| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3424 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் ஒருவராலும் ஒரு வகையும் அறிய ஒண்ணாத சர்வேஸ்வரனை உள்ளபடியே அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியை யதா சக்தி சொல்லுமவர்கள் என்றைக்கும் க்ருதக்ருத்யர் என்கிறார். ஆம் வண்ண ஒண் தமிழ் ஆவது –நல்ல சந்தஸ் ஸை யுடைத்தான அழகிய தமிழ் என்றுமாம்.) 11 | ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும் ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11 | என்றைக்கும்,Endraikkum - ஆத்மாவுள்ளவரைக்கும் |
| 3425 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (மிகவும் நீசனாயிருக்கிறவென்னை ஞானம் சக்தி முதலியன வுடையேனாம்படி பண்ணி என்னையிட்டுத் திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட வுபகாரத்தை நினைக்க நினைக்கத் தரித்திருக்ககில்லேனே! என்கிறார்.) 1 | என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1 | என்னை,Ennai - நெடுநாளாக என்பெருமானுடையவிஷயீகாரம் பெறாதிருந்த வடியேனை என்றைக்கும்,Endraikkum - முதலிலேயே சாச்வதமாக அங்கீகரித்து (அவ்வளவேயன்றிக்கே) போகிய அன்றைக்கு அன்று,Pogiya andraikku andru - நிகழ்கின்ற நாள்தோறும் உய்யக் கொண்டு,Uyyaik kondru - விசேஷ கடாஹஷம் பண்ணி என்னை தன் ஆக்கி,Ennai than aakki - இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி என்னால்,Ennaal - என்னை உபகரணமாகக் கொண்டு தன்னை,Thannai - வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக இன் தமிழ் பாடிய,In thamizh paadiya - இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற ஈசனே,Eesaney - ஸ்வாமியாய ஆதி ஆய் நின்றஎன் சோதியை,Aadhi aai ninra en sothiyai - இத்திருவாய்மொழிக்கு மூலகாரணமாயிருந்து எனக்கு வடிவழகைக் காட்டிக்கொடுத்த பெருமானைக் குறித்து என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எத்தைச் சொல்லித் தரிப்பேன்! |
| 3426 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிவைத்து நான் தன்னைக் கவி பாடினதாக உலகில் ப்ரஸித்தமாக்குவதே! இது என்கொல்! என்று தலைசீய்க்கிறார்.) 2 | என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய் என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத் தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2 | என் இன் உயிர்,En in uyir - என்னுடைய ஹேயமான ஆத்ம வஸ்துவானது இன்று ஒன்று ஆய்,Indru ondru aai - இன்று தனக்கொரு வஸ்துவாத, என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து,En sollaal yaan sonna in kavi enpiththu - என்னுடைய சொல்லாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய பிரபந்த மென்று பிரபந்த மென்று நாட்டிலே பிரஸித்தமாக்கி தன் சொல்லால்,Than sollaal - தன்னுடைய உக்திகளாலே தான் தன்னை கீர்த்தித்த,Thaan thannai keerthitha - தானே தன்னைக் கவிபாடிக் கொண்டவனாய் என் முன் சொல்லும் மாயன்,En mun sollum maayan - எனக்குள்ளேயிருந்து முன்னுருச் சொல்கின்ற ஆச்சர்யபூதனாய் மூ உரு ஆம் முதல்வன்,Moo uru aam mudhalvan - த்ரிமூர்த்தியாயிருப்பவனான காரணபூதனைக் குறித்துக் என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எதைச் சொல்லித் தரிப்பேன்? |
| 3427 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அன்பர்களுக்காக என்னைக்கொண்டு தான் தன்னைக் கவிபாடின மஹோபகாரனை ஒரு நாளாவது மறக்கப்போமோ வென்கிறார்.) 3 | ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என் நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3 | இவன் முதல்வன் ஆம் என்று,Iwan mudhalvan aam endru - குருகூர்ச்சடகோபனாகிய இவன் ப்ரபந்த ஜநகூடஸ்தானகக் கடவன்’ என்று திருவுள்ளம் பற்றி தன் தேற்றி,Than thetri - தன் விஷயமான தெளிவை எனக்குப் பிறப்பித்து என் நா முதல் வந்து புகுந்து,En naa mudhal vandhu pugundhu - என்னுடைய நாவிலே தானே வந்து புகுந்து நல் இன் கவி,Nal in kavi - பரம போக்யமான சொல் தொடைகளை தூ முதல் பத்தர்க்கு,Thoo mudhal patharkku - முமுக்ஷூக்களுக்கு அநுபவிக்கலாம்படி தான் தன்னை சொன்ன,Thaan thannai sonna - தானே தன்னைப் பாடின என் வாய் முதல் அப்பனே,En vaai mudhal appanai - என் வாக்குக்கு முதல்வானான மஹோபகாரகனை என்று மறப்பனோ,Endru marappano - என்றைக்காவது மறப்பேனா? (ஒரு நாளும் மறக்கமாட்டேன்.) |
