Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கோவை வாயாள் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3029திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக எருதுகளை அடர்க்கும்போதும், ஸீதாபிராட்டி நிமித்தமாக இராவணனை யழிக்கும் போதும் அந்தந்த ஸமங்களிலுண்டான சிரமம் தீரும்படி அடியேன் அவ்வப்போதுகளில் ஸந்நிஹிதனாயிருந்த உபசாரங்கள் செய்யப் பெற்றிலேன்! அப்படியிருந்தும் என்னுடைய ஹ்ருதயத்தையே உனக்குப் பரம போக்யமாகக் கொண்ட விதம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 1
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1
கோவை வாயாள் பொருட்டு,kovai vaayaal poruttu - கோவைக்கனிபோற் சிவந்த அதரத்தையுடையவளான நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக
ஏற்றின்,etrin - எருதுகளினுடைய
எருத்தம்,eruththam - பிடரியை
இறுத்தாய்,iruththai - முறித்தவனே!
மதிள்,madhil - மதிள் சூழ்ந்த
இலங்கை,ilangai - லங்காபுரிக்கு
கோவை,kovai - அரசனான ராவணன்
லீய,leeya - முடியும்படியாக
குனித்தாய்,kuniththai - வளைத்தவனே!
குலம் நல் யானை,kulam nal yaanai - நல்ல ஜாதியிலே பிறந்து அழகியதான குலவயா பீடயானையினுடைய
மருப்பு,maruppu - கொம்பை
ஒசித்தாய்,osiththai - முறித்தொழிந்தவனே!
பூவை லீயா நீர்,poovai leeya neer - புஷ்பத்தை விட்டு நீங்காத தீர்த்தத்தை (புஷ்பத்தையும் தீர்த்தத்தையும் என்றபடி)
தூவி,thoovi - பணிமாறி
போதால்,pothaal - உரிய காலங்களில்
வணங்கேன் ஏலம்,vanangean elam - உன்னைப் பணிந்திலேனாகிலும்
நின்,nin - உன்னுடைய
பூவை லீ ஆம் மேனிக்கு,poovai lee aam menikku - காயாம் பூப்போன்ற திருமேனிக்கு
பூகம் சாந்து,poogam saandhu - சாத்தத் தகுதியான சந்தனம்
என் நெஞ்சமே,en nenjame - எனது நெஞ்சமேயாகும்.
3030திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தமது மனமொழி மெய்களாகிற முக்கரணங்களும் எம்பெருமானுக்குப் பரம யோக்யமாகின்றமையை வியந்து கூறுகின்றார். எம்பெருமானது திருமேனியின் வைலக்ஷண்யத்தையும், அவன்றனக்குத் தம்மிடத்து உண்டான விருப்பத்தையும் சிந்தனை செய்து, முன் சொன்னதையே மீண்டும் வாய்வெருவுகிறபடி.) 2
பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2
ஈசன்,eesan - ஸர்வேச்வரனாயும்
ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை,gnalam undu umizhndha endhai - (ஒரு காலத்தில்) உலகங்களையுண்டு (மற்றொரு காலத்திலே) வெளிப்படுத்தின ஸ்வாமியும்
ஏகமூர்த்திக்கு,ekamurththikku - ஒப்பற்ற திவ்யமங்கள் விக்ரஹத்தையுடையனாயுமிருக்கிற பெருமானுக்கு
பூசும் சாந்து,poosum saandhu - பூசுவதற்குரிய சந்தனம்
என் நெஞ்சமே,en nenjame - என் மனமேயாகும்;
புனையும் கண்ணி,punaiyum kanni - அணிந்து கொள்ளுதற்கு உரிய மாலை
எனதுடைய,enadudaiya - என்னுடைய
வாசகம் செய் மாலை,vaasagam sey maalai - வாக்கினால் தொடுக்கப்படுகிற் சொல்மாலையேயாம்;
வான் பட்டு ஆடையும்,vaan pattu aadaiyum - சிறந்த திருப்பரி வட்டமும்
அஃதே,akthe - அந்தர் சொல்மாலையேயாம்;
தேசம் ஆன,desam aana - தேஜஸ்கரமான
அணி கலனும்,ani kalanum - அணியப்படும் ஆபரணமும்
என் கை கூப்பு செய்கை ஏ,en kai koopu seygai ae - எனது அஞ்சலிபந்தமேயாம்;
3031திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்த் திருவாய் மொழியில் தமக்குண்டான ஆற்றாமை தீரப் பெற்றமையை இங்கருளிச் செய்கிறார்.) 3
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3
ஏகமூர்த்தி,ekamurththi - காரணபூதமான ஒரு மூர்த்தியாய்
இரு மூர்த்தி,iru murththi - (ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலே) ப்ரக்ருதி மஹான்களைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் மூர்த்தியாய்
மூன்று மூர்த்தி,moonru murththi - ஸாத்லிகமாயும் ராஜஸமாயும் தாமஸமாயும் மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தை வடிவமாகக் கொண்ட மூர்த்தியாய்
பல மூர்த்தி ஆகி,pala murththi aagi - மநஸ் முதலிய கரணங்களை வடிவாகவுடையனாய்
ஐந்து பூதம் ஆய்,aindhu bootham aay - பஞ்ச பூதங்களை வடிவாகவுடையனாய்
இருண்டு சுடர் ஆய்,irundu sudar aay - ஸூர்ய சந்திரர்களிருவரையும் வடிவாகவுடையனாய்
அரு ஆகி,aru aagi - ஸர்வாந்தர்யாமியாய்
நடு கடலுள்,nadu kadalul - திருப்பாற் கடல் நடுவே
நாகம் ஏறி,naagam aeri - திருவனந்தாழ்வான் மீது ஏறி
துயின்ற,thuyindra - திருக்கண்வளர்ந்தருளின
நாராயணனே,naarayananey - நாராயணனே!
