| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2908 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார்.) 1 | முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1 | முந்நீர் ஞாலம் படைத்த,Munneer gnaalam padaitha - கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும் எம் முகில் வண்ணனே,Em mugil vannaney - மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே! அ நாள்,A naal - அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில் நீ தந்த,Nee thantha - நீ கொடுத்தருளின ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய வழி,Valzi - வழியிலேயே உழல்வேன்,Uzhala ven - நடந்துகேட்டுத் திரிகின்றேன் வெம்நாள்,Vemnaal - (உணர்ச்சி யுண்டான பின்பு) பரிதாபமயமான நாளிலே நோய் வீய,Noi veeya - வியாதிகள் தீரும்படி வினைகளை,Vinaiyai - கரும பந்தங்களை வேர் அறுபாய்ந்து,Ver arupayinthu - வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று யான்,Yaan - அடியேன் உன்னை,Unnai - (மஹோபகாரனான) உன்னை இனி எந்நாள் வந்து கூடுவன்,Ini ennaal vandhu kooduvan - அடையப் பெறுவது இனி என்றைக்கோ! |
| 2909 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஜலஸ்தல விபாகமில்லாமல் எல்லார் தலைமேலும் நீ திருவடிகளை வைத்தருளின காலத்தையும் தப்பின நான் இனி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்றைக்கோ வென்கிறார்) 2 | வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2 | வல்,Val - வலிமைதாங்கிய மா,Maa - பெரிய வையம்,Vaiyam - பூமியை அளந்த,Alandha - (மஹாபலியிடத்தில் பிக்ஷை பெற்று) அளந்து கொண்ட எம் வாமனா,Em Vaamana - எமது வாமனமூர்த்தியை படி நின்ற,Padi ninra - பொருந்தி வாழ்கின்ற யான்,Yaan - நான் தொல்,Tol - பழமையான மா,Maa - பெரிய வல்,Val - உறுதியான வினை,Vinai - பாவங்களினுடைய தொடர்களை,Thodargalai - அநுபந்தங்களை நின் பல் மா மாயம்,Nin pal maa maayam - உனது திருவிளையாடலுக்குக் கருவியான குணவேற்றுமையாலும் காரிய வேற்றுமையாலும் பலவகைப்பட்ட பெரிய மாயையாகிய பிரகிருதி மூலமான பல் பிறவியில்,Pal piraviyil - தேவர் முதலிய பலவகைப்பிறப்பில் முதல் அரிந்து,Mudhal arinthu - வேரோடே அறுத்து நின்,Nin - (ப்ராப்யனான) உன்னுடைய மா நாள்,Maa naal - சிறந்த திருவடிகளை சேர்ந்து,Serndhu - அடைந்து நிற்பது,Nirpathu - நிலைபெற்றிருப்பது எஞ்ஞான்று கொல்,Yennjaandru kol - என்றைக்கோ? |
| 2910 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார்) 3 | கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3 | கொல்லா,Kolla - கொல்லுகைக்குக் கருவியல்லாமல் பா,Pa - குதிரையை நடத்துவதான கோல்,Kol - சாட்டையே கருவியாக கொலை செய்து,Kolai seydhu - (எதிரிகளை) முடித்து பாரதம் போர்,Bharatham Por - பாரத யுத்தத்தில் எல்லார் சேனையும்,Ellaar senaiyum - (பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும் இரு நிலத்து,Iru nilathu - இப்பெரிய பூமியில் அவித்த,Avitha - தொலைத்த எந்தாய்,Endhai - ஸ்வாமியே! பொல்லா,Polla - துன்பங்களுக்குக் காரணமான ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய புணர்வினை,Punarvinai - சம்பந்தத்தை அறுக்கல் அரு,Arukkal aru - அறுக்க எண்ணினாலும் அது அறுபடாது: யான்,Yaan - (இதிலே அகப்பட்ட) நான் உன்னை,Unnai - (ஸர்வசக்தனான) உன்னை சார்வது,Saarvadhu - கிட்டுவதாகிய ஓர் சூழ்ச்சி,Or Soozhchi - ஒரு பாயத்தை சொல்லாய்,Sollai - சொல்லியருள் |
