Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கண்கள் சிவந்து (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3523திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.) 11
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11
தன் கண்கள் சிவந்து நோக்கும்,Than kankal sivandhu nokkum - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும்
3524திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமான் ஆழ்வாரோடு கலந்ததனால் தனக்குப் புதுக் கணித்த திவ்ய ஸௌந்தர்யத்தைக் காட்டக் கண்டு அநுபவித்து ஆனந்தம் பொங்கிப் பேசுகிற பாசுரமிது.) 1
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே–8-8-1
கண்கள் சிவந்து பெரிய ஆய்,Kangal sivandhu periya aay - திருக்கண்கள் சிவந்தும் பெருத்துமிருப்பனவாய்
வாயும் சிவந்து கனிந்து,Vaayum sivandhu kanindhu - திருவதரமும் சிவந்து பழுத்து
உள்ளே,Ullae - அகவாயிலே
வெண் பல் இலகு சுடர்,Ven pal ilaku sudar - வெளுத்த திருமுத்துக்களினுடைய விளங்குகிற சுடரையுடையனாய்
இலகு விலகு மகர குண்டலத்தன்,Ilaku vilaku makara kundaladhan - மிக விளங்கி அசைகிற மகரகுண்டலங்களையுமுடையனாய்
கொண்டல் வண்ணன்,Kondal vannan - காள மேக நிறத்தனாய்
சுடர் முடியன்,Sudar mudhiyan - ஒளிமிக்க திருவபிஷேகத்தையுடையனாய்
நான்கு தோளன்,Naangu tholan - திருத்தோள்கள் நான்குமுடையனாய்
குனி சார்ங்கன்,Kuni saaringan - வளைந்த சார்ங்கவில்லையுடையனாய்
ஒண் சங்கு கதைவாள் ஆழியான் ஒருவன்,On shangu kathival aazhiyaan oruvan - அழகிய சங்கும் கதையும் வாளும் ஆழியுமுடையனான வொருவன்
அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - அடியேனுடைய உள்ளே விளங்கா நின்றான்.
3525திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ விலஷணனாய் இருக்கிற எம்பெருமான் -என் உள்ளே புகுந்து அருளுகை அன்றிக்கே -என் சரீரத்தின் உள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் -என்னுள்ளான்-என்ன வேண்டும் இடத்தில் -அடியேன் உள்ளான் -என்கையாலே -அடியேன் என்றும் -நான் என்றும் பர்யாயம் ) 2
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2
அண்டத்து அகத்தான்,Andathu akathaan - அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் அந்த ராத்மாவாய்
புறத்து உள்ளான்,Purathu ullaan - அண்டத்துக்குப் புறம்புபட்ட பதார்த்தங்களுக்கும் அந்தராத்மாவாய்.
இதுவே படி என்று உரைக்கல் ஆம் படியன் அல்லன்,Idhuvae padhi endru uraikkal aam padiyan allan - இதுவே ப்ரகாரமென்று சொல்லலாவதொரு ப்ரகாரத்தையுடையனல்லாதனாய்
பரம்பரன்,Parambara - பராத்பரனாய்
கடி நாற்றம் சேர்,Kadi naatram ser - விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த
ஆலையுள்,Aalaiyul - தேனிலுள்ள
இன்பம்,Inbam - சுவையினுடைய
துன்பம் கழி நேர்மை,Thunbam kazhi naermai - கோதுகழிந்த ஸாரமான பாகம் போலிருக்கிற
ஒடியா,Odiyaa - விச்சேத மற்று நித்யமான
இன்பம் பெருமையோன்,Inbam perumaiyon - ஆனந்தமயனாய்
உணர்வில் உம்பர் ஒருவன்,Unarvil umbar oruvan - அறிவு விஷயத்தில் மேற்பட்டிருப்பவனான ஒருவன்
அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - பட்டிருப்பவனான ஒருவன் ஆத்மாவில் அந்தராத்மாவாயிரா நின்றான்
உடல் உள்ளான்,Udal ullaan - சரீரத்தினுள்ளாமிராநின்றான்.
