Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஓராயிரமாய் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3579திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (அவன் நாராயணனாகையாலே நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுமை நிஸ்ஸந்தேஹமென்று தம்முள் தாமே அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.) 1
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1
ஓர் ஆயிரம் ஆய்,Or aayiram aai - ஒரு திருநாமமே ஆயிரம் திருநாமமாய்க் கொண்டு
உலகு எழ் அளிக்கும்,Ulaku ezh alikkum - ஏழுலகங்களையும் ரக்ஷிக்கும் படியான்
ஆயிரம் பேர் கொடது ஓர்பீடு உடையன்,Aayiram per kodadhu orpeedu udaiyan - ஆயிரந் திருநாமங்களை யுடையனாயிரு க்கையாகிற விலக்ஷணமான பெருமையை யுடையனும்
நாளம் கார் ஆயின,Naalam kaar aayin - காளமேகம்போலே சாமளமான
நல்மேனியினன்,Nal meniyinan - அழகிய திருமேனியையுடையனுமான
நாராயணன் அவனே நாங்கள் பிரான்,Naarayanan avane naangal praan - நாராயணனே நமக்கு உபகாரகண்
3580திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் நாராயண சப்தம் ப்ரஸ்துதமாகையாலே அதன் பொருளைப் பன்னி யுரைக்கிறாரிதில்.) 2
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2
அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே,gal gnalam padaiththu idanthaan avane - விபுலமான ஜகத்தைப் படைத்ததும் (வராஹ மூர்த்தியாகி) இடந்ததும் அப்பெருமானே
அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே,Ahthu undu umizhndhaan alandhaan avane - அந்த ஜகத்தை உண்டதும் உமிழ்ந்ததும் அளந்ததும் அவனே
அவனும் அவனும் அவனும் அவனே,Avanum avanum avanum avane - பிரமனும் சிவனும இந்திரனும் அவனே
மற்று எல்லோமும் அவனே,Matru ellomum avane - மற்றுள்ள ஸகல சேதநாசேதங்களும் அவனே (என்னு மில்லிஷயத்தை)
அறிந்தனம்,Arindanam - (அவன் தந்த ஞானத்தாலே) அறிந்து கொண்டோம்
3581திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறியப்போகாத பெருமானை நான் அவனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே உள்ளபடி அறியப்பெற்றேனென்கிறார்.) 3
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3
அறிந்தன வேதம் அரு பொருள் நூல்கள்,Arinjana vedam aru porul noolgal - தத்துவத்தை யறிந்தலையாயிருக்கிற வேதங்களினுடைய அரிய பொருள்களை யுறுதியிட வல்ல இதிஹாஸ புராணாதி நூல்களானவை
அருபொருள் ஆதல் அறிந்தன கொள்க,Aruporul aadhai arinjana kolga - எம்பெருமான் அறிவதற்கரிய பொருள் என்றில்வளவே அறிந்ததாகக் கொள்ளத்தகும்
அறிந்தனர் எல்லாம்,Arinjanar ellam - ஞானிகளான யாவரும்
அரியை வணங்கி,Ariyai vanangi - ஸர்வேச்வரணை ஆச்ரயித்த
நோய்கள் அறுக்கும் மருந்து,Noigal arukkum marundhu - தங்களுடைய ஸம்ஸார வியாதிகளை போக்க வல்ல மருந்தாக
அறிந்தனர்,Arindanar - அவனைத் தெரிந்து கொண்டார்கள் (இவ்வளவேயல்லது அவனுடைய யீடுபட்டிலர் என்றவாறு)
3582திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (நித்ய ஸுரிகளுக்குப் பரம போக்யனாயிருந்து வைத்து அங்கு நின்றும் போந்து க்ருஷ்ணனாயவதரித்து நம்மையும் நித்யஸுரிகள் நடுவே கொண்டு வைக்குமவனாயிருக்கிற எம்பெருமானை ஒருவாறு கிட்டப்பெற்றோம், நெஞ்சே அவனை விடாதேகொள் என்று தம்திருவுள்ளத்தை நோக்கி யருளிச்செய்கிற பாசுரமிது.) 4
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4
நங்கள் போகம் மகிழ்ச்சிக்கு மருந்தே என்று,Nangal pogam magizhchikku marundhe endru - உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்தை ஸாத்மிப்பிக்கும் மருந்தானவனே என்று
பெருந்தேவர் குழாங்கள்,Perundhevar kuzhaangal - நித்பஸுரிகணங்கள்
பிதற்றும் பிரான்,Pithatrum piraan - வாய்வெருவும்படியான ஸ்வாமியாய்
கருதேவன்,Karudhevan - கரிய திருமேனியை யுடையனாய்
எல்லாம் கண்ணன்,Ellam Kannaan - எமக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனாய்
விண் உலகம் தருமதேவனை,Vin ulagam dharumadhevanai - பரமபத போகத்தைத் தரவானான பெருமானை
மனனே சோரேல் கண்டாய்,Manane sorel kandai - நெஞ்சே நழுவவிடாதே கொள்
3583திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் சொன்னதையே வற்புறுத்திச் சொல்லுகிறாரிதில், உலகில் ஒருவர் ஒரு விஷயஞ்சொன்னால் அதனை ஸாமான்யமென்று கருதி உபேக்ஷித்திருப்பாருமுண்டே. அப்படி உபேக்ஷிக்கத்தக்க வார்த்தையன்றிது. அவசியம் கைக்கொள்ளத் தக்கது என்று ருசிப்பிக்கிறபடி.) 5
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5
மனமே,Maname - நெஞ்சே !
வல் வீனையேன்,Val veenaiyen - வல்லினையேனான நான்
உன்னை இரந்து,Unnai irandhu - உன்னை வேண்டிக் கொண்டு
கனமே சொல்லினேன்,Kaname sollinaen - திடமாகவொன்று சொல்லுகிறேன்.
இது சோரேல்கண்டாய்,edu sorel kandai - இதனை நழுவவிடாதே கொள்
புனம் மேலிய பூ பூதண் அழாய் அலங்கல்,Punaam meeliya poo poothan azhaai alangkal - (அதாவதென்னென்னில்) தன்னிலத்தில் வளர்ந்த செல்லித் திருத்துழாய் மாலையையுடையனாய்
எதும் இனம் இலானை,Edhum inam ilaanaai - (அவ்வழக்கு) ஒரு விதத்திலும் ஒப்பில்லாதவனான பெருமானை
அடைவதும்,Adaivadhum - கிட்டவேணு மென்கிறலிதான்
3584திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் தம் திருவுள்ளத்தை வேண்டினாரே; வேண்டுகோள் பலித்து அது நினைந்து நைந்து உள் கரைந்துருகுகிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6
மலர் மங்கை அணி தோள்,Malar mangai ani thol - பெரிய பிராட்டியாருடைய ஆபரணங்கள் பொருந்திய திருத்தோள்களையே
அடைவதும்,Adaivadhum - ஸம்க்லேஷிப்பதும்
அசுரர்க்கு வெம்போர்களே,Asurarkku vemporkal - ஆஸுரப்ரக்ருதிகளோடு வெவ்விய போர்களை செய்வதே நெஞ்சினால் நினைப்பதும்
கடல் அமுதம்,Kadal amudham - கடலிலுள்ள அமுதத்தையே கடைந்து கொடுப்பதும்
அவற்கே,Avarkae - அப்பெருமானுக்கே
எம் மனம் ஒருங்காகவே உடைவதும்,Em manam orungakave udavadhum - என்னெஞ்ச ஒருபடிப்பட சிதிலமாவதும்.
3585திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை யநுஸந்தித்து உருகின நெஞ்சு அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காணவிழைகின்ற தென்கிறாரிப்பாட்டில்.) 7
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7
ஆகம்சேர்,Aagamseer - ஒரு வடிவிலே பொருந்தின
நரசிங்கம் அது ஆகி,Narasingam adhu aagi - மதுஷ்யமூர்த்தியும், ஸிம்ஹ மூர்த்தி யுமுடையனாகி
ஓர் ஆகம்,Or aagam - (இரணியனது) ஓரு உவகை
பிளந்தான் உறை,Pilandhaan urai - பிளந்தவனான எம்பெருமான்
மாகம் வைகுந்தம்,Maagam vaikundham - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தை
காண்பதற்கு,Kaanpatharku - காண்கைக்கு
இரா பகல் இன்றியே,Iraa paghal indriye - இரவென்றும் பகலென்றும் வாசியின்றிக்கே
என் மனம் ஏகம் எண்ணும்,En manam egam ennum - என்மனம் ஒரே விதமாக எண்ணுகின்றது
3586திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (மாசுவைகுந்தம் காண்பதற்கு மனோரதங்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் ! சரீரஸம்பந்த மற்ற பின்பு போய் அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடேயநுபவிக்கும் திருமாலை இந்நிலத்தேயுள்ளதன்றோ; இதை விட்டு மாகவைகுந்தங்காண வாசைப்படுவதில் என்ன விசேஷம்? என்ன; இது வாஸ்தவமே; திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான். அதனாலெனக்கென்ன? காலாழும் நெஞ்சழியும் கண்சுழலுமென்றிருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்யஹீநனன்றோ தேவர்களேயன்றோ அங்குச் சென்று தொழுவார்; ஆகவே திருமலையோடு பரமபதத்தோடு வாசியில்லையே யெனக்கு என்கிறார்.) 8
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8
இருவினையும்,Irvinaiyum - புண்ணியம் பாவம் என்கிற இரண்டு கருமங்களையும்
இன்றிபோக கெடுத்து,Indri pogak keduththu - ஸத்தையழிந்து போம்படி தொலைத்து
ஆக்கை ஒன்றி புகாமை,Aakkai onri pugamai - (ஆத்மா) சரீரத்தோடே சரீரமாகக் கலந்துபோகாதபடி
உய்யக் கொள்வான்,Uyyaik kolvaan - உஜ்ஜீவனப்படுத்து மெம்பெருமான்
நின்ற,Nindra - (அடியார்களை யெதிர்பார்த்து) நிற்கிற
வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலை
நீள் நிலத்து உள்ளது,Neel nilathu ulladhu - பரந்த இவ்வுலகத்தே யுள்ள தொன்றாம்
சென்று,Sendru - (அங்கே) சென்று சிட்டி
கை தொழுவார்கள்,Kai thozhuvargal - கை தொழுமலர்கள்
தேவர்களே,Thevargale - (மநுஷ்யான்றிக்கே) தேவர்களேயாவர்.
