Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மாயா வாமன (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3414திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (விசித்திரமான காரியங்களையும் காரணங்களையும் எல்லாம் விபூதியாக யுடையனாய் அனுசந்தித்து -இவை என்ன படிகள் என்று விஸ்மிதராய் எம்பெருமானைக் கிடக்கிறார்.) 1
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1
மாயா,Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வாமனனே,Vaamananey - வாமநாவதாரஞ் செய்தவனே!
மதுசூதா,Madhusootha - மதுகைடபர்களைத் தொலைத்தவனே!
நீ அருளாய்,Nee arulaai - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்;
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய்,Thee aai neer aai nilan aai visumbu aai; kaal aai - பஞ்ச பூதங்களுமாய்
தாய் ஆய் தந்தை ஆய்,Thaai aai thandhai aai - மாதா பிதாக்களாய்
மக்கள் ஆய்,Makkal aai - வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய்
மற்றும் ஆய்,Matrum aai - அல்லாதவையுமாய்
முற்றும் ஆய்,Mutrum aai - சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய்
நீ ஆய்,Nee aai - அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய்
நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிற்கிற இந்தச் தன்மைகள்
என்ன நியாயங்கள்,Enna niyayangal - என்னவகைகளோ!
3415திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் ‘நீ நீயாய் நின்றவாறு’ என்று அஸாதாரணமான ஆகாரத்தை அநுஸந்தித்தாரே; அதனை வாய்விட்டுப் பேசி யநுபவிக்கிறார் ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்) 2
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2
அம் கள் மலர் தண்துழாய் முடி,Am kal malar thandhulai mudi - அழகிய மதுவைக் கொண்ட பூக்களை யுடைத்தான் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மயிர்முடியையுடைய
அச்சுதனே,Achuthaney - எம்பெருமானே!
அருளாய் நீ,Arulaai nee - அருளிச்செய்யவேணும்;
திங்களும் ஞாயிறும ஆய்,Thingalum nyaayirum aai - சந்திரனும் ஸூர்யனுமாயும்
செழு பல் சுடர் ஆய்,Sezhu pal sudar aai - லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும்
இருள் ஆய்,Irul aai - இருளாயும்
பொங்கு பொழி மழை ஆய்,Pongu pozhi mazhai aai - பொங்கிப் பொழியும் மழையாயும்
புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும்
பின்னும்,Pinnum - இன்னமும்
வெம் கண் வெம் கூற்றமும் ஆய் இவை,Vem kan vem kutramum aai ivai - க்ரூரமான கண்களையும் க்ரூரஸ்வபாவத்தையு முடைய ம்ருத்யுவாயும் நிற்கிற இந்த ப்ரகாரங்கள்
என்ன விசித்திரம்,Enna visithiram - என்ன வேடிக்கை களோ!
3416திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் வெங்கண் வெங்கூற்றமுமாய் என்றாரே; மண்ணின் பாரம் நீக்குதற்கு வடமதுரையிற் பிறந்த பிறவியிலேயே, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்று அதனை நடத்தின விசித்திரம் நினைவுக்குவர. சித்திரத் தேர்வலவா திருச்சக்கரத்தாய்! என்று விளிக்கிறார்.) 3
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3
சித்திரம்,Siththiram - விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே!
தேர் வலவா திரு சக்கரத் தாய்,Ther valavaa thiru sakkarath thaai - திருவாழிப்படையை யடையவனே!
அருளாய்,Arulaai - நீயருளிச் செய்ய வேணும்;
எத்தனை ஓர் உகமும் அவை ஆய்,Eththanai or ugamum avai aai - க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய்
அவற்றுள் இயலும்,Avatrul iyalum - அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய்
ஒத்த விய ஒண்பல் உலப்பு இல்லன பொருள் ஆய்,Oththa viya onpal ulappu illana porul aai - ஒருபடியாலே ஒத்தும் மற்றொருபடியாலே வேறுபட்டுமிருக்கிற அழகிய பல எண்ணிறந்த பதார்த்தங்களுமாய்
வித்தகத்தால் நீ நிற்றி,Viththagathaal nee nittri - ஆச்சரியப்படத்தக்க தன்மையோடே நீ நிற்கின்றாய்;
இவை என்ன விடமங்கள்,Ivai enna vidamanghal - இவை யென்ன சேராச்சேர்த்திகளோ!