உன்,un - உன்னுடைய
ஆகம்,aagam - திருமேனியையும்
முற்றம்,mutram - அதற்கு வேண்டிண மற்றெல்லாவற்றையும்
அகத்து,agathu - எனது நெஞ்சினுள்ளே
அடக்கி,adakki - அடங்கவைத்து
ஆவி,aavi - உன் திருவுள்ளம்
அல்லல் மாய்த்ததே,allal maayththadhey - இடர் நீங்கப்பெற்றதே!
3032திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (பூதனையை முடித்தல் முதலான ஸமயங்களில் விடாய்தீர வந்துநின்று சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனே யாகிலும் உன் திருமேனிக்கு என்னுயிரே உபகாரமாய்விட்டதே யென்கிறார்) 4
மாய்த்தல் எண்ணி ‘வாய் முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4
மாய்த்தல் எண்ணி,maayththal enni - முடிப்பதாக நினைத்து
வாய்,vaai - வாயிலே
முலை தந்த,mulai thantha - நஞ்சு தீற்றிய முலையை வைத்த
மாயம் பேய்,maayam pey - பூதனையினுடைய
உயிர்,uyir - பிராணனை
மாய்த்த,maayththa - முடித்துவிட்ட
ஆய! மாயனே!,aaya! maayaney! - வாமனனே! மாதவா!
உன்னை,unnai - உன்னை
பூ தண் மாலை கொண்டு,poo than maalai kondu - பூக்கள் தொடுத்துக் குளிர்ந்த மாலைகளைக் கொண்டு
போது,podhu - அவ்வப்போதுகளில்
வணங்கேன் ஏலும்,vanangen elum - வழிபாடு செய்யப்பெற்றிலேனாகிலும்
நின்,nin - உன்னுடைய
பூ தண் மாலை நெடு முடிக்கு,poo than maalai nedu mudikku - புஷ்பமயமாய்ச் செவ்விய மாலையாலே அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு
புனையும் கண்ணி,punaiyum kanni - அலங்காரமாய்ச் சாத்துகின்ற மாலை
எனது உயிரே,enathu uyire - என் பிராணனாவதே!
3033திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தம்முடைய உயிரையும் காதலையும் எம்பெருமான் போரப் பொலிய அபிமானித்த படியைப் பேசுகிறார்.) 5
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5
காலம் சக்கரத்தான்,kaalam sakkaraththaan - காலத்தை நடத்துகிற திரு வாழியையுடையனாய்
எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியாய்
எம் பிரான்,em piraan - எனக்கு மஹோபநாரகனான
கண்ணனுக்கு,kannanukku - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுக்கு
எனது உயிர்,enathu uyir - என் ஆத்மவஸ்து
கண்ணி,kanni - மாலை போல் போக்யமாகா நின்றது;
காதல்,kaadhal - எனது ஆசையானது
கனகம் சோதி முடி முதல் ஆ,kanakam sothi mudi muthal aa - பொன்மயமாய் ஒளியையுடைத்தான திருவபிஷேகம் முதலாக
எண் இல் பல் கலன்களும்,en il pal kalan'galum - கணக்கற்ற பல திருவாபரணங்களாக ஆகா நின்றது;
எலும் ஆடையும்,elum aadayum - ஏற்றதான பீதாம்பரமும்
அஃதே,akthe - அந்தக் காதலேயாம்;
மூ உலகும்,moo ulakum - மூவுலகங்களும்
நண்ணி,nanni - கிட்டி
நவிற்றும்,navitrum - துதிக்கின்ற
கீர்த்தியும்,keerththiyum - புகழும்
அஃதே,akthe - அந்தக காதலேயாம்.
