| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2963 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்) 1 | பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப் பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப் பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1 | பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை,Payilum sudar oli moorthiyai - செறிந்த சுடர்ச் சோதி யுருவனாய் பங்கயம் கண்ணனை,Pangayam kannanai - தாமரை போன்ற திருக்கண்களையுடையனாய் பயில இனிய,Payila iniya - பழகப் பழகப் பரம போக்யனாய் நம் பால் கடல் சேர்ந்த பரமனை,Nam paal kadal serndha paramanai - நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருளும் பரம புருஷனான எம்பெருமானை பயிலும் திரு உடையார்,Payilum thiru udaiyaar - நிரந்தராநுபவம் பண்ணுகையாகிற செல்வமுடையவர்கள் யவர் ஏனும்,Yavar enum - எது பிறப்பு ஏதியல்வாக நின்றவரானாலும் அவர்,Avar - அவர்களே பயிலும் பிறப்பிடை தோறும்,Payilum pirappidai thorum - மேன்மேலும் நேர்கின்ற பிறவிகள் தோறும் எம்மை,Emmai - நம்மை ஆளும்,Aalum - அடிமைகொள்ளவில்லை பரமர் கண்டீர்,Paramar kandir - மஹான்களாவர். |
| 2964 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமியான ஸ்வாமிகளென்கிறார்.) 2 | ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத் தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2 | ஆளும் பரமனை,Aalum paramanai - ஆள்கின்ற பரம புருஷனாயும் கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாயும் ஆழி பிரான் தன்னை,Aazi praan thannai - திருவாழியாழ்வானை யுடைய உபகாரகனாயும் ஓர் நான்கு தோளும் உடை,Or naangu tholum udai - ஒப்பற்ற நான்க புஜங்களையுடையவனாயும் தூ மணி வண்ணன்,Thoomani vannan - பரிசுத்தமான நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனாயுமிருக்கின்ற எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை தாளும் தடக்கையும் கூப்பி,Thaalum thadakkaiyum koopi - கால்களையும் கைகளையும் கூப்பி பணியும் அவர்,Paniyum avar - நமஸ்கரிப்பவர்கள் பிறப்பிடை தோறு,Pirappidai thoaru - ஜன்மந்தோறும் நாள் தோறும்,Naal thoarum - தினந்தோறும் எம்மை,Emmai - எங்களை ஆள் உடை நாதர் கண்டீர்,Aal udai naadhar kandir - ஆட்கொள்ளும் அடிகளாவர். |
| 2965 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்.) 3 | நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப் பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர் ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3 | நாதனை,Naadhanai - ஸ்வாமியாய் ஞாலமும் வானமும் ஏத்தும்,Gnaalamum vaanamum yaethum - உபய விபூதியிலுள்ளாரும் ஏத்துதற்குரியவனாய் நறுந்துழாய்ப் போதனை,Narunthuzhaip podhanai - பரிமளமுள்ள திருத்துழாய் மலர்மாலையை யுடையனாய் பொன் நெடு சக்கரத்து,Pon nedu sakkarathu - அழகினால் உயர்ந்த திருவாழியை யுடையனான எந்தை பிரான் தன்னை,Endhai praan thannai - எம்பெருமானை பாதம் பணிய வல்லாரை,Paadham paniya vallaaraai - திருவடிகளில் வணங்கவல்லவர்களை பணியும் அவர்,Paniyum avar - வணங்குமவர்கள், ஓதம்,Oadham - பேசப்படுகிற பிறப்பிடை தோறு,Pirappidai thoru - ஜன்மங்கள்தோறும் எம்மை,Emmai - எங்களை ஆள் உடையார்கள் கண்டீர்,Aal udaiyaarkal kandir - அடிமை கொள்பவர்களாவர். |
