| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3381 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில்.) 1 | கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ? புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1 | புல் பா முதல் ஆ,Pul paa mudhal aa - புல்லாகிற பதார்த்தம் முதலாகவும் புல் எறும்பு ஆதி,Pul erumbu aadhi - மிக அற்பமான எறும்பு முதலாகவும் நல் பால் அயோத்தியில் வாழும்,Nal paal ayothiyil vaazhum - (ராமகுணங்கள் நடையாடுகிற) நல்ல தேசமான அயோத்யாபுரியில் வாழ்கிற சராசரம முற்றவும்,Saraasaram mutravum - ஸ்தாவர ஜங்கமங்களானவை யெல்லாவற்றையும். ஒன்று இன்றியே,Ondru indriye - ஒருவிதமான ஸாதநாநுஷ்டானமுமில்லாமலிருக்கச் செய்தேயும் நான் முகனார் பெற்ற நாட்டுளே,Naan muganaar petra naattule - பிரமன் படைத்த இவ்வுலகுக் குள்ளே நல பாலுக்கு உய்த்தனன்,Nal paalukku uyiththanan - நல்ல ஸ்வபாவத்தையுடைத்தாம் படி பண்ணினான்; கற்பார்,Karpaar - (ஆதலால்) (உலகில்) கற்க விரும்பு மவர்கள் இராமபிரானை அல்லாமல் மற்றும் கற்பரோ,iraamapiraanai allaamal matrum karparo - (குணக்கடலாகிய) ஸ்ரீராமனைத் தவிர மற்றொரு வ்யக்தியைக் கற்க நினைப்பர்களோ? |
| 3382 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அங்கு உண்டான சகல சேதனரையும் தன்னை அல்லது அறியாத படி தன் குணத்தால் பந்தித்து அகப்படுத்தி வைத்து -அவர்களை இட்டு வைத்து தானே எழுந்து அருளாதே அவர்களையும் கூடக் கொண்டு திரு நாட்டிலே எழுந்து அருளினான் என்று கீழ் சொன்னதில் காட்டிலும் அதிக குணத்தை அருளிச் செய்கிறார்.) 2 | நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ? நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2 | நாட்டில் பிறந்தது,Naattil pirandathu - (தன்வாசியறியாத) இக்கொடிய வுலகத்திலே வந்து பிறந்தது படாதனபட்டு,Padaadhanapattu - ஸம்ஸாரிகளும் அநுபவியாத கிலேசங்களையநுபவித்து மனிசர்க்கு ஆ,Manisarkku aa - செய்தநன்றியறியாத மனிசர்களுக்காக நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு,Naattai naliyum arakkarai naadi thandhittu - உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று கொன்று நாட்டை அளித்து,Naattai aliththu - (இப்படியாக) நாட்டைரக்ஷித்து உய்ய செய்து,Uyya seyythu - உஜ்ஜீவனப்படுத்தி நடந்தமை கேட்டும்,Nadandamai kaettum - பின்பு திருநாட்டுக்கு நடந்த படியைக் கேட்டிருந்தும் நாட்டில் பிறந்தவர்,Naattil pirandhavar - (அப்பெருமானுடைய திருக்குணங்கள் நடையாடுகிற) நாட்டிலே பிறந்தவர்கள் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ,Naaranarkku aal anri aavaro - நாராயணனான அந்த ஸ்ரீராமனுக்கல்லது மற்றொருவர்க்கு ஆட்படுவர்களோ? |
| 3383 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நிச்சலும் சிந்திப்பது தவிர வேறொன்றுமறியாத சிசுபாலனையுமுட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மஹாகுணத்தை யறிந்தவர்கள் அப்படிப் பட்ட குணவானுடைய திருக்குணங்களையன்றோ காதாரக் கேட்கவேணுமென்கிறார்.) 3 | கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ? கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3 | கேட்பார்,Ketpar - எம்பெருமானுடைய நிந்தைகளையேகா தாரக்கேட்கவேணுமென்கிற விருப்பமுடையவர்களுக்குங் கூட செவி சுடு,Sevi sudu - கர்ணகடோரமான கீழ்மை வசவுகளேவையும்,Keezmai vasavugalayevaiyum - மிகத் தண்ணிய தூஷணைகளையிட்டு தூஷிக்குமவனாய் சேண் பால் பழம் பகைவன் சிசுபாலன்,Sen paal pazham pakaivan sishupalan - நெடுங்காலத்துப் பகைவனான சிசுபாலனுங்கூட திரு அடி,Thiru adi - ஸ்லாமியான கண்ண பிரானுடைய தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்தும்,Thaal paal adaindha thanmai arivaarai arindhum - திருவடிகளிலே ஸாயுஜ்யம்பெற்றபடியை யறிவாரை அறிந்து வைத்தும், கேட்பார்கள்,Kedpaarhal - நல்லது கேட்க வேணுமென்றிருக்குமவர்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ,Keshavan keerthi allaal matrum kedparoh - எம்பெருமானுடைய கீர்த்திகளை யொழிய வேறொன்று கேட்பாரோ? |
