| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3051 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (எல்லாவுலகங்களையும் நிர்வஹிக்க வல்லவனான எம்பெருமாளை ஏத்தப்பெற்ற வெனக்கு ஒரு காலத்திலும் ஒரு குறையுமில்லை யென்கிறார்.) 1 | வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப் போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1 | வீற்றிருந்து,Veetrirundhu - (பரமபதத்திலே) எழுந்தருளியிருந்து ஏழ் உலகும்,EzhUlagum - எவ்வுலகங்களிலும் தனி கோல் செல்ல வீவு இல் சீர்,Thani kol chella veevu il seer - அத்விதீயமான செங்கோல் நடக்கும்படி ஆற்றல் மிக்கு ஆளும்,Aatral mikku aalum - சாந்தியுடனே ஆள்கின்ற அம்மானை,Ammaanai - ஸ்வாமியாய் வெம் மா பிளந்தான் தன்னை,Vem maa pilandhaan thannai - கொடிய (கேசி என்னும் அசுரனான) குதிரையை வாய்பிளந்து கொன்ற பெருமானை போற்றி என்றே,Pottri endrae - போற்றி போற்றி என்று வாழ்த்திக்கொண்டே கைகள் ஆர தொழுது,Kaigal aara thozhudhu - கைகளின் விடாய் தீரும்படி அஞ்சலி பண்ணி சொல் மாலைகள்,Sol maalaihal - சொற்களாகிற மாலைகளை ஏற்ற,Aetra - (அவன் உகக்கும்படி) ஸமர்ப்பிக்கைக்கு நோற்றேற்கு,Notraeku - புண்ணியஞ் செய்துள்ள எனக்கு இனி,Ini - இனிமேல் எழுமையும்,Ezhumaiyum - ஏழேபடியான ஜன்மங்களிலும் என்ன குறை,Enna kurai - என்ன குறையுண்டாம்! |
| 3052 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாசுரத்திற் சொன்ன மேன்மைக்கு அடியான பிராட்டி ஸம்பந்தத்தை யுடையவனை ஸகல பாதங்களும் தீரும்படி புகழப் பெற்றனென்கிறார்.) 2 | மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன் செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2 | மைய கண்ணான்,Maiya kannaan - மை யெழுதப்பட்ட கண்ணை யுடையனாய் மலர்மேல் உறைவாள்,Malarmel uraivaal - தாமரைமலரிலே வஸிப்வபளான லக்ஷ்மி உறை,Urai - நித்யவாஸம் பண்ணப்பெற்ற மார்பினன்,Maarbinan - மார்பையுடையனாய் செய்ய கோலம் தட கண்ணன்,Seiyya kolam thada kannan - சிவந்து அழகையுடைத்தாய் விசாலமான திருக் கண்களையுடையனாய் விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரி நாதனை எம் பெருமானை மொய்ய சொல்லால்,Moyya sollaal - செறிந்த சொற்களாலே சமைந்ததாய் இசை,Isai - இசையை யுடைத்தான மாலைகள்,Maalaigal - மாலைகளாலே வியல் ஞாலத்து,Viyal gnaalathu - அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே வெய்ய நோய்கள் முழுதும்,Veyya noigal muzhudhum - கொடிய க்லேசங்கள் அனைத்தும் வீய,Veeya - நசிக்கும்படியாக ஏத்தி,Yethi - துதித்து உள்ள பெற்றேன்,Ulla petren - என்னெஞ்சாலே அநுபவிக்கப் பெற்றேன். |
