Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஏறாளும் இறையோனும் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3084திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 1
ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1
ஏறு ஆளும் இறையோனும்,Eru aalum iraiyonum - விருஷபவாஹனனான சிவபிரானும்
திசைமுகனும்,Thisaimukanum - நான்முகனும்
திருமகளும்,Thirumagalum - பெரியபிராட்டியாரும்
கூறு ஆளும்,Kuru aalum - ‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற
தனி உடம்பன்,Thani udamban - விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும்,
அசுரர்களை,Asurargalai - அசுரர்களை
குலம் குலம் ஆ,Kulam kulam aa - கூட்டங் கூட்டமாக
நீறு ஆகும்படி ஆக,Neeru aagumbadi aaga - சுடநீறாகி யொழியும்படியாக
நிருமித்து,Nirumiththu - ஸங்கல்பித்து
படை தொட்ட,Padai thotta - (அவ்வளவேயன்றிக்கே) ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த
மாறு ஆளன்,Maaru aalan - எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மணி மாமை,Mani maamai - அழகிய நிறத்தில்
குறைவு இலம்,Kuraivu ilam - அபேஷையுடையோமல்லோம்.
3085திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (பிராட்டியோடே கூடியிருக்குமழகைக் காட்டி என்னை யடிமை கொண்டவன் விரும்பாத நெஞ்சால் ஒரு காரியமில்லையென்கிறாள். குற்றங்களையும் நற்றமாக உபபாதித்து அருள் புரிவிக்கின்ற பெரிய பிராட்டியாரும் கூடவிருக்கச்செய்தே என்னை உபேக்ஷித்திருக்குமாகில் என்னுடைமையால் எனக்குத் தான் ப்ரயோஜனம் என்? என்கிறாள்.) ((ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 2
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2
மணி மாமை குறைவு இல்லா,Mani maamai kuraivu illaa - அழகிய நிறம் நிரம்பி யிருக்கப் பெற்ற
மலர்மாதர்,Malarmadhaar - பூமகளான பெரியபிராட்டியார்
உறை,Urai - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
மார்பன்,Maarban - திருமார்பையுடையவனும்
அணிமானம் தட வரை தோள்,Animaanam thada varai thol - அழகியதாகப் பெருத்து திருத்தோள்களையுடையவனும்
அடல் ஆழி தடகையன்,Adal aazhi thadakaiyan - தீக்ஷ்ணமான திருவாழியைப் பெரிய திருக்கையிலேயுடையவனும்
பணி மானம் பிழையாமே,Pani maanam pizhaiyaame - கைங்கர்ய வ்ருத்திகள் தப்பாதபடி
அடியேனை,Adiyenai - அடியேனை
பணிகொண்ட,Panikonda - கிங்கரனாக ஆக்கிக்கொண்டவனும்
மணி மாயன்,Mani maayan - நீலமணிவண்ணனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மட நெஞ்சால் குறைவு இலம்,Mada nenjaal Kuraivu ilam - விதேயமான நெஞ்சில் அபேக்ஷையுடையோமல்லோல்.
3086திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.) 3
மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3
மடநெஞ்சால் குறைவு இல்லா ,Mada nenjaal kuraivu illaa - நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட
தாய் மகள் செய்த,Thaai magal seitha - யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட
ஒரு பேய்ச்சி,Oru peychi - பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய
விடம் நஞ்சம்,Vidam nanjam - கொடிய விஷம்பொருந்திய
முலை,Mulai - முலையை
சுவைத்த,Suvaitha - உறிஞ்சியுண்டவனும்
மிகு ஞானம் சிறு குழவி,Migu jnaanam siru kuzavi - மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும்
படம் நாகம்அணைகிடந்த,Padam naagam anaikidantha - படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும்
பரு வரை தோள்,Paru varai thol - பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும்
பரம்புருடன்,Paramburudan - புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும்
நெடு மாயன்,Nedu maayan - எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
நிறைவினால் குறைவு இலம்,Niraivinaal kuraivu ilam - அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம்.
