Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மானேய் நோக்கு (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3205திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –முதல் பாட்டில் நிரதிசய போக்யமான சோலையையுடைய திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற நிருபாதிக ஸ்வாமி திருவடிகளைக் கிட்டுவது என்றோ என்று தோழிமாரைக குறித்துச் சொல்லுகிறாள்.) 1
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1
மான் ஏய் நோக்கு நல்லீர்,Maan ey nokku nalleer - மான் போன்ற நோக்கையுடைய பெண்களே!
வினையேன்,Vinaiyen - பாவியான நான்
வைகலும் மெலிய,Vaigalum meliya - எப்போதும் இளைக்கும்படியாக,
வான் ஆர்வண் கமுகும்,Vaan aarvan Kamookum - ஆகாசத்தை யளாவிய அழகிய அழகிய பாக்மரங்களும்
மது மல்லிகை,Mathu malligai - மதுவொழுகுகின்ற மல்லிகை மலர்களும்.
கமழும்,Kamazhum - வாஸிக்கப்பெற்ற
தேன் ஆர் சோலைகள் சூழ்,Thenar solaigal soozh - தேன் நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட
திரு வல்ல வாழ்,Thiru valla vaazh - திருவல்லவாழிலே
உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுகிற
கோனாரை அடி,Konaarai adi - ஸ்வாமியின் திருவடிகளை
அடியேன் கூடுவது என்று சொல்,Adiyen kooduvadhu endru sol - அடியேன் கூடப்பெறுவது என்றைக்கோ?
3206திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னுடைய உத்தியோகத்தை இசையாதே இருக்கிற தோழி மாரை அ நு நயித்து நான் திரு வல்ல வாழிலே புக்கு அவன் பாத ரேணுவைச் சூடுவது என்று என்கிறாள்) 2
என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2
தோழிமீர்காள்,Thozhimeerkaal - தோழிகளே!
நீர் எம்மை தலிந்து,Neer emmai thalindhu - நீங்கள் எம்மை வருத்தப்படுத்தி
என் செய்தீர்,En seydeer - என்ன காரியம் செய்தீர்கள்!
தென்றல்,Thendral - தென்றல் காற்றானது
பொன் திகழ் புள்ளை,Pon thigazh pullai - பொன்போல் விளங்குகிற தாதுகளையுடைய புன்னை மரங்களென்ன
மகிழ்,Magilz - மகிழமரங்களென்ன
புது மாதவி,Puthu maadhavi - புதிய குருக்கத்திகளென்ன
மீது அணவி,Meedhu anavi - ஆகிய இவற்றின் மேலே படிந்து
மணங்கமழும்,Manangamalzum - பரிமளத்தை வீசி உலாவிடமான
திருவல்லவாழ்நகரும்,Thiruvalaazhvaakarum - திருவல்லவாழ்ப்பதியிலே
நின்ற பிரான்,Nindra piran - நிலைபெற்றிருக்கிறஸ்வாமியினுடைய
அடி நீறு,Adi neeru - ஸ்ரீபாத ரேணுவை
அடியோம் கொண்டு சூடுவது,Adiyom kondhu sooduvadhu - அடியோம் ஸ்வீகரித்து அணிந்து கொள்வது
என்று கொல்,endru kol - என்றைக்கோ?
3207திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் வேத கோஷமும் வைதிக க்ரியா ஹோமமும் மாறாத திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிற நிரந்தர உபகாரத்தைப் பண்ணுமவன் திருவடிகளை நித்ய அனுபவம் பண்ணக் கூடுமோ என்கிறாள்.) 3
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3
மலர் சூடும் குழலீர்,Malar soodum kuzhaleer - பூக்களணிந்த கூந்தலையுடைய மாதர்களே!
துயராட்டியேன் மெலிய,Thuyaraattiyeen meliya - துக்கங்களை யனுபவிக்கின்ற நான் இளைக்கும்படியாக
பாடுநல்வேதம் ஒலி,Paadu nalvetham oli - பாடப்படுகின்ற ஸாமவேத கோஷமானது
பரவை திரைபோல் முழங்க,Paravai thiraipol muzhang - கடலின் அலைக்கிளர்ச்சி பொல் முழங்கா நிற்க.
