| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3271 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-5-1- திருத் தாய்மாரைக் குறித்து இவளுடைய தோழியானவள் இவள் பிரகிருதி அறிந்து வைத்து இவளுக்கு திருத் தொலை வில்லி மங்கலத்தை காட்டின நீங்கள் ஹித உபதேசம் பண்ணினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள்.) 1 | துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ; தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! துவள் இல் மா மணி மாடம் ஓங்கு,Thuval il maa mani maadam oongu - குற்றமற்றச் சிறந்த ரத்நங்களையுடைய மாடங்கள் விளங்கப்பெற்ற தொலைவில்லி மங்கலம்,Tholaivilli mangalam - துலைவில்லிமங்கல மென்கிற இரட்டைத்திரப்பதியை தொழும் இவளை,Thozhum ivalai - தொழாநின்ற இப்பராங்குசநாயகியை நீர் இனி விடுமின்,Neer ini vidumin - நீங்கள் இனி உபேக்ஷித்துவிடுங்கள், உமக்கு ஆசையில்லை,Umakku aasai illai - (இவள் திறந்து) நீங்கள் ஆசைவைக்க இடமில்லை, (இவனுடைய நிலைமையைச்சொல்லுகிறேன் கேளுங்கள்) தவளம் ஒண் சங்கு சக்கரம் என்றும்,Thavalam on sangu sakkaram endrum - வெண்ணிறமாய் அழகியதான சங்கையும் சக்கரத்தையும் சொல்லுகின்றவளாயும் தாமரை தடம் கண் என்றும்,Thamarai thadam kan endrum - தாமரைபோன்று விசாலமான திருக்கண்களைச் சொல்லுகின்றவளாயும் இருந்துகொண்டு ஓண் குவளை மலர் கண்கள் நீர் மல்க,On kuvazhai malar kangaL neer malga - அழகிய குவளப் பூப்போன்ற கண்கள் நீர் பெருக நின்று நின்று குமிறும்,Ninru ninru kumirum - ஒன்றும் வாய்விட்டுச் சொல்லமாட்டாமல்லன்று நின்று குமிறுகின்றாளிவன். |
| 3272 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் நித்ய ஸூரி களுக்கு அநு பாவ்யமான தேவ பிரான் எழுந்து அருளி இருக்கிற திருத் தொலை வில்லி மங்கலத்திலே மஹோத்சவத்திலே கொண்டு புக்கு இவளை அகலும்படி பண்ணி கோள்-என்கிறாள்.) 2 | குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர் திமிர் கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2 | (அன்னைமீர்),(Annaimeer) - தாய்மார்களே! குமிறும் ஓசை விழவு ஒலி,Kumirum osai vizhavu oli - ஆராவாரிக்கின்ற ஓசையையுடைய உத்ஸவ கோலாஹலங்களையுடைத்தான துலைவில்லிமங்கலம்,Tholaivillimangalam - இரட்டைத்திருப்பதியிலே அமுதம் மெல்மொழியவளை,Amudham melmozhiyavalai - அமுதம்போன்று மதுரமானமெல்லிய வாய்மொழிகளை யுடையவளான இப்பெண் பிள்ளையை நீர் கொண்டு புக்கு,Neer kondu pukku - நீங்கள் அழைத்துக்கொண்டுபோய் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,Umakku aasai indri akatrineer - மறுபடியும் நீங்கள் இவளோடு உறவுபண்ணுகைக்கு ஆசையில்லாதபடி உறவறுத்துக்கொண்டீர்கள்.(அது எங்ஙனே தெரிகிறதென்றால்) இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள் திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்,Thimir kondal oththu nirkum - திமில் கொண்டாற்போலே பேசாதே நிற்கின்றாள், மற்று,Matru - அதுவுமல்லாமல் தேவதேவபிரான் என்றே,Devadevapiran endrae - எம்பெருமானது திருநாமத்தைச் சொன்னமாத்திரத்திலே நிமியும் வாயொடு,Nimiyum vaayodu - நெறிந்தவாயோடுகூடி கண்கள் நீர் மல்க,Kangal neer malga - கண்கள் நீர்பெருகப் பெற்று நெக்கு ஒசித்து கரையும்,Nekku osithu karaikum - கட்டுக்குலைந்து தளர்ந்து உருகுநினறாள். |