3526திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே தன் விஷயத்தில் இசை வையுமுண்டாக்கி என்னோடே கலந்து அந்தக் கலவி நிலைத்து நிற்பதற்காக, விலக்ஷணமாய்த் தனக்கு அநந்யார்ஹமான ஆத்மஸ்ரூபத்தையுங் காட்டிக்கொடுத்தருளினா னென்கிறார்.) 3
உணர்விலும் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3
உணர்வில் உம்பர் ஒருவனை,Unarvil umbar oruvanai - அயர்வறும்மரர்களதி பதியை
அவனது அருளால்,Avanathu arulaal - அவனுடைய க்ருபையாலே
உறல் பொருட்டு,Ural porutthu - கிட்டுகைக்காக
என் உணர்வின் உள்ளே,En unarvin ullae - என்னுடைய அபேக்ஷையாகிற ஞானத்துக்குள்ளே
இருத்தினேன்,Iruththinaen - இருக்கச் செய்தேன்
அதுவும்,Adhuvum - அந்த அபேக்ஷை நிர்ஹேதுக க்ருபையடியாக உண்டானதே
உணர்வும் உயிரும் உடம்பும்,Unarvum uyirum udambum - (இப்படி என்னை இசைவித்து என்னுள்ளே புகுந்தவன்) விஷயஙகளைப் பற்றுகிற ஞானமும் பிராணனும் சரீரமும்
மற்று உலப்பிலனவும்,Matru ulappilanavum - மற்று முண்டான அளவற்ற ப்ரக்ருதிவிகாரங்களும்
பழுதே ஆம் உணர்வை பெற ஊர்ந்து,Pazhudhe aam unarvai peraa oorndhu - ஹேய மென்கிற உணர்வைப் பெறும்படியாக நடத்தி
இறவு ஏறி,Iravu aeri - ஆத்மஸ்வரூபத்தைக் காட்டித்தருகையாகிற முடிவளவும் நடத்தி
யானும் தான் ஆய் ஒழிந்தான்,Yaanum thaan aay ozhinthaan - என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்ல்லாம்படியான அளவும் காட்டித்தந்தான்.
3527திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இவ்வாத்மா தனக்குப் பரபோயமென்னுமிடத்தையும் காட்டித் தந்தருளின படியையருளிச் செய்கிறாரிதில்.) 4
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4
யாதும் யவர்க்கும் முன்னோனை,Yadhum yavarkkum munnonai - ஸகல சேதநாசேதநங்களுக்கும் காரண பூதனும்
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனி முதலை,Thaanum sivanum brahmanum aagi panaiyatha thani mudhalai - தானான தன்மையனாயும் சிவனாயும் பிரமனாயும் விஸத்ருதனானப்ரதான காரண பூதனும்.
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து,Thenum paalum kannalum amudhum aagi thiththiththu - தனக்குப் பரமபோக்ய மாய்க் கொண்டு ரஸித்து
என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை,En oonil uyiril unarvinil ninra onraai - என்னுடைய சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்துநின்ற ஆத்மாவை சரீரமாக யுடையனுமாய்
யானும் தானாய் ஒழிந்தானை,Yaanum thaan aay ozhindhaanai - நானும் தானாய்விட்டவனான எம்பெருமானை
உணர்ந்தேன்,Unarnthaan - அறிப் பெற்றேன்.
3528திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமானது திருவருளால் நானறிந்த ஆத்ம வஸ்து வேறொருவர்க்கு மறியக் கூடியதன்று, அறிந்தாலும் ஸாக்ஷாத் கரிக்கக் கூடியதென்று என்கிறதிப்பாட்டில்.) 5
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு,Ninra onraai unarnthaanukku - நித்யமாய் ஜ்ஞாநைதஸ்வரூபமான ஆத்ம வஸ்துவை எம்பெருமான் தனக்கு ப்ரகாரமாகக் காட்டிக்கொடுக்கக் கண்ட எனக்குப்போலே
அதன் நுண் நேர்மை,Adhan nun naermai - அவ்வாத்மஸ்வரூபத்தின் ஸூக்ஷ்ம்மான வைலக்ஷணயம்
அது இது என்று,Adhu idhu endru - அப்படிப்பட்டது இப்படிப்பட்டதென்று
ஒருவர்க்கு ஒனறும் உணரல் ஆகாது உணர்த்தும்,Oruvarrkkum onrum unaral aagathu unarththum - மாஞானியர்க்கும் சிறிதும் அறியப்போகாது, வருந்தி ஒருவாறு அறிந்தாலும்
மேலும் காண்பு அரிது,Melum kaanbu aridhu - ஸாக்ஷாத்கரிக்கப்போகாது,
சென்று சென்று பரம்பரம் ஆய்,Senru senru parambaraam aay - ஒன்றுக்கொன்று மேற்பட்ட தாகி
யாதும் இன்றி தேய்ந்து அற்று,Yaadum inri theendhu aatru - அவற்றின் ஸ்வபாவம் ஒன்றுமின்றிக்கே அவற்றோடு தொற்றற்று
நன்று தீது என்று அறிவு அரிது ஆய்,Nandru theethu endru arivu aridhu aay - ப்ராக்ருதங்களுக்குண்டான நன்மை தீமைகள் அறியவரிதாய்
நன்று ஆய்,Nandru aay - ஸர்வ விலக்ஷணமாய்
ஞானம் கடந்தது,Gyaanam kadandhadhu - அவற்றைப் பற்றின ஞானத்திற்கு விஷயமன்றியே யிருந்தது.
