Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பண்டை நாளாலே (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3568திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (வேறு புகலற்ற அடியேனைக் குறித்து ஒரு வார்த்தை யருளிச் செய்து பிறவி கெடக் குளிர நோக்கியருளவேணுமென்று வேண்டுகிறார்.) 1
பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1
தெண் திரை பொருநல்,Then thirai porunal - தெளிந்த அலைகளையுடைத்தான தாமிரபர்ணியோடு சேர்ந்த
தண் பணை சூழ்ந்த,Than panai soozhndha - அழகிய சீர்நிலங்களால் குழப்பட்ட
திருப்புளிங்குடி,Thiruppulingudi - திருப்புளிங்குடி யென்கிற திருப்பதியிலே
கிடந்தானே,Kidandhaane - சயனித்தருள்பவனே!
நின் திரு அருளும்,Nin thiru arulum - உனது க்ருபையையும்
பங்கயத்தாள் திரு அருளும்,Pangayaththal thiru arulum - பெரிய பிராட்டியாருடைய க்ருபையையும்
பண்டை நாளாலே கொண்டு,Pandai naalaale kondu - நெடுநாளாகவே அடைந்து கொண்டு
நின்கோயில் சீய்த்து,Ninkoyil seeythu - உன்னுடைய திவ்யதேசத்திலே உரிய கைங்கரியத்தைப் பண்ணி
பல்படிகால் குடி குடி வழி வந்து,Palpadikal kudi kudi vazhi vandhu - அநாதிகாயமாய்ப் போருகிற வம்ச பரம்பரையாக
ஆள் செய்யும் தொண்ட ரோர்க்கு,Aaal seyyum thonda roorkku - அடிமைசெய்து யோருகிற அடியோங்கள் விஷயத்திலே
அருளி,Aruli - அருள் செய்து
சோதி யாய் திறந்து,Sodhi yaai thirandhu - அழகிய திருப்பவளத்தைத் திறந்து (நல்வார்த்தைகளைப் பேசி)
உன் தாமரை கண்களால் நோக்காய்,Un thaamarai kangalal nookkai - உனது தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கியருள வேணும்.
3569திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (உன் திருவடிகளை என் தலைமேல் வைத்தருளவேணு மென்று திருப்புளிங்குடிக் கிடந்தானைப் பிரார்த்திக்கிறார்.) 2
குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2
கொடி கொள் பொன் மதிள் சூழ்,Kodi kol pon madil soozh - கொடிகளாலே அலங்காரங்கொண்ட பொன்மயமான மதிகாளலே சூழப்பட்டு
குளிர் வயல் சோலை,Kulir vayal solai - குளிர்ந்த வயல்களையும் பொழில் களையுமுடைத்தான
திருப்புளிங்குடி கிடந்தானே,Thiruppulingudi kidandhaane - திருப்புளிங்குடியிலே சயனித்தருளும் பெருமானே
குடி கிடந்து,Kudi kidanthu - ப்ரபந்நகுல மரியாதை வழுவாமலிருந்து
ஆக்கம் செய்து,Aakkam seithu - குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்கி
தீர்த்த நின் அடிமை குற்றவேல் செய்து,Theertha nin adimai kuttraveel seithu - இதரவிஷயங்களில் ருசியைப் போக்கின வின் விஷயமானை அந்தரங்க கைங்கரியங்களை செய்து
உன்பொன் அடி கடவாதே,Unpon adi kadavaadhe - உனது அழகிய திருவடிகளை விட்டு நீங்காதே
வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி,Vazhi varugiira adiyarorkku aruli - பரம்பரையாய் வருகின்ற அடி யோமுக்கு அருள் செய்து
நீ ஒரு நாள்,Nee oru naal - நீ முன் பொருகாலத்தில்
படிக்கு அளவு ஆக நிமிர்த்த,Padikku alavu aaga nimirtha - பூமிக்குத் தகுதியாக நிமிர்க் தளந்து கொண்ட
தலைக்கு அணியாய்,Thalaikku aniyaai - என் தலைக்குத் தக்க அலங்காரமாம்படி பண்ணியருளவேணும்.
