| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3447 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரிவில் தரித்திருக்க வொண்ணாதபடி பரம போக்யதை வாய்ந்திருக்கிற நீ உன்னை நான் காணும்படி. அருள்புரியவேணு மென்கிறார். இப்பாட்டில்.) 1 | தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1 | தேவிமார் ஆவார்,Devimar avaar - (உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான) தேவிகளாயிருப்பவர்கள் (யாவரென்னில்) திரு மான் பூமி மற்று,Tiru man bhoomi matru - ஸ்ரீதேவியும் பூதேவியுமாவர் அதற்கு மேலே ஏவ ஆட்சிசெய்வார்,Eva atchiseivar - (நீ அந்த திவ்ய மஹிஷிதனோடுகூட) ஆஜ்ஞாபிக்க (அக்கட்டளையின்படி) அடிமைசெய்பவர்கள் யாரென்னில்) அமரர்,Amarar - நித்யஸூரிகள் ஆட்சி,Atchi - உனது ஆளுகைக்கு உட்பட்ட பொருளோவென்னில் மேவிய ன்று உலகம் அவை,Meviya ntru ulagam avai - பொருந்திய மூவுலகங்களுமாம் நின் உருவம்,Nin uruvam - உனக்கு அஸாதாரணரூபங்களோ வென்னில், வேண்டு வேண்டு உருவம்,Vendu vendu uruvam - இஷ்டப்படி பரிக்ரஹிக்கிற திவ்ய வுருவங்களாம் (இப்படிகளை அடியேனுக்குக் காட்டிக்கொடுத்த வளவேயன்றிக்கே) பாவியேன்தன்னை அடுகின்ற,Paviyen thanai adugindra - பாவியான என்னை முடிக்க வந்தது போன்றிருக்கின்ற கமலம் கண்ணது,Kamalam kannathu - செந்தாமரை கண்களும் ஓர் பவளம் வாய்,OrPavalam vai - ஒப்பற்ற பவளம் போன்ற அதர சோபையுமுடைய மணியே,Maniye - பரஞ்சோதியானவனே! அமுதே,Amuthe - ஆராவமுதமே! அலை கடல் கடைந்த அப்பனே,Alai kadal kadainda appane - அலையெறிகின்ற கடலைக் கடைந்த அமுதமளித்தபிரானே! காணும் ஆறு அருளாய்,Kaanum aaru arulai - (உன்னை நான்) கண்ணாரக்காணும் வகை அருளவேணும். |
| 3448 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்றும் காண வேணும் என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்போ-என் திறத்து செய்து அருள பார்த்திற்று -ஐயோ இங்கனம் படாமே உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார்.) 2 | காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன் பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே ! பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2 | காணும் ஆறு அருளாய் என்று என்றே,Kaanum aaru arulai endru endre - (உன்னை நான்) காணும் வகை செய்தருளவேணுமென்று பலகாலும் சொல்லிக்கொண்டே கலங்கி,Kalangi - (ஆசைப்பட்டபடி காணப்பெறாமையாலே) கலக்கங்கொண்டு கண்ண நீர் அலமா,Kanna neer alamaa - கண்ணீர் பரவாநிற்க, வினையேன்,Vinaiyen - (காணப்பெறாத) பாவத்தை யுடையேனான நான் பேணும் ஆறு எல்லாம் பேணி,Penum aaru ellam peni - (தூதுவிடுகை மடலெடுக்கை முதலாக) எதுஎது செய்யலாமென்று நினைத்தேனோ அதுவெல்லாம் செய்தும் (கிடையாமையாலே) நின் பெயரே பிதற்றும் ஆறு எனக்கு அருள்,Nin peyare pitharrum aaru enakku arul - உனது திருநாமங்களையே பிதற்றிக்கொண்டிருக்கம்படியான விதுலேயன்றோ எனக்கு நீ செய்து கொடுத்தவருள் அந்தோ,Antho - ஐயோ! (இவ்வளவேயோ நான் பெற்ற பாக்கியம்!) காகுத்தர்,Kaaguthar - இராமனாய்த் தோன்றி எளியனானவனே! தொண்டனேன் கற்பகம் கனியே,Thondanen karpagam kaniye - அடியேனக்குக் கல்பவ்ருக்ஷ பலனாகத்தோன்றியிருப்பவனே! பேணுவார் அமுதே,Penuvar amuthe - ஆசைப்பட்டவர்களுக்கு அமுதம் போன்றவனே! பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா,Periya than punal soozh peru nilam eduttha peralaa - விசாலமாய்க் குளிர்ந்த பிரளய வெள்ளத்திலே யழுந்தின மஹாபூமியை உயரவெடுத்த மஹாநுபாவனே! காணும் ஆறு அருளாய்,Kaanum aaru arulai - (உன்னைநான்) காணும்படி க்ருபை பண்ணவேணும். |
