| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3106 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 1 | ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள் நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1 | தேவும், thevum - தேவர்களும் உலகும், ulagum - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும் உயிரும், uyirum - மனிதர் முதலிய பிராணிகளும் மற்றும் யாதும், matrum yaadhum - மற்றுமுள்ள எல்லாமும் ஒன்றும் இல்லா அன்று, ondrum illa andru - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே நான்முகன் தன்னொடு, naanmugan thannodu - பிரமனையும் தேவர், thevar - தேவதைகளையும் உலகு, ulagu - உலகங்களையும் உயிர், uyir - பிராணிகளையும் படைத்தான், padaithaan - படைத்தவனும் நின்ற, nindra - சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான ஆதி பிரான், aadhi piraan - ஆதிநாதனென்றும் எம்பெருமான் குன்றம் போல் மணிமாடம் நீடு, kunram pol manimaadam needu - மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற திருகுருகூர் அதனுள், thirugurukoor adhanul - திருநகரியிலே நிற்க, nirka - காட்சிதந்து கொண்டிருக்கும் போது மற்றைதெய்வம், matraidheivam - வேறுதெய்வங்களை நாடுதிர் ஏ, naaduthir ae - தேடியோடுகின்றீர்களே. |
| 3107 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 2 | நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில், மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2 | பல் உலகீர், pal ulageer - பலவகைப்பட்ட உலகர்களே! நீர், neer - நீங்கள் நாடி, naadi - தேடி வணங்கும், vanangum - வணங்கும்படியாகவுள்ள உம்மையும், ummaiyum - உங்களையும் முன் படைத்தான், mun padaithaan - முன்னம் படைத்தவனும் வீடு இல் சீர், veedu il seer - நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான புகழ், pugazh - புகழையுடையனுமான ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில், aadhi piraan avan mevi uraikoyil - ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை, maadam maaligai soozhndhu azhagu aaya thiru kurukoor adhanai - மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை பாடி ஆடி, paadi aadi - பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு பரவி, paravi - துதித்து பரந்து செல்மின்கள், parandhu selminkal - எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள். |
| 3108 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 3 | பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக் கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3 | பரந்த, parandha - விஸ்தீர்ணமான தெய்வமும், dheivamum - தேவதாவர்க்கங்களையும் பல் உலகம், pal ulagam - (அவர்களுக்குப்) பல உலகங்களையும் படைத்து, padaithu - ஸ்ருஷ்டித்தும் அன்று, andru - பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி கரந்து, karandhu - உள்ளே யொளித்து வைத்தும் உமிழ்ந்து, umizhndhu - பிறகு வெளிப்படுத்தியும் கடந்து, kadanthu - (மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும் இடந்தது, idandhadhu - (மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை கண்டும், kandum - பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும் தெளிய கில்லீர், theliya killeer - தெளியமாட்டாத பல் உலகீர், pal ulageer - பலவகைபட்ட உலகத்தவர்களே! அமரர், amarar - தேவர்கள் சிரங்களால் வணங்கும், sirangalaal vanangum - தலையால் வணங்கப் பெற்ற திருகுருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற பரன், paran - பரம புருஷனுக்கு திறம் அன்றி, thiram andri - பிரகாரமாயல்லது மற்று, matru - வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு தெய்வம் இல்லை, dheivam illai - தேவதை கிடையாது பேசுமின், pesumin - அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள். |
| 3109 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 4 | பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள் ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4 | பேசநின்ற, pesanindra - உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற சிவனுக்கும், sivanukkum - ருத்ரனுக்கும் பிரமன் தனக்கும், Biraman thanakkum - (அவனது தந்தையான) பிரமனுக்கும் பிறர்க்கும், pirarkkum - மற்றுமுள்ள தேவதைகளுக்கும் நாயகன் அவனே, naayagan avane - தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை கபாலம் நல் மோக்கக்து, kabalam nal mokkakthu - கபாலமோக்ஷக்கதையினால் கண்டுகொண்மின், kandu konmin - தெரிந்துகொள்ளுங்கள் தேசம், dhesam - தேஜஸ்ஸுபொருந்திய மா, maa - சிறந்த மதிள் சூழ்ந்து, madhil soozhndhu - மதில்களால் சூழப்பட்டு அழகு ஆய, azhagu aaya - அழகு பெற்றதான திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற ஈசன் பால், eesan paal - ஸர்வேச்வரன் விஷயத்திலே ஓர் அவம் பறைதல், or avam paraidhal - தப்பான பேச்சுக்களைப் பேசுவது இலிங்கியர்க்கு, ilingiyarkku - லிங்கப்பிரமாண வாதிகளுக்கு என் ஆவது, en aavathu - என்னபலனைத்தரும்! |
