| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3018 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (பண்டு ஆவிலையில் பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேணுமென்று என் மகள் (பாரங்குச நாயகி) ஆசைப்படுகின்றாளென்று திருத்தாயார் கூறுகின்றாள்.) 1 | பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார் தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1 | பாலன் ஆய்,Balan aay - சிறு குழவியாகி பரிவு இன்றி,Parivu indri - அநாயாஸமாக ஏழ் உலகு உண்டு,Ezhulagu undu - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து ஆல்இலை,Aalilai - ஆலந்தளிரிலே அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - நித்திரை செய்தருளின அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய தாள் இணை மேல்,Thaal inai mel - உபய பாதங்களின் மீது அணி,Ani - சாத்தப்பெற்ற தண் அம்,Than am - குளிர்ந்தழகிய துழாய் என்றே,Thuzai endre - திருத்துழாய்மாலை யென்றே வாய் வெருவிக்கொண்டு வல் வினையேன் மட வல்லி,Val vinaiyen mada valli - வலிய பாபத்தைப் பண்ணின என்னுடைய இளங்கொடி போன்ற மகள் மாலும்,Maalum - வ்யாமோஹிக்கின்றாள்; ஆல்,Aal - அந்தோ! |
| 3019 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கண்ணபிரான் ஆய்ச்சிகளோடு கூடிக் குரவை கோத்தகாலத்துச் திருவடியிலணிந்து கொண்டிருந்த திருத்துழாய் மாலையை என்மகள் வாய் வெருவுகின்றாளென்கிறாள்.) 2 | வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2 | சூழ் வினையாட்டினேன்,Soozh vinaiyaattineen - மிகுந்த தீவினையை யுடையனோகிய என்னுடைய பாவை,Paavai - பதுமை போன்ற பெண்ணானவள் வல்லி சேர்,Valli ser - கொடி போன்று நுண்,Nun - நுட்பமான இடை,Idai - இடுப்பையுடைய ஆய்ச்சியர்தம்மொடும்,Aaychiyarthammodum - கோபிமார்களோடுகூடி கொல்லைமை செய்து,Kollaimai seydhu - வரம்புகடந்த செயல்களைச் செய்து குரவை பிணைந்தவர்,Kuravai pinaindhavar - ராஸக்ரீடை செய்த கண்ணபிரானுடைய நல் அடி மேல் அணி;,Nal adi mel ani; - அழகிய திருவடிகளின் மீது சாத்தின நாறு துழாய் என்றே,Naru thuzhai endre - நறுமணம்மிக்க திருத்துழாயென்றே சொல்லும்,Sollum - சொல்லுகின்றாள்; ஆல்,Aal - அந்தோ! |
| 3020 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (உலகளந்தருளின எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள். மூலத்தில் “தேவர்கள் மாமுனிவரிறைஞ்சநின்ற சேவடி” என்றிவ்வளவேயுள்ளது: “உலகளந்த திருவடி” என்று வ்யக்தமாக இல்லை; “பாற்கடல் சோந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே அணிந்த செம்பொற்றுழாயென்று இவள் கூப்பிடா நிற்குமென்கிறாள்” என்றருளிச்செய்தார் ஆறாயிரப்படியில் பிள்ளான். மற்ற வியாக்கியானங்களில்-“உலகளந்தருளனவன்; திருவடிகளிற் திருத்துழாயை ஆசைப்படாநின்றாளென்கிறாள்” என்றுள்ளது.) 3 | பாவியல் வேத நன் மாலை பல கொண்டு, தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3 | பா இயல் வேதம்,Paa iyal vedham - சந்தஸ்ஸூக்கள் பொருந்திய வேதங்களாகிற நல் பல மாலை கொண்டு,Nal pala maalai kondu - திவ்யமான பல மாலைகளைக் கொண்டு தேவர்கள்,Devargal - தேவர்களும் மா முனிவர்,Maa munivar - மஹா முனிகளும் இறைஞ்ச நின்ற,Irainja ninra - ஆராதிக்கும்படி (உலகையளந்து) நின்ற சே அடி மேல்,Se adi mel - திருவடிகளின் மேலே அணி,Ani - அணிந்த செம் பொன் துழாய் என்றே,Sem pon Thuzhai endre - செவ்விதமாய் விரும்பத்தக்கதான திருத்துழா யென்றே கூவும்,Koovum - கூப்பிடா நின்றாள் (யாரென்னில்) கோள் வினையாட்டியேன்,Kol vinaiyaattiyen - வலிய பாபத்தைப் பண்ணினவளான என்னுடைய கோதை,Kodhai - சிறந்த கூந்தலையுடையளான பெண்பிள்ளை |