| 3449 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (அடியவர்க்கு எளியவனென்று பேர்பெற்றிருக்கிற நீ இன்றுவந்து உதவாதொழியில் நீ ஆச்ரித ரக்ஷகனென்னுமிடத்தை உன்னடியார்கள் எப்படி நம்பமுடியுமென்கிறார். இப்பாசுரத்திற்கு உயிரானது.) 3 | எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே ! கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே ! அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3 | எடுத்த பேராளன்,Edutha peralan - நிதி யெடுத்த மஹாநுபாவனென்று கொண்டாடப்படுகிற நந்தகோபன் தன்,Nandakopan than - நந்தகோபனுடைய இன் உயிர் சிறுவனே,In uyir siruvane - இனிமையான உயிர்போன்ற திருக்குமாரனே! அசோதைக்கு அடுத்த பேர் இன்பம்,Asothaikku adutha per inbam - (தேவதிப்பிராட்டி வயிறெறிந்து கிடக்க) யசோதைப்பிராட்டியிடம் வந்து சேர்ந்த அளவிறந்த ஆனந்தவடிவனாகி. குலம் இளங் களிறே,Kulam ilang kalire - அக்குலத்திற்கு யானைக்குட்டி போன்றவனே! அடியனேன் பெரிய அம்மானே,Adiyanen periya ammanae - அடியேனுக்கு உன் பெருமைகளெல்லாம் காட்டின பிரானே! கடுத்த போர் அவுணன் உடல்,Kadutha por avunan udal - போர்புரிவதில் தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை இரு பிளவு ஆ,Iru pilavu aa - இரு துண்டமாகும்படி கை உகிர் ஆண்ட,Kai ukir aanda - திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு காரியஞ்செய்த எம் கடலே,Em kadalae - எம்போல்வார்க்குக் கடல் போன்றவனே! இன்று,Inru - நான் விரும்புமிக்காலத்ல் அடுத்தது ஓர் உரு ஆய்,Aduthathu or uru aai - தகுதியான வொரு உருவைக் கொண்டவனாகி நீ வாராய்,Nee varai - நீ வருகின்றிலையே! (இப்படி நீ உபேக்ஷித் திருந்தாயாகில்) உமர்,Umar - என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கன் எங்ஙனம் தேறுவர்,Engnanam theruvar - (உன்னை ஸர்வரக்ஷகனென்று) எப்படி நம்புவர்கள்? |
| 3450 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரானே! நீ உன்னை அடியார்களுக்கு விதேயனாக ஆக்கிவைத்திருக்குமிருப்பு ஒன்று உண்டன்றோ, அதையே நான் சிந்தித்து ஆறியிருப்பது. இப்போது அந்தக் குணத்திலும் அதிசங்கை செல்லாநின்றமையால் தரிக்க மாட்டுகின்றிலேனே! என்செய்வேனென்கிறார்.) 4 | உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4 | அமர் அது பண்ணி,Amar adhu panni - அப்படிப்பட்ட பாரதயுத்தத்தை நடத்தி, அகல் இடம் புடை சூழ்,Agal idam pudai soozh - பூமிப்பரப்பெங்கும் நிறைந்திருந்த அடு படை,Adu padai - தொலைத் தொழிலில் வல்ல சேனையை அலித்த,Alitha - தொலைத்த அம்மானே,Ammanae - பெருமானே! அமரர் தம் அமுதே,Amarar tham amudhe - தேவர்களுக்கு அமுதம் போன்று உயிர்ப்பிச்சையளிக்குமவனே! அசுரர்கள் நஞ்சை,Asurargal nanjai - அசுரர்கட்கு விஷம் போன்றவனே! என்னுடை ஆர் உயிரே ஓ,Ennudai aar uyirae o - எனக்கு அருமையான உயிர் போன்றவனே! உமர் உகந்து