| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2897 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார்.) 1 | முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1 | திருமாலே,Thirumale - ச்ரியாபதியான எம்பெருமானே! உனது முகம் சோதி,Unadhu mugam sodhi - உன்னுடைய திருமுகமண்டலத்தின் ஜ்யோதிஸ்ஸானது (உயர்முகமாகவளர்ந்து) முடிசோதி ஆய்,Mudisodhi aay - திருவபிஷேக ஜ்யோதிஸ்ஸாய் மலர்ந்ததுவோ,Malarnthadhuvo - விகஸிதமாயிற்றோ? அடிசோதி,Adisodhi - திருவடிகளின் காந்தியானது நீ நின்ற தாமரை ஆய் அலர்ந்ததுவோ,Nee nindra thaamaraai aay alarnthadhuvo - நீ யெழுந்தருளியிருக்கும் ஆஸன பத்மமாய்ப் பரவியதோ? நின் பைம்பொன் கடி சோதி,Ninn paimpon kadi sodhi - உனது விசாலமாயும் ஸ்ப்ருஹணீயமாயு மிருக்கின்ற திருவரையின் காந்தியானது படி சோதி ஆடையொடும் பல் கலன் ஆய்,Padi sodhi aadaiyodum pal kalan aay - இயற்கையான சோதியையுடைய பீதாம்பரமென்ன, பலவகைப்பட்ட ஆபரணங்களென்ன ஆகிய இவையாய் கலந்ததுவோ,Kalanthadhuvo - வியாபதித்ததோ? கட்டுரை,Katturai - தெரியவருளிச் செய்ய வேணும். |
| 2898 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (அழகருடைய வடிவழக்குக்கு ஒப்பாகக் போருவன இல்லாமையாலே அவ்வழகைப் பற்றி உலகத்தார் சொல்லும் துதிமொழிகள் நிறக்கேடாகவே தலைகட்டுமென்கிறார்.) 2 | கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2 | பரம் சோதி,Param sodhi - பரஞ்சோதி யுருவனே!, கட்டுரைக்கில்,Katturaikil - சொல்லப் புகுந்தால் நின்கண் பாதம் கை,Ninkan paatham kai - உனது திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு தாமரை,Thaamarai - தாமரைப்பூ ஒவ்வா,Ovvaa - உவமையாகப் போராது; சுட்டு உரைத்த நன் பொன்,Suttu uraitha nan pon - நெருப்பிலிட்டச் சுட்டு உரை கல்லில் உரைக்கப்படும் மாற்றுயர்ந்த பொன்னானது உன் திருமேனி ஒளி ஒவ்வாது,Un thirumeni oli ovvaadhu - உனது திவ்யமான விக்ரஹ காந்திக்கு ஒப்பாகமாட்டாது; இ உலகு,I ulagu - இவ்வுலகிலுள்ளோர் ஒட்டு உரைத்து,Ottu uraithu - த்ருஷ்டாந்தம் சொல்லி உன்னை புகழ்வு எல்லாம்,Unnai pugazhvu ellaam - உன்னைத் துதிப்பதெல்லாம் பெரும்பாலும்,Perumbaalum - மிகவும் பட்டுரை ஆய்,Patturai aay - நிரர்த்தக சப்தமாகி புற்கென்றே காட்டும்,Purkenrae kaattum - அவத்யாவஹமாகவே தலைக்கட்டும் |
| 2899 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதே யன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார்.) 3 | பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3 | பரம் சோதி,Param sodhi - பரஞ்சோதியான பெருமானே! நீ பரம் ஆய்,Nee param aay - நீயே ஸர்வோத் க்ருஷ்டனாயிருக்க நின் இகழ்ந்து பின்,Ninn igazhndhu pin - உன்னைத்தவிர மற்று ஓர் பரம் சோதி இன்மையின்,Martru or param sodhi inmai-yin - வேறொரு பரஞ்சுடர் இல்லாமையாலே படி ஓவி நிகழ்கின்ற,Padi ovi nizhalkinra - உபமான மில்லாதபடி யிருக்கின்ற பரம் சோதி