Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: வெள்ளைச் சுரிசங்கொடு (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3359திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (பராங்குசநாயகியானவள் தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரியதிருவடித் திருநாள் நடந்து செல்லுகிறபடியை பேசி, தென்திருப்பபேரையிலே போகவேணுமென்று தனக்குப் பிறந்த துணிவைத் தாய்மாரிடம் கூறுகின்றாள்.) 1
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே. -7-3-1
அன்னை மீர்காள்!,Annai meerkal! - தாய்மார்களே
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி,Vellai suri sangodu azhi endhi - வெண்ணிறத்தையும் சுரியையு முடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் ஸூதர்சநத்தையும் ஸூதர்நசத்தையும் ஏந்திக்கொண்டு
தாமரைக் கண்ணன்,Thaamarai kannaan - செந்தாமரைக் கண்ணனான பெருமான்
என் நெஞ்சின் ஊடே,En nenjin oode - எனது நெஞ்சினுள்ளே
புள்ளே கடாகின்ற ஆற்றை,Pulle kadaagindra aatrai - நடத்துகிறபடியை
காணீர்,Kaaneer - நீங்கள் அறிகினறீர்களில்லையே!
என்சொல்லி சொல்லு கேன்,En solli sollu kaen - இவ்வநுபவத்துக்கு என்ன பாசுரமிட்டு நான் சொல்லுவேன்;(இனி நான் செய்ய நினைத்ததாவது)
வெள்ளம் சுகம் அவன் வீற்றிருத்த,Vellam sugam avan veettrithu - ஆனந்த வெள்ளமே வடிவெடுத்தவானான பெருமான் வீற்றிருக்கு மிடமாயும்
வேதம் ஒலியும் விழா ஒலியும் பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் அறா,Vedam oliyum vizha oliyum pillai kulaam vilaiyaattu oliyum araa - வேதகோஷமும் உத்ஸவகோஷமும் சிறுபிள்ளைகளின் விஹார கோலாஹலமும் இடையறாமலிருக்கப் பெற்ற தாயுமுள்ள
திருப்பேரெயில்,Thirupereayil - திருப்பேரெயில் என்னுந் திருப்பதியிலே
நான் சேர்வன்,Naan servan - நான் சென்று சேரக்கடவேன்.
3360திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாள் கீழ்ப்பாட்டில் அவ்வளவிலே இத்தலைமகளுக்கு ஹிதஞ் சொல்லுகைக்காகத் தாய்மாரும் தோழிமாரும் அயற் சேரியுள்ளாருமாகத் திரண்டு வந்து சேர்ந்து நிற்க, உங்களுடைய ஹிதவார்த்தைகளைக் கேட்க அவகாசமில்லாதபடி. மகரநெடுங்குழைக்காதன் பக்கலிலே அவகாஹித்த என்னெஞ்சை மீட்கமாட்டுகின்றிலேன் காண்மின் என்கிறாள்.) 2
நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2
நானம் கருகுழல் தோழி மீர்காள்,Naanam karukuzhal thozhi meerkal - ஸூகந்தமணிந்த கருங்குழலையுடைய தோழிகளே!
அன்னையர் காள்,Annaiyar kaal - தாய்மார்களே!
அயல் சேரியீர் காள்,Ayal seriyir kaal - (செய்தி வினவ வந்த) அக்கம் பக்கத்தவர்களே!
இத்தினி நெஞ்சும நான் காக்க மாட்டேன்,Itthinin nenjum naan kaakka maattean - ஸவாந்திரமான இந்த நெஞ்சை நான் அடக்கியாள மாட்டுகின்றிலேன்;
இது என்வசம் அன்று,Idhu envasam anru - இந்த நெஞ்சு எனக்கு விதேயமன்று;
இரா பகலும்,Ira bagalum - இரவும் பகலும்
போய்;,Poi; - என்னை விட்டுப்போய்
தேன் மொய்ந்த பூ பொழில்,Then moyndha poo pozhil - வண்டுகள் மொய்த்த பூஞ்சோலைகளை யுடைத்தாய்
தண் பணை சூழ்,Than panai sooel - குளிர்ந்த நீர் நிலங்கள் சூழ்ந்திருக்கிற
வானம் பிரான்,Vaanam piran - தென் திருப்பேரெயில் வீற்றிருந்த; பரமபத நிலயனும்
மணிவண்ணன்,Manivannan - நீலமணி வண்ணனுமான
கண்ணன்,Kannan - கண்ணபிரமானுடைய
செம் கனி வாயின் திறத்தது,Sem kani vaayin thirathadhu - சிவந்த கனிபோன்ற அதரத்திலே படிந்திட்டது.