| 2911 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (பெருமானே! அவதாரங்களுக்குத் தப்பினேன் என்பது மாத்திரமேயோ? எல்லாரையும் ரக்ஷிக்கைக்காக நீ ஸர்வ வ்யாபியாயிருக்கிற இருப்பும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே பார்த்தருள வேணுமென்கிறார்) 4 | சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும் ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய் தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4 | சூழ்ச்சி,Soozhchi - (எல்லாவற்றையும்) சூழ்ந்து கொள்ளுகிற சுடர் ஒளி,Sudar oli - மிகவும் விலக்ஷணமான ஞானம் ஆகி,Gnaanam aagi - ஞானத்தையுடையாய் என்றும்,Endrum - எக்காலத்திலும் ஏழ்ச்சி கேடு இன்றி,Ezhchi kedu indri - விகாஸமும் ஸங்கோசமுமில்லாமல் எங்ஙனும்,Enganum - எவ்விடத்திலும் நிறைந்த,Niraindha - வியாபித்திருக்கின்ற எந்தாய்,Endhai - எமது ஸ்வாமியே மற்று எங்கும்,Matru engum - உன்னைத் தவிர எந்த விஷயத்திலும் தாழ்ச்சி தவிர்ந்து,Thaalzchi thavirndhu - கால்தாழ்ந்திருப்பதை விட்டு நின்தான் இணை கீழ்,Nin thaan inai keel - உனது உபய பாதங்களின் கீழே வாழ்ச்சி,Vaalchi - வாழ்ந்திருக்குமிருப்பை வந்து,Vandhu - (யான் சேரும்வகை யான் அடையும் விதத்தை) (என் கண் முன்னே) வந்து தோன்றி அருளாய்,Arulaai - அருளிச் செய்யவேணும். |
| 2912 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) ((வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார்.) 5 | வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில் கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5 | வந்தாய் போலே வந்தும்,Vandhai poale vandhum - (ப்ரஹ்லாதன் கஜேந்திரன் முதலானார்க்கு) வந்து தோன்றினாய் போலே வந்தாகிலும் என் மனத்தினை,En manaththinai - எனது நெஞ்சை சிந்தாமல்,Sindhaamal - சிதிலமாகாதபடி நீ செய்தாய்,Nee seydhai - நீ செய்வதில்லை இதுவே,Ithuvae - உதவி செய்யாமையாகிற இதுவே இது ஆகில்,Ithu aagil - இப்படியே நீடித்திருக்குமாகில் கொந்து ஆர்காயாவின் கொழுமலர் திரு நிறைத்த எந்தாய்,Kondhu aarkaayavin kozhumalar thiru niraitha endhai - கொத்துக்கள் நிறைந்த காயாவினுடைய செழுமை தங்கிய பூவின் நிறம்போன்ற நிறத்தையுடைய ஸ்வாமியே! உன்னை,Unnai - (இப்படிப்பட்ட அழகை அநுபவித்தே தரிக்கவல்ல) அடியேன்.உன்னை எங்கு,Engu - எவ்விடத்து வந்து அணுகிற்பன்,Vandhu anugirpan - வந்து கிட்டவல்லேன். |
| 2913 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (பிரானே! இதற்கு முன்புள்ள காலமெல்லாம் உன் திருவடிகளைச் சேருமைக்கு உறுப்பாயிருப்பதொரு ஸுக்ருதத்தைச் செய்ததுமில்லை, துஷ்க்குதல்கள் தவிர்ந்ததுமில்லை; எதையும் தோன்றினபடிச் செய்து திரிந்தேன்; இப்படிச் செய்து திரிந்து மிகவும் அற்பமான விஷயரஸங்களைப் புஜித்து உன் திருவடிகளுக்குப் புறம்பாகியே அகன்றொழிந்தேன். அனந்தகோடி ஜீவராசிகளுக்குக் கரண்களே பரப்ரதானம் பண்ணி கடத்திப் போருகின்றவுனக்கு என்னை யொருவனையும் உன் திருவடிகளுக்கு உரியேனாம்படி பண்ணியருளுகை அரிதான காரியமோ? அங்ஙனே திருவுள்ளம் பற்றியருளலாகாதோ? இந்த மஹாபாக்யம் என்றைக்கு நேருமோ என்கிறார்.) 