Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பொலிக பொலிக (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3128திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார்.) 1
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1
பொலிக பொலிக பொலிக,Poliga Poliga Poliga - வாழ்க! வாழ்க! வாழ்க!
உயிர்,Uyir - ஜீவராசிகளுக்குண்டான
வல்,Val - வலிதான
நைந்த,Naindha - அழிந்துபோன
இங்கு,Ingu - இவ்விபூதியில்
நமனுக்கு,Namanukku - யமனுக்கு
யாது ஒன்றும் இல்லை,Yaathu Ondrum Illai - ஒரு காரியமுமில்லை.
கலியும்,Kaliyum - கலிபுருஷனும்
நெடும்,Netum - (விரைவில்) தொலையக்கூடும்.
கண்டு கொள்மின்,Kandu Kolmin - (அதை) ப்ரத்யக்ஷமாகக் காண்பீர்கள்;
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
சாபம்,Sabam - பாவமானது
போயிற்று,Poyitru - தொலைந்தது;
நலியும்,Naliyum - வருத்தத்தை விளைவிக்கக்கூடிய
நரகமம்,Naragamum - நகரலோகங்களும்
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இந்நிலத்தில்
மலிய புகுந்து,Maliya Pugundhu - நிரம்பி
இசை பாடி,Isai Paadi - இனிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு
ஆடி உழிதர கண்டோம்,Aadi Uzhidhara Kandom - இங்குமங்கும் நடமாடக் காண்கிறோம்
3129திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார்.) 2
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2
வண்டு ஆர்,Vandu Ar - (மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய
தண் அம் துழாயான்,Than Am Thuzhaayan - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான
மாதவன்,Madhavan - திருமாலினது
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இந்நிலத்திலே
பண்,Pan - இராசங்களை
பாடி நின்ற ஆடி,Paadi Nindra Aadi - பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு
பரந்து,Parandhu - எங்கும் பரவி
திரிகின்றன,Thirigindran - எங்கும் பரவி உலாவுகின்றனர்;
கண்ணுக்கு இனியன,Kannukku Iniyan - (இப்படி) கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை
கண்டோம் கண்டோம் கண்டோம் ,Kandom Kandom Kandom - கண்டோம்-;
தொண்டீர் எல்லீரும்,Thondir Ellirum - பாகவதர்களான ஸகல பேர்களும்
வாரீர்,Vaareer - வாருங்கள்;
தொழுது தொழுது நின்று,Thozhudhu Thozhudhu Nindru - நன்றாகவணங்கி
ஆர்த்தும்,Aarthum - ஆரவாரிப்போம்.
3130திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ((திரியும் கலியுகம்) நித்ய ஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்று கூடிப் பரிமாறலாம்படி ஸம்ஸார மண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார்.) 3
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3
திரியும்,Thiriyum - தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான
கலியுகம்,Kaliyugam - கலியுகமானது
நீங்கி,Neengi - தொலையப்பெற்று
பெரிய,Periya - தருமந் சிறந்த
கிதயுகம்,Kidayugam - கிருதயுகமானது
பற்றி,Pattiri - வந்து புகுந்து
தேவர்கள் தாமும் புகுந்து,Devargal Thamum Pugundhu - தேவப் பிரகிருதிகளும் தாமாகவே நெருங்கி
பேர் இன்பம் வெள்ளம் பெருக,Per Inbam Vellam Perukka - மஹத்தான ஆனந்த வெள்ளம் பெருகும்படியாக
கரிய முகில் வண்ணன்,Kariya Mugil Vannan - காளமேகவண்ணனாயும்
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்வண்ணனாயுமுள்ள
எம்மான்,Emman - எம்பெருமானுடைய
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இவ்விபூதியிலே
இரிய புகுந்து,Iriya Pugundhu - மிக்க கோலாஹலங்களுடன் வந்து
இசை பாடி,Isai Paadi - கீதங்களைப் பாடிக் கொண்டு
எக்கும்,Eggum - எல்லாவிடங்களிலும்
இடம் கொண்டன,Idam Kondan - வியாபித்துவிட்டார்கள்.