| 3384 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ப்ரளயத்திலே மங்கிக் கிடந்த ஜகத்தை மீளவு முண்டாக்கின மஹா குணத்தை யறிந்து வைத்தால் இப்படிப்பட்ட குணசாலிக்கே யன்றோ ஆளாகப் பெற வேணுமென்கிறார்.) 4 | தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ? பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4 | பன்மை படர் பொருள் ஆதும் இல்பாழ் நெடுங்காலத்து,Panmai padar porul aadum ilpaazh nedungkaalathu - பலவகைப்பட்ட விரிவான பதார்த்தங்கள் ஒன்றுமில்லாதபடி வெகுகாலம் சூந்யமாயிருந்தபோது நன்மை புனல் பண்ணி,Nanmai punal panni - நன்மை மிகுந்த காரணஜலத்தை முந்துற முன்னம் ஸ்ருஷ்டித்து நான்முகனை பண்ணி,Nanmukanai panni - (பிறகு) பிரமனைப் படைத்து தன் உள்ளே,Than ullae - தன்னுடைய ஸ்வருபத்தின் ஏகதேசத்திலே தொன்மை மயக்கிய,Thonmai mayakkiya - பண்டு தான் ஸம்ஹரித்த பதார்த்களை தோற்றிய,Thotriya - பழையபடி உண்டாக்கின சூழல்கள்,Soozhhalgal - இப்படிப்பட்ட மஹா குணங்களை சிந்தித்து,Sindhiththu - சிந்தனை செய்து தன்மை அறிபவர் தாம்,Thanmai aripavar tham - அவனுடைய அஸாதாரண லக்ஷ்ணத்தை அறியவல்லவர்கள் அவற்கு அன்றி ஆள் ஆவரோ,Avarku anri aal aavaro - அப்பெருமானுக் கொழிய வேறொருவனுக்கு அடிமைப்படலாகுமோ? |
| 3385 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (அழிந்த ஜகத்தை யுண்டாக்கினவளவே யல்லாமல், அந்தஜகத்தை ப்ரளயங்கொள்ள மஹாவராஹமா யெடுத்து ரக்ஷித்த மஹாகுணத்தை யநுஸந்தித்தால் அவன்திருவடிகளே தஞ்ச மென்றிருக்க வேண்டாவோவென்கிறார்.) 5 | சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ? ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத் தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5 | பெரு புனல் தன்னுள் ஆழ அழுந்திய ஞாலத்தை,Peru punal thannul aazhal azhundhiya nyaalaththai - எல்லையற்ற பிரளய ஜலத்திலே மிக ஆழமாக அழுந்திக்கிடந்த பூமியை தாழப்படாமல்,Thaalappadamaal - அநர்த்தப்படாதபடிக்கு தன் பால் ஒரு கோடு இடை தான் கொண்ட,Than paal oru koodu idai thaan konda - தன் திருமேனியில் ஏக தேசமாயிருப்பதொரு கோட்டினிடத்திலே தானாகவே இடந்தெடுத்துக் கொண்ட கேழல் திரு உரு ஆயிற்று,Kezhla thiru uru aayitru - ஸ்ரீ வராஹரூப மெடுத்த படியை கேட்டும் உணர்ந்தும்,Kettum unarnthum - இதிஹாஸ புராணமுகங்களாலே கேட்டும் மனனம் பண்ணியும் வைத்து சூழல்கள் சிந்திக்கில்,Soozhhalgal sindhikkil - தம்தமமுடைய அபி மதங்கள் ஸித்திப்பதற்கு விரகு பார்க்குமளவில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ,Maayan kazhal anri soozhvaro - ஆச்சரிய சேஷ்டிதனான அப்பெருமானுடைய திருவடிகளையொழிய வேறொன்றை ஆச்ரயிப்பரோ? |
