| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2941 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்ஸல்யத்தை யநுஸந்தித்தும் விகாரமடையாதிருப்பாருடைய பிறப்பு வீண் என்கிறார்.) 1 | மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என்? சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1 | தண் கடல் வட்டத்து உள்ளீர்,Tan kadal vattathu ullir - குளிர்ந்த கடல்சூழ்ந்த பூமண்டலத்திலுள்ளவர்களே! மொய்,Moy - நெருங்கின மா,Maa - பெரிய பூ பொழில்,Poo polil - பூஞ்சோலைகளையுடைய பொய்கை,Poigai - தடாகத்தில் முதலை,Mudhalai - மதுலையினால் சிறை பட்டு,Sirai pattu - கவ்வப்பட்டு கண்ணன் எம்மானை,Kannan emmanai - ஸ்ரீக்ருஷ்ணபரமாத்மாவை சொல்லி பாடி,Solli paadi - புகழ்ந்து பாடி எழுந்தும்,Ezhundum - இருந்தவிடித்திலிராமல் எழுந்தும் நின்ற,Nindra - கரையேறமாட்டாது வருந்தி நின்ற கை மாவுக்கு,Kai maavukku - கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த,Arul seitha - க்ருபைபண்ணின கார் முகில் போல் வண்ணன்,Kar mugil pol vannan - காளமேக சியாமளனான பறந்தும்,Paranthum - பூமியில் கால் பாவாதபடி அலைந்தும் துள்ளாதார் தம்மால்,Thullaadhaar thammaal - களித்துக் கூத்தாடாதவர்களால் என் கருமம்,En karumam - என்ன பயன்? சொல்லீர்,Sollir - சொல்லுங்கள். |
| 2942 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸகல ஜகத்தினுடையவும் துன்பங்களைப்போக்கிக் காத்தருளுமியல்வினனான திருமாலினது இந்நீர்மையில் ஈடுபடமாட்டாதவர்கள் ஸம்ஸார நிலத்தில் மேன்மேலும் பிறந்து படுவர்களென்கிறாரிப்பாட்டில்.) 2 | தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும் திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப் பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார் மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2 | தண் கடல் வட்டத்து உள்ளாரை,Tan kadal vattathu ullaarai - குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமண்டலத்திலுள்ள ஜனங்களை தடிந்து உண்ணும்,Thadinthu unnum - கொன்று தின்கிறவர்களும் திண் கழல் கடால்,Thin kazhal kadal - திண்ணிய வீரக்கழல்களையணிந்த காலையுடையவருமான அசுரர்க்கு,Asurarkku - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு தீங்கு இழைக்கும் திருமாலை,Theengu izhaikkum thirumaalai - அநர்த்தங்களை விளைவிக்கின்ற திருமாலை பண்கள் தலைக்கொள்ள பாடி,Pangal thalaikkolla paadi - இசை மிகும்படி பாடி பறந்தும்,Paranthum - உயரக்கிளம்பியும் குனித்து,Kuniththu - ஆடியும் உழலாதார்,Uzhalaadhaar - எங்கம் திரியாதவர்கள் மண்கொள் உலகில்,Mankol ulagil - மண்ணுலகத்தில் வல் வினைமலைந்து மோத,Val vinaimalaindhu moda - கொடிய பாவங்கள் மேலிட்டு நலியும்படியாக பிறப்பார்,Pirappaar - பிறப்பர்கள் (நித்திய ஸம்ஸாரிகளாய்க் கிடப்பர்களென்றபடி). |
