Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: சொன்னால் விரோதமிது (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2985திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (வேறு சிலரைக் கவி பாடுகின்றவர்களுக்கு ஹிதமுரைக்க இழிந்த ஆழ்வார் அவர்களுக்கு ருசி பிறக்கைக்காகத் தம்முடைய மதத்தை முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்.) 1
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1
இது,Idhu - இப்போது நான் சொல்லும் ஹிதவார்த்தையானது
சொன்னால்,Sonnal - சொல்லப்படுமாகில்
விரோதம்,Virodham - உங்களுக்கு அநிஷ்டமாக இருக்கும்
ஆகிலும்,Aagilum - ஆனாலும்
சொல்லுவன்,Solluvan - உங்கள் அநர்த்தத்தைப் பொறுத்திருக்கமாட்டாமையினால் சொல்லியே தீர்வேன்
கேண்மின்,Kenmin - காது கொடுத்துக்கேளுங்கள்
வண்டு,Vandu - வண்டுகளானவை
தென்னா தெனா என்று,Thennaa thenaa endru - தென்னா தென்னாவென்று ரீங்காரஞ் செய்யப்பெற்ற
திருவேங்கடத்து,Thiruvengadathu - திருமலையிலே
என் ஆனை,En aanai - என்னுடைய யானை போன்றவனும்
என் அப்பன்,En appan - எனக்கு மஹோபகாரகனுமான
எம்பெருமான்,Emperumaan - ஸ்வாமி
உளன் ஆக,Ulan aaga - என் கவிக்கு இலக்காயிருக்கும்போது
என் நாவில் இன் கவி,En naavil in kavi - எனது நாவினின்று உண்டான மதுரமான கவிகளை
யான்,Yaan - நான்
ஒருவர்க்கும்,Oruvarkkum - வேறொருவர்க்கும்
கொடுக்கிலேன்,Kodukkilaen - கொடுக்கமாட்டேன்
2986திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (உண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத் கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார்.) 2
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2
குளன் ஆர்,Kulan aar - குளங்கள் நிறைந்த
கழனி சூழ்,Kazhani soozh - கழனிகளால் சூடுப்பட்ட
கண்,Kann - இடமகன்ற
நன்,Nan - விலக்ஷணமான
குறுங்குடி,Kurungudi - திருக்குறுங்குடியிலே
மெய்ம்மை,Meimmai - ஸௌலப்யம் முதலிய குணங்களோடு கூடி உண்மையாக
உளன் ஆய,Ulan aay - உறைபவனான
எந்தையை எந்தை பெம்மானை ஒழிய,Endhaiyai endhai pemmaanai ozhiyya - என் குலநாதனைத் தவிர
தன்னை,Thannai - அஸத்கல்பனான தன்னை
உளன் ஆகவே,Ulan aagavae - ஸத்தானவனாகவே கொண்டு
ஒன்று ஆக எண்ணி,Ondru aaga enni - ஒரு பொருளாக நினைத்து
நன் செல்வத்தை,Nan selvaththai - தன்னதாக அபிமானித்த அற்ப செல்வத்தை
வள் ஆ,Val aa - மிகவும் மேம்பாடாக
மதிக்கும்,Mathikkum - எண்ணியிருக்கிற
இம் மானிடத்தை,Im maanidaththai - இந்த அற்ப மனிதர்களை
கவி போடி என்,Kavi podi en - கவி பாடுவதனால் என்ன பலன்?
2987திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரம விலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்ப மனிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார்.) 3
ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3
ஒழிவு ஒன்று இல்லாத,Ozhivu ondru illaadha - ஒழிவு சிறிதுமில்லாத
பல ஊழி ஊழிதோறு,Pala oozhi oozhithooru - காலத்துவமுள்ளதனையும்
நிலாவ,Nilaava - நிலைநின்று அநுபவிக்கும்படி
போம்,Pom - செல்லக்கடவதான
வழியை,Vazhiyai - வழிபாடாகிய கைங்கரியத்தை
தரும்,Tharum - தந்தருள்கின்ற
நங்கள் வானவர் ஈசனை நிற்க போய்,Nangal vaanavar eesanai nirka poay - நமது தேவாதி தேவனான பெருமானிருக்க, அவனையுமேக்ஷித்து
கழிய மிக நல்ல,Kazhiya miga nalla - மிகவும் இனிய
வான் கவி கொண்டு,Vaan kavi kondu - திவ்யாமன கவிகளைக் கொண்டு
புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே!
இழிய கருதி,Izhiya karuthi - அதோகதியையடைய நினைத்து
ஓர் மானிடம்,OrMaanidam - அற்ப மனிதர்களை
பாடல்,Paadal - பாடுதலால்
ஆவது என்,Aavadhu en - (உங்கட்கு) உண்டாகும் பயன் யாது?
