| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2785 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (பிரிந்தவர்கள் இரங்குவது நெய்தல் நிலத்திலாதலால் ஆழ்வார்இப்போது கடற்கரைச் சோலையிலிருப்பதாகக் கொள்க. ஆங்கு உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் விவர்ணப் பட்டிருக்கின்றதாகக்கொண்டு நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ? -என்பதாகச் செல்லுகிறது இப்பாசுரம்) 1 | வாயும் திரையுகளும் கானல் மடநாராய் ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல் நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1 | வாயும் திரை உகளும் கானல்,vaayum thirai ugulum kaanal - மேன் மேலுங் கிட்டுகின்ற அலைகள் தாவு மிடமான - கடற் கரையிலுள்ள சோலையிலுள்ள மடம் நாராய்,madam naaray - இளமை தங்கிய நாரையே!, ஆயம் அமர் உலகும் துஞ்சிலும்,aayam amar ulagum thunjilum - (நமது) தாயும் தேவலோகமும் உறங்கினாலும் நீ துஞ்சாய்,nee thunjaay - நீ உறங்குகிறாயில்லை; ஆல்,aal - ஆதலால் நோயும் பயலைமையும் மீதூர,noyum payalaimaiyum meedoor - மனவருத்தமும் (அதன் காரியமான) பசலை நிறமும் மேலிட்டுவர எம்மேபோல்,emmae pol - எங்களைப்போல நீயும்,neeyum - நீயும் திருமாலால்,thirumaalaal - திருமகள் கொழுநனான எம்பெருமானாலே நெஞ்சம் கோள் பட்டாயே,nenjam kol pattaaye - நெஞ்சு பறித்துக் கொள்ளப் பட்டாயோ? |
| 2786 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (அன்றில் என்பது ஒரு பறவை; குர்ரீ என்று வடமொழியிற் கூறப்படும், க்ரௌஞ்சமென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும் அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் ஆழ்வாரது திருச்செவியிலே விழுந்ததாக, அதுவும் பகவத் விஷயத்திலீடுபட்டுப் பிரிவாற்றாமையினால் கத்துகின்றதெனக்கொண்டு, ஐயோ! நீயும் என்னைப்போலே ஆழியானென்னுமாழமோழையில் அகப்பட்டாயே; என்கிறது இப்பாசுரம்.) 2 | கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான் தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2 | கோள்பட்ட,kolpatta - அபஹரிக்கப்பட்ட சிந்தையை ஆய்,sinthaiyai aay - நெஞ்சை யுடையையாகி கூர்வாய,koorvaay - (அதனால்) தழதழத்த குரலையுடைய அன்றிலே,anrilley - அன்றில் பறவையே! சேண்பட்ட,senpatta - நெடிதான யாமங்கள்,yaamangal seraadhu - சாமங்கள் தோறும் சேராது,seraadhu - படுக்கையிற் சேராமல் இரங்குதி,irangudhi - வருந்துகின்றாய்; ஆல்,aal - ஆதலால் ஆள்பட்ட,aalpatta - அடிமைப்பட்ட எம்மே போல்,emmae pol - எங்களைப் போலவே நீயும்,neeyum - (பிரிவாற்றாமை தோற்றவிருக்கிற) நீயும் அரவு அணையான்,aravu anaiyaan - சேஷசாயியான எம்பெருமானது தாள்,thaal - திருவடிகளிலே பட்ட,patta - ஸம்பத்தம்பெற்ற தண்,than - குளிர்ந்த துழாய் தாமம்,thuzhaay thaamam - திருத்துழாய்மாலையை காமுற்றாயே,kaamurrthaaye - ஆசைப்பட்டாயோ? |
| 2787 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவது வடிவதுமாயிருப்பதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லபிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வருவது கரையேறமாட்டாதே உள்ளே விழுவதாய் எழுத்துஞ் சொல்லும் பொருளும் தெரியாதபடி சத்துகின்ற தாகக்கொண்டு, ஐயோ! நீயும் இராமபிரானது திருக்குணங்களில் அகப்பட்டு நான் படும்பாடு பட்டாயோ என்கிறதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம்.) 