| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3183 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி - எனக்கு இவை ஒன்றும் இல்லையே ஆகிலும் நிரதிசய போக்ய பூதனாய் இருந்த உன்னை விட்டு ஒரு படியாலும் நான் தரிக்க மாட்டாமையாலும் அடியேனை விஷயீ கரிக்கைக்காக நீ ஸ்ரீ வர மங்கல நகரிலே வந்து புகுந்து அருளுகையாலும் – உனக்கு அடிமையான இவ்வாத்மாவை நீ போகிடில் இழவு உன்னதாகையாலும் அடியேனைப் பொகட்டு அருள ஒண்ணாது – ஆதலால் அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்.) 1 | நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே! சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர் வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே –5-7-1 | சேறு,Seru - சேற்று நிலங்களிலே செந்நெலூடு,Senneloodu - செந்நெற்பயிர்களிடையே தாமரை மலர்,Thaamarai malar - தாமரைகள் மலரப்பெற்ற சிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - கிரிவரமங்கையென்னும் வானமாமலைப்பதியிலே வீற்றிருந்த எந்தாய்,Veetrirundha endhaay - இருந்தருளும் எம்பெருமானே! அரவின் அணை அம்மானே,Aravin anai ammaaney - சேஷசமயனனான தலைவனே! நோற்ற,Notra - நானாக அனுட்டித்த நோன்பு இலேன்,Nonbu ilean - கருமயோக முடையேனல்லேன்; நுண் அறிவு இலேன்,Nun arivu ilean - நுட்பமான ஞானயோகமும் உடையேனல்லேன்; ஆகினும்,Aakinum - இங்ஙனே நைம்முத வற்றவனேயானாலும் இனி,Ini - இது முதலாக உன்னைவிட்டு,Unnaivittu - உன்னை யொழிய ஒன்றும்,Ondrum - சிறிதும் ஆற்ற நிற்கின்றிலேன்,Aatra nirkindrilean - தரித்திருக்க மாட்டுகின்றிலேன்; உனக்கு,Unakku - ஸர்வரஷகனென்று பேர்பெற்றிருக்கிற உனக்கு அங்கே,Angae - அந்த வானமாமலைபதிதன்னிலே மிகை அல்லேன்,Migai allean - (ரக்ஷ்யவர்க்கத்தில்) வெளிப்பட்டவனல்லேன் (என்னை ரக்ஷித்தே தீரவேணுமென்றபடி. |
| 3184 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவடிகளை நான் பெறும் இடத்தில் பிரதிபந்தகம் உண்டு எனில் அத்தையும் நீயே போக்கி உன் கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் .) 2 | அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே! திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2 | இலங்கை,Ilangai - லங்காபுரியை செத்த,Seththa - தொலைத்த அம்மானே,Ammaaney - ஸ்வாமியே! திங்கள் சேர்,Thingal ser - சந்திரனையும் சேர்ந்திருக்கிற மணிமாடம்,Manimaadam - மணி மயமான மாடங்களையுடைத்தாய் நீடு,Needu - விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற கிரீவரமங்கலம் நகர் உறை,Sreevaramangalam nagar urai - கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற சங்கு சக்கரத்தாய்,Sangu sakkaraththaay - சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே நான்,Naan - அடியேன் அங்குற்றேன் அல்லேன் ,Ankutren allean - நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன். இங்குற்றேன் அல்லேன்,Ingurtren allean - உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து,Unnai kaanum avaavil veezhndhu - உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி எங்குற்றேனும் அல்லேன்,Enguttrenum allean - ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்; தமியேனுனக்கு,Thamiyean unakku - இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருளாய்,Arulaay - அருள்புரியவேணும். |