| 3053 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (திருவாய்மொழி அடிமை செய்யப்பெறுகையால் தமக் குண்டான ஆனந்தம் எம்பெருமானுடைய ஆனந்தத்தையும் அதிசயித்தது என்கிறார்.) 3 | வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்; வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3 | வீவு இல் இன்பம்,Veeyu il inbam - அழிவில்லாத ஆனந்தமானது மிக எல்லை நிகழ்ந்த,Miga ellai nigazhndha - மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற (படியினாலே) நம் அச்சுதன்,Nam achyudhan - அச்சுதன் என்னும் திருநாமத்தையுடையனாய் வீவு இல் சீரன்,Veeyu il seeran - முடிவில்லாத வைலக்ஷண்யத்தையடையனாய் மலர்கண்ணன்,Malarkannan - தாமரை மலர்போன்ற கண்களையடையனாய் விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - விண்ணோர்க்குத் தலைவனானவனை லீவு இல் காலம்,Leeyu il kaalam - ஒழிவில்லாத காலமெல்லாம் இசை மாலைகள்,Isai maalaigal - இசைமிக்க சொல்மாலைகளாலே ஏத்தி,Yethi - துதித்து மேவ பெற்றேன்,Meva petren - கிட்டப்பெற்றேன்; மேவி,Mevi - கிட்டி வீவு இல்,Veeyu il - முடிவில்லாத இன்பம்,Inbam - ஆனந்தத்தினுடைய மிக எல்லை,Miga ellai - முடிவான எல்லையிலே நிகழ்ந்தனன்,Nigazhndhanan - இராநின்றேன். |
| 3054 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (நித்ய ஸூரி நாதனாயிருந்து வைத்து நித்ய ஸம்ஸாரியான என் பக்கலில் பண்ணி யருளின மஹோபகாரம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 4 | மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்; ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4 | மேவி நின்று,Mevi ninru - நெஞ்சு பொருந்தியிருந்து தொழுவார்,Thozhuvaar - அனுபவிப்பாருடைய வினை போக,Vinai poga - பாபங்கள் யாவும் நசிக்கும்படி மேவும்,Mevum - தான் அவர்களோடே கலக்கின்ற பிரான்,Piraan - மஹோபகாரகனாய் துர்வி அம் புள்,Thurvi am pull - சிறகுகளையுடைய அழகிய பெரிய திருவடியை உடையான்,Udaiyaan - ஊர்தியாகவுடையனாய் அடல் ஆழி,Adal aazhi - போர்வல்ல திருவாழியை யுடையனான அம்மான் தன்னை,Ammaan thannai - ஸர்வேச்வரனை நா இயலால்,Naa iyalaal - நாவினுடைய தொழிலாலே இசை மாலைகள்,Isai maalaigal - இசைரூபமான் மாலைகளையிட்டு ஏத்தி நண்ண பெற்றேன்,Yethi nanna petren - ஏத்துகையாகிய நண்ணுதலைப் பெற்றேன்; ஆவி,Aavi - எனக்கு அந்தாராத்ம பூதனான எம்பெருமான் என் ஆவியை,En aaviyai - என்னுடைய ஆத்மாவை செய்த ஆற்றை,Seydha aatrai - இங்ஙனம் செய்த ப்ரகாரத்தை யான் அறியேன்,Yaan ariyen - நான் அறியமாட்டேன். |
| 3055 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வஸூ தேவ க்ருஹே அவதீர்ணனாய் -அர்ஜுனன் வ்யாஜத்தாலே சர்வாத்மாக்களுக்கும் சகல வேதார்த்த ப்ரகாசகனாய் இருந்த தன்னை எனக்கு சாத்மிக்க சாத்மிக்கக் காட்டித் தந்து அருளினான் – நானும் அவனைக் கண்டு காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியும் படி திருவாய் மொழி பாடி நாளும் மகிழ்வு எய்தினேன் -என்கிறார்) 5 | ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்; காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5 | ஆற்ற,Aatra - பொறுக்கப்பொறுக்க நல்ல வகை,Nalla vagai - விலக்ஷ்ணமாயுள்ள (ஜ்ஞாந பக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற) ப்ரகாரங்களை