3570திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –இங்கனே ஒருபடியே கண் வளர்ந்து அருளுகிற பிரானே உன் திருவுடம்பு நோவாதோ – உன் திருவுடம்பு நோவாதே உன்னடியேனான எனக்காக நீ ஒரு நாள் தாமரைத் தடம் மலர்ந்தால் போலே திருக் கண்களை விழித்து எழுந்து இருந்து உன் தாமரை மங்கையும் நீயும் இந்த லோகம் எல்லாம் வாழும்படி இருந்து அருளாய் என்கிறார்.) 3
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3
திருப்புளிங்குடி கிடந்தானே,Thiruppulingudi kidandhaane - திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே
கிடந்த நான் கிடந்தாய்,Kidantha naan kidandhaai - இங்கு சயனிக்கத் தொடங்கினகாலம் முதலாக இப்படியே ஏகரீதியாகச் சயனித்துக் கொண்டிரா நின்றாய்
உன் திரு உடம்பு அசைய,Un thiru udambu asaiya - உன் திருமேனி நோவ
எத்தனை காலம் கிடத்தி,Eththanai kaalam kidandhi - இன்னு மெத்தனை காலம் சயனித்திருப்பாய்
தொடர்ந்து குற்றவேல் செய்து,Thodarnthu kuttraveel seithu - நிரந்தரமான நித்ய கைங்கரியஞ் செய்து
தொல் அடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி,Thol adimai vazhivarum thondarorkku aruli - அநாதியான அடிமைவழியிலே அக்வயித் திருக்கின்ற அடி யோமுக்கு அருள் செய்து
தடம் கொள் தாமரை கண் விழித்து,Thadam kol thamarai kan vizhithu - (உனது) விசாலமான தாமரைக் கண்களைப் பார்க்க விழித்து
உன் தாமரை மங்கையும் நீயும்,Un thamarai mangaiyum neeyum - திருத்தேவியாருடனே
இடம் கொள் மூ உலகும் தொழ,Idam kol moo ulagam thozha - விசாலமான மூவுலகமு தொழும்படியாக
இருந்தருளாய்,Irundharulai - வீற்றிருந்து ஸேவை ஸாதிக்க வேணும்
3571திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமாகக் கிடந்தது இருந்து நின்று என்னை அடிமை கொண்ட தர்ச நீயமான வடிவோடே கூட நான் காணும்படி வர வேணும் -என்கிறார்.) 4
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4
புளிங்குடி கிடந்து,Pulungudi kidanthu - திருப்புளிங்குடியிலே சயனித்தும்
வாருண மங்கை இருந்து,Vaaruna mangai irundhu - வாகுரை மங்கையிலே வீற்றிருந்தும்
வைகுந்தத்துள் நின்று,Vaikundaththul ninru - ஸ்ரீவைகுண்டத்திலே நின்றும்
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய்,Thulindha en sindhai aagam kazhiyaadhe ennai aalvaai - என் சிந்தையைத் தெளிவித்து அங்கே விட்டுக் பிரியாதேயிருந்து என்னை யாளுமவனே
எனக்கு அருளி,Enakku aruli - எண் திறத்திலே க்ருபை பண்ணி
நரிள்ந்த சீர்,Narilnda seer - (உனது) குளிர்ந்த திருக்குணத்தை பற்றி
உலகம் மூன்று உடன் வியப்ப,Ulagam moondru udan viyappa - மூவுங்கும் ஒருமித்து ஆச்சரியப் படும்படியாகவும்
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப,Naangal koothadi ninru aarp - நாங்களும் கூத்தாடிக் கோளாஹலம் செய்யும்படியாகவும்
பளிங்கு நீர்,Palingu neer - தெளிந்த நீரையுடைத்தான
மூகிலின்,Mookilin - காளமேகத்திலே
பவளம் போல்,Pavalam pol - பவளக்கொடி படர்ந்தாற்போலே
கனிவாய் சிவப்பு,Kanivai sivappu - கனிந்த திருவதரம் சிவந்து தோன்று மழகை
3572திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இப்பாட்டில் *கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை மயூர்ந்தானே!* என்ற விளியினால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே தமக்கு வந்து தோற்றி யருளவேணுமென்று பிரார்த்திக்கின்றமை விளங்கும்.) 5
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5
பளவம் நன்படர் கீழ்,Palavam nanpadar keezh - நல்ல பவளப் படரின் கீழே
சங்கு உளை,Sangu ulai - சங்குகள் உறையப் பெற்ற
பொருநல்,Porunal - தாமிர பர்ணியையுடைய
நண் திருப்புளிங்குடி கிடந்தாய்,Nan thiruppulingudi kidandhai - அழகிய திருப்புளிங் குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கவளம் மா களிற்றின்,Kaval ma kalittrin - பவளங்கொள்ளுமியல்லினான கஜேந்திராழ்வானுடைய
இடர் கெட,Idar keda - துயரம் தீரும்படி
தடத்து,Thadathu - பொய்கைக் கரைக்கு
காய் சினம் பறவை ஊர்ந்ததானே,Kai sinam paravai oornthathane - (விரோதிகள் திறந்து) வெல்லிய கினத்தை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு வந்தவனே!