| 3273 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இப் பெண் பிள்ளையைத் துலைவில்லித் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவர்கள் அவ்விடத்துச் சோலையின் வாய்ப்பையும் நீர் நிலங்களின் வளங்களையும் இவளுக்கு காட்டி கொடுக்கவேணுமோ?) 3 | கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு உரைகொள் இன்மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர் திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே.–6-5-3 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! கரை கொள் பைம்பொழில் கண்பணை,Karai kol paimpozhiL kanpanai - தாமிரபரணிக்கரையைக் கபளீகரிக்கின்ற பரந்த சோலைகளையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைத்தான துலை வில்லிமங்கலம்,Tholai villimangalam - இரட்டைத்திருப்பதியிலே உரை கொள் இன்மொழியாளை நீர்கொண்டு புக்கு,Urai kol inmozhiyaalai neerkondu pukku - புகழ்மிக்க இன்சொல்லை யுடையளான இப்பெண்பிள்ளையை நீங்கள் அழைத்துக்கொண்டு சென்று உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,Umakku aasai indri akatrineer - மறுபடியும் நீங்கள் இவளோடு உறவு பண்ணுகைக்கு ஆசையில்லாதபிடி உறவறுத்துக்கொண்டீர்கள்(அது எங்ஙனம் தெரிகிறதென்றால்) (இவள்),(Ival) - இப்பெண்பிள்ளையானவள் திரை கொள் பௌவத்து சேர்ந்ததும்,Thirai kol pouvathu serndhathum - அலைகளைக் கொண்ட திருப்பாற்கடலிலே (ஆச்ரித ரக்ஷணார்த்தமாக) வந்து சேர்ந்தபடியையும் திசை ஞாலம் தாவி அளந்ததும்,Thisai gnaalam thaavi alandhathum - திசைகளோடு கூடின பூமியை முழுவதும் தாவி அடிக்கீழிட்டுக் கொண்டபடியையும் நிரைகள் மேய்த்ததுமே,Niraigal meiththathume - பசுக்கூட்டங்களை மேய்த்தபடியையுமே பிதற்றி,Pithatri - வாய்வெருவி நெடு கண் நீர் மல்க நிற்கும்,Nedukann neer malga nirkum - தனது நெடிய கண்களில் நீர்பெருக நிற்கின்றாள். |
| 3274 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருத் தொலை வில்லி மங்கலத்தையும் -அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமஷ்டியையும் யாதொருநாள் கண்டாள்-அன்று தொடங்கி தடை நிற்கை தவிர்ந்தாள் என்கிறாள் .) 4 | நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்டபின் அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்! கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.–6-5-4 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள் நிற்கும் நால்மறை வாணர் வாழ்,Nirkum naalmarai vaanar vaazh - ஸ்திரமான நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்கள் வாழுமிடமான துலைவில்லிமங்கலம் கண்ட பின்,Tholaivillimangalam kanda pin - துலைவில்லித்திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற பின்பு அற்கம் ஒன்றும் அற உறாள்,Arkam ondrum ara ural - அடக்கம் சிறிதுமுடையளல்லளாய் மலிந்தாள் கண்டீர்,Malindhaal kandeer - கைகழிந்துவிட்டாள் காண்மின் (அது எங்ஙனம் தெரிகிறதென்றால்) கற்கும் கல்வி எல்லாம்,Karkum kalvi ellam - இவள் பழகுகிற பேச்சுக்களெல்லாம் கரு கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே,Karu kadal vannan kannapiran endrae - நீலக்கடல்வண்ணானான கண்பிரானைப் பற்றியதேயாம். ஒற்கம் ஒன்றும் இலள்,Orkkam ondrum ilal - ஒடுக்கம் சிறிதுமில்லாதவளாய் உகந்து உகந்து உள் மகிழ்ந்து,Ugandhu ugandhu ul magizhndhu - தன்னுடைய ஆனந்தமிகுதியை நன்றாகக் காட்டிக்கொண்டு குழையும்,Kuzhaiyum - உள்குழையாநின்றாள். |