3361திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! இப்படியும் நானமற்றுச் சொல்லுவது தகுதியேவென்று தோழி கேட்க: தோழீ! நான் என்செய்வேன்? எனது நெஞ்சானது தென் திருப்பேரை யெம்பெருமானுடைய திருப்பவளத்தழகிலே போய்ப்படிந்தும் திருவபிஷேகத்தினழலே தாழ்ந்தும், திருவாழி திருச்சங்குகளே யேந்தியிருக்குமழகுகண்டு உகந்தும், மற்றோரழகுக்கு உரித்தரல்லாதபடி தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் நங்கள் பிரானுக்கு நாணும் நிறைவுமிழந்தது; இனி யெனக்கு நாணும் நிறைவுமுண்டாவதற்கு வழியேது? என்கிறாள் தலைவி.) 3
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3
தோழீ,Thozhi - வாராய் தோழியே!
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
செம் கனி வாயின் திறத்தது ஆயும்,Sem kani vaayin thirathadhu aayum - செவ்விய கனி போன்ற திருப்பவளத்திலே அபிநிவேசம் கொண்டதாயும்
செம் சுடர் நீள்முடிவு தாழ்ந்தது ஆயும்,Sem sudar neelamudivu thaazhndhadhu aayum - செவ்விய சுடரையுடைய நீண்ட கிரீடத்திலே ஈடுபட்டதாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்,Sangodu chakkaram kandu ukanthum - திருவாழி திருச்சங்குளைக் கண்டு உவந்ததாயும்
தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்,Thaamarai kangalukku atru theerndhum - தாமரை போன்ற திருக்கண்களுக்கு அநந்யார் ஹமாகியும்
திங்களும் நாளும் விழா அறாத,Thingalum naalum vizha araadhu - மாஸோத்ஸவர்களும நித்யோத்ஸவங்களும் இடையறாத
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த,Then thiruppereyil veettrirundha - தென் திருப்பேரைப் பதியிலே யெழுந்தருளியிருக்கின்ற
நங்கள் பிரானுக்கு,Nangal piranuku - எம்பெருமான் விஷயத்திலே
நாணும் நிறையும் இழந்தது,Naanum niraiyum izhandhadhu - வெட்கமும் அடக்கமும் தொலையப் பெற்றது.
3362திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம்-அவனுடைய குண சேஷ்டிதங்களிலே அகப்பட்ட என் நெஞ்சம் அங்கே போயிற்று – இனி யாரைக் கொண்டு போது போக்குவது என்று நியமிக்கிற தாயாரைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 4
இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4
அன்னையர்காள்,Annaiyarkaal - தாய்மார்களே!