2988திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியான அஸ்திரங்களைக் கவிபாடுவதில் என்ன பயனுண்டென்கிறார்.) 4
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4
புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே!
மன்னா,Manna - அல்பாயுஸ்ஸுக்களான
மனிசரை,Manisarai - மனிதர்களை
பாடி,Paadi - கவிபாடி
படைக்கும்,Padaikkum - (அதனால்) நீங்களடைகின்ற
பெரும்பொருள்,Perumporul - பெருஞ்செல்வம்
என் ஆவது,En aavadhu - யாதாவது?
எத்தனை நாளைக்கு போதும்,Eththanai naalaikku poadhum - (அது) எத்தனை நாளைக்குப் பற்றும்?
வின் ஆர்,Vin aar - ஒளிநிறைந்த
மணி முடி,Mani mudi - மணிமகுடத்தை யுடையவனான
விண்ணவர்தாதையை,Vinnavarthaathaiyai - தேவாதி தேவனை
பாடினால்,Paadinaal - கவிபாடினால் (அப்பெருமான் உங்களை)
தன் ஆகவே கொண்டு,Than aagavae kondu - தனக்கு அடிமையாகவே கொண்டு
சன்மம் செய்யாமையும் கொள்ளும்,Sanmam seiyyaamaiyum kollum - இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன்.
2989திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஹேயகுணம் மலிந்த நீசரை விட்டு, ஸமஸ்தகல்யாண குணாத்மகனாய் நம் அபேக்ஷிதமெல்லாம் தரவல்லவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோளென்கிறார். பிறரைக் கவி பாடுவது ஒரு பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வயம் ப்ரயோஜனமாகவன்றே; அப்படி நீங்கள் கருதுகிற பிரயோஜனம் பெறுவதில்லை என்று முந்துற முன்னம் அருளிச் செய்கிறார்-பாவிகள் உள்ளத்திற்பதிவதற்காக) 5
கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5
கொள்ளும் பயன் இல்லை,Kollum payan illai - நீங்கள் பெறும் பலன் சிறிது மில்லையாம்படி
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,Kuppai kilarththanna selvaththai - குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து
வள்ளல் புகழ்ந்து,Vallal pugazhndhu - உதாரனே! என்று கொண்டாடி
நும் வாய்மை இழக்கும்,Num vaaimai izhakkum - உங்களுடைய ஸத்யத்தையிழந்தொழிகிற
புலவீர்காள்,Pulaveerkaal - புலவர்களே!
கொள்ள,Kolla - நீங்கள் பாடுகிற துதி மொழிகளைப் பொருத்தமாகக் கொள்ளவல்ல பூர்த்திரயையுடையவனும்
வேண்டிற்று எல்லாம் தரும்,Vendrittu ellaam tharum - வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும்
கோது இல்,Kodhu il - குற்ற மற்றவனும்
என் வள்ளல்,En vallal - என் விஷயத்தில் மஹோபகாரங்கள் செய்தவனும்
மணிவண்ணன் தன்னை,Manivannan thannai - நீலமணி வண்ணனுமான பெருமானை
கவி சொல்ல,Kavi solla - கவி பாட
வம்மின்,Vammin - வாருங்கள்.
2990திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஜீவனம் உஜ்ஜீவனம் என்று இரண்டுண்டு; எம்பெருமான் திறத்துக் கவிபாடினால் உஜ்ஜீவிக்க வழியுண்டெனினும், ஜீவிக்கவழி தேடுகிற நாங்கள் வரஸ்துதிகளிலே இழிகிறோம் என்று சிலர் சொல்லுவதாகக் கொண்டு நீசரைக் கவிபாடி ஜீவிப்பதிற் காட்டிலும் உடம்பு நோவத் தொழில் செய்து ஜீவித்தல் நன்று என்கிறார்.) 6
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6
புலவீர்,Pulaveer - புலவர்களே!
வம்மின்,Vammin - (நரஸ்துதியை விட்டு) வாருங்கள்;
நும் மெய்,Num mei - உங்களது உடலை
வருத்தி,Varuththi - சிரமப்படுத்தி
கை செய்து,Kai seithu - தொழில் செய்து
உய்ம்மின்,Uymmmin - ஜீவியுங்கோள்:
மன்,Man - (ப்ரவாஹரூபேண) நித்யமாயிருக்கின்ற
இ உலகினில்,I ulagil - இந்த லோகத்தில்
செவ்வர்,Sevvar - (உங்களுக்குப் போதுமானவை கொடுக்கவல்ல) ஸ்ரீமான்கள் கிடையார்;
இப்போது நோக்கினோம்,Ippoathu nokkinom - (இதனை) இப்போது ஆராய்ந்து அறிந்தோம்;
நும்,Num - உங்களுடைய
இன் கவி கொண்டு,In kavi kondu - மதுரமான கவிகளைக் கொண்டு
நும் நும்,Num num - உங்களுங்களுடைய
இட்டா தெய்வம்,Ittaa deivam - இஷ்ட தெய்வத்தை
ஏத்தினால்,Yaeththinaal - துதி செய்தால் (அந்தத் துதிமொழிகளிற் கூறும் குணங்கள் அவர்களிடத்து இல்லாமையாலே அவை)
செம் மின் சுடர் முடி,Sem min sudar mudi - செவ்வனே மின்னுகின்ற வொளி பொருந்திய திருமுடியை யுடைய
என் திருமாலுக்கு,En thirumaalukku - எனக்கு ஸ்வாமியான லக்ஷ்மீநாதனுக்கு
சேரும்,Serum - அந்வயிக்கும்.