| 3275 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் திருத் தொலை வில்லி மங்கலத்திலே இருக்கிற அரவிந்த லோசனனுடைய ஒப்பனை அழகைக் காட்டினீர் – அன்று தொடக்கமாக இவள் விக்ருதையாகா நின்றாள் என்கிறாள்.) 5 | குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர் மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள் நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! குழையும்,Kuzhaiyum - பகவத்குணங்களிலே உருக்கமுடையவளாயும் வாள் முகத்து,Vaal mugathu - ஒளிமிக்க முகத்தையுடையவளாயிருக்கிற துலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு,Tholaivillimangalam kondu pukku - துலைவில்லித்திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போய் இழை கொள் சோதி,Izhaik kol sothi - திருவாபரணங்களினாலான சோதியை யுடையனும் செம் தாமரை கண்ணபிரான்,Sem thamarai kannapiran - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எம்பெருமான் இருந்தமை,Irundhamai - வீற்றிருக்கும்படியை காட்டினீர்,kaattineer - நீங்களேகாட்டிக்கொடுத்தீர்கள், இவள்,Ival - அதுகாணப்பெற்றவிவள் அன்று தொட்டும்,Andru thottum - அந்நாள் தொடங்கி மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு,Mazhai peithaal okkum kanna neerinodu - மழைபெய்தாற்போன்ற கண்ணீரோடேகூடி மையாந்து,Maiyaanthu - வியாமோஹித்து நுழையும் சிந்தையன்,Nuzhaiyum sinthaiyan - அவனழகிலேஉள்புகுழைந்தநெஞ்சையுடையளாய் அத் திசை உற்று நோக்கி தொழும்,Ath thisai uttru nokki thozhum - அத்திருப்பதியுள்ள பக்கமே உற்றுநோக்கித் தொழுகின்றாள். |
| 3276 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் சம்ருத்தமான திருத் தொலை வில்லி மங்கலத்தைக் கண்டால் -வேறொன்றும் காண மாட்டாதே எப்போதும் இவள் வாய் விடும் சொல் எல்லாம் ஸூக்ரஹ ஸுந்தர்யனானவனுடைய திரு நாமங்களேயாய் இரா நின்றது என்கிறாள்.) 6 | நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம் நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும் வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! நோக்கும் பக்கம் எல்லாம்,Nokkum pakkam ellam - பார்த்த பார்த்த விடமெல்லாம் ரும்பொடு செந்நெல் ஒங்கு,Rum podu sennel oongu - கரும்பும் செந்நெற்பயிர்களும் உயர்ந்து விளங்கப்பெற்றதும் செம் தாமரை வாய்க்கும்,Sem thamarai vaaykkum - செந்தாமரைகள் நிரம்பப்பெற்றதும் தண்,Than - குளிர்ந்ததுமான பொருநல்,Porunal - தாமிரபரணிநதியினுடைய வடகரை,Vadakarai - வடகரையிலேயுள்ளதாய் வண்,Van - சகலவிதமான அழகும் பொருந்தியதான துலைவில்லி மங்கலம்,Tholaivilli mangalam - துலைவில்லித் திருப்பதியை நோக்கும் எல்,Nokkum el - (இப்பெண்பிள்ளை) பார்தாளாகில் அத் திசை அல்லால் மறுநோக்கு இலள்,Ath thisai allal maru nokku ilal - அந்தத் திக்கு ஒன்று தவிற வேறெவ்விடத்தும் நோக்குடையவல்ளல் வைகல் நாள் தொறும்,Vaigal naal thorum - ஒரு நொடிப்பொழுதும் விச்சேதமில்லாமல் ஸகலகாலமும் இவள் வாய்கொள் வாசகமும்,Ival vaaykol vaasagamum - இவளது வாக்கில் வெளிவருகின்ற சொற்களும் மணிவண்ணன் நாம்மே,Manivannan naamme - நீலமணிவண்ணனான எம்பெருமானுடைய திருநாமங்களேயாம். |
