Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: அங்கும் இங்கும் (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3469திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அவன் ஸுகுமார்யத்தை அனுசந்தித்து பரிகை இன்றிக்கே அவனை தங்களுக்கு இஷ்ட பிராப்தி சாதனம் என்று ஐஸ்வர் யாதிகளை ஷேபிக்கிறார்.) 1
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே–8-3-1
அங்கும் இங்கும் எங்கும்,Angum ingum engum - மேலுலகங்களிலும் இவ்வுலகத்திலும் மற்றுமெவ்வுலகங்களிலுமுள்ள
வானவர் தானவர் யாவரும்,Vaanavar thaanavar yaavarum - தேவர்கள் அசுரர்கள் முதலான யாவரும்
உன்னை இனையை என்று அறியகிலாது அலற்றி,Unnai inaiyai enru ariyagilaadhu alatri - உன்னை உள்ளபடி அறியப்பெறாது எதையோ சொல்லிக் கூப்பிட்டு
பூமகள் மண்மகள் ஆய் மகள்,Poomagal manmagal aai magal - ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி யென்னும் தேவிமார்
அங்கம் சேரும்,Angam serum - திருமேனியில் சேர்ந்திருக்கப்பெற்றார்களென்றும்.
சங்கு சக்கரம் கையவன்,Sangu sakkaram kaiyavan - திருவாழி திருச்சங்குகளைத் திருக்கையிலேந்திய பெருமான்
சரணம் என்பர்,Saranam enbar - நம்முடைய ஆபத்துக்களைப் போக்கவல்லவன் என்றும் ரக்ஷ்கத்வ மாத்ரத்தையே அநுஸந்தித்திருப்பர்கள்.
3470திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை நித்தித்துப் பேசினார், இப்பாட்டில் கைகல்யார்த்திகளை க்ஷேபித்துப் பேசுகிறார்.) 2
சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2
சரணம் ஆகிய நால்மறை நூல்களும் சாராதே,Saranam aagiya naalmarai noolgalum saaraadhe - ஐச்வர்யத்திற்குரிய உபாயங்களை விதிக்கின்ற நால்வேதங்களாகிற சாஸ்த்ரங்களை விட்டிட்டு
கரணம் பல் படை பற்று அறு ஓடும் கனம் ஆழி,Karanam pal padai patru aru oodum ganam aazhi - உபகரணங்களையுடைய், பல சத்ருஸேனைகள் நிச்சேஷமாக வோடும்படி ஜ்வலிக்கின்ற திருவாழியாகிற
அரணம் திண்படை ஏந்திய ஈசற்கு ஆள் ஆயே,Aranam thinpadai eendhiya eesarukku aal aaiye - க்ஷேமங்கரமான திவ்யாயுதத்தைத் தரித்துள்ள எம்பெருமானுக்கு சேஷபூதர்களாயிருந்து வைத்தே (முபுக்ஷுக்களாகியு மென்றபடி)
மரணம் தோற்றம்வான் பிணிமூப்பு என்ற இவைமாய்த்தோம்,Maranam thotram vaan pini mooppu enra ivaimaaithom - இறப்பும் பிறப்பும் மஹாவியாதிகளும் கீழ்த்தனமுமான விவற்றைப் போக்கிக்கொண்ட வித்தனையொழிய வேறில்லையே.
3471திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழிரண்டுபாட்டுக்களிலே தமக்கு ஒருவரும் துணையில்லையென்று சொன்ன முகத்தாலே தம்முடைய தனிமையை வெளியிட்டாராயிற்று. இப்படி தம்முடைய தனிமையைச் சொன்ன ப்ரஸங்கத்தாலே அவனுடைய தனிமையை நினைத்து வருத்துகிறாரிப்பட்டால்.) 3
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3
ஆளும் ஆளார்,Aalum aalaar - (கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை.
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்,Aaziyum sangum sumappar thaam - திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே
வாளும் வில்லும் கொண்டு,Vaalum villum kondu - நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு
பின் செல்வார் மற்று இல்லை,Pin selvaar matru illai - பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே,
தாளும் தோளும்,Thaalum tholum - திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு
கைகளை ஆர தொழ காணேன்,Kaigalai aara thoza kaaneen - கையாரத் தொழுபாரையுங் காண்கின்றிலேன் (ஆதலால்)
ஞாலத்து அடியேன் நாளும் நாளும் நாடுவன்,Gnaalathu adiyen naalum naalum naaduvan - இவ்விபூதியிலே அடியேன் நாள்தோறும் பின் செல்லப்பாராநின்றேன்.