நின்னுள்ளே,Param sodhi ninnullee - ‘பரம் ஜ்யோதிஸ்’ என்று உபநிஷத்துக்களில் ஒதப்பட்டுள்ள உன்னுடைய ஸங்கல்பத்துக்குள்ளே படர் உலகம் படைத்த,Patar ulagam padaita - விசாலமான உலகங்களைப் படைத்த எம் பரம் சோதி,Em param sodhi - எம்பரஞ்சுடருடம்பனே! கோவிந்தா,Govindha - நீர்மைக்கு எல்லை யில்லாதவனே! பண்பு,Panbu - உனது ஸ்வரூப ஸ்வபாவங்களை உரைக்க மாட்டேன்,Uraikka mattean - வருணிக்க சக்தனல்லேன். |
| 2900 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (“கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்றார் கீழ்ப்பாட்டில் அது, புத்திபூர்வமாகச் சொல்லமாட்டாமையைத் தெரிவித்தபடி. அழகருடைய அழகுதானே பேசுவிக்கப் பேசுகிறாரிதில்.) 4 | மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின் மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4 | மலர்தலை,Malar thalai - திருநாபிக்கமலாத்தைத் தலையிடமாகக் கொண்டு தோன்றிய இம் மா ஞாலம்,Im maa nyaalam - இப்பெரிய வுலகமானது நின் மாடு ஆய,Ninn maadu aay - உன்னுடைய ஸ்வரூபத்தைப் பற்றியதான மலர் புரையும் திரு உருவம்,Malar puraiyum thiru uruvam - பூப்போலழகிய திவ்யமான விக்ரஹத்திலே மனம் வைக்க மாட்டாதே ஆகிலும்,Manam vaikka maattaadhe aagilum - ஈடுபட முடியாதபடி யிருக்கச் செய்தேயும் மாட்டாத பல சமயம் மதி கொடுத்தாய்,Matadha pala samayam madhi koduthaai - (அதற்கு மேலே) தெளிவுக்குக் காரணமாகமாட்டாத பலவகைப்பட்ட பாஹ்யகுத்ருஷ்டிமத பிரசாரமும் பண்ணிவைத்து மோஹஜநகனுமானாய் (அவ்வளவுமல்லாமல்) மலர் துழாய் மாட்டே நீ மனம்வைத்தாய்,Malar thuzhaai maatte nee manam vaithaai - (இவ்வுலகத்தைத் திருத்திப் பணிகொள்ளும் வழியில் நோக்கம் செலுத்தாமல் திருத்துழாய் மலர் முதலி யஸ்வகீய போக்ய வஸ்துக்களின் அநுபவத்திலே நீ ஊன்றி யிருக்கின்றாய்; மா ஞாலம் வருந்தாதே,Maa gnalam varundhaadhe - (இப்படியாகில்) பெரிய இவ்வுலகம் இழந்தேபோகாதோ? |
| 2901 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (“ நாட்டாரிழவு பற்றிய கீழ்ப்பாட்டு ப்ரஸங்காத் ப்ரஸ்துதமத்தனை; மூன்றாம் பாட்டோடு இப்பாட்டிற்கு நேரே ஸங்கதி காண்க. “கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்று சொல்லுவானேன்? நீர் ஸகல விலக்ஷணராகையாலே நம்மை நீர் பேசமாட்டீரோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமானே! என்னை நீ விலக்ஷணனாக்கி வைத்தாலும் உன் சுடர்ப் பொலிவை ஓர் எல்லையிலே நிறுத்தி வைத்தா யில்லையே; எங்ஙனே நான் பேசுவது; என்கிறார்.) 5 | வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய் வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய் வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5 | வருந்தாத,Varundhaadhe - ப்ரயந்த ஸரத்யமல்லாத ஸ்வாபாவிகமான அரும் தவத்த,Arum thavatha - அருமையான தலத்தின் பலனாக வந்ததோ என்னலாம்படியான மலர் கதிரின்,Malar kathirin - பாம்பின் கிரணங்களையுடைய சுடர் உடம்பு