3529திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (யோகசாஸத்ரத்தில் ஆத்மஷ்வரூப ப்ராப்திக்கு உபாயமாகச் சொல்லப்படுகிற இந்திரிய ஜயம் முதலானவையாகிற யோகத்தாலே ப்ரக்ருதியில் நின்றும் விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை ஒருவாறு வருந்தி ஸாக்ஷாத்கரிக்கலா மென்கிறாரிதில்.) 6
நன்றாய் ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6
ஞானம் கடந்து போய்,Gyaanam kadandhu pooi - இந்திரிய கோசரமாஷயங்களை தப்பிபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,Nal indriyam ellam eerththu - கொடுமை மிக்க இந்திரயங்கமுயும் கழித்து
ஒன்று ஆய் கிடந்த அரு பெரு அதனை உலப்பு இல் பாழ் அதனை உணர்ந்து உணர்ந்து,Onru aay kidandha aru peru adhanai ulappu il paazh adhanai unarnthu unarnthu - பிரிக்கமுடியாதபடி பொருந்தியிருக்கிற அரிய பெரிய அஸங்க்யாதமான ப்ரக்ருதித்தவத்தை ஆத்மாவிற் காட்டிலும் வேறு பட்டதாக வுணர்ந்து
நன்றாய் ஆங்கு சென்று,Nandru aay aanggu senru - ஆத்ம ஸ்வரூபத்தளவுஞ் சென்று
இன்பம் துன்பங்கள் செற்று களைந்து,Inbam thunbangal setru kalaindhu - ஸுகத்துக்கங்களுக்கு அடியான புண்ய பாபங்களையும் விட்டு
பசை அற்றால்,Pasai atral - அவற்றில் ருசி வாஸகைகளும் கழியுண்டால்
அன்றே,Andrae - அன்றைக்கே
அப்போதே,Appodhe - அந்த க்ஷணத்திலேயே
வீடு,Veedu - ப்ரக்ருதிப்ராக்ருதங்களினிற்று விடு படுகையாகும்,
அதுவே வீடு வீடு ஆம்,Adhuvae veedu veedu aay - அதுவே ஆத்மாநுபவமோக்ஷமாம்.
3530திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இங்குச் சொன்னபடியே ஆத்மஸாக்ஷாத்காரம் பண்ணப் பாராமல் வேறு சில வழிகளில் முயன்றால் அம்முயற்சி கைகூடாதென்கிறார்.) 7
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7
அதுவே,Adhuvae - எம்பெருமானுக்கு ப்ரகாரமாகக் கீழே ப்ரஸதாவிக்கப்பட்ட அவ்வாத்மாநுபவமே
வீடு,Veedu - போக்ஷமாவது
வீடு பேறு இன்பம் தானும் அது,Veedu peru inbam thaanum adhu - மோக்ஷலாபத்தால் வரும் ஆனந்தமும் அது,
தேறி,Thaeri - இப்படியாக நிஷ்கர்ஷித்து
எதுவே தானும் பற்று இன்றி,Edhuvae thaanum pattru inri - ப்ரக்ருதிப்ராக்ருதங்களெல்லாவற்றிலும் ஸங்கமற்று
ஆதும் இலிகள் ஆகிற்கில்,Aadhum iligal aakirkkil - ருசி வாஸனைகளுமில்லாதவர்களாக ஆகப்பெற்றால்
அதுவே வீடு,Adhuvae veedu - அதுதான் மோக்ஷம்
வீடு பேறு இன்பம் தானும் அது,Veedu peru inbam thaanum adhu - மோக்ஷானந்தமும் அதுவே
தேறாது,Theradhu - இப்படி தெளியமாட்டாமல்
வீடு எதுஇன்பம் எது என்று எய்த்தார்,Veedu edhu inbam edhu endru eyththaar - மோக்ஷமாவது எது? ஆனந்தமாவது எது? என்று கலங்கியே நிற்பவர்கள்
எய்த்தார் எய்த்தாரே,Eyththaar eyththaar - என்றும் கலங்கியே கிடப்பர்களத்தனை.
