| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2840 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-6-1- இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவன் அதி சங்கை பண்ண -அத்தை நிவர்த்திப்பிக்கிறார்.) 1 | வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1 | வைகுந்தா,Vaikundha - பரமபத நாதனே மணி வண்ணனே,Mani Vannane - நீல மணி போன்ற வடிவை யுடையவனே என் பொல்லாத் திருக் குறளா,En Pollath Thiruk Kurala - என்னுடைய அனுபவத்திற்கு உரிய அழகிய வாமன மூர்த்தியே என் உள் ,En Ul - என் மனதில் மன்னி வைகும்,Manni Vaigum - நிலை பெற்று தங்கி இருப்பவனும் வைகல் தோறும்,Vaigal Thorum - ஒவ்வொரு க்ஷணத்திலும் அமுது ஆய ,Amuthu Aaya - அம்ருதமாயிருபவனும் மான வான் ஏறே ,Vaan yere - நித்யஸூரி நாதனே! செய்,Sei - செய்யப்பட்டு குந்தா,Gundha - குறைபடாத அரு தீமை ,Aru Theemai - போக்குதற்கரிய பாவங்களை உன் அடியார்க்குத் தீர்த்து,Un Adiyarkuth Theerthu - உன் தொண்டர்கட்கு போக்கி அசுரர்க்கு,Asurarkku - அஸுரப்ரக்ருதிகளுக்கு தீமைகள்,Theemaigal - அந்த தீமைகளை செய்,Sei - உண்டாக்குகின்ற குந்தா,Gundha - பரிசுத்தனே உன்னை,Unnai - எப்படிப்பதை உன்னை நான்,Naan - அடியேன் சிக்கென,Sikken - உறுதியாக பிடித்தேன்,Pidithen - பிடித்துக்கொண்டவன்(என்று) கொள்,Kol - திருவுள்ளம் பற்ற வேணும் |
| 2841 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (எம்பெருமான் ஆழ்வார்தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடச்சிறபடியைப் பேசுகிறார்.) 2 | சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2 | சிறிது ஓர்இடமும்,Siridhu Ooridamum - மிக அற்பமான இடமும் புறப்படா,Purappada - வெளிப்பட்டிராமல் (எல்லாம் உள்ளே யடங்கும்படி) உலகுகள்,Ulakul - உலகங்களை தன் உள்,Than Ul - தனக்குள்ளே ஒக்க,Okka - சமமாக விழுங்கி,Vilungi - அமுது செய்து (அந்தத் திருக்கோலத்துடனே) சிக்கென,Sikkena - உறுதியாக புகுந்தான்,Pugundhaan - என்னுள் பிரவேசித்தான் புகுந்ததன்பின்,Pugundhadhanpin - பிரவேசித்தபின் மிக்க,Mikka - மிகுந்த ஞானம் வெள்ளம்,Gnaanam Vellam - ஞானப் பிரவாஹமாகிற சுடர்,Sudar - ஒளியுள்ள விளக்கு ஆய்,Vilakku Aay - தீபமாகி துளக்கு அற்று,Thulakku Attru - (நான் ஒருகால் விட்டுவிடுவேனோ என்கிற) ஸந்தேஹம் தீர்ந்து அமுதம் ஆய்,Amudham Aay - அம்ருதமாகி என்,En - எனக்கு விதேயனான பைந் தாமரை கண்ணன்,Pain Thaamarai Kannan - அழகிய தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய பெருமான் எங்கும்,Engum - எவ்விடத்திலும் பக்கம் நோக்க அறியான்,Pakkam Nokka Ariyaan - திரும்பிப் பார்ப்பது மின்றியே யிராநின்றான் |
