஆல்,Aal - அந்தோ!
காவி சேர் கண்ணன்,Kaavi seer kannan - நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான
என் கண்ணனும்,En kannanum - எனக்குத் தஞ்சமான கண்ணபிரானும்
வாராவி,Vaaraavi - வந்து முகங்காட்டுகின்றிலன்
பாவியேன்,Paaviyin - பாவியான என்னுடைய
நெஞ்சமே,Nenjame - மனமே!
நீயும்,Neeyum - நீ தானும்
பாங்கு அல்லை,Paangu allai - அணுகூலமாக இருக்கிறாயில்லை.
இனி,Ini - இப்படியான பின்பு
ஆவி காப்பார்,Aavi kaappar - பிராணனை ரக்ஷித்துத் தருவார்
ஆர்,Aar - யாவர்? (ஒருவருமில்லை.)
3152திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (அநிஷ்டங்களைத் தொலைக்க வல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறாள்.) 3
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3
நெஞ்சமே,Nenjame - மனமே!
நீயும்,Neeyum - (எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும்
பாங்கு அல்லை காண்,Paangu allai kaan - எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை;
நின் இரவும்,Ninn iravum - ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும்
ஓயும் பொழுது இன்றி,Oyum pozhudhu indri - ஓயுங்காலம் இல்லாமல்
ஊழி ஆய்,Uuzhi aay - ஒரு கல்பமாய் கொண்டு
நீண்டது,Neendadhu - வளர்ந்து விட்டது;
ஆல்,Aal - அந்தோ;
காயும்,Kaayum - (விரோதிகளைக்) காய்கின்ற
சுடு சிலை,Sudu silai - கடிய சார்ங்கவில்லையுடைய
என் காகுத்தன்,En Kaaguthan - இராமபிரான்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றவன்;
வல்வினையேன்,Valvinaiyene - வலிய பாபத்தையுடையேனான நான்
பெண் பிறந்து,Pen pirandhu - பெண்ணாய்ப்பிறந்து
மாயும் வகை அறியேன்?,Maayum vakai arien - முடியும் வழியை அறிகின்றிலேன்.
3153திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும் வழி என்னோ! என்கிறாள்.) 4
பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4
பெண் பிறந்தார் எய்தும்,Pen piranthaar eydum - பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற
பெரு துயர் காண்கிலேன் என்று,Peru thuyar kaangilaeen endru - பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி
ஒண் சுடரோன்,On sudaron - ஸூரியன்
வாராது ஒளித்தான்,Vaaradhu o̱lithaan - வாராதே மறைந்து போனான் போலும்
இ மண் அளந்த,EmanAlandha - இப்பூமியை யளந்து கொண்டவனும்
பெரிய கண்,Periya kan - பரந்த திருக்கண்களையுடையவனும்
செம்வாய்,Semvai - சிவந்த அதரத்தையுடையவனும்
எம் கார் எறு,Em kaar eru - கறுத்த திருமேனியையுடையவனும் காளைபோன்றவனுமான எம்பெருமான்
வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலன்;
ஆல்,Aal - அந்தோ!
எண்பெரிய,Enperiya - நினைக்கவும் முடியாத
சிந்தை நோய்,Sinthai noy - மனோவியாதியை
என்னை,Ennai - என்னிடத்தில் நின்றும்
தீட்பார்,Theebar - நீக்கவல்லவர்கள்
ஆர்,Aar - யார் சொல்?
3154திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்.) 5
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரும்
தோழியரும்,Thozhiyarum - தோழிமாரும்
நீர் என்னே என்னாதே,Neer enne ennaadhe - ‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல்
நீள் இரவும்,Neel iravum - நீண்ட இராமுழுவதும்
துஞ்சவர்,Thunjavar - உறங்காநிற்பர்கள்;
ஆல்,Aal - அந்தோ!;
கார் அன்ன,Kaar anna - மேகத்தையொத்த
மேனி,Meni - திருமேனியையுடைய
நம் கண்ணனும்,Nam kannanum - நமது கண்ணபிரானும்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றிலன்;
வல்வினை யென் பின் நின்று,Valvinai yen pin nindru - பெரும்பாவியான நான் முடிந்த பின்பும் நின்று கொண்டு
பேர்,Per - என் பேர்
என்னை மாயாது,Ennai maayadhu - என்னை முடிய வொட்டுகிறதில்லை
என்னை ஆராய்வார் ஆர்,Ennai araayvaar aar - என்னைப் பற்றி சிந்திப்பார் ஆருமில்லையே!
