| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3590 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று.) 1 | மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1 | மை ஆர் கருகண்ணி,Mai aar karukanni - மையணிக் கருங்கண்களையுடையவளும் கமலம் மலர் மேல்,Kamalam malar meel - தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான செய்யாள்,Seyyaal - சிவந்த நிறமுடைய பிராட்டி திருமார்வினில் சேர்,Thirumaarvinil seer - திருமார்பிலே சேரப்பெற்ற திருமாலே,Thirumaale - ச்ரிய பதியே வெய்யார்,Veyyaar - ம்மை விஞ்சின சுடர் ஆழி,Sudar aazhi - ஒளிமிக்க திருவாழியையும் அரி சங்கம்,Ari sangam - அழகிய ஸ்ரீபாஞ்ச ஸந்யத்தையும் பந்தும்கையா,Pandhum kaiyaa - ஏந்தின திருக்கைகளையுடையவனே என் கண்,En kan - எனது கண்களானவை உன்னை காண கருதும்,Unnai kaana karudhum - உன்னைக் காண விரும்பாநின்றன. |
| 3591 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டில் தம்முடைய கண்களுக்குண்டான நசையைப் பேசினார். இப்பாட்டில் தமக்கும் தம்முடைய நெஞ்சுக்குமுண்டான சாபலத்தைச் சொல்லுகிறார்.0 2 | கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம் எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய் விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2 | கண்ணே,Kanne - எனக்குக் கண்ணாளவனே என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது உன்னைகாண கருதி,Unnaik kaana karuthi - உன்னையே காண வாசைப்பட்டு எண்ணே கொண்ட சிந்தையது ஆய் என்று,Ennae konda sinthaiyadhu aai endru - பல பல மநோரதங்களைப் பண்ணி நின்று இயம்பும்,Iyambum - அலற்றா நிற்கும் நான்,Naan - நானோ வென்னில் விண்ணோர்,Vinnor - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் என்றும் காண்பு,Endrum kaanbu - என்றும் காணவரியளன உன்னை அரியாயை கண்ணா தொழியேன் என்று அழைப்பன்,Kannaa thozhiyen endru azhaippan - கிட்டாமல் விடுவதில்லை யென்று உறுதி கொண்டு கூப்பிடா நின்றேன். |
| 3592 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டிற்படியே கூப்பிடச் செய்தேயும் அவன் வந்தருளக் காணாமையாலே, ஆர்த்தியே செப்பேடாக வந்து ரக்ஷிக்குமவனான உன்னுடைய திருவருளுக்கு நான் புறம்பானேனோ? என்கிறார்.) 3 | அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால் குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும் மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3 | அழைக்கின்ற அடி நாயேன் என் உள்ளம்,Azhaikkindra adi naayen en ullam - கூப்பிடா நின்றுள்ளவனாய்த் திருவடிவாரத்தில் விழுந்து கிடக்கும் நீசனாள என்னுடைய உள்ளமானது. என் கூழை லாலால் குழைக்கின்றது போல குழையும்,En koozhai laalal kuzhaiykinradhupola kuzhaikkum - நாயானது குட்டை வாலையசைத்து தன்னினைவைக் காட்டுமாபோலே காட்டா நின்றது. அன்று,Andru - முன்பொரு காலத்தில் மழைக்கு குன்றம் எடுத்து,Mazhaikku kunram eduthu - பெருமழையைத் தடுக்கக் கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து ஆ நிரை காலத்தாய்,Aa nirai kaalatthaa - பசுக் கூட்டங்களை ரக்ஷித்தவனே! அருள் பிழைக்கின்றது என்று,Arul pizhaikkindradhu endru - உன்னருள் (என்பக்கலிலே) தடுமாறிப் போகின்றதேயென்று பேது உறுவன்,Paedu uruvan - கலங்கா நின்றேன். |
| 3593 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.) 4 | உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண் பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4 | வானவர் தானவர்க்கு,Vaanavar thaanavarkku - அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற என்றும் அறிவது அரிய,Endrum arivadhu ariya - எப்போதும் அறிய வொண்ணாத அரிய ஆய அம்மானே,Ariya aaya ammaane - நரஸிம்ஹ மூர்த்தியே இனி உறுவது என்று,Ini uruvadhu endru - ‘இதுதான் ஸ்வரூபா நுரூபம்’ என்றறுதி யிட்டு உனக்கு ஆள்பட்டு,Unakku aalpattu - உனக்கு சேஷ பூதனாகி நின் கண் பெறுவது எது கொல் என்று,Nin kan peruvathu edhu kol endru - உன் பக்கலில் நான் பெறக் கூடிய பேறு எதுவோவென்று [நித்ய கைங்கரியமோ அல்லது ஸம்ஸார்க்த்தானோ வென்று] பேதையேன் நெஞ்சம்,Paethaiyen nenjam - அறிவிலியான என்னுடைய நெஞ்சானது மறுகல் செய்யும்,Marugal seiyyum - கலங்கா நின்றது |
