| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3304 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (எம்பெருமான் திறத்தில் புருஷகாரக்ருத்யம் பண்ணுமவர்களுக்கு உபயவிபூதியையும் பரிசளித்தாலும் போதாது என்கிற சாஸ்த்ரார்த்தம் இப்பாட்டில் வ்யக்தமாகிறது.) 1 | பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ? நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன் முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1 | நல் நலன் புள் இனங்காள்,Nal nalan pul inangkaal - சிறந்த நற்குணமுடைய பறவைத்திரள்களே! விளையாட்டியேன் நான் இரந்தேன்,Vilayaattiyen naan irantheen - பிரிவாற்றாமைக்குரிய பாபத்தைப்பண்ணினநான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (எதற்காகவென்னில்) முன் உலகங்கள் எல்லாம் படைத்த,Mun ulagangal ellam padaitha - முதலில் உலகங்களை யெல்லாம் உண்டாக்கின முகில் வண்ணன்,Mugil vannan - காளமேக நிறத்தனாயும் கண்ணன்,Kannan - அடியார்க்கு எளியனாயும் என் நலம் கொண்ட,En nalam konda - எனது நன்மைகளை யெல்லாம் கவர்ந்து கொண்டவனாயுமிருக்கிற பிரான் தனக்கு,Piraan thanakku - எம்பெருமானுக்கு என் நிலைமை உரைத்து,En nilamai uraiththu - எனது அவஸ்தையைச் சொல்லி பொன்உலகு ஆளீர்புவனி முழுது ஆளீர்,Pon ulagu aaleer bhuvani muzhuvadhum aaleer - உபய விபூதியையும் ஆளுங்கோள். (இதுவே எனது வேண்டுகோள்) |
| 3305 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (என்னுடைய ஆற்றாமையை எம்பெருமானுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும். கொண்டாட அத்தை அங்கீகரிக்க வேணுமென்று சில கிளிகளை நோக்கி வேண்டுகின்றாள்.) 2 | மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ? கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2 | கிளிகாள்,Kilikal - கிளிகளே! கை அமர் சக்கரம்,Kai amar sakkaram - திருக்கையில் அமர்ந்த திருவாழியையுடையனும் கனி வாய்,Kani vaai - கொவ்வைக்கனிபோன்ற அதரத்தை யுடையனுமான என் பெருமானைகண்டு,En perumanaikandu - எம்பெருமானைச் சேவித்து மெய் அமர் காதல் சொல்லி,Mei amar kaadhal solli - உடம்போடே அணையவேண்டும்படி எனக்குண்டாயிருக்கிற என் காதலைத் தெரிவித்து விரைந்து ஓடி வந்து,Virainthu odi vandhu - உடனே இவ்விடம் வந்து சேர்ந்து மை அமர் வாள் நெடு கண்,Mai amar vaal nedu kann - மையணிந்து அழகிய நீண்ட கண்களையுடைய மங்கைமார் முன்பு,Mangaimaar munbu - தோழிமார் முன்னிலையிலே என் கை இருந்து,En kai irundhu - என் கையிலே வீற்றிருந்து நெய் அமர் இன் அடிசில்,Nei amar in adisil - நெய்யோடு பொருந்திய இனிய இடிசிலை பாலோடு,Paalodu - பாலோடுங்கூட நிச்சல் மேலீர்,Nichal meleer - நித்யமாக ஸ்லீகரிக்க வேணும். |