3087திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்விய நிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 4
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4
நிறைவினால் குறைவு இல்லா,Niraivinaal kuraivu illaa - குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும்
நெடு பணை தோள்,Nedupanai thol - நீண்டு பணைத்ததோள்களையுடையவனும்
மடம்,Madam - அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான
பின்னை,Pinnai - நப்பின்னையினுடைய
முலை அணைவான்,Mulai anaivaan - திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக (மணப்பதற்காக)
பொறையினால்,Poraiyinaal - வருத்தங்களைப் பொறுத்திருந்து
பொரு விடை ஏழ் அடாத்து உகந்த,Poru vidai ezh adaatthu ugandha - கொடிய விருஷபங்களேழையும் நொரித்து மகிழ்ந்தவனும்
கறையின் ஆர் துவர் உடுக்கை,Karaiyin aar thuvar udukkai - (நாவல் முதலிய காட்டுப்பழங்களின்) கறைமிகுந்த துவர்நிறமான வஸ்த்ரத்தையும்
கடையா,Kadaiya - பால்கறக்கும் முங்கிற்குழாயையும்
கழிகோல்,Kazhikol - கையிலேஉடையவனும்
சறையினார்,Saraianaar - தன்உடம்பைப்பேணாதவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
தளிர்நிறத்தால் குறைவு இலம்,Thalirnirathaal kuraivu ilam - தளிர்போலே செவ்விதான நிறத்தில் விருப்பமுடையோமல்லோம்
3088திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.) 5
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5
தளிர் நிறத்தால் குறைவு இல்லா,Thalir nirathaal kuraivu illaa - தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய்
தனி சிறையில் விளிப்புற்ற,Thani siraiyil vilipputra - தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய்
கிளி மொழியாள் காரணம்; ஆ,Kili mozhiyal kaaranam; aa - கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக
கிளர் அரக்கன் நகர் எரித்த,Kilar arakkan nagar eritha - செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும்
களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன்,Kali malarthuzhai alangai kamazh mudiyan - தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும்
கடல் ஞாலத்து,Kadal gnaalathu - கடல்சூழ்ந்த மண்ணுலகில்
அளிமிக்கான்,Alimikkaan - மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
அறிவினால் குறைவு இலம்,Arivinaal kuraivu ilam - அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம்.
3089திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (தன்னைப் பெறுதற்கு உபாயமானவற்றை யெல்லாம் தானே அருளிச் செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத் தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள்.) 6
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6
அறிவினால் குறைவு இல்லா,Arivinaal kuraivu illaa - ‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத
அகல் ஞாலத்தவர் அறிய,Akal gnaalaththavar ariya - விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக
நெறி எல்லாம்,Neri ellaam - (கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும்
எடுத்து உரைத்த,Eduthu uraitha - ஸாரமாகவெடுத்தருளிச்செய்த
நிறை ஞானம்,Nirai gnaanam - பரிபூர்ண ஞானத்தையுடைய
ஒரு மூர்த்தி,Oru moorthi - விலக்ஷணஸ்வாமியாய்,
குறிய மாண்உருஆகி,Kuriyaa maanuru aaki - வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய்
கொடு கோளால்,Kodu kolaal - (மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால்
நிலம் கொண்ட,Nilam konda - பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட
கிறி,Kiri - உபாஜ்ஞனான
அம்மான்,Ammaan - எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
கிளர் ஒளியால் குறைவு இலம்,Kilar oliyaal kuraivu ilam - மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம்.
3090திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (ஆச்ரித விரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டா வென்கிறாள்) 7
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7
கிளர்ஒளியால் குறைவு இல்லா,Kilar oliyaal kuraivu illaa - கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற
அரி உரு ஆய்,Ari uru aai - நரசிங்கமூர்த்தியாய்
கிளர்ந்து எழுந்து,Kilarndhu ezhundhu - சீறிக்கொண்டு தோன்றி,
கிளர் ஒளிய இரணியனது,Kilar oliya iranianathu - மிக்கதேக பொருந்திய இரணியனுடைய
அகல் மார்பம்,Akal maarbam - விசாலமான மார்பை
கிழித்து உகந்த,Kizhiththu ugandha - இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்தவனும்,
வளர் ஒளிய,Valar oliya - வளர்கின்ற ஜ்வாலையையுடைய
கனல்,Kanal - நெருப்புப் போலேயிருக்கிற
ஆழி,Aazhi - சக்கரத்தையும்
வலம்புரியன்,Valampuriyan - சங்கையுமுடையவனும்,
நீலம் மணி வளர் ஒளியான்,Neelam mani valar oliyaan - நீலரத்னம் போன்று விளங்குகின்ற திருமேனி விளக்கத்தை யுடையனுமான பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
வரி வளையால் குறைவு இலம்,Vari valaiyaal kuraivu ilam - அழகிய வளையில் அபேக்ஷ யுடையோமல்லோம்.
