Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மின்னிடை மடவார்கள் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3238திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (இப் பாசுரத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பீ!“ என்றிருக்கையாலே பந்தும் கழலுமாகிற சில லீலோபகரணங்கள் எம்பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி அபேக்ஷிப்பதாகவும் தெரிகிறது.) 1
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1
மன்னுடை இலங்கை,Manudai Ilankai - அரசனையுடைத்தா யிருந்த லங்காபுரியினுடைய
அரண்,Aran - கோட்டைகளையெல்லாம்
காய்ந்த,Kaintha - சீறியழித்த
மாயவனே,Maayavane - ஆச்சரியசேஷ்டிதங்களை யுடையவனே
நம்பி,Nambi - ஸகலருணபரிபூரணனே!
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது கிருபையை அநுபவிப்பவர்களான
மின் இடை மடவார்கள் முன்பு,Min Idai Madavaarkal Munbu - மின்னற்கொடிபோன்ற இடையை யுடையவர்களான மாதர்களின் முன்னிலையில்
நான் அது அஞ்சுவன்,Naan Adhu Anjuvan - நான அதைப்பற்றி அஞ்சாநின்றேன், (அவர்கள் உன்னை உபேக்ஷிக்க நேருமென்பதுபற்றி அஞ்சுகின்றே னென்கை)
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்,Unnudaiya Soondaayam Naan Arivan - உன்னுடைய க்ருத்ரிம்மெல்லாம் நானறிவேன்
இனி அது கொண்டு செய்வது என்,Ini Adhu Kondu Seyvadhu En - உனக்கும் எனக்கும் ஸம் பந்தமற்றவின்பு உன்னுடையக்ருத்ரிமத்தால் உனக்கு ஸாத்யமானது என்ன இருக்கிறது?
என்னுடைய பந்தும் கழலும் தந்து,Ennudaiya Bandhum Kazhalum Thandhu - எனது பந்தையும் அம்மானையையும் தீருப்பிக் கொடுத்துவிட்டு
போகு,Pogu - உனக்கு விருப்பமான விடத்தேபோய்ச்சேர்
3239திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இவள் போகச் சொன்ன இடத்திலும் போகாதே இவளைப் பார்த்து மந்த ஸ்மிதம் பண்ணின அதிலே சிதில சிந்தையாய் எங்களை நாழியாதே உன் அபி மேதைகள் இருந்த பரிசாரத்திலே போய் அவர்கள் வருகைக்கு ஈடாக இருந்து குழலை ஊது என்கிறாள்.) 2
போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2
போகு நம்பீ!,Pogu Nambi - பிரானே! அப்பால்போ
உன்,Un - உன்னுடைய
தாமரை புரை கண் இணையும்,Thamarai Purai Kan Inaiyum - தாமரைபோன்ற கண்களிரண்டும்
செம் வாய் முறுவலும்,Sem Vai Muruvalum - சிவந்த அதர்தில் நின்றும் தோன்றுகிற சிரிப்பும்
ஆகுலங்கள் செய்ய,Aagulangal Seyya - வீணாக எங்களை ஆகுலப்போவதற்கே
அழிதற்கே,Azhitharkae - அதனால் சிதிலப்பட்டுப் போவதற்கே
நோற்றோமே,Noatrome - இட்டுப் பிறந்தவர்களன்றோ நாங்கள்
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது அருளை அநுபவிக்கப் பிறந்த
தோகை மா மாயிலார்கள்,Thogai Maa Mayilargal - தோகைவிரித்த நல்ல மயில்போன்ற கூந்தலையுடைய மாதர்கள்
ஓசை செவி வைத்து எழ,Osai Sevi Vaithu Ezha - (வேணுகானத்தின்) ஓசையைக்கேட்டு எழுந்து வரும்படியாக
ஆகள் போக விட்டு,Aagal Poga Vittu - பசுக்களை மேய்க்கப் போகவிட்டு
போய் இருந்து,Poy Irundhu - அங்கேறப் போயிருந்து
குழல் ஊது,Kuzhal Oothu - புல்லாங்குழலை ஊதிக் கொண்டுகிட.
3240திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின். – “உன்னுடைய திருக் கண்களினுடையவும் திருப் பவளத்தினுடையவும் அழகு இருந்தபடி என்!, கண்டும் கேட்டுமறியாத்தொருபடியான இவ்வழகு திருப்பாற்கடலிலே அம்ருத மதந ஸமயத்திலே அவதிர்ணையான பெரிய பிராட்டியோடு அன்று கலந்த கல்வியாலும் பிறந்ததில்லை, இப்படி பெரிய பிராட்டியிற்காட்டிலும் உனக்கு அபிமதைகளாய் உன்னை புஜிக்கப் பிறந்தவர்கள் ஆரோ வென்கிறாள்“ என்று.) 3
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்;
வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3
நம்பி,Nambi - பிரானே!