உகந்த உருவம்,Umar uganthu ugantha uruvam - உன்னடியார்கள் எப்போதும் விரும்பிய ரூபமே நின் உருவம் ஆகி,Nin uruvam aaki - நீ கொண்டருளும் ரூபமாகி. உன் தனக்கு அன்பர் ஆனார் அவர்,Un thanakku anbar aanar avar - உன்னுடைய அந்த பகதர்கள் உகந்து அகர்ந்த செய்கை,Uganthu agarndha seygai - உகந்து ஈடு படுகைக்கு இடமாக நீ செய்த செயல்கள் உன் மாயை,Un maayai - உனது ஆச்சர்ய சேஷ்டிதங்கள் (என்று கொண்டிருக்கையாகிற) அறிவு ஒன்றும்,Arivu ondrum - இந்த வொரு அத்யவஸாயத்திலுங்கூட வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் (இவை பொய்யோவென்று) கஙகைகொள்ள வேண்டியவனாகிறேன். |
| 3451 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஆழ்வீர்! பேறுபெறுமவர் நீரான பின்பு அதற்குரிய ஸாதநானுஷ்டானமும் உம்முடைய தலையிலேயாக வேண்டாவோ? அஃது ஒன்றுமின்றிக்கே “அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்“ என்றால் இதுவொரு வார்த்தையோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, நானொரு ஸாதநானுஷ்டானம் பண்ணிவந்து காண்பதென்று ஒன்றுண்டோ வென்கிறாரிதில்.) 5 | ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ ! ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5 | ஆர் உயிரே ஓ,Aar uyirae oh - அருமையான உயிராயிருப்பவனே! அகல் இடம் முழுதும் படைத்து,Agal idam muzhudhum padaiththu - விசாலமான உலகம் முழுவதையும் ஸ்ருஷ்டித்து இடந்து,Idandhu - (ஒருகால்) பிரளயாரணவத்தில் மங்கிப்போகாதபடி இடந்தெடுத்து உண்டு,Undu - (ஒருகால்) திருவயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்து,Umizhndhu - பிறகு வெளிப்படுத்தி அளந்த,Alandha - (ஒருகால்) மாவலிபக்கல் நீரேற்று அளந்துகொண்ட பேர் உயிரே ஓ,Per uyirae oh - ஸர்வஸ்மாத் பரனே! பெரிய நீர் படைத்து,Periya neer padaiththu - மஹாஜலமான ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து அங்கு உறைந்து,Angu uraindhu - அங்கே கண்வளர்ந்தருளி அது கடைந்து,Adhu kadaindhu - அதுபோன்ற வொரு பாற்கடலைக் கடைந்து (அது) அடைத்து உடைத்த,Adhu adaiththu udaiththa - அதுபோன்ற மற்றொரு கடலிலே ஸேதுபந்தம் பண்ணி தநுஷ்கோடியாலே அதனையுடைத்த சீரியரே ஓ,Seeriyarae oh - பரபரனே! மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவா ஓ,Manisarkku thevar pola thevarkkum thevaa o - மனிசர்கும் தேவர்க்கும் எவ்வளவவாசியோ அவ்வளவவாசி தேவர்க்கும் உனக்கும் போரும்படியாகவுள்ளவனே! உலகங்கட்டு எல்லாம் ஓர் உயிரே ஓ,Ulagangattu ellam or uyirae oh - எல்லா வுலகங்களுக்கும் ஓர் உயிராயிருப்பவனே! நான் உன்னை எங்க வந்து உறுகோ,Naan unnai engka vandhu urugoo - அடியேன் உன்னை எங்கு வந்து கிட்டப்பெறுவேன்? |
| 3452 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (கீழில் பாட்டில் சொன்ன பொருளை விஸ்தரிக்கிறார்.) 