3131திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அயர்வறும் அமரர்களும் புகுந்து பரிமாறலாம் படி சம்சாரம் அடைய வைஷ்ணவர்கள் யாயிற்று -என்கிறார்.) 4
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4
இடம் கொள்,Idam Kol - எங்கும் நிறைந்த
சமயத்தை எல்லாம்,Samayathai Yellam - துஷ்டமதங்களையெல்லாம்
எடுத்து களைவன போலே,Eduthu Kalaiyavan Pole - வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே
தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்,Thata Kadal Palli Peruman Thannudaiya Poothangaley Aay - ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து
கிடந்தும்,Kidandhum - படுத்துக்கொண்டும்
இருந்தும்,Irundhum - உட்கார்ந்துகொண்டும்
எழுந்தும்,Ezundhum - நின்று கொண்டும்
பல பல கீதம் பாடி நடந்தும்,Pala Pala Geetham Paadi Nadandhum - பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும்
பறந்தும்,Parandhum - தரையில் கால் பாவாதபடி
குனித்தும்,Kunithum - கூத்தாடிக்கொண்டு
நாடகம் செய்கின்றன,Nadagam Seyginran - களித்துத் திரியா நின்றார்கள்.
3132திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார். எங்கு பார்த்தாலும் பாகவத கோஷ்டி யொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு.) 5
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5
செய்கின்றது,Seyginradhu - இவர்கள் செய்கிற காரியம்
என் கண்ணுக்கு,Enn Kannuku - நான் பார்க்குமிடத்து
ஒன்றே ஒக்கின்றது,Ondre Okkinradhu - ஒன்றுபோலவே யிரா நின்றது;
இ உலகத்து,E Ulakathu - இவ்விபூதியிலே
வைகுந்தன் பூதங்களே,Vaikunthan Poothangaley - பகவத்பக்தர்களே
மயாத்தினால்,Mayathinal - யதேஷ்டமாக
எங்கும் மன்னி,Engum Manni - எல்லாவிடங்களிலும் நிறைந்து
ஆய்,Aay - இருக்கின்றார்கள்
அரக்கர்,Arakkar - ராக்ஷசர்களாவும்
அசுரர்,Asurar - அசுரர்களாகவும்
பிறந்தீர் உள்ளீர் ஏல்,Pirandheer Ullir El - பிறந்தவர்களாயிருப்பீர்களாகில்
தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களிலலே சபவர்களாயிருப்பவர்களே!
கொன்று,Konru - உங்களைக் கொலைசெய்து
ஊழி பெயர்த்திடும்,Uuzhi Peyarthidum - யுகத்தையே மாற்றிவிடுவீர்கள்; (கலியுகத்ததைக் கிருதயகமாகவே ஆக்கிவீடவார்கள்)
உய்யும் வகை இல்லை,Uyyum Vagai Illai - (ஆதலால் உங்களுக்கு) பிழைக்கும் வழிஇல்லை;
ஐயம் ஒள்று இல்லை,Aiyam Olru Illai - (இதில்) சிறிதும் ஸந்தேஹமில்லை.
3133திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய ஸகல க்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத் எங்கும் பரந்தார்கள், அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கி யருளிச் செய்கிறார்.) 6
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6
கொன்று,Konru - கொலைசெய்து
உயிர் உண்ணும்,Uyir Unnum - பிராணனைமுடிக்குமதான
விசாதி,Visaathi - வியாதியும்
பகை,Pagai - துவேஷமும்
பசி,Pasi - பசியும் (முதலான)
தீயன எல்லாம்,Theeyan Ellam - மற்றுமுள்ள கொடியவை எல்லாவற்றையும்
இ உலகில் நின்று கடிவான்,E Ulagil Nindru Kadivan - இவ்விபூதியலே தொலைப்பதற்காக
நேமி பிரான் தமர்,Nemi Piran Thamar - சக்ரபாணியான எம்பெருமானது பக்தர்கள்
போந்தார்,Pondhaar - வந்துள்ளார்கள்;
இசை,Isai - இசைகளை
நன்று பாடியும்,Nandru Paadiyum - நன்றாகப்பாடியும்
துள்ளி ஆடியும்,Thulli Aadiyum - துள்ளிக்குதித்தும்
ஞாலம்,Gnalam - இந்நிலத்திலே
தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களில் சபலராயிருக்கிறவர்களே!
சிந்தையை,Sindhaiyai - உங்களது நெஞ்சை
செம் நிறத்தி,Sem Niratti - செவ்வையாக (நல் விஷயத்திலே) ஸ்தாபித்து
சென்று,Sendru - அப்படிப்பட்டட பக்தர்களிடத்தே போய்
தொழுது,Thozhudhu - வணங்கி
உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கோள்.