| 3594 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (ஆழ்வார்தாம் தம்முடைய கலக்கத்தைக் கீழ்ப்பாட்டில் வெளியிட்டவாறே எம்பெருமான் ஆழ்வீர்! நாம் சிலர்க்கு அருமைப்பட்டிருக்கிறோமென்பது கிடக்கட்டும் ; பத்துடையடியவர்க்கு எளிவன் என்பதை நீர் ஆதியிலேயே அறிந்து பேசினவரல்லீரோ? நான் பிறர்க்கு அரியனாயிருப்பது கொண்டு உமக்கென்ன வருத்தம்? உமக்கு எளியனே காணும் உமக்கு வேண்டுவதென்ன? அதைச்சொல்லும் என்றருளிச்செய்ய காண்கைதான் வேணுமென்கிறார்.) 5 | அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5 | அரி ஆய அம்மானை,Ari aaya ammaanaai - விரோதி நிஸந சீலனான ஸ்வாமியாய் அமரர் பிரானை,Amarar piraanai - நித்ய ஸுரிகளுக்கு அநுபாவ்யனாய் பெரியாணை,Periyaanai - அந்த நித்ய ஸுரிகளுக்கும் பரிச்சேதிக்க வொண்ணாதபெருமையை யுடையவனாய் முன் பிரமனை படைத்தானை,Mun piramanai padaiththaanai - முன்னம் நான்முகளை (உந்திக்கமலத்தில்) தோற்றுவித்தவனாய் வரிவாள் அரவு இன் அணை பள்ளி கொள்கின்ற,Varivaal aravu in anai palli kolkinra - அழகிய ஆதிசேக்ஷனாகிற பரமபோக்ய சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்பவனான கரியான்,Kariyaan - கரிய பிரானுடைய சுழல் காண,Suzal kaana - திருவடிகளைக் காண்பதற்கு கருத்து கருதும்,Karuthu karuthum - என்னுள்ளம் கருதா நின்றது. |
| 3595 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ் ஐந்து பாட்டுக்களாலும் ஆழ்வார் வெளியிட்ட ஆர்த்தியைக் கண்ட எம்பெருமான் ஒருவாறு இவருடைய ஆர்த்தியைத் தீர்ப்போமென்று திருவுள்ளம் பற்றி ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அவ்வளவிலே தம்முடைய நெஞ்சு உகந்து அநுபவிக்கிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6 | கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம் விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6 | கருத்தே,Karuththe - என் கருத்தாக வுள்ள பெருமானே! உன்னை காணகருதி,Unnai kaana karuthi - உன்னைக் கண்டநுபவிக்க வேணுமென்று மநோரதங் கொண்டு என் நெஞ்சத்து,En nenchaththu - எழுந்திராத ஸ்திரப்ரதிஷ்டையாக இருத்தினேன்,Iruththinaen - இருத்திக் கொண்டேன் தேவர்கட்கு எல்லாம் விருத்தா,Thevargatku ellam viruththaa - உயர்ந்தவர்களுக் கெல்லாம் உயர்ந்தவனே விளங்கும் சுடர் சோதி உயரத்து,Vilangum sudar sothi uyarathu - அளவு கடந்த தேஜோமயமான உயர்ந்த நிலத்திலே(பரம பதத்திலே) ஒருத்தா,Oruththaa - அத்விதீயனாய் எழுந்தருளியிருப்பவனே என் உள்ளம்,En ullam - எனது நெஞ்சானது உன்னை உகந்து உள்ளும்,Unnai ugandhu ullum - உன்னை ப்ரேமத்தோடு சிந்தனை செய்யா நின்றது. |
| 3596 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (ஒரு கால் தூணிலே வந்து தோன்றி ப்ரஹலாதாழ்வானுடைய ஆர்த்தியைத் தீர்த்தாப்போலே தம்முடைய ஆர்த்தியைத் தீர்த்தருவினதாக நினைத்து ஏத்துகிறார். “என்னுள்ளம் உன்னை உகந்தேயுள்ளும்” என்று கீழ்ப்பாட்டிற் பேசினவதுவே இப்பாட்டிலும் முக்கியமாகப் பேசப்படுகிறது.) 7 | உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7 | அகம் நான் ஏமர்ந்து,Akam naan emarnthu - உள்ளே பொருந்தி இடம் கொண்ட அமலா,Idam konda amala - இடங்கொண்டிருக்கின்ற அமலனே மிரும் தானவன் மார்வு அகலம்,Mirum thaanavan maarvu akalam - மிடுக்குமிக்க இரணியாசுரனுடைய அகன்ற மார்வை இருகூறு ஆ,Irukooru aa - இருபிளவாக்கவல்ல நகந்தாய்,Nagandhai - நகத்தை யுடையவனே நரசிங்கம் அது ஆய உருவே,Narasingam adhu aaya uruve - நரசிங்க மூர்த்தியானவனே என் உள்ளத்து அகம்பால்,En ullaththu akambaale - எனது ஹருதயத்தின் மர்ம ஸ்தானமானது உன்னை உகந்தே உள்ளும்,Unnai ugandhe ullum - உன்னைப் பரமப்ரீதியோடு அநுபவிக்கின்றது. |
