Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: சென்னியோங்கு (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
463பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 1
சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1
சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண், Than - குளிர்ந்த
திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை
உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை
வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக
நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற
நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா, Thamodhara - தாமோதரனே!
சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும்
உன், Un - உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின், Nin - உன்னுடைய
அருளே, Arule - கருணையே
புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்
இனி, Ini - இப்படியான பின்பு
திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து
என், En - எதுவாயிருக்கின்றது?
464பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 2
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2
பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான
பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே!
நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது
இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு
வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது
அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற
அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது
465பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 3
எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3
எம் மனா, Em mana - எமக்குத் தலைவனே!;தாய் ; மன்னன்
என் குல தெய்வமே, En kuladeivame - என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே, Ennudaiya naayagane - எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய், Ninnulen ai - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும், Naatil ulla ella paavangalum - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்;நாடு சாஸ்திரம் என்றுமாம்
சும்மெனாதே, Summenaathe - மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை, Petra nanmai - பெற்ற நன்மையை
இ உலகினில், I ulaginil - இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார், Aar peruvaar - மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல, Namman pol - பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும், Veezhndhu amukkum - கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு, Kai vittu - ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி, Odi - ஓடிப் போய்
தூறுகள், Thoorugal - புதர்களில்
பாய்ந்தன, Paaindhana - ஒளிந்து கொண்டன
466பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 4
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4
தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற
தோள், Thol - தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே, Sevakane - வீரனே!
கடல், Kadal - திருப் பாற் கடலை
கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை, Kalasathai - கலசத்தில்
நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல
உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு
உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்
கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும், Kootramum - யமனும்
என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன்
467பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 5
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5
என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர், En uyir - என் ஆத்மாவை
காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை
நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல
உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன்
உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள் , Ennul - என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன்
என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன்
468பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 6
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6
மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க, Adanga - அழியும்படி
மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய
விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல்
எல்லாம், Ellaam - எல்லாவற்றையும்
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன்
எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்)
என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி
இனி , Ini - இனி மேல்
போகின்றது, pogindrathu - போவதானது
எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து?
469பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 7
பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7
பருப்பதத்து, Paruppadhathu - மகா மேரு பர்வதத்தில்
கயல், Kayal - (தனது) மகர த்வஜத்தை
பொறித்த, Poritha - நாட்டின்
பாண்டியர் குல பதி போல், Pandiyar kula pathi pol - பாண்டிய வம்சத்து அரசனைப் போல்
திருப் பொலிந்து, Thiru polindhu - அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி, Se adi - செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல், En chenniyin mel - என் தலையின் மீது
பொறித்தாய் என்று, Porithaai endru - (அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்
மருப்பு ஒசித்தாய் என்று, Maruppu osithaai endru - (குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்
மல், Mal - மல்லரை
அடர்ந்தாய் என்று, Adarndhaai endru - நிரஸித்தவனே! என்றும்
உன் வாசகமே, Un vaasagame - (இவ்வாறான) உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை, Uru polindha naavinenai - தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை
உனக்கு, Unakku - உனக்கு
உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே
470பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 8
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8
நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே!
எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி
வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய்
என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில்
நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன்
471பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 9
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9
பனி, Pani - குளிர்ந்த
கடலில், Kadalil - திருப்பாற் கடலில்
பள்ளி கோளை, Palli kolai - பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு, Pazhaga vittu - பழகியதாக விட்டு (மறந்து விட்டு) (பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது; சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே: குகன் இடம் பெருமாள்)
ஓடி வந்து, Odi vandhu - (அங்கு நின்றும்) ஓடி வந்து
என், En - என்னுடைய
மனம் கடலில், Manam kadalil - ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல, Vaazha valla - வாழ வல்லவனும்
மாயம் , Maayam - ஆச்சரிய சக்தியை யுடையவனும்
மணாள, Manaala - (பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ, Nambi - குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று, Thani kadal endru - ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று, Thani sudar endru - ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று, Thani ulagu endru - ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை)
உனக்கு இடம் ஆய் இருக்க, Unakku idam aai irukka - உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை, Ennai - (மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு, Unakku - உனக்கு
உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)
472பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 10
தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10
தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல
சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும்
மதிள், Madhil - மதில்களை யுடைய
துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு
என் பால், En paal - என்னிடத்தில்
இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)
473பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 11
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11
வேயர் தங்கள், Veyar thangal - வேயர் வைதிகர்களுடைய
குலத்து, Kulathu - வம்சத்து (வைதிகர் குலம்)
உதித்த, udhitha - அவதரித்த
விட்டு சித்தன், Vittu Chithan - பெரியாழ்வாருடைய
மனத்து, Manathu - ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட, kovil konda - திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை, Kovalanai - கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை, kozhu kulir mugil vannanai - கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்
ஆயரேற்றை, Aayarerrai - இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை, Amarr kovai - நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர், Andhanar - சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை, Amudhathinai - அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம், Paada vallaar thaam - (இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல, Saayai pola - நிழல் போல
அணுக்கர்களே, Anukkargale - (எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்