| 3306 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (இனமாய் இருக்கிற வண்டுகளைக் குறித்து எம்பெருமானுக்கு தன் தசையை அறிவித்து வந்து என் தலை மேலே வர்த்தியுங்கோள் என்கிறாள்.) 3 | ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ? கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3 | கூடிய வண்டு இனங்காள்,Koodiya vandu inangal - கூடிக் களித்திருக்கின்ற வண்டுத்திரள்களே! குருநாடு உடைய ஜவர்கட்கு ஆய்,Kurunadu udaiya javargadku aay - குருக்ஷேத்திரத் தலைவர்களான பஞ்சபாண்டவர்களுக்காக ஆடிய மா நெடு தேர்படை,Aadiya maa nedu terpaday - ஆடலில் சிறந்த குதிரைகளையும்பெரிய தேர்களையும் மற்றுமுள்ள சேனைகளையும் நீறு எழ சென்ற,Neeru ezha sendra - பொடியாம்படி முடித்த பிரான்,Piraan - எம்பெருமான் சூடிய,Soodiya - திருக்குழலில் அணிந்துகொண்டிருக்கிற தண் துளபம் உண்ட,Than thulabam unda - குளிர்ந்த திருத்துழாயிலேயிருந்து மதுபானம் பண்ணின தூ மது வாய்கள் கொண்டு,Thoo madhu vaaygal kondu - தெளிந்த மதுவையுடைத்தான வாயையுடையீர்களாய்க் கொண்டு ஓடி வந்து,Odi vandhu - விரைந்து வந்துசேர்ந்து என் குழல் மேல்,En kuzhal mel - என் கூந்தலிலுள்ள ஒளி மர் மலர்,Oli mar malar - ஒளி பொருந்திய சிறந்த பூவிலே ஊதீர்,Oodeer - உங்களுடைய உத்ஸாஹச் செயல்களைச் செய்யுங்கள். |
| 3307 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (என்னை நோவுபடுத்திப்போய் எட்டா நிலத்திலே ஒலக்கமிரூக்கை தான் ஒரு ஸ்ரீமத் காம்பீர்யமோவேன்று கேளுங்கோளென்று திருநாட்டிலே சில தும்பிகளைத் தூது விடுகிறாள்.) 4 | தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்! பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4 | முல்லைகள் மேல்,Mullaigal mel - முல்லைப்பூக்களிலே வாழ்கிற என் தும்பிகாள்,En thumpigal - எனக்கு இனிய தும்பிகளே! தூ மது வாய்கள்,Thoo madhu vaaygal - தூய மதுவிலே படியவேண்டிய வாயைக்கொண்டுவந்து பூ மது உண்ண செல்லில்,Poo madhu unnam sellil - அந்த முல்லைப்பூக்களில் மதுவை யுண்ணச் செல்ல நினைத்திர்களாகில் (அதற்காக நீங்கள் செய்யவேண்டியதொன்றுண்டு அது என்னென்னில்) வினையெனை,Vinaiyenai - பிரிந்து வருந்தவேண்டிய பாவத்தைப் பண்ணின என்னோடே பொய் செய்து,Poi seydhu - க்ருத்ரிமமான கலவியைப்பண்ணி அகன்ற,Agandra - பிரிந்துபோன மா மது வார் தண் துழாய் முடி,Maa madhu vaar than thuzhai mudi - பெருவெள்ளமான மது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை முடியிலணிந்துள்ள வானவர்கொனை,Vaanavarkonai - நித்யஸூரிநாதனை கண்டு,Kandu - நேரில் ஸேவித்து யாம் இதுவோ தக்க ஆறு என்ன வேண்டும் நுங்கட்கு,Yaam idhuvo thakka aaru enna vendum nungadku - “நாம் இப்படி மேன்மை கொண்டாடியிருப்பதோ தகுதி?“ என்று நீங்கள் சொல்லவேண்டும். |
| 3308 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (மீண்டும் கிளிகளை விளித்துச் சொல்லுகிறாள். எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு “உம்முடைய தக்கவாறு இதுவோ“ வென்னுங் கோளென்கிறாள்.) 