Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பாமரு மூவுலகும் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3392திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஒவ்வோரவயத்தாலும் ஒவ்வோர் அதிமாநுஷ சேஷ்டிதத்தைச் செய்தருளின் பரம போக்யனான வுன்னை நான் என்றைக்குக் கிட்டுவதென்கிறார்.) 1
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1
பாமரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ,Pamaru mooulagum padaitta parpanaba o - பலவகைப் பொருள்களும் நிரம்பியுள்ள மூவுலங்களையுமுண்டாக்கின ஓ பத்ம நாபனே!
பாமரு மூ உலகும் அளந்த பற்பம் பாதா ஓ,Pa maru moo ulagum alandha param pada o - பரம்பின மூவுலங்களையு மளந்து கொண்ட திருவடித்தாமரைகளை யுடையவனே!
தாமரை கண்ணா ஓ,Thamarai kannaa o - செந்தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனே!
தனியேன் தனி ஆளா ஓ,Thaniyena tani aala o - துணையற்றவனான என்னை அஸாதாரணமாக ஆள்பவனே!
தாமரை கையா ஓ,Thamarai kaiyaa o - செந்தாமரைக் கையனே!
உன்னை சேர்வது என்று கொல்,Unnai sera vadhu endru kol - உன்னை நான் சேரப் பெறுவது எந்நாளோ?
3393திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மீண்டும் அதுவே வாய் வெருவுதலாய்ச் செல்லுகிறார். கீழ்ப்பாட்டில் ‘என்றுகொல்சேர்வது’ என்றாரே; அதற்கு ஒரு மறுமாற்றம் பெற்றிலர். அத்தோடு அந்தோ என்பதையுங் கூட்டியழுகிறார். நான் மூடிந்ததென்கிறார்.) 2
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2
நிலம் நீர் எரி கால் விண்,Nilam neer eri kaal vin - பஞ்ச பூதங்களும்
உயிர்,Uyir - பிராணிவர்க்கமும்
என்ற இவை தாம் முதல் ஆ,Endra ivai thaam mudhal aa - ஆகிய இவை முதலாக
முற்றும்,Mutrum - ஸகல பதார்த்தங்களும்
ஆய் நின்ற எந்தாய் ஒ,Aay nindra endhaay o - தானே யென்னலாம் படி நின்ற ஸ்வாமியே!
ஆ நிரை மேய்தது,Aa nirai meydhadhu - பசுக்களின் கூட்டங்களை மேய்த்து
குன்று எடுத்து அவை காத்த,Kunru eduthu avai kaatha - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து அப்பசுக்களை ரக்ஷித்தருளின
எம் கூத்தா ஓ,Em koothaa o - குடக்கூத்து முதலிய கூத்துக்களில் வல்லவனான எம்பெருமானே!
அரண் நான் முகன் ஏத்தும்,Aran naan mukan etthum - சிவனும் பிரமனும் துதிக்கும்படியான
நின் செய்ய திரு பாதத்தை,Ninn seiya thiru paadhattai - உனது சேவடியை
யான் சேர்வது என்று கொல்,Yaan sera vadhu endru kol - யான் சேரப் பெறுவது எந்நாளோ?
அந்தோ,Antho - ஜயோ!
3394திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (குண்டுறடுத்தாநிரை மேய்த்து அவை காத்த வெங்கூத்தாவோ” என்று கோவர்த்தந உத்தரண வ்ருத்தாந்தத்தைக் கூறிக் கூவின ஆழ்வார் மீண்டுமிப்பாட்டிலும் “காத்தவெங்கூத்தாவோ மலையேந்திக் கன்மாரி தன்னை: என்று அது தன்னையே கூறிக் கூவுவது அந்தாதித்தொடை யமைதிக்காகவன்று; ஈடுபாட்டின் மிகுதியாலாம்.) 3
காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3
மலை ஏந்தி கல்மாரி தன்னை காத்த எம்கூத்தா ஓ,Malai endhi kalmaari thannai kaatha emkoothaa o - கோவர்த்தனமலையைத் தாங்கிநின்று கல் மழையைத் தடுத்தவனும் கூத்தில் வல்லவனுமான என்பெருமானே!
பூ தண் துழாய் முடியாய்,Poo than thuzhai mudiyaa - அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனே!
புனை கொன்றை அம் செம்சடையாய்,Punai konrai am sem sadaiyaa - சிவந்த ஜடையிலே கொன்றைமாலையைப் புனைந்துள்ள சிவனுக்கு அந்தர்யாமியே!
