| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3502 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்தருள்பவன் ஸர்வேச்வரன், அவனூர் திருக்கடித்தானம் என்கிறார்.) 1 | எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான் அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1 | எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ,Elliyum kaalaiyum thannai ninaiththu ezha - இரவும் பகலும் உபசாரகனான தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படியாக நல்ல அருள்கள்,Nalla arulgkal - பரம க்ருபைகளை நமக்கே தந்து,Namakke thandhu - நமக்கே அஸாதாரணமாகச் செய்து அருள் செய்வான்,Arul seivaan - அனுக்கிரஹம் செய்வானாய் அல்லி அம் தண் அம் துழாய் முடி,Alli am than am thuzhaai mudi - பூந்தாரையுடைத்தாய் அழகிய குளிர்ந்த திருத்துழாயணிந்த திருமுடியை யுடையனான அப்பன்,Appan - எம்பெருமானுடைய ஊர்,Oor - திவ்ய தேசம் (எது வென்னில்) செல்வர்கள் வாழும் திருக்கடித்தானம்,Selvargal vaazhum thirukkadiththaanam - பகவத் கைங்கர்ய ஸம்பந்தங்கள் வாழப்பெற்ற திருக்கடித்தானமாகும். |
| 3503 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார்.) 2 | திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர் செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2 | அன்று,Andru - முன் பொருகாலத்தில் செரு கடுத்து,Seru kaduthu - யுத்தத்திலே செருக்கு விஞ்சி திகைத்த அரக்கரை,Thigaiya arakkarai - ஆரைச் சண்டைக்கிழுக்கலாமென்று திசைத்திருந்த ராக்ஷஸர்கள் உரு கெட,Uru keda - உருவம் கெடும்படியாக வாளி வொழிந்த ஒருவன் கண்டீர்,Vaalai vazhindha oruvan kandeer - அம்புகளைப் பொழிந்த மஹா வீரனன்றோ திருக்கடித்தானமும் என்னுடைய சிங்கையும்,Thirukkadiththaanamum ennudaiya singaiyum - திருக்கடித்தானப்பதியையும் எனது நெஞ்சையும் ஒருக்கத்து,Orukkaththu - ஒருசேரப்பிடித்து உள்ளே உறையும் பிரான்,Ullae uraiyum piraan - இரண்டினுள்ளும் வர்த்திக்கிற பெருமான். |
| 3504 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பாட்டு தனிப்பட அந்வயிக்கமாட்டாது, கீழிரண்டாம் பாட்டுக்கு சேஷபூதமாகியே அந்வயிக்கும். அப்பாட்டின் பின்னடிகள் “செருக்கடுத்தன்று திகைத்தவர்க்கரை உருக்கெட வாளியொழிந்த வொருவனே” என்றுள்ளது. அப்படி வாளியொழிந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகனார் இருந்தவிதம் இப்படிப்பட்ட தென்கிறது இப்பாட்டில். “வாளிபொழிந்தபடி எங்ஙனே யென்ன ஈங்ஙனே யென்கிறார்“ என்பது ஈட்டு அவதாரிகை.) 3 | ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான் திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3 | ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று,Oruvar iruvar or moovaer ena ninru - (இலங்கையில் மூல பலத்தை முடிக்குமிடத்து) முதலில் ஒருவனாய், பின்பு இருவராய், பின்னையும் மூவராய்த் தோன்றி நின்று (பின்னையும்) உருவு காத்து,Uruvu kaathu - ரூபம் இலக்குக் குறிக்க வொண்ணாதபடி இந்திரியத்திற்கு அவிஷயமாகி செருக்குத்தன்சு திகைத்த வரைக்கரை உருக்கெட வாளி யொழிந்த வொருவன் திரு அமர் மார்வன்,Thiru amar maarvan - லக்ஷிமியைத் திருமார்பிலே யுடையனாய்க் கொண்டு திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான்,Thirukkadiththaanathai maruvi uraiyinra maayappiraan - திருக்கடித்தானத்தே பொருந்தி நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சர்ய சீலனான எம்பெருமான் உள்ளுந்தோறும் தித்திப்பான்,Ullundhoarum thiththippaan - நினைக்குந்தோறும் இனியனாகா நின்றான். |
