Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஒரு நாயகமாய் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3007திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களுங்கூட நாளடைவிலே தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கட்கூடாகக் காணப்பெறலாயிருக்குமாகையாலே நித்ய ஸ்ரீமானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு என்கிறார்.) 1
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1
ஒரு நாயகம் ஆய்,Oru nayagam aayi - பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய்
ஓட,Oda - வெகுகாலமளவும்
உலகுஉடன்,Ulaguudan - உலகங்களை யெல்லாம்
ஆண்டவர்,Aandavar - அரசாட்சி புரிந்தவர்கள்
கரு நாய் கவர்ந்த காலர்,Karu naai kavarntha kaalar - (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும்
சிதைகிய பானையர்,Sithaigiya paanaiyar - உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி
பெரு நாடு காண,Peru naadu kaana - உலகமெல்லாம் திரண்டுவந்து (பலிபவத்தை) காணும்படியாக
இம்மையிலே,Immaiyile - இப்பிறவியிலேயே
தாம்,Thaam - தாங்களே
பிச்சை கொள்வர்,Pichchai kolvar - பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்)
திரு நாரணன்,Thiru Naaranan - ஸ்ரீ மந்நாராயணனுடைய
தாள்,Thaal - திருவடிகளை
காலம்பெற,Kaalampera - விரைவாக
சிந்தித்து,Sindhiththu - தியானித்து
உய்ம்மின்,Uymmmin - உஜ்ஜூவியுங்கோள்.
3008திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மஹாப்ரபுக்களாயிருந்து நெடுங்காலம் தாங்கள் ஆண்ட ராஜ்யங்களை யிழப்பார் என்றது கீழ்ப்பாட்டில்; அரசாளுகிற நாளில் போக்யைகளாகக் கைக்கொண்ட மடவார்களையும் பகைவர்க்குப் பறிகொடுத்துப் பரிதாபப்படுவர்களென்கிறாரிதில்) 2
உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2
திறை கொணர்ந்து,Thirai konarnthu - செலுத்தவேண்டிய கப்பத்தைக் கொண்டுவந்து கட்டி
உய்ம்மின் என்று,Uymmin endru - பிழைத்துப்போங்கள் என்று கட்டளையிட்டுக்கொண்டு
உலகு,Ulagu - இவ்வுலகத்தை
ஆண்டவர் தாம்,Aandavar thaam - அரசுபுரிந்த பிரபுக்கள் தாம்
இம்மையே,Immaiye - இப்பிறப்பிலேயே
தம்,Tham - தங்களுடைய
இன் சுவை மடவாரை,In suvai madavaarai - பரமபோக்யைகளான ஸ்திரீகளை
பிறர்கொள்ள,Pirarkolla - அயலார் கவாந்துகொள்ளும்படி
விட்டு,Vittu - கையிழந்து
வெம் மின் ஒளி வெயில்,Vem min oli veyil - கொடி தாய் மின்னொளி பரக்கின்ற வெயிலையுடைய
கானகம் போய்,Kaanagam poyi - காட்டிலே சென்று
குமை தின்பர்கள்,Kumai dinbargal - திண்டாடுவர்கள்; (ஆதலால்)
செம் மின் முடி,Sem min mudi - செவ்விய காந்திபெற்ற திருமுடியையுடைய
திரு மாலை,Thiru maalai - திருமகள் கொழுநனை
விரைந்து,Viraindhu - விரைவாக
அடி சேர்மின்,Adi saermin - அடி பணியுங்கோள்.
3009திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே வாழ்ந்தவர்கள் அந்தச் செல்வக் கிடப்பை யிழந்து ஒருவரும் மதியாதபடி யாவர்களென்கிறார்.) 3
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3
அடிசேர் முடியினர் ஆகி,Adiser mudiyinar aagi - தமது காலிலேபடிந்த கிரிடத்தையுடையவராகி
அரசர்கள் தாம்,Arasargal thaam - மஹாப்ரபுக்கள்
தொழ,Thozha - வணங்கும்படியாகவும்
இடி சேர் முரசங்கள்,Idi ser murasangal - இடியோடு ஒத்த பேரிகைகள்
முற்றத்து,Mutrathu - தம் தம் மாளிகைமுற்றத்திலே
இயம்ப,Iyamba - முழங்கும்படியாகவும்
இருந்தவர்,Irundhavar - வாழ்ந்தவர்கள்
பொடி சேர்துகள் ஆய் போவர்கள்,Podi serthugal aay povargal - பொடியோடு பொடியாய்த் தொலைந்து போவர்கள்;
ஆதலின்,Aadhalin - ஆதலால்
நொக்கென,Nokkena - விரைவாக
கடி சேர் துழாய் முடி,Kadi ser thulasi mudi - நறுமணம்மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடைய
கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய
கழல்கள்,Kazhalgal - திருவடிகளை
நினைமின்,Ninaimin - சிந்தியுங்கள்.