| 3021 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (திருநாட்டி லெழுந்தருளி யிருக்கிற பராத்பரனுடைய திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள்.) 4 | கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4 | ஊழ்வினையேன்,oozhvinaiyen - பெரும்பாவத்தை யுடையேனாகிற எனது தட தோளி,thada tholi - பெருந் தோள்களை யுடையளான பெண் பிள்ளை சமயிகள்,samayigal - சமயவாதிகள் கோது இல்,kodhu il - குற்றமற்ற வண் புகழ் கொண்டு,van pugazh kondu - விலக்ஷணமான குணங்களைக் கொண்டு பேதங்கள் சொல்லி,pethangal solli - தாம்தாம் பற்றிய குணங்களின் ஏற்றங்களைச் சொல்லி பிதற்றும் பிரான்,pitharum piraan - பிதற்றும்படியாகவுள்ள ஸ்வாமியான பரன்,paran - பரம புருஷனுடைய பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மேலே அணி,ani - (நித்ய முக்தர்கள்) சாத்தின பைம் பொன்,paim pon - பசும்பொன்போல் விரும்பத்தக்க துழாய் என்றே ஓதும்,thuzhai endre odum - திருத்துழாயென்றே சொல்லுகின்றாள். ஆல்,aal - அந்தோ |
| 3022 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர்த்த கண்ணபிரானுடைய திருவடிகளில் சாத்தின திருத்துழாய் விஷயமாகவே என் மகள் நைகின்றாளென்கிறாள்.) 5 | தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக் கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார் தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5 | என் தன் மாதர்,en than maadhar - எனது பெண்பிள்ளை தோளி,tholi - அழகிய தோள்களையுடையவளும் சேர்,ser - அநுரூபையுமான பின்னை பொருட்டு,pinnai poruttu - நப்பின்னைப் பிராட்டிக்காக எழ் எருது,ezh erudhu - ஏழு எருதுகளையும் தழீ இக்கோளியார்,thazhee ikkoliyar - தழுவிக்கொண்டவரும் (அதாவது நிரஸித்தவரும்) கோவலனார்,kovalanar - கோபால க்ருஷ்ணனாய் அவதரித்தவரும் குடம் கூத்தனார்,kudam koothanar - குடக்கூத்தாடினவருமான கண்ணபிரானுடைய தாள் இணைமேல்,thaal inai mel - உபய பாதங்களின்மேலே அணி,ani - சாத்தின தண் அம் துழாய் என்றே,than am thuzhai endre - குளிர்ந்தழகிய திருத்துழாயென்றே சொல்லி நாளும் நாள்,naalum naal - நாள்தோறும் நைகின்றது,naikinrathu - சிதிலையாகின்றாள். |
| 3023 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் ப்ரளயார்ணவத்தில் பூமியை யெடுத்தருளின போது திருவடிகளிலணிந்திருந்த திருத்துழாயைப் பெறவேணுமென்று ஆசைப்படுகின்றாளென்மகளென்கிறாள்.) 6 | மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய், ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6 | மா மாதர்,maa maadhar - சிறந்த அழகுடைய மண் மடந்தை பொருட்டு,man madandhai poruttu - பூமிப் பிராட்டிக்காக ஆதி அம் காலத்து,aadhi am kaalathu - முன்னொரு காலத்தில் எனம் ஆய்,enam aai - வராஹ மூர்த்தியாய் அகல் இடம்,agal idam - விபுலமான பூமண்டலத்தை கீண்டவர்,keendavar - பிளந்தெடுத்துக் கொணர்ந்த பெருமானுடைய பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மீது அணி,ani - சாத்தின பைம் பொன் துழாய் என்றே,paim pon thuzhai endre - மிகவழகிய திருத்துழாயென்றே ஓதும் மால்,oodhum maal - ஓதும்படியான வியாமோஹத்தை என் தன் மடந்தை,en than madandhai - எனது பெண் பிள்ளை எய்தினள்,eythinaL - அடைந்தாள். |
