| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3139 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.) 1 | மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம் ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1 | மாறு அறுசோதி,Maaru aruchothi - அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய செய்ய வாய்,Seiyya vaai - சிவந்த திருப்பவளத்தையுடைய என் மணி குன்றத்தை,En mani kunraththai - மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும், ஆக அது சீலனை,Aaga adhu seelanai - குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும் ஆதி மூர்த்தியை,Aadhi moorthiyai - முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை நாடி,Naadi - தேடி பாக அறவு எய்தி,Paaga aravu eidhi - உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து அறிவு இழந்து,Arivu izhanthu - அறிவும் இழக்கப்பெற்று ஏனை நானையம்,Ena nanaiyam - எத்தனை காலமிருப்போம்? தோழி,Thozi - தோழியே! ஏசு அறும்,Aesu arum - ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த ஊரவர்,Ooravar - ஊராருடைய கவ்வை,Kavvai - பழிமொழி என் செய்யும்,En seyyum? - யாது செய்யும்? |
| 3140 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.) 2 | என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2 | என் செய்ய தாமரை கண்ணன்,En seyya thaamarai kannan - சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன் என்னை,Ennai - என்னுடைய நிறை,Nirai - அடக்கத்தை கொண்டான்,kondaan - கொள்ளை கொண்டான்; (அதனாலே) முன்,Mun - முதன் முதலாக செய்ய மாமை இழந்து,Seyya maamai izhandhu - விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று மேனி மெலிவு எய்தி,Meni melivu eidhi - சரீரமும் மெலிந்து என் செய்ய வாயும்,En seyya vaayum - எனது சிவந்தவாயும் கரு கண்ணும்,Karu kannum - கறுத்தகண்ணும் பயப்பு ஊர்ந்து,Bayappu oornthu - பாலை நிறம் படரப் பெற்றன. தோழீ,Thozhi - தோழியே! இனி,Ini - இந்நிலைமையானபின்பு நம்மை,Nammai - நம் விஷயத்திலே ஊரவர் கவ்வை,Ooravar kavvai - ஊராருடைய பழிமொழி என் செய்யும்,En seyyum - என்ன பண்ணும்? |
| 3141 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறி கொடுத்த என்னை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள்.) 3 | ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான் பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன் தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3 | ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்,Oorntha sakadam uthaiththa paathaththan - (நலிவதற்காக) ஊர்ந்து வந்த சகடத்தைப் பொடிபடுத்தின திருவடிகளையுடையவனும் பேய்முலை,Peymulai - பூதனையின் முலையை சார்ந்து,Saarnthu - மனம் பொருந்தி சுவைத்த,Suvaiththa - பசையறவுண்ட செம் வாயன்,Sem vaayan - செவ்விய வாயையுடையவனுமான எம்பிரான் (அந்தச் செயல்களாலே) என்னை நிறைகொண்டான்,Ennai niraikondaan - என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியை அபஹரித்தான்; தீர்ந்த என் தோழீ,Theerndha en thozhi - எனக்கு நன்மை தேடுகையிலே) அற்றுத் தீர்ந்திருக்கின்ற என் தோழியே! போர்ந்தும பெயர்ந்தும்,Poornthum peyarnthum - எந்தவிதத்திலும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்,Avanoadu anri or sol ileen - அவ்வெம் பெருமான் விஷயமான பேச்சன்றி வேறொரு பேச்சு உடையேனல்லேன்; ஊரவர் கவ்வை என்செய்யும்,Ooravar kavvai enseyyum - ஊரார் அலர் தூற்றுதல் என்னை என்ன பண்ணும்? |
| 3142 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார்.) 4 | ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4 | தோழீ,Thozhi - தோழியே! ஊரவர்,Ooravar - ஊராருடைய கவ்வை,Kavvai - பழமொழிகளை எரு இட்டு,Eru ittu - எரவாக இட்டு அன்னை சொல் நீர் படுத்து,Annai sol neer padutthu - தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி ஈரம் நெல் வித்தி,Eeram nel vithi - ஆசையாகிற நெல்லை விதைத்து முளைத்த,Mulaittha - முளைப்பித்த நெஞ்சம் பெரு செயுள்,Nenjam peru seiyul - நெஞ்சாகிற பெரிய வயலிலே பேர் அமர் காதல்,Per amar kaadhal - பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை கடல் புரைய,Kadal puraiya - கடல்போலே அபரிச்சிந்நமாக விளைவித்த,Vilaivittha - பலிக்கும்படிபண்ணின கார் அமர் மேனி,Kaar amar meni - கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய அடியனே,Adiyane - கடியனோ? (கடியனல்லன்) |
