| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3315 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும் என்கிறார்.) 1 | நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய் கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால் வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1 | நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் கெடு வான் ஆய்,Neer aay nilan aay thee aay kaal aay kedu vaan aay - பஞ்ச பூதஸ்வரூபியும் சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்,Seer aar sudhargal irandu aay - சந்திரஸூர்யர்களாகிற சிறந்த தேஜ பதார்த்தஸ்வரூபியும் சிவன் ஆய்,Sivan aay - சிவனுக்கு அந்தர்யாமியும் அயன் ஆனாய்,Ayan aanaay - பிரமனுக்கு அந்தர்யாமியுமாயிருக்கும் எம்பெருமான்! கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி,Koor aar aazhi ven sangae aendhi - கூர்மைபொருந்திய திருவாழியையும் வெள்ளிய திருச்சங்கையும் திருக்கையில் தரித்துக்கொண்டு மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் களிக்கும்படி ஒருநாள்,Oru naal - ஒருநாளாகிலும் வாராய்,Vaarai - வந்தருளவேணும். |
| 3316 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் மஹா பலிக்கு உன் அழகைக் காட்டி அகில லோகத்தையும் அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஆச்சர்ய சக்தியை யுடைய நீ -நான் கண்டு உகக்கும்படி இந்த இடத்திலே வர வேணும் என்கிறார்.) 2 | மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2 | மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் (அழகு கண்டு) உகக்கும்படி குறள் ஆய்,Kural aay - வாமனமூர்த்தியாய் (மாவலியிடம் சென்று) வலம் பாட்டி,Valam paatti - தன்னுடைய சக்தியக்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட,Mannum vinnum konda - மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட மாயம் அம்மானே,Maayam ammaane - அற்புதனான ஸ்வாமியே! உனை நான் நண்ணி,Unai naan nanni - உன்னை நான் கிட்டி கண்டு உகந்து கூத்துஆட,Kandu ugandhu koothu aada - கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பரவசனாய் நர்த்தனம் பண்ணும்படியாக நண்ணி,Nanni - இங்கே வந்து கிட்டி ஒரு நாள்,Oru naal - ஒருநாளாகிலும் ஞாலத்தூடே நடவாய்,Nyaalaththooda nadavay - இந்நிலத்திலே நடையழகு காட்டியருளாய். |
| 3317 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (கீதையில் * பரித்ராணாய ஸாதூநாம் … ஸம்பவாமி யுகேயுகே * என்றதை நினைப்பூட்டி “ஸமய விசேஷங்களலே எத்தனையோ விதமாக அவதாரங்கள் செய்வென்கிறார்.) 3 | ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே! கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3 | உகம் தோறு,Ugam thooru - ஒவ்வொரு யுகத்திலும் ஞாலத்தூடே,Nyaalaththooda - பூமியிலே அவதரித்து நடத்தும் நின்றும் கிடந்து இருந்தும்,Nadaththum ninrum kidandhu irundhum - நடப்பது நிற்பது கிடப்பது இருப்பதான செயல்களைச் செய்து சால பல நாள்,Saala pala naal - பல்லாயிரமாண்டளவும் உயிர்கள் காப்பானே,Uyirkal kaappaanai - பிராணிகளை ரக்ஷித்தருள்பவனே! கோலம் திரு மா மகளோடு,Kolam thiru maa makhalodu - உன்னழகுக்கு ஏற்ற அழகுடையளான திருமாமகளுடனே (கூடியிருக்கிற) உன்னை கூடாதே,Unnai koodaadhe - உன்னைக்கிட்டி யநுபவிக்கப்பெறாமல் சால பல நாள்,Saala pala naal - (மேலுள்ள) மிகப்பலகாலமெல்லாம் இன்னும் அடியேன் தளர்வேனோ,Innum adiyaen thalarveeno - உன்னுறவு பெற்று வைத்தும் அடியேன் இழந்து துடிப்பது தானே? |
