| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3645 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (மாலைப் பொழுதில் தென்றல் முதலான பதார்த்தங்கள் தனித்தனியே தனக்கு நலிவை விளைக்கும் படியைச் சொல்லிக் கதறுகிறாள் ஒரு ஆய்ச்சி. (அவளுடைய நிலைமைய யெய்திப் பேசுகிறார் ஆழ்வார்).) 1 | மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1 | மல்லிகை கமழ் தென்றல்,Malligai kamal thendral - மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலானது ஈரும் ஆல் ஓ,Eerum aalO - (வாளாவறுக்குமாபோலே) சின்றது ஐயோ வண் குறிஞ்சி இசை,Van kurinchi isai - செவிக்கினிய குறிஞ்சிப் பண்ணிகையானது செல்கதிர் மாலையும்,Selkathir maalaikum - அஸ்தமிக்குமளவிலே யுள்ள ஸீர்யனையுடைய மாலைப் பொழுதும் மயக்கும் ஆல் ஓ,Mayakkum aalO - மோஹிக்கச் செய்யா நின்றது ஐயோ செக்கர் கல் மேகங்கள்,Chekkar kal megangal - செந்நிறங்கொண்டு அழகிய மேகங்களானவை சிதைக்கும் ஆல் ஓ,Sithaikkum aalO - சரீரத்தைச் செதுக்கா நின்றது ஐயோ அல்லி அம் தாமரை கண்ணன்,Alli am thamarai kannan - விகஸித்தழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய் எம்மான்,Emmaan - ஸர்வஸ்வாமியாய் ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுள் செருக்கை யுடையனாய் அரி ஏறு,Ari aaru - ஹிம்ஹச்ரேஷ்டம் போன்றவனாய் எம் மாயோன்,Em maayon - எம்மோடு நீர்மைக் குணத்தைக் காட்டி கலந்து பரிமாறினவனான கண்ணபிரான் புல்லிய,Pulliya - முன்பு அணைத்த முலைகளும் தோளும் கொண்டு,Mulaigalum tholum kondu - முலைகளையும் தோள்களையுங் கொண்டு தமியம் புகல் இடம் அறிகிலம் ஆல் ஓ,Thamiyam pukal idam arigilam aalO - பிரிந்து வருந்திக்கிடக்கிற நாம் ஒதுங்கி உய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ |
| 3646 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (பல படிகளாலும் ரக்ஷிக்குமெம்பெருமான் வருகின்றிலன்; பாதக பதார்த்தங்கள் தனித்னியே யன்றியே திரள்திரளாகவும் தோன்றி நலிகின்றன; தப்பிப் பிழைக்கும் வழி தெரிய வில்லையே யென்கிறாள்.) 2 | புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2 | தமியம் புகலிடம் அறிகிலம் ஆல் ஓ,Thamiyam pukalidam arigilam aalO - தனிப்பட்ட நாம் ஒதுங்கியுய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ புலம்புறு மணி,Pulampuru mani - (சேக்களின் கழுத்தில்) ஒலிக்கின்ற மணியும் தென்றல்,Thendral - தென்றற் காற்றும் ஆம்பல்,Aambal - இலைக்குழலும் ஆல் ஓ,AalO - ஈர்கின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே பகல் அடு மாலை,Pakal adu maalai - பசுரபோதை முடித்து வந்து தோற்றுகின்ற மாலைப்போதும் வண் சாந்தம்,Van santham - அழகிய சந்தனமும் பஞ்சமம்,Panchamam - பஞ்சமராசமும் முல்லை,Mullai - முல்லை மாலையும் தண் வாடை,Than vaadai - குளிர்ந்த வாடைக்காற்றும் ஆல் ஓ,AalO - நலிகின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே அகல் இடம்,Akal idam - பரந்த பூமண்டலத்தை படைத்து,Padaiththu - உண்டாக்கியும் இடந்து உண்டு உமிழிந்து அளந்து,Idandhu undu umizhinthu alandhu - (ஸமய விசேஷங்களில்) இடத்தல் உண்ணுதல் உமிழ்தல் அளத்தல் ஆகிய காரியங்களைச் செய்தும் எங்கும் அளிக்கின்ற,Engum alikkindra - எல்லாப் படிகளாலும் சக்ஷணத்தைச் செய்து போருகின்றவனாய் இகல் இடத்து அசுரர்கள் கூற்றம்,Igal idathu asurarkaal koortram - யுத்த பூமியில் அசுரர்களுக்கு மிருத்யுவாய் மாயோன் ஆயன்,Maayon aayan - ஆச்சர்யபூதனான கோபாலகிருஷ்ணன் வாரான்,Vaaran - (இத்துன்பங்களைத் தொலைக்க) வருகின்றவன் இனி,Eni - இப்படியான பின்பு இருந்து,Irundhu - ஸத்தையோடேயிருந்து என் உயிர் காக்கும் ஆறு என்,En uyir kaakkum aar en - என்னுயிரை ரக்ஷித்துக் கொள்ளும் விதம் என்னோ? |