6 | எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால் மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே–8-1-6 | என்னை ஆள்வானே,Ennai aalvaane - (இதுவரையில்) என்னை நிர்வஹித்துக்கொண்டு போருமவனே! எழ் உலகங்களும் நீயே,Ezh ulagangalum neeye - ஸப்தலோகங்களும் நீயிட்ட வழக்கு, அங்கு,Angu - அந்த லோகங்களில் அவர்க்கு அமைந்த,Avarkku amaindha - (பலன்களைக் கோருகின்ற) அவரவர்களுக்கு ஆராதிக்கும்படி ஏற்படத்தின தெய்வமும்,Dheyvamum - தைவங்களும் நீயே,Niyae - உன் அவயபூதங்கள் அவற்றவை கரும்மும் நீயே,Avatravai karummum niyae - அத்தெய்வங்களைக் குறித்து ஆராதனையாகப் பண்ணும் காரியங்களும் நீயிட்ட வழக்கு. பொங்கிய புறம்பால் பொருள் உள ஏலும்,Pongiya purambaal porul ula elum - இவ்வுலகங்களிற் காட்டிலும் விஞ்சிப் புறம்பட்ட பொருள்கள் எவ்வனவிருந்தாலும் அவ்வளவும் அவையும் நீ,Avaiyum ni - அவையும் நீயிட்டவழக்கு மங்கிய அரு ஆம் நேர்ப்பமும் நீயே,Mangiya aru aam naerppamum niyae - காரணாவஸ்தையில் சுருங்கிக் கிடக்கிறஸூக்ஷ்மசிதசித் வஸ்துக்களும் நீயிட்ட வழக்கு வான் புலன் இறந்ததும் நீயே,Vaan pulan irandhadum niyae - அவ்யக்தத்தையும் வியாபிக்கக்கூடியதாய் கண்முதலிய இந்திரியங்களுக்குப் புலப்படுத்தன்மையற்ற தான ஜீவஸமஷ்டியும் நீ யிட்ட வழக்கு. இன்னே ஆனால்,Innae anaala - இப்படியாமளவில், (உன்னை நான் எங்குவந்து உறுகோ? என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்) |
| 3453 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (எல்லா பொருள்களும் உனக்கு வடிவாய்க்கொண்டு சேஷமாய் நீயே அவற்றுக்கு ப்ரகாரியாய் – சேஷியாயிருக்கிறாயென்கிற அறிவு ஒன்று கொண்டு தரித்திருக்கிற நான் என்பாபத்தாலே அதிலும் அதிசங்கைபண்ண நேர்ந்துவிட்டதேயென்று நோகிறார்.) 7 | இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால் சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற் பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7 | கறந்த பால்,Karandha paal - அப்போது கறந்தபால் போல் இனியனானவனே! நெய்யே,Neiyae - அதில் ஸாரமான நெய் போன்றவனே! நெய்யின் இன் சுவையே,Neyin in suviyae - நெய்யின் இனிமையான சுவைதானே வடிவெடுத்ததுபோன்றவனெ! கடலினுள் அமுதமே,Kadalinul amudhamae - கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே! அமுதில் பிறந்த இன் சுவையே,Amudhil pirandha in suviyae - அமுதிலுள்ள இனிமையான சுவைதானே வெடுத்தவனே! சுவை அது பயனே,Suvai adhu payanae - அவ்வினிமையினுலுண்டாகும் ஆனந்தமே! பின்னை தோள் மணந்த பேர் ஆயா,Pinnai thol manandha per aayaa - நப்பின்னைப்பிராட்டியை மணம்புணர்ந்து கோபால க்ருஷ்ணனே! இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ,Irandhadum niyae edhindhadum niyae nigazhvadho ni - முக்காலங்களிலுமுள்ள பொருள்களும்ந யிட்ட வழக்கு இன்னே ஆனால்,Innae anaal - இப்படியான பின்பு அது இது உது,Adhu idhu udhu - தூரஸ்தமாயும் ஸமீபஸ்தமாயும் மத்யஸ தமாயுமுள்ள ஸகல பரார்த்தங்களும் சிறந்த நின் தன்மை,Sirandha nin thanmai - பரபரனான உன்னுடைய ஸவபாவங்கள் என்ற அறிவு ஒன்றும்,Enra arivu ondrum - என்கிற இவ்வறிவு தன்னிலும் வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் அதிசங்கை கொள்பவனாயிரா நின்றேன். |