போய் இருந்து,Poy Irundhu - எங்களைவிட்டு அப்பால் போயிருந்து
நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை,Nin Pulluvam Ariyadhaarkku Urai - உனது வஞ்சகங்களை அறியாதவர்களான சிலர் பக்கலிலே உன் மெய்போலும் பொய்களைச் சொல்லிக்கொண்டிரு
நின் செய்ய வாய் இரு கனியும்,Nin Seyya Vai Iru Kaniyum - உனது சிவந்த அதரமாகிற சிறந்த கனிபும்
கண்களும்,Kangalum - திருக்கண்களும்
இந்நாள் விபரீதம்,Innal Vibareedham - இப்போது முன்போல் அல்லகிடாய் (இதற்குமேல் முகத்தை மாற வைத்துக்கொண்டு சொல்லுகிறார்கள்)
மா இரு கடலை கடைந்த பெருமானாலே,Maa Iru Kadalai Kadaintha Perumanaale - அகாதமாய் விசாலமான கடலைக் கடைந்தவனான இப்பெரியோன் பக்கலிலே
இத்திரு அருள் பெறுவார்,Ithiru Arul Peruvaar - இப்படிப்பட்ட திருவருளைப் பெறுமவர்களான
வேய் இரு தட தோளினார்,Vey Iru Tada Tholinaar - வேய்போன்று பருத்து நெடிய தோள்படைத்தவர்கள்
யவர் கொல்,Yavar Kol - யாவரோ
3241திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அரை க்ஷணம் தாழ்த்தோம் என்னா-அசங்கத பாஷணங்களை சொல்லுகிறது என் -நான் பரதந்த்ரன் அல்லனோ -மாதா பிதாக்கள் போய் பசுக்களை மேய் என்று நியமித்தால் உங்கள் பக்கல் வரப்போமோ -இது ஒழிய வேறு ஒரு விளம்ப ஹேது இல்லை என்ன -அக்கடிதங்களை கடிப்பிக்கை நீ வல்லது ஓன்று அன்றோ -என்கிறாள்.) 4
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4
ஏழ் உலகும் உண்டு,Ezh Ulagum Undu - ஸமஸ்த லோகங்களையும் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து
ஆலின் நீள் இலை,Aalin Neel ilai - ஆலமரத்தின் இளந்தளிரிலே
அன்று நீ கிடந்தாய்,Andru Nee Kidandhaay - முன்னொருகாலத்தில் கிடந்தவனல்லையோ நீ
உன் மாயங்கள்,Un Maayangal - உனது மாயச்செயல்களை
மேலே வானவரும் அறியார்,Mele Vaanavarum Ariyaar - மேற்பட்டவர்களான நித்யஸூரிகளும் அறியார்கள்,
இனி எம் பரமே,Ini Em Parame - அப்படியிருக்க எம்மால் அறியப்போமோ,
வேலின் நேர் தட கண்ணினார்,Velin Ner thada Kanninaar - வேல்போன்று பெரிய கண்களை யுடையவர்களான மாதர்கள்
விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான
சூழலை,Soozhalai - விலாஸ ஸ்தானங்களை
சூழவே நின்று,Soozhave Nindru - பற்றிக்கொண்டிருந்து
காலி மேய்க்க வல்லாய்,Kaali Meikka Vallai - பசுக்களைமேய்க்கவல்ல பெருமானே!
எம்மை நீ சுழறேல்,Emmay Nee Suzharel - இந்தப் பொய்கள் எங்களுக்குச் சொல்லவேண்டா.
3242திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உன் பொய்க்குப் பெரு நிலை நிற்கும் பரிகரத்தை யுடைய நீ அஹ்ருதயமாக எங்கள் பேச்சைக் கொண்டாடுவது இனிய பேச்சையுடைய எங்கள் பூவையையும் கிளியையும் கொண்டாடுவது ஆகாதே கொள்-என்கிறாள்.) 5
கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5
நம்பீ கழறேல்,Nambi Kazharel - பிரானே! மேலிட்டு வார்த்தைசொல்வதை எங்களிடம் வைத்துக்கொள் வேண்டா!