| 2943 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இடையர்கள் இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜைப்பொருள்களையும் அமைப்பதைக்கண்ட கண்ணபிரான் அவற்றை இந்திரனுக்கு இடவொட்டாது தடுத்துக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லி, பிறகு தான் அம்மலையில் ஆவேசித்து அவற்றையெல்லாம் தானே யமுது செய்திட, பின்பு பூஜையிழந்த இந்திரன் சீற்றமுற்று ஏழுநாள் விடாமழ பெய்வித்தபோது அம்மலையையே பிடுங்கிக் குடையாகத்தூக்கித்தாங்கி, கோகுலத்தைச்சேர்ந்த ஸகலபிராணிகளையும் அதன்கீழ் அழைத்துக் கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காப்பாற்றியருளின பெருங்கணத்தில் ஈடுபட்டு விக்ருதராகாதவர்கள் நித்திய ஸம்ஸாரிகளா யொழிவர்களென்கிறார்.) 3 | மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத் தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும் தலையினொடு ஆதனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார் அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3 | மலையை,Malaiyai - கோவர்த்தன மலையை எடுத்து,Eduthu - குடையாகத் தூக்கி கல் மாரி,Kal maari - கல் மழையை காத்து,Kaathu - தடுத்து பசு நிரை தன்னை,Pasu nirai thannai - பசுக்கூட்டத்தை தொலைவு தவிர்த்த பிரானை,Tholaivu thavirtha piraanai - துன்பந்தவிர்த்த எம்பெருமானை சொல்லி சொல்லி,Solli solli - பலகாலுஞ் சொல்லி எப்போதும்,Eppothum - எப்பொழுதும் நின்று,Nindru - நிலைநின்று ஆதனன்தோடு தலை தட்ட,Aadhananthodu thalai tatta - தரையிலே தலை படும்படியாக தடுகுட்டம் ஆய்,Thadukuttam aai - தலைகீழாக பறவாதார்,Paravaadhaar - ஸம்ப்ரமியாதவர்கள் அலைகொள் நரகத்து,Alaikol naragaththu - துக்கப்படுத்துவதையே இயல்வாகவுடைய நரகத்தில் அழுந்தி கிடந்து,Azhunthi kidandhu - அழுந்தியிருந்து உழைக்கின்ற,Uzhaikkindra - வருந்ததகின்ற வம்பர்,Vambar - வீணராவர். |
| 2944 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (கும்பனென்னும் இடையவர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகையும் கண்ணபிரான் ஏழுதிருவுருககொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன் என்ற இவ்வரலாற்றை அழகாகப் பாடிக்கொண்டு தலைகீழாகக் கூத்தாடி அடைவுகெட ஆராவாரஞ்செய்து திரியாத பாவிகள் ஸாத்விக கோஷ்டிகளின் நடுவே தாங்களும் சிலராய்ப் பிறந்து திரிவது ஏனோ என்று வெறுத்துரைக்கின்றார்.) 4 | வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக் கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு கட்டு உண்டு உழலாதார் தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?–3-5-4 | வம்பு அவிழ் கோதை பொருட்டா,Vambu avizh kodhai poruttaa - நறுமணம் மிக்க பூமாலையணிந்துள்ள நப்பின்னைக்காக மால் விடை ஏழும் அடர்த்த,Maal vidai ezhum adartha - பெரிய ரிஷபங்களேழையும் வலியக்கினவனும் செம் பவளம் திரள் வாயன்,Sem pavalam thiral vaayan - சிவந்த பவளம் போன்று திரண்ட அதரத்தையுடையவனுமான சரீதரன்,Sreedharan - திருமாலினது தொல் புகழ்,Tol pugazh - நிஜமான புகழை பாடி,Paadi - வாயாரப்பாடி கும்பிடு நட்டம் இட்டு ஆடி,Kumpidu nattam ittu aadi - தலைகீழாகக் கூத்தாடி கோகு உகட்டுண்டு,Kogu ugattundu - அடிடவுகேடு தலையெடுத்து உழலாதார்,Uzhalaadhaar - ஸம்ப்ரமியாதவர்கள் சாது சனங்கள் இடையே,Saadhu sanangal idaiye - ஸாத்விக ஜனங்களின் நடுவிலே தம் பிறப்பால்,Tham pirappaal - ஜனிப்பதனால் என் பயன்,En payan - என்ன பயனோ! |
