| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 246 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறி யோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் ஆடி அமுது செய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்–3-3-3 | காடுகள் ஊடு போய்,Kaadugal Oodu Poi - (பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து மறி ஓடி,Mari Odi - (கன்றுகள் கை கழியப் போகாத படி) (அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - (அக்) கன்றுகளை மேய்த்து கார் கோடல் பூ சூடி,Kaar Koadal Poo Soodi - பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு வருகின்ற,Varugindra - (மீண்டு) வருகின்ற தாமோதரா,Thaamotharaa - கண்ணபிரானே! உன் உடம்பு,Un Udambu - உன் உடம்பானது கன்று தூளி காண்,Kanru Thooli Kaan - கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்; மயில் பேடை,Mayil Paedai - பெண் மயில் போன்ற சாயல்,Saayal - சாயலை யுடைய பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு மாணாளா,Maanalaa - வல்லபனானவனே! நீராட்டு அமைத்து வைத்தேன்,Neeraattu Amaithu Vaithen - (இந்த உடம்பை அலம்புவதற்காக) நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்; ஆடி,Aadi - (ஆகையால் நீ) நீராடி அமுது செய்,Amudhu Sei - அமுது செய்வாயாக; உன்னோடு உடனே,Unnodu Udane - உன்னோடு கூடவே உண்பான்,Unbaan - உண்ண வேணுமென்று அப்பனும்,Appanum - (உன்) தகப்பனாரும் உண்டிலன்,Undilan - (இதுவரை) உண்ணவில்லை. |
| 597 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 1 | கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான் ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ | கார் கோடல் பூங்காள், Kaar Kodal Poonkaal - கறுத்த காந்தள் பூக்களே! உம்மை, Ummai - உங்களை போர் கோலம் செய்து, Por kolam seithu - யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து எம் மேல், Em Mel - என் மேலே போர விடுத்தவன், Pora Viduthavan - அனுப்பினவானான கார் கடல் வண்ணன், Kaar Kadal Vannan - கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான் எங்குற்றான், Engutraan - எங்கே யிருக்கிறான்? நாம், Naam - (உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான் இனி, Ini - இனி மேல் ஆர்க்கு, Aarkku - யாரிடத்தில் போய் பூசல் இடுவதோ, Poosal Idhuvatho - முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்) அணி, Ani - அழகிய துழாய் தார்க்கு, Thuzhaai thaarku - திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!, Odum Nenjam thannai padaikka vallen Andho! - ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ! |
| 598 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 2 | மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே | மேல் தோன்றி பூக்காள், Mel thondri pookaal - உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே! மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி, Mel Ulagankalin meedhu poi mel thondrum jothi - மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச் சோதி‘ என்கிற பரம பதத்தில் எழுந்தருளி இருக்கிற வேதம் முதல்வர், Vedham Mudhalvar - வேத ப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய வலம் கையின் மேல் தோன்றும், Valam kaiyin mel thondrum - வலத் திருக் கையிலே விளங்கா நின்ற ஆழியின் வெம் சுடர் போல், Aazhiyin vem sudar pol - திருவாழி யாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸு போல சுடாது, Sudaathu - தஹியாமல் எம்மை, Emmai - என்னை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து, Maatrolai pattavar kootathu - இந்த பிரக்ருதி மண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில் வைத்துக் கொள்கிற்றீரே, Vaithu kolkitreere - கொண்டு சேர்க்கவல்லீர்களோ? |