3134திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (எங்கும் பரம பாகவதர்களே மலிந்து விட்டார்களென்று பரம ஸந்தோஷம் பூரித்து நின்ற ஆழ்வார் காலதோஷத்தாலே சில அவைஷ்ணவர்களையும் கண்டார்; அவர்கள் பகவத் பாகவத ப்ரவணர்களாயன்றிக்கே தேவதாந்தர ஸமாரராதன பரர்களாய் இருக்கிறபடியையுங் கண்டார்; அன்னவர்களையும் உபதேசத்தாலே திருத்தப் பார்த்து இப்பாசுரமருளிச் செய்கிறார்.) 7
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7
நும் உள்ளத்து,Num Ullathu - உங்கள் நெஞ்சுக்குள்ளே
நிறுத்தி,Niruthi - வலியப்பிடித்து உட்காரவைத்து
கொள்ளும்,Kollum - சிந்திக்கப்படுகின்ற
தெய்வங்கள்,Dheyvangal - தேவதைகள்
உய்யக்கோள்,Uyyakkol - உஜ்ஜீப்பித்துக்கொள்வதும்
அவனோடே,Avanode - அந்த எம்பெருமான் தன்னோடே
மறுத்தும் கண் கூர்,Maruthum Kann Koor - மீண்டு சென்று கிட்டிக்கிடீர்;
மார்க்கண்டேயனும்,Maarkandeyanum - (இவ்விஷயத்தில்) மார்க்கண்டேயனும்
கரி,Kari - ஸாக்ஷியாவன்;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா,Karutha Manam Ondrum Vaenda - (உங்களுக்கு) மலினமான நெஞ்சு சிறிதும் வேண்டியதில்லை;
கண்ணன் அல்லால்,Kannan Allal - ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த ஸ்ரீமந் நாராயணனல்லது
தெய்வம் இல்லை,Dheyvam Illai - பரதெய்வம் வேறுகிடையாது;
இறுப்பது எல்லாம்,Iruppadhu Ellam - (ஆன பின்பு) நீங்கள் செலுத்தும் கடமைகளையெல்லாம்
அவன் மூர்த்தியாயவர்க்கே இறுமின்,Avan Murthiyavarkke Irumin - அப்பெருமானுடைய சரீரபூதர்களுக்குச் செலுத்துகின்றோமென்கிற பிரதிபத்தியுடனே செலுத்துங்கள்.
3135திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தேவதாந்த்ரங்களை ஆஸ்ரயித்து அபேக்ஷிதங்களை பெற்றார் இல்லையோ என்னில்- அந்த தேவதைகள் ஆஸ்ரித அபேக்ஷிதங்கள் கொடுக்க வல்லவாம் படி பண்ணினான் எம்பெருமானே - அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.) 8
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8
இறுக்கும் இறை,Irukkum Ir - அவரவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை
இறந்து,Iranthu - செலுத்தி
உண்ண,Unna - அவரவர்கள் வாழும்படி
எவ்வுலகுக்கும்,Evvulagum - வேறுவேறு வகைப்பட்டருசியையுடைய ஸமஸ்தலோகத்துக்கும்
தன் மூர்த்தி,Than Murthi - தன்னுடைய சரீரங்களை
தெய்வங்கள் ஆக,Dheyvangal Aaga - அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கைக்கு உரிய தேவதைகளாக
நிறுத்தினான்,Niruthinaan - ஏற்பாடு பண்ணினவன்
அத்தெய்வநாயகன் தானே,Attheyvanaayan Kan Thaane - ஸர்வதேவதாநாயநனான அப்பெருமானே யவன் (ஆகையால்)
மறு திரு மார்வன அவன் தன் பூதங்கள்,Maru Thiru Maarvanavan Than Pudhangal - ஸ்ரீவத்ஸமென்னும் மறுவைத் திருமலிலே உடையனான அப்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்கள்
கீதங்கள் பாடி,Geedhangal Paadi - பலவகைப் பாட்டுக்களைப்பாடி
வெறுப்பு இன்றி,Veruppu Indri - (இருள் தருமா ஞாலத்தில் இருக்க வேண்டியதாகிறதே! என்கிற வெறுப்பு இல்லாமல்
ஞானத்து,Gnanathu - இந்நிலத்தில்
மிக்கார்,Mikkaar - சிறப்புற வாழ்கின்றார்கள்
நீர்,Neer - நீங்கள்
மேவி,Mevi - அவர்களைச்சிட்டி
தொழுது,Thozhudhu - வணங்கி
உய்மின்,Uymin - உஜ்ஜிவித்துப்போங்கள்
3136திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (பகவத் பக்தர்கள் இருவகைப் படுவார்கள். பலவகைக் கைங்கரியங்களைச் செய்து போது போக்குவாரும், குணாநுபவத்திலே ஊன்றிப்போருவாரும், அப்படிப்பட்ட பக்தர்கள் பூமியெங்கும் பரந்தார்கள்) 9
மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9
வேதம் புனிதம் இருக்கை,Vedham Punitam Irugai - வேதத்தினுள் பரமபவித்திரமான புருஸூக்தம் முதலியவற்றை
நாவில் கொண்டு,Naavil Kondhu - நாவினால் உச்சரித்துக்கொண்டு
ஞானம் விதி பிழையாமே,Gnanam Vidhi Pizhaiyaame - பக்திமார்க்கம் தவறாதபடி
பூவில்,Poovil - மலரோடு கூடின
புகையும்,Pugaiyum - தூபமும்
விளக்கும்,Vilakum - தீபமும்
சாந்தமும்,Saanthamum - சந்தனமும்
நீரும்,Neerum - திருமஞ்சனமும்
மலிந்து,Malindhu - பூர்ணமாகக்கொண்டு
அச்சுதன் தன்னை,Achchudhan Thannai - எம்பெருமானை
மேவி,Mevi - அடைந்து
தொழும்,Thozhum - ஸாங்கரியம் செய்கிற
அடியாரும்,Adiyarum - அடியார்களையும்
பகவரும்,Bhagavarum - குணாநுபவ ரிஷ்டர்களையும்
உலகு மிக்கது,Ulaku Mikkatu - இவ்வுலகமானது அதிகமாகக் கொண்டது (ஆன பின்பு)
நீங்கள்,Neengal - நீங்கள்
மேவிதொழுது.,Mevi Thozhudhu - (அவர்களை) விரும்பி வணங்கி
உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கள்.
3137திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஆச்ரயித்தே தம் பதவிகளைப் பெற்றார்கள்; நீங்களும் அவர்களைப் போலே எம்பெருமானை ஆச்ரயித்துப் பிழையுங்கோளென்கிறார்.) 10
மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10
நக்கன் பிரானோடு,Nakkan Piranoatu - சிவபிரானும்
அயனும்,Ayanum - பிரமனும்
இந்திரனும்,Indiranum - தேவேந்திரனும்
முதல் ஆக,Mudhal Aaga - முதலாக
தொக்க,Thokka - திரண்ட
அமரர் குழாய்கள்,Amaraar Kuzhaigal - தேவவர்க்கங்கள்
கண்ணன் திருமூர்த்தி,Kannan Thirumoorthi - எம்பெருமானது திருவடிவத்தை
மேவி,Mevi - ஆசிரயித்து
மிக்க உலகுகள் தோறும்,Mikka Ulakugal Thorum - பரம்பின் லோகங்கள் தோறும்
எங்கும்,Engum - எவ்விடத்தில்
பரந்தன,Paranthen - நல்ல பதவிகளைப்பெற்று வாழ்ந்தான்;
தொண்டீர்,Thondir - தொண்டர்களே!
ஒக்க,Okka - (நீங்களும்) அவர்களோடொக்க
தொழ சிற்றிர் ஆகில்,Thoza Sitril Aakil - (எம்பெருமானைத்) தொழவல்லீர்களாகில்
கலியுகம்,Kaliyugam - கலியுகதோஷம்
ஒன்றும்,Ondrum - சிறிதும்
இல்லை,Illai - உங்களுக்கு இல்லாதபடியாரும்.
3138திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இத் திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகல விதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11
தன் அடியார்க்கு,Than adiyarkku - தன் அடியவர்களுக்கு
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே,Kaliyugam ondrum indrikke - கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி
அருள் செய்யும்,Arul seyyum - கிருபை பண்ணுகின்ற
மலியும் சுடர் ஒளி மூர்த்தி,Maliyum sudar oli moorthi - மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும்
மாயம் பிரான்.,Maayam pirano - வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான
கண்ணன் தன்னை,Kannan thannai - எம்பெருமானைக் குறித்து
கலி வயல்,Kali vayal - நிறைந்த வயல்களையுடைய
தென் திசை,Then disai - தென் திசையிலுள்ள
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான
காரி மாறன் சடகோபன்,Kaari maaran Sadagopan - ஆழ்வார்
புகழ்,Pugazh - கீர்த்திமிக்க
ஆயிரத்து பத்து,Aayirathu paththu - ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி
உள்ளத்தை,Ullathai - (கற்பாருடைய) நெஞ்சை
மாசு அருக்கும்,Maasu arukkum - கல்மஷமற்றதாகச் செய்