3034திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்ப்பாசுரங்களில் எம்பெருமானுடைய ப்ரணயித்வம்; சொல்லிற்று; இப்பாசுரத்தில் தம்முடைய ப்ரணயித்வம் சொல்லுகிறது.) 6
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6
காலன் சக்கரத்தொடு,kaalan sakkaraththodu - (பகைவரையழிப்பதில்) யமன் போன்ற திருவாழியோடுகூட
வெண் சங்கு,ven changu - வெளுத்த சங்கத்தை
அம் கை,am kai - அழகிய திருக்கையிலே
ஏந்தினாய்,yenthinaai - தரித்திருப்பவனே!
ஞாலம் முற்றும்,gnaalam mutrum - உலகமுழுவதையும்
உண்டு உமிழ்ந்த,undu umizhntha - ஒருகால் விழுங்கி மற்றொரு கால் வெளிப்படுத்தின
நாராயணனே,narayananey - நாராயணா!
என்று என்று,endru endru - பலகால் சொல்லி
ஓலம் இட்டு,olam ittu - கூப்பிட்டு
நான் அழைத்தால்,naan azhaithaal - நான் அழைக்க
ஒன்றும் வாராய் ஆகிலும்,onrum vaaraai aagilum - நீ சிறிதும் வந்தருளாமற் போனாலும்
உன்,un - உன்னுடைய
கமலம் அன்ன,kamalam anna - தாமரை மலர்போன்ற
குரை கழல்,kurai kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகள்
என் சென்னிக்கு,en sennikku - எனது தலைக்கு
கோலும் ஆம்,kolum aam - அலங்காரமாகநின்றது.
3035திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நான் ஒருவிதமான கிஞ்சித்காரமும் செய்யப்பெற்றிலேனாகிலும், அநந்யார்ஹமாக்கி அடிமை கொள்ளுமியல்வினனான வுன்னுடைய வடிவு என் ஆத்மாவை விஷயீகரித்திராநின்றதென்கிறார்.) 7
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7
குரை கழல்கள் நீட்டி,kurai kazhalgal neetti - (வீரக்கழல்) ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி
மண் கொண்ட,maṇ koṇḍa - ஜகத்தை அளந்து கொண்ட
கோலம் வாமனா,kolam vaamana - வடிவழகிய வாமன மூர்த்தியே!
குரை கழல்,kurai kazhal - அத்திருவடிகளைக் குறித்து
கை கூப்புவார்கள்,kai kooppuvargal - ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள்
கூட நின்ற,kooda ninra - தன்னையே வந்து அடையும் படி நின்ற
மாயனே,maayaney - ஆச்சரிய பூதனே!
விரைகொள் பூவும்,viraikol poovum - பரிமளம் கொண்ட பூக்களையும்
நீரும்,neerum - (பாத்யம் முதலியவற்றுக்கான) தீர்த்தத்தையும்
கொண்டு,kondu - ஏந்திக்கொண்டு
ஏத்த மாட்டேன் ஏலும்,yetha maatteen yelum - உன்னைத் துதிக்கவல்லேனல்லெனினும்,
உரை கொள் சோதி,urai kol chothi - வாய்கொண்டு சொல்ல வொண்ணாதபடி வாக்கை மீறியிருக்கின்ற சோதியையுடைய
உன் திரு உருவம்,un thiru uruvam - உன்னுடைய திருமேனியானது
என்னது ஆவி மேலது ஏ,ennathu aavi melathu ye - என்னுடைய ஸத்தையைப் பற்றியிரா நின்றதே! இது என்ன அற்புதம்!.
3036திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எனக்காக ஸகலலோகங்களையும் வியாபித்து என்னையங்கீகரித்த உன் படி பேச்சுக்கு நிலமன்று என்கிறார்.) 8
என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8
என்னது ஆவி மேலியாய்,ennathu aavi meliyai - என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய்க் கொண்டு
ஏர்கொள் ஏழ் உலகமும்,erkoll ezh ulagamum - அழகிய கைல லோகங்களிலும்
முற்றும் ஆகி நின்ற,mutrum aagi ninra - ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாம்படி நின்ற
சோதி ஞானம் மூர்த்தியாய்,chothi gnanam moorthiyai - சோதிமயமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே!
என்னது ஆவி,ennathu aavi - என் ஆத்மஸ்வரூபம்
உன்னதும்,unnathum - நீயிட்ட வழக்காகவும்
என்னதும்,ennathum - நானிட்ட வழக்காகவுமான
இன்ன வண்ணமே நின்றாய்,inna vanname ninraai - இப்படியிலே நின்றாய்
என் உரைக்க வல்லேன்,en uraikka valleyn - இதற்கு என்ன பாசுர மிட்டுச் சொல்லுவேன்?