3 | காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல் நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால் தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3 | எல்லே !,Elle! - கனைகடலே! காமுற்ற கை அறவோடு,kaamurrtha kai aravoodu - விரும்பின பொருள் கை கூடப்பெறாத இழவினால் நீ,nee - நீ இராபகல் முற்ற,iraabakal muttru - இரவும் பகலுமாகிய எப்போதும் கண் துயிலாய்,kan thuyilaay - கண்ணுறங்காதாகி நெஞ்சு,nenju - உள்ளிடமும் உருகி,urugi - நீராகி ஏங்குதி,aengudhi - ஏங்குகின்றாய்; ஆல்,aal - ஆதலால் தென் இலங்கை,then ilankai - தென்னிலங்காபுரி முழுவதும் தீ ஊட்டினான்,thee oottinaan - நெருப்புக்கு உணவாக்கின பெருமானுடைய தாள்,thaal - திருவடிகளை நயந்த,nayandha - ஆசைப்பட்ட யாம்,yaam - நாங்கள் உற்றது,uttrathu - அடைந்த வருத்தத்தை உற்றாயோ,uttraayo - நீயும் அடைந்தாயோ? வாழி,vaazhi - (நீ மனத்துன்பம் தீ;ர்ந்து) வாழ்வாயாக. |
| 2788 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; மாதாரிச்வா ஸதாகதி; என்ற நிகண்டின்படி ஸதாகதியென்று பெயர் பெற்றதாதலால் எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும் உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவதெரியாதபடியிருக்கும் குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனை யும் அ;தற்கு இயல்வாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே மடலூருவாரைப்போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஸந்நிபாத ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு வாடையே! நீயும் நான் பட்டது பட்டாயன்றோ என்கிறாள்.) 4 | கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய் அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4 | தண் வாடாய்,than vaadaay - குளிர்ந்த காற்றே! கடலும்,kadalum - ஸமுத்திரத்தையும் மலையும்,malaiyum - மலையையும் விசும்பும்,visumbum - ஆகாசத்தையும் துழாய்,thuzhaay - தடவிக்கொண்டு எம்மைப்போல. சுடர் கொள் இராபகல்,sudar kol iraabakal - சந்திர ஸுரியர்களாகிற இரு சுடர்களையும் (தம்மிடத்து முறையே) கொண்ட இரவிலும் பகலிலும் துஞ்சாய்,thunjaay - நீ கண்ணுறங்குகின்றிலை ஆல்,aal - ஆதலால் அடல்கொள்,adal kol - வலிமைகொண்ட படைஆழி,padaiaali - திருவாழிப் படையுடைய அம்மானை,ammaanai - எம்பெருமானை காண்பான்,kaanpaan - காணுதற்பொருட்டு நீ,nee - நீ ஊழி ஊழிதோறு,oozhi oozhidhoru - நெடு நாளாக உடலம் போய் உற்றாயோ,udalam poi uttraayo - உடம்பு நோவு கொண்டாயோ? |
| 2789 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (நீராய் இற்று விழுகின்ற மேகத்தைக்கண்டு, நீயும் என்னைப்போலே எம்பெருமானுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு நோவுபடுகிறாய் போலுமென்று சோகித்துச் சொல்லுகிற பாசுரம் இது. மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர் விட்டு அழுகிறபடியாக வெண்ணிச் சொல்லுகிறாள்.) 5 | ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற வாழிய வானமே நீயும் மதுசூதன் பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5 | உலகுக்கு நீர்கொண்டு,ulagukku neer kondu - உலகுக்கெல்லாம் ஆகும்படி நீரை முகந்து கொண்டு ஊழி ஊழி தோறு,oozhi oozhi thooru - காலமுள்ளவளவும் நீர்ஆய்,neer aay - நீர்வடிவமாய் நெகிழ்கின்ற,nekizhkindra - விழுகின்ற வானமே,vaaname - மேகமே ! நீயும்,neeyum - நீயும் தோழியரும் யாமும் போல்,thozhiyarum yaamum pol - (எமது) தோழிமார்களும் நாங்களும்போல மதுசூதன் பாழிமையில் பட்டு,madhusoodhan paalimaiyil pattu - எம்பெருமானது பெருமிடுக்கிலே அகப்பட்டு அவன் கண் பாசத்தால்,avan kan paasathaal - அவனிடத்து விருப்பத்தினால் நைவாயே,naivaayae - அழிகின்றனையோ? வாழிய,vaazhiya - (இந்தத் துன்பம் தீர்த்து) வாழ்வாயாக. |