வாய்த்த என் நான்முகனே,Vaaytha en naanmukane - பிரமனுக்கு அந்தர் யாமியே!
ஏத்த அருகீர்த்தியினாய்,Eththa arugeerthiyinaay - துதித்துத் தலைக்கட்ட முடியாத புகழையுடையவனை!
நீ வந்து என் ஆர் உயிர் ஆனால்,Nee vandhu en aar uyir aanal - நீயாகவே பரகதஸ்வீகாரமாக வந்து எனக்குத் தாரகனாக ஆனாயான பின்பு
உன்னை எங்கு தலைப்பெய்வன்,Unnai engu thalaippeivan - உன்னை எங்கே கிட்டியநுபவிப்பேன்?
3395திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸர்வ ஸ்மாத் பரனாய் ஆஸ்ரித பவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனான வுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார்.) 4
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைகோவலனே,Kongu alar than am thuzhai mudhi ennutai kovalane - மதுவோடு கூடி மலர்ந்த செவ்வித் துழாயையணிந்த மயிர்முடியையுடையனாய் எனக்குப் பரம போக்யனான கோபாலக்ருஷ்ணனே!,
எழில் மூ உலகும் நீயே,Ezil moo ulagum neeye - விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும்,
அங்கு உயர் முக்கண் பிரான்,Angu uyarr mukkan piran - அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும்
பிரமன் பெருமான் அவன்,Braman peruman avan - அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும்
நீ,Nee - நீயிட்ட வழக்காயிருப்பர்கள்.
வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ,Vem kadhir vachchiram kai indhiran muthala deivam nee - வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே;
நான் எங்கு தலைப்பெய்வன்,Naan engu thalaippeivan - (ஆனபின்பு) நான் என் முயற்சியினாலேயே உன்னை வந்து கிட்டுவேனோ?
3396திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) ( லௌகிக விஷயங்களிலே கைகழிந்திருக்கிற என் ஆக்மா உன்னை எங்ஙனே கிட்டக்கடவதென்கிறார். ஈடு;- “பலன் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்நம் பண்ணவேணுங்காணுமென்ன: நீ ஸ்ருஷ்டித்த லோகங்களில் விஷயங்கள் தோறும் அகப்பட்டுக்கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒருஸாதனத்தை யநுஷ்டித்துவந்து பெறுகையென்று ஒன்றுண்டோ வென்கிறார்.) 5
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5
என்னுடை கோவலனே!,Ennutai kovalane! - என்னுடையவனென்று அபிமானிக்கலாம் படியான கோபாலனே!,
என் பொல்லா கரு மாணிக்கமே,En polla karu maanikkame - துளையாத மாணிக்கம் போன்று எனக்கு இனியனாவனே!
என்னுடை ஆருயிரார்,Ennutai aaruyiraar - என் ஆத்மாவானவர்,
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும்,Unnutai undhi malar ulagam avai moondrum - உனது திருநாபியிலே மலர்ந்த மூவுலகங்களிலுமுள்ள விஷயங்களெல்லாவற்றலும்
பரந்து,Parandhu - சாபல்யப்பட்டிருந்து.
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்போல் உன்னை,Unnutai sothi vellathu agampol unnaik kandu kondu - உனக்கே யஸாதாரணமாய் விலக்ஷ்ண தேஜோராசி ரூபமாயிருக்கிற ஸ்ரீவைகுண்டலோகத்திலே யிருக்கிறவுன்னை
கண்டு கொண்டிட்டு,kandu kondittu - காணப்பெறுமாறு
எங்ஙனே கொல் வந்து எய்துவர்,Enggane kol vandhu edhvar - எப்படி வந்து சேருவர்?
3397திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார்.0 6
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6
மல்கு நீலம் சுடர் தழைப்ப,Malgu neelam sudar thalaippa - குறைவற்ற நீலமான புகரானது மேன் மேலும் வளர,
செம் சுடர் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கம் சேர்வது போல்,Sem sudar sodhigal pootha oru maanikkam sera vadhu pol - சிவந்த வொளியை யுடைத்தான சில கிரணங்களைப் பரப்பினவொரு மாணிக்கம், சாய்ந்து கிடக்குமாபோலே,
அந்தரம் மேல்,Antharam mel - திருவரை மேல்சாத்தின
செம் படடோடு,Sem padatodu - பீதாம்பரத்தோடு
அடி உந்தி கை மார்பு கணவாய்,Adi undhi kai maarpu kanavaay - திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி
செம் சுடர் சோதிவிட,Sem sudar sodhividu - சிவந்தழகிய வொளியைப் பரப்ப
உறை என் திருமார்,Urai en thirumaar - எனது திருமாலை
வந்து எய்தும் ஆறு அறியேன்,Vandhu eydhum aaru ariyen - வந்து கிட்டும் வகையறிகின்றிலேன்.