2991திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (கீழ் ஆறு பாசுரங்களினால் பரோபதேசம் செய்தருளின ஆழ்வார், தம் உபதேசம் கேட்டு ஒருவரும் திருந்தக காணாமையாலே வெறுத்து அவர்களைவிட்டு, எம்பெருமானை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகையாகிற பாவம் எனக்கு இல்லையாகப் பெற்றதே! என்று தம்மளவிலே தாம் உகந்து பேசுகிறார். “வழிபறிக்கும் நிலத்தில் தன்கைப் பொருள்கொண்டு தப்பினவன் உகக்குமாபோலே, இவர்களைப் போலன்றியே பகவத் விஷயத்தை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் க்ஷமனன்றிக்கே யொழியப்பெற்றேனென்று ப்ரீதராகிறார்” என்பது நம்பிள்ளை ஈடு.) 7
சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7
சேரும்,Serum - தனக்குத் தகுதியான
கொடை புகழ்,Kodai pugazh - ஔதார்யத்தினாலாகிய புகழுக்கு
எல்லை இலானை,Yellai ilaanai - எல்லையில்லாதிருப்பவனும்
ஓர் ஆயிரம் பேரும் உடைய,OrAayiram perum udaiya - ஆயிரந் திருநாமங்களையுடைய உபகாரநனுமான
பிரானை அல்லால்,Piraanai allaal - எம்பெருமானை யன்றி
பாரில்,Paril - பூமியில்
மற்று ஓர் பற்றையை,Matru OrPatraiyai - வேறொரு அஸார பதார்த்தத்தைக் குறித்து
கை மாரி அனைய என்று,Kai maari anaiya endru - ‘கைகள் மேகம்போல் உதாரங்கள்’ என்றும்
திண் தோள்,Thin thol - உறுதியான புயங்கள்
மால் வரை ஒக்கும் என்று,Maal varai okkum endru - பெரிய மலைபோல்வன என்றும்
பச்சை பசும்பொய்கள் பேச யான் கில்லேன்,Pachchai pasumpoygal pesa yaan killeen - மெய் கலவாத புதுப் பொய்களைப் பேசுவதற்கு நான் சந்தனல்லேன்.
2992திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (நப்பின்னைப் பிராட்டியின் ஸம்ச்லேஷ விரோதிகளைத் தொலைத்து அவளை அடிமை கொண்டது போல என் விரோதிகளையும் தொலைத்து என்னை அடிமை கொள்பவனாக எம்பெருமானையொழிய வேறு சில நீசரைக் கவிபாட நான் நினைத்தாலும் என்வாய் அதுக்குப் பாங்காகாது என்கிறார்.) 8
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8
வேயின் மலிபுரை தோளி,Veyin malipurai tholi - மூங்கிலைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்ற தோள்கையுடையவளான
பிள்ளைக்கு,Pillaiyukku - நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை,Manaalanai - மணவாளனான கண்ணபிரானைக் குறித்து
எல்லை இலாதன,Yellai ilaadhana - நிரவதிகமாயும்
ஆய,Aaya - ஆராய்வதற்கு உரியனவுமான
பெரும்புகழ்,Perumpugazh - பெரிய கீர்த்திகளை
பாடி,Paadi - கவிபாடி
போய்,Poi - நெடுஞ்காலம் நடந்து
காயம் கழித்து,Kaayam kazhiththu - இவ்வுடலை யொழித்து
அவன் தான் இணை கீழ்,Avan than inai keezh - அவ்வெம்பெருமானது திருவடியிணையில்
புகும் காதலன்,Pugum kadhalan - அந்வயிக்க வேணுமென்கிற ஆசையையுடைய நான்
மாயம் மனிசரை,Maayam manisarai - பிராகிருதர்களான மனிசர்களை
என் வாய் கொண்டு,En vaai kondu - (எம்பெருமானையே துதிக்கக் கண்ட) எனது வாக்கைக் கொண்டு
என் சொல்ல வல்லேன்,En solla vallen - என்ன கவி பாடுவேன்? (யாதொன்றும் பாடமாட்டேன்.)