| 2790 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு அந்தோ!உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே! நீயும் அப்பெருமானுடைய பொய்யுரையிலே நம்பிக்கை கொண்டு நான் பட்டபாடு படுகின்றாய்போலும் ! என்கிறாள்.) 6 | நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6 | நாள் மதியே,naal madhiye - நிரம்பின சந்திரனே ! நைவு ஆய,naivu aay - நைந்து போவதையே இயற்கையாகவுடைய எம்மே போல்,emmae pol - எங்களைப்போல (ஒளி யுரவாகிய) நீயும் இ நாள்,i naal - இக்காலத்திலே மை வான்,mai vaan - காரிய ஆகாயத்திலுள்ள இருள்,irul - இருளை அகற்றாய்,akkaraay - நீக்குகின்றிலையாகி மாழாத்து,maazhaathu - மயங்கி தேம்புதி,thembuthi - குறைபடுகின்றாய்; ஆல்,aal - ஆதலால் ஐ வாய்,ai vaay - ஐந்து முகங்களுடைய அரவு அணை மேல்,aravu anai mel - சேஷசயனத்தின் மீது உள்ள ஆழி பெருமானார்,aazhi perumanaar - சக்கரபாணியான எம்பெருமானது மெய் வாசகம் கேட்டு,mei vaasagam kettu - உண்மையான வார்த்தையைக் கேட்டு உன் மெய் நீர்மை,un mei neermai - உனது வடிவின் குணமாகிய ஒளியை தோற்றாயே,thoorraayae - இழந்தாய் போலும்! |
| 2791 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து ‘இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிப்பாயோ? என்றுபொடிந்து பேசுகின்றாள்.) 7 | தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7 | கனம் இருளே,kanam irulae - கனத்திருக்கின்ற இருளே ! எம்பெருமான்,emperumaan - எமக்கு ஸ்வாமியான நாரணற்கு,naaranarkku - நாராயணனுக்கு மடம் நெஞ்சம் தோற்றோம்,madam nenjama thortrom - விதேயமான நெஞ்சைப் பறிகொடுத்தோமாகி எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை,em aatrraamai sollu aluvoamai - எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி அழுகின்ற எங்களை நீ,nee - நீ நடுவே,naduve - நடுவில்நுழைத்து வேற்றோர்வகையின்,vertror vakaiyin - பவைகர்கள் நலிகிற வகையைக் காட்டிலும் கொடிது ஆய்,kodithu aay - கொடுமையாகி எனை ஊழி,enai oozhi - காலமுள்ளவளவும் மாற்றாண்மை,maattraanmai - பகைவரது தன்மையை ஆளகையில் நிற்றியோ,nirtriyo - நிற்கிறாயோ? வாழி,vaazhi - இந்நிலைமை நீங்கி வாழ்வாயாக. |
| 2792 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இருளின் செறிவாலே நீருக்கும் தரைக்கும் வாசயிறயாதேஒரு கழியிலே சென்றிழிந்தாள்; கழிதான் இரைத்துக்கொண்டு ஓடாநிற்குமாகையாலே அது தன்னைப்போலவே பகவத் விஷயத்திலீடுபாட்டாலே உறக்கமற்றுக் கதறுகின்றதாகக் கொண்டு ஐயோ! சகடாஸூரபங்கம் பண்ணின பெருமானுi.டய செயலிலே நீயும் அகப்பட்டாயோ வென்கிறாள்.) 8 | இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய் மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8 | இருளின்,irulil - இருட்டினுடைய திணி,thini - செறிந்த வண்ணம்,vannam - நிறத்தை யுடைய மா,maa - பெரிய நீர்சுழியே,neerchuzhiyae - நீருள்ள சுழியே! போய்,poi - மிகவும் மருள் உற்று,marul utru - மருட்சி யடைந்து இரா பகல்,ira pakal - இரவும் பகலும் துஞ்சிலும்,thunjilum - முடிந்தாலும் நீ துஞ்சாய்,nee thunjaay - நீ ஓய்கின்றாயில்லை; ஆல்,aal - ஆதலால் உருளும் சகடம்,urulum sakadam - உருளுகின்ற சகடத்தைத் திருவடிகளா லுதைத்தொழிந்த பெருமானார்,perumanaar - எம்பெருமானுடைய அருளின்,arulin - க்ருபாகுணத்திலுண்டான பெரு நசையால்,peru nasaiyaal - பேராசையினால் ஆழாந்து,aazhaanthu - ஆழ்ந்து நொந்தாயே,nondhaayae - நோவுபட்டாயோ? |
| 2793 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி யொரியா நின்றது’ என்று கொண்டு நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ வென்கிறாள்.) 9 | நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான் அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9 | நந்தா விளக்கமே,nandhaa vilakkamae - அழிவில்லாத விளக்கே ! அளியத்தாய்,aliyathaay - இரங்கத்தகுதியுடைய நீயும்,neeyum - நீயும் நொந்து ஆரா காதல் நோய்,nondhu aaraa kaadal noi - நோவுபட்டு மாளாத ஆசை நோயானது மெல் ஆவி,mel aavi - மெல்லிய பிராணனையும் உள் உலர்த்த,ul ularttha - உள்ளே உலர்த்த, செம் தாமரை தடகண்,sem thaamarai thadakan - சிவந்த தாமரை மலர் போன்ற பெரிய கண்களையும் செம் கனி வாய்,sem kani vaay - சிவந்த கோவைக்கனி போன்ற வாயையுமுடைய எம்பெருமான்,emperumaan - எம்பெருமானது அம் தண்துழாய் தாமம்,am thandhuzhaay thaamam - அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையின் மீதுள்ள ஆசையால்,aasaiyaal - விருப்பத்தினால் வேவாயே,vevaayae - வேகின்றாயோ? |