3010திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மதிப்பு கெடுவதுமாத்திரமன்றிக்கே ஆயுளும் நிலைநில்லாதாகையாலே எம்பெருமான் திருவடிகளை வணங்குகளென்கிறார்.) 4
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலின் பலர்
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4
நினைப்பான் புகில்,Ninaippaan pugil - ஆலோசித்துப் பார்க்குமிடத்து
எனைத்தோர் உலகங்களும்,Enaiththoor ulagangalum - அநேகயுகங்கள்
இ உலகு ஆண்டு கழித்தவர்,I ulagu aandu kazhiththavar - இவ்வுலகத்தையாண்டு முடிந்து போனவர்கள்
கடல் எக்கலில் நுண் மணலில் பலர்,Kadal ekkalil nun manalil palar - கடலில் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை காட்டிலும் அதிகமான தொகையுள்ளவர்களாவர்;(எப்படிப்பட்ட பிரபுக்களும்)
மனைப்பால்,Manaippaal - தாங்களிருந்த வீட்டின் இடம்
மருங்கு அற,Marungu ara - சுற்றுப்பக்கங்களோடும்கூடத் தொலையும்படி
மாய்தல் அல்லால்,Maaythal allaal - அழிந்து போவது தவிர
மற்ற கண்டிலம்.,Matra kandilam - வேறொன்றும் பார்த்தோமில்லை; (ஆதலால்)
பனை தாள்,Panai thaal - பனைமரம் போன்ற அடியையுடைய
மத களிறு,Matha kaliru - (குவலயபீடமென்னும்) மதயானையை
அட்டவன்,Attavan - கொன்றொழிந்த கண்ணபிரானுடைய
பாதம்,Paadham - திருவடிகளை
பணிமின்,Panimin - வணங்குங்கள்.
3011திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (சிற்றின்பத்தின் நுகர்ச்சியும் அஸ்திரமாதலால் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லி வாழுங்களென்கிறார்.) 5
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5
அம் சீதம் பை பூ பள்ளி,Am seetham pai poo palli - அழகும் குளிர்ச்சியும் விஸ்தாரமுமுள்ள பூம்படுக்கையிலே
திரு அருள் பணிமின் என்னும்,Thiru arul panimin ennum - (மாதர்காள்!) கிருபை பண்ணவேணும்’ என்று பிரார்த்திப்பவர்களாய்
அணி மென் குழலார் இன்பம் கலவி அமுது உண்டார்,Ani men kuzhalar inbam kalavi amudhu undaar - அழகிய மெல்லிய கூந்தலையுடைய மாதர்களின் சிற்றின் பக்கவலியமுதத்தை அனுபவித்தவர்களானவர்கள்
துணி முன்பு நால,Thuni munbu naala - அரைத்துணி (பின் பக்கத்திற்கு எட்டம் போராமல்) முன்புறத்தில்மாத்திரம் தொங்கும்படியான ஏழையையடைந்து
பல் ஏழையர் தாம் இழிப்ப,Pal yezhaiyar thaam izhippa - பல மாதர்கள் இழிவாகக் கூறி யேசும்படி
செல்வர்,Selvar - (பிச்சையெடுக்கப் போவர்கள்;) (ஆதலால்)
மணி மின்னு மேனி,Mani minnu meni - நீலமணிபோல் மின்னுகின்ற திருமேனியையுடைய
நம் மாயவன்,Nam maayavan - எம்பெருமானுடைய
பேர்,Per - திருநாமங்களை
சொல்லி,Solli - ஸங்கீர்த்தனம் பண்ணி
வாழ்மின்,Vazhmin - வாழுங்கள்.