5 | நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்! வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5 | யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kiligal - நான் வளர்க்க வளர்ந்த கிளிகளே! வம்மின்,Vammin - இப்படி வாருங்கள் நுங்கட்கு யான் உரைக்கேன்,Nungadku yaan uraikkean - உங்களுக்கு நான் ஒன்றுசொல்லுகிறேன். வெம் கண் புள்,Vem kann pul - வெவ்விய கண்ணையுடைய பெரிய திருவடியை ஊர்ந்து வந்து,Oorndhu vandhu - நடத்திக்கொண்டு என் பக்கலிலே வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த,Vinaiyenai nenjam kavarntha - பரவியான என்னுடைய உள்ளத்தைக கொள்ளைகொண்ட செம் கண்,Sem kann - புண்டரீகாஷனும் கரு முகிலை,Karu mugilai - காளமேகச்யாமனும் செய்யவாய்,Seyya vaai - சிவந்த அதரத்தை வுடையவனும் செழு கற்பகத்தை,Sezhu karpagaththai - விலக்ஷண கல்பவ்க்ஷம்போன்ற வனுமான எம்பிரானை எங்கு ஆகிலும் சென்று கண்டு,Engu aagilum sendru kandu - எவ்விடத்திலாவது சென்று சேவித்து இதுவோ தக்க ஆறு என்மின்,Idhuvo thakka aaru enmin - இதுதானோதகுதியென்று சொல்லுங்கோள். |
| 3309 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே நமக்கு அபேக்ஷிதங்கள் செய்யுமவன் பாடே சென்று இதுவோ தக்கவாறு என்று சில பூவைகளைக் குறித்து சொல்லுகிறாள்.) 6 | என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான் கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச் சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6 | தீ வினையேன் வளர்த்த,Thee vinaiyen valartha - கொடிய பாவியான நான் வளர்க்க வளர்ந்த சிறு பூவைகளே,Siru poovaikale - சிறு பூவைப்பறவைகளே! என் மின்னு நூல் மார்வன்,En minnu nool maarvan - மின்போலே விளங்குகின்ற யஜ்ஞோபவீ தமணிந்த்திருமார்பை எனக்கு அநுபவிப்பித்தவனும் என் கரும் பெருமான்,En karum perumaan - தன் திருமேனி நிறத்தை எனக்கு அநுபவித்த பெருமானும். என் கண்ணன்,En kannan - எனக்கு ஸர்வாத்மநா விதேயனுமான எம்பெருமான் தன் நீற் கழல் மேல் மன்னு தண் துழாய்,Than neer kazhal mel mannu than thuzhai - தனது நெடிய திருவடிகளின்மீது பொருந்தியுள்ள திருத்துழாயை நமக்கு அன்றி நல்கான்,Namakku anri nalkaan - நமக்குத் தவிர வேறொருவர்க்கும் கொடுக்ககில்லான், கன்மின்கள் என்று,Kanminkal endru - “நான் சொல்லிக்கொடுப்பதை அப்யஸியுங்கோள்“ என்று சொல்லி யான் உம்மை கற்பியா வைத்த,Yaan ummai karpiya vaitha - நான் உங்களுக்குக் கற்பித்து வைத்த மாற்றம் சொல்லி,Maatram solli - பாசுரங்களைச் சொல்லிக்கொண்டு சென்மின்கள்,Senminkal - அப்பெருமானிடம செல்லுங்கோள் |
| 3310 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -பரம சேதனன் பொகட்டுப் போனான் -சைதன்யம் லேசம் உடைய பக்ஷிகள் பறந்து போயினவும் அந்நிய பரமாயினவும் ஆயிற்றன -இதுக்கு ஹேது சேதனங்களையோ -என்று பார்த்து -அசேதனமான பாவையை இரக்கிறாள்) 7 | பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான் மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப் பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7 | பாவைகள்,Paavaigal - எனது லீலோபகரணங்களான மாப்பாச்சிகளே! பூவைகள் போல நிறத்தன்,Poovaigal pola nirathan - பூவைப்பூவண்ணனும் புண்டரீகங்கள் போலும் கண்ணன்,Pundareekangal polum kannan - புண்டரீகாக்ஷனும் யாவையும் யாவரம ஆய்நின்ற,Yaavaiyum yaavarama aay nindra - ஸகல சேதநாசேதந