3531திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (பெறுதற்கரிதான இந்த ஞானம் ஒருவாறு கைவந்தாலும் எம்பெருமானைப் பற்றின அந்திம ஸ்மிருதி யில்லையாகில் இந்த ஞானம் கைபுகுருகைக்குப்பட்ட க்லேசமெல்லாம் பழுதேயாகுமென்கிறார்.) 8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து,Eyththaar eyththaar eyththaar endru illaththaarum puraththaarum moiydhu - முடிந்தார் முடிந்தார் முடிந்தாரென்று கூச்சலிட்டு வீட்டிலுள்ளவர்களும் மற்றுமுள்ளவர்களும் திரண்டு
ஆங்கு அலறி முயங்க,Aangu alari muyanga - அவ்வவஸ்தையிலே அலறிக் கட்டிக்கொள்ள
தாம் போகும்போது,Thaam pogumpoathu - உத்க்ரமணமாகிறவப்போது
உன்மத்தர் போல் பித்தே ஏறி,Unmaththar poal pitthae aeri - உன்மத்தர்கள் போல். நெஞ்சு கலங்கி
அனுராகம் பொழியும் போது,Anuraagam pozhiyum poathu - அனுராகம் மிகமிகப்பெருங்குங் காலத்தில்
எம்பெரும்மானோடு ஒத்தே சென்று,Emperummaanodu oththae senru - (கலக்கமற்றுத் தெளிவுபிறந்து) எம்பெருமானிடத்தில் பொருத்தமுண்டாகி
அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில்,Angu ullam kooda koodidraagil - அப்பெருமான் பக்கலிலே நெஞ்சு ப்ரவணமாகப் பெற்றால்
நல் உறைப்பு,Nal uraiyppu - நல்லவுறுதியாம். (அந்திம ஸ்மிருதி யுண்டானால் பலனாகும் என்கை.)
3532திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (கீழ்ப்பாட்டில் அந்திமஸ்மிருதிவேணுமென்று சொல்லிற்று, அந்த ப்ரஸ்தாவத்தில் ஜீவாதமா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மைப் பொருள் தேறுகையாலே இப்படியுள்ள ஜீவ பர பேதத்தை யதார்த்தமாகக் கொள்ளாதே, இந்த பேதம் அபரமார்த்தம், தத்வஜ்ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்ம்மும் ஏகதத்வமேயென்று கொண்டு, நித்யஸம்ஸாரியான சேதநனையே ப்ரஹ்ம்மாகச் சொல்லுகிற மாயாவாதிகள் நினைவுக்கு வர, அவர்களின் பக்ஷத்தை ப்ரதிக்ஷேபிக்கிறார் இப்பாட்டில்.) 9
கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9
கூடிற்று ஆகில் நல் உறைப்பு,Koodidru aagil nal uraiyppu - ஜீவாத்ம ஸ்வரூபமும் பரமாத்ம ஸ்வரூபமும் ஒன்றாகப் பெற்றால் நல்லவாய்ப்புத்தான்,
கூடாமையை கூடினால்,Koodamaai koodinaal - அஸம்பாவிதமானவை ஸம்பவிக்கப் பெற்றால்
அது,Adhu - அந்த ஜீவ்வஸ்துவானது
ஆடல் பறவை உயர்கொடி எம்மாயன் ஆவது,Aadal paravai uyarkkodi emmaayan aavadhu - ஆடுபுட் கொடியையுடைய எம்பெருமானாக்கூடும் (இதுதான் அஸம்பாவிதமென்கை) (ஆதலால்)
அதுவே,Adhuvae - ஜீவ்வஸ்து வாகவே நிற்குமத்தனை (ஜீவபரபேதம் ஒருகாலும் போகாதென்றவாறு)
ஒரு பரிசே விடை பண்ணி,Oru parisai vidai pannni - தங்கள் மனம்போனவொரு விதமாகவே மோக்ஷ வஸ்துவைக் கல்பிப்பார்
எதிர்வும் நிகழ்வும் கழிவும் ஆய்,Edhirvum nigazhvum kazhivum aay - முக்காலத்து முள்ளாராய்
ஒடி திரியும்,Odi thiriyum - ஸம்ஸார பதவியிலேயே உழன்று கொண்டிருப்பாராய்