3587திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் திருவேங்கடம் சென்று தேவர்கள் கைதொழுவார்களே என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர்! திருவேங்கடன் சென்று கை தொழுவது அத்தனை யருமையன்று காணம் மதுஷயர்களெல்லாருஞ் சென்று கை தொழுமிடமேயது நீரும் வந்து கை தொழுது க்ருதாருத்யகலமே என்று கூற, அதற்கு விடையளிக்கிற தீப்பாசுரம்.) 9
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9
மாமலர்,Maamalai - சிறந்த புஷ்பங்களையும்
நீர் சுடர் தூபம்,Neer sudar thoopam - தீர்த்தம் தீபம் தூபூம் இளைகளையும்
கொண்டு,Kondu - எந்திக் கொண்டு
சொழுது எழுதும் என்னுமிது,Sozhudhu ezhuthum ennum idhu - அடிமனை செய்து மென்றால் இது
பழுது இல்தொல் புகழ்,Pazhuthu ilthol pugazh - (ஆரா திக்கைக்கு அரியன்) என்கிற அலத்யமின்றிக்கே இயற்கையான புகழையுடைய
உன தாள்கள்,Un thaalgal - உனது திருவடிகளை
தழுவும் ஆறு அறியேன்,Thazhuvum aaru ariyaan - கிட்டும் விரகு அறிகின்றறேன்
3588திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (ப்ரயோஜநாந்தர பார்களாய் அடிமைச் சுவடு அறியாதவர்களான பிரமன் முதலிய தேவர்களுக்கும் முகங்கொடுக்குமவனான உன்னுடைய சீலகுணம் என் வாக்குக்கு நிலமன்றோ யென்கிறார்.) 10
தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10
தாள தாமரையான்,Thaal thamaraiyaan - காளையுடைய தாமரையிற் பிறந்த பிரான்
உனது உந்தியான்,Unadhu unthiyaan - உன்னுடைய உந்தையைப் பற்றினவன்
வாள் கொள் நின் மழு ஆளி,Vaal kol nin mazu aali - ஒளி பொருந்திய நீண்ட மழுப்படையை யுடைய ருத்தன்
உன் ஆகத்தான்,Un aakathaan - உனது திருமேனியில் ஒரு பந்தத்தைப் பற்றினவன்
ஆளர் ஆய் தொழுவாரும் அமரர்கள்,Aalar aai thozhuvaarum amararhal - அடியார்களாய்ப் பணிகின்றவர்களும் தேவர்கள்
உன் சீலம்,Un seelam - உன்னுடைய சீல குணத்தை
நாளும் என் புகழ்கோ,Naalum en pugazhko - காலமெல்லாம் புகழ்ந்தாலும் என்னவென்று புகழ்வேன்
3589திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (இப்பதிகம் கற்பார் திருநாடு செல்லுகை ஆச்சரியமன்று, ப்ராப்தமே என்கிறார்.) 11
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11
சீலம் எல்லை இலான் அடிமேல்,Seelam ellai ilaan adimael - எல்லையற்ற சீல குணத்தையுடைய பெருமான் திருவடிகளைப் பற்றி
அணி கோலம் நீள் கருகூர் சடகோபன்,Ani kolam neel karukoor sadagopan - மிகவழகிய திருக்குருசடரியைதரித்த ஆழ்வாருடைய
சொல் மாலை,Sol maalai - சொற்களினாலான மாலையநயிருக்கிற
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே
இவை பத்தினின்,Ivai paththinin - இப்பதிகத்திலே அந்வயித்தவர்கள் பாலர்
வைகுந்தம் ஏறுதல் பான்மை,Vaikundham erudhal paanmai - பரமபதத்தில் ஏறப்பெறுவது இயல்லாம்