| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3491 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கண்டவளவிலே விடாயெல்லாம் தீரும்படியான தொரு தாமரைத் தடாகம் போலே நான் காணும்படி வந்தருள வேணுமென்று வேண்டுகிறார்.) 1 | மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே–8-5-1 | மாயக் கூத்தா,Maayak koothaa - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே! வாமனா,Vaamana - வாமன லேஷங்கொண்டவனே! வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - மஹாபாபியான என்கைக்கு எட்டாத க்ருஷ்ணனே! கண் கைகால் தூய செய்ய மலர்களா,Kan kaikaal thoooya seiya malargalaa - திருக்கண்களும் திருக்கைகளும் திருவடிகளும் சிவந்தலர்ந்த பூக்களாகவும் சோதி செம் வாய் முகிழதா,Sothi sem vaai mugizhathaa - அழகிய சிவந்த திருவதரம் முகுளமாகவும் சாமம் சாயல் திருமேனி தண் பாசு அடையா,Saamam saayal thirumeeni than paasam adaiyaa - சாமளமான சாயலையுடைய திருமேனி குளிர்ந்து பசுமை தங்கிய இலையாகவும் பெற்று நீள் வாசம் தாமரை தடம் போல் வருவானே,Neel vaasam thamarai thadam pool varuvaane - பெரியதாய் நறுமணம் மிக்கதான தாமரைத் தடாகம் போல் வருமவனே! ஒருநாள் காணவாராய்,Orunaal kaanavaaraai - ஒருநாளாகிலும் நான் காணும்படி வருவாயாக. |
| 3492 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (என் விடாய் கெடும்படி அழகிய மயிர் முடியுடனே வந்து தோற்றியருள வேணு மென்கிறார்.) 2 | காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம் நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2 | கரு நாயிறு உதிக்கும்,Karu naayiru udhikkum - கறுதத்தொரு ஸூர்யன் உதித்துக்கிளம்பியிருப்பதாய் மா கரு மாணிக்கம்,Maa karu maanikkam - மஹத்தான நீல ரத்னமாய் நாள் நல் மலை போல்,Naal nal malai pool - அப்போதுண்டான அழகிய மலை போலே சுடர் சோதி,Sudar sothi - பரம்புகிற சுடரையுடைத்தான தேஜஸ்ஸையுடைய முடி சேர்,Mudi seer - மயிர் முடியோடே சேர்ந்த சென்னி அம்மானே,Chinni ammaane - திருமுடியையுடைய பெருமானே! காணவாராய் என்று என்று,Kaanavaaraai endru endru - நான் காணும்படிவாராயென்று பலகலுஞ் சொல்லி கண்ணும் வாயும் துவர்ந்து,Kannum vaayum thuvandu - பார்க்கிற கண்ணும் கூப்பிடுகிற வாயும் வசையறவுலர்ந்து நாணி,Naani - வெட்கமுமடைந்து நல் நாடு,Nal naadu - இந்த நல்ல நாட்டிலே அடியேன் அலமந்தால்,Adiyaen alamandhaal - அடியேன் இப்படி தளர்ந்தால் ஒரு நாள் இரங்கி நீ காண வாராய் அந்தோ,Oru naal irangi nee kaana vaarai andho - ஒரு நாளாகிலும் நீ க்ருபை பண்ணி நான் காண வருகிறிலையே, ஐயோ. |
| 3493 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஆபர்ணசோபையும் அவயவசோபையுமுடையவொரு காளமேகம் நடந்து வருகிறதோ வென்னலாம்படி வந்து தோன்றவேணுமென்கிற ஆவலைக் காட்டுகிறாரிதில்.) 