3398திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ப்ரஹ்மாதிகள் உடைய போக்ய ஜாதமும் அவர்களுடைய அதி மானுஷ வ்ருத்திகளும் ஸ்வ அதீனமான இருக்கிறவனை நான் காணப் பெறேனோ -என்கிறார்.) 7
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7
என் திரு மார்பன் தன்னை,En thiru maarban thannai - திருமாலாயிருக்கிற தன்மையை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும்
என் மலை மகள் கூறன் தன்னை,En malai magal kooran thannai - பார்வதீபதியை ப்ரகாரமாகவுடையனாயிருக்கிறபடியை யெனக்கு ப்ரகாசிப்பித்தவனும்
என்றும் நாமகளை அகம்யால் கொண்ட என் நான் முகனை,Endrum naamagalai agamyaa'l kondha en naan mukanai - எப்போதும் ஸரஸ்வநியை அந்தரங்க மஹிஷியாகக் கொண்ட நான்முகனை ப்ரகாரமாவுடை யனாயிருக்கிறபடியை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும்.
நின்ற சசீ பதியை,Nindra Sasi padhiyai - இவர்களோடு எண்ணப்பட்டு நிற்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியானவனும்
நிலம் கீண்ட,Nilam keennda - (மஹாவராஹமாகி) பூமியை யுத்தரித்தவனும்
மூன்று எயில் எரித்த,Moontru eyil eritha - த்ரிபுரதஹனம பண்ணினவனும்
புலன் வென்று துரந்த,Pulan vendru thurandha - இந்திரியங்களை ஜயித்து ஓட்டினவனும்
விசும்பு ஆளியை,Visumpu aaliyai - சுவர்க்கத்தை ஆள்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியுமான எம்பெருமானை
காணனோ –,Kaanaano - காணமாட்டேனோ?
3399திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மாலி மூதலான ப்ரதிகூலவர்க்கத்தை நிரஸித்தருளின ஸர்வேச்வரானைக் காணப்பெறுவோமோ! என்கிறார்.) 8
ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8
ஆளியை காண்பரி ஆய்,Aaliyai kaanpari aay - யாளியைக் கண்ட குதிரை போலவும்
அரி காண் நாஜீ ஆய்,Ari kaan Naajee aay - சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும்
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்கன்
அன்று ஊளையிட்டு,Andru oolaiyittu - அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு
இலங்கை கடந்து,Ilankai kandhu - லங்காபுரியை விட்டு
பிலம் புக்கு ஒளிப்ப,Pilam pukku olibpa - பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக
மீளி அம் புள்ளை கடாய்,Meeli am pullai kadaay - பெருமிடுக்கனாய் அழகியவனான கருடனை நடத்தி
விறல் மாலியை கொன்று,Viral maaliyai kondru - பிரபலனான மாலியைக் கொன்று
பின்னும்,Pinnu - அவ்வளவிலும் விடாதே
ஆள்,Aal - மிகவும் சூரர்களான ஆண் புலிகளை (க்கொன்று)
உயர் குன்றங்கள் செய்து,Uyar kunrangal seydhu - பருப்பருந்த மலைகளாகக் குவித்து
அடர்த்தானையும்,Adarthaanaiyum - அவர்களை யழித்த பெருமானையும்
காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ?
3400திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (விபீஷண பக்ஷ்பாதத்தாலே ராவண குலத்தை நிச்சேஷமாக முடித்து அவனுக்கு லங்காராஜ்யத்தையுங் கொடுத்துத் தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணித் தன்னடிச்சோதியேற் வெடுந்தருளின் ஸ்ரீராமபிரானை, அந்த மேன்மையோடே யிருக்கச் செய்தே நாம் காணவல்லோமோ நெஞ்சமே! என்று தமது திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.) 9
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9
நெஞ்சமே,Nenjame - மனமே!