| 3505 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை நிரந்தர வாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார்.) 4 | மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான் தேசத்தமர் திருக் கடித் தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே–8-6-4 | தேசம் அமரர்,Desam amarar - தேஜஸ்விகளான நித்ய ஸூரிகளுக்கும் ப்ராப்யமாய் வாசம் பொழில் மன்னு,Vaasam pozhil mann - பரிமளம் மிக்க பொழில்கள் சேர்ந்தான திருக்கடித் தானத்தை,Thirukkadiththaanathai - திருக்கடித்தான மென்னும் தலத்தை கோயில் கொண்டான் மாயப்பிரான்,Koil kondaan maayappiraan - கோயிலாகக் கொண்டவனான எம்பெருமான் என வல் வினை மாய்ந்து அற,Ena val vinai maayndhu ara - என்னுடைய வலிய கருமங்கள் ஒழிந்து போம்படியாக நேசத்தினால்,Nesathinaal - அன்புடனே நெஞ்சம் நாடு குடி கொண்டான்,Nenjam naadu kudi kondaan - என்னெஞ்சாகிற நாட்டைத் தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான் |
| 3506 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்பக்கவிலுண்டான ப்ர்ரேமோதியத்தாலே திருக்கடிகத்தானத் திருப்பதியோடே கூடவந்து என் ஹ்ருதயத்திலே புகுந்தருளினானென்கிறார்.) 5 | கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம் கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5 | கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ,Koil kol deivam ellam thozha - தங்களுக்கென்று விமானங்கயுடையரான நித்ய ஸூரிகளெல்லாரும் தொழும்படியாக வைகுந்தம் கோயில் கொண்ட,Vaikundham koil kondha - ஸ்ரீ வைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடையனாய் குடக்கூத்த அம்மான்,Kudakkooththa ammaan - (அவதரித்த விடத்தே) குடகூத்தாடும் பெருமானைவன் திருக்கடித் தானத்தை தன் கோயில் கொண்டான்,Thirukkadiththaanathai than koil kondaan - திருக்கடித்தானத்தை தனது கோயிலாக ஸ்வீகரித்துக் கொண்டவனாய் அதனோடும்,Adhanodum - அது தன்னோடே என் நெஞ்சகம் கோயில் கொண்டான்,En nenjagam koil kondaan - என்னெஞ்சையும் தனக்குக் கோயிலாகக் கொண்டான். |
| 3507 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தானத் தோடும் எம்பெருமான் தம் திருவுள்ளத்திலே புகுந்தானென்றவாறே அத் திருப்பதியானது ஆழ்வார் திருவுள்ளத்திலே அந்தர்த்தானமாகிவிட்ட தென்றும் தனியே அதிருப்பதி கிடையாதென்றும் சிலர் நினைக்கக் கூடமாதலால் அந்த நினைவு நீங்குமாறு, திருக்கடித்தானத்தை எல்லாரும் ஆச்ரயியுங்கோளென்கிறார். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்கிற ஸ்ரீ வசநபூஷண திவ்ய ஸூக்தியின்படியே எம்பெருமானுக்கு திவ்ய தேசாபிமாநமும் குறையற்றதேயன்றோ) 6 | கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6 | கூத்த அம்மான்,Kootha ammaan - மநோஹரி சேஷ்டிதங்களையுடைய ஸர்வேச்வரனாய் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த அம்மான்,Kodiyaan idhar muttrum maayththa ammaan - பாவியேனுடைய துக்கங்களை யெல்லாம் போக்கின ஸ்வாமியாய் மதுசூத அம்மான்,Madhu sooda ammaan - மதுஸூதனப் பெருமானானவன் உறை,Urai - எழுந்தருளியிருக்குமிடமாய் பூத்த பொழில்,Pooththa pozhil - பூத்த சோலைகளையுடைத்தான தண் திருக்கடித்தானத்தை,Than thirukkadiththaanathai - குளிர்ந்த திருக்கடித்தானப்பதியை ஏத்த,Aetha - துதித்த வளவிலே இடர் நில்லா,Idhar nillaa - துக்கங்கள் நிலைகுலைந்துபோம் குறிக்கொண்மின்,Kurikkonmin - இதைத்திண்ணமாக அறிமின். |
| 3508 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தானத்தை ஏத்துங்கோளென்றார் கீழ்ப்பாட்டில், ஏத்த வேண்டா, அத்தலத்தை நெஞ்சாலே நினைத்தாலும் போது மென்கிறார் இதில்.) 7 | கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7 | கோவிந்தன்,Govindan - கோவிந்தனான பெருமானுடைய மண் விண் முழுதும் அளந்த ஒண்தாமரை,Mann vin muzuthum alandha ondhthamarai - மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒன்றொழியாமல் அளந்து கொண்ட அழகிய திருவடித்தாமரைகளை மண்ணவர் தாம் தொழ,Mannavar thaam thozha - இந்நிலத்திலுள்ளார் தொழா நிற்க. வானவர் தாம் வந்து நண்ணு,Vaanavar thaam vandhu nannu - ப்ரமபதத்திலுள்ளார் தாங்களும் (சீலகுணாநுபவம் பண்ண) வந்து சேருமிடமான திருக்கடித்தானம் நகர்,Thirukkadiththaanam nagar - திருக்கடித்தானப்பதியை இடர் கெட,Idhar keda - துக்கமெல்லாம் தொலைய உள்ளத்து கொண்மின்,Ullathu konmin - நெஞ்சிலே கொண்டு சிந்தியுங்கோள் |