ஆய்,Sudar utambu aay - தேஜோமய திவ்யமங்கள விந்ரஹயுக்தனாய் வருந்தாத ஞானம் ஆய்,Varundhaadha gyaanam aay - ஸ்வாபாவிக ஜ்ஞான யுக்தனாய் வரம்பு இன்றி,Varambu indri - எல்லையில்லாதபடி முழுது இயன்றாய்,Muzhudhu iyanraai - எங்கும் வியாபித்திருப்பவனே! வருங்காலம், நிகழ்காலம் கழிகாலம் ஆய்,Varungkaalam, nizhalkaalam kazhikaalam aay - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகால மென்கிற மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகனாய் உலகை,Ulagai - உலகங்களை ஒருங்கு ஆக,Orungu aaga - ஒருபடிப்பட அளிப்பாய்,Alippaay - ரக்ஷிக்குமவனே! சீர்,Seer - (உன்னுடைய) திருக்குணங்களை எங்கு,Engu - எங்கே உலக்க,Ulakka - முடிய ஓதுவன்,Oodhuvan - சொல்லுவோன்? |
| 2902 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானைத் துதிக்க அவதரித்த வேதங்களும் பகவத் குண கீர்த்தனத்தில் அந்வயம் பெற்ற வத்தனையே யொழிய வேறில்லை; ஆக, வேதங்களின் கதியே அதுவாகும்போது; நான் பேசித் தலைக்கட்டுவதென்று ஒன்றுண்டோ என்கிறார்.) 6 | ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6 | ஓதுவார் ஒத்து எல்லாம்,Oodhvaar otthu ellaam - அந்யயனம் செய்கிறவர்களை விட்டு நிரூபிக்கப்படுகின்ற ஸகல வேதங்களும் எவ்வுலகத்து எவ் எவையும்,Evvulagathu evv evaiyum - மற்றும் பலவுலகங்களிலுமுண்டான பலவகைப்ப்ட சாஸ்திரங்களும் சாது ஆய்,Saadhu aay - (பொய் கலவாமல்) உள்ளபடியே சொல்லுகின்றனவாகி நின் புகழின் தகை அல்லால்,Ninn pugalil thakai allaal - உன்னுடைய குணநீர்த்தனத்தில் தத்பரங்கள் என்கிற இவ்வளவல்லாமல் பிறிது இல்லை,Pirithu illai - வேறில்லை, ஒன்றையும் பூர்த்தியாகச்சொல்லனவல்ல என்றபடி போது வாழ்புனம்,Podhu vaazhpunam - பூக்கள் விளங்கப்பெற்ற நல்ல நிலத்திலுண்டான துழாய் முடியினாய்,Thuzhaay mudiyinaay - திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்துள்ளவனே! பூவின் மேல் மாதுவாழ் மார்பினாய்,Poovin mel maadhuvazh maarbinay - தாமரைப்பூவில் தோன்றிய பெரிய பிராட்டியார் வாழுமிடமான திருமார்பையுடையவனே! என் சொல்லி,En soll - எத்தைச்சொல்லி யான் வாழ்த்துவன்,Yaan vaazhthuvan - நான் துதிப்பேன்! |
| 2903 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஞானத்திற் சிறந்த பலபேர்கள் திரண்டு ஏத்தினாலும் அதுவும் பகவத் குணங்களுக்குத் திரஸ்காரமாகவே தலைக்கட்டு மென்கிறார்.) 7 | வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய் கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7 | வாழ்த்துவார் பலர் ஆக,Vaazhthuvaar palar aaga - துதிப்பவர்கள் பலருண்டாவதற்காக, மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று,Mooththa neer ulagu ellaam padai endru - ‘காரண ஜலமான ஏகார்ணவத்துக்குள்ளே லோகங்களையெல்லாம் உண்டாக்குவாயாக’ என்று சொல்லி. நின்னுள்ளே,Ninnullee - உன்னுடைய ஸங்கல்பத்திலே நான்முகனை,Naanmuganai - பிரமனை முதல் படைத்தாய்,Mudhal