| 2945 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (அடியார்களின் விரோதிகளைத் தொலைப்பதற்காகத் தன்னுடைய அஸாதாரண திவ்ய ரூபத்தோடு கூடவே வந்து திருவவதாரம் பண்ணின திருக்குணத்தை அநுஸந்தித்து ஈடுபடாதவர்கள் செய்கிற ஜபம் தபம் முதலியனவெல்லாம் உபயோகமற்றவையென்கிறார்.) 5 | சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார் ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5 | சாது சனத்தை நலியும்,Saadhu sanaththai naliyum - ஸாத்விகர்களைத் துன்பப்படுத்தின கஞ்சனை,Kanjanai - கம்ஸனை சாதிப்பதற்கு,Saadippadharku - தண்டிக்கும்பொருட்டு ஆதி அம்சோதி உருவை,Aadhi amsoathi uruvai - நித்தியமாய் அப்ராக்ருததேஜோரூபமான திருவுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த,Angu vaiththu ingu pirandha - பரமபதத்திலுள்ளபடியே ஸ்வீகரித்துக்கொண்டு இந்நிலத்தில் வந்து பிறந்தவனும் வேதம் முதல்வனை,Vedam mudhalvanai - வேதங்களினால் மூலப்பொருளென்று ஓதப்படுபவனுமான எம்பெருமானை. பாடி,Paadi - வாயாரப்பாடிக்கொண்டு வீதிகள் தோறும்,Veedhigal thorum - எல்லா வீதிகளிலும் துள்ளாதார்,Thullaadhaar - களித்துத்திரியாதவர்கள் ஓதி உணர்ந்தவர் முன்னா,Oadhi unarnthavar munnaa - சாஸ்திரங்கள் ஓதி நன்கறிந்த மாஞானிகள் முதற்கொண்டு (எப்படிப்பட்ட வித்வான்களாயிருந்தாலும்) என் சவிப்பார்,En savipaar - (அவர்கள்) ஜபம் செய்வது என்னோ? மனிசரே,Manisare - (அவர்கள்) மநுஷ்ய கோடியிற் சேர்ந்தவர்களோ? |
| 2946 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (மநுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய பரமபோக்யதையை அநுஸந்தித்துப் பரவசராயிருக்குமவர்கள் தாம் எல்லா அறிவின் பலனும் கைவந்திருக்குவமர்களென்கிறாரிப்பாட்டில்.) 6 | மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக் கனியைக் கரும்பின் இன் சாற்றைக்க ட்டியைத் தேனை அமுதை முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6 | மனிசரும்,Manisarum - மநுஷ்ய யோநியாயும் மற்றும்,Matrum - தேவயோநியாயும் முற்றும் ஆய்,Mutrum aai - மற்றுமுள்ள ஸகல யோநியாயும் மாயம் பிறவி பிறந்த,Maayam piravi pirandha - ஆச்சரியமான பிறவிகளில் பறிந்தருளின தனியன்,Thaniyan - ஒப்பற்றவாய் பிறப்பு இலிதன்னை,Pirappu ilithannai - கருமமடியான பிறப்பு இல்லாதவனாய் தடம் கடல் சேர்ந்த பிரானை,Thadam kadal serndha praanai - விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளும் பெருமானாய் கனியை,Kaniyai - கனிபோன்றவனாய் இன் கரும்பின் சாற்றை,In karumbin saatrai - மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனாய் கட்டியை,Kattiyai - கற்கண்டுபோன்றவனாய் தேனை,Thenai - தேன்போன்றவனாய் அமுதை,Amudhai - அமிருதம் போன்றவனான எம்பெருமானை முனிவு இன்றி,Munivu indri - வெறுப்பு இல்லாமல் மிக்க உவப்புடனே ஏத்தி,Yaethi - துதித்து குனிப்பார்,Kunipaar - நர்த்தனம் செய்பவர்கள் முழுது உணர் நீர்மையினால்,Muzhudhu unar neermaiyinaal - ஸர்வஜ்ஞர்களெனக் கொண்டாடத் தக்கவர்கள் |