| 2966 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (திருவரை பூத்தாற்போலே யிருக்கிற திருப்பீதாம்பரத்தை யணிந்தவனாய், திருக்கழுத்திலே சாத்தும் திவ்யாபரணங்களையுடையனாய், அழகிய அரைநூல் மாலையை யணிந்தவனாய், ஒரு பக்கத்திற்கு வேறொரு ஆபரணம் வேண்டாதபடி தானே போருமாய், காளமேகத்திலே மின்னினாயப்போலே யிருக்கிற யஜ்ஞோப வீதத்தையுடையவனாய், ஆச்ரிதரக்ஷணத்திற்கு முடிகவித்திருப்பவனாய், மற்றம் எண்ணிறந்த திருவாபரணங்களை இயற்கையாகவே அணிந்துள்ளவனான ஸ்ரீமந்நாராயணனுக்கு தாஸாநுதாஸர்களாயிருக்குமவர்கள் பிறவிவேதாறும் எமக்கு அஸாதாரண சேஷிகளாவர்கள் என்றாராயிற்று.) 4 | உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன் புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன் நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர் இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4 | உடை ஆர்ந்த ஆடையன்,Udai aarndha aadaiyan - திருவரைக்குத் தகுதியான திருப்பரிவட்டத்தையுடையவனும் கண்டிகையன்,Kandikaiyan - கண்ட பூஷணத்தையுடையவனும் உடை நாணினன்,Udai naaninan - திருப்பரிவட்டத்தின் மேல் சாத்தின திருவரை நாணையுடையவனும் புடை ஆர்,Pudai aar - ஸந்நிவேசமமைந்த பொன் நூலினன்,Pon noolinan - பொற்பூணூலை யுடையவனும் பொன் முடியன்,Pon mudiyaan - அழகிய திருமுடியையுடையவனும் மற்றும் பல் கலன்,Matrum pal kalan - மற்றும் பலவகைப்பட்ட ஆபரணங்களையும் நடையா உடை,Nadaiyaa udai - இயற்கையாக உடையவனுமான திரு நாரணன்,Thiru naaranan - ஸ்ரீமந்நாராயணனுக்கு தொண்டர்,Thondar - அடியரானார்க்கம் அடியரானவர் இடை ஆர்,Idai aar - நிரந்தரமான பிற்ப்பிடை தோறு,Pirappidai thoru - பிறவிதோறும் எமக்கு,Emakku - எங்களுக்கு எம் பெரு மக்கள் கண்டீர்,Em peru makkal kandir - எவ்வளவோ சிறந்தவர்களாவர். |
| 2967 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தர பார்க்குங்கூட அபேக்ஷிதத்தைத் தலைக் கட்டிக் கொடுத்தருளு மெம்பெருமானுடைய ஔதார்யத்திலே தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்று இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.) 5 | பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5 | பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை,Peru makkal ullavar tham perumaanai - பெருமக்கள் என்னப்படுகின்ற நித்யஸூரிகட்குத் தலைவனும் அமரர்கட்கு,Amararkatku - சாவாமை வேண்டியிருக்கும் தேவர்களுக்கு அருமை ஒழிய,Arumai ozhia - அருமைப்படாதபடி அன்று,Andru - முன்பொருகாலத்தில் ஆர் அமுது ஊட்டிய,Aar amudhu oottiya - பூர்ணமாக அம்ருதத்தைப் பூஜிப்பித்தவனுமான அப்பனை,Appanai - எம்பெருமானை உத்தேசித்து பெருமை,Perumai - (அவனது) பெருமைகளை பிதற்ற வல்லாரை,Pithatra vallaaraai - அடைவின்றியே சொல்லுமவர்களான பாகவதர்களை பிதற்றுமவர்,Pithatrumavar - அடைவின்றியே சொல்லித் துதிக்குமவர்கள் வருமையும் இம்மையும்,Varumaiyum immayum - இஹலோக பரலோகங்களிரண்டிலும் நம்மை அளிக்கும் பிராக்கள் கண்டீர்,Nammai alikkum praakkal kandir - நம்மை உஜ்ஜிவிப்பிக்கும் ஸ்வாமிகளாவர். |
| 2968 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாமல் அநந்யப்ரயோஜநரா யிருப்பார்க்குத் தன் வடிவழகை அநுபவிக்கும் உஜ்வல ஸ்வபாவனான எம்பெருமானை அநுபவிப்பார் நமக்கு ரக்ஷகரென்கிறார்.) 