| 3024 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள்.) 7 | மடந்தையை வண் கமலத் திரு மாதினைத் தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல் வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால்; வாணுதலீர்! என் மடக்கொம்பே.–4-2-7 | வாள் நுதலீர்,vaal nudhaleer - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்காள்! என் மட கொம்பு இவள்,en mada kombu ival - இளங்கொடி போன்ற எனது இப்பெண்பிள்ளை மடந்தையை,madandhaiyai - இளமைப் பருவமுள்ள வண் கமலம் திரு மாதினை,van kamalam thiru maadhinai - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியை தடம் கொள் தார் மார்பினில்,tadam kol thaar maarbinil - விசாலமானதும் மாலையணிந்ததுமான திரு மார்பிலே வைத்தவர்,vaithavar - (பாற்கடல் கடைந்த காலத்து ஏற்றுக்கொண்ட பெருமானுடைய தாளின் மேல்,thaalin mel - திருவடிகளின்மீது (சாத்தின) வடம் கொள்,vadam kol - செறியத் தொடுக்கப்பட்டதும் பூ,poo - அழகியதும் தண்ணம்,thannam - குளிர்ச்சி பொருந்தியதுமான துழாய் மலர்க்கே,thuzhai malarkke - திருத்துழாயின் பொருட்டே மடங்கும்,madangum - சுருண்டு விழுகின்றாள் |
| 3025 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள் விரும்பா நின்றாளென்கிறாள்.) 8 | கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8 | நங்கைமீர்,nangaimir - பெண்காள்! கொம்பு போல் சீதை பொருட்டு,kombu pol seethai poruttu - பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு இலங்கை நகர்,ilangai nagar - இலங்காபுரியில் அம்பு ஏரி,ambu eri - அம்புகளில் நின்றும் கிளம்பும் அக்னியை உய்த்தவர்,uyithavar - செலுத்தின இராமபிரானுடைய தாள் இணைமேல்,thaal inaimel - உபயபாதங்களின் மீது அணி,ani - சாத்தின வம்பு அவிழ் தண் ஆம் துழாய் மலர்க்கே,vambu avizh thann am thuzhai malarkke - பரிமளப்ரசுரமாய்க் குளிர்ந்தழகிய திருத்துழாயின் மீதே இவள் நம்பும்,ival nambum - இவள் ஆசைப்படா நின்றாள்; இதற்கு நான் என் செய்வேன்,itharku naan en seyven - இதற்கு நான் என்ன பரிஹாரம் செய்வது. |
| 3026 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (என் மகள் எம்பெருமானுடைய திவ்யாயுதங்களைச் சொல்லுவதற்காகத் தொடங்கி முற்றமுடியச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்ந்து நோவுபடுகின்றாளென்கிறாள்.) 