| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3073 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று அருளிச்செய்வதுண்டு; வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது. இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும். நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார்) 1 | சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்; ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால், கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1 | சீலம் இல்லா,Seelam illa - நன்மை யொன்று மில்லாத சிறியன் ஏலும்,Siriyan eelum - சிறியவனா யிருந்தேனாகிலும் செய் வினையோ,Sey vinaiyo - செய்த பாபமோ பெரிது,Peridhu - பெரிதாயிருக்கின்றது; ஆல்,Aal - அந்தோ!; ஞாலம் உண்டாய்,Jalam undaay - (பிரளயத்தில்) உலகங்களை உண்டவனே! நாராயணா,Naraayana - நாராயணனே! என்று என்று,Endru endru - என்றிப்படிப் பலகாலும் சொல்லி காலம் தோறும்,Kaalam thorum - எல்லாக்காலத்திலும் யான் இருந்து,Yaan irundhu - நான் ஆசையோடிருந்து கொண்டு கை தலை பூசல் இட்டால்,Kai thalai poosal ittaal - கையைத் தலையிலே வைத்துக் கூப்பிட்டால், கோலம் மேனி,Kolam meni - அழகிய திருமேனியை காண,Kaan - நான் ஸேவிக்குமாறு வாராய்,Vaaraay - வருகிறார்யில்லை; கூவியும் கொள்ளாய்,Kooviyum kollaay - கூவிக் கொள்வதும் செய்கின்றில்லை. |
| 3074 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி ‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார்.) 2 | கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால் கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே.–4-7-2 | கொள்ள,Kolla - அநுபவிக்கவநுபவிக்க மாளா,Maalaa - எல்லைகாணவொண்ணாத இன்பம் வெள்ளம்,Inbam vellam - ஆனந்தப்பெருக்கை கோது இல,Kodhu ila - குறையற தந்திடும்,Thandhidum - உபகரிக்கின்ற என் வள்ளலே,En vallalae - என் உதாரனே! வையம் கொண்ட,Vaiyam konda - (மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்று) உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட வாமனா,Vaamana - வாமன்மூர்த்தியே! ஓ ஓ என்று,Oo oo endru - என்று ஆர்த்தியோடே சொல்லி நள் இராவும் நன் பகலும்,Nal iraavum nan pagalum - இரவும் பகலும் நான் இருந்து ஓலமிட்டால்,Naan irundhu oalamittaal - நான் ஆசையோடிருந்து கூப்பிட்டால் கள்ளம் மாயா,Kallam maayaa - க்ருத்ரிமனான ஆச்சர்ய பூதனே! உன்னை,Unnai - உன்னை என் கண் காண,En kan kaana - என் கண்கள் காணுமாறு வந்து ஈயாய் ஏ,Vandhu eeyaai ae - வந்து ஸேவை ஸாதிக்கின்றிலையே!, |
| 3075 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார்.) 3 | ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்? தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று, கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3 | தீ வினைகள்,Thee vinaigal - பாவங்களை ஈவு இலாத,Eevu ilaadha - முடிவில்லாதபடி எத்தனை செய்தனன் கொல்,Eththanai seydhanan kol - எவ்வளவு செய்தேனோ! தாவி,Thaavi - திருவடிகளாலே வியாபித்து வையம்,Vaiyam - உலகங்களை கொண்ட,Konda - ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட எந்தாய்,Endhaay - ஸ்வாமியே! தாமோதரா,Dhamodharaa - தர்மபால் ஆப்புண்ட தழும்பை உதரத்திலுடையவனே! என்று என்று கூவி கூவி,Endru endru koovi koovi - என்று பலகால்சொல்லி இடைவிடாதே கூப்பிட்டு நெஞ்சு உருகி,Nenju urugi - நெஞ்சு நீராயுருகி கண் பனி சோர நின்றால்,Kan pani soora ninraal - கண்ணீர் பெருக நின்றால், பாவியேன்,Paaviyaen - பாவியான நான் காண,Kaana - கண்ணாலே ஸேவிக்ககும்படியாக வந்து,Vandhu - எழுந்தருளி நீ பாவி என்று,Nee paavi endru - ‘(ஆழ்வாரே!) நீர் பாபிகாணும்’ என்று ஒன்று சொல்லாய்,Ondru sollaai - ஒரு வார்த்தையும் சொல்லுகின்றாயில்லை. |
