Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பிறவித் துயரற (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2741திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (எம்பெருமானுடைய போக்யதையை ஆழ்வார் தாம் தமது திருவுள்ளத்தினால் முந்துற அநுபவித்து அதனை வாய்விட்டுப் பாசுரமிட்டுப் பேசுவதற்கு முன்பே இங்ஙனம் பரம போக்யமானவனை ஆச்ரயித்து வைத்து அந்தோ! அற்ப பலனாகிய கைவல்யத்தை அபேக்ஷிப்பதே! என்று கேவலர்களை நிந்தித்து, அவர்களுடைய புன்மையைப் பாராதே அவர்கள் அபேக்ஷித்ததைக் கொடுப்பதே!” என்று எம்பெருமானது நீர்மையைக் கண்டு வியந்து கூறுவது இப்பாட்டு) 1
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1
பிறவி துயர் அற,Piravi Thuyar Ara - ஜனன மரணங்களினால் வருந் துன்பம் மாத்திரம் நீங்குகைக்காக
ஞானத்துள் நின்று,Gnanathul Nindru - ஆத்மாவலோகந மாகிற கைவல்யோபா ஸநத்தில் ஊன்றி
துறவி சுடர் விளக்கம் தலைப் பெய்வார்,Thuravi Sudar Vilakkam Thalaipeyvaar - ஸலக பாதிகளையும் விட்டவனான ஸ்வயம் ப்ரகாசனான ஆத்மாவினுடைய
ஸாக்ஷாத்காரத்தைப் பெற விரும்புகின்ற கைவல்யார்த்திகள்.

அறவனை,Aravanai - பரம தர்மிஷ்டனாயும்
ஆழி படை,Aazhi Padai - திருவாழி யாழ்வானை ஆயுதமாக வுடையனாயும்
அந்தணனை,Anthananaai - பரம பரிசுத்தனாயுமிருக்கின்ற எம்பெருமானை
மறவியை இன்றி,Maraviyai Indri - (தாம் விரும்பிய பலனில்) மறப்பில்லாமல்.
மனத்து வைப்பார் ஏ,Manathu Vaippar ye - உபாஸிக்கின்றார்களே!
2742திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் ‘ஐயோ! கைவல்யார்த்திகள் எம்பெருமானைப் பணிந்து க்ஷûத்ரமான பலனைப் பெற்றுப்போவதே!’ என்று அவர்களை நிந்தித்தார்; அவன்றன்னையே ஆசைப்பட்டிருக்குமவர்கள் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்கிறாரிப் பாட்டில்) 2
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2
அடியரை,Adiyarai - தன்னடியாரை
வல்வினை,Valvinai - வலிய கருமங்களினுடைய
துப்பு ஆம்,Thuppum Aam - மிடுக்கின் வழியிலே ஸஞ்சரிக்கிற
புலன் ஐந்தும்,Pulan Aindhum - பஞ்சேந்திரியங்களிலும் அகப்பட்டு
துஞ்சக் கொடான்,Thunjak Kodaan - நசித்துப் போம்படி விட்டுக் கொடாதவன்
வைப்பு ஆம்,Vaippu Aam - (அவர்களுக்குப் புருஷர்த்தமான) நிதியுமாய்
மருந்து ஆம்,Marundhu Aam - (விரோதி நிரஸந முகத்தால்) மருந்துமாவன்;
அவன்,Avan - அந்த எம்பெருமான்
எப்பால்,Eppaal - எவ்விடத்துமுள்ள
யவர்க்கும்,Yavarkkum - யாவர்க்கும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து,Nalathaal Uyarndhu Uyarndhu - ஆனந்த குணத்தினால் மிகவும் உயர்ந்து
அப்பாலவன்,Appaalavan - வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதபடி அப்புறப் பட்டவனாய்
எங்கள்,Engal - எங்களுக்கு உரியவனான
ஆயர் கொழுந்து,Ayar Kolunthu - ஆயர் தலைவன்
2743திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இரண்டாம் பாட்டில் அநந்யப்ரயோஜநாதிகாரிகள் விஷயத்தில் எம்பெருமான் இருக்கும்படியையருளிச்செய்தார்; ‘ ஆக இவ்விரண்டு வகுப்பிலே நீர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?’ என்று ஆழ்வாரைச் சிலர் கேட்க; நான் அநந்ய ப்ரயோஜநனாய் அவனைப் பற்றினேன்’ என்று நேரே சொல்ல மாட்டாமல் ‘அவனை அநுபவித்துக் கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்து போகப்பெற்றவன் நான்’ என்றாரிதில்) 3
ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3
ஆயர் கொழுந்து ஆய்,Ayar Kolunthu Aai - இடையர் தலைவானான கோபால க்ருஷ்ணனாகிய
அவரால்,Avaraal - அவ் விடையர்களாலே
புடை உண்ணும்,Putai Unnum - வெண்ணெய்க் களவு முதலியவற்றிற்றாக அடி யுண்கிற
மாயம் பிரானை,Maayam Piraanai - மாயச் செயல் வல்லவனும்
என்,En - எனக்கு விதேயனும்
மாணிக்கம் சோதியை,Maanikkam Sodhiyai - மாணிக்கம் போல் ஒளி பெற்ற வடிவை யுடையவனும்
தூய அமுதை,Thooya Amudhai - பரிசுத்தமான அம்ருதம் போன்றவனுமான பெருமானை
பருகி பருகி,Parugi Parugi - இடையறாமல் அநுபவித்து
என்,En - என்னுடைய
மாயம்,Maayam - பிரகிருதியின் காரியமாய் வருகின்ற
பிறவி,Piravi - பிறவியினாலுண்டானதாகிய
மயர்வு,Mayarvu - அஜ்ஞானத்தை
அறுத்தேன்,Aruthen - போக்கிக் கொண்டேன்.