9 | நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்; எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை? சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்; இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9 | நங்கைமீர்,nangaimir - மாதர்காள்! நீரும்,neerum - நீங்களும்; ஓர் பெண் பெற்று நல்கினீர்,or pen peruthu nalgineer - ஒவ்வொரு பெண்ணைப் பெற்று அன்போடு வளர்த்தருக்கின்றீர்கள்; யான் பெற்ற,yaan pera - நான் பெற்றிருக்கின்ற ஏழையை,ezhaiyai - இப்பேதையை எங்ஙனே சொல்லுவேன்,enggane solluven - எப்படியென்று சொல்லுவேன் (ஆகிலும் கொல்லுகிறேன்; சங்கு என்னும்,sanggu ennum - சங்கு என்கிறாள்; சக்கரம் என்னும்,chakkaram ennum - சக்கரமென்கிறாள்; துழாய் என்னும்,thuzhai ennum - திருத்துழாயென்கிறாள்; இராப்பகல்,irappagal - இரவும் பகலும் இங்ஙனே சொல்லும்,inggane sollum - இப்படியே சொல்லுகின்றாள்; என் செய்கேன்,en seyken - யாது செய்வேன்? |
| 3027 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கீழ்ப்பாட்டில் ‘நங்கைமீர்!’ என்று விளிக்கப்பட்ட நங்கைகள் ப்ராங்குச நாயகியின் தாயை நோக்கி ‘அம்மா! உன்மகள் நீயிட்ட வழக்கன்றோ; அவளுக்கு ஹிதம் சொல்லாகாதோ?” என்ன, அவர்களுக்கு விடை கூறுகின்றாள்) 10 | என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம், என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்! மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10 | நங்கைமீர்,nangaimir - பெண்காள்! என்னுடைபேதை என் கோமளம்,ennutaipeedhai en komalam - பேதைத்தனமும் ஸூகுமாரத் தன்மையும் பொருந்திய என்மகளானவள் என் சொல்லும் என் வசமும் அல்லன்,en sollum en vasamum allan - என் சொல்லிலும் நிற்பதில்லை, என் வசத்திலும் நிற்பதில்லை; மின் செய்,min sey - ஒளியைச் செய்கின்ற திருவாபரமணிந்த திருமார்பையுடையவனான கண்ணன்,kannan - கண்ணபிரானுடைய கழல்,kazhal - திருவடிகளைலுள்ள துழாய்,thuzhai - திருத்துழாயை பொன் செய்,pon sey - பசலை நிறம் பூத்ததும் பூண்,poon - ஆபரணங்களிணிந்ததும் மெல்,mel - பிரிவாற்றகில்லாததுமான முலைக்கு என்று,mulaikku endru - முலையில் அணிந்துகொள்ள வேணுமென்று விரும்பி மெலியும்,meliyum - (அது கிடையாமையாலே) உடம்பு இளைக்கப்பெறுகின்றாள்; என் செய்கேன்,en seyken - இதற்கு யான் யாது செய்வேன்? |
| 3028 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (இத்திருவாய்மொழி கற்றார் நித்யஸூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. ஆழ்வார் மெலியுமளவான வளவிலே எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆற்றாமையைப் போக்கி ஒருவாறு ஆச்வஸிப்பித்தம்மை முதலடியில் தொனிக்கும்.) 11 | மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல் மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11 | மெலியும் நோய் தீர்க்கும்,meliyum noy theerkkum - மெலிவை விளைக்கும்படியான பிரிவுநோயைப் போக்கவல்லவனான நம் கண்ணன்,nam kannan - நமது கண்ணபிரானுடைய கழல்கள் மேல்,kazhalkal mel - திருவடி விஷயமாக மலி புகழ்,mali pugal - வளர்ந்த புகழையுடைய வண் குருகூர் சடகோபன்,van kurukoor sadagopan - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொல்,sol - அருளிச்செய்த ஒலி புகழ்,oli pugal - கொண்டாடப்பட்ட குணபூர்த்தியையுடைய ஆயிரத்து,aayiraththu - ஆயிரத்திலும் இப்பத்தும்,ippattum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்,vallavar - ஓதவல்லவர்கள் மலி புகழ்,mali pugal - மிக்கபுகழையுடைய வானவர்க்கு,vaanavarkku - நிதய்சூரிகளுக்கு நல் கோவை ஆவர்,nal kovai aavar - நல்ல சேர்த்தியாவர். |