மாடு உயர்ந்து,Maadu uyarnthu - பக்கங்களிலே ஓங்கி
ஓமம் புகை கமழும்,Oomam pugai kamazhum - ஹோமதுமங்கள் பரிமணிக்கப்பெற்ற
தண் திருவல்லவாழ்,Than thiruvallazh - குளிர்ந்த திருவல்லவாழிலே
நிடு உறைகின்ற பிரான்,Nidu uraigindra piran - நித்யவாஸம் பண்ணாநின்ற எம்பிரானுடைய
கழல்,Kazhal - திருவடிகளை
நிக்கலும்,Nigkalum - எப்போதும்
காண்டும் கொல்,Kaandum kol - காணப்பெறுவோமா?
3208திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் சோலைகளோடே கூடின மாடங்களை யுடைய திரு வல்ல வாழிலே நித்ய ஆஸ்ரித ஸம்ஸ்லிஷ்டனாய் வர்த்திக்கிற உபகாரகன் பக்கலிலே என்னுடைய ஸ்நேஹமாய் இருக்க நீங்கள் நலிந்து என்ன பிரயோஜனம் உண்டு என்கிறாள்.) 4
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4
தோழிமீர்காள்,Thozhimeerkal - தோழிகளே!
நீர் எம்மை நிச்சலும் நலிந்து என் செய்தீர்,Neer emmai nichchalum nalindhu en seydeer - நீங்கள் எம்மை எப்போதும் ஹிம்ஸித்து என்ன லாபமடைந்திகோள்!
பச்சிலை நின் கமுகும்,Pachilai nin kamugum - பசுத்த இலைகளையுடைய நீண்ட பாக்கு மரங்களும்
பலவும்,Palavum - பலாமரங்களும்
தேங்கும்,Thengum - தென்னை மரங்களும்
வாழைகளும்,Vaazhaigalum - வாழை மரங்களும்
மச்ச அணி மாடங்கள் மீது அணவும்,Mascha ani maadangal meedu anavum - மச்சுகளின் நிரையையுடைய மாடங்களின் மேலே தழைத்துப் பொருந்தும்படியான
தன் திருவல்ல வாழ்,Than thiruvalla vaazh - குளிர்ந்த திருவல்ல வாழிலே
நஞ்சு அரவு இன் அணைமேல்,Nanjhu aravu in anaimel - (ஆச்ரித விரோதிகளின் மேலே) நஞ்சை யுமிழ்கிற அரவாகிய இனிய படுக்கையின்மேலே யளித்திருக்கிற
எம் பிரானது,Em piranadhu - எம் பெருமானுடையதாக ஆய்விட்டது (எதுவென்னில்)
நல்நலம்,Nalnalam - (எனது) நற்சீவன்
3209திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் விலக்ஷணரான வைதிக அக்ரேஸருடைய அக்னி ஹோத்ர பூமமானது ஆகாசத்தை மறைக்கும் திரு வல்ல வாழில் நிரதிசய போக்ய பூதனானவனை நம் கண்கள் காண்பது என்றோ என்கிறாள்.) 5
நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5
நல் நலம் தோழியீர்காள்,Nal nalum thozhieerkal - சிறந்த நேசமுள்ள தோழிகளே!
நல்ல அந்தணர் வேள்ளி புகை,Nalla andhanar vellai pugai - வைதிக ப்ரஹ்மணர்கள் செய்யும் யாகங்களிலுண்டான புகை
மை நலம் கொண்டு,Mai nalam kondhu - ஸமயீனுடைய நல்ல நிறத்தைக்கொண்டு
உயர் விண் மறைக்கும்,Uyar vin maraikkum - உயர்ந்த ஆகாசத்தை மறைக்குமிடமான
தண் திருவல்லவாழ்,Than thiruvallavaazh - குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளியிருப்பவனும்
கன்னல் அம்கட்டி தன்னை,Kannal amkatti thannai - கோதற்ற கன்னற்கட்டி போன்றவனும்
கனியை,Kaniyai - பரிபக்குவமான பழம்போன்றவனும்
இன் அமுதம் தன்னை,In amudham thannai - இனிய அமுதமாயிருப்பவனும்
என் நலம் கோள்,En nalam kol - என்னுடைய ஸர்வல்லத்தையும் கொள்ளை கொண்டவனும்
சுடரை,Sudarai - (அத்தாலே) ஒளிபெற்று விளங்குபவனுமான எம்பெருமானை
கண்கள்காண்பது என்று சொல்,Kangal kaanpadhu endru sol - எனது கண்கள் காணப்பெறுவது எந்நாளோ?