3155திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாது இருக்கிற என்னை ரஷிப்பார் ஆர் -என்கிறாள்) 6
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6
பின் நின்ற,Pin nindra - பிடரிபீடித்துள்ளுவதற்காகப் பின் தொடர்ந்து நின்ற
காதல் நோய்,Kaadhal noy - ப்ரேம விரோதியானது
நெஞ்சம்,Nenjam - (தன்குப்பிறப்பிடமான நெஞ்சை)
பெரிது,Peridhu - மிகவும்
அடும்,Adum - அழிக்கின்றது
ஆல்,Aal - அந்தோ
இரா ஊழி,Iraa uuzhi - இரவாகிய கல்பமானது
முன் நின்று,Mun nindru - முன்னேயிருந்து
கண் புதைய,Kan pudhaiya - கண்தெரியாதபடி
முடிந்து,Mudindhu - மறைந்தது
ஆல்,Aal - அந்தோ;
மண் நின்ற சக்கரத்து,Man nindra chakkarathu - எப்போதும் கை நழுவாது நின்ற திருவாழியாழ்வானையுடைய
எம் மாயவனும்,Em maayavanum - எம்பிரானும்
வாரான்,Vaaraan - வருகின்றிலன்
ஆல்,Aal - ஆதலால்
நின்ற நீள் இ ஆவி,Nindra neel i aavi - முடியாதே நின்று நீள்கின்ற இவ்வுயிரை
இவ்விடத்து,Ivvidathu - இந்த நிலைமையிலே
காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பார்யார்?
3156திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இப் பேரிருளிலே என்செய்வேனென்று. உறங்காத தெய்வங்களைக் குறித்து முறையிடுகின்றாள்.) 7
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7
இவ்விடத்து,Ivvidathu - இந்நிலையில்
காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பாரார்?
சுங்கு இருளின்,Sungu irulin - நன்றாக சொரிந்த இருளையுடையதாயும்
நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிதான பணித்துளியையுடையதாயும்
சேண் பாலது,Sen paaladhu - மிக நீண்டிருப்பதான
ஊழி ஆய்,Uuzhi aay - சல்பமாய்க்கொண்டு
செல்கின்ற,Selginra - செல்லாநிற்கிற
கங்குல் வாய்,Kangul vaay - ராத்திரியிடத்து
தூ பால,Thoo paal - அழுக்கற்ற ஸ்வபாவத்தையுடையதாய்
வெண்,Ven - வெளுத்ததான
சங்கு,Sangu - சங்கையும்
சக்கரத்தன்,Chakkarathan - சக்கரத்தையுமுடையனானவன்
தோன்றான்,Thonaan - தோன்றிக்காட்சி தருகின்றவன்
தெய்வத்தாள்,Deyvathaal - தேவதைகளே!
நி பால கல் வினையேன்,Ni paal kal vinaiyene - மிகக் கொடியபாவங்களை யுடையேனான நான்
என் செய்வேன்?,En seyven - என்ன பண்ணுவேன்?
3157திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (தென்றலோ நலிகின்றது. கண்ணனோ வருகின்றிலன் , என் செய்வேனென்று மீண்டும் தெய்வங்களையே நோக்கி முறையிடுகின்றாள்.) 8
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8
தெய்வங்காள்,Deyvangal - தெய்வங்களே!
ஓர் இரவு,Or iravu - ஒரு இராப்பொழுதானது
ஏழ் ஊழி ஆய்,Ezh uuzhi aay - ஏழு சல்பசாலமாய்க்கொண்டு
மெய்,Mei - மெய்யே
வந்து நின்று,Vandhu nindru - முன்னே வந்து நின்று
என்ற ஆவி,Endra aavi - என்னுடைய உயிரை
மெலிவிக்கும்,Melivikkum - இளைக்கப்பண்ணா நின்றது;
கை வந்த சக்கரத்து,Kai vandha chakkarathu - கையிலே ஸஜ்ஜனாயிருக்கிற் திருவாழி யாழ்களையுடைய
என் கண்ணனும்,En kannanum - எனது கண்ணபிரானும்
வாரான்,Vaaraan - வருகின்றிலன்
தைவந்த,Thaivandha - தடவினால் போலிருக்கின்ற
தண் தென்றல்,Than thendral - குளிர்ந்த தென்றலானது
வெஞ்சுடரில் அடும்,Vensudaril adum - வெள்ளிய நெருப்பிற் காட்டிலும் அதிகமாகச் சுடாநின்றது.
