Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: குரவை யாய்ச்சியரோடு (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3260திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ராஸக்ரீடை, கோவர்த்தநோத்தரணம், காளியமர்த்தனம் என்கிற மூன்று அபதானங்களை இதிற்பேசி இனியராகிறார்.) 1
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1
ஆய்ச்சியரோடு,Aichchiyarodu - கோபிமார்களோடு
குரவை கோத்ததும்,Kuravai koththathum - ராஸக்ரீடை செய்த தென்ன
குன்றம் ஒன்று ஏந்தியதும்,Kunram ondru yenthiathum - கோவர்த்தன மென்கிற மலையொன்றைக் குடையாக வெடுத்ததென்ன,
உரவு நீர் பொய்கை,Uravu neer poigai - முதிர்ந்த ஜலத்தையுடைத்தான யமுனைப் பொய்கையில்
நாகம் காய்ந்ததும்,Naagam kaainthathum - காளியநாகத்தை முனிந்ததென்ன
உட்பட,Utpada - ஆகிய இவை முதலாக
மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவகைப்பட்டவையான
அரவில் பள்ளி பிரான் தன் மாயம் வினைகளையே அலற்றி,Aravil palli piraan than maayam vinaigalaie alatri - நாகபர்யங்கசயனனான கண்ணபிரானது அற்புதசேஷ்டி தங்களையே வாயாரப்பேசி
நல் இரவ்வும் பகலும் தவர்கிலம்,Nal iravvum pagalum thavargilam - வாய்ந்த இரவிலும் பகலிலும் ஓய்கின்றிலோம்.
நமக்கு என்ன குறை,Namakku enna kurai - இங்ஙனே இடைவீடின்றி அநுபவிக்கப்பெற்ற நமக்கு என்ன குறையுண்டு.
3261திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆச்சர்யமான ஆகாரத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நினைத்தார் நெஞ்சை நெகிழப் பண்ணும் சேஷ்டிதங்களை ச ஸ்நேஹ அநு சந்தானம் பண்ணிக் காலம் எல்லாம் போகா நின்றது – நித்ய அனுபவம் பண்ணுகிற விலக்ஷண தேசம் எனக்கு சத்ருசமோ -என்கிறார்) 2
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2
கேயம் தீம் குழல் ஊதிற்றும்,Keyam theem kuzhal oothiththum - சிறந்த கானமாக மதுரமான ய்ங்குழலை ஊதினதென்ன.
நிரை மேய்த்ததும்,Nirai meiththathum - பசுக்கூட்டங்க மேய்த்ததென்ன
கெண்டை ஒண்கண் வாசம் பூ குழல் பின்னை தோள்கள் மணந்ததும்,Kendaionkan vaasam poo kuzhal pinnai tholkaL mananthathum - கென்னட மின்போன்று அழகிய கண்களையும் நறுமணம்மிக்க பூக்களணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னையின் தோள்களோடே அணையப்பெற்றதென்ன இவையும்
மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவுமான
மாயம் கோலம் பிரான்தன் செய்கை,Maayam kolam piraanthan seikai - திவ்யமங்கள விக்ரஹசாலியான கண்ணபிரானுடைய சேஷ்டிதங்களை
நினைத்து,Ninaiththu - சிந்த்னைசெய்து
மனம் குழைந்து,Manam kuzhaindhu - நெஞ்சு நீர்ப்பண்டமாக
கேயத்தோடு எனக்கு கழிந்த போது,Keyaththodu enakku kazhintha podhu - அன்போடு எனக்குக் கழிகின்ற காலத்தின்
எவ்வுலகம் நிகர்,Evvulagam nigar - உபயவிபூதியும் ஒவ்வாது.
3262திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்துக் கொண்டு எனக்கு காலம் எல்லாம் போகப் பெற்றேன் -இன்னது பெற்றிலேன் என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார் .) 3
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3
நிகர் இல் மல்லரை செற்றதும்,Nigar il mallarai setrathum - (மிடுக்கில்) ஒப்பில்லாத மல்லர்களை முடிந்த்தென்ன
நிரை மேய்த்ததம்,Nirai meiththathum - ப்சுக்களை மேய்த்ததென்ன
நீள் நெடு கை,Neel nedu kai - உயர்ந்த நெடி துதிக்கையை யுடையதாய்
சிகரம் மா,Sikaram maa - மலைசிகரம்போன்று (பெரிதான
களிறு,Kaliru - (கஞ்சனது) யானையை
அட்டதும்,Attathum - கொன்றொழித்ததென்ன (இவை போல்வனவும் பிறவும்)
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை,Pugar kol sothi piraan than seikai - மிகவும் ஜ்வலிக்கின்ற ஒளியுருவனான கண்ணபிரானுடைய செயல்களை
நினைந்து புலம்பி,Ninainthu pulambi - நினைத்தும் வாய்விட்டுக் கதறியும்
என்றும் நுகர,Endrum nugar - நித்தியமும் அநுபவிக்கும் படியாக
வைகல் வைக பெற்றேன்,Vaigal vaigapetren - காலம் மிகவும் நீளும்படிபெற்றேன்,
இனி,Ini - இப்படியானபின்பு
எனக்கு என் நோவது,Enakku en novathu - எனக்கு க்லேசப்படவேண்டுவதுண்டோ,
3263திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (இங்கே நம்பிள்ளை யீடு – “ஜீயர் இப்பாட்டை இயலருளிச்செய்யப் புக்கால் நோவ என்றருளிச் செய்யுமழகு காணும். நோவ வென்கிறார் காணும் ஆழ்வார் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே! யசோதைப்பிராட்டியானவள் கண்ணனை உரலோடே கட்டிவைக்க அப்போது ஏங்கி யிருந்தபடியைச் சொல்லுகிறது.) 4
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4
ஆய்ச்சி நோவ,Aichchi nova - யசோதைப்பிராட்டியானவள் திருமேனியில் நோவுண்டாகும்படி (அல்லது, பக்தர்களின் மனம் துடிக்கும்படி)
உரலோடு ஆர்க்க,Uralodu aarka - உரலோடு சேர்த்துப் பிணைக்க
வஞ்சம் பெண்ணை சாவ,Vancham pennai sava - வஞ்சனைசெய்யவந்த பூதனை முடியும்படியென்ன
பால் உண்டதும்,Paal undathum - அவளது முலைப்பாலை உண்டதென்ன
ஊர் சகடம் இறசாடியதும்,Oor sakadam irasaadiyathum - (அஸுராவேசத்தாலே) ஊர்ந்துவந்த சகடம் பொடிபடும்படி தகர்த்ததென்ன (ஆக இப்படிப்பட்ட)
தேவக் கோலம் பிரான் தன் செய்கை,Devak kolam piraan than seikai - அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹனான கண்ணபிரானுடைய செயல்களை
நினைந்து,Ninainthu - அநுசந்தித்து
மனம் குழைந்து,Manam kuzhaindhu - நெஞ்சு நெகிழ்ந்து
மேவ,Meva - பொருந்தும்படி
காலங்கள் கூடினேன்,Kaalangal koodinean - காலங்கள் பலிக்கப்பெற்றேன்
எனக்கு என் இனி வேண்டுவதே?,Enakku en ini venduvathae? - இங்ஙகனே பாக்கியம் பெற்ற எனக்கு இனிவேண்டுவது என் (இனிப்பெறவேண்டுவதொன்றுண்டோ?)
3264திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு மிடி இல்லை என்கிறார் -எதிர் உண்டோ என்றுமாம்) 5
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5
தேவர் இரக்க,Devar irakka - தேவதைகள் பிரார்த்திக்க
வேண்டி,Vendi - திருவுள்ளமுவந்து
வந்து பிறந்ததும்,Vanthu pirandathum - நிலவுலகத்தில் வந்து அவதரித்ததென்ன
அன்று,Andru - அப்போதே
அன்னை,Annai - பெற்றதாயான தேவகி
பூண்டு,Poondhu - (கஞ்சன்பக்கல் பயத்தினால்) எடுத்தணைத்துக் கொண்டு
புலம்ப,Pulamba - இங்கேயிருந்தால் என்ன அபாயம் விளையுமோவென்று கதறி யழுதவளவிலே
ஓர் ஆய் குலம் புக்கலும்,Or aai kulam pukalum - இடைச்சேரியிலே பிரவேசித்ததென்ன
காண்டல் இன்றி வளர்ந்து,Kaandal indri valarnthu - விரோதிகளுக்குக் காணுதலில்லாதபடி மறைவாக வளர்ந்து
கஞ்சனை துஞ்சவஞ்சம் செய்ததும்,Kanchanai thunja vanjam seidathum - கம்ஸன் முடியும்படியாக அவன் திறத்திலே வஞ்சனைசெய்த்தென்ன ஆகிய இச்செயல்களை
ஈண்டு,Indu - இப்போது (அல்லது) இவ்விடத்தே
நான் அலற்ற பெற்றேன்,Naan alatra petren - நான் வாய்விட்டு உத்கோஷிக்கப்பெற்றேன்,
எனக்கு என்ன இகல் உளது,Enakku enna ikal ulathu - இனி எனக்கு என்ன குறையுண்டு?