2993திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரமோதாரனான எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபாவமாகப் பண்ணப் பெற்ற வெனக்கு இதரஸ்துதிகளில் அதிகாரமில்லையென்கிறார்.) 9
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9
வாய்கொண்டு,Vaikonddu - (அருமையான) வாக்கைக் கொண்டு
மானிடம்,Maanidam - அற்பமனிதர்களை
பாட வந்த,Paada vandha - பாடப்பிறந்த
கவியேன் அல்லேன்,Kaviyen allen - கவி நானல்லேன்
ஆய்,Aay - (வேதாந்தங்களினால்) ஆராயப்பட்ட
சீர் கொண்ட,Seer kondda - திருக்குணங்களையுடைய
வள்ளல்,Vallal - உதாரனாகிய
ஆழி பிரான்,Aazhi praan - சக்கரக்கையனான பெருமான்
எனக்கே உளன்,Enakke ulan - என் வாக்குக்கே இலக்காகவுள்ளான். (அப்பெருமான்)
சாய் கொண்ட,Saai konda - அழகிய
இம்மையும்,Immaiyum - இஹலோகத்து அர்ச்சாவதார அநுபவத்தையும்
சாதித்து,Saadiththu - உண்டாக்கித்தந்து
வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று,Vaanavar naattaiyum nee kanddukol endru - பரமபதாநுபவத்தையும் நீ பெறுவாயாக என்று சொல்லி
வீடும்,Veedum - மோக்ஷ சுகத்தையும்
நின்று நின்று,Nindru nindru - அடைவு பட
தரும்,Tharum - கொடுத்தருள்வன்.
2994திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (தன்னைத் துதிப்பதற்கென்றே கரணகளேபரங்களைக் கொடுத்தருளினவனான எம்பெருமான் திறத்திலே கவிபாடப்பெற்ற வெனக்கு மற்றொருவரைக் கவிபாடுதல் ஏலாது என்கிறார்.) 10
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10
பல நாள்,Palanaal - அநேக காலம்
நின்று நின்று,Nindru nindru - இருந்து
உய்க்கும்,Uykkum - சேதுநனைத் தன் வசத்திலே யாக்குகின்ற
இ உடல்,eUdal - இந்த சரீரத்தை
நீங்கி போய்,Neengi poi - விட்டொழிந்து போய்
சென்று சென்று ஆகிலும்,Sendru sendru aagilum - இப்படியே பல பல ஜனன மரணங்கள் நடந்தபின்பாகிலும் (ஏதேனுமொரு காலத்தில்)
கண்டு,Kandu - தன்னைக் கண்டு
சன்மம்,Sanmam - பிறவியை
கழிப்பான்,Kazhipaan - கழிக்கக்கூடுமென்று
எண்ணி,Enni - திருவுள்ளம் பற்றி
ஒன்றி ஒன்றி,Ondri ondri - (ஒருகாலும் சோம்பிக் கைவிடாமல்) மேன்மேலும் ஊக்கங்கொண்டு
உலகம் படைத்தான்,Ulagam padaithaan - உலகங்களைப் படைத்து வருகின்ற எம்பெருமானுடைய
கவி ஆயினேற்கு,Kavi aayineerku - கவியாக அமைந்த எனக்கு
இனி என்றும் என்றும்,eni endrum endrum - இனி எந்நாளும்
மற்று ஒருவர் கவி,Matru oruvar kavi - வேறொருவரைக் கவிபாடுதல்
ஏற்குமே,Earkume - தகுமோ? (தகாது)
2995திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11
ஏற்கும் பெரும் புகழ்,Erkum perum pugazh - தனக்கு ஏற்றிருக்கின்ற மிக்க புகழுடையனாய்
வானவர் ஈசன் வண் குருகூர்ச் சடகோபன்,Vaanavar eesan van kurugoor Sadagopan - நித்யஸூரி நாதனான எம்பெருமான் ஏற்கும் பெரும்புகழ் குருகூர் சடகோபன்
சொல்,Sol - அருளிச்செய்த
ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - ஏற்ற பெரும்புகழையுடைய
ஆயிரத்துள்,Aayiraththul - இவ்வாயிரத்தினுள்
கண்ணன் தனக்கு,Kannnan thanakku - கண்ணபிரான் விஷயமாக
ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - தகுதியான சிறந்த புகழையுடைத்தான
இவை ஓர் பத்தும்,Evai OrPaththum - இந்தத் திருவாய்மொழியை
சொல்ல வல்லார்க்கு,Solla vallaarkku - ஓதவல்லவர்க்கு
சன்மம் இல்லை,Sanmam ellai - மறுபிறப்பு இல்லை