காட்டும்,Kaattum - அடியார்களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற அம்மானை,Ammaanai - சர்வேச்வரனாய் அமரர் தம் ஏற்றை,Amarar tham etrai - நித்தியஸூரிநாதனாய் எல்லாப் பொருளும்,Ellaap porulum - எல்லா அர்த்த விசேஷங்களையும் (கீதோபநிஷந் முகத்தாலே) விரித்தானை,Viriththaanai - விரிவாக உபதேசித்தவனான எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை வினை,Vinai - பாபங்களும் நோய்கள்,Noykal - பெரிய வ்யாதிகளும் காற்றின் முன்னம் கடுகி,Kaatrin munnam kadugi - காற்றிலும் வேகமாக ஓடிப்போய் கரிய,Kariya - வெந்துபோம்படியாக மாற்றம் மாலை புனைந்து,Maatram maalai punainthu - சொல்மாலையைத் தொடுத்து ஏத்தி,Yethi - துதித்து நாளும்,Naalum - ஸர்வகாலமும் மகிழ்வு எய்திளேன்,Magizhvu eythilaen - மகிழ்ச்சியைப்பெற்றேன் |
| 3056 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (‘ஆழ்வீர் ! உமக்கு வேண்டுவது என் ? என்று எம்பெருமான் கேட்க, இது வரையில் நான் பெறாதே இனி ஸாதித்துத் தரவேண்டுவதொரு பொருளுண்டோ வென்கிறார்.) 6 | கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6 | கரிய மேனி மிசை,Kariya meni misai - (திருக்கண்ணின்) கூரிய விழியின் மேலே வெளிய நீறு,Veliya neeyru - அஞ்சன நீற்றினை சிறிதே இடும்,Siridhey idum - அளவாக அணிகிற பெரிய கோலம்,Periya kolam - அளவிறந்த அழகினையுடைய தடம் கண்ணன்,Thadam kannan - விசாலமான திருக்கண்களையுடையனாய் விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனை உரிய சொல்லால்,Uriya sollaal - (இவ்வழகுக்குத்) தகுதியான சொற்களாலே இசை மாலைகள்,Isai maalaihal - இசைவடிவான மாலைகளையிட்டு ஏத்தி,Yethi - துதித்து உள்ள,Ull - அநுபவிக்க பெற்றேற்கு எனக்கு,Petrerku enakku - பெற்றவனான எனக்கு இன்று தொட்டும்,Indru thottum - இன்று தொடங்கி இனி என்றும்,Ini endrum - இனிமேலுள்ள காலம் எல்லாம் அரியது உண்டோ,Ariyadhu undo - துர்லபமாயிருப்பதும் ஒன்றுண்டோ |
| 3057 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டு மினியென்றுமே” என்று செருக்குத் தோற்றப் பேசினார். இத்தகைய செருக்கு எத்தாலே வந்ததென்ன, எம்பெருமானருளாலே வந்த தென்கிறாரிப் பாட்டில்.) 7 | என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக் குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7 | என்றும்,Endrum - பரத்வம் முதலான ஸர்வாவஸ்தைகளிலும் ஒன்று ஆகி,Ondru aagi - ஒரேப்ரகாரமுடையனாய்க் கொண்டு ஒத்தாரும் மிக்கார்களும்,Ottaaru mikkarkalum - ஸமராயும் அதிகராயும் இருப்பார் தன்தனக்கு,Tandanakku - தனக்கு இன்றி நின்றானை,Indri nindraanai - இல்லாமலிருப்பவனாய் எல்லா உலகும் உடையான் தன்னை,Ella ulagum udaiaan thannai - எல்லாவுலகத்தையும் தனக்கு •••ஷமாகவுடையனாய் மழை,Mazhai - மழையை குன்றம் என்றால்,Kunram endraal - மலை ஒன்றினாலே காத்த பிரானை,Kaatha piranai - தடுத்த மஹோபகாரகனான வனைக்குறித்து சொல் மாலைகள்,Sol maaligal - சொல்மயமான மாலைகளை நன்று சூட்டும் விதி,Nanru soottum vidhi - அவன் ஆதரித்துச் சூடும்படி சூட்டுகைக்குற்ற பாக்கியத்தை எய்தினம்,Yeidinam - கிட்டப்பெற்றோம்: (ஆதலால்) நமக்கு என்னகுறை,Namakku ennagurai - நமக்கு ஒருகுறை யுண்டோ? |