| 3428 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிக்கொண்டானாகில் ஒர் ஆச்சர்யமில்லை பாடுகைக்குப் பாங்கின்றியே யிருக்கிற வென்னைக் கொண்டு தப்புதலில்லாமல் கவிபாடின இந்த மஹோபகாரத்தை நான் எங்ஙனே மறக்கமுடியுமென்கிறார்.) 4 | அப்பனை என்று மறப்பன் என் ஆகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4 | என் ஆகியே,En aagiyae - எனனைக் கொண்டே தப்புதல் இன்றி,Thapputhal indri - ஒருவகையான அவத்யமும் தட்டாதபடி தனை தான் கவி சொல்லி,Thanai thaan kavi solli - ஒப்பற்ற பாபியான என்னை உய்ய கொண்டு,Uyya kondu - உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி செப்பமே செய்து திரிகின்ற,Seppamae seydhu thirikingira - எனக்கு ரக்ஷ்ணமே பண்ணிக்கொண்டு போருகிற சீர்கண்டு,Seerkandu - சீலத்தைக் கண்டு வைத்து அப்பனை என்று மறப்பன்,Appanai endru marappan - அப்பெருமானை என்றைக்காவது மறக்க முடியுமோ? |
| 3429 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தன்னைக் கவிபாடுகைக்குத் தக்க ஆற்றலும் ஆசையுமில்லாதிருந்த வென்னைக்கொண்டு, உலகமெல்லாங் கொண்டாடும்படியான பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்டானே! என்ன ஸர்வேச்வரனோ வென்கிறார்.) 5 | சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில் ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப் பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5 | சீர் கண்டு கொண்டு,Seer kandu kondu - பகவத்குணங்களை அவகாஹித்து திருந்து நல்இன் கவி,Thirundhu nalin kavi - திருத்தமுற்று விலக்ஷ்ணமாய் மதுரமான பாசுரங்களை யான் நேர்படசொல்லும் நீர்மை இலாமையில்,Yaan naerpadachollum neermai ilaamaiyil - நேர்த்தியாகப் பாடுகைக்குரிய சக்தி எனக்கில்லாமையாலே ஏர்வு இலா என்னை தன்னாக்கி,Aervu ilaa ennai thannaakki - தகுதியற்ற வென்னைத் தன்னோடொக்கக் கடாக்ஷித்து என்னால்,Ennaal - அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற அடியேனைக் கொண்டு தன்னை,Thannai - தன் விஷயமாக பார் பரவு இன் கவிபாடும் பமர்,Paar paravu in kavi paadum pamara - நிலவுலகம் முழுதும் கொண்டாடும்படி யான இனிய பாசுரங்களைப்பாடும்; பரமபுருஷராயிரா நின்றார்! |
| 3430 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தனக்குச் சில பாசுரங்கள் வேணுமானால் அவற்றைப் பாடவல்ல மஹாகவிகள் பலருமுண்டே; வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான மஹர்ஷிகளும் முதலாழ்வார்களுமுண்டாயிருக்க, அவர்களைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாதே என்னைக் கருவியாகக்கொண்டு கவி பாடுவதே யென்று தலைசீய்க்கிறார்.) 6 | இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6 | என் வைகுந்த நாதன்,En vaikuntha naadhan - பரமபதநாதனை எம்பெருமான் இன் கவி பாடும் பரம கவிகளால்,In kavi paadum parama kavigalal - மதுரமான கவிகளைப்பாடவல்ல முதலாழ்வார்களைக் கொண்டு தன் கவி தான் தன்னை பாடுவியாது,Than kavi thaan thannai paaduviyadhu - தனக்குத் தகுதியான பாசுரங்களைத்தான் பாடுவித்துக்கொள்ளாமல் இன்று நன்கு வந்து என் உடன் ஆக்கி,Indru nanku vandhu en udan aakki - இப்போது எனக்கருள் செய்யவேணுமென்று வந்து என்னைக் கருவியாகக்கொண்டு என்னுல்,Ennul - என் வாயிலாக தன்னை வன் கவிபாடும்,Thannai van kavi paadum - தன் விஷயமான சிறந்த பாசுரங்களைப் பாடிக்கொள்கிறன்!. |
| 3431 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு பரமபோகயமான கவியைப் பாடுவித்துக்கொண்ட பரமோபகாரத்திற்கு இவனைக் காலமுள்ள தனையும் அநுபவித்தாலும் த்ருப்தி பெறமாட்டேனென்கிறார்.) 7 | வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச் செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7 | வைகுந்தநாதன்,Vaikunthanadhan - பரமபதநாதனை எம்பெருமான் என் வல்வினை மாய்ந்து அற,En valvinai maayndhu ara - என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய் குந்தன்,Kunthan - (அதனால்) பரிசுத்தி பெற்றவனாய் தன்னை என் ஆன்கி,Thannai en aanki - என்னேடு ஒரு நீராகக்கலந்து என்னுல் தன்னை வைகுந்தன் ஆக புகழ,Ennul thannai vaikunthan aaga pugazha - என்னைக்கொண்டு தன்னை வைகுண்ட பதியாகப் புகமும்படி வண் தீம் கவி,Van deem kavi - உதாரமதுரங்களான பாசுரங்களை செய் குந்தன் தன்னை,Sei kunthan thannai - செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய தன்னை சிந்தித்து எந்நாள் ஆர்வன்,Sindhiththu ennal aarvan - அநுஸந்தித்து எப்போது த்ருப்தி பிறப்பது? |