பவளம் போல கனிவாய் சிவப்ப,Pavalam pola kanivai sivappa - பவளம் போன்று கனிந்த அதரம் விந்து தோன்ற
நின் பல் நிலா முத்தம்,Nin pal nila mutham - உன்னுடைய பல்லாகிற நிலாவையுடைய அதரத்தினது
கதிர் தவழ் முறுவல் செய்து,Kathir thaval muruval seithu - கதிர் உள்ளடங்காதே புறம்பே தவழும்படி புன்முறுவல் செய்து
காண நி வந்து,Kana ni vandhu - நான் காணும்படி நீ வந்தருளி
நின் திரு கண் தாமரை தயங்க நின்றருளாய்,Nin thiru kan thamarai thayanga nindrarulai - உனது திருக்கண்களாகிற தாமரை விளங்கும்படி நின்றருளவேணும்.
3573திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய அபி லஷிதங்கள் செய்ய ஒண்ணாத படி பிரதிபந்தகங்கள் உண்டு என்னில் –ஆஸ்ரிதருடைய ஆபத்து போக்குகைக்காக திவ்ய ஆயுதங்கள் ஏந்தி இருக்கிற நீ மாலி ப்ரப்ருதிகளான ராக்ஷஸரை முடித்தது போலே என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் -என்கிறார்.) 6
காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6
பொன்மலையின் மீ மிசை,Ponmalaiyin mee misai - பொன்மயமான மஹாமேருமலையின் மேலே படிந்த
கார்முகில் போல,Kaarmugil pola - காள மேகம் போலே
காய் சினம் பறவை ஊர்ந்து,Kai sinam paravai oornthu - வெல்லிய சினத்தையுடைய பக்ஷி ராஜனை நடத்தி
மா சினம் மாலி,Maa sinam maali - பெரிய சினத்தை யுடையனாய்க் கொண்டு வந்த மாலி யென்ன
மான் மாலி,Maan maali - சமாலி யென்ன
என்றவர் அங்கு பட,Enravar angu pada - இப்படிப்பட்டவர்கள் அங்கே முடியும் படியாக
கனன்று முன் நின்ற,Kanandru mun ninra - சீறி அவர்கள் முன்னே நின்ற
காய் சின யேந்தே!,Kai sina yenthe! - காய்சின வேந்தென்னுச் திரு நாமமுடைய பெருமானே!
கதிர் முடியானே,Kathir mudiyane - விளங்காநின்ற திருவபிஷேகத்தை புடையவனே!
கலி வயல் திரு புளிங்குடியாய்,Kali vayal thiru pulingudiyai - செழித்த வயலையுடை திருப் புளிங்குடியில் வாழ்பவனே!