| 3277 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-5-7- அநந்தரம் -மஹா உபகாரனான சர்வேஸ்வரன் இவளுக்குப் பண்ணின அதிசயம் இருந்த படி -வேறொரு வார்த்தையும் கேளாதே – அவனுடைய திவ்ய சிஹ்னங்களும் திரு நாமங்களும் தாம் திருந்தும்படி இவள் வாக் விஷயமாயிற்று என்கிறாள்.) 7 | அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால் முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ? அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! அணி மா மயில் சிறு மான் இவள்,Ani maa mayil siru maan ival - அழகிற் சிறந்த மயில்போன்றும் சிறிய மான்பேடை போன்றுமிராநின்ற இப்பெண்பிள்ளை நம்மை கைவலிந்து,Nammai kaivalinthu - நம்மைக் கைவிட்டொழிந்து துலைவில்லிமங்கலம் என்று அல்லால் என்ன வார்த்தையும் கேட்க உறாள்,Tholaivillimangalam endru allal enna vaarthaiyum ketka ural - துலைவில்லித் திருப்பதிப் பேச்சுதவிர வேறு எந்தப்பேச்சும் கேட்க விரும்புகின்றிலள் (இப்படியானவிது) மூன்காம் நோற்ற விதி கொலோ,Moonkaam notra vidhi kolo - முன்பு செய்த ஸுக்ருத பலனோ! முகில்வண்ணன் மாயம் கொலோ,Mugilvannan maayam kolo - மேகவண்ணனான எம்பெருமானுடைய ஸங்கல்பமோ! அவன் சின்னமும் திரு நாமமும்,Avan sinnammum thiru naamamum - அப்பெருமானுடைய லக்ஷணங்களும் திருநாமங்களும் திருத்த இவள் வாயனகள் ஏ,Thirutha ival vaayanakal e - மிகத் திருத்தமாக இவளுடைய வாகில் விளங்கும்படி என்னே! |
| 3278 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அன்று தொடங்கி என்றும் அரவிந்த லோசனன் என்கிற திரு நாமத்தையே சொல்லி சிதிலையாகா நின்றாள் -என்கிறாள்.) 8 | திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும் இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம்,Thirundhu vedhamum velviyum thirumaa makalirum thaam - பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை மலிந்து இருந்து வாழ்,Malindhu irundhu vaazh - நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய் பொருநல் வடகரை,Porunal vadakarai - தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய் வண்,Van - தர்சநீயமான தொலைவில்லிமங்கலம்,Tholaivillimangalam - தொலைவில்லித் திருப்பதியை கரு தட கண்ணி,Karu tada kanni - கறுத்துப்பெருத்த கண்களைடையளான இப்பெண்பிள்ளை கை தொழுத அ நாள் தொடங்கி இ நாள் தோறும்,Kai thozhutha a naal thodangi i naal thorum - அஞ்ஜலிபண்ணினவன்று தொடங்கி இன்று வரையிலும் இருந்து இருந்து,Irundhu irundhu - இடையிடையே ஏங்கியேங்கியிருந்து அரவிந்த லோசன என்று என்றே,Aravinda lochana endru endrae - தாமரைக் கண்ணனை பலகாலு மழைத்து நைந்து இரங்கும்,Naindhu irangum - பலபடியாலும் சிதிலையாக நின்றாள். |
| 3279 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பெண் பிள்ளையுடைய மநோ வாக் காயங்கள் மூன்றும் எம்பெருமான் பக்கலிலே மிகவும் பிரவணம் ஆயிற்றன என்கிறாள்.) 