| 3432 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட இந்த மஹா குணத்திற்கு உபயவிபூதியிலுமுள்ளாருடைய சக்தியையும் வாக்கு முதலிய உபகரணங்களையும் நானொருவனே பெற்று அநுபவித்தாலும் த்ருப்திபெறமாட்டேனென்கிறார்.) 8 | ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ் பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச் சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8 | ஏர்வு இலா என்னை தன் ஆக்கி என்னுல்,Aervu ilaa ennai than aakki ennull - தகுதியற்ற வென்னைத் தன்னேடொக்கவருள் செய்து தன்னை சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கு,Thannai seerperra in kavi sonna thiraththukku - என்னையிட்டுத் தன் விஷயத்தில் சிறப்புண்டாம்படி இனிய பாசுரங்களைச் சொன்னபடிக்கு ஆழி அம் கை எம்பிரான் புகழ்,Aazhi am kai emperaan pugazh - சக்ரபாணியான அந்த எம்பெருமானுடைய திருப்புகழை பார்விண் நீர் முற்றும் கலந்து பருகினும் ஆர்வனே,Paarvin neer muttrum kalandhu paruginum aarvaney - மண்ணிலுள்ளாரும் கூறிராப்தியிலுள்ளாரும் ஒன்று சேர்ந்து புகழ நேர்ந்தாலும் நான் திருப்தியடைவேனே? |
| 3433 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (கீழ்ப்பாட்டிற் சொன்னதுதன்னையே இன்னமும் சிறிது சித்திரித்துப் பேசுகிறார்.) 9 | திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர் இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ? மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9 | மறப்பு இலா என்னை,Marappu ilaa ennai - மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை தன் ஆக்கி,Than aakki - தன்னோடொக்க வீஷயீகரித்து என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு,Ennala thannai urpala inna sonna uthavikku - என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு, திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர்,Thiraththukku aai thupparavu aam thirumaalin seer - எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறப்பு எதிர் காலம்,Irappu edhir kaalham - இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு பருகிலும்,Paruginum - அநுபவித்தாலும் ஆர்வனோ,Aarvano - பர்யாப்தி பெறுவேனோ? |
| 3434 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அவனுடைய பேருதவிக்கு ஒருபடியாலும் கைம்மாறு இல்லையென்கிறார்.) 10 | உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10 | உதவி கைம்மாறு,Uthavi kaimmaaru - திருவாய்மொழி பாடுவித்துக் கொண்டவுதவிக்குப் பிரதியுபகாரம் என்உயிர் என்னவுற்று எண்ணில்,En uyir ennavuṟṟu eṇṇil - என்னுடைய ஆத்மா என்று சொல்ல நினைத்தால் அதுவும் அவன் தன்னது,Adhuvum avan thannadhu - அவ்வாக்மவஸ்துவும் அவனுடைய பொருளாகவே யிரா நின்றது; என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,Ennala thannai padaviy in kavi paadiya appanukku - (ஆனபின்பு) என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு இங்கும் அங்கும்,Ingum angum - உபயவிபூதியிலும் செய்வது,Seyvathu - செய்யக்கூடிய கைம்மாறு எதுவும் ஒன்றும் இல்லை,Edhuvum ondru illai - மிக அற்பமானதுமில்லை. |
| 3435 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார்.) 11 | இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன் இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11 | இங்கும் அங்கும்,Ingum angum - இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும் திருமால் அன்றி இன்மை கண்டு,Thirumaal andri inmai kandu - லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு அங்ஙனே வண் குரு கூர் சட கோபன்,Anggane van van Kurukoor Sadagopan - அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார் இங்ஙனே சொன்ன,Anggane sonna - இப்படியருளிச் செய்த ஒர் ஆயிரத்து இப்பத்தும்,Or aayirathu ippaththum - ஆயிரத்துள் இப்பதிகம் எங்ஙனே சொல்லிலும்,Enggane sollilum - எப்படிச் சொன்னாலும் இன்பம் பயக்கும்,Inbam payakkum - ஆனந்தாவஹமாகும். |