3472திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் * வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை * என்று அஞ்சினவாறே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! நம்மைப்பற்றி நீர் அஞ்சவேண்டுமோ! நம்முடைய ஸர்வரக்ஷகத்வம்பெருமையை நீ அறியீரோ? என்று அப்பெருமையைக் காட்டிக் கொடுத்தான், (அதாவது) வடதளசாயி விருத்தாந்தத்தை நினைப்பூட்டினான், அதை யநுஸந்தித்துத் தம்முடைய தவளர்ச்சியை விண்ணப்பஞ்செய்கிறார் இதில்.) 4
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4
ஓர் முற்றா உரு ஆகி,Or mutraa uru aagi - மிகச் சிறு பிராயமான வடிவையுடையையாய்
ஞாலம் போனகம் பற்றி,Gnaalam ponaagam patri - ஜகத்தையெல்லாம் அமுது செய்து
ஆல் பேர் இலை,Aal per ilai - ஆலினுடைய மிகச்சிறிய இலையிலே
அன்னவசம் செய்யும் அம்மானே,Annavasam seyyum ammanae - கண் வளர்ந்தருளுகிற ஸ்வாமியே!
கார் எழில்,Kaar ezhil - காளமேகம் போன்றழகிய
உன் கோலம்,Un kolam - உனது வடிவழகை
காணல் உற்று,Kaanal utrru - காணவேணு மென்றாசைப்பட்டு
ஆழும்,Aazhum - அதிலே ஆழங்காற்பட்டிருக்கின்ற
கொடியேற்கு,Kodiyaerku - கொடியேனாகிற எனக்கு
பேர்வது ஓர் காலம்,Paervathu or kaalam - நிகழ்கிற ஒரு க்ஷணாவகாச மானது
கார் இருள் ஊழி ஒத்து உளது,Kaar irul oozhi oththu ulathu - காடாந்தகாரம்மிக்க கல்பம் போலே நீள்கின்றது.
3473திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டிலே * ஆலம் பேரிலை அன்னவசஞ் செய்யும்மமானே! * என்று ப்ரளயார்ணவத்திலே தனியே கண்வளர்ந்தருளினவிடத்திற்கு வயிறெரிந்த ஆழ்வாருடைய வயிற்றெரிச்சல், தீர, திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் பரிவர் பலர் புடை சூழத் திருக்கண்வளர்ந்தருளாநின்றபடியைக் காட்டிக்கொடுக்க, இக்கிடைகளிலே யீடுபட்டு பேசுகிறார்.) 5
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5
கொடி ஆர் மாடம்,Kodi aar maadam - கொடிகள் நிறைந்த மாடங்களையுடைய
கோளுர் அகத்தும் புளிங்குடியும்,Kolur agatthum pulingudiyum - திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும்
மடியாது,Madiyaadhu - இடம் வலங்கொள்ளாமல்
இன்னே,Inne - இன்று காணும் விதமாகவே
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்,Nee thuyil mevi magizhnthathu thaan - நீ சயனத்தை விரும்பி மகிழ்ந்து திருக்கண் வளர்ந்தருள்வதானது
அடியார் அல்லம் தவிர்த்த அசவோ,Adiyaar allam thavirtttha asavo - (பல திருவ்வதாரங்கள் செய்து) அடியார்களின் துன்பங்களைப் போக்கின சிரமத்தினாலோ?
அன்றேல்,Andrael - அல்லது
இப்படி,Eppadi - இப்பூமியை
நீண்டு தாவிய அசவு தானோ,Neendu thaaviya asavu thaano - ஓங்கியுளந்த சிரமத்தினாலோ?
பணியாய்,Paniyaai - கூறியருளவேணும்.