| 3647 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (தென்றல் வாடை முதலான வெளிப்பட்ட பொருள்கள் பாதகமாகை மாத்திர மன்றியே அவனுடைய திவ்யாவயங்களும் உள்ளே தோன்றி நலியாநின்றனவே யென்கிறாள்.) 3 | இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப் பணி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3 | இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்,Ini irundhu en uyir kaakkum aar en - இனி என்னுயிரைக் காத்துக் கொள்ளும்வரை யில்லை இணை முலை சமூக,Inai mulai samuga - முலைகள் குழையும்படியாகவும் நுண் இடை அடங்க,Nun idai adanka - நுட்பமாக இடை தளரும்படியாகவும் துளி இரு கலவி செய்து,Thuli iru kalavi seydhu - துக்கரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி ஆகம் தோய்ந்து,Aagam thoyndhu - என் வடிவிலே கலந்து புஜித்து எம்மை துறந்து இட்டு அகல்கள்வன்,Emmai thurandhu ittu akalgalvan - எம்மைக் கைவிட்டுப் பொகட்டுப் பிரிந்துபோன கள்வனாய் தனி இளசிங்கம்,Thani ilasingam - ஒப்பற்ற சிங்கக்குட்டியாய் எம்மாயன் கண்ணன்,Emmaayan kannan - விலஷணமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ணபிரான் வாரான்,Vaaran - வந்து சேர்கின்றிலன் தாமரை கண்ணும்,Thaamarai kannum - (அப்பெருமானது) தாமரை போன்ற திருக்கண்களும் செம் வாயும்,Sem vaayum - சிவந்த திருப்பவளமும் நீலம் பனி இரு குழல்களும்,Neelam pani iru kuzhalgalum - கறுத்துக் குளிர்ந்து பரந்த திருக்குழல்களும் நான்கு தோளும்,Naanngu tholum - நான்கு திருத்தோள்களும் பாவியேன் மனத்தே நின்று நரும் ஆல் ஓ,Paaviyen manaththae ninru narum aalO - பாலியேனுடைய மனத்திலே ஒருபடிப்பட நின்று ஈலியா நின்றன ஐயோ |
| 3648 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அவனுக்கு ஸ்மாரகமாய் அவ் வழியாலே நலிகை யன்றிக்கே தானே தனித்தனியே அக்னிமயமாய் தஹியா நின்றன -என்கிறாள்) 4 | பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4 | பாவியேன் மனத்தே நின்று ஊரும் ஆல் ஓ,Paaviyen manatthae ninru oorum aalO - பாவியேனுடைய நெஞ்சிலேயே நின்று நலியா நின்றதந்தோ தண் வாடை வாடை,Than vaadai vaadai - தண்வாடையென்றே பேர் பெற்றிருந்த வாடைக்காற்றானது வெம் வாடை ஆல் ஓ,Vem vaadai aalO - நெருப்பை யுமிழும் வாடையாயிரா நின்ற தந்தோ மேவு தண் மதியம்,Mevu than madhiyam - விரும்பிப் பார்க்கப்படுகிற குளிர்ந்த சந்திரனும் வெம் மதியம் ஆல் ஓ,Vem madhiyam aalO - உஷ்ணகிரணனான சந்திரனானானந்தோ மெல் மலர் பள்ளி,Mel malar palli - ம்ருதுவான புஷ்ப சயனமும் வெம் பள்ளி ஆல் ஓ,Vem palli aalO - நெருப்புப்படுக்கை யாயிற்றந்தோ தூவி அம் புன் உடை,Thuvi am pun udai - சிறகுடைய பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்ட தெய்வம் வண்டு,Deivam vandu - பரம புருஷனாகிற வண்டு துதைந்த,Thuthainthu - அநுபவித்து ஸாரம் கவரப்பெற்ற எம் பெண்மை இது,Em penmai ithu - எனது பெண்மையானவிது ஆம் பூ ஆல் ஓ,Aam poo aalO - அழகியப்போலே பரிதாப்பத்தை ஸஹிக்க மாட்டாத தாயிரநின்றதந்தோ வகைகள்,Vagaigal - இவ்வகைகளெல்லாம் அவியின் பரம் அல்ல அந்தோ,Aviyin param alla andho - இவ்வாத்மாவுக்குப் பொறுக்கலாவனவல்ல |