3012திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (ஸ்ருஷ்டி காலந்தொடங்கி இன்றளவும் செல்வம் குன்றுமே ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோமென்கிறார்.) 6
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது,Vaazhnthaarkal vaazhndhadhu - நன்றாக வாழ்ந்தவர்களென்று நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பேசப்புகுந்தால்,
மாமழை மொக்குளின்,Maamalai mokkulilin - பெருமழையில் தோற்றும் நீர்க்குமிழிபோலே
மாய்ந்து மாய்ந்து,Maindhu maayndhu - அழிந்தழிந்து
ஆழ்ந்தார் என்று அல்லால்,Aazhnthar endru allaal - அதோகதியைபடைந்தனர் என்று சொல்லப்படுவது தவிர
அன்று முதல்,Andru mudhal - பரஹ்மஸ்டிருஷ்டி காலம் தொடங்கி
இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை,Indru arudhiya vaazhnthaarkal vaazhndhae nirpar enpathu illai - வாழ்ந்தவர்கள் ஒரு தன்மையாக வாழ்ந்தேயிருத்தல் கிடையாது;
நிற்குறில்,Nirguril - நிலைநின்ற வாழ்வடைய வேண்டில்
ஆழ்ந்து ஆர் கடல் பள்ளி,Aazhndhu aar kadal palli - ஆழமாகி நிறைந்த திருப்பாற்கடலில் துயில்கின்ற
அண்ணல்,Annal - ஸ்வாமிக்கு
அடியவர் ஆமின்,Adiyavar aamin - அடிமைப்பட்டிருங்கள்
3013திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (தேஹ போஷணத்திற்கு ஹேதுவான அன்னபானம் முதலிய போகமும் அநித்யமாகையாலே ஸகலகாரணபூதனான ஸர்வேச்வரனுடைய திருக்குணங்களை அநுஸந்தியுங்கோளென்கிறார்.) 7
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.–4-1-7
ஆம் இன்சுவை அவை அடிசில் ஆறோடு,Aam inchuvai avai adichil aarodu - பரமயோக்யமாய் ஷட்ரஸோபேதமான அன்னத்தை
உண்டு ஆர்ந்தபின்,Undu aarindhapin - வயிறாரவுண்டு தீர்ந்த பின்பும்
துர் மெல் மொழி மடவார் இரக்க,Thur mel mozhi madavaar irakka - வெகு அழகாகப் பேசவல்ல மாதர்கள் வேண்டிக்கொள்ள
பின்னும்,Pinnum - மேலும் (அந்த வேண்டுகோளை மீறமுடியாமல்)
துற்றுவார்,Thutruvaar - தின்றுகொண்டிருந்தவர்கள்
எமக்கு ஒரு துற்று ஈ மின் என்று,Emmakku oru thutru ee min endru - (அப்படி யிருப்பதற்கான செல்வம் அழந்தவளவிலே) ‘எமக்கு ஒரு கவளம் கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டு
இடறுவர்,Idaruvar - தடுமாறிச் செல்வர்கள்;
ஆதலின்,Aadalin - ஆதலால்
துழாய் முடி,Thuzhai mudi - திருத்துழாயையணிந்த திருமுடியையுடைய
ஆதி அம் சோதி,Aathi am sodhi - ஸர்வேச்வரனுடைய
குணங்கள்,Gunangal - திருக்குணங்களையே
கோமின்,Komin - சேர்த்து அனுபவியுங்கள்.
3014திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (அரசாட்சி புரிவதாகிய போகமும் எம்பெருமானருளாலன்றிக் கிடைக்கமாட்டாதென்றும், அங்ஙனமே கிடைக்கின்ற அதுதானும் நிலை நில்லாததென்றுமருளிச் செய்கிறார்.) 8
குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8
குணம் கொள்,Gunam kol - குணசாலிகளும்
நிறை புகழ்,Nirai pugal - நிறைந்த கீர்த்தியை யுடையருமான
மன்னர்,Mannar - ராஜகுமாரர்களாய்
கொடை கடன் பூண்டு இருந்து,Kodai kadhan poontu irundhu - ஔதார்யத்தைக் கடமையாக ஏறிட்டுக் கொண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,Inanggi ulagu udan aakkilum - உலகங்களை ஸ்வாதீனப்படுத்தி ஆண்டாலும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த ஸர்வேசுரனை ஆச்ரயித்தவில்லாதவர்கள்
மணம் கொண்ட போகத்து,Manam konda bhogathu - மிகநல்ல போகங்களில்
மன்னியும்,Manniyum - பொருந்தியிருந்தாலும்.
மீனவர்கள்,Meenavargal - அதோகதியடைவர்கள்;
பணம் கொள்,Panam kol - படமெடுத்தாடுகின்ற
அரவு,Aravu - ஆதிசேஷனை
அணையான்,Anaiyaan - படுக்கையாகவுடைய ஸர்வேசுரனது
திரு நாமம்,Thiru naamam - திருநாமங்களை
படிமின்,Padimin - படியுங்கள்; (படித்தால்)
மீள்வு இல்லை,Meelvu illai - மீட்சியில்லாத பெருஞ்செல்வம் கிடைக்கும்.