6 | அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத் துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர் சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6 | அளிக்கும் பரமனை,Alikkum paramanai - உபகரிக்குமிடத்தில் தனக்கு மேலில்லாதபடி உபகரிக்குமவனும் கண்ணனை,Kannanai - க்ருஷ்ணனாநவந்து அவதரித்தவனும் ஆழி பிரான் தன்னை,Aazi piraan thannai - திருவாழியைக் கையிலேந்தி மஹோபகாரங்கள் செய்யவனும். துளிக்கும் நறுகண்ணி,Thulikkum narukanni - தேன் வெள்ளமிடா நின்று நறுமணம் மிக்க மாலையையணிந்துள்ளவனும் தூமணி வண்ணன்,Thoomani vannan - அழுக்கற்ற மாணிக்கம் போன்ற வடிவையுடையவனும் ஒளி கொண்ட சோதியை,Oli konda sothiyai - அளவற்ற தேஜோ ரூபமான விகரஹத்தை யுடையவனுமான எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை உள்ளத்து கொள்ளுமவர்,Ullathu kollumavar - நெஞ்சிலே தாங்குமவர்கள் எம்மை,Emmai - எம்மை சலிப்பு இன்றி ஆண்டு,Salippu indri aandu - ஒருகாலும் கைவிடாமே அடிமைகொண்டு சன்மம் சன்மாந்தரம் காப்பர் கண்டீர்,Sanmam sanmaantharam kaappar kandir - எத்தனை ஜன்மமானாலும் ரக்ஷிக்குமவர்களாவர். |
| 2969 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அடியவர் திறந்து அவன் செய்தருளும் மஹோபகாரங்களை அநுஸந்தித்து அப்படிகளைப் பிதற்றல்லாரைப் பிதற்றுமவர்கள் திடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகளென்கிறார்.) 7 | சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத் தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7 | சன்மம் சன்மாந்தாந்தரம் காத்து,Sanmam sanmaanthandharam kaathu - மாறி மாறிப்பல பிறப்பும் பிறவாதபடி காத்து அடியார்களை,Adiyaargalai - அடியவர்களை கொண்டுபோய்,Kondupoy - (நித்ய விபூதியிலே) கொண்டு போய் தன்னைபெறுத்தி,Thannaiperuthi - ஸ்வஸ்ரூப ப்ராப்தியைப் பண்ணிக்கொடுத்து தன் தாள் இணைகீழ்,Than thaal inaikeezh - தனது திருவடிகளின் கீழே கொள்ளும்,Kollum - அடிமை கொண்டருள்கின்ற அப்பனை,Appanai - ஸ்வாமியினுடைய தொன்னை,Thonnai - இயற்கையான ஔதார்யகுணத்தை பிதற்ற வல்லாரை,Pitharra vallaaraai - வாய்வந்தபடி சொல்லித் திரியும் பாகவதர்களை பிதற்றுமவர்,Pitharrumavar - வாய்வந்தபடி புகழுமவர்கள் எம்மை,Emmai - நம்மை நன்மை பெறுத்து,Nanmai peruthu - நன்மை பெறும்படி பண்ணி நாள்,Naal - ஆத்ம தத்துவமுள்ளவரையில் உய்யக் கொள்கின்ற,Uyyak kolginra - உஜ்ஜீவிப்பிக்க வல்லவர்காளக நம்பர் கண்டீர்,Nambar kandir - நம்பப்படுமவர்களாவர். |
| 2970 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அவனுடைய ஸகலஸம்பத்துக்கும் நிதானமான ஸ்ரீயபதித்வத்தை அநுஸந்தித்து அதிலே யீடுபட்டிருக்குமவர்கள் குலம் குலமாக எனக்கு நாதர் என்கிறார்.) 8 | நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச் கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8 | நம்பனை,Nambanai - நம்பப்படுமவனும் ஞானம் படைத்தவனை,Gnaanam padaithavanai - (தன்னை ஆச்ரயித்து அநுபவிக்கைக்குறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுமவனும் திருமார்பனை,Thirumaarbanai - பிராட்டியைத் திருமார்பிலே உடையவனும் உம்பர் உலகினில்,Umbar ulaginil - மேலுலகங்களில் யார்க்கும்,Yaarkkum - எப்படிப்பட்டவர்களுக்கும் உணர்வு அரியான் தன்னை,Unarvu ariyaan thannai - அறியமுடியாத பெருமையையுடையவனுமான எம்பெருமானை ஏத்துவர் கும்பிநரகர்கள் ஏலும்,Yeththuvaar kumbinaragargal yaelum - துதிப்பவர்கள் கும்பியாக நரகவாஸத்திற்குரிய பாபிகளேயானாலும் அவர் தாங்கள்,Avar thaangal - அவர்கள் எம்,Em - எமது பல்,Pal - பலவகைப்பட்ட பிறப்பு இடைதோறு,Pirappu idai thoru - ஜன்மாவகாசந் தோறும் எம் தொழுகுலம் கண்ணீர்,Em thozhukulam kannir - யாம் தொழும்படியான குலீகராவர். |