| 3318 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரபலமான சகடாஸூரனை நிரசித்த நீ வருகைக்கு விரோதி யுண்டாகிலும் அத்தைப் போக்கி நான் காணும்படி வர வேணும் என்கிறார்) 4 | தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே! கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4 | சகடம் அசுரர் உடல்,Sakadam asurar udal - சகடாசுரனுடைய உடலானது தளர்ந்தும் முறிந்தும்,Thalarndhu murindhu - சின்ன பின்னமாகி வேறு ஆ பிளந்து வீய,Veru aa pilandhu veeya - இருபிளவாகி உருமாய்ந்தொழியும்படியாக திரு கால் ஆண்ட பெருமானே,Thiru kaal aanda perumaanai - திருவடிகளைக் கொண்டு காரியங் கொண்ட ஸ்வாமியே! பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர்,Brahman Sivan Indiran vinnavar - பிரமன் முதலான தேவர்களெல்லாம் கிளர்ந்து சூழ,Kilarndhu soozh - உத்ஸாஹத்தோடே வந்து சூழ்ந்துஸேவிக்க விளங்க,Vilanga - அதனாலே ஒரு விளக்கம் உண்டாகும்படியாக ஒரு நாள்,Oru naal - ஒரு நாளாகிலும் வீண் மீது காணவாராய்,Veen meedhu kaanavaaraai - ஆகாசத்தின்மேலே கண்ணுக்குத் தோற்ற எழுந்தருளாய். |
| 3319 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற ஐந்து ப்ரகாரங்களைக் கொண்டு அடியார்களை உகப்பித்தருளாநின்ற நீ எனது நெஞ்சிலும் எழுந்தருளியிருந்து வைத்து என் கண்ணுக்குத் தோற்றாதேயிருந்தால் தளரமாட்டேனோ வென்கிறார்) 5 | விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்! மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்! எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5 | விண் மீது இருப்பாய்,Vinn meedhu iruppaay - பரமபதத்தில் வீற்றிருப்பவனே! மலை மேல் நிற்பாய்,Malai meel nirppaa - (அர்ச்சாரூபியாய்) திருமலையிலே நிற்குமவனே! கடல் சேர்ப்பாய்,Kadal seerppaa - திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே! மண் மீது உழல்வாய்,Mann meedhu uzhalvaay - (ராமக்ருஷ்ணாதி விபவரூபத்தாலே அவதரித்து) பூமியின்மேல் ஸஞ்சரிப்பவனே! இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,Ivattrul engum maraindhu uraivaay - இந்த ஜகத்தில் ஸகலபதார்த்தங்களிலும் அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திப்பவனே! எண் மீது இயன்ற புறம் அண்டத்தாய்,Enn meedhu iyandra puram andaththaa - எண்ணிக்கைக்கு மேலே போகக் கடவதான (எண்ணிறந்த) பஹிரண்டங்களிலு முளனானவனே! (நீ) எனது ஆவியுள்,Enadhu aaviyul - என்னுடைய நெஞ்சுக்குள்ளே மீதாடி,Meedhaadi - மிகவும் நடையாடி விட்டு உரு காட்டாதே,Uru kaattaadhe - வடிவைக் கண்ணுக்காட்டாமல் ஒளிப்பாயோ,Oli paayo - ஒளிக்கின்றாயே! இது தகுதியோ? |
| 3320 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –காண்கைக்கு இவர் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்து அருளினானாகக் கொண்டு -யோக்யதை அயோக்யதை பாராதே லோகத்தை எல்லாம் அளந்து கொண்ட உன்னால் இழக்கப் படுவார் உண்டோ என்கிறார்.) 6 | பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம் தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6 | ஓர் அடி,Oru adi - ஒரு திருவடியை பாய் வைத்து,Paay vaiththu - பரப்பிவைத்து பாவை நிலம் எல்லாம்,Paavai nilam ellam - கடல் சூழ்ந்த ஸகல பூமியும் அதன் கீழ்,Adhan keezh - அந்தத் திருவடியின்கீழே யாம்படி தாய்,Thaai - தாவியளந்து, ஓர் அடியால,Oru adiyaal - மற்றொரு திருவடியாலே உலகு எல்லாம,Ulagu ellam - மேலுலக மெல்லாவற்றையும் தடவந்த,Thadavanda - ஆக்ரமித்த மாயோன்,Maayon - ஆச்சரியசேஷ்டிதவே! உன்னை காண்பான்,Unnai kaanbaan - உன்னைக் காணவேண்டி வருந்தி,Varundhi - பிரயாஸ்ப்பட்டு தீயோடு உடன் சேர் மெழுகு ஆய்,Theeyodu udan seer mezhuvu aay - நெருப்போடு சேர்ந்த மெழுகின் தன்மையை யுடையேனாய் உலகில,Ulakil - இவ்வுலகத்தில் எனை நாளும் திரிவேனோ,Enai naalum thirivaayno - எத்தனைநாளும் தட்டித்திரிவதேயோ என்கதி? |