| 3058 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஆழ்வார் தம்பக்கலிலே எம்பெருமானுக்குண்டான அபிநிவேஸத்தைக் கண்டு, இப்படிப்பட்ட எம்பெருமானைக் கவி பாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் என்கிறார்.) 8 | நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8 | நமக்கும்,Namakkum - நித்ய ஸம்ஸாரிகளான நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும்,Poovin misai nangaikkum - தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும் இன்பனை,Inbanai - இன்பமளிப்பவனும் ஞாலத்தார் தமக்கும்,Jnaalathaar thamakkum - லீலாவிபூதியிலுள்ளார்க்கும் வானத்தவர்க்கும்,Vaanathavarkkum - பரமபத வாசிகளுக்கும் பெருமானை,Perumaanai - தலைவனும் தண் தாமரை சுமக்கும்,Than thaamarai sumakkum - குளிர்ந்த தாமரை மலர்சுமக்கும்படியான பாதம் பெருமானை,Paadham perumaanai - திருவடிகளை யுடையனுமான ஸர்வேச்வரன் விஷயத்தில் சொல்மாலைகள்,Solmaaligal - திருவாய்மொழியை சொல்லும் ஆறு,Sollum aaru - சொல்லும்படியாக அமைக்க வல்லேற்கு,Amaikka valleerkku - அமைதியைப்பெற்ற எனக்கு அகல்வானத்து,Akalvaanathu - அகன்ற நித்ய விபூதியிலும் யாவர் இனிநிகர்,Yaavar iningar - யார்தான் இனி ஒப்பாவார்? |
| 3059 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இப்பாட்டு ஆழ்வாருடைய ஸர்வ விலகஷ்ணமான பெருமையைக் காட்டுகின்றது. பரமபதத்திலுள்ள நித்யர்களென்ன. முக்தர்களென்ன, இவ்விபூதியிலுள்ள பராசர பாராசர்ய வால்மீகி ப்ரப்ருதிகளான மஹரிகளென்ன, ஆகிய இவர்களெல்லாரிற் காட்டிலும் ஆழ்வார்க்குண்டான வைலக்ஷ்ண்யம் இப்பாசுரத்தில் வெளியாகின்றது. எம்பெருமானுடைய பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற எல்லா நிலைமைகளிலும் புக்குக் கவி சொல்ல வல்ல வெனக்கு எதிருண்டோ வென்கிறார்.) 9 | வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை, கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை, வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9 | வானத்தும்,Vaanathum - ஸ்வர்க்கத்திலும் உள்வானத்து உம்பரும்,Ulvaanathu umparum - அதுக்குள்ளாகப் பெரியதாயிருக்கிற மஹர்லோகாதிகளிலும் மண்ணுள்ளும்,Mannullum - பூமிக்குள்ளும் மண்ணின் கீழ் தானத்தும்,Mannin keezh thaandhum - பூமியின் கீழ் இருக்கிற பாதாள உலகத்திலும் எண் திசையும்,Yen thisaiyum - இவற்றிலுண்டான எட்டுவிதமான பதார்த்தங்களிலும் தவிராது,Thaviraadhu - ஒன்றிலும் வழுவாதபடி நின்றான் தன்னை,Ninraan thannai - வ்யாபித்து நிற்பவனும் கூன் நல் சங்கம்,Koon nal sangam - வளைந்தவடிவால் அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை தட கையவனை,Tada kaiyavane - பெரிய திருக்கையிலுடையவனும் குடம் ஆடியை,Kudam aadiyai - குடக்கூத்தினாலே ஸகல ஜனங்களையும் வசீகரித்தவனும் வானம் கோனை,Vaanam konai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான ஸர்வேச்வரன் வியத்திலே கவி சொல்ல வல்லேற்கு,Kavi solla valleerku - கவி பாடவல்ல எனக்கு இனி மாறு உண்டே,Ini maaru undae - இனி எதிர் உண்டோ? |