ஸ்வரூபியும் மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தியுக்தனும் என் ஆழி பிரான்,En aazhi piraan - கையுந்திருவாழியுமான அழகை எனக்குக் காட்டித்தந்தவனும் மாவை வல் வாய் பிளந்த,Maavai val vaai pilantha - குதிரை வடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மகரனுடைய வலியவாயைக்கீண்டு அவனை முடித்தவனுமான மதுசூதற்கு,Madhusoodharku - மதுஸூதநனுக்கு வினையாட்டியேன் பாசறவு,Vinaiyaattiyen paasaaravu - பாலியான என்னுடைய நிறக்கேட்டை தீர்க்கிற்றிரே,Theerkitrire - தீர்க்க வல்லிகோளோ? (தீர்க்க வேணும் என்றபடி) |
| 3311 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –முன்னே நின்ற குருகை குறித்து -அயர்வறும் அமரர்களைப் போலே உம்மால் அல்லது செல்லாதாள் ஒருத்தி உம்மைப் பெறாதே நோவு படா நின்றாள் என்று சொல் என்று அருளிச் செய்கிறாள்) 8 | பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்? ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள் மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8 | ஆக அறு தூவி,Aaga aru thoovi - பழிப்பற்ற சிறகையுடைய வெள்ளை குருகே,Vellai kuruge - பரிசுத்தமான குருகே! வினையேன்,Vinaiyen - பாலியான நான் பாசறவு எய்தி,Paasaravu eidhi - நிறமழிந்து இன்னே,Inne - இவ்வண்ணமாகவே எனை ஊழி,Enai oozi - எத்தனைகாலம் நைந்துகிடப்பேன்! ஒரு நாள் அருள் செய்து,Oru naal arul seydhu - ஒருநாள் க்ருபை பண்ணி, மாசு அறு நீலம் சுடர் முடி,Maasu aru neelam sudar mudi - மாசற்ற நீலச்சுடர் பொருந்திய மயிர் முடியையுடையனான வானவர் கோனை கண்டு,Vaanavar konai kandu - தேவாதிதேவனைக் கண்டு ஏக அறும் தும்மை அல்லால்,Eka arum thummai allaal - “பழிப்பற்ற உம்மை யொழிய பேர்த்து மற்று மறுநோக்கு இவள்,Perththu matru marunookku ival - பின்னை வேறொரு கதியுடையளல்லன்“ (என்று சொல்லு.) |
| 3312 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (புதா வென்பது நாரையிலேயே அவந்தரஜாதிபேதம், பெருநாரை யென்பர். அப்பறவைகளைப் பிரார்த்திக்கிறாள்.) 9 | பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்! கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9 | நீர் திரை மேல் உலவி,Neer thirai mel ulavi - நீரலைகளின் மேலே உலாவி இரை தேரும்,Irai therum - உணவுப்பொருள்களை ஆராய்கின்ற புதா இனங்காள்,Pudhaa inangal - பெருநாரைக்கூட்டங்களே! வினையாட்டியேன் நான்,Vinaiyaattiyen naan - பாவியான நான் பேர்த்து மற்று ஓர்களை கண் ஒன்று இலேன்,Perththu matru orugalai kann onru ilean - (உங்களையொழிய) வேறொரு தஞ்சமுடையனல்லேன் (எனக்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்) கார் திரள் மா முகில் போல்,Kaar thiral maa mugil pol - கார்காலத்தில் திரண்ட மஹா மேகங்கள் போன்றவனான கண்ணன் விண்ணவர் கோனை கண்டு,Kannan vinnavar konai kandu - கண்ணபிரானான தேவாதி தேவனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு,Vaarththaigal kondu - அவன் கூறும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு அருளிவந்து இருந்து,Arulivandhu irundhu - என் பக்கலில் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு அருளி வந்து இருந்து,Aruli vandhu irundhu - என் பக்கலில் க்ருபைபண்ணி வந்திருந்து வைகல் உரையீர்,Vaikal uraiyeer - (இதுவே போதுபோக்காம்படி) நெடும்போது சொல்லிக் கொண்டிருங்கள் |