உன் கைதவம்,Un Kaidhavam - உனது கபடங்களை
மண்ணும் விண்ணும் நன்கு அறியும்,Mannum Vinnum Nangu Ariyum - உபய விபூதியும் நன்றாக அறியும்
நிழறு,Nizharu - இஷ்டப்படி நடத்தப்பெறுகிற
திண் சக்கரம் தொல்படையாய்,Thin Chakkaram Tolpadiyai - திண்ணிய சக்கரமாகிற அநாதியான ஆயுதத்தை யுடையவனே!
உனக்கு நான் ஒன்று உணர்த்துவன்,Unakku Naan Ondru Unarthuvan - உனக்கு நான் ஒருவிஷயம் அறிவிக்கக் கேளாய்,
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது க்ருபைக்குப்பாத்திர பூதைகளான
மழறு தேன்மொழியார்கள்,Mazharu Thenmozhiyaarkal - மழலைத் தேன்மொழியார்களான மாதர்கள்
மனம் வாடி நிற்க,Manam Vaadi Nirka - நெஞ்சுகொதித்து நிற்கும்படியாக
எம் குழறு பூவை யொடும்,Em Kuzhru Poovai Yodum - அநக்ஷர ரஸமாகப்போசுவின்ற எமது பூவைப் பறவையோடும்
கிளியோடும்,Kiliyodum - கிளியோடும்
குழகேல்,Kuzhagel - லீலாரஸம் கொண்டாட வேண்டா நீ.
3243திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -மேனாணித்துக் குழமணனை எடுத்த அவனைக் குறித்து உன்னுடைய ஈச்வரத்வம் எங்களோடு காட்டாதே அதுக்குத் தகுவாரோடே காட்டு -என்கிறாள் .) 6
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6
நம்பீ,Nambi - பிரானே!
குழகி,Kuzhagi - லீலாரஸம் கொண்டாடி
எங்கள் குழமணன் கொண்டு,Engal Kuzhaman kondu - எங்களுடைய மரப்பாச்சியை யெடுத்துக் கொண்டு
கோயின்மை செய்து,Koyinmai Seydhu - கேட்பாரற்ற செயல்களைச் செய்வதனால்
கன்மம் ஒன்று இல்லை,Kanmam Ondru Illai - உனக்கு ஒரு காரியமும ஸித்தித்ததாகாது
யாம் பழகி இருப்போம்,Yaam Pazhagi Irupom - நாங்கள் வெகுநாளாகவே உம்மோடு பழகி உமது யோக்யதைகளைத் தெரிந்துகொண்டிருக்கின்றோம்.
இத் திரு அருள்கள் பரமே,Idhu Thiru Arulgal Paramae - உம்முடைய ஆசைப்பெருக்கான காரியங்களுக்கு. நாங்கள் இலக்காகப் போருமோ (இவை எங்களால் தாங்க முடியா)
இ உலகு மூன்றுக்கும் அழிகியார்,I Ulaku Moondrukkum Azhigiyar - இம்மூவுலகத்தினுள்ளும் அழகிற்சிறந்தவர்களாயும்
தேவிமை தருவார்,Thevimaai Tharuvaar - உமக்குத் தேவிகளாயிருக்கத் தகுந்தவர்களாயுமுள்ள மாதர்கள்
பலர் உளர்,Palar Ular - பலருண்டு,
கழகம் ஏறேல்,Kazhagam Erel - எங்கள் திரளிலே பலாத்காரமாகப் புகவேண்டா
கன்மம்,Kanmam - இப்படிப்பட்ட செய்கையனது
உனக்கும் இளைது,Unakkuum Ilaiuthu - உன்மனத்தால் பார்த்தாலும் பால்ய லௌல்யமாகத் தோற்றக்கூடியதே.
3244திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 7
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7
கடல் ஞாலம் உண்டிட்ட,Kadal Gnalam Undittu - கடல் சூழ்ந்த வுலகங்களையெல்லாம் ஒருகால் திருவயிற்றினுட்கொண்ட
நின்மலா,Ninmala - விமலனே!
நெடியாய்,Nediyaai - பெரியோனே!