| 3454 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஆழ்வீர்! உம்முடைய அபேக்ஷிதம் நாம் செய்ய வேணுமாகில் அதற்கு உறுப்பாக ஓர் அஞ்ஜலியாவது பண்ணமாட்டீரோவென்ன, பிரானே! நானாகச் செய்வதென்று ஒரு செயலுண்டோ? மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீயிட்டவழக்கான பின்பு என்னாலொரு செயலுண்டோ? நீ தானே என்னை வணங்குவித்துக்கொள்ளவேணுமே யல்லது நான் வணங்குவதாக ஒன்று அறியேன் என்றார்.) 8 | மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் ! பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா ! வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8 | மாயத்தால் மணந்த பேர் ஆயா,Maayathaal manandha per aayaa - மிகுந்த ஆசையினால் நப்பின்னையே மணந்து கொண்ட பெருமை தங்கிய கோபாலனே! முழுதும்,Muzhudhum - உன்னுடைய ஒரு குணமும் தப்பாதபடி வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை உடையாய்,Valvinaiyenai eirkindra gunangalai udaiyaai - பாவியேனை இருபிளவாக்குகின்ற திருக்குணங்களை யுடையவனே! வன்கையர் அசுரர் கூற்றமே,Vankaiyar asurar kutrame - வன்மையை யுடையவர்களான அசுரர்களுக்கு யமன் போன்றவனே! கொடிய புள் உயர்த்தாய்,Kodiya pul uyarththaai - அவ்வசுரர்களுக்குக் கொடுமைபுரியுமியல்லின்னான் பெரிய திருவடியை த்வஜமாகக் கொண்டவனே! ஆயிரம் பணங்களும் உடைய பை நாகம் பள்ளியாய்,Aayiram panangalum udaiya pai naagam palliyaai - ஆயிரம் படங்களையுடைய பரந்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டு பால் கடல் சேர்ப்பா,Paal kadal saerppaa - திருப்பாற்படலில் கண் வளர்ந்தருளுகிறவனே! மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே,Manamum vaasagamum seigaiyum yaanum ni thaanae - மநோவாக் காயங்களாகிற கரணங்களும் அவற்றை யுடைய நானும் நீயிட்ட வழக்காயிருக்க வணங்கும் ஆறு அறியேன்,Vanangum aaru ariyaen - சுதந்திரமாக வணங்கும் வழயறிகின்றிலேன். |
| 3455 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சகல பதார்த்தங்களும் உனக்கு சேஷமான பின்பும் இந்த ஞானத்தோடு சம்சாரத்திலே இருந்ததோடு வாசி இல்லை யாகிலும் சேஷத்வ ஞான விரோதியான சம்சாரத்திலே இருக்க அஞ்சா நின்றேன் -இதுக்கு அனுகூலமான திரு நாட்டிலே என்னைக் கொடு போக வேணும் என்கிறார்.) 9 | யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால் வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும் யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல் வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9 | யானும் நீ தானே ஆவது மெய்யே,Yaanum ni thaanae aavadhu meiyae - (எல்லாமும் நீயாகையாலே) யானும் நீதானே யென்கிறவிது உண்மையே, (இதில் ஒரு ஸந்தேஹமில்லை) அரு நரகு அவையும் நீ,Aru naragu avaiyum ni - என்னால் பொறுக்கமுடியாத ஸம்ஸாரத்திலுள்ளவையெல்லாம் நீயிட்ட வழக்கே, ஆனால்,Anaal - ஆனபின்பு வான் உயர் இன்பம் எய்தில் என்,Vaan uyar inbam eidhil en - திருநாட்டிலே போய்ச் சிறந்த ஆனந்தத்தைப் பெற்றிருந்தாலென்ன? மற்றை நரகமே எய்தில் என்,Matrai naragame eidhil en - அதற்கெதிர்த்தட்டான ஸம்ஸாரநரகத்தை யடைந்தால் தானென்ன? எனிலும்,Enilum - என்று இப்பொருளுண்டேயாகிலும், யானும் நீ தான் ஆய் தெளிதொறும்,Yaanum ni thaan aai thelidhorum - நான் உனக்கடியேனென்பதை யுணரும்போதெல்லாம் நரகம் நான் அடைதல் நன்றும் அஞ்சுவன்,Naragam naan adaithal nandrum anjuvan - ஸம்ஸார நரக வாழ்க்கைக்கு மிகவும் பயப்படா நின்றேன், நான் உயர் இன்பம்,Naan uyar inbam - பரமபதப் பேரின்பத்தை நிரந்தரமாகவுடையையாய்க்கொண்டு எழுந்தருளி யிருக்குமவனே! நின் தாள்களை எனக்கு அருளு,Nin taalgalai enakku arulu - உன் திருவடிகளை எனக்குத் தந்தருளவேணும். |