3417திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (முதன் முதலிலே தம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி இவ்வளவு அதிகாரத்திலே கொண்டு நிறுத்தினவை திருக்கண்களேயன்றோ; “பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப்ண்டரீகம் நம்மே லொருங்கே பிறழைவைத்தார் இவ்வகாலம்” (திருவிருத்தம்) என்று தாமே யருளிச்செய்து வைத்தாரே. அப்படிப்பட்ட திருக்கண்ணழகிலே யீடுபட்டுப் பேசுகிறார்.) 4
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே,Kal avizh thaamarai kan kannaney - மதுவொழுகுகின்ற கண்களையுடைய கண்ணபிரானே!
எனக்கு ஒன்று அருளாய்,Enakku ondru arulaai - அடியேனுக்கு இவ்விஷயமொன்று அருளிச்செய்ய வேணும்;
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் விய ஆய்,Ulladhum illadhum aai ulappu illana aai viya aai - நித்யமாகையாலே உள்ளதுமாய் வேறு அவஸ்தையையடைகையாலே இல்லாததுமான எண்ணிறந்தவையுமான வேறு வேறு வகைப்பட்ட சேதநாசேதநப் பொருள்களுக்கு நிர்வாஹகனாய்
வெள்ளம் தட கடலுள்,Vellam tada kadalul - விசாலமான திருப்பாற்கடல் வெள்ளத்திலே
விடம் நாகணை மேல் மருவி,Vidam naaganai mel maruvi - (விரோதிகள்) அணுக வொண்ணுமைக்காக, விஷத்தை உமிழ்கிற திருவனந்தாழ்வானாகிறபடுக்கையிலே பொருந்தி
உள்ளம்,Ullam - திருவுள்ளத்திலே
பல் யோரு செய்தி,Pal yoru seidhi - பலவகைப்பட்ட ரக்ஷிணோபாயங்களைச் சிந்தியாநின்றாய்;
இவை என்ன உபாயங்களே,Ivai enna upayanghale - இவையென்ன விரகுகள்!
3418திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது. என்னை ஆதியிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி வைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.) 5
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5
வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே,Vaasam malar thandhulai mudi maayavaney - நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!,
நீ,Nee - இப்படிப்பட்ட நீ,
என்னை பாசங்கள் நீக்கி,Ennai paasangal neekki - எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து
உனக்கே அற கொண்டிட்டு,Unakke arak kondittu - உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து
காயமும் சீவனும்,Kaayamum seevanum - பந்தமான சரீரமும் பத்த ஜீவனும்
கழிவு பிறப்பு ஆய்,Kazhivu pirappu aai - இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க,
பின்னும்,Pinnum - பின்னையும்
நீ மாயங்கள் செய்து வைத்தி,Nee maayanghal seydhu vaiththi - அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்;
இவை என்ன மயக்குக்கள்,Ivai enna mayakkukal - இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன!
அருளாய்,Arulaai - அருளிச்செய்ய வேணும்.
3419திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ராமக சேஷ்டிதங்களை யுடைய வாமனனான நீ விஸ்ம்ருதியாதி விசித்ரனாய்க் கொண்டு பண்ணுகிற கிலேசங்கள் என்னாய் இருக்கின்றன -என்கிறார்.) 6
மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6
மயக்கா,Mayakkaa - எப்படிப்பட்டவாகளையும் மதி கெடும்படிபண்ணுமவனே!
வாமனனே,Vaamananey - (அந்த சக்தியை) வாமநாவதாரத்தில் காட்டினவனே!
மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,Madhi aam vannam ondru arulaai - எனக்குக் கலக்கந் தீர்ந்து அறிவுண்டாம்படி அருளிச் செய்ய வேணும்;
துயர்ப்பு தேற்றமும் ஆய்,Thuyarppu thetramum aai - மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய்
அழல் குளிர் ஆய்,Azhal kulir aai - தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய்
வியவு வியப்பு ஆய்,Viyavu viyappu aai - விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய்
வென்றிகள் ஆய்,Vendrigal aai - (உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய்
வினை பயன் ஆய்,Vinai payan aai - புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய்
பின்னும்,Pinnum - அதுக்குமேலே
துயக்கு நீ ஆய,Thuyakku nee aai - இவற்றிலே சேதநர்கலங்குகிற கலக்கமும் நீயிட்டவழக்காய்
நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிறகிற இந்த ப்ரகாரங்கள்
என்ன துயரங்கள்,Enna thuyaranghal - என்ன கஷ்டங்களாயிருக்கின்றன!