padaitthaay - முந்துற ஸ்ருஷ்டித்தவனே! கேழ்ந்த சீர்,Kezhndha seer - சிறந்த (ஞானமுதலிய) குணங்களையுடைய அரன் முதலா,Aran mudhala - சிவன் முலான அமரர்,Amarar - தேவர்கள் கிளர் தெய்வம் ஆய் கிளர்ந்து,Kilar theyvam aay kilarndhu - மிகுந்த சக்தியையுடைய தெய்வங்களாகத்தோன்றி சூழ்ந்து,Soozhndhu - ஒவ்வொரு விஷயங்களைப் பற்றிக்கொண்டு துதித்தால்,Thuthithaal - தோத்திரம் பண்ணினால் உன்,Un - உன்னுடைய தொல் புகழ்,Thol pugal - நித்ய ஸித்தமான கீர்த்தி மாசூணாதே,Maasoonaadhae - அவத்யம் பெற்றதாகாதோ!. |
| 2904 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (கீழ்ப்பாட்டில் சொல்லப்படாத அர்த்தம் இப்பாட்டில் என்ன சொல்லப்படுகிறதென்று விமர்சிக்கவேணும். அரன் முதலான அமரர்கள் ஏத்தினாலும் அவத்யம் என்றது கீழ்ப்பாட்டில்; அமரர்கோன் ஏத்துவம் அவத்யம் என்கிறது இப்பாட்டில்) 8 | மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய் மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால் மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8 | மாசு! உணா,Maasu! Uuna - அவத்யம் சிறுதுமில்லாமல் சுடர்,Sudar - சோதிமயமான உடம்பு ஆய்,Utampu aay - திருமேனியை யுடையனாய் மலராது குவியாது,Malaradhu kuviyaadhu - ஸங்கோச விகாஸங்களற்று மாசு உணா,Maasu uuna - (ஸம்சயம் விபரீதம் முதலான) அவத்யமில்லாத ஞானம் ஆய்,Gyaanam aay - ஞானத்தையுடையையாய் முழுதும் ஆய்,Muzhudhum aay - ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய் முழுது இயன்றாய்,Muzhudhu iyanraai - அவையெல்லாம் உன் பக்கலிலே வர்த்திருக்கும்படி அவற்றுக்கு ஆச்ரயமானவனே! மாசு உணாவான் கோலத்து அமரர்கோன்,Maasu unavaan koalathu amararkon - குற்றமற்ற அம்ராக்ருதமான ஜ்ஞரகாதி பூஷணாங்களையுடையனாய் தேவர்களுக்குக் கோமானாகிய பிரமன் வழிபட்டால்,Vazhipattaal - (உன்னைத்) தோத்திரம் பண்ணினால் மாசு உணா உனபாதம் மலர் சோதி,Maasu uuna unapaadham malar sodhi - குற்றமற்ற உனது பாதாரவிந்தத்தின் தேஜஸ்ஸானது மழுங்காதே,Mazhungaadhey - குறையுற்றதாகாதோ? |
| 2905 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானது ஸௌலப்யாதிசயத்திலீடுபட்டுப் பேசுகிற பாசுரமிது.) 9 | மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9 | தொழும் காதல்,Thozhum kaadhal - தொழவேணுமென்கிற காதலையுடைய களிறு,Kilaru - கஜேந்திராழ்வானை அளிப்பான்,Alippaan - காப்பதற்காக மழுங்காத வைநுதிய சக்கரம் நல் வலத்தையாய்,Mazhungaadha vainudhiya sakaram nal valathaiyaay - மங்குதலில்லாத கூர்மை பொருந்திய வாயையுடைய சக்கரப்படையை அழகிய வலத்திருக்கையிலுடையையாய் புள் ஊர்ந்து,Pul oornthu - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு தோன்றினை,Thoonrinai - (மடுவின் கரையிலே) வந்து தோன்றினாய்; (இஃது ஒக்கும் இப்படியல்லாமல்) மழுங்காத ஞானமே படை ஆக,Mazhungaadha nyaaname padai aaga - அமோகமான ஸங்கல்ப ரூப ஜ்ஞானமே கருவியாக மலர் உலகில்,Malar ulagil - விசாலமான உலகத்திலே தொழும்பு ஆயார்க்கு,Thozhumbu aayaarkku - அடியவர்கட்கு அளித்தால்,Alithaal - உதவினால் உன்,Un - உன்னுடைய சுடர்சோதி,Sudar sodhi - சிறந்த தேஜஸ்ஸு மறையாதே,Maraiyaadhae - குன்றிவிடா |
