Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: திண்ணன் வீடு (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2796திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (கண்ணபிரானே உலகுக்கெல்லாம் நிர்வாஹகனென்கிறார். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவனாய், எண்ணிறந்த திருக்குணங்களையுடையனாய் அக்குணங்களைக்காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவனாய், பிரளயாபத்து வந்தபோது பூமி முதலான ஸகல லோகங்களையும் ஒருசேரத் திருவயிற்றிலே வைத்து நோக்குபவனான நமது கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன்) 1
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1
திண்,thin - திண்மையை யுடைய
நன்,nan - நல்ல
வீடு முதல்,veedu mudhal - மோக்ஷம் முதலாக
முழுதும் ஆய்,muzhudum aay - எல்லாவற்றையும் அளிப்பவனாய்
ஏண்ணின் மீதியன்,aennin meedhiyan - நினைவுக்கு அப்பாற்பட்டவனாய்
எம்பெருமான்,emperumaan - எமக்கு ஸ்வாமியாய்
மண்ணும் விண்ணும் எல்லாம்,mannum vinnnum ellaam - பூமியும் ஆகாசமுமாகிய முழுவதையும்
உடன் உண்ட,udan unta - ஒருங்கே அமுது செய்தவனான
நம் கண்ணன்,nam kannan - நமது கண்ணபிரானே
கண்,kan - (உலகுக்கு) இறைவன்
அல்லது,allathu - அல்லாமல்
ஓர்கண்,orkan - வேறொரு தலைவன்
இல்லை,illai - இல்லை
2797திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (“நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர்கண்ணே”— என்றருளிச் செய்த ஆழ்வாரை நோக்கிச்சிலர் ’இப்படிச் சொல்லலாமோ.? பிரமன் சிவன் முதலானாரும் ஈச்வரர்கள் என்று காட்டுகின்ற பிரமாணங்கள் இல்லையோ? என்ன; அவர்களது சரித்திரங்களை ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் ஈச்வரர்களாகத் தகுதியில்லை; ஆபத்து வந்த காலத்திலே அவர்களைக் காத்தருளினவனாக ப்ரஸித்தி பெற்ற எம்பெருமானே ஈச்வரன் என்று நிலைநாட்டுகிறாரிதில். *வேதாபஹார குருபாதக * இத்யாதி ஸ்தோத்ர ரத்த ஸ்ரீஸிக்திக்கு இப்பாசுரம் மூலம்.) 2
ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2
மா பாவம் விட,maa paavam vida - மிகப் பெரிதான (பிரமஹந்தி) பாபமானது விட்டு நீங்கும்படி
அரற்கு,ararku - சிவபிரானுக்கு
பிச்சை பெய்,picchai pei - பிக்ஷையிட்ட
கோபாலன்,gopaalan - கோபாலனென்கிற
கோள் அரி ஏறு அன்றி,kol ari eru andri - வலிமை தாங்கிய ஆண்சிங்கமல்லது (வேறொருவர்)
ஏழ் உலகும்,ez ulakum - ஏழுலகங்களையும்
ஈ பாவம் செய்து,ee paavam seythu - பாவம் தொலைந்ததாகச் செய்து
அருளால்,arulaal - கிருபையினாலே
அளிப்பார்ஆர்,alippaarAar - காப்பவருண்டோ?
ஏ பாவம்,e paavam - ஐயோ?
பரமே,parame - எம்பெருமானது ஏற்றத்தைச் சொல்லிமுடித்தல் நம்மாலாகுமோ?
2798திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (அயர்வறுமமரர்கள் தன்னுடைய சீலகுணத்தைக் கண்டு தொழுகைக்காக ஸர்வேச்வாரியான பெரிய பிராட்டியாரோடொக்கப் பிரமன் முதலானார்க்கும் தன்னை ஆச்ரயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கையாலும், ஸகல லோகங்களும் திருவடிகளினுள்ளே யடங்கும்படி அளந்தருளுகையாலும் இவனே ஸர்வேச்வரன், வேறில்லை யென்கிறார்.) 3
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3
ஏறனை,aeraanai - ரிஷப வாஹனனான ருத்ரனையும்
பூவளை,poovaalai - தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையனான பிரமனையும்
பூ மகள் தன்னை , poo magal thanai - அலர்மேல் மங்கையான ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்
வேறு அன்றி,veru andri - வேறாக அல்லாதபடி
தன் உள்,than ul - தனது திருமேனியில்
விண் தொழ,vin thozha - விண்ணுளார் தொழும்படி
வைத்து,vaithu - இடங்கொடுத்து வைத்தவனாயும்
மேல் தன்னை,mel thanai - மேலுலகத்தை
மீதிட,meedhida - மேலிடும்படி
நிமிர்ந்து,nimirndhu - வளர்ந்து
மண்,man - பூமியை
கொண்ட,konda - அளந்து கொண்டவனாயுமிரா நின்ற
மால் தனில் மிக்கும்,maal thanil mikkum - ஸர்வேச்வரனுக்கு மேற்படவும்
ஓர்தேவும் உளதே,oartevum uladhe - ஒரு தெய்வமும் உண்டோ?
2799திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (பூ அணிதற்கு ஈடான ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களும், பூஜையீடு தற்கீடான முதன்மையும் எம்பெருமானுக்கன்றி வேறு சிலர்க்கு இல்லாமையாலே அவனே ஸர்வேச்வரனென்கிறார்.) 4
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4
தேவும்,Thevum - தேவர்களையும்
எப்பொருளும்,epporulum - மற்றெல்லாப் பொருள்களையும்
படைக்க,padaikka - ஸ்ருஷ்டிக்க
பூவில்,poovil - (திருநாபிக்) கமலத்திலே
நான்முகனை,naanmuganai - பிரமனை
படைத்த,padaitha - உண்டாக்கின
தேவன்,thevan - பர தெய்வமாகிய
எம்பெருமானுக்கு அல்லால்,emperumaanukku allaal - எமது ஸ்வாமிக்கே யன்றி (வேறு சிலர்க்கு)
பூவும்,poovum - புஷ்பங்களும்
பூசனையும்,poosanaiyum - திருவாராதனமும்
தகுமே,thagume - தகுமோ ? (தகாது)
2800திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (எம்பெருமானுக்குப் பரத்வ ஸ்தாபங்களானவற்றுக்குள்ளே புண்டாரிகாக்ஷத்வமும் ஒன்றாதலால் அதனை இங்கு அருளிச்செய்கிறார்.) 5
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5
தகும்,Thagum - தகும் (ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குத்) தகுதியான
சீர்,Seer - (சிறந்த ஞானம் முதலிய ) குணங்களையுடையனான
தன்,Than - தன்னுடைய
தனி,Thani - ஒப்பற்ற
முதலினுள்ளே,Mudhalinule - உலக காரணமான ஸங்கல்பத்திற்குள்ளே
மிகும்,Migum - மிகுந்த
தேவும்,Thevum - (பிரமன் முதலிய) தேவர்களையும்
எப்பொருளும்,Epporulum - (மணிசர் முதலிய) மற்றெல்லாப் பொருள்களையும்
படைக்க,Padaikka - படைப்பதற்கு
தகும்,Thagum - தகுதி பொருந்தியவனும்
கோலம் தாமரை கண்ணன்,Kolam thamarai kannan - அழகிய புண்டாரிகாக்ஷனுமாகிய
எம்மான்,Emmaan - எம்பெருமானைவிட
மிகும்சோதி,Migumsothi - மிகுந்த ஒளி பொருந்திய
மேல்,Meel - மேலான பொருளை
அறிவார்யவர்,Arivaaryavar - அறிபவர் யாவர்?
2801திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷக்கையாலே அவனே ஈச்சரனென்கிறார்.) 6
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6
யவரும்,Yavarum - சேதனர்கள் யாவரும்
யாவையும்,Yaavaiyum - அசேதனங்கள் யாவையும்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - ஆகிய எல்லாப் பொருள்களும்
கவர்வு இன்றி,Kavarvu indri - நெருக்கமின்றியே
தன்னுள்,Thannul - தனது திருவயிற்றினுள்ளே
ஒடுங்க நின்ற,Odungu ninra - அடங்கும்படி நின்றவனும்
பவர் கொள்,Pavar kol - பரப்பைப்கொண்ட
ஞானம் வெள்ளம்,Gnaanam vellam - ஞானமிகுதியை
சுடர்,Sudar - தனக்குக் காந்தியாகவுடைய
மூர்த்தி,Moorthi - ஸ்வாமியுமான
அவர்,Avar - அந்த ஸர்வேச்வரன்
எம்,Em - எமது அநுபவத்திற்குரிய
அம்,Am - அழகிய
ஆழி பள்ளியார்,Aazhi palliyar - ப்ரளயார்ணவ சயநராவர்
(ஆழியம்பள்ளியார் = திருப்பாற்கடலிற் கிடந்த கிடையைச் சொல்லவுமாம்
ப்ரளயார்ணவத்திலே ஆபத் ஸகனாய்க் கண் வளர்ந்தபடியைச் சொல்லவுமாம்)
2802திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸகல லோகங்களுக்கும் ஆபத்திலே இடங்கொடுக்கையாகிற சிறந்த ஔதார்யத்தையடையனாய், ஸகல லோகத்தையம் திருவயிற்றிலே வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான ஸர்வேச்வரனுடைய திவ்ய சேஷ்டிதங்களை ஆர்அறிய வல்லார்? என்னும் முகத்தாலே, இப்படிப்பட்ட அகடிதகடநா ஸமர்த்தனுக்கே ஸர்வேச்வரத்வம் தகும் என்கிறாராயிற்று) 7
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7
பள்ளி,Palli - படுக்கை
ஆல் இலை,Aal ilai - ஆலந்தளிராக
ஏழ் உலகும்,Ezh ulagum - ஏழுலகங்களையும்
கொள்ளும்,Kollum - கொள்ளக் கடவதான
வல்,Val - உறுதியான
வயிறு,Vayiru - திருவயிற்றையுடையனான
பெருமான்,Perumaan - பெரியோனாகிய
அவன் தன்,Avan than - அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய
கள்ளம்,Kallam - ஒருவராலுமறியக்கூடாததான
மாயம்,Maayam - ஆச்சரீரயமான
மனம் கருத்து,Manam karuthu - திருவுள்ளக்கருத்தை
உள்ளுள்,Ullul - மனத்தினால்
அறிவார்ஆர்,Arivaarar - அறியவல்லவர் யாவர்?
2803திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாக வுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்துமென்கிறார்.) 8
ருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8
கருத்தின்,Karuthin - தனது ஸங்கல்பத்தினாலே
தேவும்,Thevum - தேவர்களையும்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - மற்றெல்லாப் பொருள்களையும்
வருத்தித்த,Varutthitha - வ்ருத்தி செய்த (உண்டாக்கின)
மாயம்,Maayam - ஆச்சரீரயமான சக்தி முதலியவற்றையுடைய
பிரானை அன்றி,Piraanai andri - எம்பிரானைத் தவிர்த்து
மூ உலகும்,Moo ulagum - மூவுலகங்களையும்
திண் நிலை,Thin nilai - உறுதியான நிலைமையை யுடையனவாக
திருத்தி,Thiruththi - அமைத்து
தம் உள்,Tam ul - தம் நினைவுக்குள்ளே
இருத்தி,Iruththi - வைத்து
காக்கும்,Kaakkum - காப்பாற்றுவதையே
இயல்வினர்,Iyalvinar - இயற்கையாகவுடையவர்
ஆர்,Aar - எவர் ?
2804திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் மூன்றும் இவனிட்ட வழக்காகையாலும் இவனே யீச்வரனென்கிறார்.) 9
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9
காக்கும் இயல்வினன்,Kaakkum iyalvinan - ரக்ஷரிப்பதையே தொழிலாகவுடைய
கண்ண பெருமான்,Kann perumaan - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
சோக்கை செய்து,Sokkai seydhu - (ஸம்ஹார ஸமயத்துலெ எல்லாம் தன்னிடத்துச்) சேரும்படி செய்து
தன் உந்தி உள்ளே,Than undhi ulle - தனது திருநாபிக்குள்ளே
வாய்த்த,Vaaytha - ஸ்ருஷ்டி காரியத்திற்கு யோக்யனான
திசைமுகன்,Thisai mukan - நான்முகனையும்
இந்திரன்,Indiran - இந்திரனையும்
வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களையும்
தெய்வ உலகுகள்,Theiva ulagukal - (அவர்கட்கு இருப்பிடமான) திவ்யலோகங்களையும்
ஆக்கினான்,Aakkinan - உண்டாக்கினான்.
2805திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே என்கிறார்.) 10
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10
வெள் ஏறன்,Vel yeran - வெளுத்த எருதை வாஹனமாகவுடைய சிவபிரானும்
நான்முகன்,Naanmugan - பிரமனும்
இந்திரன்,Indiran - இந்திரனும்
வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களும (ஒன்று கூடி)
கள்வா,Kalva - “கள்வனே!
எம்மையும்,Emmayum - எங்களையும்
ஏழ் உலகும்,Ezhu ulagum - ஏழுலகங்களையும்
நின் உள்ளே,Nin ulle - உனது ஸங்கல்பத்தினுள்ளே
தோற்றிய,Thotriya - தோன்றுவித்த
இறைவ,Iraiva - ஸ்வாமியே!”
என்று,Enru - என்று சொல்லி
புள் ஊர்தி,Pul oorthi - கருட வாஹனனாகிய ஸர்வேச்வரனுடைய
கழல்,Kalzal - திருவடிகளை
பணிந்து,Paninthu - வணங்கி
ஏத்தவர்,yetthavar - துதிப்பர்
2806திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (இத் திருவாய் மொழியைக் கருத்துடனே கற்று வல்லார்க்கு, எம்பெருமான் ஈச்வரனல்லன்’ என்று புத்தி பண்ணுதல். ‘இதர தேவதைகள் ஈச்வரர்கள்’ என்று புத்தி பண்ணதல் ஆகிற அவத்யமொன்றும் உண்டாகமாட்டாதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11
ஏத்த,yetha - (அனைவரும் துதிக்க
ஏழ் உலகும் கொண்ட,Ezhu ulagum konda - எல்லா வுலகங்களையு மளந்து கொண்ட
கோலம் கூத்தனை,Kolam kootthanai - அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து
குருகூர்சடகோபன் சொல்,kurukoor sadagopan sol - ஆழ்வார் அருளிச் செய்த
வாய்த்த,Vaaytha - உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில்
இவை பத்து,Ivai pattu - இப் பத்துப் பாசுரங்களையும்
உடன்,Udan - அர்தத்தோடு (கற்று)
ஏத்த வல்லவர்க்கு,yetha vallavarkku - ஸ்துதி சொல்ல வல்லவர்கட்கு
ஓர் ஊனம் இல்லை,or oonam illai - ஒரு குறையுமில்லையாகும்