Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கையார் சக்கரத்து (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3117திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து, பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல, அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார்.) 1
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1
கைஆர் சக்கரத்து,Kaiar chakkarattu - திருக்கையில் பொருந்திய திருவாழியாழ் வானையுடையவனும்
என் கரு மாணிக்கமே,En karu maanikame - எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே!
என்று என்று,Enru enru - என்று பலகாலும்
பொய்யே கைம்மை சொல்லி,Poyye kaimmai solli - பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி (அந்த வார்த்தைக்குத் தகுதியில்லாதபடி)
புறமே புறமே ஆடி,Purame purame aadi - விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும்
மெய்யே பெற்றறோழிந்தேன்,Meyye petraroazhinden - மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்;
விதி வாய்க்கின்று,Vidhi vaaykinru - பகத்திருபை பலிக்குமிடத்தில்
காப்பர் ஆர்,Kaappar aar - அதைத் தடுக்கவல்லார் யார்?
கண்ணபிரான்,Kannapiraan - ஸ்ரீக்ருஷ்ணனே!
இனி,Ini - உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு
போனால்,Ponaal - என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில்
அறையோ,Arayyo - தாராளமாகப்போகலாம்; (தடுப்பேனல்லேன்.)
ஐயோ,Aiyyo - சந்தோஷக்குறிப்பு (இனி உன்னால் பெயர்ந்துபோக முடியாதென்றபடி.)
3118திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (ஸ்ரீ ஆறாயிரப்படி –தன் திறத்திலே ப்ரேம கந்த ரஹிதனாய் இருந்து வைத்து நிரதிசய ப்ரேம யுக்தர் சொல்லும் பாசுரங்களை நான் சொல்ல சர்வேஸ்வரனான தான் அத்யந்த நிஹீன தரனான என்னுள்ளே ச பரிகாரமாக வந்து புகுந்து அருளினான் என்கிறார்.) 2
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2
மா மருதிந் நடுமே,Maa marudhin nadume - பெரிய மருதமரங்களினிடையே
போனாய்,Poonaai - தவழ்ந்து சென்றவனே!
என்,En - எனக்கு விதேயமான
பொல்லா மணியே,Polla maniye - துளைபடாத ரத்தினம் போன்றவனே!
தேனே,Thene - தேன்போன்றவனே!
இன் அமுதே,In amuthe - இனிமையான அம்ருதம் போன்றவனே!
என்று என்றே,Enru enre - என்று இவ்வண்ணமாகவே
சில கூத்து சொல்ல,Sila koothu solla - சில பொய்யுரைகளைச் சொல்ல
எம்பெருமான் அவன் தான்,Emperumaan avan thaan - அவ்வெம் பெருமானானவன்
என் ஆகி ஒழிந்தான்,En aaki ozhindhaan - எனக்கு விநேயனாய்விட்டான்;
வான் மா நிலம் மற்றும் முற்றும்,Vaan maa nilam matrum mutrum - (அன்றியும்) அவனடைய விபூதிகளெல்லாம்
என் உள்ளன,En ullana - என்னுள்ளே நடத்தும் படியாயின.
3119திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக் கொண்டிருந்த வாற்றைச்சொல்லி, பின்னடிகளால் – அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடு கூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார்.) 3
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3
வெள்ளத்து,Vellathu - திருப்பாற்கடலிலே
அணை,Anai - (திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது
கிடந்தாய்,Kidanthai - பள்ளிகொள்ளும் பெருமானே!
உள்ளன,Ullana - எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன்
மற்று உள் ஆ,Matru ul aa - உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும்
புறமே,Purame - வெளிவேஷமாக,
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே,Vallal Mani annane Enru Enre - வள்ளலே! மணிவண்ணனே! என்று பலநாலும்
சில மாயம் சொல்லி,Sila Maayam Solli - சில பொய்யுரைகளைச் சொல்லி
உன்னையும் வஞ்சிக்கும்,Unnaiyum Vanchikkum - (ஸர்வஜ்ஞனான) உன்னையும் உஞ்சனை பண்ணும்படியான
கள்ளம் மனம் தவிர்த்து,Kallam Manam Thavirttu - கபடமான நெஞ்ச தவிரப்பெற்று
உன்னை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்,Unnai Kandu Kondu Uynthu Ozhindhen - உன்னை அநுபவிக்கப் பெற்று உஜ்ஜீவித்தானயினேன்;
இனி,Ini - இனிமேல்
உன்னை விட்டு,Unnai Vittu - பரமயோக்யனான உன்னைவிட்டு
என் கொள்வன்,En Kolvan - வேறு எதைக் கைக் கொள்ளுவேன்?