| 3313 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (மஹாகோஷ்டியிலே எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில் திருவுள்ளம் அந்யபரமாயிருக்குமாதலால் அப்போது சொல்லாதே, திருவோலக்கத்தில் நின்று மெழுந்து திவ்யாந்தபுரத்திலே யெழுந்தருளினால் அங்கே பிராட்டியுடைய திவ்யஸந்நிதானத்திலே திருவுள்ளத்திற்படும்படி என் திறம் விண்ணப்பஞ்செய்து அவனுரைக்கும் மறுமாற்றாங்கொண்டு என்னருகே வந்திருந்து சொல்லவேணுமென்று அன்னங்களைக்குறித்து வேண்டுகிறாள்.) 10 | வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம் அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்! என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10 | வந்து இருந்து,Vandhu irundhu - (ஏற்கனவே என் கண்னெதிரில் வந்திருந்து) உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம்,Ummudaiya mani sevalum neerum ellaam - உங்களுடைய அழகிய சேவல்களும் (அவற்றுக்கு இனிய) நீங்களும் ஆக எல்லாம் அந்தரம் ஒன்றும் இன்றி,Antharam onrum inri - இடையீறு ஒன்றுமில்லாமல் அலர்மேல் அசையும்,Alarmael asaiyum - பூக்களின் மீது உல்லாஸமாக உலாவுகிற அன்னங்காள்,Annangaal - அன்னப்பறவைகளே! என் திருமார்வற்கு,En thirumaarvarku - லஷ்மீபதியான எமபெருமானுக்கு என்னை,Ennai - என்னைப்பற்றி ப்ரஸ்தாவித்து இவள் இன்ன ஆறு காண்மின் என்று,Ival inna aaru kaanmin endru - “இப்பராங்குசநாயகி இவ்வண்ணமானாள் காணும்“ என்று மந்திரத்து,Mandhiraththu - அவளும் அவனுமான தனி யிடத்திலே ஒன்று உணர்த்தி,Onru unarththi - ஒரு பேச்சு அறிவித்து மறு மாற்றங்கள் உரையீர்,Maru maatramgal uraiyeer - அதற்கு அவன் சொல்லும் மறு மொழிகளை என்னிடத்தே வந்து சொல்லுங்கோள். |
| 3314 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ரீ ஒன்பதினாயிரப்படி –6-8-11- நிகமத்தில் -இப்பத்தில் ஆழ்வாருடைய ஆர்த்தியை அனுசந்தித்தார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய் என்கிறார்) 11 | மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல் நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11 | நாற்றம் கொள் பூ பொழில்சூழ் குரு கூர் சடகோபன்,Maatram kol poo pozhi soozh kuru koor Sadagopan - பரிமளப்ரசுரமான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு,Maatramgal aynthu kondu - சொற்களை ஆராய்ந்தெடுத்து மது சூதபிரான் அடி மேல்,Madhu soodhapiraan adi mel - எம்பெருமான் திருவடி விஷயமாக சொன்ன,Sonna - அருளிச்செய்த தோற்றங்கள் ஆயிரத்துள்,Thotramgal aayirathul - ஆவிர்ப்பாவரூபமான இந்த ஆயிரத்தினுள் ஊற்றின கண் நுண் மணல்போல்,Ootrin kan nun manal pol - ஊற்றினிடத்தேயுள்ள நுண்ணிய மணல்போல் நீர் ஆய் உருகா நிற்பர்,Neer aay urugaa nirpar - நீர்ப்பண்டமாக உருகப்பெறுவர்கள் |