| 599 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 3 | கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே | கோவை மானாட்டி, Kovai Maanatti - அம்மா! கோவைக் கொடியே! நீ, Nee - நீ உன், Un - உன்னுடைய கொழுங்கனி கொண்டு, Kozhunkani Kondu - அழகிய பழங்களாலே எம்மை, Emmai - என்னுடைய ஆவி, Aavi - உயிரை தொலைவியேல், Tholaiviyel - போக்கலாகாது வாய் அழகர் தம்மை, Vaai Azhagar Thammai - அழகிய வாய் படைத்த பெருமான் விஷயத்திலே அஞ்சுதும், Anjuthum - பயப்படா நின்றேன்! பாவியேன், Paaviyen - பாவியானா நான் தோன்றி, thondri - பிறந்த பின்பு நாணிலியேனுக்கு, Naaniliyenukku - லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே பாம்பு அணையார்க்கும், Paambu Anaiyaarkum - சேஷ சாயியான பெருமாளுக்கும் தம் பாம்பு போல், Tham Paambu Pol - தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப் போல நாவும் இரண்டு உள ஆயிற்று, Naavum Irandu Ula Aaitru - இரண்டு நாக்குகள் உண்டாயின |
| 600 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 4 | முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே | முல்லைப் பிராட்டி!, Mullai Piratti - அம்மா! முல்லைக் கொடியே! ஆழி நங்காய்!, Aazhi Nangaai - கம்பீரமான இயல்வை யுடையாய்! நீ, Ne - நீ உன் முறுவல்கள் கொண்டு, Un muruvalgal kondu - (எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே எம்மை, Emmai - என் விஷயத்திலே அல்லல் விளைவியேல், Allal vilaiviyel - வருத்தத்தை உண்டாக்க வேண்டா உன் அடைக்கலம், Un adaikalam - (இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன் கொல்லை அரக்கியை, Kollai arakkiyai - வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை மூக்கு அரிந்திட்ட, Mooku arindhitta - மூக்கறுத்துத் துரத்தின குமரனார், Kumaranaar - சக்ரவர்த்தி திருமகனாருடைய சொல்லும், Sollum - வார்த்தையே பொய் ஆனால், Poi aanal - பொய்யாய் விட்டால் நான் பிறந்தமையும் பொய் அன்று, Naan pirandhamaiyum poi andru - நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ |
| 601 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 5 | பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே | பாடும், Paadum - பாடுகின்ற குயில்காள்!, Kuyilkaal - குயில்களே! ஈடு, Eedu - (கர்ண கடோரமான) இக் கூசல் என்ன பாடல்?, Enna paadal? - என்ன பாட்டு நல் வேங்கடம் நாடர், Nal Vengadam Naadar - விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான் நமக்கு, Namakku - என் விஷயத்திலே ஒரு வாழ்வு தந்தால், Oru vaazhvu thandhaal - ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது) வந்து பாடுமின், Vandhu paadumin - (நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள் ஆடும், Aadum - (ஆநந்தத்தாலே) ஆடுகின்ற கருளன், Karulan - பெரிய திருவடியை கொடி உடையார், Kodi udaiyaar - த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான் அருள் செய்து, Arul seidhu - க்ருபை பண்ணி வந்து கூடுவர் ஆயிடில், Vandhu kooduvar aayidil - (இங்கே) வந்து சேர்வனாகில் கூவி, Koovi - (அப்போது உங்களை) வரவழைத்து நும் பாட்டுக்கள், Num paatukal - உங்களது பாட்டுக்களை கேட்டுமே, Ketume - கேட்போம் |
| 602 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 6 | கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன் பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே | கணம், Kanam - கூட்டமாயிருக்கிற மா மயில்காள்!, Maa Mayilkaal - சிறந்த மயில்களே! கண்ணபிரான், Kannapiraan - கண்ணபிரானுடைய திருக்கோலம் போன்று, Thirukkolam pondru - அழகிய வடிவு போன்ற வடிவை யுடையீராய்க் கொண்டு அணி மா நடம் பயின்று, Ani Maa Nadam Payindru - அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி ஆடுகின்றீர்க்கு, Aadukindreerku - ஆடுகின்ற உங்களுடைய ஆடி, Aadi - திருவடிகளிலே வீழ்கின்றேன், veezhkindren - ஸேவிக்கின்றேன் (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்) பணம் ஆடு அரவு அணை, Panam aadu aravu anai - படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே பல்பல காலமும், Palpala kaalamum - காலமுள்ளதனையும் பள்ளி கொள், Palli kol - பள்ளி கொண்டருளா நின்ற மணவாளர், Manavaalar - அழகிய மணவாளப் பெருமாள் நம்மை வைத்த பரிசு, Nammai vaitha parisu - எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம் இது காண்மின், Ithu kaanmin - இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று |