3120திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இதற்கு முன்பெல்லாம் இப்படி உன் பக்கல் பொய்னாய்ப் போந்தது ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலேயாதலால் அந்த ப்ரக்ருதிஸபந்தததைப் போக்கித்தரவேணுமென்கிறார்.) (இப்பாட்டுக்கு மற்றொருவகையான அவதாரிகையும் உண்டு;) (கீழ்ப்பாட்டில் “உன்னைக் கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே” என்றார்; அந்தக் காட்சி மாநஸமான காட்சியாயிருந்தது; காட்சிக்குப் பிறகு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே ருசி பிறக்கமாகையாலே கையை நீட்டினார். கைக்கு அகப்படாமையாலே தளர்ந்து, இப்படி எம்பெருமான் நம்முடைய கைக்கு அகப்படாமைக்குக் காரணம் தேஹ ஸம்பந்தமா யிருந்ததென்று உணர்ந்து, இவ்விரோதியை நீயே போக்கி உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார் – என்று சில ஆசாரியர்கள் நிர்வஹிப்பர்கள்.) 4
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4
கண்ணனே,Kannané - எம்பெருமானே!
வன் கள்வனேன்,Van Kalvanén - பஹாரக்கள்வனாகிய நான்
உன்னைவிட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும்,Unnaivittu En Kolvan Ennum Vaasagangal Solliyum - உன்னைவிட்டு வேறு எதைக்கொள்வேன்! என்கிற கபடவார்த்தைகளைச்சொல்லியும்
மனத்தை வலிந்து,Manathai Valinthu - விஷயார்தரங்களில் ஊன்றின செஞ்சை பலாத்காரமாக மீட்டு
கண்ண நீர் சுரந்து,Kanna Neer Surandu - அவ்விஷயாந்தரங்களை அநுபவிக்கப் பெறாமையாலாகும் துக்கத்தையும் மாற்றி
நின் கண்,Nin Kan - உன்னிடத்திலே
நெருங்க வைத்து,Nerunga Vaithu - மனத்தை ஊன்றவைத்து
எனது ஆவியை,Enathu Aaviyai - என் ஆத்மாவை
நீக்க கில்லேன்,Neeka Killeen - ஸம்ஸாரத்தில் நின்றும் விடுவிக்க முடியாதவனானயிருக்கின்றேன்;
என் கண்,En Kan - என் பக்கலிலுள்ள
மலினம்,Malinam - அவித்யா தோஷத்தை
அறத்து,Arathu - போக்கி
என்னை கூசி அருளாய்,Ennai Koosi Arulaai - என்னை உன்பக்கலிலே அழைத்துக் கொண்டருள வேணும்.
3121திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) ((கண்ண பிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில்.) 5
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5
கண்ணபிரானை,Kannapiraanai - ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும்
விண்ணோர் கருமாணிக்கத்தை,Vinnor Karumanikkathai - நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும்
அமுதை,Amudhai - அமிருதம்போன்றவனுமான உன்னை
எண்ணியும்,Enniyum - கிட்டியிருக்க செய்தேயும்
நன்னகில்லேன்,Nannagilleen - கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்)
நடுவே,Naduvé - இடைச்சுவராக
ஓர் உடம்பில் இட்டு,Or Udambil Ittu - ஒரு சரீரத்திலே சேர்ப்பித்து
பல செய்வினைகள் கயிற்றால்,Pala Seivinaigal Kayirtraal - பலவகைப்பட்ட கருமங்களாகிய வலிய பாசங்களாலே
திண்ணம் விழுந்த கட்டி,Thinnam Vizhuntha Katti - மிகவும் திடமாகக்கட்டி
புண்ணை,Punnai - ஹேயதோஷங்களை
மறைய வரிந்து,Maraiya Varinthu - தெரியாதபடியாகப் பண்ணி
என்னை,Ennai - அசந்தனான என்னை
பதமே,Pathame - உனக்குப் புறம்பான விஷயங்களிலே
போர வைத்தாய்,Pora Vaithai - தள்ளிவைத்தாய்.