3265திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார்.) 6
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6
இகல் கொள் புள்ளை பிளந்ததும்,Igal kol pullai pilandathum - விரோதபுத்தியுடன் வந்த பகாசுரனை வாய்பிறந்து முடித்ததென்ன
இமில் ஏறுக்ள் செற்றதுவும்,Imil erukal setrathuvum - பிசலையுடைய எருதுகளை (நப்பின்னைக்காகக்) கொன்றதென்ன
உயர் கொள் சோலைகுருத்து ஒசித்ததும்,Uyar kol solaikuruthu osithathum - உயர்ச்சியைக் கொண்ட சோலையிலுள்ள குருந்த மரத்தை முறித்ததென்ன
உட்பட மற்றும்,Utpad matrum - இவை முதலாக மற்றும் பலவான
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Akal kol vaiyam alandha maayan en appan than maayangale - பூமிப்பரப்பை யெல்லாம் அளந்துகொண்ட மாயனான எம்பெருமானுடைய அற்புதச் செயல்களையே
பகல் இரா பரவ பெற்றேன்,Pagal ira parava petren - பகலும் இரவும் துதிக்கப்பெற்றேன்
எனக்கு என்ன மனம் பரிப்பு,Enakku enna manam parippu - இன எனக்கென்ன மனத்துயரமுளது
3266திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (அரக்கரசுரர் போல்வாரான விரோதிகள் பக்தவர்க்கங்களை நலியுமது பொறுக்கமாட்டாமே அழுக்கு மானிடசாதியில் வந்து பிறந்து அவர்களை அழியச் செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு இந்நிலத்தில் நிகராவார் யாருமில்லை யென்கிறார்) 7
மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7
தான்,Thaan - பரஞ்சோதியுருவனானதான்
அழுக்கு மானிடசாதியில்,Azhukku maanidasadhiyil - ஹேயமான மநுஷ்யஜாதியிலே
மனப் பரிப்போடு பிறந்து,Manap parippodu pirandhu - ஸம்ஸாரிகள் விஷயமாகத் திருவுள்ளத்தில் தளர்த்தியோடே வந்து பிறந்து
தனக்கு வேண்டு உரு கொண்டு,Thanakku vendu uru kondu - தனக்கு இஷ்டமான விக்ரஹங்களைப் பரிக்கரஹித்து
தான் தன சீற்றத்தினை முடிக்கும்,Thaan thana seetrathinai mudikkum - தன்னுடைய சீற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளுமவனான
புனம் சூழாய் மாலை முடி மார்பன் என் அப்பன் தன் மாயங்களே,Punam sool aai maalai mudi maarban en appan than maayangale - செவ்வித்துழாய் மாலையைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையனான எம்பெருமானது ஆச்சரிய சேஷ்டிதங்களையே
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு,Ninaikkum nenju udaiyen enakku - அநுஸந்திக்கும் நெஞ்சு படைத்த வெனக்கு
இனி நின் நிலத்து நிகர் ஆர்,Ini nin nilathu nigar aar - இனி இப்பெருநிலத்தில் ஒப்பாவார் ஆர்? (ஆருமில்லை.)
3267திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –வாண விஷய பிரமுகமான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் மற்றும் ஸ்ரீ வாமனனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சுடையேனான எனக்கு இனி கலக்கமுண்டோ -என்கிறார்) 8
நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8
நீள் நிலத்தொடுவான் வியப்ப,Neel nilathoduvaan viyappa - மண்ணோரும் விண்ணோரும் ஆச்சரியப்படும் படியாக
நிறைபெறும் போர்கள் செய்து,Niraiperum porkal seithu - நிறைந்த மஹாயுத்தங்களைப்பண்ணி
வாணன் ஆயிரம் தோள் துணிந்ததும் உட்பட மற்றும் பல,Vaanan aayiram thol thunindhathum utpad matrum pala - பாணாசுரனுடைய ஆயிரந்தோள்களைத் துணிந்தது முதலாக மற்றும் பலவான
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Maani aai nilam konda maayan en appan than maayangale - பிரமசாரியாய்ப் பூமியை நீரேற்றுப்பெற்ற மாயனான எம்பெருமானது அற்புதச் செயல்களையே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு,Kaanum nenju udaiyen enakku - ஸாக்ஷாத்கரிக்கவல்ல நெஞ்சுபடைத்த வெனக்கு
இனி என்ன கலக்கம் உண்டே,Ini enna kalakkam unde - இனி ஒருவகையான கலக்கமுமில்லை.