3210திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -பாடுகிற வண்டும் புதுக் தென்றலுமான கடற்கரைச் சோலையையுடைய திரு வல்ல வாழிலே நிற்கிற ஆஸ்ரித அர்த்தமாக வர்த்தியான ஸ்ரீ வாமனனுடைய போக்யமான திருவடிகளைக் காண்பது என்றோ என்கிறாள்.) 6
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6
கனி காய் மடவீர்,Kani kaay madaveer - கனிபோன்ற வாயையுடைய தோழிகளே!
எங்கும்,Engum - எங்குப்பார்த்தாலும்
பாண் குரல் வண்டினோடு,Paan kural vandinodu - காளரூபமான மிடற்றோவரவையுடைய உண்டுகளும்
பசுதென்றலும் ஆகி,Pasuthendralum aagi - புதுத்தென்றதுமாய்
சேண் சினை ஓங்கு மரம்,Senn sinai oongu maram - உயர்ந்த பனைகளையுடைந்தாய்க்கொண்டு வளருகிற மாசுகளையுடைய
செழு கானல் திருவல்லவாழ்,Sezu kaanal thiruvallazh - அழகிய கடற்கரைச் சோலையையுடைத்தான திருவல்லவாழிலே நிற்கிற
மாண்குறள் கோலம் பிரான்,Maangkural kolam piran - சிறந்த ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனான எம்பிரானுடைய
தாமரை மணபாதங்கள்,Thaamarai manapadhangal - தாமரைமலர்போன்ற திருவடிகளை
வினையேன்,Vinaiyen - பாவியாகிய நான்
காண்பது,Kaanpadhu - ஸேவிக்கப்பெறுவது
எஞ்ஞான்று கொலோ,Yennaanru kolo - என்றைக்கோ
3211திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமான் திருவடிகளில் நித்தியமாய் பூவை யணிந்து தொழ வல்லோமே என்கிறாள்.) 7
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7
பாவை கல்லீல்,Paavai kalleel - பாவைபோலே அழகிய தோழிகளே!
ஓதம் நெடு நடத்துள்,Otham netu nadathul - கடல்போன்று பெரிய தடாகங்களுக்குள்ளே
உயர் தாமரை செங்கழுவீர்,Uyar thaamarai sengazhuveer - உயர்ந்த தாமரைப் பூக்களும் செங்குழுநீர்ப்பூக்களும்
மாதர்கள் வான் முகமும் கண்களும் ஏந்தும்,Maadhargal vaan mugamum kangalum aendum - ஸ்திரீகளின் ஒளிபொருந்திய முகத்தழகையும் கண்ணழகையும் தாக்கும்படியான
காதல்,Kaadhal - தலைவனும்
இ ஞாலம் உண்ட, E gnaalam unda - இவ்வுலகங்களை யெல்லாம் பிரளங்கொள்ளாதபடி காத்தவனான
நம் பிரான் தன்னை,Nam piran thanai - எம்பெருமானுடைய
பாதங்கள் மேல் அணி,Paadhangal mel ani - திருவடிகளின் மேலே சாத்தின
பூ,Poo - புஷ்பங்களையாவது
நாள் தோறும் தொழ கூடும் கொல்,Naal thorum thoza koodum kol - நாடோறும் தொழ நேருமோ?
3212திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -அழகிய விளை நிலங்களாலே சூழப்பட்ட திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிறவனுடைய சகல சம்ச்லேஷ ஸ்வ பாவமான திருவடிகளை நிரந்தர அனுபவம் பண்ணக் கூடுமோ என்கிறாள்.) 8
நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8
நல் நுதநீர்,Nal nuthaneer - அழகிய நெறியையுடைய தோழிகளே!
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
ஆடு உறு தீம் கரும்பும்,Aadu uru theem karumbum - ஆலையிலிட்டு ஆடுதற்குரிய இனிமையான கரும்புகளும்
வினை செந்நெலும் ஆகி,Vinai chennelum aagi - முதிர விளைந்த செந்நெறி பயிர்களுமாய்
மாடு உறு பூ தடம் சேர்,Maadu uru poo thadam ser - பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்களையுடைத்தாய்
வயல் சூழ்,Vayal soozh - கழனிகளாலே சூழப்பட்ட
தண் திருவல்லவாழ்,Tham thiruvallazh - குளிர்ந்த திருவல்ல வாழிலே
நீடு உறைகின்ற பிரான்,Neetu uraikindra piran - நித்யவாஸம் செய்தருளா நின்ற எம்பெருமானுடைய
நிலம் தாவிய நீள் கழல்,Nilam thaaviya neel kazhal - பூமி முழுவதையு மொருகால் தளந்துகொண்ட நீண்ட திருவடிகளை
நாள்தோறும் வீடு இன்றியே,Naal thorum veedu indriye - நாடோறும் விச்சேதமில்லாமல்
தொழ கூடும் கொல்,Thoza koodum kol - தொழ நேருமோ?