இழந்த எம்மாமை திறத்து போன,Izhandha emmaamai thirattu poana - ஏற்கனவே யிழந்த எனது மேனி நிறத்தைக் திருப்பிக் கொணர்வதாகப் புறப்பட்டுச் சென்ற
என் நெஞ்சி னாரும்,En nenjin aarum - எனது நெஞ்சென்கிற பெரியாரும்
அங்கே ஒழிந்தார்,Angae ozhindhaar - அத்தலைக்கே அற்றுத் தீர்ந்தார்;
இனி,Ini - அந்தரங்கமான நெஞ்சையுமிழக்கப் பெற்ற பின்பு
உழந்து,Uzhandhu - வருத்தி
ஆரை கொண்டு,Arai kondu - யாரைத் துணையாகக் கொண்டு
என் உசாகோ,En usaago - எந்த வார்த்தையைச் சொல்லித்தரிப் பேன்!;
ஓதம் கடல் ஒலி பால,Odham kadal oli paal - அலைபெறியும் கடலின் ஒலிபோல
எங்கும் எழுந்த,Engum elundhu - எல்லாவிடத்திலுங்கிளர்ந்த
நல் வேதத்து ஒலி,Nal vedathu oli - ஸாமவேத கோஷமானது
நின்று ஓங்கு,Nindru oongu - நிரந்தரமாகக் கிளர்ந்து
தென் திருப்பேரெயில்விற்றிருந்த;,Then thiruppereilvitrirundha; - தென் திருப்பேரெயில்விற்றிருந்த;
முழங்கு சங்கம் கையன் மாயத்து,Muzhangu sangam kaiyan maayathu - முழங்குகின்ற சங்கத்தைத் திருக்கையிலே யுடையனான பெருமானது மாய்ச் செயல்களிலே
ஆழ்ந்தேன்,Aazhndhaen - அவகாஹித்தேன்;
என்னை முனிந்து என,Ennai munindhu en - (இனி) என்னைச் சீறு வதனால் என்ன பலனுண்டாம்?
3363திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (தென்திருப்பேரெயிலிலே என்னைக் கடுகக் கொண்டு சென்று சேர்ப்பதே தாய்மார்களான் வுங்களுக்கு உற்றது என்கிறாள்.) 5
முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5
அன்னைமீர்கள்,Annaimirkal - தாய்மார்களே!
முனிந்து சகடம் உடைத்து,Munindhu sakadam udaittu - கோபத்தினால் சகடா சுரைனை யுதைத் தொழித்தவனும்
மாயம் பேய்முலை உண்டு,Maayam peymulai undu - வஞ்சகப்போய் வடிவாக வந்து பூதனையின் முலையை யுண்டு அவளை முடித்தவனும்
மருதிடை போய்,Maruthidai poi - இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து செறைவனும்
கனிந்த விளவுக்கு கனறு எறிந்த –,Kanindha vilavukku kanru erindha - - விளங்கனியின் மீது வத்ஸாஸூரனை வீசியெறிந்தவனுமான
கண்ணபிரானுக்கு,Kannapiranuku - கண்ணபிரான் விஷயத்திலே
என் பெண்மை தோற்றேன்,En penmai thoraen - என்து பெண்மைக்குரிய அடக்கம் முதலானவற்றை பெற்றேன்;
இனி,Ini - இப்படியான பின்பு
முனிந்து என் செய்தீர்,Munindhu en seytheer - என்னைச் சீறுவதனால் என்ன லாபம் பெறப்பார்க்கிறீர்கள்;
அவன் முன்னி வந்து வீற்றிருந்த,Avan munni vandhu veettrirundhu - அப்பெருமான் முற்கோலி வந்து எழுந்தருளியிருக்குமிடமான
கனிந்த பொழில் திருபேரெயிற்கே,Kanindha pozhil thirupereikke - பரிபக்குவமான சோலைகளையுடைய திருப்பேரெயில் தலத்திற்கே
என்னை,Ennai - என்னை
காலம்பெற காட்டுமின்,Kaalamperra kaattumin - காலதாமதமில்லாமல் கொண்டு போய்க் காணச் செய்மின்.