6 | கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால் அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6 | முனம் நாளால்,Munam naalaal - முற்காலமெல்லாம் கிற்பன் என்றிலன்,Kirpan endrilan - நன்மைகளைச் செய்யவல்லேனென்கிற இசையும் கொத்ணண்ணிடிலேன் கில்லேன் என்றிலன்,Killen endrilan - தீமைகளைச் செய்யமாட்டேனென்கிற தவிர்தலும் கொண்டிலேன்: (ஸுக்ருதங்களைச் செய்யாதவனாயும் துஷ்க்ருதங்களையே செய்யவனாயும்) அற்பம் சாரங்கள் அவை,Arpam saarangal avai - க்ஷுத்ர விஷயங்களையே சுவைத்து,Suvaitthu - அநுபவித்து அகன்று ஒழித்தேன்,Aganru ozhithaen - உன்னைவிட்டு நீங்கிக் கிடந்தேன். பல்பல் ஆயிரம் உயிர்,Palpal aayiram uyir - எண்ணிறந்த ஜீவராசிகளை செய்த,Seydha - நினைத்தபடி உண்டாக்கவல்ல பரமா,Parama - ஸமர்த்தனே! நின்,Nin - உன்னுடைய நல் பொன்சோதி தாள்,Nal ponsodi thaal - விலக்ஷணமாய் அழகிய ஒளியுருவாய் திருவடிகளை நணுகுவது,Nanuguvadhu - நான் கிட்டுவது எஞ்ஞான்று,Yennjaandru - என்றைக்கு. |
| 2914 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (கீழ்ப்பாட்டில் “நின்நற்பொற் சோதித்தாள்” என்று திருவடியின் பரம போக்யதையின் ப்ரஸ்தாவம் வரவே அந்தத் திருவடி விஷயத்தில் நெஞ்சுக்கு ஒரு பதற்றம் உண்டாயிற்று; அது கண்ட ஆழ்வார் நெஞ்சை நோக்கி, ‘கெடுவாய்! உனது நிலைமையை ஆராயாது நல்லதை யாசைப்பட்டால் அது உனக்குக் கிடைக்குமோ?” என்கிறார்.) 7 | எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7 | நெஞ்சே!,Nenjae! - மனமே இருந்து இருந்து,Irundhu irundhu - நிரந்தரமாக இரங்கி,Irangi - வருந்தி மெய் ஞானம் இன்றி,Mei gnaanam indri - யதார்த்த ஞானமில்லாமையாலே வினை இயல் பிறப்பு,Vinai iyal pirappu - பாபங்களின் பலனாக சேர்ந்த ஜன்மங்களிலே அழுந்தி,Azhundhi - ஆழங்காற்பட்டு நாம்,Naam - இதுவே யாத்திரையாக இருக்கிற நாம் எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற,Yennjaandrum engum ozhivu aṛa niraindhu ninra - எல்லாக் காலத்திலும் எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் விடாலே பரிபூர்ணமாக வியாபித்து நிலைபெற்றிருக்கின்றவனும். மெய்ஞானம் சோதி,Mei gnaanam sothi - விசதமான ஜ்ஞானப்ரபையை யுடையவனுமான கண்ணனை,Kannanai - ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை எஞ்ஞான்று மேவுவதும்,Yennjaandru mevvadhum - என்னைக்குக் கிட்டக் கடவோம். |
| 2915 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (எம்பெருமானே! உன்னைப் பெறுகைக்கு நான் ஏதேனும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணியிருந்தேனாகில் அந்தப் பற்றாசுதன்னை வைத்துக் கொண்டாவது ‘ஏன் நமக்கு இன்னமும் இரங்கி யருளவில்லை?’ என்று நான் கரைந்து கூப்பிடலாம்; நானோ ஒரு ஸாதாநாநுஷ்டாநமும் பண்ணாதவன்; அப்படியிருந்தும், ஸாதநங்களை நிறைய அநுஷ்டித்துப் பலன் கைபுகப் பெறாதவன் கிடந்து துடிக்குமாபோலே நானும் துடித்துக் கதறுகின்றேனே! இது என்ன! என்று தமக்குத்தாமே விஸ்மயப் பட்டுக் கொள்ளுகிறார்.) 8 | மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன் பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8 | துன்பம் மேவு,Thunbam mevu - பலவகைத் துயரங்களை விளைக்கவல்ல வினைகளை,Vinaikalai - பாவங்களை ஓவுதல் இன்றி,Oavudhal indri - இடையறாமல் உன் கழல்,Un kazhal - உனது திருவடிகளை வணங்கிற்றிலேன்,Vanangittrilaen - பணிவதும் செய்திலேன் பாவு,Paavu - எங்கும் பரவிய தொல்,Tol - இயற்கையான சீர்,Seer - திருக்குணங்களையுடைய விடுத்தும் இலேன்,Viduththum ilaen - (தவன் முதலியவற்றால்) போக்கடித்துக் காண்டேனுமில்லை கண்ணா,Kanna - கண்ணபிரானே! என்,En - எனது விருப்பத்திற்குரிய பாஞ்சுடரே,Paanchudare - மேலான ஒளியுருவனே! காண்பான்,Kaanbaan - (உன்னைக்) காணும்பொருட்டு கூவுகின்றேன்,Koovugindraen - கூப்பிடுகின்றேன். எங்கு எய்த கூவுவன்,Engu eitha koovuvan - எங்கே கிட்டுவதாகக் கூப்பிடுவேன் |