| 3185 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உம்மை விஷயீ கரித்தால் பிரயோஜனம் என் என்னில் - சர்வ பிரகார பரி பூர்ணனான நீ அத்யந்த நிஹீனனான என்னை விஷயீ கரித்துப் பெற்றது ஒரு பிரயோஜனம் கண்டிலேன் - வெறும் உன் க்ருபையாலே செய்து அருளினாய் அத்தனை -அப்படியே மேலும் என் அபேக்ஷிதங்கள் செய்து அருள வேணும் என்கிறார்.) 3 | கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3 | கருளன் புள்கொடி,Karulan pulkodi - கருடப்பறவையைக் கொடியாகவுடையனாய் சக்கரம் படை,Sakkaram padai - திருவாழியை ஆயுதமாகவுடையனாய் வானம் நாட,Vaanam nada - பரமபதத்தை நாடாகவுடையனான பெருமானே! எம்கார் முகில் எள்ளு,Emkaar mugil ellu - எமக்குக் காளமேகம் போன்ற திருவுருவைக் காட்டி உபசரிக்குமவனே! தெருள் கொள்,Therul kol - மிகுந்த ஞானத்தையுடையராய் கால் மறை வல்லவர்,Kaal marai vallavar - நான்கு வேதங்களிலும் உள்ளவர்களான பலர்,Palar - பல ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்,Vaal - வாழப்பெற்ற கிரீவரமங்கலம் நகர்க்கு,Sreevaramangalam nagarkku - வானமாமலைப்பதிக்கு அருள் செய்து,Arul seydhu - கிருபைபண்ணி அங்கு இருந்தாய்?,Angu irundhaay? - அத்திருப்பதியிலே நித்யவாஸம் செய்யுமவனே! பொருள் அல்லாத என்னை,Porul allaadha ennai - அபதார்த்தமாய் கிடந்தவென்னை பொருள் ஆகி,Porul aagi - ஸ்வரூபம் பெற்றரளும்படி அங்கீகரித்து அடிமை கொண்டாய்,Adimai kondaay - (திருவாய்மொழியாடுகையாகிற இக்) கைங்கரியத்தை என் பக்கலிலே திருவுள்ளம் பற்றினாய்; (இப்படியாகச்செய்த மஹோபகாரத்திற்கு) ஒரு கைம்மாறு அறியேன்,Oru kaimmaaru ariyen - நானொரு கைம்முதலுடையேனாக அறிகின்றிலேன். |
| 3186 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.) 4 | மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே! தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4 | மாறு சேர் படை,Maaru ser padai - விரோதிகளாய்க்கொண்டு சேர்ந்த வேளையையுடைய நூற்றுவர்,Nuurruvar - துரியோதநாதிகள் நூறு பேர்களும் மல்க,Malka - தொலையும்படி அன்று,Andru - அக்காலத்தில் ஓர் ஐவர்க்கு ஆம்,Or aivarkku aam - பஞ்சபாண்டவர்களுக்குத் துணைவனாயிருந்து கொண்டு மாயம் போர் பண்ணி,Maayam por panni - ஆச்சரியமான யுத்தத்தை நடத்தி நீறு செய்த எந்தாய்,Neeru seydha endhaay - நீறுபடுத்தின ஸ்வாமியே! நீலம் கீண்ட அம்மானே,Neelam keenda ammaaney - பூமியை ப்ரளயாபத்தில் நின்றும் இடர்ந்தெடுத்த பெருமானே! தேறு ஞானத்தர்,Theru gnaanaththar - தெளிந்த ஞானத்தையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடைவிடாமல் நடக்குமிடமான கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப் பதியிலே ஏறி,Eri - குடியேறி வீற்றிருந்தாய்,Veetrirundhaay - பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே உன்னை,Unnai - உன்னை எங்கு எய்த,Engu eydha - எங்கேவந்து கிட்டுவதாக கூவுவன்,Koovuvan - நான் கூப்பிடுவேன்? (உன்னை நான் நிர்பந்திருப்பதென்றொரு! பொருளுண்டோ? என்றவாறு.) |