| 3509 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷண நகரங்கள் பல பல வுண்டா யிருக்கச் செய்தேயும் என்னுடைய நெஞ்சையும் திருக்கடித்தானத திருப்பதியையும் தனக்கு தாய ப்ராப்தமான ஸ்தானமாகக் கொண்டு விரும்பி யிருப்பதாக அருளிச் செய்கிறாரிதில்.) 8 | தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும் வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித் தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8 | வான் இ நிலம் கடல் எங்கெங்கும்,Vaan e nilam kadal engengum - பரமபதம் இவ்வுலகம் திருப்பாற்படல் ஆகிய எல்லாவிடத்தும் தானம் நகர்கள் முற்றும்,Thaanam nagarhal muzhudhum - வாஸஸ்தானமான நகரங்கள் முற்றவும் தலை சிறந்து,Thalai sirandhu - மிக்க சிறப்பமைத்து எம்மாயற்கே ஆன இடத்தும்,Emmaayarkae aan idaththum - எம்பெருமானுக்கே ஆயிருக்கைச் செய்தேயும் என் நெஞ்சும்,En nenjum - எனது நெஞ்சமும் திருக்கடித்தானம் நகரும்,Thirukkadiththaanam nagarum - திருக்கடித்தான மென்கிற திருப்பதியும் தன தாயம் பதியே,Thana thaayam pathiye - தனக்கே அஸாதாரண ப்ராப்தமான தலமாயிரா நின்றது. |
| 3510 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன, அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார்.) 9 | தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும் மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9 | தேசம் அமரர் திருக்கடித்தானத்துள் உறை,Desam amarar thirukkadiththaanaththul urai - தேசுபொலிந்த நித்யஸூரிகளுக்கும் பிராப்ய மான திருக்கடித்தானப் பதியிலே வாழ்பவனாய் ஆயர்க்கு அதிபதி,Aayarkku athipathi - கோபாலர் தலைவனாய் அற்புதன் தான்,Arputhan thaan - ஆச்சர்யபூதனான பெருமான் தான் தாயப் பதிகள் எங்கெங்கும் தலை சிறந்து,Thaayap padikal engengum thalai sirandhu - தனக்கு அஸாதாரணமான திருப்பதிகள் எல்லாவிடத்திலும் சிறப்பமைந்து மாயத்தினால்,Maayaththinaal - தன்னுடைய இச்சையினாலே மன்னி வீற்றிருந்தான்,Manni veetrirundhaan - பொருந்தியெழுந்தருளி யிருப்பவன் |
| 3511 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (ஆழ்வார் தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர் தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு.) 10 | அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம் நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே–8-6-10 | அற்புதன்,Arputhan - அத்புத சேஷ்டிதனாய் நாராயணன்,Naarayanan - நாராயணனாய் அரி வாமனன்,Ari vaamanan - ஹரியாய் வாமனனான எம்பெருமான் மேவி இருப்பது என் நெஞ்சகம்,Mevi iruppathu en nenjagam - பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே, நிற்பது,Nirpathu - அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்) நல் புகழ் வேதியர்,Nal pugazh vedhiyar - புகழ்மிக்க வைதிகருடைய நால் மறை,Naal marai - நான்கு வேதங்களும் நின்று அதிர்,Nindra adhira - நிலைநின்று முழங்கும்படியாய் கற்பகம் சோலை,Karppagam solai - கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்ததான திருக்கடித்தானம்,Thirukkadiththaanam - திருக்கடித்தானத்திலே |
| 3512 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார்.) 11 | சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல் பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11 | சோலை திருக்கடித் தானத்து உறை திருமாலை,Solai thirukkadiththaanaththul urai thirumaalai - சோலைமிக்க திருக்கடித்தானப்பதியில் வாழும் திருமாலைக்குறித்து மதிள் குருகூர் சட கோபன்,Madhil kurukoor sadagopan - நம்மாழ்வார் சொல்,Sol - அருளிச்செய்ததாய் பாலோடு அமுது அன்ன,Paalodu amudhu annam - பாலும் அமுதும் கலந்தாற்போல் பரம போக்யமான ஆயிரத்து,Aayirathu - ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,Ip paththum - இப்பதிகம் மேலை வைகுந்தத்து,Melai vaikundhathu - ஸர்வோத்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே வியந்து இருத்தும்,Viyandhu iruththum - உகந்து இருக்கச் செய்யும். |