3037திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணம் தம்முடைய பேச்சுக்கு நிலமன்று என்பதை அழகுபட அருளிச்செய்கிறார்.) 9
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9
புரைப்பு இலாத பரம்பரனே,puraippu ilaatha parambarane - புரையற்ற பரத்வம் பொருந்திய எம்பெருமானே!
பொய் இலாத,poy ilaatha - (என்னோடுண்டான கலவியில்) பொய்யில்லாத
பரம் சுடரே,param sudare - பரஞ்சோதிப் பெருமானே!
உரைக்க வல்லேன் அல்லேன்,uraikka valleyn alleyn - நான் ஒன்றும் சொல்ல சக்தியுடையேனல்லேன்;
உலப்பு இல்,ulappu il - முடிவில்லாத
உன் கீர்த்தி வெள்ளத்தின்,un keerthi vellaththin - உனது ப்ரணயித்வ குணக் கடலினுடைய
கரைக் கண்,karaik kan - கரையிடத்து
நான் என்று செல்வன்,naan enru selvan - நான் என்றைக்கு அடியிடுவேன்? (ஒரு நாளும் அடியிடமாட்டேன்;)
காதல்,kaadhal - பிரேமத்தினால்
மையல் ஏறிறனேன்,maiyal Eriranaen - பிச்சேறிக் கிடக்கிறேனத்தனை
நல்ல,nalla - விலக்ஷணர்களான
மேல் மக்கள்,mel makkal - நித்ய ஸூரிகள்
இரைத்து ஏத்த,iraitthu Ethan - பேராரவாரஞ்செய்து துதிக்க (அவ்வழியைப் பின்பற்றி)
யானும் ஏத்தினேன்,yaanum Ethanain - நானும் சிறிது துதித்தேனித்தனை.
3038திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (ஒருவராலும் எல்லைகாண வொண்ணாதபடி அளவிறந்த பெருமையையுடைய பெருமானை நான் ஸத்தை பெறுவதற்காக ஏத்தினேனத்தனை யென்கிறார்.) 10
யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10
யானும்,Yanum - எம்பெருமானருளால் அறிவுபெற்ற நானும் துதித்து,
ஏத்தி,Eththi - துதித்து,
முற்றும் ஏழ் உலகும் ஏத்தி,Mutrum ezhu ulakum eththi - எல்லாவுலகங்களும் ஒன்று கூடி யேத்தி,
பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலே
தானும் ஏத்திலும்,Thanum eththilum - ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான தானுங்கூடி ஏத்தினாலும்
தன்னை ஏத்த ஏத்த,Thannai eththa eththa - தன்னைத்துதிக்கத்துதிக்க
எங்கு ஏய்தும்,Engu eythum - முடிவு பெறுவது எது? (ஆகிலும்)
யான் உய்வான்,Yan uyyvan - நான் தரித்திருப்பதற்காகவே,
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப,Thenum palum kannalum amudhum aaki thiththippa - தேனும் பாலும் கன்னலும் அமுதும போலே ரஸிக்க,
யானும் எம்பிரானையே ஏத்தினேன்,Yanum empiranaie eththinen - நானும் எம்பெருமானையே ஏத்தினேன்.
3039திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (இத்திருவாய் மொழியை ஓதுமவர்கள் உபய விபூதியையும் தாம் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவர்களென்கிறார்.) 11
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11
மற்று,Matru - வேறு வழியினால்
உய்வு உபாயம் இன்மை,Uyvupayam inmai - தரிக்கவிரகில்லாமையை
தேறி,Theri - துணிந்து
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
ஓண் கழல்கள் மேல்,On kazhalgal mel - அழகிய திருவடிகள் விஷயமாக,
செய்ய தாமரை பழனம்,Seyya tamarai pazhanam - செந்தாமரைகள் நிறைந்த நீர்நிலங்களையுடைய
தென் நன் குருகூர்,Then nan kurugoor - தென் திசையிலுள்ள அழகிய திருக்குருகூர்க்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார் (அருளிச் செய்ததான)
பொய் இல் பாடல் ஆயிரத்துள்,Poi il paadal aayirathul - யதார்த்தம் பொருந்திய ஆயிரத்தினுள்ளும்
இவை பத்தும்,Ivai patthum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்கள்,Vallargal - ஓதவல்லவர்கள்
வையம்,Vaiyam - இப்பூமண்டலத்திலே
மன்னி வீற்றிருந்து,Manni veetrirundhu - நெடுங்காலம் பொருந்தியிருந்து
மண்ணூடே,Mannude - இந்நிலத்திலேயே
விண்ணும் ஆள்வர்,Vinnum aaluvar - பரம பதத்தையும் ஆளப் பெறுவர்கள்.