| 3649 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (அடியார்க்கெளியனென்று பேர் பெற்றவனுடைய இரக்கம் பெறுகை அரிதான பின்பு நம்முயிரைக் காக்கும் விரகுண்டோ வென்கிறாள்.) 5 | யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5 | யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆல் ஓ,Yaamudai nenjamum thunai andru aalO - எம்முடைய நெஞ்சும் உசாத் துணைகாகின்றதில்லையந்தோ ஆ புகும் மாலையும் ஆகின்று ஆல் ஓ,Aa pukum maalaiyum aakindru aalO - பசுக்கள் வந்து புகும் மாலைப் பொழுது மாகின்றதந்தோ யாமுடை ஆயன்தல் மனம் கல் ஆல் ஓ,Yaamudai aayanthal manam kal aalO - எமது கோபாலக்ருஷ்ணனுடைய நெஞ்சு கல்லாய் விட்டதந்தோ அவனுடை,Avanudai - அப்பெருமானுடைய தீர் குழல் ஈரும் ஆல் ஓ,Theer kuzhal eerum aalO - இனிதான வேணுகானமும் நலியா நின்றதந்தோ யாமுடை துணை என்னும் தோழிமாரும்,Yaamudai thunai ennum thozhimaarum - எமக்குத் துணைவரென்று பேர் பெற்றிருக்கின்ற தோழியரும் எம்மில் முன்,Emmil mun - எனக்கு முன்னே அவனுக்கு மாய் லர் ஆல் ஓ,Avanukku maai lar aalO - அவள் பொருட்டு நோவுபடா நின்றார்களந்தோ அவனுடை அருள் பெறும் போது அரிது,Avanudai arul perum podhu aridhu - அவனது அருளைப் பெறுவது அரிதாயிரா நின்றது யாமுடை ஆர் உயிர் எனக்கும் ஆறு என்,Yaamudai aar uyir enakkum aaru en - எனது அருமையான வுயிரைக் காக்கும் விதம் என்னோ |
| 3650 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (பிராட்டியோடும், அஹங்காரிகளான பிரமன் சிவன் முதலானாரோடும் வாசியற உடம்பு கொடுக்குமவனுடைய சீலகுணம் என்னுயிரை ஈராநின்றதே யென்று குணவிசேஷத்திலீடு பட்டுச் சொல்லுகிறாள்.) 6 | அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல அவன் அருள் பெருமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும் எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6 | அவனுடைய அருள் பெறும்,Avanudai arul perum - அவனோடு ஸம்ச்லேஷிப்பதாகிற அருளைப் பெறுவது அரிதாயிருக்கின்றது. அவ அருள் அல் லன அருளும் அல்ல,Ava arul allana arulum alla - அவனுடைய அருள் அருளே யல்லது மற்றவை அருளல்ல அவன் அருள் பெறும் அளவு,Avan arul perum alavu - அவனது அருளைப்பெறும் வரையில் ஆலி நில்லாது,Aali nillaadhu - என் பிராணன் தரித்திருக்கமாட்டாது அடு பகல் மாலையும்,Adu pakal maalaikum - பகலை முடிக்கும் மாலைப்பொழுதும் வந்து தோன்றிற்று நெஞ்சும் காணேன்,Nenjum kaanaen - (தவரிமைக்கு உதவும்தான்) நெஞ்சையும் கான்கின்றிலேன் சிவனொடு பிரமன் வரை திருமடந்தை சேர் திரு ஆகம்,Sivanodu piraman varai thirumadandhai seer thiru aagam - சிவனும் பிரமனும் பிராட்டியும் ஒருங்கே சேர்ந்திருக்கப் பெற்ற திருமேனியானது. எம் ஆவி ஈரும்,Em aavi eerum - என்னாத்மாலை நலிகின்றது இனி புகும் இடம் எவம்,Ini pukum idam evam - இனி எனக்கொதுங்குமிடம் எதுவோ! எவம் செய்கோனோ,Evam seykono - யாது செய்வேன் அன்னை மிர்கான்,Annai mirkaan - தாய்மார்களே ஆருக்கு என் சொல்லுகேன்,Aarukku en sollugeen - ஆருக்கு என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன் |