3268திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (வைதிகன் பிள்ளைகள் மீட்டுக்கொடுத்த தென்பது கண்ணபிரானுடைய சரிதைகளில் ஒன்று அதனை இப்பாட்டில் அநுபவிக்கிறார்.) 9
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9
ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் கலக்க,Ez kadhal ez malai ez ulagum kalakka - ஏழுகடல்களும் ஏழுமலைகளும் ஏழுலகங்களாமெல்லாம் கலங்கும் படியாக
கழய கடாய்,Kazhaya kadaay - அண்ட கடாஹத்துகு அப்பாலே போம்படி யாக நடத்தி
தேர் கொடு,Ther kodu - தேரைக்கொண்டு
உலக்க சென்ற மாயமும்,Ulakka sendra maayamum - முடியச்சென்ற ஆச்சரியமும்
உட்பட மற்றும் பல,Utpad matrum pala - இதுமுதலாக மற்றும் சேஷ்டிதங்களையும் (பேசி)
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைமால் வண்ணனை,Valakkai aal idakai sangam ivai udaimaal vannanai - உபணஹஸ்தங்களிலும் திருவாழி திருச்சங்கையுடையனாய் நீலவண்ணனான எம்பெருமானை
மலக்கும் நா உடையேற்கு,Malakkum naa udaiyerkku - ஸ்வாதீனப் படுத்திக்கொள்ளும்படியான நாவிறுபடைத்த எனக்கு
இ மண்ணின் மிசைமாறு உளதோ,eMannin misaimaaru ulatho - இவ்வுலகின் எதிருண்டோ,
3269திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார்) 10
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10
மண் மிசை பெருபாரம் நீங்க,Mann misai perubaaram neenga - பூமியின்மேலிருந்த பெருஞ்சுமை தொலையும் படியாக
ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி ,OrBharatha maa perum por panni - மஹாபாரத யுத்தத்தை யுண்டாக்கி
மாயங்கள் செய்து,Maayangal seidhu - ஆச்சரியச் செயல்களைச் செய்து
சேனையை பாழ்பட நூற்றிட்டு,Senaiyai paalpada noottrittu - எல்லாச்சேனையும் பாழ்படும்படி ஸங்கல்பித்து முடித்து
போய்,Poi - இவ்விடம்பிட்டுப் புற பிட்டு
விண் மிசை தன தாமமே புக மேவிய,Vin misai than thaamame puga meviya - பரமாகரசத்திலே தன்னுடைய ஸ்தான விசேஷத்திலே சென்று பொருந்தின.
சோதி தன் தாள்,Sothi than thaal - பரஞ்சோதிப்பெருமானுடைய திருவடிகளை
நான் நண்ணி வணங்கப்பெற்றேன்,Naan nanni vanangappetren - நான் கிட்டி வணங்கப் பெற்றேன்.
எனக்கு பிறர் நாயகர் ஆர்,Enakku pirar naayakar aar - எனக்கு வேறு நியாமகர் ஆர் (ஆருமில்லை)
3270திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார்.) 11
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11
முழு ஏழ் உலகுக்கும் நாயகன் அய்,Muzhu ez ulagukkum naayagan ai - எல்லா வுலகங்களுக்கும் நிர்வாஹகனாகி
முழு ஏழ் உலகும் தன் வாயகம் புகவைத்து உமிழ்ந்து,Muzhu ez ulagukkum than vaayagam pugavaithu umizhndhu - அந்த ஸகல்லோகங்களையும் (ப்ரளயம்கொள்ளாதபடி) தன் வாய்க்குள்ளே புகவிட்டுப் பிறகு வெளிப்படுத்தி.
அவை ஆய்,Avai ai - அவை தானேயாய்
அவை அல்லனும்,Avai allanum - அவற்றின் படியே யுடையனல்லாதவனுமான
கேசவன்,Kesavan - எம்பெருமானுடை
அடி இணை மிசை,Adi inai misai - உபயபாதங்கள் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன,Kurugoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச்செய்த
தூய ஆயிரத்து,Thooya aayiraththu - பரிசுத்தமான ஆயிரத்துள்ளே
துவள் இன்றி பக்தர் ஆவர்,Thuval indri bakthar aavar - அநந்யப்ரயோஜந பக்தி மான்களாகப் பெறுவர்கள்.