| 3143 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள்.) 5 | கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே! துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5 | கடியன்,Kadiyan - தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன் நெடியமால்,Nediya maal - போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்; உலகம் கொண்ட அடியன்,Ulagam kondu adiyan - உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்; அறிவு அருமேனி மாயத்தான்,Arivu arumeni maayathaan - நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்; கொடியன்,Kodiyaan - அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்; ஆகிலும்,Aakilum - இங்ஙனே யானாலும் கொடிய என் நெஞ்சம்,Kodiya en nenjam - கொடிதான என்னுடைய மனமானது அவனே என்று கிடக்கும்,Avane endru kidakkum - அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது; எல்லே,Elle - என்னே! துடிகொள் இடை,Thudikol idai - உடுக்கை போன்ற இடையையும் மடம்,Madham - மடப்பத்தையுமுடைய தோழீ,Thozhi - தோழியே! அன்னை,Annai - என் தாய் என் செய்யும்,En seiyyum - என்ன செய்யக்கூடும்? |
| 3144 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள்.) 6 | அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்! என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6 | தோழிமீர்,Thozhimeer - தோழிமார்களே! முன்னை அமரர் முதல்வர்,Munnai amarar mudhalvar - நித்ய ஸூரிநாதனும் வண் துவராபதி மன்னன்,Van dhuvaraapathi mannan - அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும் மணிவண்ணன்,Manivannan - நீலமணிவண்ணனுமான வாசுதேவன்,Vaasudevan - கண்ணபிரானாகிற வலையுள்,Valaiyul - வலையினுள்ளே அகப்பட்டேன்,Agappattaen - சிக்கிக் கொண்டேன்; இனி,Ini - ஆன பின்பு என்னை,Ennai - என் திறத்திலே உமக்கு ஆசை இல்லை,Umakku aasai illai - நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை; அன்னை என் செய்யில்,Annai en seiyyil - தாய் எது செய்தால்தான் என்ன? என் ஊர் என் சொல்லில்,En oor en sollil - என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன? |
| 3145 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமான் பக்கலில் குண ஹாநி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம் அவனைக் காணப் பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள்.) 7 | வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக் கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7 | கலைகொள்,Kalaikol - சேலை யணிந்ததும் அகல்,Akal - அகன்றதுமான அல்குல்,Alkull - நிதம்பத்தையுடைய தோழீ,Thozhi - தோழியே, என்னை,Ennai - என்னை வலையுள்,Valaiyul - (தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே அகப்படுத்து,Agappaduthu - சிக்கிக்கொள்ளும்படி செய்து நல் நெஞ்சம்,Nal nenjam - (எனது) நல்ல நெஞ்சையும் கூவிக்கொண்டு,Koovikkondu - அடியறுத்து அழைத்துக்கொண்டு அலைகடல் பள்ளி அம்மானை,Alaikadal palli ammaanai - அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய். ஆழி பிரான் தன்னை,Aazhi praan thannai - திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை நம் கண்களால் கண்டு,Nam kangalal kandu - நமது கண்களாலே பார்த்து தையலார் முன்பே,Thaiyalar munbae - (பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில் தலையில்,Thalaiyil - தலையாலே வணங்கவும் ஆம் கொலோ,Vanangavum aam kolo - வணங்கவும் கூடுமோ? |