3091திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்து விரோதிகளைத் தொலைத்து அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விருமாபாத மேகலை எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 8
வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8
முன்,Mun - முன்பொரு காலத்தில்
வாவளையல்,Vaavalaiyal - வரிகளையுடைய சங்கில் நின்று முண்டான
குறைவு இல்லா பெருமுழக்கால்,Kuraivu illaa perumuzhakkaal - மிக பெரிய கோஷத்தினலே
எரி அழலம்,Eri azhalam - கிளர்ந்தெரிகிற (பயமாகிற) அக்கியானது
அடங்காரை புக,Adangaarai puga - பகைவர்களிடத்துப் புகும்படியாக
ஊதி இரு நிலம்,Oothi iru nilam - (சங்கை) ஊதி விசாலமான பூமண்டலத்தினுடைய
துயர்,Thuyar - (பெரும்பாரத்தினுலுண்டான) கஷ்டத்தை
தவிர்த்த தெரிவு அரிய சிவன் பிரடன் அமரர் கோன்;,Thavirththa therivu ariya sivan piradan amarar kon; - (இவ்வுபகாரத்திற்காக) அறிய முடியாத சிவன் பிரமன் இந்திரன் ஆகிய இவர்கள்
பணிந்து,Panindhu - வணங்கி
ஏத்தும்,Yaeththum - துதிக்கப்பெற்ற
விரி புகழான்,Viri pugazhaan - பரந்த புகழையுடையனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மேகலையால்,Megalaiyaal - அரைவடத்தில்
குறைவு இலம்,Kuraivu ilam - அபேக்ஷையுடையோமல்லோம்.
3092திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 9
மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9
தந்தை,Thandai - புகழையுடையனாய்
புகழ்,Pugazh - புகழையுடையனாய்
விறல்,Viral - பலிஷ்டனான
வாணன்,Vaanan - பாணாஸூரனுடைய
புயம்,Puyam - தோள்களை
துணித்து,Thuniththu - அறுத்தொழித்தவனாய்,
நாகம் மிசை,Naagam misai - ஆதிசேஷன்மீது
துயில்வான் போல்,Thuyilvaan pol - உறங்குவான் போலே
உலகு வல்லாம்,Ulagu vallaam - ஸகலலோகமும்
நன்கு ஒடுங்க,Nangu odunga - நன்மையிலே சேரும்படி
யோகு அணைவான்,Yogu anaivaan - உபாயசிந்தை பண்ணுமவான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
உடம்பினால் குறைவு இலம்,Udambinaal kuraivu ilam - உடம்பில் அபேக்ஷயுடையோ மல்லோம்.
3093திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - பிரதி பக்ஷம் எத்தனையேனும் மிக்கதாகிலும் போக்கும் ஸ்வ பாவனாய் அத்யந்த சீலவானாய் உள்ள எம்பெருமான் கவராத உயிரினால் கார்யம் உடையோம் அல்லோம் என்கிறாள்.) 10
உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10
உடம்பினால் குறைவு இல்லா,Udambinaal kuraivu ella - பெரிவுடம்பு படைத்த
அசுரர் குழாம்,Asurar kuzhaam - அசுரக்சுட்டங்களை
உயிர் பிரிந்த மலை துண்டம் கிடந்தனபோல்,Uyir pirindha malai thundam kidanthanapol - உயிரைவிட்டு நீங்கின பர்வதகண்டங்கள் கிடந்காற்போலே
பல துணி ஆ,Pala thuni aa - பலபல கண்டங்களாம்படி
துணித்து,Thuniththu - துண்டித்து
உகந்த,Ugandha - (ஆச்ரிதவிரோதிகள் தொலைந்தன வென்று) திருவுள்ள முவந்தவானாய், ஒரு பக்கத்திலே,
தடம் புனல் சடை முடியன் தனி அமர்ந்து உறையும்,Tadam punal sadai mudian thani amarndhu uraiyum - பரந்த கங்காதீர்த்தத்தைத்தரித்த ஜடாமகுடத்தையுடையனான சிவபிரான் பொருந்தி வாஸம் பண்ணப்பெற்ற
உடம்பு உடையான்,Udambu udaiyaan - திருமேனியை யுடைவனான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
உயிரினால் குறைவு இலம்,Uyirinaal kuraivu ilam - ஆத்மாவில் அபேக்ஷையுடையோ மல்லோம்.
3094திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11
உயிரினால் குறைவு இல்லா,Uyirinaal kuraivu ella - எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய
ஏழ் உலகு,Ezh ulagu - ஸமந்த லோகங்களையும்
தன்னுள்; ஒடுக்கி,Thannul; odugi - தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து
தயிர் வெண்ணெய் உண்டானை,Thayir vennai undaanai - தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக
தடம் குருகூர் சடகோபன்,Tadam kurugoor sadagopan; - தடம் குருகூர் சடகோபன்;
செயிர் இல்,Seir il - குற்றமற்ற
இசை,Isai - இசையோடு கூடின
சொல்மாலை,Solmaalai - சொல்மாலையாகிய
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாட்டினுள்ளே
இபத்தால்,Ipaththaal - இந்தப்பதிகத்தினால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து,Vairam saer pirappu aruthu - உரமேறின ஸம்ஸாரத்தை அடியறுத்து
வைகுந்தம்,Vaigundham - பரமபதத்தை
நண்ணுவர்,Nannuvar - கிட்டப்பெறுவர்.