| 3187 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.) 5 | எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே! செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர் கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5 | எய்தக் கூவுதல்,Eydha koovudhal - உன்னைப் பெறுவதற்காகக் கூப்பாடு போடுவதானது எனக்கு ஆவதே,Enakku aavedhe - எனனக்குத் தகுமோ எவ்வ தெய்வத் துளாயும் ஆய் நின்று,Evva dheivaththulaayum aay nindru - எப்படிப்பட்ட சத்ருணமூஹத்தினுள்ளும் ஊர் திருந்து கைதவங்கள் செய்யும்,Kaidhavangal seyyum - க்ருத்ரிமங்களைச் செய்யுமவனான (அதாவது, அஸுரவர்க்கத்தினுள்ளே புத்த விக்ரஹபரிக்ரஹம் பண்ணிக் கலந்து நின்று வைதிகருசியைக் குலைத்து வியாமோஹிப்பித்தவனான) கரு மேனி அம்மாளே,Karu meni ammaaley - கரிய திருமேனி கொண்ட ஸ்வாமியே! செய்த வேள்வியர்,Seydha velviyar - க்ருதக்ருத்யர்களான வையம் தேவர் அறா,Vaiyam dhevar araa - நிலத் தேவர்கள் இடைவிடாமல் வர்த்திக்கிற சிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமலைப் பதியிலுள்ளாரெல்லாரும் கை தொழ,Kai thoza - ஸேவிக்கும்படி இருந்தாய்,Irundhaay - எழுந்தருளியிருப்ப வனே! நானும்,Naanum - அடியேனும் அதுகண்டேன்,Adhukandean - அவ்விருப்புக் காணப் பெற்றேன். |
| 3188 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்யலாம்படி வந்தருளவேணுமென்கிறார்.) 6 | ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே! தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6 | ஏனம் ஆய்,Yenam aay - மஹாவராஹரூபியாய் நீலம் கீண்ட,Neelam keenda - பூமியைக்குத்தியெடுத்து வந்து ஸ்வஸ்தானத்திலே சேர்த்த என் அப்பனே,En appaney - எம்பெருமானே! கண்ணா,Kanna - கண்ணபிரானே! என்றும்,Endrum - எந்நாளும் என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொள்ளுகிற நானம் நாயகனே,Naanam naayakaney - நித்யஸூரிநாதனே! மணி மாணிக்கம் சுடரே,Mani maanikam sudarey - மணி மாணிக்கம் போன்ற தேஜஸ்ஸையுடையவனே! தேவை மா பொழில்,Thevai maa pozhil - தேனையுடைய மாந்தோப்பு சூழ்ந்த தண்,Than - குளிர்ந்த கிரீவரமங்கலத்தவர்,Sreevaramangalaththavar - கிரீவரமங்கயிலுள்ளவர்கள் கை தொழ,Kai thoza - வணங்கும்படியாக உறை,Urai - அங்கு நித்யவாஸம் பண்ணுகிற வானமாமலையே,Vaanamaamalaiye - வானமாமலைப்பெருமானே! அடியேன் தொழ,Adiyean thoza - அடியேன் தொழும்படியாக வந்தருள்,Vandharul - இங்கே யெழுந்தருளாய் |
| 3189 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அடியேன் தொழவந்தருளே” என்றாரே; அர்ச்சாவதார ஸாமதியைக் குலைத்துக் கொண்டு ஸ்ரீரீவரமங்கலநகரிலிருந்து திருக்குருகூரிலே திருப்புளியடியிலே வந்து காட்சி தர வேணுமென்றாயிற்று. ஆழ்வாருடைய கோரிக்கை; அங்ஙனே வரக்காணாமையாலே ‘உபேக்ஷித்தான் போலும்’ என்றஞ்சி “பிரானே! என்னை உபேக்ஷியாதொழியவேணும்” என்கிறார்.) 7 | வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்! செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7 | வந்தருளி,Vandharuli - (பரமபதம் முதலியவற்றை விட்டு) எழுந்தருளி என்நெஞ்சு,En nenju - எனது நெஞ்சை இடம் கொண்ட,Idam konda - இருப்பிடமாகக் கொண்ட வானவர் கொழுந்தேத,Vaanavar kolundheyadha - நித்யஸூரிநாதனே! உலகுக்கு,Ulagukku - இவ்வுலகத்துக்கு ஓர் முந்தை தாய் தந்தையே,Or mundhai thaai thandaiyae - அநாதிஸித்த மாதாபிதா வானவனே! முழு ஏழ் உலகும் உண்டாய்,Muzu ezhu ulagam undaay - ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனே! செம் தொழிலவர்,Sem thozhilavar - சிறந்த அனுட்டானங்களையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடையறாமல் நடக்கப் பெற்ற கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப்பதியிலே அந்தம் இல் புகழாய்,Antham il pugazhaay - முடிவில்லாத புகழையுடையவனாய் எழுந்தருளியிருப்பவனே! அடியேனை அகற்றேல்,Adiyenai akatrel - என்னைப் புறம்புபடுத்தா தொழியவேணும். |