| 3076 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பிரமன் முதலிய தேவர்களுக்கும் காணக்கிடைக்காத பெருமானை வடிவழகு காண விரும்பி வெட்கமுற்று நான் கூப்பிடாநின்றேனே! இதற்கு என்ன பலனுண்டு! என்கிறார்.) 4 | காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ, ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று, நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4 | வானோர்,Vaanor - பிரமன் முதலிய தேவர்கள் பேணி,Paeni - விரும்பியும் காணமாட்டா,Kaanamaattaa - காணமுடியாதபடி பீடு உடை,Peedu udai - பெருமை வாய்ந்த அப்பனை,Appanai - ஸ்வாமியை நோக்கி, ஆணி செம் பொன் மேனி எந்தாய்,Aani sem pon maeni endhaay - “மாற்றுயர்ந்த பொன் போல விரும்பத்தகுந்த திருமேனி படைத்தபிரானே! தாமரை கண் பிறழ,Thamarai kan pirazha - தாமரைப்பூப்போன்ற திருக்கண்கள் விளங்கும்படி (என்னைப் பார்த்துக் கொண்டு) காணவந்து,Kaanavandhu - நான் காணுமாறு வந்து என் கண் முகப்பே,En kan mukappae - என் கண் முன்னே நின்றருளாய்,Nindrarulaay - நின்றருளவேணும் என்று என்று,Endru endru - என்று ஓயாதே சொல்லி சிறு தகையேன் நான்,Siru thakaiyaen naan - நீசனாகிய நான் நாணம் இல்லா,Naanam illaa - வெட்கம் கெட்டவனாய்க்கொண்டு இங்கு அலற்றுவது என்,Ingu alatravathu en - இங்கே அலற்றுவதற்கு ஒரு பிரயோஜனமுமில்லையே!. |
| 3077 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பிரமன் முதலானோர்க்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய அழகைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு ‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்து நாம் அபேக்ஷித்தபடியே வந்தருள்வன் என்று நம்பி வரும் போதை யழகைக் காணவேணுமென்று பாரித்திருக்கின்றேனே! என்னுடைய சாபல்யத்தை என் சொல்லுவேன்! என்கிறார்.) 5 | அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து, இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5 | அப்பனே,Appanae - உபகாரம் செய்யுமியல்வினனே! அடல் ஆழியானே,Adal aazhiyanaan - வீரத்தன்மை வாய்ந்த திருவாழியையுடையவனே! ஆழ் கடலை,Aazh kadalai - ஆழமான கடலை கடைந்த,Kadaindha - கடைந்து அன்பர்கட்கு அமுதமளித்த துப்பனே,Thuppanae - ஸமர்த்தனே! உன் நான்கு தோள்களும்,Un naangu tholgallum - உனது திருத்தோள்கள் நான்கையும் கண்டிட கூடும் கொல் என்று,Kandida koodum kol endru - ஸேவிக்க நேருமோ! என்று எண்ணி எப்பொழுதும்,Eppozhudum - எப்போதும் கண்ணநீர் கொண்டு,Kannaneer kondu - கண்ணீரோடிருந்து ஆவி துவர்ந்து துவர்ந்து,Aavi thuvarndhu thuvarndhu - பிராணன் மிகவும் உலர்ந்து இப்பொழுதே வந்திடாய் என்று,Ippozhudhae vandhidaai endru - உடனே எழுந்தருள வேணுமென்று அபேக்ஷித்து ஏழையேன்,Ezaiyaen - சபலனான நான் நோக்குவன்,Nokkuvan - சுற்றும் பாராநின்றேன். |
| 3078 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும் அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார்.) 6 | நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6 | நாள் தோறும்,Naal thorum - ஸர்வகாலத்திலும் என்னுடைய,Ennudiya - என்னுடைய ஆக்கை உள்ளும்,Aakkai ullum - சரீரத்தினுள்ளும் ஆவி உள்ளும்,Aavi ullum - ஆத்மாவினுள்ளும் அல் புறத்தின் உள்ளும்,Al purathin ullum - மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும் நீக்கம் இன்றி,Neekkam indri - நீங்காமல் (ஒன்றையும் விடாமல்) எங்கும் நின்றாய்,Engum nindraai - எங்கும் வியாபித்திருக்கின்ற பெருமானே! நின்னை,Ninnai - உன்னை அறிந்து அறிந்தே,Arindhu arindhae - (அருள் செய்யத் திருவுள்ளமில்லாதவன் என்று) நன்றாக நான் அறிந்துவைத்தும் யான்,Yaan - நான் உன்னை காண்பான்,Unnai kaanbaan - உனது திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கவேண்டி நோக்கி நோக்கி,Nokki nokki - எல்லாத் திசைகளிலும் பார்த்து எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - எனது நெஞ்சுக்குள்ளே நாக்கு நீள்வன்,Naakku neelvan - நாக்கை நீட்டுகின்றேன் (ஆசைப்படுகிறேன்) ஞானம் இல்லை,Gnanam illai - இப்படிப்பட்ட நான் விவேகமற்றவனத்தனை. |