2744திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் “என் மாயப்பிறவி மயர்வுறுத்தேன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி ‘ஆழ்வீர்! மாயப்பிறவி மயர்வு அறவேணு மென்பதுதானே உமது உத்தேச்யம்; அது நிறைவேறிவிட்டதாக நீரே சொல்லி விட்டீரே; இனி நீர் ஓய்ந்திருக்கமன்றோ’ என்று சிலர் சொல்ல, எம்பெருமானை எங்ஙனம் நாம் விடுவேனென்கிறார்) 4
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4
மயர்வு அற,Mayarvu Ara - அஜ்ஞானம் தொலையும்படி
மன் மனத்தை,Man Manathai - எனது நெஞ்சிலே
தன்னினான் என்னை,Thanninaan Ennai - நித்ய வாஸஞ் செய்பவனாய்
உயர்வினையே தரும்,Uyarvinaiyae Tharum - (எனக்கு) ஞான பக்தி வளர்த்தியையே தந்தருள்கின்றவனாய்
ஒண் சுடர் கற்றையை,On Sudar Katraiyai - அழகிய தேஜோ ராசியாய்
அயர்வு இல் அமரர்கள்,Ayarvu Il Amarargal - மறப்பில்லாத நித்ய ஸூரிகளுக்கு
ஆதிகொழுந்தை,Aadhi Kolunthai - முதல் தலைவனாய்
என் இசைவினை,En Isaivinai - தன்னைக் கிட்டுமாறு எனக்கு இசைவை விளைவித்தவனான எம்பெருமானை
யான்,Yaan - அடியேன்
என் சொல்லி விடுவேனோ,En Solli vidueeno - என்ன குறையைச் சொல்லி விடக் கடவேனோ? விடமாட்டேன்.
2745திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இதுவும் கீழ்ப்பாட்டுக்கு சேஷ பூதம். திருவாய்ப்பாடியிலிடைப் பெண்கள் கண்ணபிரானை விட்டுப் பரமபதத்தை விரும்பினால் நானும் எம்பெருமானை விட்டுப் புறம்புபோவே னென்கிறார்) 5
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5
என் விளக்கை,En Vilakkai - எனக்கு எல்லாப் பொருள்களையும் விளக்கிக் காட்டுகிற விளக்குப் போன்றவனும்
என் ஆவியை,En Aaviyai - என் உயிரா யிருப்பவனும்
நடுவே வந்து,Naduve Vandhu - திடீரென்று ஒரு நாளிலே
உய்யக் கொள்கின்ற நாதனை,Uyyak Kolkindra Naadhanai - உஜ்ஜிவிப்பிக்னற ஸ்வாமியும்
தொடுவே செய்து,Toduve Seydhu - கபடச் செயல்களையே செய்து
இள ஆய்ச்சியர் கண்ணினுள்,Ila Aaychiyar KanniNul - இளமை தங்கிய இடப் பெண்களின் கண்களிலே
விடவே செய்து,Vidave Seydhu - விடத் தனமே செய்து
விழிக்கும் பிரானை,Vizhikkum Piranai - கண் கலப்புச் செய்கிற பிரபுவுமாகிய எம்பெருமானை
விடுவேனோ,Viduveno - விடவல்லேனோ? (விடமாட்டேன்)
2746திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (ஆழ்வீர்! நீர் அவனை விடமாட்டாதொழியினும் அவன்றான் உம்மை விடில் என்செய்வீரென்ன; அவன் விடும் படியாக நான் ஸம்மதிப்பேனோ வென்கிறார்.) 6
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6
பிரான்,Piran - உபகாரகனும்
பெருநிலம்,Perunilam - (வராஹாவதாரத்தில்)
கீண்டவன்,Keendavan - பெரிய பூமியைப் பிளந்தெடுத்தவனம்
பின்னும்,Pinnum - பின்னப்பட்ட (தொடுக்கப்பட்ட)
வீராய்,Veeraay - பரிமளம் பொருந்திய
துழாய் மலர்,Thuzhaa Malar - திருத்துழாய் மாலையாலே
வேய்ந்த,Veyndha - சூழப்பட்ட
முடியன்,Mudiyan - திருமுடியை யுடையவனும்
மராமரம் எய்த,Maramaram Eydha - ஏழு மராமரங்களை (ஸூ க்ரீவனுடைய நம்புதலுக்காக ஓர் அம்பினால்) எய்தவனுமான
மாயவன்,Maayavan - ஆச்சரிய பூதன்
என் உள்,En Ull - எனது நெஞ்சினுள்ளே
இரான் எனில்,Iran Enil - எழுந்தருளியிரானாயின்
பின்னை,Pinnai - பின்பு
யான்,Yaan - நான்
ஒட்டுவேனோ,Ottuveno - தரித்திருப்பேனோ?