3364திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நீங்கள் ஆறி இருக்கும் அளவில்லாத படி எனக்கு அபி நிவேசம் மிகா நின்றது -சடக்கென அங்கே கொண்டு போய் விடுங்கோள்-என்கிறாள்.) 6
காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6
(அன்னைமீர் காள),(Annaimirkal) - தாய்மார்களே!,
நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான்,Neelam mugil vannathu emberumaan - நீலமேக நிறத்தனான எம்பெருமான்
முன்னே வந்து நிற்கும்,Munne vandhu nirgum - என் கண்முன்னே வந்து நிற்பதாகக் காண்மின்றான்; (ஆனால்)
என் கைக்கும் எய்தான்,En kaikkum eydhaan - என் கைக்கு எட்டாதபடி தூரஸ்தானாகவே யிராநின்றாள்;
காதல் கடலின்மிக பெரியது,Kaadhal kadal inmiga periyadhu - எனது காதலோ வென்னில் கடலிற் காடடிலும்மிகவும் பெரியதாக வுள்ளது;
ஆல்,Aal - அந்தோ!;
அவன்,Avan - அப்பெருமான்
ஞாலத்து வந்து வீற்றிருந்த,Nyaalathu vandhu veettrirundha - இந்நிலவுலகத்தில் வந்து எழுந்தருளியிருக்கு மிடமாய்
நால் மறையாளரும் வேள்வி ஓவா,Naal maraiyaalarum velvi ova - நான்கு வேதங்களையும் கரை கண்டவர்கள் வைதிகாநுஷ்டானங்களை நிரந்தரமாக நிகழ்த்துமிடமாய்
கோலம் செந்நெற்கள் கவரி வீசும்,Koolam chennetrukkaal kavari veesum - அழகிய செந்நெற்பயிர்கள் கவரிபோலே அசையப் பெற்றதாய்
கூடு புனல்,Koodu punal - தீர்த்த ஸம்ருத்தயையு டையதான்
திருப்பேரெயிற்கே –,Thiruppereikke – - திருப்பேரெயில் தலத்திற்கே
காலம் பெற என்னை காட்டுமின்கள்,Kaalam pera ennai kaattumingal - சீக்கிமாக என்னைக் கொண்டு போய்க் காட்டுங்கள்.
3365திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம்.) 7
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7
பேர் எயில் சூழ்,Per eyil sooel - பெரிய மதில்களாலே சூழப்பட்டு
கடல்,Kadal - கடலிடத்தே யுள்ளதான
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்காபுரியை
செற்ற,Sera - நீறாக்கி யொழித்த
பிரான்,Piran - எம்பெருமான்
வந்து வீற்றிருந்த,Vandhu veettrirundha - வந்து எழுந்தருளியிருக்குமிடமான
பேர் எயிற்கே,Per eyirke - திருப்பெரெயில் தலத்திற்கே
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
புக்கு,Pukku - புகுந்து
நாடி,Naadi - அவனைத் தேடி
பேர்த்து எங்கும் வரகாண மாட்டேன்,Perthu engum varakaana maattean - மீண்டு ஒரிடத்திற்கும் வரக்காணேன்:
தோழி –!.,Thozhi –!. - வாராய் தோழியே
இனி இங்கு யாரை உடையம்,Ini ingu yaarai udaiyam - இனி இந்நிலைமையில் யாரைக் துணையாக வுடையோம்?
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,En nenjam koova vallaarum illai - (என்னை விட்டுப்போன) எனது நெஞ்சை அழைத்துத் தரவல்லாருமில்லை;
இனி,Ini - நெஞ்சம் உதவாதே நீயும் தளர்ந்தபின்பு
ஆரை கொண்டு என்சாதிக் கின்றது,Arai kondu enchaadikindradhu - யாரைத் துணைகொண்டு என்ன பிரயோஜனம் ஸாதிக்கத் தக்கதாயிருக்கின்றது? (ஒன்று மில்லையே.)
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்,En nenjam kandadhuvae kandeen - (ஆகையாலே) எனது நெஞ்சு கண்ட விஷயத்தையே நானும் கடைப்படித்தேன்.