| 2906 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (பிரமன் முதலானாரும் உன் சேஷித்வத்தை யறிந்து ஆச்ரயிக்குமாறு நீ யிருக்கு மிருப்பு ஆச்சரியமோ வென்கிறார்.) 10 | மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10 | மறை ஆய,Marai aay - மறை பொருள்களையுடையவையான நால் வேதத்துள் நின்ற,Naal vaedhathul nindra - நான்கு வேதங்களுக்கும் உள்ளுறை பொருளாய் நின்ற மலர் சுடரே,Malar sudare - விகாஸத்தையுடைய சோதி வடிவானவளே! முறையால்,Muraiyaal - முறைப்படி இ உலகு எல்லாம்,e ulagu ellaam - இவ்வுலகங்களை யெல்லாம் படைத்து,Padaitthu - ஸ்ருஷ்டித்து இடந்து,Idandhu - (பிரளயத்திலே புக்கு) இடந்தெடுத்து உண்டு,Undu - (மஹாப்ரளயத்திலே) திருவயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்து,Uzhindhthu - (பிறகு) வெளிப்படுத்தி அளந்தாய்,Alanthaay - (வாமன மூர்த்தியாய்) அளந்துகொண்ட பெருமானே! பிறை ஏறு சடையானும்,Pirai yeru sadaiyaanum - சந்திரகலை தங்கிய சடையையுடையனான சிவபிரானும் நான்முகனும்,Naanmuganum - நான்முகக்கடவுளும் இந்திரனும்,Indiranum - தேவேந்திரனும் இறை ஆதல் அறிந்து ஏத்த,Irai aadhal arindhu yetha - நீயே ஸர்வஸ்வாமி யென்னுமிடத்தை யுணர்ந்து துதிக்குமாறு வீற்றிருத்தல் இது,Veetiruthal idhu - எழுந்தருளியிருக்குமிருப்பு வியப்பே,Viyappe - ஆச்சரியமோ? |
| 2907 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (இப்பதிகம் கடல்சூழ்ந்த மண்ணுலகில் அஸத் கல்பராக வுள்ளவர்களை உஜ்ஜீவிப்பித்து ஸம்ஸாரஸம்பந்த மற்றவர்களாக்கும் என்றாராயிற்று.) 11 | வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும் உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11 | வியப்பு ஆய,Viyappu aay - (அந்யத்ர) ஆச்சர்யகரமானவை வியப்பு இல்லா,Viyappu illa - (தன்னிடத்து) ஆச்சர்யகரமாகக் பெறாதவனும் மெய் ஞானம் வேதியனை,Mei gyaanam vaedhiyanai - (மெய்யுணர்வுக்கிடமான வேதங்களால் பேசப்படுபவனுமான பெருமானை, சயம் புகழார் பலர் வாழும்,Sayam pugalaaar palar vaazhum - ஜயசீலமான புகழையுடைய பல நல்லார் நவிலுமிடமான தடம் குருகூர்,Thadam kurukoor - பெரிய திருநகரிக்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் தொழுது,Thozhudhu - ஸேவித்து துயக்கு இன்றி,Thuyakku indri - அவத்ய மொன்று மின்றியே உரைத்த,Uraitha - அருளிச்செய்த ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,I pattum - இத்திருவாய்மொழி ஒலி முந்நீர் ஞாலத்து,Oli munneer nyaalathu - ஒலிமிக்க கடல்சூழ்ந்த நிலவுலகததில் உய கொண்டு,Uya kondhu - (உள்ள ஸம்ஸாரிகளை) உஜ்ஜீவனப்படுததி பிறப்பு அறுக்கும்,Pirappu arukkum - ஸம்ஸார ஸம்பந்த மற்றவர்களாக்கும் |