எங்கள் கையில் பாவை பறிப்பது,Engal Kaiyil Paavai Parippadhu - எங்கள் கையிலுள்ள லீ லோபகரணங்களை லியப்பிடித்திழுப்பதானது
கன்மம் அன்று,Kanmam Andru - செய்யத்தகுந்த காரியமன்று
உனக்கேலும் பிழை பிழையே,Unakkellum Pizhai Pizhaiye - இது உனக்கு மிகப்பெரிய அவத்யமேயாகும் (இதுவன்றியும்)
எம்மை,Emmay - எங்களை நோக்கி
வன்ம்மே சொல்லி,Vanmme Solli - மருமமான வார்த்தைகளைச் சொல்லி
விளையாடுதி,Vilaiyaaduthi - விளையாடுகின்றாய்
என் ஐம்மார்,En Aimmaar - எங்களுடைய ஸஹோதரர்கள்
அது கேட்டில்,Adhu Keettil - இப்படியெல்லாம் நீ செய்தும் சொல்லியும் போருகிறயென்பதைக் கேட்கப்பெற்றார்களாகில்
தன்மம் பாவம் என்னார்,Tanmam Paavam Ennar - நன்மை தீமை யென்று கூடப் பாரார்கள்
ஒரு நான்று தடி பிணக்கே,Oru Naandru Tadi Pinakke - ஒரு கால் உன்னைத் தடியிட்டுத் தகர்க்கும்படியாகவும் நேர்ந்துவிடும்.
3245திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 8
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8
யாவையும் யாவரும்,Yaavaiyum Yaavarum - அசேதனப்பொருள்களும் சேதனைப்பொருள்களுமான ஸகலத்தையும்
பிணக்கி,Pinakki - ஸம்ஹாரதசையிலே ராம்ரூப லிபாகமில்லாதபடி ஒன்றாகப் பிசிறிவைத்து (பிறகு ஸ்ருஷ்டிகாலத்திலே)
பிழையாமல்,Pizhaiyaamal - ஒருவருடைய கரும்மும் மாறிப் போகாதபடி
பேதித்தும்,Pedithum - தேவயானி மநுஷ்ய யோனி திர்யக்யோனி முதலியபோதங்களைப் பண்ணினவிடத்தும்
பேதி யாதது,Pethi Yaadhathu - அவற்றின்கணுள்ள தோஷங்களால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியான
ஓர் கணக்கு இல்கீர்த்தி வெள்ளம்,Oru Kanakku Ilkeerthi Vellam - அத்விதீய நிர்வதிக கீர்த்தி ப்ரவாஹத்தையும்
கதிர்ஞானம்,Kathirgnanam - ஸங்கல்பருபஜ்ஞானத்தையும்
மூர்த்தியையும்,Moorthiyaiyum - வடிவாகைவுடையவனே
எம் தோழிமார்,Emm Thozhimaar - எமது தோழிமார்கள்
எம்மை இணக்கி,Emmai Inakki - எங்களை இசைவித்து
விளையாட போதுமின் என்ன,Vilaiyada Podhumin Enna - விளையாட வாருங்கோள் என்றழைக்க
போந்தோமை,Poandomai - (நீ இங்கிருப்பது அறியாமே வந்த எங்களை)
நீ உணக்கி வளைத்தால்,Nee Unakki Valaithaal - நீ நெருக்கித் தகைந்தால்
உகவாதவர் என் சொல்லார்,Ugavaadhavar En Chollaar - வேண்டாதார் என்னதான் சொல்லமாட்டார்கள்.
3246திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) ̐(ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இவன் தகைந்தவாறே கடக்கப் போய்ச் சிற்றில் இழைக்க -நம்மை அநு வர்த்தித்துப் போகாதே அநாதரித்தார்கள் என்கிற சீற்றத்தால் சிற்றிலை அழிக்க நாங்கள் உன் முக சோபையைப் பார்த்திருந்து சிற்றில் இழையாதபடி இத்தை அழித்தாயே என்று இன்னாதாகிறாள்.) 9
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9
உகவையால்,Uvavaiyal - அந்தரங்கப்ரீதியாலே
நெஞ்சம் உள் உருகி,Nenjam ul urugi - நெஞ்சு உள்ளேயுருகி
உன் தாமரை தடம் கண்விழிகளின் வலை அகப்படுப்பான்,Un tamarai tadam kanvizhikalin valai agapaduppan - உன்னுடைய தடந்தாமரைக் கண்ணோக்கமாகிற வலினுள்ளே நாங்கள் அகப்படும்படி பண்ணுவதற்காக
உன் திருஅடி யால்அழித்தாய்,Un tiruadi yalazhithai - உன் திருவடியாலுதைத்து நொறுக்கித் தள்ளினாய்
எங்கள் சிற்றிலும்,Engal siRrilum - நாங்கள் இழைக்கின்ற சிற்றிலையும்
யாம் அடு சிறு சோலும் கண்டு,Yam adu siRu solum kandu - நாங்கள் சமைக்கிற சிறு சோற்றையுங்கண்டு
நின் முகம் ஒளி திகழ,Nin mugam oli thigazha - உன்னுடைய திருமுகமண்டலம் நன்கு பிரகாசிக்கும்படியாக
முறுவல் செய்து நின்றிலே,MuRuval seythu nindrile - சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்த வேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் திருவடியாலும் அழித்தாய்.