| 3079 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே; நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய, ‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்; பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி, பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; -பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்ல விருக்கிறார்.) 7 | அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து, பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ; நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7 | நறுதுழாயின் கண்ணி அம்மா,Naruthuzhaayin kanni amma - பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே! நான் உன்னை கண்டுகொண்டு,Naan unnai kandukondu - நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று அறிந்து அறிந்து,Arindhu arindhu - உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து தேறி தேறி,Thaeri thaeri - மிக்க தெளிவையுடையேனாகி யான்,Yaan - இப்படித் தெளிவுபெற்ற நான் எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - என் நெஞ்சுக்குள்ளே நிறைந்த ஞானம் மூர்த்தியாயை,Niraindha gnanam moorthiyaayai - பரிபூர்ண ஜ்ஞானஸ்வரூபனான உன்னை நின்மலம் ஆக வைத்து,Ninmalam aaga vaithu - விசதமாக அநுபவித்து பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்,Piranthum setthum nindru idarum paedhaimai theerndhu ozhindhaen - பிறப்பதும் சாவதுமாயிருந்து படுகிற அஜ்ஞான ஸம்ஸாரத்தைத் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன். |
| 3080 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பெற்ற உபகாரங்களைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; இனிப் பெறவேண்டுமது தன்னைப் பேசுகிறார் இப்பாட்டில். இந்த ஸம்ஸார நிலந்தன்னிலேயே உன்னைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளுஞ் செய்து உஜ்ஜீவிக்கும்படி அருள் புரிய வேண்டு மத்தனையே அபேஷிதமென்கிறார்.) 8 | கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல் எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து, தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8 | வண் துழாயின் கண்ணிவேந்தே!,Van thuzhaayin kanniveendhe - அழகிய திருத்துழாய்மாலையையுடைய நாயனே! கண்டுகொண்டு,Kandugondu - (நெஞ்சினால் காண்கையன்றிக்கே) கண்ணாரக் கண்டு என் கைகள் ஆர,En kaigal aara - எனது கைகள் ஆவல் தீரும்படி நின் திருபாதங்கள் மேல்,Nin thirupaathangal mel - உனது திருவடிகளின் மீது எண் திசையும் உள்ள பூ கொண்டு,En dhisayum ulla poo kondu - எங்குமுள்ள புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு ஏத்தி,Yaethi - தோத்திரஞ்செய்து பரிமாறி உகந்து உகந்து,Ugandhu ugandhu - மிகவும் உகந்து தொண்ட ரோங்கள்,Thondarongal - அடியோரமான நாங்கள் பாடி ஆட,Paadi aada - பாடுவதாடுவதாம்படி கடல் சூழ் ஞாலத்துள்ளே,Kadal soozh gnaalathullae - கடல் சூழ்ந்த இந்நிலவுலகுக்குள்ளே வந்திடகில்லாயே,Vandhidakillaaye - (என் கண்முகப்பே) வந்து நிற்க மாட்டேனென்கிறாயே |
| 3081 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்? அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும் அந்வயமில்லாதிருக்கின்ற நான் கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது) 9 | இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்; கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்; மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த் தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9 | ஒன்று இடகிலேன்,Ondru idakillaen - (இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்; ஒன்று அட்டகில்லேன்,Ondru attakillaen - (தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்; ஐம் புலன்,Aimpulan - இந்திரியங்களைந்தையும் வெல்லகில்லேன்,Vellakillaen - பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்; கடவன் ஆகி,Kadavan aagi - நியதியுடையவனாகி காலம் தோறும்,Kaalam thorum - உரிய காலங்களிலே பூ பறித்து ஏத்தகில்லேன்,Poo parithu yaethakillaen - புஷ்பங்களை ஸம்பாதித்து அர்ச்சித்துத் துதித்தறியேன்; மடம் வல் நெஞ்சம்,Madam val nenjam - (இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்) மூர்க்கத்தனமும் கடினத்தன்மையும் பொருந்தின நெஞ்சானது காதல் கூர,Kaadhal koora - ஆசை விஞ்சிவரப்பெற்று வல் வினை யேன்,Val vinai yaen - மஹாபாபியான நான் அயர்ப்பு ஆய்,Ayarppu aai - அவிவேகியாய் சக்கரத்து அண்ணலை,Sakkarathu annalai - சக்கரபாணியான எம்பெருமானை தடவுகின்றேன்,Thadavugindren - காணத்தேடுகின்றேன்; எங்கு காண்பன்,Engu kaanban - எங்கே காணக்கடவேண்? |
| 3082 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யுக்தமே; அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ; அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸ ஜ்ஞானத்திற்கு விஷயமாகிக் கொண்டிருக்கிறானே! இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.) 10 | சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப, பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்; மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10 | சக்கரத்து அண்ணலே என்று,Sakkarathu annale endru - கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி தாழ்ந்து,Thaazhnthu - அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து கண்நீர் ததும்ப,Kannir thadhumba - கண்ணீர்மல்க பக்கம் நோக்கி நின்று,Pakkam noakki nindru - சுற்றும் பார்த்து நின்று அலந்தேன்,Alandhen - தளர்ந்தவனான பாவியேன்,Paavi yaen - பாவியானநான் காண்கின்றிலேன்,Kaangindrilaen - காணப்பெறுகின்றிலேன்: (காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ) மிக்க ஞானம் மூர்த்தி ஆய,Mikka gnanam moorthi aai - மிகுந்த ஞானஸ்வரூபனாய் வேதம் விளக்கினை,Vedham vilakkina - வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை என் தக்க,En thakka - எனக்கேற்ற ஞானம் கண்களாலே,Gnanam kangalaale - ஞானமாகிற கண்ணாலே கண்டு தழுவுவனே,Kandu thazhuvuvane - கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே! (எப்படி மறக்கமுடியும்?) |
| 3083 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) ((தழுவிநின்ற.) இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.) 11 | தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக் குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும் தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11 | தழுவி நின்ற,Thazhuvi nindra - விட்டு நீங்காத காதல் தன்னால்,Kaadhal thannal - (பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே தாமரை கண்ணன் தன்னை,Thamarai kannan thannai - செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து குழுவு மாடம் தென்குருகூர்,Kuzhuvu madam thenkurugur - திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான மாறன் சடகோபன்,Maran sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த வழு இலாத,Vazhu ilaadha - குறையற்ற ஒண் தமிழ்கள்,On tamilkal - அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய ஆயிரத்துள்,Ayirathul - ஆயிரம் பாட்டினுள் இ பத்தும்,I pathum - இத்திருவாய்மொழியை தழுவ,Thazhuva - கருத்தோடுகூட பாடி,Paadi - இசைபாடி ஆட வல்லார்,Aada vallaar - களித்துக் கூத்தாடவல்லவர்கள் கைகுந்தம் ஏறுவர்,Vaikundham yeruvar - திருநாட்டில் ஏறப்பெறுவர்கள். |