| 3321 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பிரானே! எல்லாம் உன்னுடைய ஸங்கல்பாயத்தமாயிருக்க, எனக்கு அருள் செய்வதுதானோ மிகை என்கிறார்.) 7 | உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ! அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7 | உலகில் திரியும் கருமம் கதி ஆய்,Ulagil thiriyum karumam kathi aay - லோகத்தில் வியாபரிக்கிற ஸாதன கர்மஸ்வரூபியாயும் உலகம் ஆய்,Ulagam aay - அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்,Ulakukke oru uyirum aanaay - ஸர்வலோகங்களுக்கும் எகாத்மாவாயும் நிற்பவனே! புறம் அண்டத்து,Puram andaththu - அண்டங்களுக்கு வெளிப்பட்டிருப்பவர்களாய் அலகு இல் பொலிந்த,Alaku il polinda - எண்ணிக்கையில்லாதபடி விளங்குபவர்களாய் திசை பத்து ஆய,Disai paththu aay - பத்துத்திசைகளிலும் ஞானத்தாலே வ்யாப்தாயிருக்கின்ற முக்தாத்மாக்களை வடிவாகவுடையவனே! அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு,Alaku il polinda arivilenukku - எண்ணிக்கையில்லாதபடி விளங்குகின்ற அஜ்ஞானத்தையுடையேனான என் விஷயத்தில் அருளாய்,Arulai - க்ருபைபண்ணவேணும். |
| 3322 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -தேஜோ மாயா விக்ரஹத்தையுடைய நீ அவ்வடிவை எனக்கு அனுபவிப்பியாதே சாம்சாரிக விஷயங்களில் தள்ளி இன்னம் கெடுக்கத் தேடுகிறாயோ என்கிறார்.) 8 | அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்! வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே! கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ? பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8 | அறிவார் உயிர் ஆனாய்,Arivaar uyir aanaay - ஞானிகளை ஆத்மாவாக வுடையவனே! வெறி கொள் சோதி மூர்த்தி,Veri kol sodi moorthi - ஸுகந்தமயமாய் தேஜோமயமாயிருந்துள்ள திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே! அடியேன் நெடுமாலே,Adiyaen nedumaale - அடியேனிடத்தில் அளவுகடந்த வியாமோஹமுடையவனே! அறிவு இலேனுக்கு அருளாய்,Arivu ilenukku arulai - அறிவிலியான என் விஷயத்திலே அருள் செய்ய வேணும். பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்க,Piridhu onru ariya adiyaen aavi thigaiyka - வேறொரு புகலறியாத அடியேனுடைய நெஞ்சு கலங்கும்படியாக கிறி செய்து,Kiri seydhu - ஏதோ சூதுபண்ணி என்னை புறத்து இட்டு,Ennai purathu ittu - என்னைப் புறம்புண்டான பற்றுக்களிலே அகப்படுத்தி இன்னம் கெடுப்பாயோ,Innam kettuppaayoo - இன்னமும் கெடுக்க நினைக்கிறாயோ? |
| 3323 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உனக்கு விதேயமான விஷய இந்திரியங்கள் நடையாடுகிற தேசத்திலே வைத்து என்னை முடிக்கத் தேடுகிறாயோ உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ளும் காலம் அணித்தது ஆகாதோ என்கிறார்.) 9 | ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ? தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9 | ஆவி திகைக்க,Aavi thigaiyka - நெஞ்சு கலங்கும்படியாந ஐவர் குமைக்கும்,Aivar kumaikkum - பஞ்சேந்திரியங்களும் பீடிக்கும் படியான சிற்றின்பம்பல,Sitrinbampala - அற்பாஸரங்களான விஷயங்கள் பலவற்றை பாவியேனை நீ காட்டி,Paaviyeanai nee kaatti - பாவியேன் கண்ணிலே நீ காண்பித்து படுப்பாயோ,Paduppaayoo - முடிக்க நினைக்கிறாயோ? வையம் தாவி,Vaiyam thaavi - பூமி முழுவதையும் அளந்து கொண்ட ஸ்வாதீனமாக்கிக் கொண்ட தட தாமரை கட்கே,Thada thamarai kattke - பெரிய திருவடித் தாமரைகளிலே நான் அந்வயிக்கும்படி கூவிக்கொள்ளும் காலம்,Koovikkollum kaalam - என்னை யழைத்துக் கொள்ளுங்காலம் இன்னம் குறுகாதோ,Innam kurukaadho - இன்னமும் ஸமீபித்ததாக ஆகக்கூடாதோ? |