| 2916 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார்.) 9 | கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9 | கொடு வினை,Kodu vinai - கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய தூற்றுள் நின்று,Thoottrul ninru - நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று பல காலம்,Pala kaalam - அநேக காலம் வழி திகைத்து,Vali thigaiththu - வழி தெரியாமல் சுழன்று அலமருகின்றேன்,Alamarugindren - வருந்திக் கிடக்கின்ற பாவியேன்,Paaviyen - மஹாபாபியான நான் அன்று,Andru - முன்பொருகால் மேவி,Mevi - திருவள்ளமுவந்து ஆநிரை,Aa nirai - பசுக்கூடட்ங்களை காத்தவன்,Kaaththavan - ரக்ஷித்தவனும் உலகம் எல்லாம் தாவிய,Ulagam ellaam thaaviya - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய அம்மானை,Ammaanai - ஸ்வாமியை இனி,Ini - இனி கூவி கூவி,Koovi koovi - பலகாலும் கூப்பிட்டு எங்கு,Engu - எங்கே தலைப்பெய்வன்,Thalaippeivan - கிட்டுவேன்? |
| 2917 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (கீழ்ப்பாட்டில் ஆழ்வார்க்கு ஓடின நிலைமையைக்கண்ட எம்பெருமான் ‘இவரை நாம் ஒருவாறு ஸமாதானப்படுத்தாவிடில் இவர் முடிந்தேவிடுவர்போலும்’ என்றெண்ணித் தான் வடக்குத் திருமலையில் நிற்கும்படியைக் காட்டியருள, ஆழ்வாரும் கண்டு தரித்து, அந்தத் தரிப்பை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்.) 10 | தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10 | நமன் தமர்,Naman thamar - யமபடர்கள் தலைப்பெய் காலம்,Thalaippei kaalam - வந்து கிட்டுங்காலம் பாசம் விட்டால்,Paasam vittal - காலபாசத்தை வீசினால் அலைப்பூண் உண்ணும்,Alaipoon unnum - (அப்போது) அலைச்சல் படுகையாகிற அவ் அல்லல் எல்லாம் அகல,Av allal ellaam agala - அந்தத் துயரமெல்லாம் நீங்க, பல் கலை ஞானத்து என் கண்ணனை,Pal kalai gnaanaththu en Kannanai - பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களாலே அறியத்தக்க எனது கண்ணபிரானை கண்டுகொண்டு,Kandukondu - காணப்பெற்று என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது நிலை பெற்று,Nilai petru - நிலைநிற்கப்பெற்று உயிர்,Uyir - ஆத்மாவும் நீடு பெற்று,Needu petru - நித்யத்வத்தைப் பெற்றதாயிற்று. |
| 2918 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (இத்திருவாய்மொழி கற்பார, தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனம் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக் குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும் உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11 | எல்லா உயிர்கள்,Ellaa uyirgal - ஸகல ஜீவராசிகளையும் எல்லா உலகமும்,Ellaa ulagamum - எல்லா உலகங்களையும் உடையவனை,Udaiyavanai - உடைமையாகக் கொண்டுள்ள எம்பெருமானைக் குறித்து குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன்,Kuyil kol solai then Kurugur Sadagopan - குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாரருளிய செயிர் இல்,Seyir il - குற்றமற்ற சொல்,Sol - சொற்களையுடையத்தாய் இசை,Isai - இசையோடுங்கூடின மாலை,Maalai - தொடையையுடைய ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்திலும் இ பத்தும்,e paththum - இப் பத்துப்பாட்டும் உயிரின் மேல்,Uyirin mel - ஆத்மாவின்மேல் வந்தேறியான ஊன் இடை,Oon idai - மாம்ஸமயமான ஆக்கை,Aakai - சரீரத்தை ஒழிவிக்கும்,Ozhivikkum - போக்குவிக்கும் |