3 | முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே என்று என்றே ஏங்கி அழுதக்கால் படிசேர் மகரக் குழைகளும் பவளவாயும் நால் தோளும் துடி சேரிடையும் அமைந்ததோர் தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3 | முடிசேர் சென்னி அம்மா,Mudi seer chenni amma - திருவபிஷேகத்தோடு செர்ந்த திருமுடியை யுடைய ஸ்வாமியே! நின் மொய் பூ தாமம் தண் துழாய் கடி சேர் கண்ணி பெருமானே,Nin moy poo thamaan than thuzhaai kadi seer kanni perumaanai - உனக்கு அஸாதாரணமாய்ச் செறிந்து அழகிய ஒளியை யுடைய குளிர்ந்த திருத்துழாயாகிற ஸர்வாதிகனே! என்று என்று,Endru endru - என்றிப்படி பலகாலுஞ் சொல்லி ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhakaal - பொருமிப் பொருமியழுதால் படி சேர் மகரம் குழைகளும்,Padi seer makaram kuzhaigalum - வடிவுக்குச் சேர்ந்த மகரகுண்டலங்களும் பவளம் வாயும்,Pavalam vaayum - பவளம் போன்ற திருவதரமும் நால் தோளும்,Naal tholum - நான்கு திருத்தோள்களும் துடி சேர் இடையும் அமைந்தது,Thudi ser idaiyum amaindhathu - துடிபோலே யிருக்கிற இடையுமாயமைந்த தூ நீர் ஓர் முகில் போல் தோன்றாயே,Thoo neer or mugil pool thondraaye - தூய நீரையுடைய ஒரு காளமேகம் போலே வந்து தோன்றமாட்டேனென்கிறாயே. |
| 3494 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இப்பாட்டும் மேற்பாட்டும் சந்தோஷமாகச் சொல்வனபோல் தோன்றும், கீழ் மேற்பாட்டுக்களில் நிர்வேதம் காணாநிற்க, இடையில் சந்தோஷம் வந்து புக ப்ரஸக்தியில்லை, இவ்விரண்டு பாசுரங்களுங்கூட நிர்வேதமாகவே சொல்லப்படுவன. உன்னுடைய வடிவழகுவந்து என்னெஞ்சிலே நிறைந்து நலிகிறவிதம் என்னால் சொல்லப்போகிறதில்லையென்று நொந்து சொல்லுகிறபடியே யிது.) 4 | தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும் தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா மாநீர் வெள்ளி மலை தன்மேல் வண் கார் நீல முகில் போலே தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே–8-5-4 | மா நீர் வெள்ளி மலை தன் மேல்,Maa neer vellli malai than meel - ஆழ்ந்த நீரினுள்ளே கிடப்பதொரு வெள்ளி மலையின் மேலே வண் கார் நீலம் முகில் போல,Van kaar neelam mugil pool - அழகிய கார்காலத்துக் காளமேகம் போலே தூ நீர் கடலுள்,Thoo neer kadalul - வெளுத்த நீரையுடைய பாற்கடலில் துயில்வானே,Thuyilvaane - திருக்கண் வளர்ந்தருளுகிறவனே! எந்தாய்,Endhaai - என் ஸ்வாமியே! தூ நீர் முகில் போல் தோன்றும்,Thoo neer mugil pool thondraum - தெளிந்த நீர் நிறைந்த மேகம் போலே விளங்குகின்ற நின் சுடர் கொள் வடிவும்,Nin sudar kol vadivum - உன்னுடைய ஒளி பொருந்திய வடிவும் கனி வாயும்,Kani vaayum - கனிந்த திருவதரமும் தேன் நீர் கமலம் கண்களும்,Then neer kamalam kankalum - மது ஜலத்தையுடைய கமலம் போன்ற திருக்கண்களும் வந்து என் சிந்தை நிறைந்த ஆ,Vandhu en sindhai niraintha aa - இங்கே வந்து என்நெஞ்சு நிறைந்திருக்கிறபடியை சொல்ல மாட்டேன்,Sollaa maatten - இன்னதென்று சொல்லகில்லேன். |
| 3495 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -உன்னுடைய அழகு என்னுடைய ஹிருதயத்திலே ஸ்ம்ருதி விஷயமாக நின்று நலியா நின்றது -இது மறக்க விரகு சொல்ல வேணும் என்கிறார்-மறக்கும் பரிகாரம் என்னுடைய அசந்நிதானம் அன்றோ -மறவீர் -என்ன -நீ மயர்வறுக்கை யாலே -துயரறு சுடர் அடி என் மனசிலே குடி புகுந்து நலியா நின்றது -மாமேகம் என்று நீயே சொல்ல வேணும்.) 