| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2886 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ பன்னீராயிரப்படி –திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார்) 1 | கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1 | kilar oli,கிளர் ஒளி - மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய ilamai,இளமை - இளம்பிராயம் ketuvatan munnam,கெடுவதன் முன்னம் - அழிவதற்குள்ளே valar oli,வளர் ஒளி - குன்றாத தேஜஸ்ஸையுடையனான mayon,மாயோன் - எம்பெருமான் maruviya,மருவிய - நித்யஸந்நதானம் பண்ணியிருக்கிற kovil,கோவில் - ஆலயமாய் valar ilapolil cul,வளர் இளபொழில் சூழ் - வளர்கின்ற இளஞ்சோலைகளால் சூழப்பட்டதான maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ்சோலை மலையை talarvu ilar aki,தளர்வு இலர் ஆகி - தளர்ச்சி யில்லாதவராகி carvate,சார்வதே - அடைவதுதான் catir,சதிர் - ஸ்பரூபாநரூபம் |
| 2887 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார்) 2 | சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2 | catir,சதிர் - அழகு பொருந்திய ila matavar,இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து talcciyai,தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை matiyatu,மதியாது - ஒரு பொருளாக நினையாமல் atirkural cankattu,அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற alakar tam koyil,அழகர் தம் கோயில் - அழகருடைய ஆலயமாய் mati taval kutumi,மதி தவழ் குடுமி - சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான maliruncolai;,மாலிருஞ்சோலை; - மாலிருஞ் சோலையாகிற pati atu,பதி அது - அந்தத் திருப்பதியை etti,ஏத்தி - துதித்து eluvate,எழுவதே - உய்வதே payan,பயன் - புருஷார்த்தம் |
| 2888 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று,திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு.) 3 | பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3 | nence,நெஞ்சே - மனமே!, puyal malai vannar,புயல் மழை வண்ணர் - வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான் purintu,புரிந்து - விரும்பி urai,உறை - நித்யவாஸம் செய்கிற koyil,கோயில் - ஸந்நிதியாய், mayalmiku polil cul,மயல்மிகு பொழில் சூழ் - (கண்டவர்களை) மயக்குகிற சக்திமிகுந்த சோலைகளால் சூழப்பட்ட malirun colai,மாலிருஞ் சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய ayal,அயல் - அருகிலுள்ள malai,மலை - மலையை ataivatu atu,அடைவது அது - அடைவதும் கருமமே ஸ்ரீஉத்தேச்யந்தான் payan alla ceytu,பயன் அல்ல செய்து - நிஷ்பலமான காரியங்களைச் செய்வதனால் payan illai,பயன் இல்லை - லாபமில்லை |
| 2889 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார்) 4 | கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் வருமழை தவழும் மாலிரும் சோலை திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4 | karumam,கருமம் - கருமங்களாகிற van pacam,வன் பாசம் - வலிய பாசங்களை kalittu,கழித்து - கழற்றி ulaniru,உழனீறு - அடிமை செய்து திரிந்து uyyave,உய்யவே - உஜ்ஜீவிக்கும் பொருட்டே peru malai etuttan,பெரு மலை எடுத்தான் - கோவர்த்தன உத்தாரணம் செய்தருளியவனான எம்பெருமான் pitu urai,பீடு உறை - தனது பெருமையெல்லாம்விளங்க நித்யவாஸம் பண்ணுமிடமான koyil,கோயில் - ஸந்நிதியாய் varu malai tavalum,வரு மழை தவழும் - மழை பெய்ய வருகிற மேகங்கள் தவழ்கின்ற maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை tirumalai atuve,திருமலை அதுவே - எம்பெருமான் ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை ataivatu,அடைவது - சேர்வது tiram,திறம் - உசிதம் |
| 2890 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி-திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார்) 5 | திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது அற முயலாழிப் படையவன் கோயில் மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை புறமலை சாரப் போவது கிறியே –2-10-5 | tiram utai,திறம் உடை - பலவகைப்பட்ட valattal,வலத்தால் - வலிமையைக் கொண்டு tivinai,தீவினை - பாவங்களை perukkatu,பெருக்காது - மிகையாகச் செய்யாமல் aram muyal ali pataiyavan koyil,அறம் முயல் ஆழி படையவன் கோயில் - ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய். maru il,மறு இல் - அழுக்கற்ற van cuaina cul,வண் சுஐன சூழ் - வளமான களைகளால் சூழப்பட்ட maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய puram malai,புறம் மலை - பக்கத்திலுள்ள தொருமலையை cara,சார - கிட்டுமாறு povatu,போவது - போவதானது kiri,கிறி - நல்ல உபாயம். |
| 2891 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார்.) 6 | கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6 | kilmai ceyyate,கீழ்மை செய்யாதே - இழிவான செயல்களைச் செய்யாமல் kiri ena,கிறி என - (இப்போது நான் சொல்லுகிறதை) நல்ல வுபாயமென்று நினையுங்கோள் uri amar,உறி அமர் - உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை untavan,உண்டவன் - அமுது செய்த கண்ணபிரானுடைய koyil,கோயில் - ஆலயமாய் mariyotu pinaicer,மறியோடு பிணைசேர் - தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையினுடைய neri,நெறி - வழியிலே pata,பட - செல்லவேணுமென்கிற atuve,அதுவே - அந்த நினைவு ஒன்றையே ninaivatu,நினைவது - நினைப்பது nalam,நலம் - நல்லது. |