| 3386 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தன் மேன்மை பாராமல் தான் இரப்பாளனாய் வாமநப்ரஹ்மசாரியாய் மஹாபலியின் செருக்கை யடக்கித் தேவர்களைக் காத்தருளின மஹாகுணத்தையறிந்து வைத்து மற்றொருவர்க்கு ஆளாகவொண்ணுமோ வென்கிறார்.) 6 | கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ? வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6 | வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க,Vaatam ilaa vankai maavalivaadhikka - ஒருகாலும் குறையாத ஔதார்யத்தையுடைய மஹாபலியானவன் (தன் செருக்காலே) நலிய வாதிப்புஉண்டு,Vaadippundhu - ஹிம்ஸைபட்டு ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு,Eettam kol theevargal sendru irandhaarkku - திரண்டு சென்று ப்ரார்த்தித்த தேவர்களுடைய இடர் நீக்கிய,Idar neekkiya - இடரை நீக்குவதற்காக கோடு அம் கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டும்,Koodu am kai vaamanan aay seitha kooththukkal kandum - ஏற்றகையையுடைய ஸ்ரீவாமன மூர்த்தியாய்ச் செய்தருளின மநோஹர சேஷ்டிதங்களை யநுஸந்தித்து வைத்தும் கேட்டும் உணர்ந்தவர்,Kettum unarnthavar - புராண முகத்தாலே கேட்டும் அறிவுடையராயிருந்தவர்கள் கேசவற்கு அன்றி ஆள் ஆவரோ,Keshavarku anri aal aavaro - அந்தப்பெருமானுக்கல்லது மற்றொருவதற்கு அடிமையாவரோ? |
| 3387 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தேவதாந்தர பஜநம் பண்ணிக் கிடந்த மார்க்கண்டேயனை விஷயீதரித்தலாகிற மஹா குணத்தை யநுஸந்தித்தால் அப்பெருமானுக்கன்றி யாளாவரோ வென்கிறார்.) 7 | கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ? வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக் கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7 | வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு,Vandu un malar thongal maarkkandeyanukku - வண்டுகள் மதுபானம் பண்ணுகிற பூமாலையையுடைய (பாலகனான) மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்,Vaalum naal - ஆயளுக்காக இண்டை சடை முடி ஈசன்,Indai sadai mudi eesaan - நிபிடமான ஜடாமண்டலத்தையுடையவரான சிவபிரான் உடன் கொண்டு உசா செல்ல அங்கு,Udan konda ushaa sellu anggu - தன்னோடுகூட அவனை யழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்ல அந்நிலையிலே கொண்டு,Konda - அவனை விஷயீகரித்து தன்னோடும் கொண்டு,Thannodum konda - தன்னோடே கூட்டிக் கொண்டு உடன் சென்றது,Udan sendradhathu - பிரியாதே யிருந்த படியை உணர்ந்தும்,Unarnthum - புராணாதி முகத்தாலேயறிந்தும் கண்டும் தெளிந்தும் கற்றார்,Kandum thulindhum katraar - கண்ணாரக் கண்டும் நெஞ்சாரத்தெளிந்தும் கற்றவர்கள் கண்ணற்கு அன்றி ஆள் ஆவரோ?,Kannarkku anri aal aavaro? - கண்ணபிரானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரோ |
| 3388 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி ஆச்ரிதரக்ஷ்ணம் பண்ணின மஹாகுணத்தைப் பேசுகிறாரிதில்.) 8 | செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ? எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8 | எல்லை இலாத பெரு தவத்தால்,Ellai ilaadha peru thavaththaal - அபரிமதமான மஹாத பஸ்ஸீக்களாலே பல செய் மிறை,Pala sei mirai - பலவகையாகச் செய்யப்ப பட்டலோகபீடையை யுடையனாய் அமரரை அல்லல் செய்யும்,Amarai allaal seyyum - (விசேக்ஷித்து) தேவர்களுக்குத் துன்பங்களை யுண்டுபண்ணினவனான இரணியன் ஆகத்தை,Iraniyan aakaththai - ஹிரண்யாஸீரனுடைய உடலை, மல்லல் அரி உரு ஆய் செய்த,Mallal ari uru aay seitha - பெரிய நரசிங்க வடிவையுடைனாய்க் கொண்டு இருபிளவாகச் செய்த மாயம் அறிந்தும்,Maayam arindhum - ஆச்சரியத்தை யறிந்து வைத்தும் செல்ல உணர்ந்துவர்,Sella unarnththuvaar - பூர்த்தியான ஞானத்தைப் பெற்றவர்கள் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ,Selvam than seer anri karparoa - லக்ஷ்மீபதியான அப்பெருமானுடைய திருக்குணங்களையன்றி வேறென்றைக் கற்பரோ? |