5 | சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம் எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே–8-5-5 | ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுது உண்ட,Aazhi soozh mallai nyaalam muzhudhu unda - கடல் சூழ்ந்த பெரிய ஜகத்தையெல்லாம் பிரளயங்கொள்ளாமல் திருவயிற்றிலடக்கினவனாயும் மா நீர் கொண்டல் வண்ணனே,Maa neer kondal vannaney - நிரம்பின நீரையுடைய காளமேகம் போன்ற வடிவையுடையனாயுமிருக்கின்ற பெருமானே! அடியேன் சொல்ல மாட்டேன்,Adiyaen sollaa maatten - (என்னுள்ளத்திலுள்ள வெளிச்சத்தைப் பற்றி) அடியேன் ஒன்றும் சொல்ல தெரியாதவனாயிருக்கின்றேன். (ஆனாலும் சிறிது சொல்லுகின்றேன்) உன் துளங்கு சோதி தரு பாதம்,Un thulangku sothi tharu paatham - உன்னுடைய விளங்கும் சோதியுடைய திருவடிகளானவை எல்லை இல் சீர் இளஞாயிறு இரண்டு போல்,Ellai il seer ilanjaiyiru iraandu pool - அளவிறந்த அழகையுடைய இரண்டு பாலாத்தியர்களைப் போல என் உள்ளே வா,En ullae vaa - என்னுளத்துள்ளே யிராநின்றன. அல்லன என்னும், இருள் சேர்தற்கு, உபாயம் என்னே,Allana ennumn, irul serththarku, upaayam ennae - துக்கமென்று சொல்லப்பட்டுகற மறப்பென்கிற இருள் வந்து சேருவதற்கு எது வியோ அதை சொல்லுவேணும். |
| 3496 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! உன்னுடைய வடிவழகை நினைத்து காணவேணும் காணவேணுமென்று கூப்பிடுகிற நான் காணும்படி ஏதேனுமோரிடத்தில் நின்றும் சடக்கெனவோடிவந்து தோன்றக்கூடாதாவென்று மிகுந்த ஆர்த்திதோற்ற வருளிச் செய்கிறார்.) 6 | கொண்டல்வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என் அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் விண் தன்மேல் தான் மண் மேல்தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான் தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6 | கொண்டல் வண்ணாகுடக் கூத்தா,Kondal vannaakudak koothaa - காளமேக வண்ணனே! குடக்கூத்தாடினவனெ! வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - அக்குடக் கூத்தைக் கண்டனபவிக்கப்பெறாத பாவியேனுக்குக் கண்ணானவனே! கண்ணா,Kannaa - ஸ்ரீ க்ருஷ்ணனே! என் அண்டவாணா,En andavaanaa - என்னையடிமைப் படுத்திக் கொள்ளுகைக்காகப் பரமபத நிலயனானவனே! என்று,Endru - என்றிங்ஙனே உன்படிகளைச் சொல்லி என்னை ஆள,Ennai aala - என்னை அடிமை கொள்ளுமாறு கூப்பிட்டு அழைத்தக் கால்,Kooppittu azhaiththak kaal - கூவியழைத்தால் விண் தன் மேல் தான்,Vin than meel thaan - பரமபதத்தில் நின்றோ மண் மேல் தான்,Mann meel thaan - பூமியில் நின்றோ விரி நீர் கடல் தான்,Viri neer kadal thaan - பரம்பின நீரையுடைய கடலில் நின்றோ மற்று தான்,Mattru thaan - அந்தர்யாமியாயிருக்குமிடத்தில் நின்றோ, தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே,Thondanaen un kazhal kaana oru naal vandhu thondraaye - அடியேன் உன் திருவடிகளைக் காணும்படியாக ஒரு நாள் கூட வந்து தோன்ற மாட்டேனென்கிறாயே. |
| 3497 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கீழ்ப்பாட்டில் * தொண்டனேன் உன் கழல் காண வொரு நாள் வந்து தோன்றாய் * என்றார், இங்கேற வந்து தோற்றுவது முடியாதென்னில், என்னை ஆங்கே யழைத்து அடிமை கொள்ளவாவது வேண்டுமென்கிறாரிப்பாட்டில்.) 