| 2892 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஆறாயிரப்படி- இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே – நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார்) 7 | நலமென நினைமின் நரகழுந்தாதே நிலமுன மிடந்தான் நீடுறை கோயில் மலமறு மதி சேர் மாலிரும் சோலை வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7 | narakaluntate,நரகழுந்தாதே - நரகத்தில் அழுந்த நினையாமல் nalam enaninaimin,நலம் எனநினைமின் - (இவ்வுபதேசத்தை) நன்மை யென்று நெஞ்சிற் கொள்ளுங்கள்; (அதாவது) munam,முனம் - முற்காலத்தில் nilam,நிலம் - பூமியை itantan,இடந்தான் - வராஹ ரூபியாகி இடந்தெடுத்துவந்த பெருமான் koyil,கோயில் - நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதியாய், malam aru mati cer,மலம் அறு மதி சேர் - களங்கமற்ற சந்திரன் சேருமிடமான malirun colai,மாலிருஞ் சோலை - திருமலையை valam murai eyti, வலம் முறை எய்தி - அநுகூலமானமுறையிலே கிட்டி maruvutale,மருவுதலே - பொருந்துவதே valam,வலம் - உறுதியானது |
| 2893 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார்) 8 | வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8 | valam ceytu,வலம் செய்து - (சரணங்களுக்கு) வலிமை யுண்டாக்கிக் கொண்டு எப்போதும் vaikal,வைகல் - எப்போதும் valam kaliya,வலம் கழியா - அந்த வலிமையை வீணாகப் பாழ்படுத்தாமல் valam ceyyum,வலம் செய்யும் - (நமக்கு) நன்மையையே செய்தருளாநின்ற ayan,ஆயன் - கோபால கிருஷ்ணனான mayavan,மாயவன் - மாயவனுடைய koyil,கோயில் - கோயிலாகி vanor valam ceyyum,வானோர் வலம் செய்யும் - நித்ய ஸூரிகளும் வந்து பிரதக்ஷிணம் செய்யுமிடமான maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலை விஷயத்தில் valam ceytu,வலம் செய்து - பிரதக்ஷிணம் முதலிய அநுகூல வ்ருத்திகளைச்செய்து nalum,நாளும் - நாடோறும் maruvutal,மருவுதல் - பொருந்தியிருப்பது valakku,வழக்கு - யுக்தம் |
| 2894 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்கிற திண்ணிய அத்யவஸாயங் கொள்ளு மத்தனையே போதுமென்கிறார்.) 9 | வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில் மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9 | val vinai,வல் வினை - கொடிய பாவங்களிலே mulkatu,மூழ்காது - அழுந்தாமல் valakkena ninaimin,வழக்கென நினைமின் - (இவ்வுபதேசத்தை) நியாயமென்று கொள்ளுங்கள்; alam koti,அழம் கொடி - பேய்ச்சியாகிற pennai,பெண்ணை - பூதனையை attan,அட்டான் - முடித்தருளின பெருமான் amar,அமர் - எழுந்தருளியிருக்கிற peru koyil,பெரு கோயில் - பெரிய ஸந்நிதியாய் mala kaliru inam cer,மழ களிறு இனம் சேர் - இளமைதங்கிய யானைக் கூட்டங்கள் சேருகிற maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையை tola karutuvatu,தொழ கருதுவது - வணங்க வேணுமென்று எண்ணுவதில் tunivate,துணிவதே - திடமான அத்யவஸாயங் கொள்வதே cutu,சூது - சிறந்த வுபாயம் |
| 2895 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார்) 10 | சூதென்று களவும் சூதும் செய்யாதே வேத முன் விரித்தான் விரும்பிய கோயில் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10 | cutu enru,சூது என்று - உபாயமென்றெண்ணி kalavum,களவும் - களவையும் cutum,சூதும் - சூதையும் ceyyate,செய்யாதே - செய்ய நினைக்காமல் mun,முன் - முற்காலத்தில் vetam,வேதம் - வேதங்களை virittan,விரித்தான் - (கீதை முதலியவற்றால்) விவரித்தருளின பெருமான் virumpiyakovil,விரும்பியகோவில் - விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடமான கோயிலாய் matu uru mayil cer,மாது உறு மயில் சேர் - பேடையோடு கூடின ஆண் மயில்கள் சேர்ந்து வாழப்பெற்ற maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை யென்கிற potu avil malai,போது அவிழ் மலை - புஷ்பங்கள் விகஸிக்கிற திருமலையில் pukuvate,புகுவதே - சென்று சேர்வதே porul,பொருள் - புருஷார்த்தம் |
| 2896 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11 | பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11 | porul enru,பொருள் என்று - (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை pataittavan,படைத்தவன் - ஸ்ருஷ்டித்த பெருமானுடைய pukal mel,புகழ் மேல் - திருக்கல்யாண குணங்களில் marul il,மருள் இல் - அஜ்ஞான மில்லாத van kurukur van catakopan,வண் குருகூர் வண் சடகோபன் - வண் குருகூர் வண் சடகோபன் terul kolla,தெருள் கொள்ள - (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு conna,சொன்ன - அருளிச் செய்த or ayirattul,ஓர் ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள் ippattu,இப்பத்து - இப்பதிகம் mutittu,முடித்து - ஸம்ஸார பந்தத்தைப் போக்கி arul utaiyavan tal,அருள் உடையவன் தாள் - பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில் anaivikkum,அணைவிக்கும் - சேர்விக்கும் |