| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2875 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (பிரானே! உன்திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லை யென்கிறார்.) 1 | எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக் கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1 | கைம்மா துன்பம் கடிந்த பிரானே,Kaiamma thunbam katintha pirane - கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே! நின்,Nin - தேவரீருடைய செம்,Sem - சிவந்த மா,Maa - மேன்மை தங்கிய பாதபற்பு,Paadhaparpu - பாதபத்மங்களை தலை,Thalai - என் தலையிலே ஒல்லை,Ollai - சீக்கிரமாக சேர்ந்து,Seerndhu - சேர்க்கப்பெறறால் எமர்வீடு திற,Emar veedu thira - மிகவும் விலக்ஷணமான மோக்ஷத்தைப் பற்றின பேச்சையும் செப்பம்,Seppam - பிரஸ்தாவிக்கமாட்டோம் அம்மா,Amma - ஸ்வாமியே! அடியேன் வேண்டுவது,Adiyen venduvadhu - நான் பிரார்த்திப்பது ஈதே,Eedhe - இதுதான். (நின் செம்மாபாதபற்புத்தலை சோக்க வேணுமென்பதே யென்றபடி) |
| 2876 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமான் திருவடிகள் தம் தலைமேல்வந்து பொருந்த வேணுமென்று கீழ்ப்பாட்டில் வேண்டினார்; ஞானக் கை தந்தருள வேணுமென்று விரும்புகிறாரிப்பாட்டில்.) 2 | ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய் எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கை தா காலக் கழிவு செய்யலே –2-9-2 | என்,En - எனது அநுபவத்திற்கு உரிய மை தோய் சோதி மணி வண்ணம் எந்தாய்,Mai thoy sodhi mani annam enthai - கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற வடிவழகுள்ள ஸ்வாமியே! யான்,Yaan - நான் எஞ்ஞான்றும்,Yengnanrum - என்றைக்கும் உன்னை,Unnai - தேவரீரிடத்தில் கொள்வது,Kolvadhu - பிரார்த்திப்பது ஈதே,Eedhe - இஃதொன்றேயாகும் (அது யாதெனில்) எய்தா,Eyda - பெறுதற்காரிதான நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடிகளை யான் எய்த,Yaan eydha - நான் அடையும்படியாக ஞானம் கைதா,Gnaanam kaidha - ஞானமாகிய கையை தா,Thaa - தந்தருளவேணும் காலம் கழிவு செய்யேல்,Kaalam kazhivu seyyel - காலதாமதம் செய்ய வேண்டா. |
| 2877 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (உத்க்ரமான தசையான துர்க் கதியிலும், நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணி யருள வேணுமென்கிறார்) 3 | செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3 | தீ வினை செய்யேல் என்று,Thee vinai seyyel endru - கெட்ட காரியங்களைச் செய்யாதே என்று அருள் செய்யும்,Arul seyyum - (என் திறத்தில்) கிருபை செய்தருளின கை ஆர்சக்கரம்,Kai aarchakaram - திருக்கையில் பொருத்தின திருவாழியை உடைய என் கண்ணபிரானே! ஐயார்கண்டம் அடைக்கிலும்,Aiyaar kandam adaikkilum - கோழை வந்து கழுத்தையடைக்கும்படியான துர்த்தசை நேர்ந்தாலும் நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடியை எய்யாதேத்த,Eyyaadhedha - துதிக்கும்படியாக எனக்கு அருள்செய்,Enakku arulsei - என்னளவில் கிருயை பண்ணவேணும் |
| 2878 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழிக்கு உயிரான பாசுரம் இது. எல்லாப்படியாலும் அத்தலைக்கே உரித்தாயிருக்கும்படியான அத்யந்த பாரதந்திரியத்தை ப்ரயோஜனமாக நிஷ்கர்ஷிக்கிறாரிதில்) 4 | எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4 | எக்காலத்தும்,Ekkalathum - எக்காலத்திலும் எனக்கே ஆள் செய் என்று,Enakke aal sey endru - ‘எனக்கே அடிமை செய்யக் கடவாய்’ என்று சொல்லி என் மனக்கே வந்து,En manakke vanthu - எனது மனத்திலேயே எழுந்தருளி இடை வீடு இன்றி,Idai veedu indri - இடைவிடாமல் மன்னி,Manni - நிலைபெற்றிருந்து தனக்கே ஆக,Thanakke aaga - தனக்கே உரியேனாம் படி எனை,Enai - என்னை கொள்ளும் ஈதே,Kollum eethe - அங்கீகாரித்தருளுமிதுவே எனக்கே,Enakke - என் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக கண்ணனை,Kannanai - எம்பெருமானிடத்து யான் கொள்,Yaan kol - நான் விரும்புகின்ற சிறப்பு,Sirappu - சிறந்த பிரயோஜனம் |
| 2879 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேஹமே ஆத்மாவாக இருக்கட்டும் அன்றி தேஹத்திற்காட்டில் வேறுபட்டிருப்பானொருவன் ஆத்மாவாக இருக்கட்டும் ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; பின்னை எதில் நிர்ப்பந்த மென்னில் தேவரீர் கரமங்காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்து வைத்து ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிராநின்றீரே; அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாகவேணும் ஈதொன்றிலேயே எனக்கு நிர்ப்பந்தம் என்கிறார்.) 5 | சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க யானும் பிறப்பில் பல் பிறவிப் பெருமானை மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5 | இறப்பில்,Irapil - மரணமான பிறகு சிறப்பில் வீடு,Sirappil veedu - சிறப்புடன் கூடிய மோக்ஷத்தையோ சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கத்தையோ நரகம்,Naragam - நரகத்தையோ எய்துக,Eydhuga - அடைவேனாக எய்தற்க,Eydharka - அடையாதொழிவேனாக பிறப்பு இல்,Pirappu il - (நம்மைப்போலே கருமமடியாகப் பிறவாதவனும்) பல் பிறவி,Pal piravi - அநுக்ரஹ மடியாகப்) பல பிறவி பிறக்கின்றவனுமான ஸ்வாமியை மறப்பு ஒன்று இன்றி,Marappu onru indri - சிறிதும் மறவாமல் என்றும்,Endrum - எக்காலத்திலும் (சிந்தித்து) யானும் மகிழ்வேன்,Yaanum magizhven - (நீசனான) நானும் களிப்புறுவேன். |
| 2880 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இப்பாசுரத்திற்கு இரண்டுவகையாக அவதாரிகை கூறுவர்;- தேவர் மனிதர் முதலிய பதார்த்தங்களைப் படைத்ததுப்போலே, என்னையும் உன்னை யநுபவிப்பேனாம்படி பண்ணவேணு மென்கிறார்; அன்றியே, தேவாதி பதார்த்தங்களுக்கு ஒவ்வொரு ஸ்வபாவம் நியதமர்ம்படி பண்ணிணனாப்போலே, எனக்கு உன்னை யநுபவிக்குமது நியதஸ்வபாவமாமபடி பண்ணியருள வேணுமென்கிறார். -தாற்பாரியமாகத் தேறுவது ஒன்றே) 6 | மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6 | மகிழ் கொள்,Magizh kol - மகிழ்ச்சியைக் கொண்ட தெய்வம்,Theivam - தேவ வர்க்கமும் உலோகம்,Ulogam - ஞான வொளியையுடைய மானிட வர்க்கமும் அலோகம்,Alogam - ஞானவொளியில்லாத விலங்கு தாவரம் என்பவையும் மகிழ்கொள் சோதி,Magizhkol jyothi - உலகுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற சோதிப்பொருள்களான சந்திர ஸூரியர்களும் மலர்ந்த,Malarnthu - (நன்னிடத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற) அம்மானே,Ammaane - ஸர்வேச்வரனே மகிழ் கொள் சிந்தை,Magizh kol sindhai - அன்பு கொண்ட நினைவையும் சொல்,Sol - சொல்லையும் கொண்டு,Kondhu - ஏற்றுக்கொண்டு என்றும்,Endrum - எக்காலத்திலும் மகிழ்வுற்று,Magizhvutru - மகிழ்ச்சியுடன் உன்னை வணங்க,Unnai vananga - உன்னை வணங்கும்படி வாராய்,Vaara - (என்னெதிரே) எழுந்தருள வேணும் |
| 2881 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (வாராய் என்றபோதே வரக்காணாமையாலே வருந்தி, பின்னையும் அபிநிவேசத்தின் மிகுதியாலே, நான் சடக்கென வுன்னைக் கிட்டும்படி வாராயென்கிறார்.) 7 | வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7 | உன்,Un - உன்னுடைய திரு பாதம் மலர் கீழ்,Thiru padham malar keelz - திருவடித்தாமரைகளின் கீழ் பேராதே,Peradhe - விலகாமல் யான் வந்து அடையும்படி,Yaan vandhu adaiyumpadi - நான் வந்து சேரும்படியாக தாராதாய்,Thaaradhaai - அருள் புரியாதவனே! உன்னை என்னுள் என்றும் வைப்பில்,Unnai ennull endrum vaippil - உன்னை என்னுள்ளே எந்நாளும் வைத்து அநுபவித்தாலும் ஆராதாய்;,Aaraadhaai; - தெவிட்டாதவனே! எனக்கு,Enakku - என் கண்ணெதிரே என்றும் எக்கால்,Endrum ekkaal - எப்போதும் வாராய்,Vaarai - வந்தருள வேணும் |