| 3110 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 5 | இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5 | இலிங்கத்து இட்ட புராணத்தீரும், ilingathu itta puranatheerum - லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும் சமணரும், samanarum - ஜைநர்களாயும் சாக்கியரும், saakiyarum - பௌநர்களாயும் வலிந்து வாது, valindhu vaadhu - விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும் மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான், matrum num dheivamum aaginindraan - தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான) பொலிந்து நின்ற பிரான், polindhu nindra piran - பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை, செந்நெல், sennel - செந்நெற்பயிர்களானவை மலிந்து, malindhu - ஸம்ருத்திபெற்று கவிரி வீசும், kaviri veesum - சாமரை வீசப்பெற்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே கண்டீர், kandeer - ஸேவியுங்கோள் ஒன்றும், ondrum - எள்ளளவும் பொய் இல்லை, poi illai - அஸத்யமில்லை, போற்றுமின், potrumin - துதியுங்கோள் |
| 3111 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 6 | போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே; சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள் ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6 | மற்று ஓர் தெய்வம், matru or dheivam - வேறோரு தேவதையை போற்றி பேண, potri pena - துதிக்கு ஆதரிக்கும்படியாக புறத்து இட்டு, purathu ittu - வேறுபடுத்தி உம்மை, ummai - உங்களை இன்னே, inne - இப்போதுநீங்களிருக்கிற விதமாக தேற்றி வைத்தது, thettri vaithadhu - தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது எல்லீரும், elleerum - எல்லாரும் (எதற்காகவென்றால்) வீடு பெற்றால், veedu petraal - முக்தியுடைந்தால் உலகு இல்லை என்றே, ulagu illai endrae - புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்; சேற்றில், setril - சேற்றுநிலத்தில் செந்நெல், sennel - செந்நெற்பயிர்களும் கமலம், kamalam - தாமரையும் ஓங்கி, oongi - ஓங்கி வளரப்பெற்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஆற்றல் வல்லவன், aatral vallavan - பரமசக்தியுக்தனான பெருமானுடைய மாயம் கண்டீர், maayam kandeer - மாயையேயாமத்தனை; அது, Adhu - மாயையென்பதை அறிந்து, arindhu - தெரிந்துகொண்டு அறிந்து, arindhu - அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு ஓடுமின, oodumin - திருவடியே சென்று சேரப் பாருங்கள். |
| 3112 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 7 | ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்; கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள் ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7 | ஓடி ஓடி, oodi oodi - ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி பலபிறப்பும் பிறந்து, palapirappum pirandhu - பலபல யோனிகளிலே பிறந்து பல் படி கால், pal padi kaal - வம்ச பரம்பரையாக மற்று ஓர் தெய்வம் வழி ஏறி, mattru or dheivam vazhi eri - தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி பாடி ஆடி பணிந்து, paadi aadi panindhu - பலபடியாக வழிபட்டு கண்டீர், kandeer - பலன் கைபுகுந்தமை கண்டீர்களே; வானவர், vaanavar - தேவர்கள் கூடி, koodi - திரண்டு ஏத்த நின்ற, eatha nindra - துதிக்கும்படி நின்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு, aadu pulkodi aadhi moorthikku - ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு அடிமை புகுவது, adimai puguvadhu - அடியராயிருந்த தகுதி |