| 2842 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (நித்ய ஸூரிகளுக்குப் போலே எனக்குத் தன்னுடைய ஸௌந்தரியம் முதலானவற்றை வருணிப்பதற்குப் பாங்கான வாக்கை அளித்தருளினானெம்பெருமான்; அவனுடைய வள்ளல் தனம் இருக்கும்படி என்னே! என்று விஸ்மயப்படுகிறார்.) 3 | தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப் பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3 | தாமரை கண்ணனை,Thaamarai Kannai - தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும் விண்ணோர்பரவும்,Vinnorparavum - நித்யஸுரிகள் புகழ்கின்ற தலைமகனை,Thalaimaganai - ஸ்வாமியும் விரை பூ மருவு,Virai Poo Maruvu - பரிமளமுள்ள புஷ்யங்கள் பொருந்திய துழாய் கண்ணி,Thuzhai Kanni - திருத்துழாய் மாலையை யணிந்த எம்பிரானை,Empranai - எம்பெருமானும் பொன் மலையை,Pon Malaiyai - பொன்மலை போன்று உயர்ந்து விளங்குபவனுமான திருமாலை யாம் அடைந்து நன்கு ஏத்தி,Nanku yethi - நன்றாகத் துதித்து உள்ளி,Ulli - சிந்தித்து வணங்கி,Vanangi - நமஸ்கரித்து (இப்படி மூன்று கரணங்களாலுமுண்டான அநுபவத்தாலே) நாம் மகிழ்ந்து ஆட,Naam Magizhndhu Aada - நாம் ஸந்தோஷத்தோடு நர்த்தனம் பண்ணும் படியாகவும் நா அலர் பா மருவி நிற்க,Naa Alar Paa Maruvi Nirka - நாக்கில் அலர்கின்ற பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படியாகவும் தந்த,Thandha - உபகாரம் செய்தருளின வள்ளல் பான்மை ஏ,Vallal Paanmai ye - உதாரகுணம் என்னே! |
| 2843 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( கீழ்ப்பாட்டில் நாம் நாம் என்று ஒரு தடவைக்கு இரு தடவையாகச் சொன்னது ஆழ்வார் தம்முடைய நைச்சியத்தை யெடுத்துக் காட்டினபடியாதலால், நைச்சியாநுஸந்தானம் பண்ணப் புகுந்தவிவர், நம்மை யொருகால் விட்டுவிடுவாரோ? என்று எம்பெருமான் அதிசங்சை கொள்ள, உன் வடிவழகை நிர்ஹேதுகமாக நீயே யென்னை அநுபவிப்பிக்க அநுபவித்து அதனாலே சிதிலனாயிருக்கின்ற நான், உன்னை விட ப்ரஸக்தியுண்டோ வென்கிறார்.) 4 | வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன் வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4 | வள்ளலே,Vallale - உதாரனே! மது சூதனா,Madhusudhana - மதுஸூதநனே! என் மரதக மலையே,En Marathaga Malaiye - என்னுடைய அநுபவத்திற்குரிய மரதகமலை போன்றவனே! உனை நினைந்து,Unai Ninaithu - உன்னை யநுஸந்தித்து எள்கல்,Elgal - ஈடுபட்டிருக்கும்படியான தன்மையை தந்த,Thandha - உண்டாக்கின எந்தாய்,Endhaai - ஸ்வாமியே! வெள்ளமேபுரை,Vellamepurai - கடல் போன்ற நின் புகழ்,Nin Pugazh - உன்னுடைய திருக்குணங்களில் குடைந்து,Kudainthu - மூழ்கி ஆடி பாடி,Aadi Paadi - ஆடியும் பாடியும் களித்து,Kalithu - செருக்குக் கொண்டு உகந்து உகந்து,Ukanthu Ukanthu - மிகவும் மகிழ்ந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து,Ulla Noygal Ellaam Thurandhu - உண்டான துன்பங்களெல்லாம் தொலையப்பெற்று. உய்ந்து,Uyndhu - உஜ்ஜூவித்து போந்து,Ponthu - (உன்னைக்) கிட்டினவனாயிருந்துவைந்து உன்னை எங்ஙனம் விடுகேன,Unnai Enganam Vidugain - உன்னை எப்படி விட்டிடுவேன்? |
| 2844 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( நித்ய கைங்கர்யத்திலே ஊன்றியிருக்குமடியேன் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தி லேசமு மில்லை யென்று மீளவும் வற்புறுத்திப்பேசுகிறார்.) 