| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3700 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (உபய விபூதி நாதனாயிருந்துவைத்துப் பத்துடையடியவர்க் கெளிப்பனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தியோக ஸுலபமென்கிறார்.) 1 | சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன் நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1 | கார்மேகம் வண்ணன்,Kaarmegam vannnan - காளமேக நிறத்தனாய் கமலம் நயனத்தன்,Kamalam nayanathan - செந்தாமரைக் கண்ணாய் தமோதரன்,Damodharan - தம்பாலே கட்டுண்டு அடியவர்க்கெளியனானவனுடைய நீர்வானம் மண் எர் கால் ஆய் நின்ற,Neervaanam man er kaal aay nindra - பஞ்பூதஸவரூபியாய் நேமியான்,Nemiyann - திருமொழியை யுடையனாய் தாள்கள்,Thaalgal - திருவடிகளானவை பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையன்,Per vaanavargal pithattrum perumaiyan - பெரிய வானவர்களான நத்திய ஸூதிகள் வாய்வெருவும்படியான பெருமையை யுடையனாய் ( இப்படி உபய விபூ நாதனாய் வைத்து) தவ நெறிக்கு,Thava nerikku - பக்தி மார்க்கத்திற்கு. சார்வே,Saarve - எளியனவாம் |
| 3701 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் தாள்கள் தவநெறிக்குச் சார்வே * என்று பொதுப்படையாக அருளிச் செய்தார்; அது தம்மளவில் பலித்தபடியை யருளிச்செய்கிறார் இப்பாட்டுத் தொடங்கி.) 2 | பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும் திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2 | வனத்து இமையோர்க்கும் பெருமையன்,Vanathu imaiyorkkum perumaiyan - மேலுலகங்களிலுள்ள பிரமன் முதலானாரினும் பெருமை பெற்றவனாய் என்றும் திருமெய் உறைகின்ற,Endrum thirumey uraiginra - எப்போதும் பிராட்டியானவள் தன் திருமேனியிலேயே வாழப் பெற்ற புண்டழீகாக்ஷன் ஆகத்து அணையாதார்க்கு,Aagathu anaiyaadhaarkku - அவன் திருவுள்ளத்திலே கொள்ளப் பெறாதவர்ககு செம் கண் மால் இங்கு இருமைவினை கடிந்து,Sem kan maal ingu irumaivinai kadindhu - இவ்விபதியிலே புண்யபாப ரூப உபய கருமளையும் போக்கி காண்டற்கு அருமையன்,Kaandarku arumaiyan - காண முடியாதிருப்பவனாய் நாளும் என்னை ஆள்கின்றான்,Naalum ennai aalkinraan - நாடோறும் என்னை அடிமைகொள்ளா நின்றான் |
| 3702 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்னிக்கணியாகக் கொண்டு அநுபவிக்கப் பெறேன்; இன ஸம்ஸாரம் மறுவலிடாது; என்னகுறை யுண்டென்கிறார்.) 3 | ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம் வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3 | ஆழியான் ஆழ்கின்றான்,Aazhiyaan aazhinraan - கையுந் திருவாழியுமான பெருமாள் காத்தருளா நின்றான்; வாள் கெண்டை ஒண் கண்,Vaal kendai on kan - ஒளியையுடைய கெண்டை போன்றழகிய கணகளையுடையளாய் பிறவி துயர் கடிந்தோம் (அதனாலே),Piravi thuyar kadindom (adhanaale) - பிறவித் துன்பங்கள் தொலையப் பெற்றோம்; மடம் பின்னை தன் கேள்வன்,Madam pinnai than kelvan - குணவதியான நப்பின்னைக்கு நாயகனானவனுடைய மீள்கின்றது இல்லை,Meelginrathu illai - இன ஸம்ஸார ஸம்பந்தம் மறுவலிடாது; தாள் கண்டு கொண்டு,Thaal kandu kondu - திருவடிகளை ஸாக்ஷாத்கர்த்து ஆரால் குறை உடையம்,Araal kurai udaiyam - இன ஆரைக் கொண்டு காரிய முடையோம். என் தலை மேல் பினைந்தேன்,En thalai mel pinaindean - ( அத் திருவடிகளை) என் தலை மீது அணியப் பெற்றேன். |
| 3703 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (அவன் திருவடிகளை நான் தலைமேல் பிணைந்தபடி கிடக்கட்டும்; அவன்றான் என் ஹ்ருதயத்திஎட்ளளே வந்து புகுகைக்கு க்ருஷி பண்ணின படியையும் அந்த’க்ருஷி பலித்தவாறே அவன் க்ருத’ருத்யனாயிருக்கிறபடியையும் கண்டு நான் களிக்கின்றே னென்கிறார்.) 4 | தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4 | சரணங்கள் தலை மேல் புனைந்தேன்,Saranangal thalai mel punaindean - அவன் திருவடிகளை என் தலை மேலணிந்து கொண்டேன்; என் மனத்துள் இருந்தானை,En manathul irundhaanai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனுமான எம்பெருமானை ஆலின் இலை மேல் துயின்றான்,Aalin ilai mel thuyindraan - ஆலிலையில் கண் வளர்ந்தவனும், நிலை பேர்க்கல் ஆகாமை,Nilai perkall aakamaai - இந்நிலையில் நின்றும் மாற்ற வொண்ணாமையை இமையோர் வணங்க மலை மேல் தான் நின்று,Imaiiyor vananga malai mel thaan nindru - நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையிலெழுந்தருளி நின்று (ஸமயம் பார்த்து) நிச்சித்திருந்தேன,Nischithirundhean - திணணமாக வெண்ணியிரா நின்றேன். |