3122திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (கீழ்ப்பாட்டில் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நினைத்து வருத்தமுற்ற ஆழ்வாருடைய இழவு ஒருவாறு தீரும்படி எம்பெருமான் தன வடிவழகைக் காட்டியருள, அதை ஸேவித்தவாறே தம் உடம்பை மறந்து மகிழ்ந்து போகிறார். இவரை மெய்மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.) 6
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6
இரு,Iru - புண்யபாபங்களென்று இருவகைப்பட்ட
வல் விளையர்,Val Vilaiyar - பிரபல கருமங்கள்
புறம் அற,Puram Ara - புச்சம் தோன்றாதபடி
முறை முறை,Murai Murai - தோல் மாறுங் கணக்கிலே
புகல் ஒழிய,Pugal Ozhia - புகுவது தவிரும்படியாக
நிறம் உடை நால் தட தோள்,Niram Udai Naal Thada Thol - அழகு பொருந்திய விசாலமான நான்கு திருத்தோள்களையும்
செய்ய வாய்,Seyya Vaai - சிவந்த திருப்பவளத்தையும்
செய்ய தாமரைகள்,Seyya Thaamaraigal - செய்தாமரைக் கண்களையும்
கட்டிக்கொண்டு,Kattikondhu - ஒன்றோடொன்று பிசிறிக்கொண்டு
குமைக்கும்,Kumaikkum - நலிவதற்கு இடமான
ஆக்கை,Aakkai - சரீரத்தில்
அறம் முயல் ஆழி அம் கை,Aram Muyal Aazhi Am Kai - ரக்ஷணமாகிற தருமத்திலே ஊக்கமுடைய திருவாழியினாலே அழகுபெற்ற திருக்கைகளையும் உடைய
கரு மேனி,Karu Meni - கரிய திருமேனியை யுடையவான
அம்மான் தன்னை,Ammaan Thannai - எம்பெருமானை
கண்டு கொண்டு ஒழிந்தேன்,Kandu Kondu Ozhindhen - ஸேவித்து அநுபவித்து விட்டேன்.
3123திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்குமிடத்து அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி யுண்டு! என்று பிற்காலிக்க வேண்டி யிருக்கச் செய்தேயும் அவனுடைய க்ருபா ரஸம் கரை யழியப் பெருகின படியாலே ஒரு நீராய்க் கலக்க நேரிட்டது என்கிறார்.) 7
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7
ஆழி பிரான் அம்மான் அவன்,Aazhi Piraan Ammaan Avan - திருவாழியாழ்வானையுடைய பிரபுவாகிய அவ்வெம்பெருமான்
எளவிடத்தான்,Ezhavidathaan - எவ்வளவு பெரியவன்!
யான் ஆர்,Yaan Aar - நான் எவ்வளவு சிறியவன்; (இப்படியிருக்க)
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று,Kaimmaa Thunbu Ozhiththai Endru - கஜேந்திராழ்வானது துன்பத்தைத் திரித்தவனே! என்று
கை தலை பூசல் இட்டே,Kai Thalai Poosal Ittae - சிரஸ்ஸிலே அஞ்ஜலியைப் பண்ணி
மெய் மால் ஆய் ஒழிந்தேன்,Mey Maal Aay Ozhindhen - ருஜுவான பிரேமமுடையவனாக ஆய்விட்டேன்!
எம் பிரானும்,Em Piraanum - ஸர்வேசுவரனும்
என் மேலான்,En Maelaan - என் மீது அன்பு பூண்டவனாயினான்; (ஆதலால்)
எம்மா பாவியர்க்கும்,Emma Paaviyarkkum - எவ்வளவோ மஹாபாபிகளானவர்களுக்கும்.
விதி வாய்க்கின்ற,Vidhi Vaaykkindra - தப்பவொண்ணாத அருளாகிற விதி வலிப்பதாமளவில்
வாய்க்கும் கண்டீல்,Vaaykkum Kandeel - பலித்தேவிடும்.