யோகிகளும்,Yogigalum - (குத்ருஷ்டிகளான) சில மஹாநுபாவர்ளும்
உளர், இல்லை அல்லர்,Ular, illai allar - இருக்கிறார்களே யொழிய இல்லாமற் போகவில்லை. (எதிர்வும் நிகழ்வும் கழிவுமாயுளர், இல்லை யல்லர் என்று அந்வயிப்பது)
3533திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இப்படிப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை எனக்குக் காட்டிக் கொடுத்து, பாஹ்ய குத்ருஷ்டிமதங்களில் நான் கைகழியப் போகாதபடி என்னெஞசிலே எம்பெருமான் புகுந்திருக்கையாலே என்னுடைய ஸாம்ஸாரிக க்லேசமெல்லாம் தீரப்பெற்றேனென்று களித்துப் பேசும் பாசுரமிது.) 10
உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10
இல்லை அல்லர் ஆய் உளரும்,Illai allar aay ularum - (அடியார்களுக்கு)இல்லை யென்னாதபடி உளராயிருப்பவராய்)
இல்லை ஆகியே,Illai aagiye - (மற்றையோர்க்கு) இல்லையாகியே உளராயிருப்பவராய்
எம் ஒருவர் உளர்,Em oruvar ular - எம்பெருமானுளர்
அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்,Avar vandhu en ullaththullaai uraiykinraar - அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறைப் போலே ஆக்கமும்,Valarum pirai polaai aakkamum - வளர் பிறைக்கு உள்ளது போலே வளர்ச்சியும்
தேய் பிளை போல அசைவும்,Thei pilai pola asaiyum - க்ருஷ்ணபக்ஷ சந்திரனுக்கு உள்ளதுபோலே தேய்வும் உடைத்தாகி
வளரும் கடரும் இருளும் போல்,Valarum kadarum irulum pola - ஸூரியனும் இருளும் போலே மாறி மாறி வரக்கூடியதான
தெருளும் மருளும் மாய்த்தோம்,Therulum marulum maayththom - கழித்துக்கொள்ளப்பெற்றோம்.
3534திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11
தெருளும் மருளும் மாய்த்து,Therulum marulum maayththu - ஜ்ஞாரா ஜ்ஞானங்கள் கலசிவருகிற ரீதியை யொழித்து
தன்,Than - தன்னுடைய
திருந்து செம்பொன் கழல் அடி கீழ்,Thirundhu sempon kazhal adi keezh - அழகிய செம்பொன்னாலான வீரக்கழணிந்த திருவடிகளின் கீழே
அருளி இருத்தும்,Aruli iruththum - பரம கிருபைபண்ணி ஸ்தாபிக்கிற
அம்மான் ஆம்,Ammaan aam - ஸ்வாமியாய்
அயன் ஆம் சிவன் ஆம் திருமாலால்,Ayan aam sivan aam thirumaalal - பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நிர்வஹிக்கிற எம்பெருமானாலே
அருளப்பட்ட,Arulappatta - மயர்வற மதிநலமருளப்பெற்ற
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வாருடைய
ஓர் ஆயிரத்துள் இ பத்தால்,Or aayiraththul i paththaal - ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக
நம் அண்ணல் கருமாணிக்கம்,Nam annal karumaanikkam - கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி
அருளி அடி கீழ் இருந்தும்,Aruli adi keezh irundhum - (இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை) கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன்