| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3062 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.) 1 | தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்! ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்; போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1 | அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே! இனி,Ini - இப்படிப்பட்ட நிலைமையான பின்பு தீர்ப்பாரை,Teerpaarai - இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை யாம் எங்ஙனம் நாடுதலும்,Yaam engganam naaduthalum - நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது) ஓர்ப்பால்,Oarpaal - நன்கு நிரூபிக்குமளவில் இ ஓள் நுதல்,Iol nuthal - அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை உற்ற இது,Uttra idhu - அடைந்திருக்கின்ற இந்த நோயானது நல் நோய்,Nal noy - விலக்ஷ்ணமான நோயாகும் ; தேறினோம்,Therinom - திண்ணமாக அறிந்தோம் ; அன்று,Andru - முன்பொருகாலத்திலே போர்,Pour - பாரதப்போரிலே பாகு,Paagu - பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை தான் செய்து,Thaan seydhu - தானே முன்னின்று நடத்தி ஐவரை,Aivarai - பஞ்சபாண்டவர்களை வெல்வித்த,Velvitha - ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த மாயம்,Mayam - ஆச்சரிய சத்தியுக்தரும் போர் தேர் பாகனார்க்கு,Pour ther paaganaarkku - யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே இவள்,Ival - இப்பராங்குச நாயகியினுடைய சிந்தை,Sindhai - மனமானது துழாய்,Thuzhaay - துழாவப்பெற்று திசைக்கின்றதுஎ,Thisaikkindradhue - அறிவழயா நின்றதே! |
| 3063 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (க்ஷுத்ர தெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்க வரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப் பெறலாமென்கிறாள்.) 2 | திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2 | (அன்னைமீர்),Annai meer - தாய்மார்களே!, திசைக்கின்றதே,Thisaikkindradhe - நீங்கள் இப்படியும் அறிவு கெடலாகுமோ? இவள் நோய் இது,Ival noy idhu - இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது மிக்க பெரு தெய்வம்,Mikha peru dheivam - பராத்பரமான தெய்வமடியாக வந்தது; இசைப்பு இன்றி,Isaippu indri - தகுதியில்லாதபடி நீர்,Neer - நீங்கள் அணங்கு ஆடும்,Anangu aadum - வெறியாடுவிக்கின்ற இள தெய்வம் அன்று இது,Ila dheivam andru idhu - க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்) திசைப்பு இன்றியே,Thisaippu indriye - மனக்குழப்பம் தவிர்ந்து நீர்,Neer - நீங்கள் இவள்கேட்க,Ival kaetka - இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக சங்கு சக்கரம் என்று,Sanghu sakkaram endru - சங்கென்றும் சக்கரமென்றும் இசைக்கிற்றிர் ஆகில்,Isaikkindrir aagil - சொல்ல வல்லீர்களானால் தன்றே,Thandre - நலமாகவே இல் பெறும்;,Elperum - (இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்: இது காண்மின்,Idhu kaanmin - இங்ஙனே நடத்திப் பாருங்கள். |
| 3064 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற பரிஹார முறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள்.) 3 | இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்! மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3 | அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே! இதுகாண்மின்,Idhu kaanmin - நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்; நீர்,Neer - நீங்கள் இ கட்டுவிச்சி சொல்கொண்டு,I kattuvischi solkondru - இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு எதுவானாலும் செய்து,Eduvaanalum seydhu - ஸ்வரூப விருத்தமானதைச் செய்து அங்கு,Angu - அவ்விடத்திலே ஓர் கள்ளும் இறைச்சியும்,OrKallum iraichiyum - ஹேயமான மதுவையும் மாம்சஸத்தையும் துர்வேல்மின்,Dhurveelmin - ஆராதனையாக வைக்கவேண்டர் மது ஆர்,Madhu aar - தேன் பொருந்தின துழாய்,Thuzhaai - திருத்துழாய் மாலையை முடி,Mudi - திருமுடியிலணிந்துள்ள மாயம் பிரான்,Maayam piraan - ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய கழல்,Kazhal - திருவடிகளை நோக்கி வாழ்த்தினால்,Vazhthinaal - மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே,Adhuvae - அதுதானே இவள் உற்ற நோய்க்கும்,Ival utra noykum - இப்பெண்பிள்ளையடைந் திருக்கிற நோய்க்கும் அரு மருந்து ஆகும்,Aru marundhu aagum - அருமையான மருந்தாகும். |
| 3065 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள்.) 4 | மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்? ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4 | (அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே! மருந்து ஆகும் என்று,Marundhu aagum endru - நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி ஓர் மாயம் அலவை சொல் கொண்டு,Or maayam alavai sol kondu - வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு நீர்,Neer - நீங்கள் கரு சோறும்,Karu sorum - கருஞ்சோற்றையும் மற்றை செம்சோறும்,Matrai semsorum - மற்றுள்ள செஞ்சோற்றையும் களன்,Kalan - நாற்சந்தியிலே இழைத்து,Izhaitthu - இடுவதனால் என் பயன்,En payan - என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;) உலகு ஏழும்,Ulaku ezhum - ஸப்தலோகங்களையும் ஒருங்கு ஆக எ,Orungu aaga e - ஒருகாலே விழுங்கி,Vizhungi - (பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு உமிழ்ந்திட்ட,Umiizhndittu - பிறகு வெளிப்படுத்தின பெரு தேவன்,Peru devan - பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய பேர்,Per - திருநாமங்களை சொல்ல கிற்கில்,Solla kirl - (இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால் இவளை பெறுதிர்,Ivalai peruthir - இவளை இழவாமே பெறுவீர்கள். |
| 3066 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (மகளுடைய நோய் தீரவேணு மென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதே யன்றித் தீரச்செய்கின்றதில்லையே: ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான பரிஹார முறைமை அனுஷ்டிக்கப் பாருங்களென்கிறாள்.) 5 | இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ! குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்; கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால் தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5 | அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே! இவளை,Ivalai - இப்பெண்பிள்ளையை பெறும்பரிசு,Perumparisu - (நோய்தீர்ந்து) நாம் பெறுதற்குரிய மார்க்கம் இ அணங்கு ஆடுதல் அன்று,I anangu aaduthal andru - வெறியாடுதலாகிற இக்காரியமன்று அந்தோ,Andho - ஐயோ!இ (இப்பெண்பிள்ளை) குவளை தட கண்ணும்,Kuvalai thada kannum - குவளை மலர்போன்றதாய் விசாலமான கண்களும் கோவை செம் வாயும்,Kovai sem vaayum - கோவைக்கனிபோன்று சிவந்த அதரமும் பயந்தனன்,Payandhanan - வைவர்ணியமடையப்பெற்றாள்: கவளம்,Kavalam - (இதற்குத்தகுந்த பரிஹாரமென்னவென்றால்) மதகரமான மருந்துகளைக் கவளங்கொண்டதாய் கடா,Kada - மதம் பெற்றதான களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை அட்ட,Atta - தொலைத்தருளின பிரான்,Piraan - ஸ்வாமியினுடைய திருநாமத்தால்,Thirunaamathaal - திருநாமோச்சாரண பூர்வகமாக தவளம் பொடி கொண்டு,Thavalam podi kondu - பரிசுத்தமான (ஸ்ரீவைஷ்ணவ பாத) தூளியைக் கொண்டு வந்து நீர் இட்டிடுமின்,Neer ittitumin - நீங்கள் (இவள்மேல்) துர்வுங்கோள் தணியும்,Thaniyum - (இவளதுநோய்) தீரும். |
| 3067 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார் “நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்க வுரைக்கின்றாளிப்பாட்டில்.) 6 | தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்! பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்; மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6 | அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே! தணியும்பொழுது இன்றி,Thaniyum pozhuthu indri - சிறிதும் ஓய்வு இல்லாமல் நீர் அணங்கு ஆடுதிர்,Neer anangu aaduthir - நீங்கள் வெறியாடுதலைச் செய்வியாநின்றீர்கள்; பிணியும் ஒழிகின்றது இல்லை,Piniyum ozhiginrathu illai - (இவ்வெறியாடலினால்) நோயோ தீர்கின்றதில்லை; இது அல்லால்,Ithu allaal - நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே பெருகும்,Perugum - மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது; இஅணங்குக்கு,I anangukku - இப்பெண்பிள்ளைக்கு மணியில் அணி நிறம்,Maniyil ani nirama - நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த மாயன்,Maayan - எம்பெருமானுடைய தமர்,Thamar - பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களினுடைய அடி நீறு கொண்டு,Adi neeru kondu - பாததூளியைக் கொண்டு வந்து அணிய முயலில்,Aniya muyalil - இடுவதற்கு முயற்சி செய்தால் மற்று இல்லை கண்டீர்,Matru illai kandeer - (இதோடொத்த பரிஹாரம்) வேறெதுவுமில்லைகிடீர். |
| 3068 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம். இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள். ஆடறுக்கவும் மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள்.) 7 | அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய், துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்! உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7 | அணங்குக்கு,Anangukku - இப்பெண்பிள்ளைக்கு அரு மருந்து என்று,Aru marunthu endru - அருமையான மருந்தென்று சொல்லி அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்,Angu or aadum kallum paraai - தேவதாந்தரத்திற்கு ஆடறுக்கவும் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து சுணங்கை எறிந்து,Sunangai erindhu - ஒருவகைக் கூத்தாடுதலையும் செய்வித்துக் கொண்டு நும் தோள் குலைக்க படும் அன்னைமீர்,Num thol kullaikka padum annai meer - தோள்கள் துடிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தாய்மார்களே! உணங்கல்கெட,Unangal kedu - (இந்தக் கூத்தாடுதலைக் கண்டு கொண்டிருப்பதும் ஒரு வேடிக்கையோ?) உலர்த்தின நெல் பாழாய்ப் போக கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்,Kazhuthai uthadu aattam kandu en payan - (அதனை மேய்கிற) கழுதையின் உதடு அசைகின்ற அழகைக் கண்டு கொண்டிருப்பதனால் ஒரு பயனுண்டோ? மாயன் பிரான்,Maayan praan - ஆச்சரிய சக்தியையுடையனான எம்பெருமானுடைய தமர்,Thamar - பக்தர்களான வேதம் வல்லாரை,Vedam vallaarai - வைதிகர்களை வணங்கீர்கள்,Vanangeerkaal - வணங்குங்கள். |
| 3069 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (வேத வித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக் கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மை யென்கிறாள்.) 8 | வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய், ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய், கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8 | (அன்னைமீர்),(Annai meer) - தாய்மார்களே! வேதம் வல்லார்களை கொண்டு,Vedam vallaarkalai kondu - வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு விண்னோர் பெருமான்,Vinnor perumaan - நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய திருபாதம்,Thirupaadham - திருவடிகளை பணிந்து,Panindhu - அச்ரயித்து இவள் நோய் இது,Ival noyi idhu - இவளுடைய இந்த நோயை தீர்த்துக்கொள்ளாது போய்,Theerthuk kollaadhu poyi - போக்கிக்கொள்ளாமல் ஏதம் பறைந்து,Edham paraindhu - இழிவான பேச்சுகளைப்பேசி அல்ல செய்து,Alla seidhu - ஸ்வரூபத்திற்குத் தகாத காரியங்களைச் செய்து ஊடு,Oodu - நடுநடுவே கள் கலாய் துர்ய்,Kal kalaai durya - தன்னைக் கலந்து துர்வி கீதம் முழவு இட்டு,Geetham muzhavu ittu - வாத்ய கோஷங்களைப் பண்ணி நீர் அணங்கு ஆடுதல்,Neer anangu aaduthal - நீங்கள் வெறியாடுவிக்கின்றவிது கீழ்மையே,Keelmaiye - (இக்குடிக்கு) அவத்யமேயாம் |