3124திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தனக்கு விலக்ஷண போக்தாக்கள் உண்டாய் இருக்கச் செய்தே என்னுள்ளே இப்போது புகுந்தான் -எனக்கு இனி சர்வவித போகமும் எம்பெருமானே என்கிறார்.) 8
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8
மேல் ஆம் தேவர்களும்,Mael Aam Thevarkalum - மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும்
நிலத் தேவர்களும்,Nilath Thevarkalum - இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும்
மேவி தொழும்,Mevi Thozhum - விரும்பி வணங்கிநின்ற
மானார்,Maanaar - எம்பெருமான்
நினநாள்,Ninanaal - இப்போதும்
வந்து,Vandhu - என்பக்கலிலே ஆமிழுக்கியம் பணிவந்து
அடியேன் மனத்தே,Adiyen Manathae - எனது நெஞ்சினுள்ளே
மன்னினார்,Manninaar - பெருந்தினார்;
இனி,Ini - இது முதலாக
சேல் எய் கண்ணியரும்,Sael Ey Kanniyarum - மீனோக்குடைய மாதர்களும்
பெரு செல்வமும்,Peru Selvamum - மஹத்தான ஜச்சரியமும்
நல் மக்களும்,Nal Makkalum - குணம்மிக்க பிள்ளைகளும்
மேல் ஆம் தாய் தந்தையும்,Mael Aam Thaai Thanthaiyum - மேம்பட்ட மாதாபிதாக்களும்
அவரே ஆவார்,Avarae Aavaar - (எனக்கு) அப்பெருமானேயாவர்.
3125திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இந்த ஸம்ஸார மண்டலத்திலே இதுகாறும் நான் பட்ட கிலேசங்களெல்லாம் தீர எம்பெருமான் தன்னுடைய பொருளாலே அபாராக்ருதமான வடிவோடே வந்து என்னோடே கலந்தானென்கிறார்.) 9
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9
துணை ஆவார் ஆர் என்று,Thunai Aavaar Aar Endru - காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு
அலை நீர் கடலுள் அழுந்தும்,Alai Neer Kadalul Azhundhum - அலையெறிகின்ற கடலினுள்ளே அமிழ்ந்துகிற
நாவாய் போல்,Naavaai Pol - படகுபொலே
நான்,Naan - அடியேன்
பிறவி கடலுள்,Piravi Kadalul - ஸம்ஸாரக்கடலினுள்ளே
நின்று துளங்க,Nindru Thulanga - நின்று சிரமப்படா நிற்கையில்
தேவு ஆர் கோலத்தோடும்,Thevu Aar Kola Thoodum - (எம்பெருமான்) திவ்யமான வடிவோடும்
திருசக்கரம் சங்கினோடும்,Thiruchakaram Sanginodum - திருவாழி திருசங்குகளோடும்கூடி
ஆ ஆ என்று,Aa Aa Endru - ஐயோ ஐயோ வென்று
அருள் செய்து,Arul Seydhu - க்ருபைபண்ணி
அடியேனோடும் ஆனான்,Adiyenoatum Aanaan - என்னோடும் கூடினான்
3126திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத் திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.) 10
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10
மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய்,Meen Aay Aamaiyam Aanar Singamum Aay Kurai Aay - மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும்
கான் ஆர் எனமும் ஆய் இன்னம்,Kaan Aar Enamum Aay Innam - வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி
கற்கி ஆம்,Karki Aam - கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும்
கார்வண்ணன்,Kaarvannan - காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான்
ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு,Aal Udaiaan Aanaan Endra Ahadeh Kondum - என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு
உகந்து வந்து,Ugandhu Vandhu - உகப்போடோளந்து
தானே இன் அருள் செய்து,Thaane Inn Arul Seydhu - தானாகவே இனிய கிருபையைப் பண்ணி
என்னை முற்றவும் தான் ஆனான்,Ennai Muttavum Thaan Aanaan - எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான்.
3127திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீ மிக்கவர்களாய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11
கார் வண்ணன்,Kaar Vannan - மேகவண்ணனும்
கண்ணபிரான்,Kannapiraan - ஸர்வஸுலபனும்
கமலம் தட கண்ணன் தன்னை,Kamalam Tada Kannan Thannai - தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து.
ஏர் வளம் ஒண் கழனி,Aer Valam On Kalani - எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொன்ன,Sonna - அருளிச்செய்த
சீர் வண்ணம் ஒண் தமிழர்கள்,Seer Vannam On Tamilarkal - சீரும் வண்ணமும் குறையாத தமிழினாலான
இவை ஆயிரத்துள் இ பத்தும்-;,Ivai Aayiraththul I Patthum-; - இவை ஆயிரத்துள் இ பத்தும்-;
ஆர் வண்ணத்தால்,Aar Vannathaal - அமிருதபானம் பண்றுமாபோலே
உரைப்பர்,Uraippar - ஓதுமவர்கள்
பொலிந்து,Polindhu - ஸம்ருத்தியோடே யிருந்து
அடிகீழ்,Adikeezh - அவ்வெம்பெருமான் திருவடிகளின் கீழே
புகுலார்,Pugulaar - புகப்பெறுவர்கள்.