3015திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார்.) 9
படிமன்னு பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடிமன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9
படி மன்னு,Padi mannu - பரம்பரையாய் வருகின்ற
பல் கலன்,Pal kalan - பலபல ஆபரணங்களையும்
பற்றோடு அறுத்து,Patroodu aruthu - ஸவாஸநமாகவிட்டவர்களாய்
ஐம்புலன்,Aimbulan - பஞ்சேந்திரியங்களையும்
வென்று,Vendru - வசப்படுத்தினவர்களாய்
செடி மன்னு,Sedi mannu - தூறுமண்டிக்கிடக்கும்படியாக
காயம்,Kayam - சரீரத்தை
செற்றார்களும்,Settraarkalum - தவவிரதங்களால் வெறுக்கின்றவர்களும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த எம்பெருமபானை ஆச்ரயித்தலில்லாதவர்கள்
குடி மன்னும்,Kudi mannum - வெகுகாலம் நிலைபெற்றிருக்கும்படியான
இன் சுவர்க்கம்,In suvargkam - இனிமையான சுவர்க்கத்தை
எய்தியும் மீன்வர்கள்,Eydhiyum meenvargal - அடைந்தும் திரும்புவர்கள்; (ஆதலால்)
கொடிமன்னு புள் உடை,Kodimannu pul udai - கருடத்வஜனான
அண்ணல்,Annal - ஸ்வாமியினுடைய
கழல்கள்,Kazhalkal - திருவடிகளை
குறுகுமின்,Kurugumin - கிட்டுங்கள்; (அப்படியாயின்)
மீள்வு இல்லை,Meelvu illai - என்று மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும்.
3016திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாட்டிற்சொன்ன சுவர்க்கம்போலே அஸ்திரமல்லாமல் நிலை நின்ற மோக்ஷமான கைவல்யத்திலும் ஊற்றத்தைவிட்டு பகவத் கைங்கர்யத்தையே பரம ப்ராப்யமாகப் பற்றுங்களென்கிறார்.) 10
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10
குறுக,Kuruga - பட்டிமேயாதபடி மனத்தைக் குறுக்கி
உணர்வத்தொடு,Unarvathodu - ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு
மிக நோக்கி,Miga nokki - நன்றாகச் சேர்த்து (ஆத்மஸாகூஷாத்காரித்தைப்பண்ணி)
எல்லாம் விட்ட,Ellaam vitta - (ஜச்வர்யம், பகவதநுபவம் முதலிய) எல்லாவற்றையும் வெறுத்தவனாய்
இறுகல் இறப்பு என்னும்,Irukal irapu ennum - ஸங்கோச மோக்ஷமாகிய கை வல்யமோக்ஷத்தில் விருப்பங்கொண்டவனான
ஞானிக்கும்,Gnaanikkum - ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கும்
அப்பயன் இல்லை ஏல்,Appayann illai ael - அந்த பகவதுபாஸநம் இல்லையாகில்
சிறுக,Siruga - அற்பமாக
நினைவது,Ninaivathu - நினைப்பதற்குறுப்பான
ஒர்பாசம் உண்டாம்,Orpasham undaam - ஒரு பந்தம் உண்டாகும்
பின்னும்,Pinnnum - அதற்குமேலே
வீடு இல்லை,Veedu illai - அந்தக் கைவல்ய மோக்ஷதட ஒரு நாளும் விட்டு நிங்குவதன்று;
மறுகல் இல்,Marugal ill - ஹேயப்ரதிபடனான
ஈசனை,Eesanai - எம்பெருமானை
பற்றி,Partri - ஆச்ரயித்து
விடாவிடில்,Vidaavidil - நீங்காவிடில்
அஃதே வீடு,Akdhe veedu - அதுவே பரமபுருஷார்த்தம்
3017திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (துயரங்கள் தீர்ந்து ஆத்மோஜ்ஜூவநம் பெறுவதே இத்திருவாய்மொழி கற்பதற்குப் பலன் என்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11
உய்யப் புகும் ஆறு,Uyyap pugum aaru - உஜ்ஜீவநோபாயம்
அஃதே என்று,Akdhe endru - திருநாராணன் தாள்களேயென்று அறுதியிட்டு
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
கழல்கள் மேல்,Kazhalkal mel - திருவடிகள் விஷயமாக
கொய் பூ,Koi poo - திருவடிகள் விஷயமாக
பொழில் சூழ்,Pozhil soozh - கொய்வதற்குரிய பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத் தவைரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வாருடைய
குற்றேவல்,Kutreval - வாசிக கைங்கர்ய ரூபமாயும்
செய் கோலத்து,Sei kolathu - ஸர்வாலங்கார ஸம்பந்தமாயுமிருக்கிற
ஆயிரம்,Aayiram - ஆயிரந்தொகையுள்ள
சீர் தொடை பாடல்,Seer thodai paadal - திருக்குணங்களை யிட்டுத் தொடுத்த மாலை போன்ற இப்பாடலில்
இவை பத்தும்,Ivai pathum - இப்பத்துப் பாசுரங்களையும்
அஃகாமல்,Akhamal - குறைவின்றி
கற்பவர்,Karppavar - ஓதுமவர்கள்
ஆழ் துயர் போய்,Aazh thuyar poi - ஆழ்ந்த துயர் நீங்கப்பெற்ற
உய்யற்பாலர்,Uyyar paalar - உஜ்ஜூவிக்குந் தன்மையை யுடையராவர்.