காய்சினம்,Kaisinam - வெவ்விய சினத்தை யுடைய
ஆழி சங்கு வாள்வில் தண்டு,Aazhi sangu vaalvil thandu - திருவாழி முதலான பஞ்சாயு தங்களையும்
வந்தி,Vandi - திருக்கைகளில் தரித்துக் கொண்டு
எம் இடர் கடிவானே,Em idar kadi vaane - எமது இடங்களைப் போக்குமவனே. (திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்)
3574திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –துர்பலரோடு பிரபலரோடு வாசி இன்றிக்கே -ரக்ஷகனான நீ நாங்கள் வாழும் படி எங்கள் கண் எதிரே ஒரு நாள் இருந்திடாய் நின்றார்.) 7
எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7
எம் இடர் கடிந்து,Em idar kadinthu - எம்முடைய இடரைப் போக்கி
இங்கு என்னை ஆள்வானே,Ingu ennai aalvaane - இங்கு என்னை அடிமை கொண்டு போருமவனே
இமையவர் தமக்கும் ஆங்கு ஆணையாய்,Imayavar thamakkum angu aanaiyai - பிரமன் முதலிய தேவர்களுக்கும் அப்படியே ரக்ஷகனானவனே
செம்மடல் மலரும் தாமரை பழனம்,Semmadal malarum thamarai pazhanam - சிவந்த இதழ்கள் மலருகிற தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை யுடைத்தான
தண் திருப்புளிங்குடி கிடந்தாய்,Than thiruppulingudi kidandhai - அழகிய திருப்புளிங்குடியிலே சயனித்தருள்பவனே
நாம்,Naam - அடியொம்
நம்முடைய அடியர் கவ்வை கண்டு உகந்து,Nammudaiya adiyar kavai kandu ugandhu - பாகவதர்களின் கோலாஹலங் கண்டு மகிழ்ந்து
களித்து உளம் நலம் கூர,Kalithu ullam nalam koora - உள்ளத்தினுள்ளே பரமானைத்தம் பொங்கும்படியாக
இம் மடவுலர்காண,Im madavularkana - அறிவிலிகளான இவ்வுலகத்தாருங் காண
நீ ஒருநாள் எங்கள் கண் முகப்பே இருந்திடாய்,Nee orunaal engal kan mugappe irundhidai - நீ ஒருநாள் எமது கண்ணெதிரே இருந்தருளவேணும்
3575திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அந்த விபூதியில் அன்றியே சகல லோகங்களும் கண்டு உன் திருவடிகளில் விழுந்து தொழுது வாழும் படி இந்த விபூதியிலும் திருப்புளிங்குடியிலே உன் வாசி தோற்ற எழுந்து அருளி இருக்க வேணும் என்கிறார்.) 8
எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8
திங்கள் சேர்மாடம்,Thingal sermadam - சந்திர மண்டலத்தளவுமோல்கின மாடங்களையுடைய
திருப்புளிங்குடியாய்,Thiruppulingudiyai - திருப்புளிங் குடியில் வாழ்பவனே
திருவைகுந்தத்துள்ளாய் தேவா,Thiruvaikundathullai devaa - ஸ்ரீவைகுண்ட மென்னுந்திருப்பதியில் நிற்கும் தேவனே
எங்கள் எண் முகப்பே,Engal en mugappe - எங்கள் கண் முன்னே
உலகர்கள் எல்லாம்,Ulagar ellam - லோகத்திலுள்ளாரெல்லாரும்
அடி இணை,Adi inai - திருவடியினையை
தொழுதுஎழுது இறைஞ்சி,Thozhudhuzhuthu iraindhi - தொழுவது மெழுவதுமாயிருந்து வணங்கி
தங்கள் அன்பு ஆர,Thangal anbu aara - தங்களுடைய பக்தி வளர
நமது சொல்வலத்தால்,Namadhu solvalathaal - தாம்தாம் சொல்லக் கூடியவளவிலே
தலைத் தலை சிறந்து பூசிப்ப,Thalai thalai sirandhu poosippa - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து ஸ்தோத்திரங்களைப் பண்ணும்படி
இ கண் மா ஞாலத்து இதனுளும்,E kan maa gnalathu idhanulum - இந்த மிக விசாலமான பூமியிலே இத்திருப்புளிங்குடியிலும்
வீற்றிடங் கொண்டு,Veetridam kondu - உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி
ஒரு நாள் இருந்திடாய்,Oru naal irundhidai - ஒரு நாளாவது இருந்தருள வேணும்
3576திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (எம்பெருமானுடைய பரமஸுகுமாரமான திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் அடியோடு தகாது ; ஆயினும் இங்குள்ள பக்தர்கள் ஸேவிக்கும்படியாக இம்முரட்டு நிலத்திலும் எம்பெருமானெழுந் தருளியிருக்க ப்ராப்தமாகிறது என்கிற தத்துவத்தை வெளியிட்டுக் கொண்டு பிரார்த்தனை பண்ணுகிறாரிப் பாட்டில்.) 9
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9
சேறுஇளவாளை,Seru ilavaalai - தன்னிலமான சேற்றிலே வள வருகையாவே இளமை தங்கிய வாளைகள்
செந்நெலூடுஉகளும்,Senneloodu ugalum - செந்நெற்பயிர்களினிடையே களித்து வர்த்திப்பெற்ற