5 | உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5 | பால் கடல்,Paal Kadal - திருப்பாற்கடலிலே ஐந்து,Aindhu - ஐந்தாகிய பைந்தலை,Painthalai - படங்களோடு கூடிய சிரங்களையுடையவனாய் ஆடு,Aadu - ஆடுகின்ற அரவு,Aravu - ஆதிசேஷனாகிற அணை,Anai - சயனத்தின் மீது யோக நித்திரை,Yoga Nithirai - யோகநித்ரையிலே மேவி,Mevi - பொருந்தி சிந்தை செய்த,Sinthai Seydha - லோக ரக்ஷண சிந்தனை பண்ணின எந்தாய்,Endhaai - என் ஸ்வாமியே! உன்னை,Unnai - உன்னை சித்தை செய்து செய்து,Sithai Seydhu Seydhu - நிரந்தரமாகச் சிந்தித்து உய்ந்து,Uyndhu - உஜ்ஜீவனம் பெற்று உலப்பு இலாத,Ulpup Illaadha - முடிவில்லாத வெம்,Vem - கொடிய என் தீவினைகளை,En Theevinai Kalai - எனது பாபங்களை நாசம் செய்து,Naasam Seydhu - தொலைத்து உனது,Unadhu - உன்னுடைய அந்தம் இல்,Antham Il - முடிவில்லாத அடிமை,Adimai - கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை அடைந்தேன்,Adaindhen - அடைந்தவனான நான் விடுவேனோ,Viduvaeno - இனிவிட்டு நீங்குவேனோ? |
| 2845 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( ஆழ்வாரே! உமக்கு நான் இனிச் செய்யவேண்டுவதென்ன?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நான் பெறாததுண்டோ? எல்லாம் பெற்றேனே; இனிச் செய்ய வேண்டுவதொன்றுமில்லை காண்’ என்கிறார். ஆச்ரிதன் ப்ரதிஜ்ஞை பண்ணின ஸமயத்திலே வந்து தோன்றுமியல்வினனாக நீ யிருக்கும்போது, எனக்கு என்ன குறையென்கிறார்.) 6 | உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6 | உன்னை,Unnai - உன்னை சிந்தையினால்,Sinthaiyinaal - நெஞ்சாலே இகழ்ந்த,Igazhndha - அநாதரித்த இரணியன்,Iraniyan - ஹிரண்யகசிபுவினுடைய அகல் மார்வம் கீண்ட,Akal Maarvam Keenda - அகன்ற மார்வைக் கிழித்தவனும் என்,En - எனக்கு அநுபவிக்க வுரியவனும் முன்னை,Munnaai - அநாதி ஸித்தனுமான கோள் அரியே,Kol Ariye - மிடுக்குடைய நரசிங்க மூர்த்தியே! உன்னை சிந்தை செய்து செய்து,Unnai Sinthai Seydhu Seydhu - உன்னை இடையறாது சிந்தித்து நெடு,Netu - உயர்ந்த உன் மா மொழி,Un Ma Mozhi - உன்னைப்பற்றின திருவாய் மொழியை இசை பாடி,Isai Paadi - இசையுடனே பாடி ஆடி,Aadi - (ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக) ஆடி என் முன்னை தீ வினைகள்,En Munnaai Thee Vinaigal - எனது தொல்லைப் பாபங்களை யான்,Yaan - நான் முழுவேர் அரிந்தனன்,Muzhuver Arinthaan - முழுதும் வேரோடு அறுத்தொழித்தேன்; எனக்கு,Enakku - அடியேனுக்கு முடியாதது என்,Mudiyadathu En - (இனி) அஸாத்தியமான துண்டோ? |
| 2846 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (கீழ்ப்பாட்டில் “முடியாததென் எனக்கே” என்றார்; எல்லாம் பெற்றுவிட்டீரோ? என்று அன்பர் கேட்க, என்னிடத்து எம்பெருமான் பண்ணின விசேஷ கடாக்ஷத்தாலே, என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளானவர்களுங்கூட உஜ்ஜ்விக்கப் பெற்றார்களே! இன்னமும் நான் பெறவேண்டியது என்ன இருக்கிறது என்கிறார்.) 7 | முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7 | முழு ஏழ் உலகும் உண்டான்,Muzhu Yezh Ulakum Undaan - ஏழுலகங்களையும் முற்ற அமுது செய்து (பிரளயங்கொள்ளாதபடி காத்தருளின பெருமான் உகந்து,Ukanthu - விரும்பி அடியேன் உள் வந்து புகுந்தான்,Adiyaen Ul Vandhu Pugundhaan - அடியேனுள்ளத்தில் வந்து புகுந்தான்; இனி அகல்வானும் அல்லன்,Ini Akalvaanum Allan - இனிமேல் (அப்பெருமான் அகன்று போகவும் மாட்டான்; கீழ் மேல் எழு பிறப்பும் எமர்,Keel