9 | இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால் துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! இவள்,Ival - இப்பெண் பிள்ளையானவள் நான் தொறும் இரங்கி வாய் வெரீஇ,Naan thorum irangi vaai verii - நாடோறும் நெஞ்சழிந்து வாய்வெருவி கண்ண நீர்கள் அலமர,Kanna neergal alamara - கண்ணீர் பெருக வியாகுலப்பட்டு நின்று மரங்களும் இரங்கும் வகை,Marangalum irangum vakai - மரங்களுங்கூட இங்கும்படியாக ஓ மணிவண்ண என்று கூவும்,O manivanna endru koovum - ஓ மணிவண்ணனே! எனறு கூப்பிடாநின்றாள், (அதுவுமல்லாமல்) துரங்கம் வாய் பிளந்தான் உறை துலைவில்லிமங்கலம் என்று,Thurangam vaai pilandhaan urai tholaivillimangalam endru - குதிரைவடிவு கொண்டு வந்த அசுரனுடைய வாயைப்பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்கின்ற துலைவில்லித்திருப்பதியென்று அவ் ஊர் திருநாமம் கற்றதன் பின்னை,Av oor thirunamam katrathan pinnai - அவ்வூர்த்திருநாமத்தைக் கற்ற பின்பு தன் காங்கள் கூப்பி தொழும்,Than kaangal kooppi thozhum - தன் கைகளைக் கூப்பி (அவ்வூரை நோக்கி)த் தொழுகின்றாள். |
| 3280 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (பராங்குசநாயகியின் ப்ராவண்ய மிகுதியைக் கண்டு ‘இவள் பிராட்டிமாரிலே ஒருத்தியர்!‘ என்று சங்கிக்கின்றமை கூறுகிறது) 10 | பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால், முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம் சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.–6-5-10 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள் பின்னைகொல்,Pinnai kol - நப்பின்னைப் பிராட்டியோ! மா நிலம் மகள் கொல்,Maa nilam makal kol - பெருமைதங்கிய பூமிப்பிராட்டியோ! திருமகள் கொலபிறந்திட்டாள்,Thirumagal kola pirandhittaal - (அல்லது) ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷமியே வந்து பிறந்தபடியோ! என்ன மாயம் கொலோ,Enna maayam kolo - இது என்ன அதிசயமோ! நெடுமால் என்றே நின்று கூவும்,Nedumaal endrae ninru koovum - ஸர்வேச்வரா! என்று நிலை நின்று ழைக்கின்றாள், அவன் முன்னிவந்து நின்று இருந்து உறையும்,Avan munni vandhu ninru irundhu uraiyum - அப்பெருமான் முற்பட்டு வந்து நிற்பது இருபதாய் நித்யவாஸம் பண்ணுமிடமான துலைவில்லிமங்கலம,Tholaivillimangalam - துலைவில்லி திருப்பதியை சென்னியால் வணங்கும்,Senniyaal vanangum - தலையாலே வணங்குகின்றாள் அவ் ஊர் திரு நாமம் கேட்பதே சிந்தை,Av oor thiru naamam ketpathe sinthai - அத்திருப்பதியின் திரு காமத்தை (தன்வாயால் தான் சொல்வதிற் காட்டிலும்) பிறர் சொல்லக் கேட்க வேணுமென்பதே இவளது சிந்தனை. |
| 3281 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இத்திருவாமொழி கற்பவர் கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற மஹாபலத்தைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன் முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11 | தேவபிரானையே தந்தை தாய் என்று,Thevapiraanaiye thandhai thay endru - தேவ பிரானையே ஸகலவித பந்துவுமாக அறுதியிட்டு சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அடைந்த,Sinthaiyaalum sollaalum seykaiyinaalum adaintha - முக்யு காரணங்களாலும் ஆச்ரயித்த வண் குருகூரவர் சடகோபன்,Van kuru Kooravar Sadagopan - ஆழ்வார் முந்தை ஆயிரத்துள்,Mundhai aayiraththul - அனாதியான இவ்வாயிரத்திலுள்ளளே துலைவல்லி மங்கலத்தை சொன்ன இவை செந்தமிழிபத்தும் வல்லார்,Thulaivalli Mangalaththai sonna ivai senthamizh paththum vallaar - துலைவில்லித் திருப்பதி விஷயமாக அருளிச்செய்த இப்பதிகத்தை ஓதவல்லவர்கள் திருமாலுக்கு அடிமை செய்வார்,Thirumalukku adimai seyvaar - பரவாஸு தேவனுக்கு நித்யகைங்கர்யம் பண்ணப் பெறுவர்கள். |