2747திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (எம்பெருமான் தம்மை ஒருநாளும் விடமாட்டானென்பதை வற்புறுத்தி யருளிச் செய்கிறாரிதில். அவன் தானாகவே வந்து கைக் கொண்டவனாயிருந்து வைத்து எங்ஙனே விட்டு நீங்க வல்லானென்கிறார்.) 7
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7
யான்,Yaan - நான்
ஒட்டி,Otti - இசைந்து
என்னுள்,Ennul - என்னுள்ளே
இருத்துவம் என்றிலன்,Iruthuvam Endrilan - (எம்பெருமானை) இருத்துவதாக நினைத்திலேன்;
தான்,Thaan - தானே
ஒட்டிவந்து,Otti Vandhu - பிரதிக்ஞை பண்ணி வந்து
என் தனி நெஞ்சை,En Thani Nenjai - என்னுடைய ஸ்வதந்திரமான மனத்தை
வஞ்சித்து,Vanjithu - நானறியாதபடி வசீகரித்து
ஊன் ஒட்டி,Oon Otti - சரீரத்திலே பொருந்தி
நின்று,Nindru - புகுந்து நின்று
என் உயிரில் கலந்து,En Uyiril Kalanthu - எனது ஆத்மாவில் கூடி
இயல்வான்,Iyalvaan - இப்படி நடக்கிற ஸர்வேச்வான்
இனி என்னை நெகிழ்க்க,Ini Ennai Nekkilka - இனி என்னை விட்டு நீங்க
ஒட்டுமோ,Ottumo - ஸம்மதிப்பனோ?
2748திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (அகடிதகடநா ஸமர்த்தனான எம்பெருமான்றன்னாலும் இனியொரு நாளும் வேறுபடுத்த வொண்ணாதபடி எனது நெஞ்சே அங்கே ஆழங்காற்பட்டு விட்டதென்கிறார். இதற்கு முன்புள்ள காலமெல்லாம் நான் அவனை விட்டு நெகிழ்ந்தவனே யாகிலும் இனி அங்ஙனம் ஒரு நாளும் நெகிழ மாட்டேன்; எம்பெருமான் தனது ஸ்வாததந்திரியத்தினாலே ஒருகால் என்னை நெகிழ விட்டாலும் விடக் கூடும். தன் பக்கலிலேயே ஊன்றிக் கிடக்கின்ற எனது நெஞ்சை ஒருவகையாலும் அப்புறப்படுத்த அவன் றன்னாலுமாகாது.) 8
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8
பிள்ளை,Pillai - நப்பின்னைப் பிராட்டியினுடைய
நெடு,Nedu - பெரிய
பணை,Panai - சற்றுடைத்தான
தோள்,Thol - தோள்களோடே அணையப் பெற்றதனாலுண்டான
மகிழ பீடு உடை,Magizha Peedu Udai - ஆநந்தப் பெருமையை உடையவனும்
முன்னை அமரர்,Munnai Amarar - பூருவர்களான நித்ய ஸூரிகளுக்கு
முழுமுதலான்,Muzhumudhalaan - ஸகலமும் தானே யிருக்கப் பெற்றவனுமான எம்பெருமான்
என்னை,Ennai - (ஒருகால்) என்னைப் பிரிய
நெகிழ்க்கிலும்,Nekkilum - விட்டாலும்
என்னுடை,Ennudai - என்னுடைய
நல்நெஞ்சம் தன்னை,Nalnenjam Thannai - நல்ல நெஞ்சை
அகல்விக்க,Akal Vikka - (தன்னிடத்தினின்றும்) பிரிக்க
தானும்,Thaanum - ஸர்வ சக்தி யுக்தனான தானும்
இனி,Ini - இனி மேல்
கில்லான்,Killaan - ஸமர்த்தனாக மாட்டான்.