Mel Yezhu Pirappum Yemar - கீழும் மேலும் ஏழ் பிறப்புக்களிலும் எம்மவர்கள் செடி ஆர்நோய்கள் எல்லாம் துரந்து,Chedi Aar Noygal Ellaam Thurandhu - பெருங்காடாகப் பரம்பின நோய்களெல்லாம் தொலையப் பெற்று என்றும்,Endrum - ஒரு நாளும் விடியா,Vidiya - ஓய்வில்லாத வெம் நரகத்து,Vem Naragathu - கொடிய ஸம்ஸார நரகத்தில் சேர்தல் மாறினர்,Seertal Maarinar - சேராமலிருக்கும்படி பெற்றார்கள்; இனி,Ini - இப்படியான பின்பு எனக்கு,Enakku - எனக்கு முடியாதது என்;,Mudiyadathu Yen; - அடையப்படாதது உண்டோ, எல்லாம் ஸித்தமே. |
| 2847 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (பிரானே! உன்னுடைய நிரிஹேதுகமான அநுக்ரஹத்தாலே பெற்ற இந்த நன்மை, இனியொரு நாளும் இடையறாதொழிய வேணும் இதுலே யெனக்கு வேண்டுவது, என்று எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றார்.) 8 | மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன் பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் –2-6-8 | பல பிறப்பும்,Pala Pirappum - பல பிறவிகளிலும் மாறி மாறி பிறந்து,Maari Maari Pirandhu - பலகாலும் பிறந்து (இப்படி பிறப்பது இறப்பதாய் செல்லுகிற ஜன்ம பரம்பரைகளிலே வாரா நிற்க) அடியை அடைந்து,Adiyai Adainthu - இன்று உன் திருவடிகளைக்கட்டி உள்ளம் தேறி,Ullam Theri - மனம் தெளிந்து ஈறு இல்,Eeru el - முடிவில்லாத இன்பத்து இரு வெள்ளம்,Inpathu Iru Vellam - ஆனந்தப் பெருவெள்ளத்திலே யான் மூழ்கினன்,Yaan Moozhkinan - நான் ஆழ்ந்துவிட்டேன் அசுரர் தம்,Asurar Tham - அஸூரர்களினுடைய பல் குழாங்கள்,Pal Kuzhangal - பல கூட்டங்கள் பாறி பாறி,Paari Paari - அடியோடு அழிந்து நீறு எழ,Neeru Ezu - நீறாகும் படி பாய் பறவை ஒன்று ஏறி வீற்றிருந்தாய்,Pai Paravai Ondru Eri Veettrindhaai - பாய்கின்ற பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எந்தாய்,Endhaai - என் தந்தையே! உன்னை,Unnai - உன்னை என்னுள்,Ennul - என்னிடத்தில் நின்றும் நீக்கேல்,Neekkael - பிரியச் செய்யாதிருக்க வேணும். |
| 2848 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (முதலிலே உன்னை யறியாதிருந்தலெனக்கு, உன்னையும் உன்னுடைய போக்கியதையையுமறிவித்து, உன்னைவிட்டகன்று உயிராற்றமாட்டாதபடியான நிலைமையையும் விளைவித்த நீ, இனி என்னைவிட்டுப் பிரிந்துபோவது தகுதியோ வென்கிறார்.) 9 | எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9 | எந்தாய்,Endhaai - ஸ்வாமியே! தண் திருவேங்கடத்துள் நின்றாய்,Than Thiruvengadaththul Nindraai - குளிர்ந்த திருவேங்கட மலையிலே நிற்பவனே! இலங்கை செற்றாய்,Ilankai Setraai - லங்காபுரியை அழித்தவனே! மராமரம்,Maramaram - மராமரங்களினுடைய பை தாள் ஏழ்,Pai Thaal Yezh - பருத்த அடிகள் எழும் உருவ,Uruva - உருவும்படி ஒரு வாளி கோத்த வில்லா,Oru Vaali Kotha Villa - ஒரு அம்யை தொடுத்த வில்லை யுடையவனே! கொந்து ஆர்தண் அம் துழாயினாய்,Kondhu Aardhan Am Thuzhaayinaai - கொத்துக்கள் நிறைந்து குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே! எம் அமுதே,Em Amudhe - எனக்கு அமுதமர்னவனே! உன்னை என்னுள்ளே குழைத்த மைந்தா,Unnai Ennulle Kuzhaittha Maindha - என்னோடு ஒரு நீராகக் கலந்த மைந்தளே! வான் ஏறே,Vaan Erea - நித்யஸூரி நாதனே! இனி எங்கு போகின்றது,Ini Engu Poagindradhu - இனி என்னைத் தவிர உனககு வேறு போக்கிட முண்டோ? |