7 | வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7 | செம் தண் கமலம்,Sem than kamalam - சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற கண் கை கால் சிவந்த வாய்,Kan kai kaal sivandha vaay - கண்களையும் கைகளையும் கால்களையும் சிவந்த வாயையுமுயை ஓர் கரு நாயிறு,OrKaru naayiru - ஒரு கரிய ஸூர்யன் அந்தம் இல்லா கதர் பரப்பி,Andham illaa kathar parappi - முடிவில்லாத கிரணங்களைப் பரப்பி அலர்ந்தது ஒக்கம் அம்மானே,Alarnthathu okkam ammaanai - பரம்பினாற்போன்ற வடிவழகையுடைய ஸ்வாமியே! வந்து தோன்றாய் அன்றேல்,Vandhu thondraaye andrel - (கீழே விரும்பினபடி) வந்து தோன்றா விட்டாலும் வையம் தாய உன் மலர் அடி கீழ்,Vaiyam thaaya un malar adi keezh - பூமியையளந்து கொண்ட உனது பாதாரவிந்தங்களின் கீழே யான் முந்திவந்து நிற்ப,Yaan mundhivandu nirpa - நான் முற்பட்டு வந்து நிற்கும்படியாக முகப்பே கூவி பணி கொள்ளாய்,Mukappe koovi pani kollai - திரு முன்பே யழைத்து அடிமை கொண்டருள வேணும். |
| 3498 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! போலிகண்டு வருந்துமவனாய் நானிருக்க, ஆச்ரிதபக்ஷபாதியான நீ வந்து தோன்றுகின்றிலையே, இது உன் ஸ்வபாவத்திற்குச் சேருமோ? என்கிறார்.) 8 | ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாணாளும் தொக்கமே கப்பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் தக்க வைவர் தமக்காயன்று ஈரைம்பதின்மர் தாள் சாய புக்க நல் தேர்ப் தனிப் பாகா வாராயிதுவோ பொருத்தமே–8-5-8 | தொக்க மேகம் பல் குழாங்கள் காணும் தோறும்,Thokka meagam pal kuzhaangal kaanum thorum - திரண்ட மேகங்களின் பல திரள்களைக் காணகிற போதெல்லாம் அம்மான் உருவம் ஒக்கும் என்று,Ammaan uruvam okkum endru - எம்பெருமானுடைய வடிவழகுக்குப் பொலியாயிருக்குமென்று உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - நெஞ்சுருகி நாள் நாளும் நான் தொலைவன்,Naal naalum naan tholaiyan - நாடோறும் நான் கிலேசப்படுவேன் அன்று,Andru - பாரதப்போர் நடந்த வக்காலத்தில் தக்க ஐவர் தமக்கு ஆய்,Thakka aivar thamakku aay - உன்னுறவுக்குத தகுதியான பஞ்ச பாண்டவர்களுக்காக ஈர் ஐம்பதின்மர்,Eer aimpadinthmar - துரியோதனாதிகள் நூற்று வரும் தாள் சாய,Thaal saaya - காலற்றுப் போம்படியாக புக்க,Pukka - சேனையிடையே புகுந்த நல் தேர் தனி பாகா,Nal ther thani paakaa - சிறந்த அத்விதீயனான ஸாரதியானவனே! வாராய்,Vaarai - (அவ்வழகோடே) வருகின்றிலை, பொருத்தம் இதுவோ,Poruththam idhuvo - அடியார் பக்கலில் பொருத்த மிருந்தபடி இதுவோ? |
| 3499 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இருந்ததே குடியாக எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்து அருளுகைக்காக ஸ்ரீ மதுரையிலே வந்து திரு அவதாரம் பண்ணி அருளின ஆச்சர்ய குண கணான கிருஷ்ணன் -தன்னைக் காண ஆசைப்பட்டு நோவு படுகிற எனக்கு என் செய்து அருள நினைக்கிறானோ என்கிறார்.) 9 | இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள் அதுவே கொடியா வுயர்த்தானே என்று என்று ஏங்கி யழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே–8-5-9 | மின் ஆழி படை யாய்,Min aazhi padai yaai - ஒளி பொருந்திய திருவாழியைப் படையாக வுடையவனே! ஏறும் இரு சிறைபுள் அதுவே கொடி ஆ உயர்த்தானே,Eerum iru sirai pul adhudhe kodi aa uyarththaaney - வாஹனமானவனும் பெரிய சிறகையுடையவனுமான பெரிய திருவடியையே கொடியாக எடுத்தவனே! இதுவோ பொருத்தம் என்று என்று,Idhuvo poruththam endru endru - இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhak kaalam - பொருமியழுதால், இ மா ஞாலம் பொறை தீர்ப்பான்,E maa nyaalam porai theerppaan - இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன்,Madhu vaar solai utthaa madurai pirandha maayan - தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான் எதுவே ஆக கருதும் கொல்,Ethuve aaga karudhum kol - என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ? |
| 3500 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (எம்பெருமானே! நீ அவதாரங்கள் பண்ணி ஸௌலப்யத்தைக் காட்டி நிற்கச் செய்தோம் அக்காலத்திற்குப் பிறபட்டேன், பொருள்தோறும் வியாபித்து நின்றாயாகிலும் அந்தர்யாமியைக் காண அசக்தனாயிராநின்றேன, பின்னை எங்கே காணக் கடவேனென்கிறார்.) 10 | பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ யின்னே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே–8-5-10 | பிறந்த மாயா,Pirandha maayaa - அவதாரங்களைச் செய்தருளும் மாயனே! பாரதம் பொருதமாயா,Bharatham poruthamaayaa - பாரதப்போர் புரிகையில் பல ஆச்சரியங்களைக் காட்டினவனே! நீ இன்னே,Nee innai - நீ இப்படி எளியனாயிருக்கச் செய்தே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே,Sirandha kaal thee neer vaan man piravum aaya perumaaney - சிறந்த பஞ்ச பூதங்களையும் அந்த பூதங்களில் நின்று முண்டான பதார்த்தங்களையும் சரீரமாகவுடைய ஸர்வாதிகனாய் கறந்த பாலுள் நெய்யே போல்,Karandha paalul neyyai pool - கறந்த பாலினுள்ளே நெய் போலே கண்டுகொள் இறந்து,Kandukol irandhu - கண்டுகொள்ளுதல் இல்லாதபடி. இவற்றுள் எங்கும் நின்ற பெரு மாயா,Ivatrul engum ninra peru maayaa - மேலே சொன்ன வஸ்துக்க ளெல்லாவற்றிலும் உறைகின்ற ஆச்சர்ய பூதனே! உன்னை எங்கே காண்கேன்,Unnai engge kaankaein - உன்னை எவ்விடத்திலே காணக்கடவேன்? |
| 3501 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இத்திருவாய்மொழிவல்லார் தாம்பட்ட துக்கம்படாதே இவ்வுலகிலே இப்பிறப்பிலே எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக இன்புறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன் செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே–8-5-11 | ஈன் துழாய் அம்மான் தன்னை,Een thuzhaai ammaan thannai - பரமபோக்யமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேச்வரனை யான் எங்கே காண்கேன் என்று என்று,Yaan engge kaankaein endru endru - நான் எங்கே காணக் கடவேனென்று பலகாலுஞ் சொல்லி அங்கே தாழ்ந்த சொற்களால்,Angge thaalndha sorngalaal - அவ்விஷயத்திலேயே ப்ரவணமான சொற்களினாலே அம் தண் குருகூர் சடகோபன்,Am than kurukoor sadagopan - ஆழ்வார் செம் கேழ் சொன்ன ஆயிரத்துள்,Sem kaezh sonna aayiraththul - மிகவும் செவ்விதாகச சொன்ன ஆயிரத்திலுள்ளே இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இவை பத்தையும் ஓத வல்லவர்கள் இங்கே காண,Ingae kaana - இந்நிலத்தே எல்லாரும் காணும்படி இப்பிறப்பே, EpPirappe - இந்த ஜன்மத்திலேயே எல்லியும் காலை மகிழ்வர்,Elliyum kaalai magizhvar - இரவும் பகலும் இடைவீடின்றி மகிழ்ந்திருக்கப் பெறுவர்கள். |