| 3597 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழிரண்டு பாட்டுக்களிலுண்டான களிப்பே இப்பாட்டிலும் தொடர்ந்து செல்லுகின்றது. ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானைக்-கிருஷ்ணனைக் – காணப் பெற்றேன் என்று இனியராகிறார்.) 8 | உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும் அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8 | உரு ஆகிய,Uru aagiya - மேலெழுந்த பார்வையில் ஒன்று போலே தோற்றுகிற ஆறு சமயங்கட்கு,Aaru samayangadku - புறமதங்களான அறு சமயங்களுக்கும் எல்லாம் பொரு ஆகி நின்றான் அவன்,Poru aagi ninraan avaan - தடையாகி நிற்பவனும் எல்லா பொருட்கும் அரு ஆகிய ஆகியை,Ellaa porutkum aru aagiya aakiyai - ஸகல பதார்த்தங்களுக்கும் உயிர் நிலையாய்க் கொண்டு முதல்வனும் தேவர்கட்கு எல்லாம் கரு ஆகிய,Thevargatku ellam karu aagiya - எல்லாத் தேவர்களுக்கும் காரண பூதனாமான கண்ணனை,Kannanaik - கண்ணபிரானை கண்டு கொண்டேன்,Kandu kondaen - கண்டு அநுபவிக்கப் பெற்றேன். |
| 3598 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தரம் அநுபவித்து ஆனந்திப்பதிற்காட்டிலும் பிறரையும் அநுபவிப்பித்து ஆனந்திருப்பது ஒப்புயர்வற்ற ஆனந்தமாதலால் அவ்வானந்தமும் தமக்கு ப்ராப்தமானபடியை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 9 | கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9 | எண்கண் இணை ஆர கண்டு கொண்டு,Enkan inai aara kandu konda - என் கண்களிரண்டும் வயிறு நிறையும் படி கண்டு கொண்டு களித்து,Kaliththu - ஆனந்தித்து பண்டை வினை ஆயின,Pandai vinai aayina - அநாதி விரோதிகளான எல்லாவற்றையும் பற்றோடு அறுத்து,Patroadu aruththu - வாஸனையோடே போக்கி அண்டத்து அமரர் பெருமான் அடியேன்,Andaththu amarar perumaan adiyaen - நித்யஸுரி நாதனுக்கு அடியேனான நான் தொண்டர்க்கு அமுது உண்ண,Thondarkku amudhu unna - பக்தாம்ருதமாக சொல் மாலைகள் சொன்னேன்,Sol maalaihal sonnaen - இத்திருவாய்மொழியை விண்ணப்பஞ் செய்யப்பெற்றேன். |
| 3599 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தாம் உஜ்ஜீவிக்கப்பெற்ற படியைப் பேரானந்தம் பொலியப் பேசுகிறார்.) 10 | அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10 | இவன் அடியான் என்று,Evan adiyaan endru - இச்சடகோபன் நமக்கு அடிமைப்பட்டவன் என்று கொண்டு எனக்கு ஆர் அருள் செய்யும் செடியானை,Enakku aar arul seyyum chediyanaai - என் விஷயத்தில் பேரருள் புரியும் ஸர்வேச்வரனாய் நிறை புகழ் அம்சிறை புள்ளின் கொடியானை,Nirai pugazh amsirai pullin kodiyanaai - நிறைந்த புகழோடுகூடி அழகிய சிறகையுடைய கருடனைக் கொடியாகவுடையனாய் குன்றாமல் உலகம் அளந்த அடியானை,Kunraamal ulagam alandha adiyaanai - ஒன்றுவிடாமல் உலகம் முழுவதையுமளந்து கொண்ட திருவடியையுடையனாயிருக்கு மெம்பெருமானை அடியேன் அடைந்து உய்ந்த ஆறே,Adiyaen adaindhu uyndha aare - அடியேன் கிட்டி உஜ்ஜீவிக்கப் பெற்ற விதம் என்னே! |
| 3600 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச் சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன் நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11 | ஆறாமதம் யானை,Aaraamadam yaanai - ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை அடர்த்தவன் தன்னை,Adarththavan thannai - பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன்,Seru aar ayal kurukoor sadagopan - சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார் நூறே சொன்ன,Noorai sonna - நூறு நூறாக வருளிச் செய்த ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்,Or aayiraththul ippaththum - ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது வானவர் தம் இன் உயிர்க்கு ஏறு,Vaanavar tham in uyirkkum eeru - நித்ய ஸுரிகளின் இன்னுயிர்த் தலைவனான எம்பெருமானை தரும்,Tharum - கொடுக்கும் (பகவத் ப்ராப்தியைப் பண்ணித்தருமென்றபடி) |