| 3190 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் * அடியேனைகற்றேலே என்று ஆழ்வார் பிரார்த்திக்கக்கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்!’ உம்மை அகற்றுவதற்கு என்ன ப்ரளக்தியுண்டாயிற்று? ‘அப்ரஸந்தமாக ஏதுக்கு இரக்கிறீர்?’ என்றருளிச்செய்ய, பிரானே! அடிமைக்கு விரோதியான ஸம்ஸாரத்திலே என்னை வைத்திருப்பது அகற்றினபடியன்றோ; அப்ரஸக்தமாயோ என் பேச்சிருப்பது? என்கிறார்.) 8 | அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன் அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய் பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும் புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8 | பகர் கதிர்,Pagar kathir - விளங்காநின்ற ஒளியையுடைத்தான் மணிமாடம் நீடு,Manimaadam needu - மணிமாடங்கள் ஓங்கியிருக்கப்பெற்ற திரீவரமங்கை,Thireevaramangai - வானமாமலையிவ்பதியிலே வாழ்நனே,Vaazhnane - வாழுமவனே! என்றும்,Endrum - ஒருநாளும் புகற்கு அரிய வந்தாய்,Pugarkku ariya vandhaay - (உதவாதவர்களுக்கு) ப்ராபிக்கவொண்ணாத ஸ்வாமியே! புள்ளின் வாய் பிளந்தானே,Pullin vaai pilandhaane - பநாசுரனது வாயை இரு துண்டாக்கி அவனை முடித்தவனே அதகற்ற நீ வைத்த,Athakatra nee vaitha - ஒதுக்குகைக்காக நீ உண்டாக்கி வைத்த மாயம்,Maayam - ஆச்சரியமான செய்கைகளையுடைய வல்,Val - பலிஷ்டங்களான ஐம்புலன்கள் ஆம்அவை,Aimpulangal aamaavai - பஞ்சேந்திரியங்களை நன்கு அறிந்தனன்,Nandru arindhanan - உள்ளபடியே அறியப்பெற்றேன்; நீ,Nee - பரம காருணிகனான நீ என்னையும் அகற்றி,Ennaiyum akatri - அடியேனையும் உன் பக்கலில் நின்றும் அகலச்செய்து அரு சேற்றில்,Aru setril - கால்வாங்கிக் கரையேற முடியாத விஷயங்களாகிற சேற்றிலே வீழ்த்தி கண்டாய்,Veezhthi kandaay - தள்ளிவைக்கின்றாயே! |
| 3191 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அகற்றி யென்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்” என்னக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! உம்முடைய வினைகளாகிற பிரபல விரோதிகள் காரணமாக நீர் அருஞ்சேற்றில் விழுந்து கிடந்திராகில் இதற்கு நான் என் செய்வது? என்ன; அதற்கு ஆழ்வார், ‘பிரானே! இதற்கு மேற்பட்ட பிரபல விரோதிகளையெல்லாம் அநாயாஸமாக அழிந்திருக்கிற வுனக்கு இது ஒரு வார்த்தையோ? இப்படியும் ஒரு கள்ளத்தனமான பேச்சுண்டோ?’ என்கிறார்.) 