2749திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (“என்னுடைய நன்னெஞ்சந் தன்னை யகல்விக்கத் தானுங்கில்லான்” என்று சொல்ல வேண்டிய ப்ரஸக்தி தானுமில்லையே; எனது நெஞ்சும் அவனுஞ்சேர்ந்து ஒரு திரவியம் என்னலாம்படி ஒற்றுமை பெற்றுள்ள விதனைப் பிரிக்கும் வகை தான் உண்டோவென்கிறார்.) 9
அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9
அமரர்,Amarar - நித்ய ஸூரிகளுடைய
முழு,Muzhu - ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி ஆகிய எல்லாவற்றிற்கும்
முதல் ஆகிய,Mudhal Aagiya - ஹேதுவாய்க் கொண்டு
ஈந்த,Eenth - (கடல் கடைந்து எடுத்துக்) கொடுத்தவனும்,
ஆயர் கொழுந்தை,Ayar Kolundhai - இடையர்களுக்குத் தலைவனுமான எம்பெருமானை
என் ஆவி,En Aavi - எனது ஆத்மாவானது
அமர அழும்ப துழவிய,Amara Azhumba Thuzhaviya - மிகவும் நெருக்கமாகக் கலசி
ஆதியை,Aadhiyai - பிதானானவனும்
அமரர்க்கு,Amaranukku - (இந்திராதி) தேவர்களுக்கு
அமுது,Amuthu - (அவர்கள் விரும்பிய) அம்ருதத்தை
அமர,Amara - இனி மேல் ஒருவராலும் பிரிக்க வொண்ணாதபடி
தழுவிற்று,Thazhuvirru - உகந்து கலந்தது;
இனி அகலுமோ,Ini Akalumo - இனி மேல் பிரிய வழியுண்டோ?
2750திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) ( என்னோடு கலந்த எம்பெருமானுடைய திருக் குணங்களை எத்தனை காலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறப்பதில்லை யென்கிறார்) 10
அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10
அகலில்,Agalil - (தன் பக்கலில் அற்ப பலன்களைப் பெற்றுக் கொண்டு சிலர்) பிரிந்து போனால் (அவர்கள் விஷயத்தில்)
அகலும்,Agalum - வருத்தத்தோடே பிரிந்திருப்பவனும்
அணுகில்,Anukil - (சிலர் அநந்ய ப்ரயோஜநராய்) விட மாட்டாதே யிருந்தால்
அணுகும்,Anukum - (அவர்களோடு) ஒரு நீரா கலக்குமவனும்
புகலும் அரியன்,Pugalum Ariyan - (பிரதிகூலர்க்கு) அணுகவுமொண்ணாதவனும்
பொருவு அல்லன்,Poruvu Allan - (அநுகூலர்க்குத்) தடையற்றவனும்
எம்மான்,Emmaan - எனக்கு ஸ்வாமி யானவனும்
நிகரிலவன்,Nikarilavan - (ஆக இப்படிகளாலே) ஒப்பில்லாதவனுமான ஸர்வேச்வரனுடைய
புகழ்,Pugazh - திருப்புகழ்களை
பகலும் இரவும்,Pagalum Iravum - எப்போதும்
படிந்து,Padindhu - உட் புகுந்து
குடைந்து,Kudainthu - எங்கும் கலந்து
பாடி,Paadi - பாடி
இளைப்பிலம்,Ilai Pillam - ஓவுதல் உண்டாகிறிலோம்.
2751திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களினுடைய ப்ராப்தி ப்ரதி பந்தகங்களை வேரறுக்குமென்று பலன்சொல்லித் தலைக்கட்டுகிறது.) 11
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –1-7-11
வண்டு,Vandu - வண்டுகள்
குடைந்து,Kudainthu - உட்புகுந்து
உண்ணும் துழாய்,Unnum Thuzhaay - மதுவுண்ணப் பெற்ற திருத்துழாய் மாலையை
முடியானை,Mudiyaanai - திரு முடியிலணிந்த பெருமானை
அடைந்த,Adaintha - பணிந்த
தென் குருகூர் சடகோபன்,Then Kurugoor Sadagopan - திருநகரியிலவதரித்த ஆழ்வாருடைய
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து,Midaindha Sol Todai Aayirathu - நெஞ்கின சொல் மாலையாகிய ஆயிரத்தினுள்ளே
இ பத்து,E Pattu - இந்தத் திருவாய்மொழி
நோய்களை உடைத்து ஓடு விக்கும்,Noygalai Udaithu Odu Vikkum - ப்ராப்தி ப்ரதி ப்ந்தகங்களை உருக் குலைந்து ஓடும்படி செய்திடும்.