3158திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இரவோ மிகவும் நலியா நின்றது; ஆதித்தியனும் ஆவிர்ப்பளிக்கின்றிலன்; எம்பெருமானும் வந்து தோன்றுகின்றிலன்; நான் நின்று நோவுபடுமித்தனை போக்கி என் பாதையைப் போக்குவார் ஆருமில்லையே யென்கிறாள்.) 9
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9
வீங்கி இருளின்,Veengi irulin - மிகச் செறிந்த இருளையுடைத்தாய்
நுண் துளி அய்,Nunn thuli ay - நுண்ணிய பனித்துளியை யுடையதாய்க் கொண்டு
தான்,Thaan - இராப்பொழுதானது
வெம் சுடரில்,Vem sudaril - வெவ்விய நெருப்பிற் காட்டில்
சுடும்,Sudum - சுடர்கின்றது
ஆல்,Aal - அந்தோ! (இந்த நிலைமையில்)
அம் சுடா,Am sudaa - அழகிய ஒளியையுடையனான
வெய்யோன்,Veyyon - ஸூரியனுடைய
அணி நெடு தேர்,Ani netu ther - அழகிய பெரிய தேரும்
தோன்றாது,Thonaadhu - தென்படவில்லை
செம் சுடர் தாமரை கண் செல்லனும்,Sem sudar thaamarai kan chellanum - சிவந்த காந்தியையுடைய தாமரை போன்ற திருக்கண்களையும் ஸ்ரீமானும்
வாரான்,Vaaraan - வந்து தோன்றவில்லை
ஆல்,Aal - ஆதலால்
நின்று உருகுகின்றேன்,Nindru uruguginraen - நிரந்தரமாக உருகாநின்றேன்.
இனி,Ini - இந்நிலைமையில்
செஞ்சு இடர்,Senju idar - (எனது) மனத்துயரை
தீர்ப்பார் ஆர்,Theerpaar aar - போக்குவாரா?
3159திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்தும் அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே இந்த லோகம் உறங்குவதே -என்கிறாள்.) 10
நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10
நின்று உருகுகின்றேன் போல,Nindru uruguginraen pola - நிரந்தரமாக உருகிக் கிடக்கிற என்னைப்போல
நெடுவானம்,Netuvaanam - பரந்த ஆகாசமானது
உருகி சென்று,Urugi sendru - உருகிப்போய் (அதனால்)
நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிய பனித்துளியாய்
செல்கின்ற,Selginra - நடந்து வருகின்ற
கல்குல் வாய்,Kalgul vaay - இராப்பொழுதிலே
அன்று ஒருகால்,Andru orukaal - முன்பொரு காலத்திலே
வையம்,Vaiyam - உலகத்தை
அளந்த,Alandhu - அளந்து ஆக்கிரமித்துக் கொண்ட
பிரான்,Piran - எம்பிரான்
வாரான் என்று,Vaaraan endru - வரமாட்டானென்றாகிலும்
ஒன்று,Ondru - ஒரு வார்த்தையை
ஒருநாள் சொல்லாது,Orunaal sollaadhu - ஒரு தரமேனும் சொல்லாமல்
உலகு,Ulaku - லோகமானது
உறங்கும் ஓ,UrangumO - உறங்குகின்றதே! ஐயோ!
3160திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை.) 11
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11
உறங்குபவன்போல்,Urangubavan pol - நித்திரை செய்பவன்போல்
யோகு செய்து,Yogu seidhu - ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற
பெருமானை,Perumanaai - எம்பெருமான் விஷயமாக
சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன்,Sirandha thozhil sool kurugoor sadagopan - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
நிதம் கிளர்ந்த,Nitham kilarndha - பண் விஞ்சின
அந்தாதி,Anthaathi - அந்தாதிக் கொடையான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களும்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
இறந்துபோய்,Iranthupoy - (அவரவர்கள்) சரீர வியோகம் பெற்றபின்பு
வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தில்
சேரா ஆறு,Seraa aaru - புகாதொழிவது
எங்களை,Engalai - எவ்வண்ணம்? (புகவே புகுவர்களென்கை.)