3420திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இங்கு துயரங்கள் செய்யுங்கண்ணா! என்று எம்பெருமானை விளிக்கின்றார்) 7
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7
துயரங்கள் செய்யும் கண்ணா!,Thuyaranghal seyyum kanna! - துக்கங்களையுண்டாக்குகிற கண்ணனே!
சுடர் நீள் முடியாய்,Sudar neel mudiyai - ஒளிமிக்கு ஓங்கின திருவபிஷேகத்தை யுடையவனே!
துயரம் செய்,Thuyaram sei - துக்கத்தை விளைக்கிற
மானங்கள் ஆய்,Maanangal aai - பலவகைப்பட்ட துரபிமானங்களாய்
மதன் ஆகி,Madan aagi - செருக்குமாய்
உகவைகள் ஆய்,Ugavaigal aai - ப்ரீதிகளுமாய்
துயரம் செய் காமங்கள் ஆய்,Thuyaram sei kaamangal aai - துக்கங்களை விளைக்கிற காமங்களாய்
துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,Thulai aai nilai aai nadai aai - பரிமாணங்களாய் ஸ்தாவர ஜங்கமங்களாய்
துயரங்கள் செய்து வைத்தி,Thuyaranghal seydhu vaiththi - (இப்படி சேதநர்களுக்கு) துக்கங்களைப் பண்ணிவைக்கிறாய்;
இவை என்ன சுண்டாயங்கள்,Ivai enna sundhaayangal - இவை என்ன விளையாட்டுக்களோ!
அருளாய்,Arulaai - அருளிச்செய்யவேணும்.
3421திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பாட்டின் முதலடியில் பாடபேதம் காண்கிறது; “என்ன சுண்டாயங்களால் எங்ஙனே நின்றிட்டாயென் ” என்பது சில ஆசாரிகளின் பாடம்; “என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளுங் ” என்பது சில ஆசாரியர்களின் பாடம். அடுத்த பாசுரத்தின் முதலடியிலும் இது மாறிவரும்.)(என்னையாளுங்கண்ணா! என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய்-என்னையடிமை கொள்ளுகிற கண்ணபிரானே! என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய் என்று வியக்கிறார்.) 8
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8
ன்னை ஆளும் கண்ணா,,Nnai aalum kanna, - என்னை அடிமை கொள்ளுகிற கண்ணனே!
என்ன சுண்டாயங்களால்,Enna sundhaayangalal - என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய்!
நின்றிட்டாய் இன்னது ஓர் தன்மையை என்று,Ninriṭṭaai innadhu or thanmaiyai endru - இன்னபடிப்ப்ட்டஸ்வ பாவத்தையுடையையாயிரா நின்றாயென்றுஸ
உன்னை யாவர்க்கும் தேற்ற அரியை,Unnai yaavarkkum thetra ariyai - ஓருவர்க்கும் நிர்ணயித்துக்காட்ட முடியாதவனாயிரா நின்றாய்;
முன்னைய மூவுலகும் அவை ஆய்,Munnaiya moovulagamum avai aai - நித்தியமான மூவுலகங்களுக்கும் நிர்வாஹகனாய்
அவற்றை படைத்து,Avatrai padaiththu - அவற்றை ஸ்ருஷ்டித்து
பின்னும்,Pinnum - அதுக்குமேலே
உள் ஆய் புறத்தாய்,Ul aai puraththaa - உளளிலும் வெளியிலும் வியாபித்திருக்கிறவனே!
இவை என்ன இயற்கைகள்,Ivai enna iyarkaihal - இவை என்ன ஸ்பாவங்களாயிருக்கின்றன!,
3422திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஞான இந்திரியங்களும் கர்ம இந்திரியங்களும் சப்தாதி விஷயங்களும் அவனுக்கு விபூதியாய் இருக்கும் இருப்பை அனுசந்திக்கிறார்.) 9
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9
என் கண்ணா,En kannaa - எனது கண்ண பிரானே!