3366திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஊரார் பழி சொல்வதே பெருவாக எனக்கு வளர்ந்து செல்லுகின்ற காதாலனது ஸகலலோகங்களையும் கபளீகரித்துச் செல்லா நின்றது; ஆனபின்பு அவனிருந்த திருப்பேரையிலே சென்றல்லது நிற்க மாட்டேனென்கிறாள்.) 8
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8
கண்டதுவே கொண்டு,Kandadhuvae kondu - வெளியில் காணக்கூடிய எனது மேனி நிறமாறுதல் முதலிய வற்றையே கொண்டு
எல்லாரும்,Ellaarum - தாய்மார் ஊரர் ஆகிய எல்லாரும்
கூடி,Koodi - ஒன்றுசேர்ந்து
கார் கடல் வண்ணனோடு என் திறத்து கொண்டு,Kaar kadal vannanodu en thirathu kondu - கருங்கடல் வண்ணனான எம்பெருமானுக்கும் எனக்கும் சேர்க்கை யுண்டாதாகக் கொண்டு
அலர் தூற்றிற்றது முதல் ஆ கொண்ட,Alar thoottrittadhu mudhal aa kondu - பழி தூற்றினதுவே முதலாக இடங்கொண்ட
என் காதல் உரைக்கில்,En kaadhal uraikgil - எனது காதலைப பாசுரமிட்டுச் சொல்லிப் பார்க்கில்
தோழீ,Thozhi - தோழீயே!,
மண் திணி ஞாலமும்,Man thini nyaalamum - (என்காதல் எப்படிப் பட்டதென்னில்) மண் செறிந்த பூமியும்
ஏழ் கடலும்,Ezhu kadalum - (அதைச் சூழ்ந்த) ஸப்த ஸகாரங்களும்
நீள் விசும்பும்,Neel visumbum - இதெல்லாவற்றுக்கும் இடங்கொடுக்கும் மஹாவகாசமான ஆகாதமும் ஆகிய இத்தனைக்கும்
கழிய,Kazhiya - அவ்வருகுபட்டதாய்
பெரியது ஆல்,Periyadhu aal - பெருந்திராநின்றது; (ஆனபின்பு)
தெண் திரை சூழ்ந்து,Then thirai sooelndhu - தெளிந்த அலைகளாலே சூழப்பட்டு
அவன்வீற்றிருந்த,Avan veettrindha - அப்பெருமான்வீற்றி ருக்குமிடமான
தென் திருபேர் எயில்,Then thiruper eayil - தென் திருப்பேரைப் பதியை
சென்று சேர்வன்,Sendru servan - எனது தாபம் தீரும்படி சென்று சேரக்கடவேன்
3367திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரளய ஆபத் சகனானவன் வர்த்திக்கிற தேசத்திலே சென்று புகத் தவிரேன் – நீங்கள் என்னைத் தேற்றி யுரைக்கிற இதுக்கு பிரயோஜனம் இல்லை என்று தோழிமாரையும் தாய்மாரையும் பார்த்துச் சொல்லுகிறாள்.) 9
சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9
என்னுடைய தோழிமீர்காள்,Ennudaiya thozhimeerkal - எனக்கு ஹிதஞ் சொல்லுகின்ற தோழிமார்களே!
அன்னையர்காள்,Annaiyarkal - (அப்படிப்பட்ட) தாய்மார்களே!
என்னை தேற்றவேண்டா,Ennai thettravenda - (எல்லை கடந்த) என்னைத் தேற்றுவதில் நீங்கள் முயல வேண்டா
இதற்கு,Idharku - எனது இந்த நிலைமைக்கு
நீர்கள் உரைக்கின்றது என்,Neerkal uraikkindradhu en - நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்ன இருக்கிறது?
எனக்கு நெஞ்சும் நிறைவும் இங்குஇல்லை,Enakku nenjum niraiyum inguillai - எனது நெஞ்சும் அடக்கம் முதலிய குணங்களும்; இங்கில்லை யன்றோ; (ஆதலால்)
கார் வண்ணன்,Kaar vannan - நீல வண்ணனும்
கார் கடல் ஞாலம்; உண்ட,Kaar kadal nyaalam; unda - கருங்கடல் சூழ்ந்த ஜகத்தை (ப்ரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனுமான
கண்ண பிரான்,Kann piran - ஸ்ரீக்ருஷ்ணபகவான்
வலது வீற்றிருந்த,Valathu veettrirundha - நித்ய ஸந்நிதி பண்ணியிருக்குமிடமாய்
ஏர் வளம்,Aer valam - ஏரினுடைய மிகுதியை யுடைத்தாய்
ஒண் கழனி பழனம்,On kalanipazhanam - அழகிய கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைத்தான
தென் திரு பேர் எயில்மா நகர்,Then thiru peer eyilma nagar - தென்திருப்பேரெயிலென்கிற திருப்பதியை
சென்று சேர்வேன்,Sendru saerven - சென்று சேரக்கடவேன்.
