| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 556 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 1 | வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! நம்பி, Nambi - ஸகல குண பரிபூர்ணனான நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன் ஆயிரம் வாரணம் சூழ, Aayiram Vaaranam Soozha - ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர வலம் செய்து நடக்கின்றான் என்று எதிர், Valam Seidhu Nadakindran Endru Edhir - பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து) பொன் பூரண குடம் வைத்து, Pon Poorana Kudam Vaithu - பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து புரம் எங்கும், Puram Engum - பட்டணம் முழுதும் தோரணம் நாட்ட, Thoranam Naata - தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை) நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 557 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 2 | நாளை வதுவை மணம் என்று நாளிட்டு பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! நாளை, Naalai - நாளைக்கு வதுவை மணம் என்று நாள் இட்டு, Vadhuvai Manam Endru Naal Ittu - விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ், Paalai Kamugu Parisu Udai Pandhal Keezh - பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை, Kolari Maadhavan Govindhan Enbaan Or Kaalai - நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன் புகுத, Pugutha - பிரவேசிக்க நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 558 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 3 | இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், Indiran Ullitta Devar Kuzham ellam - இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம் வந்து இருந்து, Vandhu Irundhu - (இந்திலத்திலே) வந்திருந்து என்னை மகள் பேசி, Ennai Magal Pesi - என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி மந்திரித்து, Mandhirithu - அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு (பிறகு) அந்தரி, Andhari - ‘துர்க்கை‘ என்கிற நாத்தனார் மந்திரம் கோடி உடுத்தி, Mandhiram Kodi Uduthi - கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி மணம் மாலை சூட்ட, Manam Maalai Soota - பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 559 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 4 | நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! பாப்பனர் சிட்டர்கள் பல்லார், Paapanar Sittargal Pallaar - சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள் நால் திசை, Naal Dhisai - நான்கு திசைகளிலுமிருந்து தீர்த்தம், Theertham - தீர்த்தங்களை கொணர்ந்து, Konarndhu - கொண்டு வந்து நனி நல்கி, Nani Nalki - நன்றாகத் தெளிந்து எடுத்து ஏத்தி, Eduthu Ethi - உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி பூப்புனை கண்ணிப் புனிதனோடு, Poopunai Kanni Punithanodu - (பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு என்றன்னை, Endrannai - என்னை (இணைத்து) காப்பு நாண் கட்ட, Kaapu Naan Katta - கங்கணங்கட்ட நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 560 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 5 | கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! சதிர் இள மங்கையர் தாம், Sathir Ila Mangaiyar Thaam - அழகிய இளம் பெண்கள் கதிர் ஒளி தீபம், Kathir Oli Theepam - ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும் கலசம், Kalasam - பொற் கலசங்களையும் உடன் ஏந்தி, Udan endhi - கையில் ஏந்திக் கொண்டு வந்து எதிர் கொள்ள, Vandhu Edhir Kolla - எதிர் கொண்டு வர மதுரையார் மன்னன், Madhuraiyar Mannan - மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான் அடி நிலை தொட்டு, Adi Nilai Thottu - பாதுகைகளைச் சாத்திக் கொண்டு எங்கும் அதிர, Engum Adhira - பூமி யெங்கும் அதிரும் படியாக புகுத, Pugutha - எழுந்தருள நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 561 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 6 | மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! மத்தளம் கொட்ட, Mathalam Kotta - மத்தளங்கள் அடிக்கவும் வரி சங்கம் நின்று ஊத, Vari Sangam Nindru Oodha - ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும் மைத்துனன் நம்பி மதுசூதனன், Maithunan Nambi Madhusudhanan - மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான் முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து, Muthu Udai Thaamam Nirai Thaazhntha Pandhal Keezh Vandhu - முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள் தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து என்னை கைத் தலம் பற்ற, Ennai Kaithalam Patra - என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 562 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 7 | வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! வாய் நல்லார், Vai Nallaar - நன்றாக ஓதின வைதிகர்கள் நல்ல மறை ஓதி, Nalla Marai Odhi - சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க மந்திரத்தால், Manthirathaal - (அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு பாசு இலை நாணல் படுத்து, Paasu Ilai Naanal Paduthu - பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து பரிதி வைத்து, Parithi Vaithu - ஸமித்துக்களை இட்டு காய்சின வாய் களிறு அன்னன், Kaaichina Vaai Kaliru Annan - மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான் என் கை பற்றி, En Kai Patri - என் கையைப் பிடித்துக் கொண்டு தீ வலம் செய்ய, Thee Valam Seiya - அக்நியைச் சுற்றி வர நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 563 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 8 | இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! இம்மைக்கு, Immaikku - இப் பிறவிக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும், Ezh Ezh Piravikum - மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும் பற்று ஆவான், Patru Aavaan - சரண்யனா யிருப்பவனாய் நம்மை உடையவன், Nammai Udaiyavan - நமக்கு சேஷியாய் நம்பி, Nambi - ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய் நாராயணன், Narayanan - நாராயணனான கண்ண பிரான் செம்மை உடைய திரு கையால், Semmai Udaiya Thiru Kaiyaal - செவ்விய (தனது) திருக் கையினால் தாள் பற்றி, Thaal Patri - (எனது) காலைப் பிடித்து அம்மி மிதிக்க, Ammi Midhikka - அம்மியின் மேல் எடுத்து வைக்க நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 564 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 9 | வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! வரி சிலை வான் முகம், Vari Silai Vaan Mugam - அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான என் ஐமார் தாம், En Aimaar Thaam - எனது தமையன்மார்கள் வந்திட்டு, Vandhittu - வந்து எரிமுகம் பாரித்து, Erimugam Paarithu - அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து முன்னே என்னை நிறுத்தி, Munne Yennai Niruthi - அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி அரி முகன், Ari Mugan - (ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த அச்சுதன், Achudhan - கண்ண பிரானுடைய கை மேல், Kai Mel - திருக் கையின் மேல் என் கை வைத்து, En Kai Vaithu - என்னுடைய கையை வைத்து பொரி, Pori - பொரிகளை முகந்து அட்ட, Mugandhu Atta - அள்ளிப் பரிமாற நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 565 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 10 | குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! குங்குமம், Kungumam - குங்குமக் குழம்பை அப்பி, Appi - உடம்பெல்லாம் பூசி குளிர் சாந்தம், Kulir Saandham - குளிர்ந்த சந்தனத்தை மட்டித்து, Mattithu - மணக்கத் தடவி ஆனை மேல், Aanai Mel - மத்த கஜத்தின் மேலே அவனோடும் உடன் சென்று, Avanodum Udan Sendru - அக் கண்ண பிரானோடு கூடியிருந்து மங்கலம் வீதி, Mangalam Veethi - (விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே வலம் செய்து, Valam Seidhu - ஊர்வலம் வந்து மணம் நீர், Manam Neer - வஸந்த ஜலத்தினால் மஞ்சனம் ஆட்ட, Manjanam Aatta - (எங்க ளிருவரையும்) திருமஞ்சனம் பண்ணுவதாக நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |
| 566 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 11 | ஆயனுக்காக தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே | வேயர் புகழ், Veyar Pugazh - வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய் வில்லிபுத்தூர் கோன், Villiputhoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான) கோதை, Kodhai - ஆண்டாள் தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை, Thaan Aayanukaaga Kanda Kanaavinai - தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து சொல், Sol - அருளிச் செய்த தூய, Thooya - பரிசுத்தமான தமிழ் மாலை ஈர் ஐந்தும், Tamizh Maalai Eer Aindhum - தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர், Vallavar - ஓத வல்லவர்கள் வாயும், Vaayum - நற்குணகளமைந்த நன் மக்களைப் பெற்று, Nan Makkalai Petru - விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று மகிழ்வர், Magizhvar - ஆநந்திக்கப் பெறுவர்கள் |