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய்,Enna iyarkaihalal enggane ninriṭṭaai - என்ன் ஸ்வபாவங்களோடே என்ன ப்ரகாரத்திலே நின்றாய்;
துன்னு கரம் சரணம் முதல் ஆக,Thunnu karam saranam mudhal aaka - நெருங்கிய கரசரணாதிகளான
எல்லா உறுப்பும்,Ellaa uruppum - எல்லாக்கரணங்களும்
உன்னு,Unnu - விரும்பத்தக்க
சுவை ஒளி ஊறு நாற்றம் முற்றும் நீயே,Suvai oli ooru naatram muttrum neeye - ரஸம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் இவையாகிற ஸகல விஷயங்களும் நீயே;
உன்னை உணர உறில்,Unnai unara uril - இப்படிப்பட்ட வுன்னை நிரூபிக்க நினைக்கில்
நுணுக்கங்கள் உலப்பு இல்லை,Nunukkangal ulappu illai - உன்னுடைய நுட்பத்திற்கு முடிவில்லை.
3423திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -வேதைக சமைதி கம்யனாய்-காரணமாய் -அதி ஸூஷ்மமாய் இருந்துள்ள சேதன அசேதனங்களை விபூதியாக உடையவனுடைய இருப்பை அனுசந்திக்கிறார்.) 10
இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10
இதனில் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம்,Idanil piridhu nunukkangal illai ennum vannam - இதிற்காட்டில் வேறு நுட்பமில்லை யென்னும்படி
தொல்லை நல்நூலில் சொன்ன,Tollai nalnulil sonna - அநாதியான வேதசாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட
உருவும் அருவும் நீயே,Uruvum aruvum neeye - அசித்தும் சித்தும் நீயே;
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே,Alli thulai alangkal ani maarba en achuthaney - பூந்தாரையுடைத்தான திருத்துழாய் மாலை யணிந்த திருமார்பையுடைய என் அச்சுதனே!
வல்லது ஒர் வண்ணம் சொன்னால்,Valladhu or vannam sonnaal - கூடுமானவரையில் (யார் எது) சொன்னாலும்
உனக்கு அதுவே வண்ணம் ஆம்,Unakku adhuve vannam aam - சொன்னவவ்வளவே உனக்கு வடிவாம்
3424திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் ஒருவராலும் ஒரு வகையும் அறிய ஒண்ணாத சர்வேஸ்வரனை உள்ளபடியே அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியை யதா சக்தி சொல்லுமவர்கள் என்றைக்கும் க்ருதக்ருத்யர் என்கிறார். ஆம் வண்ண ஒண் தமிழ் ஆவது –நல்ல சந்தஸ் ஸை யுடைத்தான அழகிய தமிழ் என்றுமாம்.) 11
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று,Aam vannam innadhu ondru endru - இன்னபடிப் பட்டிருப்பதொரு ஸ்வபாவ மென்று
அறிவது அரிய அரியை,Arivathu ariya ariyai - (ஒருவராலும்) அறிய முடியாத ஸர்வேச்வரனை
குருகூர் சட கோபன்,Kurukoor Sadagopan - நம்மாழ்வார்
ஆம் வண்ணத்தால் அறிந்து உரைத்த,Aam vannathaal arinthu uraittha - உள்ளபடியறிந்து அருளிச் செய்த
ஆம் வண்ணம் ஒண்தமிழ்கள் இவை ஆயிரத்துள்,Aam vannam ondhthamizhal ivai aayirathul - தகுதியான சந்தஸ்ஸையுடைய அழகிய தமிழினாலான இவ்வாயிரத்துள்
பத்தும்,Pathum - இப்பதிகத்தை
ஆம் வண்ணத்தால் உரைப்பார்,Aam vannathaal uraippaar - இயன்றவளவு சொல்ல வல்லவர்கள்;.
என்றைக்கும்,Endraikkum - ஆத்மாவுள்ளவரைக்கும்
தமக்கு அமைந்தார்,Thamakku amaindhaar - க்ருதக்ருத்யர்கள்.