| 2794 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இப்படி அளவுகடந்த ஆர்த்தியோடே துடிக்கிற ஆழ்வாரைக் குளிர நோக்கி ஒருவாறு சுகப்படுத்த வந்து நெருங்கிய எம்பெருமானைக் குறித்து, பிரானே! சிலநாள் நலிந்து விடுவதன்றியே மேன்மேலும் மிகவும் நலிகின்ற விரஹவ்யஸநமானது ஏற்கனவே மெலிந்துபோன ஆத்மாவை மிகவுதட நோவு படுத்த இரவும்பகலும் இடைவிடாதே உன்னுடைய குணசேஷ்டிதங்களையே நினைந்து நிநைந்து உள்கரைந்து உருகும்படியாகச் செய்திட்டாய்; இவ்வளவு செய்த நீ இனி ஒருகாலமும் என்னைக் கைவிடாதே கொள்ளவேணும் என்று பிரார்த்திப்பதாய்ச் சொல்லுகிறது இப்பாசுரம்.) 10 | வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய் மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10 | மா வாய் பிளந்து,maa vaay pilandhu - குதிரை வடிவாக வந்த கேசி யென்னு மசுரனுடைய வாயைப் பிளந்தவனும் மருது இடை போய்,maruthu idai poi - இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று அவற்றை முறித்துத் தள்ளினவனும் மண் அளந்த,man alandha - (த்ரிவிக்ரமனாய்ப்) பூமியை அளந்து கொண்டவனுமான மூவா முதல்வா,moo va mutalva - அழியாமுதல்வனே! வேவு ஆரா,vevu aaraa - எவ்வளவு வேவச் செய்தும் த்ருப்தியடையாத வேட்கை நோய்,veṭkai noay - ஆசை நோயானது மெல் ஆவி,mel aavi - மெல்லிய ஆம்மாவை உள் உலர்த்த,ul ularttha - குரத்துவற்றாக வற்றுவிக்க இராப் பகல்,iraab pagal - இரவும் பகலும் ஓவாது,oavaadhu - இடைவிடாமல் உன்பாலே,unpaale - உன்னிடத்திலேயே வீழ்த்து,veelthu - ஈடுபடுத்தி ஒழிந்தாய்,ozhindhaay - உபேக்ஷரித்துவிட்டாய்; (போனது போகட்டும்) இனி,ini - இனிமேல் எம்மை,emmai - எம்மை சோரேல்,sorel - கைவிடவேண்டா. |
| 2795 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இப்படி எம்பெருமானைப் பிரிந்த துயரத்தினால் முடியப்புகுகிற தம்மை உய்வித்தற் பொருட்டு ஸேவை ஸாதித்தருளின எம்பெருமானைக் கண்டு தாம் உஜ்ஜீவித்து, தம்முடைய உஜ்ஜீவனத்தாலே எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வம் ஒளி பெற்ற படியைக்கண்டு சாலவுமுவந்து அவனுடைய ஸர்வேச்வரத்தை நெஞ்சார அநுபவித்து, இப்படி ஸர்வேச்வரனாயிருந்த எம்பெருமான் பக்கலுள்ள ஆசையாலே இத்திருவாய்மொழியை நியதமர்க அநுஸந்திக்குமவர்கள் ஒருநாளும் எம்பெருமானைப் பிரியார்கள்.இது திண்ணம் என்று இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.) 11 | சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11 | சோராத,sooraada - ஒன்றுங்குறையாத எப்பொருட்கும்,eporutkum - எல்லாப் பொருள்களுக்கும் ஆதி ஆம்,aadhi aam - காரண பூதனாகப்பெற்ற சோதிக்கே,sothikke, jyothike - ஒளியுருவனான எம்பெருமானுக்கே ஆராத காதல்,aaraadha kaadal - அடங்காத ஆசையையுடையரான குருகூர்சடகோபன்,kurukoor sadagopan - ஆழ்வார் ஓர்ஆயிரம்,oar aayiram - ஓராயிரமாக சொன்ன அவற்றுள்,sonna avartrul - அருளிச்செய்த பாசுரங்களுக்குள்ளே இவை பத்தும்,ivai pattum - இ;ந்த பத்துப் பாசுரங்களையும் சோரார்,sooraar - மறவாதவர்கள் வைகுந்தம் –,vaigundham, vaikuntam - பரமபதத்தை திண்ணெனவே,thinave - திடமாகவே விடார் கண்டீர்,vidar kandeer - விடாமல் நித்யானுபவம் பண்ணப்பெறுவர்கள். (கண்டீர்—–முன்னிலையசை.) |