| 2947 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (அடியவர்களான பாண்டவர்களின் விரோதிகளைப் போக்கின எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுஸந்தித்து ஈடுபடமாட்டார்கள் *பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்யவே பிறந்தவர்களென்கிறாரிப்பாட்டில்.) 7 | நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ் சுடரை நினைந்து ஆடி நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே!–3-5-7 | நீர்மை இல்,Neermai il - ஈர நெஞ்சு இல்லாதவர்களான நூற்றுவர்,Nootruvar - துரியோதனன் முதலிய நூறு பேரும் வீய,Vee - மாளும்படியாக, ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்“கு அருள் செய்து நின்று,Arul seithu nindru - கிருபை பண்ணி பார்மல்குசேனை அவிந்த,Paar malgusenai avindha - பூபாரமாயிருந்த சேனைகளைத் தொலைத்தருளின பரம் சுடரை,Param sudarai - பரஞ்சோதியான பெருமானை நினைந்து,Ninaindhu - தியானம் பண்ணி ஆடி,Aadi - கூத்தாடி நீல் மல்கு கண்ணினர் ஆகி,Neel malgu kanninar aagi - ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களையுடையவராகி நெஞ்சம் குழைந்து நையாதே,Nenjam kuzhaindhu naiyaadhe - நெஞ்சுருகி நையாமல் ஊன் மல்கி,Oon malgi - உடல் தடித்த மோடு பருப்பார்,Modu paruppaar - வயிறு பருப்பவர்கள் உத்தமர்கட்கு,Utthamar kadku - பாகவதோத்தமர்களுக்கு என் செய்வார்,En seivaar - யாது செய்வார். |
| 2948 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம்.) 8 | வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8 | வார் புனல் அம் தண் அருவி,Vaar punal am than aruvi - சிறந்த தீர்தங்களையுடையதும் அழகிய குளிர்ந்த அருவிகளையுடையதுமான வட திருவேங்கடத்து,Vada thiruvengadaththu - வடக்குத் திருமலையில் நிற்கிற எந்தை,Endhai - எம்பெருமானுடைய பல பேர்,Pala per - பல திருநாமங்களையும் சொல்லி பிதற்றி,Solli pidatri - வாய்வந்தபடி சொல்லி பித்தர் என்றே பிறர் கூற,Pitthar endre pirar kooru - ‘அவர்கள் பைத்தியக்காரர்கள்’ என்றே பிறர் சொல்லுமாறு ஊர் பல புக்கும்,Oor pala pukkum - பலவூர்களிலே புகுந்தும் புகாதும்,Pugaadhum - அங்குப் புகாமலும் (பலபேர்களுடைய ஸன்னிதானத்திலும் அஸன்னிதானத்திலும் என்றபடி) உலோகர் சிரிக்க,Ulogar sirikka - உலகர்கள் சிரிக்கும்படியாக ஆடிநின்று,Aadininru - நர்த்தனஞ் செய்து கொண்டிருந்து ஆர்வம் பெருகி,Aarvam perugi - ஆசை விஞ்சி குனிப்பர்,Kunippar - கோலாஹலஞ் செய்பவர்கள் அமரர்,Amarar - நித்யஸூரிகளாலே தொழப்படுவார்,Thozhappaduvaar - வணங்கப்படுவர்கள். |
| 2949 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (கைவல்ய புருஷார்த்தத்தில் ஊன்றியிருப்பவர்கள் தவிர மற்றையோரெல்லோரும் ப்ரேம பரவசராய் எம்பெருமானுடைய குணாநுபவம் பண்ணிக் களித்துக் கூத்தாடுவதே செய்யத்தக்கது என்கிறாரிப்பாட்டில்- என்கிறவிதுவே திருக்குருகைப்பிரான் பின்னான் முதலான ஆசிரியர்களின் திருவுள்ளம்.) 9 | அமரர் தொழப் படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக அமரத் துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே .–3-5-9 | அமரர்,Amarar - நித்யஸூரிகளினால் தொழப் படுவானை,Thozhap paduvaanai - ஸேவிக்கப்படுகிறவனும் அனைத்து உலகுக்கும் பிரானை,Anaithu ulagukkum piraanai - ஸகல லோகங்களுக்கும் சேஷியுமான ஸர்வேச்வரனை மனத்தினுள் அமர,Manathinul amar - நெஞ்சிலே ஊன்றி யிருக்கும்படி யோக புணர்ந்து,Yoga punarndhu - யோகாப்யாஸத்தைப் பண்ணி அவன் தன்னோடு ஒன்றாக அமர,Avan thannodu ondraaga amar - (முக்தி தசையில்) அவனோடு இம்வாத்ம வஸ்து ஸமானம் என்னும்படியாக துணிய வல்லார்கள் ஒழிய,Thuniya vallaarkal ozhiya - கருதமவர்களான கைவல்ய நிஷ்டர்களைத் தவிர அல்லாதவர் எல்லாம்,Allaadhavar ellaam - மற்ற பேர்களெல்லாரும் அமர,Amarar - அநந்யப்ரயோஜனராய்க் கொண்டு நினைந்து எழுந்து ஆடி,Ninaindhthu ezhundhu aadi - (அவனை) நெஞ்சிலே யநுஸந்தித்து எங்கும் பரந்து கூத்தாடி அலற்றுவதே கருமம்,Alattruvadhe karumam - (துதிகளை) வாய் பிதற்றுவதே செய்ய வுரியது. |
| 2950 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (பகவத்குணங்களைக் கேட்டால் விகாரப்படாமலிருக்கு மிருப்பாகிற அவிவேகத்தைத் தவிர்த்து எல்லீரும் அவனது திருக்குணங்களை யநுஸந்தித்துப் பரவசமாய் லஜ்ஜாபிமானங்களைவிட்டு அவனை ஏத்துங்கோ ளென்கிறாரிப்பாட்டில்) 10 | கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத் திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10 | கருமமும்,Karumamum - ஸாதந ரூபமான கர்மங்களும் கரும பலனும்,Karuma palanum - அக்கருமங்களால் ஸாதிக்கப்படும் பலன்களும் ஆகிய,Aagiya - தானிட்ட வழக்காம்படியுள்ள காரணன் தன்னை,Kaaranan thannai - ஜகத்காரண பூதனும் திரு மணிவண்ணனை,Thiru manivanai - அழகிய மணிபோன்ற வடிவையுடையவனும் செம் கண்,Sem kan - செந்தாமரøக் கண்களையுடையனும் மாலினை,Maalinai - ஆச்ரித வாத்ஸல்யமே வடிவெடுத்தவனும் தேவபிரானை,Devapiranai - தேவர்களுக்குப் பிரானுமான எம்பெருமானை ஒருமை,Orumai - உபாய உபேயங்களில் பேதம் பிறவாதபடி ஒருமைப்பட மனத்தினுள் வைத்து,Manathinulai vaithu - நெஞ்சிலே வைத்து உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - மனமுருகி பெருமையும் நாணும் தவிர்த்து,Perumaiyum naanum thavirthu - அஹங்காரமும் வெட்கமும் இன்றிக்கே எழுந்து ஆடி,Ezhundhu aadi - கிளம்பிக் கூத்தாடி பேதைமை தீர்ந்து,Pethaimai theerndhu - அவிவேகமுமொழிந்து பிதற்றுமின்,Pithattrumin - (அவன் குணங்களை) வாய்வந்தபடி சொல்லுங்கள். |
| 2951 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு பகவத்குணாநுஸந்தானத்தினால் ஒரு விகாரம் பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே போக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன் நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே.–3-5-11 | தீர்ந்த,Theerndha - தனக்கே அற்றுத் தீர்ந்த அடியவர்,Adiyavar - விரோதிகள் அற ஸ்வீகரித்து பணி கொள்ள வல்ல,Pani kolla vala - (அவர்கள் மூலமாக) நித்திய கைங்கரியத்தைக் கொள்ள வல்லவனும் ஆர்ந்த புகழ்,Aarndha pugazh - நிறைந்த புகழுடையவனும் அச்சுதனை,Acchudhanai - அச்யுத னென்னும் திருநாமமுடையவனும் அமரர் பிரானை,Amarar piranaai - தேவர்களுக்கு ப்ரபுவுமான எம்மானை,Emmaanai - எம்பெருமாளை வாய்ந்த,Vaaindha - கிட்டின வளம் வயல் சூழ் தண்வளம்,Valam vayal sooal thanvalam - வளம் வயல் சூழ் தண்வளம் குருகூர் சடகோபன்,kurukoor Sadagopan - திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வார் நேர்ந்த,Neerndha - அருளிச் செய்த ஓர் ஆயிரத்து,Oar aayiraththu - ஆயிரத்துள் இ பத்து,I pattu - இத்திருவாய்மொழி அரு வினை,Aru vinai - போக்கவரிய பாவங்களை நீறு செய்யும்,Neeru seyyum - பஸ்மமாக்கிவிடும். |