தகவு செய்திலே,Thagavu seythile - இரக்கமான காரியம் செய்தாயல்லை
3247திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ப்ரணயரோஷமென்பது நெடும்போது பெருகிச் செல்லமாட்டாது, அப்படி நெடுகிச் செல்லுவது ரஸிகர்களுடைய படியுமன்று. ஊடலானது கூடலிலே மூட்டியல்லது நிற்காதாகையினால் இனிக் கூடல் தலைக்காட்டத் தொடங்கிவிட்டது. பிரானே! நீதான் வெற்றிக்கொண்டாய், நாங்கள் தோற்றோம் என்று முடிக்கிறார்கள்.) 10
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10
நின்று இலக்கு முடியினாய்,Nindru ilakku mudiyinai - நிலைநின்று விளங்குகிற திருவபிஷேகத்தை யுடையவனே!
இருபத்தோல் கால்,Irupatthol kal - இருபத்தொரு தலைமுறை
அரசுகைளை கட்ட,Arasukalai kattu - அரசர்களை வேர்ப்பறியாகப் பறித்த
வென்றி நீள் மழுவா,Venri neel mazhuva - ஜயசீலனான பெரிய மழுப்படையை யுடையவனே!
முன் வியல் ஞாலம் படைத்தாய்,Mun viyal gnalam padaithai - முன்பு விஸ்தீர்ணமான ஜகத்தைப் படைத்தவனே!
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய,Indru iv aayar kulaththai veedu uyyath thondriya - இப்போது இவ்விடைகுலத்தை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக அவதரித்த
கரு மாணிக்கம் சுடர்,Karu maanikam sudar - கருமாணிக்கம் போன்ற திருநிறத்தை யுடையவனே!
ஆய்ச்சியாம்,Aaychiyam - இடைக்சிகளான நாங்கள்
என்றும்,Endrum - எந்நாளும்
நின் தன்னால் நலிவே படுவோம்,Nin thannal nalive paduvom - உன்னால் ஹிம்ஸைப்படுகிறவர்களே யன்றி ஸுகப்படுகிறவர்களல்லோம்.
3248திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - அதில் ஸ்நேஹினியான யசோதைபி பிராட்டி வெண்ணெய் களவு கண்டாய் என்று பொடித்த போது போலே ஆழ்வார் தாம் ப்ராணாய கோபத்தாலே எம்பெருமானோடு கலப்பேன் அல்லேன் என்று அகல அது பொறுக்க மாட்டாமே தளர்ந்த தளர்த்தியை அநு சந்தித்து இனியராய் அவ்வெம்பெருமானை எத்தின இத்திருவாய் மொழியை இப்பான வ்ருத்தி இன்றிக்கே சொன்னார்க்கும் எம்பெருமான் ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தே -பிறங்கி-செறிந்து -தாம் பட்ட துக்கம் பட வேண்டா என்கிறார் .) 11
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11
அன்று,Andru - பண்டொருகாலத்தில்
வெண்ணெய் வார்த்தையுள்,Vennai varthaiyul - வெண்ணெய்களவு ஸம்பந்தமான ப்ரஸ்தாவம் வந்தவளவிலே
ஆய்ச்சி ஆகிய அன்னையால்,Aaychchi aagiya annaiyal - இடைக்குலத்துகித்த யசோதை யாகிய தாயாலே
அழு கூத்தன்,Azhukuuthan - அழுகையாகிற கூத்தைச் செய்தவனான
அப்பன் தன்னை,Appan thannai - ஸ்வாமியைக் குறித்து
குரு கூர் சடகோபன்,Kurukoor sadagopan - ஆழ்வார்
ஏத்திய,Eththiya - ஸ்தோத்ர்ரூபமாகச் செய்த
தமிழ் மாலை ஆயரத்துள்,Tamil maalai aayaraththul - தமிழ்த் தொடையான ஆயிரம் பாசுரங்களில்
இவையும் ஓர் பத்து,Ivaiyum or paththu - இப்பத்துப் பாசுரங்களை
இசையொடும்,Isaiyodum - இசையோடு கூட
நா தன்னால் நவில உரைப்பார்க்கு,Naa thannal naviLa uraipparkku - நாவினாலே செறியச்சொல்லுமவர்களுக்கு
நல்குரவு இல்லை,Nalguravu illai - பகவதநுபவம் கிடையாமையாகிற தாரித்ரியம் இல்லையாம்.