3368திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -இருந்ததே குடியாக உன்னைப் பழி சொல்லாரோ -என்று தோழிமார் சொல்ல அவர்களை யன்றோ நான் தேடித் திரிகிறது என்கிறாள்.) 10
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10
என் தோழி மீர்காள்,En thozhi meerkal - எனது தோழிகளே!
சிகரம் மணி நெழுமாடம்,Sikaram mani nezhumadam - மணிரசளையுடைத்தாய் மணிமயமாய் ஒங்கின மாடங்களையுடைத்தாய்
நீடு,Needu - நெடுங்காலம் விளங்கு மதான
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த,Then thiruppeer eyil veettrindha - தென் திருப்பேரைப்பதியிலே எழுந்தருளியிருக்கின்ற
மாயன்,Maayan - ஆச்சர்யகுண சேஷ்டி தங்களையுடையனாய்
அன்று,Andru - பாரதயுத்தம் நடந்தவக் காலத்தில்
நூற்றுவரை,Noorruvarai - துரியோதநன் முதலிய நூறுபோர்களை
மங்க நூற்ற,Manga nootru - தொலையும்படி ஸங்கல் தவனும்
நிகர் இல் முகில் வண்ணன்,Nikar il mugil vannan - ஒப்பற்ற காளமேக வண்ணனும்
நேமியான்,Nemiyaan - திருவாழியை யுடையனுமான
மகரநெடுங்குழைக்காதன்,Makara nedungkuzhaikaadhan - மகரபூஷணப் பெருமான்
என்நெஞ்சம் கவர்ந்து,En nenjam kavarnthu - எனது நெஞ்சை அபஹரித்துக் கொண்டு
எனை ஊழியான்,Enai oozhiyaan - எத்தனை காலத்தான்! (அவன் என் னெஞ்சைக் கவர்ந்தது இன்று நேற்றோ?)
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்,Nagaramum naadum piravum thaerven - (ஆனபின்பு) நகரங்களிலும் நாடுகளிலும் மற்றுமுள்ள விடங்களிலும் (நானே சென்று ஆராயக்கடவேன்;)
எனக்கு நாண் இல்லை,Enakku naan illai - அதுபற்றி எனக்கு லஜ்ஜையில்லே
3369திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (இத் திருவாய்மொழி கற்பார்க்கு பகவத் கைங்கர்யத்திலே அவகாஹனம் பலிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11
ஊழி ஊழி தோறு,Oozhi oozhi thoru - கல்பங்கள் தோறும்
பேரும் உருவும் செய்கையும்,Perum uruvum seykaiyum - நாமம் ரூபம் வியாபாரம் ஆகிய இவற்றை
வேறவன்,Veraavan - வேறாகவுடையனாய்க் கொண்டு
வையம் காக்கும்,Vaiyam kaakkum - உலகங்களைக் காத்தருள் பவனாய்
ஆழி நீர் வண்ணனை,Aazhi neer vannanai - கடல் வண்ணனாய்
அச்சுதனை,Achchudhanai - அடியார்களை ஒருகாலும் நழுவ விடாதவனான பெருமானைக் குறித்து
அணி குருகூர்சடகோபன் சொன்ன,Ani KuruKoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த
கேழ் இல்,Kael il - ஒப்பில்லாத
அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Anthaadi or aayiraththul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்ளும்
திருப்பே ரெயில் மேய இவை பத்தும்,Thiruppeer eyil meya ivai pattum - தென் திருப்பேரைப்பதி விஷயமான இப்பதிகத்தைக் கொண்டு
ஆழி அம்கையனை ஏத்த வல்லார் அவர்,Aazhi amkaiyanai etta vallaar avar - கையுந் திருவாழியுமான எம்பெருமானைத்துதிக்கவல்லவர்கள்
அடிமை திறத்து,Adimai thirattu - நித்ய கைங்கர்யத்திலே
ஆழியார்,Aazhiyaar - ஆழ்ந்தவராவர்.