| 603 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 7 | நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே | நடம் ஆடி, Nadam aadi - கூத்தாடிக் கொண்டு தோகை விரிக்கின்ற, Thokai virikkinra - தோகைகளை விரிக்கிற மா மயில்காள், Maa Mayilkaal - சிறந்த மயில்களே! உம்மை, Ummai - உங்களுடைய நடம் ஆட்டம் காண, Nadam aatam kaana - கூத்தைப் பார்ப்பதற்கு பாவியேன் நான், Paaviyen naan - பாவியேன நான் ஓர் முதல் இலேன், Or mudhal ilen - கண்ணை யுடையேனல்லேன் குடம் ஆடு கூத்தன், Kudam aadu koothan - குடக்கூத்தாடினவனான கோவிந்தன், Govindhan - கோபாலக்ருஷ்ணன் கோமிறை செய்து, Komirai seidhu - கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி எம்மை, Emmai - என்னை உடை மாடு கொண்டான், Udai maadu kondan - ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான் இனி, Ini - இப்படி யிருக்க ஒன்று, Ondru - (என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம் உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு போதுமே, Podhume - தகுமோ? |
| 604 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 8 | மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே | மழையே மழையே!, Mazhaiye mazhaiye! - ஓ மேகமே! புறம், Puram - மேற் புறத்திலே ஊற்றும், ootrum - என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கி யழிப்பவராய் நல் வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் தம்மை, Nal Vengadathul ninra azhaga piranar thammai - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகிய பெருமாளை மண் பூசி, Man poosi - மண்ணைப் பூசி விட்டு உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல், Ullaai ninra mezhugu utrinaal pol - உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுமா போலே என் நெஞ்சந்து அகப்பட தழுவ நின்று, En nenjandhu agappada thazhuva ninru - என் நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி என்னை, ennai - என்னை ததைத்துக் கொண்டு, thadhaithu kondu - அவரோடே நெருக்கி வைத்து (பிறகு) ஊற்றவும் வல்லையே, ootravum vallaiye - வர்ஷிக்க வல்லையோ? |
| 605 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 9 | கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே | கடலே கடலே!, Kadale kadale! - ஓ கடலே! உன்னை, Unnai - (தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை கடைந்து, Kadainthu - (மலையை யிட்டுக்) கடைந்து கலக்குறுத்து, Kalakkuruthu - கலக்கி உடலுள் புகுந்து நின்று, Udalul pugundhu ninru - உனது சரீரத்திலே புகுந்திருந்து ஊறல் அறுத்தவற்கு, Ooral aruthavarku - ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே) என்னையும் உடலுள் புகுந்து நின்று, Ennaiyum udalul pugundhu ninru - என் உடலிலும் புகுந்திருந்து ஊறல் அறுக்கின்ற, Ooral arukkinra - என் உயிரை அறுக்குமவரான மாயற்கு, Maayarku - எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி) என் நடலைகள் எல்லாம், En nadalaikal ellam - என் துக்கங்களை யெல்லாம் நாக அணைக்கே, Naaga anaike - அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில் சென்று, Sendru - நீ போய் உரைத்தியே, Uraithiye - சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை) |
| 606 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 10 | நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே | என் நல்ல தோழி!, En nalla thozhi - எனது உயிர்த் தோழியே நாக அணைமிசை, Naaga anaimisai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற நம் பரர், Nam parar - நம் பெருமாள் சிறு மானிடவர், Siru maanidavar - க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்) என் செய்வது, En seivadhu - என்ன செய்யலாம்? வில்லி புதுவை விட்டுசித்தர், Villi pudhuvai vittuchithar - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார் செல்வர், Selvar - பெருஞ்செல்வம் படைத்தவர் பெரியர், Periyar - எல்லாரினும் மேற்பட்டவர் நாம், Naam - நாமோ வென்றால் தங்கள் தேவரை, Thangal dhevarai - தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை வல்ல பரிசு, Valla parisu - தம்மால் கூடின வகைகளாலே வருவிப்பரேல், Varuviparel - அழைப்பராகில் அது காண்டும், Athu kaandum - அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம் |