| 2849 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஆழ்வாரே! என்னை நீர்வளைத்துப் பேசுவது கிடக்கட்டும் நீர் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி என்னைவிட்டகன்று போய்விடுவீரோ என்று நான் கவலை கொண்டிராநிற்கையில், நீர்இங்ஙனே பேசக்கடவீரோ? நான் உம்மைவிட்டு எங்கும் போகப்போகிறதில்லை; நீர்என்னை விட்டுப் போகாதிருப்பீரா? சொல்லும், என்று எம்பெருமான் திருவுள்ளமாக, முக்காலத்திலும் எல்லாப்படியாலும் எனக்கு உபகாரம் செய்தருளின உன்னைப் பெற்றுவைத்து, இனிநான் அகன்று போவதற்கு என்ன ப்ரஸக்தி உண்டு, என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார்.) 10 | போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிரா கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10 | போகின்ற காலங்கள்,Pogindra Kaalangal - நிகழ் காலங்கள் போய காலங்கள்,Poya Kaalangal - இறந்த காலங்கள் போகு காலங்கள்,Pogu Kaalangal - எதிர்காலங்கள் (ஆகிய இவற்றில்) தாய் தந்தை உயிர்ஆகின்றாய்,Thai Thandhai Uyir Aagindraai - தாயும் தந்தையும் உயிருமாயிருப்பவனே! பாகின்ற,Paagindra - பாவுகின்ற தொல் புகழ்,Thol Pugazh - நித்யமான கீர்த்தியையுடையனாய் மூ உலகுக்கும் நாதனே!,Moo Ulakukkum Naadane! - மூன்று லோகங்களுக்கும் நாதனாயிருப்பவனே! பரமா,Paramaa - ஸர்வோத்க்ருஷ்டனே! தண் வேங்கடம் மேகின்றாய்,Than Thiruvengadam Megindrai - குளிர்ந்த திருவேய்கடமலையை விரும்பி இருப்பவனே! தண் விரை நாறு,Than Virai Naaru - குளிர்ந்த பரிமளம் வீசப்பெற்ற துழாய் கண்னியனே,Thuzhai Kanniyanne - திருத்துழாய் மாலையை யுடையவனே! உன்னை நான்,Unnai Naan - அடைந்தேன் விடுவேனோ? |
| 2850 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | கண்ணித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ் நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும் பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11 | தண் அம்துழாய் கண்ணிமுடி,Than Am Thuzhai Kanni Mudhi - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையணிந்த முடியையும் கமலம் தடம் பெரு கண்ணனை,Kamalam Thadam Peru Kannanai - தாமரை போன்று விசாலமான நீண்ட திருக்கண்களையுடைய பெருமானுடைய புகழ் நண்ணி,Pugazh Nanni - திருக்குணங்களை அநுபவித்து தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன,Then Kurukoor Sadagoan Maran Sonna - தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வு இல்,Ennil Sorvu Il - அநுஸந்தானத்தில் சோர்வு இல்லாத அந்தாதி,Andhaadhi - அந்தாதித்தொடையான ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து,Aayiraththul Ivaiyum Orpaththu - ஆயிரத்தினுள்ளே இப்பத்துப் பாட்டையும் இசையொடும்,Isaiyodum - இசையோடுகூட பண்ணில் பாட வல்லார்அவர்,Pannil Paada Vallaravaru - பண்ணில் அமைத்துப் பாட வல்லவர்கள் கேசவன் தமர்,Kaesavan Thamar - எம்பெருமானடியாராகப் பெறுவர்ர்கள். |