| 3146 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார் “அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக் கவிழ் தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.) 8 | பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ? நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8 | தோழீ,Thozhi - தோழியே! பேண் முலை உண்டு,Paen mulai undu - பூதனையின் முலையைப் புசித்து சாடல் பாய்ந்து,Saadal paayndhu - சகடத்தை முறித்துத் தள்ளி மருது இடைபோய்,Marudhu idaipoy - இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று முதல் சாய்த்து,Mudhal saaythu - (அற்றை) வேரோடே தள்ளி புள்வாய் பிளந்து,Pulvaay pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்து களிறு அட்ட,Kaliru atta - குவளையபீட யானையைக் கொன்று முடித்த தூ முறுவல் தொண்டை வாய்பிரானை,Thoo muruval thondai vaaypiraanai - பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை அன்னையர் நாண,Annaiyar naana - தாய்மார் தலைதொங்கும்படியாக உரம் உறுகின்றது,Uram urugindrathu - நாம் கிட்டுவது ஏ நான் கொலோ,E naan kolo - என்றைக்கோ? |
| 3147 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (என் பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளை கொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை ஸகல லோகமும் பழிக்கும்படி மடலூரக் கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.) 9 | நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9 | என் தோழி,En thozhi - எனது தோழியே!, என்னை,Ennai - என்பக்கலில் நின்றும் நாணும்,Naanum - நாணத்தையும் நிறையும்,Niraiyum - அடக்கத்தையும் கவர்ந்து,Kavarnthu - கொள்ளை கொண்டு நல் நெஞ்சம் கூய்க்கொண்டு,Nal nenjam kooykondru - (எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு சேண் உயர் நாளத்து இருக்கும்,Sen uyar naalathu irukkum - மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற தேவபிரான் தன்னை,Devapiraan thannai - நிதய் ஸூரிநாதனை உலகு தோறு,Ulaku thoaru - ஒவ்வொருவலகத்திலும் அவர் தூற்றி,Avar thootri - பழிதூற்றி ஆம் கோணைகள் செய்து,Aam konaigal seydhu - செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து கு திரி ஆய்,Ku thiri aay - அடங்காத பெண்ணாய் மடல் ஊர்தும்,Madal oordhum - மடலூரக் கடவோம்; ஆணை,Aanai - இது திண்ணம் |
| 3148 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிறபடி.) 10 | யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம் யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10 | யா மடம் இன்றி,Yaa madam indri - ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல் தெருவு தோறு,Theruvu thooru - வீதிகள் தோறும் புகுந்து அயல் தைய லார்,Ayal thaya laar - அயல் பெண்களும் நாடும்,Naadum - ஸகல லோகமும் நா மடங்கா பழி தூற்றி,Naa madangaa pazi thootri - நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி இரைக்க,Irakka - இரைச்சல் போடும்படி யாம்,Yaam - நாம் மடல் ஊர்ந்தும்,Madal oordhum - மடலூர்ந்தாகிலும் ஆழி அம் கை நம்பிரானுடைய,Aazhi am kai nambiraanudaiya - திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய தூ மடல்,Thoo madal - பரிசுத்தமான இதழ்களையுடைய தண் அம் துழாய் மலர்,Than am thuzhaay malar - குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை கொண்டு,Kondu - அவன் தரப்பெற்று சூடுவோம்,Sooduvom - தலையில் அணிவோம். |
| 3149 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்) 11 | இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11 | இரைக்கும்,Iraikum - கோக்ஷிக்கின்ற ஈறா கடல் கண்ணன்,Eeraa kadal kannan - கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன் கண்ணபிரான் தன்னை,Kannapiraan thannai - கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து விரை கொள்பொழில்,Virai kolpozhil - பரிமனம்மிக்க சோலைகளையுடைய குருகூர்,Gurukoor - திருநகரியில் அவதரித்த சடகோபன்,Sadagopan - ஆழியார் சொன்ன,Sonna - அருளிச் செய்த நிரைகொள்,Nirai kol - சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையாமைந்த ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - ஆயிரம் பாசுரங்களிலுள்ளே இயற்றும்,Iyarrum - இப்பதிகத்தை உரைக்க வல்லார்க்கு,Urakk valarkkum - ஓதவல்லவர்களுக்கு தம் ஊர் எல்லாம்,Tham oor ellaam - தம்தம் இருப்பிடமெல்லாம் வைகுந்தம் ஆகும்,Vaikundham aagum - பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும் |