| 2882 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமானோடு ஒரு க்ஷணகாலமாவது இப்போது சேரப் பெறுவானாயின் அது போதும் மறுபடியும் சேரவேணுமென்கிற விருப்பங்கூட எனக்கு உண்டாகாது என்கிறார்.) 8 | எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8 | நிக்கார்,Nikkaar - சிறந்தவர்களான வேதம் விமலர்,Vedham Vimalar - வேதம் வல்ல பரமைகாந்திகள் வழுங்கும்,Vazhungum - (அன்பு மிகுதியினால்) விழுங்குப்படியாகவுள்ள என் அக்காரக் கனியே,En akkaarak kaniye - அக்காரக் கனிபோன்ற எம்பெருமானே! எக்காலத்து,Ekkalathu - எப்போதும் எந்தை ஆய்,Endhai aay - எனக்கு ஸ்வாமியாகி என் உள்,En ul - எனது நெஞ்சிலே மண்ணில்,Mannil - பொருந்தி யெழுந்தருளியிருக்கப் பெறில் மற்று யாது ஒன்றும்,Matru yaadhu ondrum - வேறொரு பிரயோஜனத்தையும் உன்னை,Unnai - உன்னிடத்தில் எக்காலத்திலும்,Ekkalathilum - ஒருநாளும் யான் வேண்டேன்,Yaan venden - நான் விரும்பவே மாட்டேன். |
| 2883 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதபிக்கிறார்.) 9 | யானே என்னை யறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9 | வானே ஏத்தும்,Vaane etthum - விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள எம் வானவர் ஏறே,Em vaanavar aere - நித்யஸூரிநாதனான எம் பெருமானே! யானே,Yaane - நான் தானே என்னை,Ennai - என்னை அறிய கிலாதே,Ariya kilaadhe - அறியமாட்டாமல் யானே நீ,Yaane nee - யான் நீயே யென்னலாம்படி வேற்றுமையற்றிருப்பேன்; யானே என் தனதே என்று இருந்தேன்,Yaane en thanadhe endru irundhaen - அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன். என் உடைமையும் நீயே,En udaimaiyum neeye - (இப்போது அவை தவிர்ந்து நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில்) எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் (என்பதே) |
| 2884 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (கீழ்ப்பாட்டில் ஆழ்வார்தாம் கீழ்நாட்களில் இருந்த இருப்பைக்கூறி இழவுக்கு மிகவும் அநுபவித்து, இப்போது நல்லபடியாக இருக்கிற இருப்பையும் பேசினார்; அதுகேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! இழந்தநாளைக்கு அநுதபிக்கின்ற உமக்கு, இனி இழவு நேர ப்ரஸக்தி யில்லையே; ஆகவே வாழ்ந்துவிட்டீரன்றோ? இனி நான் செய்ய வேண்டுவது ஒன்றுமில்லையே’ என்றருளிச் செய்ய, பிரானே! அப்படி ஸாதிக்கலாமோ? என்னை வைத்திருக்குமிடம் எதுவென்று ஆராயவேண்டாவோ? இந்ரிநலத்திலே இருக்கின்ற என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? என்னைத் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’ என்கிற கருத்தை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்,) 10 | ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10 | ஏழும்,Ezhum - ஏழு காளைகளையும் வென்று,Vendru - வலியடக்கினவனாயும் ஏர்கொள் இலங்கையை,Aerkol ilangaiyai - அடகு நிரம்பிய லங்காபுரியை நீறு செய்த,Neeru seidha - நீறாக்கினவனாயுமுள்ள நெடும் சுடர் சோதி,Netum sudar sothi - மஹா தேஜஸ்வியான பெருமானே! என்னை தேறேல்,Ennai therael - என்னை நம்பவேண்டா! உன் பொன் அடி,Un pon adi - உன்னுடைய திருவடிகளிலே ஒல்லை,Ollai - விரைவாக சேர்த்து,Serthu - (என்னைச்) சேர்த்துக் கொண்டு வேறே போக,Verey poga - விஷயாந்தரங்களில் போகும்படி எஞ்ஞான்றும;,Yennjaandrum; - ஒரு நாளும் விடல்,Vidal - விடாதே. |
| 2885 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழியை ஓதவே, இதுதானே புருஷார்த்தத்தைப் பெறுவிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | விடலில் சக்கரத் தண்ணலை மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல் கெடலில் யாயிரத்துள் இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11 | விடல் இல்,Vidal il - விடுதலில்லாத சக்கரத்து,chakkarathu - திருவாழியையுடைய அண்ணலை,Annalai - எம்பெருமானை மேவல் விடல் இல்,Meval vidal il - பொருந்துவது ஒரு போதும் விடாமலிருக்கப் பெற்ற வண்குருகூர்சொல்,Vangurukoor sol - சடகோபன் அருளிச் செய்த கெடல் இல்,Kedal il - அழிவற்ற (நித்யமான) ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரம் பாடலுள்ளும் இவை பத்தும்,Ivai paththum - இப்பதிகம் கிளர்வார்க்கு,Kilarvaarkku - தன்னை ஓதுமவர்களுக்கு கெடல் இல் வீடு செய்யும்,Kedal il veedu seyyum - கெடுதல் ஒன்றுமில்லாத மோஷானந்தத்தைப் பண்ணிக் கொடுக்கும். |