9 | புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே! தெள்ளியார் திரு நான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9 | புள்ளின் வாய் பிளந்தாய்,Pullin vaai pilandhaay - பகாஸுரனையழித்தவனே! மருது இடைபோயினாய்,Marudhu idai poyinaay - இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்து சென்றவனே! ஏழ் எருது அடர்ந்த,Ezhu erudhu adarntha - ஏழு ரிஷபங்களையும் கலிதொலைத்தன்னாயும் என்,En - என் நிறத்திலே கள்ளம் மாயவனே,Kallam maayavaney - கள்ள மாயங்களைச் செய்து போருமவனே! கரு மாணிக்கம் சுடரே,Karu maanikam sudarey - கரியமாணிக்கத்தின் ஒளிபோன்ற வடிவையுடையவனே! தெள்ளியார்,Thelliyaar - தெளிந்தவர்களாயும் திரு நால்மறைசன் வல்லார்,Thiru naal maraichan vallaar - வீலக்ஷணமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களாயுமிருப்பார் மலி,Mali - நிறைந்திருக்கப்பெற்ற தண்,Than - குளிர்ந்த கிரீவரமங்கை உன்,Sreevaramangai un - வானமாமலைப்பதியிலே இருந்த எந்தாய்,Irundha endhaay - எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியே! எனக்கு,Enakku - அடியேனுக்கு உய்யும் ஆறு,Uyyum aaru - உஜ்ஜீவநோபாயத்தை அருளாய்,Arulaay - அருளிச் செய்ய வேணும். |
| 3192 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஏதேனும் துர்த் தசையிலும் உன் திருவடிகளே சரணம் என்று இருக்கும் படி என்னைப் பண்ணி யருளின இம் மஹா யுபகாரத்துக்கு பிரதியுபகாரத்துக்கு இல்லை என்கிறார் .) 10 | ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம் மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10 | சேறு கொள்,Seru kol - சேற்று நிலங்களிலே வளர்கின்ற கரும்பும்,Karumpum - கரும்புகளும் பெரு செந்நெலும்,Peru sennelum - பெரிய செந்நெற் பயிர்களும் மலி,Mali - மலிந்திருக்கப்பெற்ற தண்,Than - குளிர்ந்த சிரீவரமங்கை,Sreevaramangai - வானமாமலைப்பதியிலே (எழுந்தருளியிருக்கிற) நாறு பூ தண் துழய் முடியாய்,Naaru poo than thuzhai mudiyaay - பரிமளம் மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடையவனே! தெய்வநாயகனே,Dheivanayakaney - தெய்நாயகப் பெருமானே! எனக்கு,Enakku - அடியேனுக்கு ஆறு,Aaru - உபாயமோவென்றால் நின் பாதமே சரண் ஆக,Nin paathame saran aaga - உன் திருவடிகளே உபாயமாக தந்தொழிந்தாய்,Thandhozindhaay - அநுக்ரஹித்து விட்டாய் (இந்த மஹோபகாரத்திற்கு) உனக்கு,Unakku - உன் விஷயத்திலே ஓர் கைம்மாறு ஒன்று நான் இலேன்,Or kaimmaaru ondru naan ilean - ஒரு பிரதியபகாரமு முடையேனல்லேன்; எனது ஆவியும்,Enadhu aaviyum - என்னுடைய ஆத்மாவும் உனதே,Unadhey - ஏற்கனவே உன்னுடையதாயிரா நின்றது. |
| 3193 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய்மொழியைப் பாட வல்லவர்கள் நித்ய ஸூ ரிகளுக்கு நிரந்தர போக்யராவார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்.) 11 | தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக் கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11 | தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்,Dheivanayakan Naranan Thirivikkiraman - எம்பெருமானுடைய அடி இணை மிசை,Adi inai misai - உபய பாதங்களிலே, கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன்,Koi kol poo pozhil soo zhul kuru kur sadagopan - ஆழ்வார் செய்த,Seydha - அருளிச் செய்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவை,Ivai - இந்த தண் சிரீவர மங்கை மேய பத்து,Than Sreevara Mangai meya paththu - வானமாமலைப்தி விஷயமான பதிகத்தை உடன்,Udan - கருத்துடனே வைகல்,Vaigal - எப்போதும் பாட வல்லார்,Paada vallaar - பாட வல்லவர்கள் வானோர்க்கு,Vaanorkku - நித்ய ஸூரிகளுக்கு ஆரா அமுது,Aaraa amuthu - ஆராவமுதமாயிருப்பர்கள். |