| 3060 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக் கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ வென்கிறார்.) 10 | உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும் கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10 | உண்டும்,Undum - (ப்ரளயத்திலே) உண்டு வயிற்றிலே வைத்தும் உமிழ்ந்தும்,Umizhndhum - பிறகு வெளி நாடுகாண உமிழ்ந்தும் கடந்தும்,Kadandhum - (மற்றொருகால்) அளந்து காற்கீழேயிட்டும் இடந்தும்,Idandhum - (அவாந்தர ப்ரளப்த்திலே வராஹ ரூபியாய்) இடந்தெடுத்தும் கிடந்தும்;,Kidandhum; - (ஸ்ரீராமாவதாரத்திலே) கடற்கரையிலே கிடந்தும் நின்றும்,Ninrum - இராவணவதத்தின் பிறகு தேவர்கட்குக் காட்சி கொடுத்துநின்றும் கொண்ட கோலத்தொடு,Kondha kola thodu - மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணின கோலத்தொடே வீற்றிருந்தும்,Veevirundhum - எழுந்தருளியிருந்தும் மணம் கூடியும்,Manam koodiyum - பதினோராயிரம் ஆண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிப்பிராட்டி (விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தும்) கண்ட ஆற்றால்,Kanda aatral - இப்படி ப்ரத்யக்ஷ்மாகக் கண்ட சேடிதங்களால் உலகு தனதே என,Ulagu thanadhe ena - உலகம் தனக்கே பேஷம் என்று நாடாகச்சொல்லும்படி நின்றான் தன்னை,Ninran thanai - நின்ற ஸர்வேச்வரன் விஷயத்தில் வண் தமிழ்,Van Tamil - அழகிய தமிழ்ப்பிரபந்தத்தை நூற்க,Noorka - தொடுக்கைக்கு நோற்றேன்,Noottren - புண்ணியம் பண்ணினேன்: (இத்திவ்யப்ரந்தமானது) அடியார்க்கு,Adiyarku - எம்பெருமானடியார்கட்கு ளஇன்பம் மாரி,Inbam maari - ஆனந்த மழைபொழியும் மேகமாயிரா நின்றது. |
| 3061 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11 | மாரி மாறாத,Maari maaraadha - மழைதப்பாதபடியினாலே தண்,Than - குளிர்ந்து அம்,Am - அழகியதான வேங்கடம் மலை,Vengadam malai - திருவேங்கடம்மலையிலேயுள்ள அண்ணலை,Annalai - ஸ்வாமி விஷயமாக வாரி மாறாத,Vaari maaraadha - ஜலஸம்ருத்தி குறையாத பை பூ பொழில் சூழ்,Pai poo pozhl sooL - பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட குருகூர் நகர்,Kurukoor nagar - திருநகரியில் (அவதரித்த) காரி மாறன் சடகோபன்,Kaari maaran sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தில் இப்பத்தால்,Ippathaal - இப்பத்துப் பாசுரங்களினால், வேரி மாறாத,Veeri maaraadha - பரிமளம் அறாத பூ மேல் இருப்பாள்,Poo mel iruppaal - தாமரை மலரிலே நித்ய வாஸம் பண்ணுகிற பிராட்டி வினை தீர்க்கும்,Vinai theerkkum - எல்லாப் பாபங்களையும் போக்கியருள்பவன் |