செழு பணை திரு புளிங்குடியாய்,Sezu panai thiru pulingudiyai - அழகிய நீர் நிலங்களையுடைய திருப்புளிங்குடியிலே வாழ்பவனே
அடியோம் போற்றி,Adiyom potri - அடியோங்கள் மங்களா சாஸனம் பண்ணி
ஓவாத,Ovadha - இடைவிடாதே
கண் இணை குளிர,Kan inai kulira - கண்கள் குளிருமாறு
புது மலர் ஆகத்தை பருக,Puthu malar agaththai paruga - புதிய மலர்போலே ஸுகுமார மாயிரக்கிற உன் திருமேனியை யநுபகிக்கும்படி
கூற்றம் ஆய்,Kootram aai - (எதிரிகளுக்கு) மிருத்யுவாய் கொண்டு
அசுரர் குலம்,Asurar kulam - அஸுரவர்க்கத்தை
முதல் அரிந்த,Mudhal arindha - வேரோடே களைந்ததொழித்த
கொடு வினை படைகள் வல்லவனே,Kodu vinai padaigal vallavane - கொடுந்தொழில் செய்யவல்ல ஆயுதங்களை விதேயமாக புடையவனே
மீற்றிடல் கொண்டு,Meetidal kondu - உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி
வியன் கொள்மா ஞாலத்து இதனுளும்,Viyan kol maa gnalathu idhanulum - விஸ்தாரமான மஹா பூமண்ட லத்தினுள்ளேயும்
இருந்திடாய்,Irundhidai - இருந்தருளவேணும்
3577திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -மிகவும் நிரதிசய போக்யமான உன் திருவடிகளிலே நானும் வந்து அடிமை செய்யும் படி என்னை அங்கே அழைத்துக் கொள்ளுதல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -என்கிறார் .) 10
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10
கொடுவினைபடைகள் வல்லையாய்,Koduvinai padaigal vallaiyai - (விரோதிகள் திறத்துக்) கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே!
அமரர்க்கு இடர் கெட,Amararku idar keda - தேவர்களுக்கு இடர் கெடும்படியாக
அசுரர்கட்கு இடம் செய்,Asurargatku idam sei - அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து
கடு வினை நஞ்சே,Kadu vinai nanje - விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே!
என்னுடைய அமுதே,Ennudaiya amudhe - எனக்குப் பரம போக்யமான அம்ருதமே!
கலிவயல் திரு புளிங்குடியாய்,Kali vayal thiru pulingudiyai - செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே!
வடிவு இணை இல்லா மலர் மகள்,Vadivu inai illaa malar magal - வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும்
மற்றை நிலமகள்,Matrai nila magal - அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும்
பிடிக்கும் மெல் அடியை,Pidikkum mel adiyai - வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை
கொடு வினையேணும் பிடிக்க ஒரு நாள்,Kodu vinai enum pidikka oru naal - தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும்
கூவுதல் வருதல் நீ செய்யாய்,Koovudhal varudhal nee seiyai - என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும்
3578திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார்.) 11
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11
குரைகடல் கடைந்தவன் தன்னை,Kuraikadal kadainthavan thannai - குமுறுகின்ற கடலைக் கடைந்தவனான எம்பெருமானைக் குறித்து
கூவுதல் வருதல் செய்திடாய் என்று,Koovudhal varudhal seidhidai endru - அழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ இரண்டதொன்று செய்ய வேணுமென்று அபேக்ஷித்து
மேலி நன்கு அமர்ந்த,Meli nangu amarntha - (அப்படியே பெறுகையாலே) நன்கு தரிக்கப்பெற்ற
வியன்புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்,Viyan punal porunal vazhuthi naadan sadagopan - பரிபூர்ணமான தீர்த்ததையுடைய தாமிர பர்ணி சூழ்ந்த வழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வாருடைய
நாஇயல் பாடல்,Naa iyal paadal - திருநாவின் தொழிலான லாகிய
ஆயிரத்துள்ளும்,Aayirathullum - ஆயிரம் பாசுரங்களினுள்ள
இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இப்பதிகத்தைக் கற்க வல்லவர்கள்
மூன்று உலகம் அளந்தான் அடி இணை,Moondru ulagam alandhaan adi inai - திரி விக்கிரமனுடைய பாதங்களை
ஓவுதல் இன்றி,Ovudhal inri - அநவரதமும்
உள்ளத்து ஓர்வார்,Ullathu oorvaar - நெஞ்சிலே அநுஸ்திக்கப் பெறுவர்கள்.