| 3113 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 8 | புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே; கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8 | அடிமையினால், adimaiyinaal - அடிமைசெய்து புக்கு, pukku - உள்புகுந்து தன்னை கண்ட, thannai kanda - தன்னைக்காணப்பெற்ற மார்க்கண்டேயனவனை, markkandeyanavannai - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை அன்று, andru - அக்காலத்தில் நக்கபிரான், nakkapiraan - திகம்பரச்சாமியான ருத்ரன் உய்யக்கொண்டதும், uyyakkondadhum - ரகூஷித்ததும் நாராயணன் அருளே, naarayanan arule - நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற தட தாழை, thada thaazhai - பெரியதாழைகளை வேலி, veli - வேலியாகவுடைய திருகுருகூர் அதனுள், thirukurukoor adhanul - திருநகரியிலே மிக்க, mikka - மேம்பாடுடைய ஆதி பிரான் நிற்க, aadhi piraan nirka - ஆதிநாதப்பெருமாளிருக்க மற்ற எ தெய்வம், matra e dheivam - வேறு எந்த தேவதைகளை விளம்புதிர், vilambuthir - பேசுகிறீர்கள்? |
| 3114 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 9 | விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9 | விளம்பும், vilambum - கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான ஆறு சமயமும், aaru samayamum - ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும் அவை ஆகிய, avai aagiya - அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான மற்றும், matrum - குத்ருஷ்டி மதங்களும் தன் பால், than paal - தன் விஷயத்திலே அளந்து காண்டற்கு அரியன் ஆகிய, alandhu kaandaṟku ariyan aagiya - எல்லை காணவொண்ணாதனாயிருக்கிற ஆதி பிரான், aadhi piraan - ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன் அழகும், azhagum - நித்யவாஸம் பண்ணுமிடமாய் வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய, valam kol than panai soozhnthu azhagu aaya - வளம் மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான திருகுருகூர் அதனை, thirukurukoor adhanai - திருநகரியை உம்மை, ummai - உங்களை உய்யக் கொண்டு போகுறில், uyya kondu pokuril - உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்க வேண்டியிருந்தீர்களாகில் உளம் கொள் ஞானத்து, uḷam kol nyaanathu - அந்தரங்க ஞானத்துக்குள்ளே வைம்மின், vaimmin - வைத்துச் சிந்தனை செய்யுங்கள். |
| 3115 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 10 | உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள் குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10 | எத்தேவும், Ethevum - எல்லாத் தேவதைகளும் எ உலகங்களும், E ulagangalum - எல்லாவுலகங்களும் மற்றும், Matrum - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய இத்தனையும், Ithanaiyum - இவையடங்கலும் தன் பால், Than paal - தன்னுடையதான மறு இல் மூர்த்தியோடு ஒத்து, maru il Moorthiyodu othu - நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி) நின்ற வண்ணம் நிற்க, Nindra vannam nirka - குறையற நிற்குமிருப்பிலே செறுவில், Seruvil - விளை நிலங்களில் செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களும் கரும்பொடு, Karumpodu - கருப்பஞ்சோலைகளும் ஓங்கு, Oongu - வளரும்படியான திருகுருகூர் அதனுள், Thirukurukoor adhanul - திருநகரியிலே குறிய மாண் உரு ஆகிய, Kuriya maan uru aagiya - வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும் நீள் குடக் கூத்தனுக்கு, Neel kuda koothanukku - (க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு ஆள் செய்வதே உறுவதாவது, Aal seivadhe uruvathavadhu - அடிமை செய்வதே உற்றதாம் |
| 3116 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 11 | ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான், நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11 | ஆள் செய்து, Aal seidhu - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி ஆழி பிரானை சேர்ந்தவன், Aazhi piraanai serndhavan - ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும் வண் குருகூர் நகரான், Van Kurukoor nagaraan - திருநகரிக்குத் தலைவரும் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன், Naal kamazh magizh maalai maarbinan - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான மாறன் சடகோபன், Maaran Sadagopan - ஆழ்வார் வேட்கையால், Vetkaiyaal - ஆதரத்தோடு சொன்ன பாடல் ஆயிரத்துள், Sonna paadal aayirathul - ஆயிரம்பாட்டினுள்ளே இ பத்தும், I pathum - இப்பதிகத்தை வல்லார், Vallar - ஓதவல்லவர்களுக்கு மீட்சி இன்றி, Meetchi indri - மீண்டும் திரும்பிதலில்லாத வைகுந்தம் மாநகர் மற்றது, Vaigundham maanagar mattrathu - ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம் கையது, Kaiyadhu - கரஸ்தம். |