| 3456 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (நானாசைப்பட்டபடியே திருவடிகளை யெனக்குத் தந்தருளின சிறந்தவுதவிக்குத் கைம்மாறாக இவ்வாத்மவஸ்துவை எம்பிரானே! உனக்கு அர்ப்பணஞ் செய்தேனென்கிறார்.) 10 | தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் ! தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10 | தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த,Taalgalai enakke thalaiththalai sirappa thanda - (உனது) திருவடிகளை எனக்கே அஸாதாரணமாகத் தலைமேல் சிறக்கும்படி தந்தருளின பேர் உதவி,Per uthavi - மஹோபகாரத்திற்கு கைம்மாறு ஆ,Kaimmaru aa - பிரதியுபகாரமாக, என் உயிரை,En uyirai - எனது ஆத்மவஸ்துவை தோள்களை ஆர தழுவி,Tholgalai aara thazhuvi - தோள்களை நன்றாகத் தடவிக் கொடுத்து அறவிலை செய்தனன்,Aravilai seithanan - பரிபூரண விக்ரயம் செய்து விட்டேன் சோதீ!,Sothee! - நான் தந்தவிதனைப்பெற்று அபூர்வலாபம் பெற்றதாகக் களித்து விளங்குமவனே! தோள்கள் ஆயிரத்தாய்,Tholgal aayiraththaai - (அந்தக்களிப்பினாலே பணைத்த) பலபலதிருத்தோள்களையுடையவனே! முடியன் ஆயிரத்தாய்,Mudiyan aayiraththaai - பலபல திருமுடிகளையுடையவனே! துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்,Thunai malar kangkal aayiraththaai - ஒன்றோடொன்றொத்த மலர் போன்ற பலபல திருக்கண்களையுடை வனே! தாள்கள் ஆயிரத்தாய்,Taalgal aayiraththaai - பலபல திருவடிகளையுடையவனே! பேர்கள் ஆயிரத்தாய்,Pergal aayiraththaai - பலபல திருநாமங்களை யுடையவனே! தமியனேன் பெரிய அப்பனே,Thamiyaen periya appane - அகிஞ்சநனான வெனக்கு இன்னமும் எவ்வளவோ செய்யப் பாரித்திருக்குமவனே! |
| 3457 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (இப்பதிகத்திற் சொன்ன பொருள்களையெல்லாம் சுருங்கச் சொல்லி இப்பதிகம் கற்றார்க்கு எம்பெருமானைப் பெற்று உஜ்ஜீவிக்கை எளிதாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க் குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11 | பெரிய அப்பனை,Periya appanai - எல்லாரினும் பெருமை பெற்றஸ்வாமியும் பிரமன் அப்பனை,Brahman appanai - உலகங்களைப்படைத்தவனான பிரமனையும் படைத்தவனும் உருத்திரன் அப்பனை,Uruthiran appanai - ஸம்ஹாரக்கடவுளாகிய ருத்ரனுக்கு தலைவனும் முனிவர்க்கு உரிய அப்பனை,Munivarkku uriya appanai - ஸநகர் முதலிய முனிவர்கட்கும் தகுதிவாய்ந்த ஸ்வாமியும் அமரர் அப்பனை,Amarar appanai - ஸகல தேவர்களுக்கும் ஸ்வாமியும் உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை,Ulakukku oru thani appan thani - ஸகல வோகங்களுக்கும் ஒப்பற்ற நாயகனுமான வனைக்குறித்து, பெரியவண் குருகூர்ச் வண் சடகோபன்,Periyavan kurukoor van sadagopan - ஆழ்வார் பேணின ஆயிரத்துள்ளும்,Penina aayiraththullum - ஆதரித்துச்சொன்ன ஆயிரத்தினுள்ளும் உரிய சொல் மாலை இவை பத்தும் இவற்றால்,Uriya sol maalai ivai paththum ivatraal - தகுந்த சொற்சேர்த்தீவாய்ந்த இப்பத்துப்பாசுரங்களினால் தொண்டீர்நங்கட்கு உய்யலாம்,Thondeernankadkku uyyaalaam - தொண்டர்களே! நாம் உஜ்ஜீவிக்கவமையும். |