| 3070 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (நீங்கள் அணங்காடுவதை நான் கண் கொண்டு காண மாட்டேன்; இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் கண்ண பிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் என்கிறாள்.) 9 | கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்; ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து; ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9 | (அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே! கீழ்மையினால்,Keelmaiyinaal - உங்கள் நீசத்தனத்தினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,Angu or keelmagan itta muzhavin keel - நீசனான சண்டாளனொருவன் நடத்திப் போரும் வாத்யகோஷத்தின் சார்பாக- பல நாழ்மை சொல்லி,Pala naazhmai solli - தப்பு வார்த்தைகள் பலவற்றையுஞ் சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய்,Neer anangu aadum poy - நீங்கள் வெறியாடுகின்ற விந்த வம்புவெலையை காண்கிலேன்,Kaankilein - நான் கண்கொண்டு காணமாட்டேன்: ஊழ்மையின்,Oozhmaiyin - (சிரமமாகச் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால்) முறைப்படியே கண்ணபிரான்,Kannapiraan - க்ருஷணபகவானுடைய கழல்,Kazhal - திருவடிகளை உன்னித்து,Unnithu - சிந்தித்து வாழ்த்துமின்,Vazhthumin - மங்களாசாஸநம் பண்ணுங்கள்: ஈதே,Eedhe - இந்த மங்களாசாஸநமே ஏழ்மை பிறப்புக்கும்,Ezmai pirappukkum - ஏழேழ் பிறவிக்கும் சேமம்,Saemam - க்ஷேமகரம்: இ நோய்க்கும்,I noikkum - இந்த நோய் தீருவதற்கும் ஈதே மருந்து,Eedhe marunthu - இதுதான் மருந்து. |
| 3071 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இப் பராங்குச நாயகிக்குக் கண்ணபிரான் பக்கலிலுள்ள அளவு கடந்த ப்ராவண்யத்தை யறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடந்து கொள்வதே யுக்தமென்கிறாள் தோழி.) 10 | உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்; நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்! மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10 | அவனை அல்லால்,Avanai allaal - எம்பெருமானைத் தவிர்த்து மற்று ஒரு தெய்வம்,Matru oru deivam - வேறொரு தெய்வத்தை உன்னித்து,Unnithu - ஒரு வஸ்துவாக நினைத்து தொழாள்,Thozhaal - (இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது: நும்,Num - (இப்படியிருக்க) உங்களுடைய இச்சை,Icchai - மனம் போனபடியே சொல்லி,Solli - (நான் அநுவாதம் செய்யவும் தகாத சொற்களைச்) சொல்லி நும்,Num - உங்களுடைய தோள் குலைக்கப்படும் அன்னை மீர்,Thol kulaikkappadum annai meer - தோள் அசையநிற்கிற தாய்மார்களே!, மன்னப்படும்,Mannappadum - நித்யமாக விளங்குகின்ற வேதங்களினால் பிரதி பாதிக்கப்படுகிறவனும் வண் துவராபதி மன்னனை,Van Dhuvaraapathi mannanai - அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை ஏத்துமின்,Yaathumin - துதியுங்கோள்: ஏத்தலும்,Yaathalum - துதித்தவுடனே கதொழுது,Kadozhuthu - (இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத்) தொழுது ஆடும்,Aadum - களித்துக் கூத்தாடுவாள். |
| 3072 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11 | தொழுது ஆடி,Tozhuthu aadi - வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து தூ மணிவண்ணனுக்கு,Thoo manivannanukku - அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு ஆள் செய்து,Aal seydu - அடிமைத்தொழில் செய்து நோய் தீர்ந்த,Noy tirnta - நோய் தீரப்பெற்றவரும், வழுவாத,Valuvad - அவத்யமடையாத தொல் புகழ்,Tol pugal - இயற்கையான புகழையுடையவரும் வண் குருகூர்,Van kurukoor - அழகிய திருநகரிக்குத் தலைவருமான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த வழுவாத,Valuvad - குறையற்றதான ஆயிரத்துள்,Ayirattul - ஆயிரத்தினுள்ளே வெறிகள்,Verikal - வெறிவிலக்கு விஷயமான இவை பத்தும்,Ivai pattum - இப்பதிகத்தை தொழுதும் ஆடி,Tozhutum aadi - தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு பாட வல்லார்,Pada vallar - பாடவல்லார்கள் துக்க சீலம் இலர்கள்,Tukka cilam ilarkal - துக்கப்படுந்தன்மையில்லாதவராவர். |