| 3389 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத்தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார்.) 9 | மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ? தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9 | தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க,Thaayam serum oru noorruvar mang - தாயாதி முறையில் சண்டை செய்து கிளர்ந்ததுர்யோதநாதிகள் தொலைய ஓர் ஐவர்க்கு ஆய்,Oru aivarukku aay - விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி தேசம் அறிய,Desam ariya - ஸகலலோக ப்ரஸித்த மாம்படி ஓர் சாரதி ஆய் சென்று,Oru sarathi aay sendru - ஒப்பற்ற ஸாரதியாகப் போய் சேனையை நாசம் செய்திட்டு,Senaiyai naasam seiththittu - எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து நடந்தநல்வார்த்தை அறிந்தும்,Nadandhanalvaarthai arindhum - தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற நல்வார்த்தையை யறிந்தும் மாயம் அறிபவர்,Maayam aripavar - மிகவும் ஆச்சரியமான பகவத் கதைகளை யறியுமவர்கள் மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது மற்றொருவர்க்கு அடிமையாவரோ? |
| 3390 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸர்வதர்மாந் பரித்யஜ்ய இத்யாதி சரமச்லோக மருளிச்செய்த மஹாதுணத்திலே யீடுபட்டுப் பேசுகிறார்.) 10 | வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ? போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10 | வார்த்தை அறிபவர்,Vaarthai aripavar - சரமச்லோகமாகிற நல்வார்த்தையை யறியும்வர்கள். போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து,Poortha pirappodu noyodu muppodu irappu ivai perthu - ஸ்வருபவிளக்கத்தை மறைக்கின்ற பிறப்பு வியாதி கிழத்தனம் மரணம் முதலான வற்றை விட்டுக் கழியும்படி பண்ணி பெரு துன்பம் வேர் அற நீக்கி,Peru thunbam veer ariya neekki - கைவல்யாநுபவமாகிற மஹாநர்த்தத்திலும் புகாமே காத்து தன் தாளின் கீழ் சேர்த்து,Than thaalin keezh seyththu - தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக்கொண்டு அவன் செய்யும் சேமத்தை எண்ணி,Avan seyyum semaththai enni - இப்படியாக அவன் செய்தருளும் ஸீக்ஷ்மங்களை யநுஸந்தித்து தெளிவு கூற்று,Thulivu koottru - தெளிவு பெற்று வைத்து மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரொ? |
| 3391 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இத்திருவாய்மொழியைக் கற்பவர்கள் இவ்விருள்தரு மாஞாலத்தில் இருக்கச் செய்தேயும் தெளிந்த சிந்தையராயிருப்பர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல் தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11 | தெளிவு உற்று,Thelivu uttru - ஸ்வரூபத்தில் தெளிவு பெற்று வீவு இன்றி நின்றவர்க்கு,Veivu indri nindruvargu - அந்தத் தெளிவுக்கு ஒரு நாளும் விச்சேதமில்லாமலிருப்பவர்களுக்கு இன்பம் கதி செய்யம்,Inbam kathi seyyam - இன்பமே வடிவெடுத்ததான கதியைச் செய்விப்பவனாய் தெளிவு உற்ற கண்ணனை,Thelivu uttru kannanai - தெளிவு தானே வடிவெடுத்திருப்பவனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர் சடகோபன் சொல்,Then Kurukoor Sadagopan sol - ஆழ்வார் அருளிச்செய்ததான தெளிவு உற்ற ஆயிரத்துள்,Thelivu uttru ayiraththul - தெளிந்த ஆயிரத்தினுள்ளை இவை பத்தும் வல்லார் அவர்,Ivai pattum vallar avar - இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் பா மரு மூஉலகத்துள்ளே,Pa maru mooulagaththule - பாபபூயிஷ்டமான உலகத்திலிருந்துவைத்தே தெளிவு உற்ற சிந்தையர்,Thelivu uttru chintaiyar - தெளிவு பெற்ற மனமுடையராவர். |