| 3324 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அத்தை உன் திருவடிகளில் கைங்கர்யம் அல்லாமையாலே வேண்டா என்றேன் அத்தனை -அப்படியே கைவல்யமும் வேண்டேன் -என்கிறார்.) 10 | குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10 | மாயோன்,Maayon - ஆச்சரியமானவனே! குறுகா நீளா,Kurugaa neelaa - ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும் இறுதி கூடா,Irudi kooda - முடிவுமில்லாமலும் எனை ஊழி,Enai oozhi - எக்காலத்திலும் சிறுகா பெருகா,Sirukaa perugaa - க்ஷய வ்ருத்திகளில்லாமலும் அளவு இல்,Alavu il - பரிச்சேதமற்றதாயு மிருக்கிற இன்பம்,Inbam - கைவல்யா நுபவஸுகமானது சேர்ந்தாலும்,Serndhaalum - வந்து கூடினாலும் தெரியில்,Theriyil - நிரூபித்துப்பார்க்கில் மறுகால் இன்றி,Marukaal inri - பின்னையொருகாலும் இல்லாதபடியாக (மிகவும் அற்பகாலமாக) உனக்கே ஆன் ஆகும் சிறு காலத்தை,Unakke aan aakum siru kaalatthai - உனக்கே அடிமைப்படும்படியான ஸ்வல்பகாலத்தை உறுமோ,Urumoo - ஒத்திருக்குமோ? அந்தோ,Andhoo - ஐயோ? |
| 3325 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (இத் திருவாய்மொழியானது தன்னோடு அந்வயமுடையாரை ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11 | தெரித்தல் நினைதல் எண்ணல் ஆகா,Teriththal ninaiththal ennall aakaa - சாஸ்த்ரஜ்ஞானத்தாலும் மனனத்தாலும் த்யானத்தாலும் பரிச்சேகதிக்க முடியாத திரு மாலுக்கு,Thiru Maalukku - ஸ்ரீமந்நாராயணனுக்கு தொண்டர் தொண்டர்,Thondar thondar - உரிய அநந்யார்ஹ சேஷ பூதர்களான பக்த பக்தர்களுக்கு தொண்டன்,Thondan - பக்தரான சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார் தெரிய சொன்ன,Theriyat sonna - விசதமாக அருளிச்செய்த ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,ePaththum - இந்தத் திருவாமொழி (தன்னைக் கற்குமவர்களை) உலகம் உண்டாதற்கு,Ulagam undaatharku - உலக முண்டவனான எம்பெருமான் விஷயத்திலே உரிய தொண்டர் ஆக்கும்,Uriya thondar aakum - அநந்யார்ஹ சேஷ பூதாரக்கும். |
| 3414 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (விசித்திரமான காரியங்களையும் காரணங்களையும் எல்லாம் விபூதியாக யுடையனாய் அனுசந்தித்து -இவை என்ன படிகள் என்று விஸ்மிதராய் எம்பெருமானைக் கிடக்கிறார்.) 1 | மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய் தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1 | மாயா,Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே! வாமனனே,Vaamananey - வாமநாவதாரஞ் செய்தவனே! மதுசூதா,Madhusootha - மதுகைடபர்களைத் தொலைத்தவனே! நீ அருளாய்,Nee arulaai - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்; தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய்,Thee aai neer aai nilan aai visumbu aai; kaal aai - பஞ்ச பூதங்களுமாய் தாய் ஆய் தந்தை ஆய்,Thaai aai thandhai aai - மாதா பிதாக்களாய் மக்கள் ஆய்,Makkal aai - வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய் மற்றும் ஆய்,Matrum aai - அல்லாதவையுமாய் முற்றும் ஆய்,Mutrum aai - சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய் நீ ஆய்,Nee aai - அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய் நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிற்கிற இந்தச் தன்மைகள் என்ன நியாயங்கள்,Enna niyayangal - என்னவகைகளோ! |