| 2971 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (கையுந்திருவாழியுமான அழகைக்கண்டு அடிமை புக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்..) 9 | குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9 | குலம் தாங்கு,Kulam thaangu - ஸகல குலங்களுக்கும் ஆதாரமான சாதிகள் நாலிலும்,Saadhigal naalilum - பிராம்மணாதி ஜாதிகள் நான்கிலும் கீழ் இழிந்து,Keezh izhindhu - கீழே போந்து எத்தனை நலம் தான் இலாத,Eththanai nalam thaan ilaadha - மிகவும் தாழ்வின் எல்லையிலே நின்ற சண்டாளர் சண்டாளர்கள் ஆயினும்,Sandalar sandalargal aayinum - சண்டாளரினும் கடை கெட்ட சண்டாளர்களேயானாலும், வலம் தாங்கு சக்கரத்து,Valam thaangu sakkarathu - வலத்திருக்கையில் ஏந்தப்பட்ட திருவாழியையுடைய அண்ணல்,Annal - ஸ்வாமியால் மணிவண்ணற்கு,Manivannarku - நீலமணி நிறத்தனான எம்பெருமானுக்கு ஆள் என்று,Aal endru - சேஷப்பட்டிருக்கின்றோமென்று உள் கலந்தார்,Ul kalanthaaar - உண்மையான ஸ்வரூபஜ் ஞான முடையவர்களுக்கு அடியார் தம்,Adiyaar tham - அடிமைப்பட்டவர்களுக்கு அடியார்,Adiyaar - அடிமைப்பட்டவர்கள் எம் அடிகள்,Em adigal - நமக்குத் தலைவராவார். |
| 2972 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இவ்வுலகத்தை ஒருகால் அளந்தருளி ஒருகால் உண்டருளி ஆலிலையில் கண்வளர்ந்தருளின பெருமானுடைய திருக்குணங்களுக்குத் தோற்று அடிமையாயிருப்பாருடைய தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்கிறார்.) 10 | அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும் படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10 | அடி ஆர்ந்த வையம்,Adi aarndha vaiyam - (த்ரிவிக்ரமாவதார காலத்தில்) தன் திருவடியோடு ஸம்பந்தம் பெற்றதான வுலகை உண்டு,Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து ஆல் இலை,Aal ilai - ஆலந்தளிரில் அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - திருக்கண் வளர்ந்தருள்கின்ற படி ஆதும்இல்,Padi aadhum il - சிறிதும் உபமானமில்லாத குழவிப் படி,Kuzhavip padi - சிறு குழந்தைப் பருவமுடைய எந்தை பிரான் தனக்கு,Endhai praan thanakku - எம்பெருமானுக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்கள்,Adiyaar adiyaar tham adiyaar adiyaar thamakku adiyaar adiyaar tham adiyaar adiyongal - ஏழு தலைமுறையளவான அடிமையின் எல்லையிலே நிற்வர்களுக்கு நாங்கள் அடிமைப்பட்டவர்கள். |
| 2973 | திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் இனி ஒருநாளும் பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல் முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-7-11 | அடி ஓங்கு,Adi oongu - தங்களுடைய ராஜ்ய ப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான நூற்றுவர்,Nootruvar - (துரியோதனன் முதலானோர்) நூறுபேர்களும் வீய,Veeya - முடியும்படி அன்று,Andru - முன்பொருகால் ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்கு அருள்செய்த,Arulseydha - க்ருபை பண்ணின நெடியோனை,Nediyonai - திருமாலை நோக்கி தென்குருகூர் சடகோபன் குற்றேவல்கள்,Thenkurugoor Sadagopan kutraevalgal - அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய கைங்கரிய ரூபமாய் அடி ஆர்ந்த,Adi aarndha - ஸகலலக்ஷண ஸம்பன்னமான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளும் அவன் தொண்டர் மேல் முடிவு,Avan thondar mel mudivu - பாகவத விஷயத்தில் முடிவான இவை பத்து,Ivai paththu - இப்பதிகத்தை ஆர,Aara - நெஞ்சிலே பொருந்த கற்கிற்கில்,Karkirkil - கற்கவல்லாராகில் சன்மம்,Sanmam - பிறப்பு செய்யாமை,Seyyaamai - மறுபடியும் உண்டாகாதபடி முடியும்,Mudiyum - முடிந்துபோம் |