கடிய வினையே முயலும்,Kadiya vinaiye muyalum - மிகக் கொடிய பரஹிம்ஸா ரூபமான தீவினைகளிலேயே முயற்சி செய்பவனாய்
ஆண்,Aan - பௌருஷம் மிக்கவனாய்
திறல்,Thiral - வீர சூர பராக்ரமசாலியாய்
மீளி,Meeli - சிங்கம் போன்றவனாய்
மொய்ம்பின்,Moimpin - பெருமிடுக்கையுடையனான
அரக்கன்,Arakkan - இராவணனென்னும் ராக்ஷ்ஸனுடைய
குலத்தை,Kulaththai - குடும்பத்தை
தடிந்து,Tadindhu - தொலைத்திட்டு
மீண்டும்,Meendum - பின்னையும்
அவன் தம் பிக்கே,Avan tham pikke - அவனுடன் பிறந்தவனான விபீஷணழ்வானுக்கே
விங் நீர் இலங்கை அருளி,Ving neer ilankai aruli - கடலிடத்துள்ள லங்காராஜ்யத்தை யருள் செய்து
ஆண்டு,Aandu - அயோதயையி லெழுந்தருளி நெடுங்காலம் அரசு புரிந்து
தன் சோதி புக்க,Than sodhi pukka - தன்னடிச் சோதியான பரமபதத்திலே சென்று சேர்ந்த
அமரர் அரி ஏற்றினை,Amarar ari yattrinai - நித்யஸீரிநாதனான பெருமானை
காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ
3401திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸ்ரீ ஆறாயிரப்படி -ஸ்ரீ நந்த கோப குமாரனாய் வந்து பிறந்து அருளி திண் கொள் அசுரரைத் தேய வளர்ந்து அருளி பந்தய ரூபேண போய்ப் புக்கு பிரதிகூலனான கம்சனை வஞ்சித்துக் கொன்று அருளி பின்னை பாண்டவர்களுக்காக தத் பிரதிகூலனான துரியோதனனையும்-குரூரமான அவனுடைய சேனையையும் நிஸ் சேஷமாக நசிப்பித்துப் பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து பின்னையும் அவர்களுக்கு ஒன்றும் செய்யாதானாய்த் திரு நாட்டிலே புக்கு அருளின பரம புருஷனே அந்த துஷ் ப்ராபமான திரு நாட்டை நமக்கும் தந்து அருளும் என்று தம் திரு உள்ளத்தை ஆஸ்வசிப்பிக்கிறார்.) 10
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10
ஈன்று இளபிள்ளை ஒன்று ஆய்,Eentru ilapillai ondru aay - அப்போது பிறந்து விலக்ஷ்ணமான பச்சைப் பசுங் குழந்தையாய்க்கொண்டு
ஆயர் குலத்து புக்கு,Aayar kulathu pukku - திருவாய்ப்பாடியிலே சென்று சேர்ந்து
மாயங்களே இயற்றி,Maayangalae iyarri - பல பல அற்புதச்செயல்களையே செய்து
கூற்று இயல் கஞ்சனை கொன்று,Kootru iyam kanjanai kondru - யமன் போன்ற கம்ஸனையும்; முடித்து (பிறகு)
ஐவர்க்கு ஆய்,Aivarukku aay - பஞ்ச பாலீண்டவர்களுக்குப் பகூபாதியாயிருந்குஷது
கொடு சேனை தடிந்து,Kodu senai tadindhu - கொடிய ப்ரதிபக்ஷ்ஸேனைகளை யழியச் செய்து
ஆற்றல் மிக்கான்,Aatral mikkaan - (இவ்வளவு செய்தும்) மிகுந்த நெஞ்சாறல் கொண்டவனாப
பெரிய பரம் சோதி புக்க அரி,Periya param sodhi pukka ari - பரமபதஞ் சென்று சேர்ந்த ஹரியான எம்பெருமான்
ஏற அருவைகுந்தத்தை,Aaru aruvai kundhaththai - எப்படிப்பட்டவர்களுக்குங் கிடைக்க வரிதான பரமபதத்தை
நமக்கு அருளும்,Namakku arulum - நமக்குத் தந்தருள்வன்.
3402திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11
அ அரி உரு ஆய புக்கு,A ari uru aaya pukku - அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி
அவுணன் உடல் கீண்டு உகந்த,Avunan udal keenndu ugandha - இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த
சக்கரம் செல்வன்,Chakkaram selvan - திருவாழியையுடைய திருமாலைக் குறித்து
குருகூர் சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச் செய்த
மிக்க ஓர் ஆயிரத்துள்,Mikka or aayiraththul - மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே
இவை பத்தும் வல்லாரவரை,Ivai pattum vallaaravari - இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை
ஏழையா,Ezhaiya - திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்
தொக்கு,Tokku - திரள் திரளாக விருந்து
பல்லாண்டு இசைத்து,Pallaandu isaithu - மங்களாசாஸனம் பண்ணி
கவரி செய்வர்,Kavari seyvar - சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள்.