3213திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்முடைய கழலுகிற வளைகள் பூர்ணமாம் படி-பூரிக்க – அவனைக் கண்டு தொழலாம் படி அவன் அருள் கூட வற்றே என்கிறாள் .) 9
கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9
குளிர் சோலையுள்,Kulir solaiyul - குளிர்ந்த சோலைகளிலே
தேன் அருந்தி,Then arunthi - மதுவைப் பருகி
மழலை வரி வண்டுகள்,Mazhalai vari vandugal - மழலைத் தொனியையுடைய அழகிய வண்டுகள்
குழல் என்ன யாழ் என்ன,Kuzhal enna yaazh enna - வேஸ கானமோ வீணா கானமோ என்னும்படியாக
இசை பாலும்,Isai paalum - இசைபாடப்பெற்ற
திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிலே
சுழலின் மலி சக்கரம்,Suzhalin mali sakkarum - சுறுற்சி பொருந்திய திருவாழியையுடையனான
பெருமானது,Perumaanadhu - ஸர்வேச்வரனுடைய
தொல் அருளா,Tol arula - இயற்கையான திருவருளாலே
சுழல் வனை பூரிப்ப யாம் கண்டு கை தொழ கூடும் கொல்,Suzhal vanai poorippa yaam kandu kai thozh koodum kol - சுழல் வளைகள் பூரிக்கும்படியாக நாம் கண்டு தொழநேருமோ
3214திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானுடைய ஸ் வா பாவிகமான கிருபையால் -அவன் தன்னைக் காணப் பெற்று -ப்ரீதியாலே இனிதாய்க் கொண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ -என்கிறாள் ) 10
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10
தோழிமீர்களா,Thozhimeerkala - தோழிகளே
மண்ணும் விண்ணும்,Mannum vinnnum - உபயவிபூதியிலுள்ளாரும்
தொல் அருள்,Tol arul - தனது இயற்கைத் திருவருளை
தொழநின்றதிருநகரம்,Thozhannindha thirunagaram - கொண்டாடும்படி நிற்குமிடமாய்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும்,Nal arul aayiravar nalan endhum - மஹா தயாளுக்களான ஆயிரக்கணக்கான சிஷ்டர்கள் நன்மையோடு வர்த்திக்கு மிடமான
திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிஸேற்கிற
நல் அருள் நம் பெருமான் நாராயணன்,Nal arul nam perumaan narayanan - மஹாக்ருபாளுவாய் அஸ்மதீஸ்வாமியான நாராயணனுடைய
நாமங்கள்,Naamangal - திருநாமங்களை
தொல் அருள் நல் வினையால்,Tol arul nal vinaiyal - (அவனது) இற்றைக் திருவருளாகிற ஸுக்ருதலிரேஷத்தாலே
சொல் கூடும் கொல்,Sol koodum kol - நாம் சொல்லநேருமோ?
3215திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பத்தும் வல்லார் சம்சாரத்திலே இருந்து வைத்தே எல்லாரிலும் சிறந்தவர் என்கிறார்.) 11
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11
நாமங்கள் ஆயிரம் உடைய,Naamangal aayiram udaiya - ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான
நம் பெருமான்,Nam perumaan - எம்பெருமானுடைய
அடிமேல்,Adimel - திருவடிகளின்மேலே
சேமம் கொள்,Semam kol - திண்ணிய அத்யவஸாய முடையவரான
தென் குருகூர் சடகோபன்,Then kurugoor sadagopan - ஆழ்வார்
தெரிந்து உரைத்த,Therindhu uraitha - ஆராய்ந்து அருளிச் செய்த
நாமக்கள் ஆயிரத்துள்,Namakal aayirathul - அவனது திருநாமம் போன்றதான ஆயிரத்தினுள்ளே
திருவல்லவாழ் சேமம் கொள் தென் நகர் மேல் இவை பத்தும்,Thiruvallazh semam kol then nagar mel ivai pattum - திருவல்லுலாழாகிற அரணமைந்த அழகிய திருப்பதி விஷயமான இப்பத்தையும்
செப்புவார்,Seppuvaar - ஓதவல்லவர்கள்
பிறந்தே,Piranthe - இவ்விருள் தருமா ஞாலத்தில் பிறந்து வைத்தே
சிறந்தார்,Sirandaar - சிறந்தவராவர்