| 3651 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -கீழ்ச் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து கண் பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள்.) 7 | ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7 | கார் ஓக்கும் மேனி,Kaar oakkum meeni - காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையனான நம் கண்ணன்,Nam kannan - நமது கண்ணபிரான் கள்வம்,Kalvam - தனது கள்ளக் செயல்களினால் அவர்ந்த,Avandha - அபஹரித்துக் கொண்டு போன அத் தனி நெஞ்சம்,Ath thani nenjam - நம்மை விட்டுத் தனியேயான நெஞ்சானது அவன் கணஃது,Avan kanathu - அவன் பக்கலிலே யாயிற்று சீ உற்ற அகில் புகை,See utrra akil pukai - பரிமளச் செல்வம்மிக்க அகிற்புகையையும் யாழ் நரம்பு,Yaazh narambu - யாழின் நரம்பொலியையும் பஞ்சமம்,Panchamam - பஞ்சமராகத்தையும் தண் பகஞ்சார்ந்து,Than pakanchaarndhu - குளிர்ந்த சந்தனத்தையும் அணைந்து,Anaindhu - கூட்டிக் கொண்டு போர் உற்றவாடை,Poora utravaadai - போர் வுரியத் தலைப்பட்ட வாடையானது தண் மல்லிகை பூ,Than mallikai poo - குளிர்நத மல்லிகைப்பூவினுடைய புது மணம் முகந்து கொண்டு,Pudhu manam mugandhu kondu - செவ்விப் பரிமளத்தை முகந்து கொண்டு எறியும் ஆல் ஓ,Eriyum aalO - வீசாநின்றதந்தோ |
| 3652 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கீழே தனித் தனியும் திரளவும் பாதகமானவை ஒன்றுக்கு ஓன்று முற்கோலி வந்து மேல் விழுந்து நலியா நின்றன -என்கிறாள்.) 8 | புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர் மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்–9-9-8 | பொங்கு இன வாடை,Pongu ina vaadai - என்னை நலிய நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடைக் காற்றானது புது மணம் முகந்து கொண்டு ஏறியும் ஆல் ஓ,Pudhu manam mugandhu kondu eeriyum aalO - புதிய பரிமளத்தை முகந்துகொண்டு வீசாநின்றதந்தோ புன் செக்கர் ஆல் ஓ,Pun sekkar aalO - புல்லிய செக்கர் வானமும் வந்து நலியா நின்றது அது மணந்து அகன்ற,Adhu manandhu akandra - அப்படி கலந்து பிரிந்த நம் கண்ணன்,Nam kannan - நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம் கண்ணனில்,Kannanil - அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது இனி அதனில்,Ini adhanil - இன்னமும் அதுக்குமேலே உம்பர் மது மணம் மல்லிகை,Madhu manam mallikai - மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய மந்தம் கோவை,Mandham kovai - மெல்லிய ஸரமென்ன வண் பசும் சாந்தினில்,Van pasum shaanthinil - அழகிய குளிர்ந்த சந்த மென்ன இவற்றிலுங்காட்டில் பஞ்சமம் வைத்து,Panchamam vaithu - விலஷணமான ராகத்தை யிட்டு அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும்,Adhu manandhu in arul aaychiyarkke oodhum - வாசாமகோரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி நல்லருள் செய்யப்பெற்ற ஆய்ச்சிகளுக்கே யூதுகிற அத்தீம்குழற்கே,Atthimkuzharkke - அல்லினிய குழலோசைக்கே நான் உய்யேன்,Naan uyyeen - நான் உயிரைப் பறிகொடப்பவளாயிராநின்றேல் |
| 3653 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (நலிவதில் மற்றவையெல்லாம் ஒருதட்டாயும் அவனுடைய வேணுகானம் மாத்திரம் ஒருதட்டாயுமிருத்தலால் “ஊதுமத்தீங்குழற்கே உய்யேன் நான்” என்று மீண்டுஞ் சொல்லுகிறது.) 9 | ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப் பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9 | இடை இடை அது மொழிந்து,Edai edai adhu mozhinthu - இடையிடையே அபிப்ராய கர்பங்களான பாசுரங்களையிட்டு ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான்,Oodhum a theem kuzhalke uyyeen naan - ஊதுகிற இனிய அக்குழலோசைக்கே நான் முடிந்து போகின்றேன். தன் செய் கோலம்,Than sei kolam - தனக்குத்தானே செய்யப்பட்ட கோலத்தையுடைத்தாய் தூதுசெய் கண்கள் கொண்டு,Thoodhusei kanngal kondu - தூது போகின்ற கண்களைக் கொண்டு ஒன்று பேசி,Onru paesi - தன் கருத்தை வெளியிட்டு தூமொழி இசைகள் கொண்டு,Thoomozhi isaihal kondu - இனிய பாசுரங்களையுடைய இசைகளைக் கொண்டு ஒன்று நோக்கி,Onru nokki - கடாக்ஷித்து பேதுறு முகம் செய்து,Paethuru mugam seythu - தன்னீடுபாடு தன் முகத்திலே தோன்றும்படி காட்டி நொந்து நொந்து,Nonthu nonthu - அபலைகள் என்படுகிறார்களோ வென்று மிகவும் நொந்து பேதை நெஞ்சறவு அற,Paethai nenjaravu ara - பெண்களினுடைய ஊடல் அறும்படியாக பாடும் பாட்டை,Paadum paattai - பாடுகிற பாட்டை ஆதும் ஒன்று அறிகிலம்,Aadhum onru arigilam - சிறிதும் அறியகில்லோம் அம்ம அம்ம,Amma amma - ஐயோ மாலையும் வந்தது,Maalaiyum vandhadhu - மாலைப்பொழுதும் வந்திட்டது மாயன் வாரான்,Maayan vaaran - கண்ணன் வந்திலன் |
| 3654 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வருவதாக சொன்ன காலமான ராத்திரியும் வந்து மஹா அவசாதம் வர்த்தியா நிற்க அவனைக் காண்கிறிலோம் -இனி பாதகங்களினுடைய சந்நிதியில் அவனை ஒழியத் தரிப்பது அரிது என்கிறாள்.) 10 | மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10 | மாலையும் வந்தது,Maalaiyum vandhadhu - மாலைப்பொழுதும் வந்திட்டது மாயன் வாரான்,Maayan vaaran - கண்ணன் வந்திலன் மா மணி புலம்ப,Maa mani pulamba - பெரிய மணிகள் ஒலிக்கும் படி வல் ஏறு அணைந்த,Val eeru anaindha - வலிய ரிஷபங்களோடு சேர்ந்த கோலம் நல் நாகுகள் உகளும் ஆல் ஓ,Kolam nal naagugal ukalum aalO - அழகிய பசுக்கள் களித்துத் திரிகின்றன வந்தோ! குழல்களும்,Kuzhalgalum - புல்லாங்குழல்களும் கொடியன,Kodiyaṉ - கொடுமை செய்வனவாகி குழறும்,Kuzhalum - இனிய இசையைச் செய்கின்றன கண்டு,Kandu - வண்டுகளானவை வால் ஒளி,VaalOli - வெளுத்த வொளியை யுடைத்தான வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி,Valar mullai karu mughaigal mallikai alampi - வளர் முல்லை, கருமுகைப்பூ மல்லிகைப்பூ ஆகிய இவற்றிலே படிந்து ஆலும் ஆலோ,Aadhum aaloo - முரல்கின்றனவந்தோ வேலையும்,Velaiyum - கடலோதமும் விசும்பில்விண்டு,Visumbilvindhu - ஆகாசத்திலே அளாவி அலறும்,Alarum - கோஷிக்கின்றது இங்கு,Ingu - இந்நிலைமையில் அவனை விட்டு,Avanai vittu - அப்பெருமானைப் பிரிந்து என் சொல்லி உய்வன்,En solli uyvan - எங்ஙனம் பிழைப்பேன் |
| 3655 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள்.) 11 | அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல் அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன் அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11 | அவனை விட்டு அகன்று,Avanai vittu akandra - கண்ண பிரானை விட்டுப் பிரிந்து உயிர் ஆற்றகில்லா,Uyir aatrakillaa - உயிர் தரிக்கமாட்டாத அணி இழை ஆராய்ச்சியர்,Ani izhai aaraaychiyar - அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள் மாலை பூசல்,Maalai poosal - மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி,Avanai vittu avalvadharke irangi - அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு அணி குருகூர் சடகோபன் மாறன்,Ani Kurukoor Sadagopan Maaraṉ - ஆழ்வார் அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த,Avani undu umizhndhavan meel uraintha - பூமிணை உண்டுமிழ்ந்த அப்பெருமான் விஷயமாக அருளிச் செய்த ஆயிரத்ததுள் இவை பத்தும் கொண்டு,Aayirathathul ivai pathum kondu - ஆயிரத்தினுள் இப்பதிகங் கொண்டு தொண்டீர்,Thondir - தொண்டர்களே அவனியுள் அலற்றி நின்று,Avaniyul alattri ninru - பூமிக்குள்ளே உகந்து அநுஸந்தித்து |