| 3704 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இப்பாட்டில் “கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும். அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ? என்கிறார்.) 5 | நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன் மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5 | என நெஞ்சம் கழியாமை,Ena nenjam kazhiyaamai - எனது நெஞ்சைவிட்டு அகலாதபடியான தன்மையை பிறர்க்கு மெச்சப்படான்,Pirarkku mechappadaan - பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய் நிச்சித்திருந்தேன்,Nischithirundhean - நிச்சயித்திருந்தேன் கை சக்கரத்து அண்ணல,Kai sakkarathu annala - திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி மெய் போலும் பொய் வல்லன்,Mey polum poy vallan - மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய் கள்வம் பெரிது உடையன்,Kalvam peridhu udaiyan - நாமறியாதன பலவும் பாரியா நின்றான் நாகத்து அணை யான் நமக்கு நச்சப்படும்,Naagathu anai yaan namakku nachchappadum - சேஷசாயியானவன் நமக்கு ப்ராப்யனாவன். |
| 3705 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இன்று வந்து அடிமைபுக்காரையும் “அல்வழக்கொன்று மில்லாவணி கோட்டியர் கோனபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” என்று சொல்லும்படி நித்யாச்ர்தரைப் போலே விஷயீகாரிக்குமவன் திருவடிகளிலே விழப்பெற்றே னென்கிறார். 6 | நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே–10-4-6 | நாகம் அணையானை,Naagam anaiyaanai - சேஷசயன்னாய் மாகத்து இளமதியம் சேரும் சடையானை,Maagathu ilamadhiyam serum sadaiyaanai - ஆகாசத்திலுள்ள இளம் பிறை தங்குகின்ற சடையையுடைய சிவனை ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு,Gnaanathaal aagathu anaipparkku - பக்தியாக வடிவெடுத்த ஞானத்தினால் நெஞ்சிலே வைத்து அநுபவிக்கும் முமுக்ஷீக்களுக்கு பாகத்து வைத்தான் தன்,Paagathu vaiththaan than - தன் திருமேனியிலொரு பக்கத்திலே வைத்தவனான பகவானுடைய நாள்தோறும்,Naalthorum - எப்போதும் அருள் செய்யும்,Arul seyyum - அருள்செய்கின்ற ஸ்வாமியாய் பாதம் பணிந்தேன்,Paadham panindean - திருவடிகளை வணங்கப் பெற்றேன் |
| 3706 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கி யருளிச் செய்கிறார்.) 7 | பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7 | மணிநின்ற சோதி,Maninindra sothi - நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய் பிறவி கெடுத்து ஆளும்,Piravi kedutthu aalum - நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன் மதுசூதன்,Madhusoodhan - விரோதி நிரஸந சீலனாய் என் அம்மான்,En ammaan - அஸ்மத் ஸ்வாமியாய் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான்,Ani nindra sempon adal aazhiyaan - தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான் பிணி ஒன்றும் சாரா,Pini ondrum saaraa - ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி,Paramaparamparanai nenje naalum pani - (ஆன பின்பு) அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி |
| 3707 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.) 8 | ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8 | ஆழியான்,Aazhiyaan - சக்ரபாணியாய் ஆழி அமரர்க்கும் அப்பாலான்,Aazi amararkkum appaalaan - கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய் பாழிஅம் தோளால் வரை எடுத்தான்,Paazhiam tholaal varai eduththaan - (அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது) மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய ஊழியான்,Oozhiyaan - ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய் பாதங்கள்,Paadhangal - திருவடிகளை ஊழிபடைத்தான்,Oozhipadaiththaan - காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய் என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய்,En nenje mara vaadhu vaazh kandaai - என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக. நிரைமேய்த்தான் பசுக்களை ரஷித்தவனாய்,Niraimeiththaan pasukkalai rashiththavanaai - வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக |
| 3708 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதிபி:, நாராணாம் ஷிணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்றும், “ஒன்றியொன்ற நற்றவஞ்செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளந் தூயராய், சென்று சென்று தேவதேவர் ளும்பரும்பரும்பராய், அன்றி யெங்கள் செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்றும் சொல்லுகிறபடியே நெடுங்காலம் பாரிச்ரமப்பட்டுப் பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றே னென்கிறார்.) 9 | கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9 | தொண்டே செய்து,Thonde seydhu - பரபக்தி முதலியவற்றைப் பண்ணி கமலம்மலர்பாதம் கண்டேன்,Kamalammalarpaadham kandean - (அவனன்றனது) பாதாரவிந் தங்களைக்காணப்பெற்றேன் என்று தொழுது வழியெழுக,Endru thozhudhu vazhiyezhuga - நித்ய கைங்காரியத்தைச் செய்து அதுவே யாத்திரையாய்ச் சொல்லும்படி காண்டலுமே,Kaandalumae - கண்டபோதே பண்டே,Pande - ஏற்கனவே (கீதாசாரியனானவப் போதே) வினை ஆயின எல்லாம்,Vinai aayina ellaam - விரோதியேன்று பேர் பெற்றவை யெல்லாம் பரமன் பணித்த பணி வகையே,Paraman panitha pani vagaiyae - ஸர்வேச்வரன் (ஸர்வஸாதாரணமாக) அருளிச் செய்த பாசுலரத்தின்படியே விண்டே ஒழிந்த,Vindae ozhindhu - வாஸனையோடே விட்டுப் போயின |
| 3709 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (ப்ரயோஜநாந்தரரர்களோ, உபாயாந்தர நிஷ்டர்களோ, ப்ரபந்தர்களோ யாராயினும் யாவாக்கும் எம்பெருமானே உபாயமென்று தலைக்கட்டுகிறார்.) 10 | வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10 | வகையால் மனம் ஒன்றி,Vagaiyaal manam onri - சாஸ்திரங்களிற் சொல்லுகிறபடியே நெஞ்சையொருங்கப் பிடித்து திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்சநின்ற,Thisai thoaru amarargal sendru irainjanindra - நின்ற நின்ற திக்குக்கள் தோறும் பிரமன் முதலிய தேவர்கள் வந்து பணியும் படியான, மாதவனை,Maadhavanai - திருமாலான தன்னை நாளும்,Naalum - காலந்தோறும் தகையான்,Thagaiyaan - ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமானுடைய புது புகையால் விளக்கால் மலரால் நீரால்,Puthu pugaiyaal vilakkaal malaraal neeraal - விலக்ஷணமான தூப தீப புஷ்ப தீர்த்தங்களாலே சரணம்தமர்கட்கு ஓர் பற்று,Saranamthamar kadku or patru - திருவடிகள் பக்தர்களுக்குச் சிறந்த புகலிடம் |
| 3710 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11 | பரம பரம்பரனை,Parama paramparanai - பராத்பரனையும் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Thodai anthaadhi or aayirathul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள் மல் திண் தோள்,Mal thin thol - மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற இப் பத்தும் கற்றார்க்கு,Ip paththum katraarkku - இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு மாலை,Maalai - ஸர்வேச்வரனை பற்று என்று பற்றி,Patru endru patri - தமக்குப் புகலாக வுறுதி யிட்டு கண்ணன் கழல் இணை ஓர் பற்று,Kannan kazhal inai or patru - கண்ணனது உபயபாதங்கள் வழுதி வளநாடன் சொல்,Vazhudhi valanaadan sol - ஆழ்வார் அருளிச்செய்த ஆகும்,Aagum - ஒப்பற்ற ப்ராப்யமாகும். |