3474திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய சயனத்தை நினைத்து பரிந்து பேசின ஆழ்வாரை நோக்கி “நீர் இப்படி துடிக்கக் கடவீரோ? அவன் ஸர்வரக்ஷகனன்றோ, என்று சொல்ல, அதற்கு “நிர்யஸூரிகளின் பரிவுக்கு இலக்கானவ்வன் ஸம்ஸாரத்திலே அவ்வடிவோடே வந்து உலாவாநின்றால் நானிப்படி துடிக்காமலிருக்க முடியுமோ? வேறு எம்பெருமானைத் தவிர வேறுயாரையும் ஒருநாளும் பணிந்தறியாத அமரர்களன்றோ நித்யஸூரிகள். அவர்களுடைய பணிவுக்கும் ஞானம் முதலிய குணங்களுக்கும் தாமே இலக்காயிருக்குமவர் என்றபடி.) 6
பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6
பணியா அமரர்,Paniya amarar - எவரையும் பணிய வேண்டாத நித்ய ஸூரிகளினுடைய
பணிவும் பண்பும் தாமே ஆம்,Panivum panbum thaamae aam - பணிவுக்கும் ஞானும் முதலிய குணங்க்களுக்கும் தாமே இலக்காயிருபவரும்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்துமவர்,Ani aar aazhiyum sangamum aendhumavar - ஆபரணமாப் பொருந்திய திருவாழி திருச்சங்குகளைத் தாங்கி நிற்பவருமான அப்பரமபுருஷ
பணியா வெம் நோய் தவிர்ப்பான்,Paniya vem noyi thavirppaan - ஒருகாலும் தணியாத வெவ்விய நோய்களைத் தவிர்பதற்காக
திரு ஆர் நீலம் மணி மேனியோடு,Thiru aar neelam mani maeniyodu - அழகியதாய் நீலமணி போன்றதான வடிவோடுகூட
என் மனம் சூழ உலகில் வருவார்,En manam soozha ulagil varuvaar - என்மனம் பிரமிக்கும்படியாக இவ்வுலகில் வந்து உலாவுவார்
3475திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (இங்கே வந்து திருவண்பரிசாரத்திலே யெழுந்தருளியிருக்க, அந்தோ! நான் உதவப்பெற்றிலேனே, இது கிடக்க, இங்ஙனே ஓரடியானுள னென்று அவனுக்கு அறவிப்பாருமில்லையேயென்று துடிக்கிறார்.) 7
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7
வருவார் செல்வார்,Varuvaar selvaar - அந்தப்பக்கத்தில் நின்றும் வருபவர்களும் இந்தப்பக்கத்தில் நின்றும் போமவர்களுமான மனிசர்கள்
வண் பரிபாசுரத்து இருந்த,Van paripaasuraththu iruntha - திருவண்பரிசாரத்திலெழுந்தருளிருக்கிற.
என் திருவாழ் மார்வர்க்கு,En thiruvaazh maarvarkku - என்னுடைய திருமாலுக்கு
உரு ஆர்சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று,Uru aar chakaram sangu sumanthu ingu ummodu orupaadu uzhalvaan oru adiyaanum ulan endru - வடிவழகார்ந்த திருவாழி திருச்சங்குகளைச் சுமந்து கொண்டு இங்கு உம்மோடு ஒரு பக்கத்திலிருந்து கொண்டு திரியுமடியானொருவனிருக்கின்றானென்று.
என் திறம் சொல்லார்,En thiram sollaar - என்னைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுகின்றிலர்
செய்வது என்,Seivathu en - (இதற்கு) நான் செய்யக் கூடியது என்னோ?
3476திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன் திருவடிக்கு கீழ் என்னை நிலையாளாக கொள்வது என்று -என்று எம்பெருமானை ஆழ்வார் கேட்க்கிறார்.) 8
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8
ஏழ் குன்று,Ezhu kunru - குலபர்வதங்களேழையும்
எழ் பார்,Ezhu paar - தீவுகளேழையும்
சூழ்,Soozh - சூழ்ந்த
கடல்,Kadal - ஸமுத்ரங்களையும்
ஏழ் ஞாலமும்,Ezhu gnaalamum - ஏழுலகங்களையும்
முழு,Muzhu - முழுக்க
நின்றே தாவிய,Nindre thaaviya - நின்ற நிலையிலே நின்று ஆக்கிரமித்துக்கொண்ட
நீள் கழல்,Neel kazhal - நெடிய திருவடிகளை யுடையையாய்
ஆழி,Aazhi - திருவாழியையுமுடையையான
திருமாலே,Thirumaale - திருமகள் கொழுநனே!
என்னை,Ennai - அடியேனை
கோலம் திருந்து அடி கீழ்,Kolam thirundhu adi keezh - தேவரீருடைய அழகு விஞ்சின திருவடிகளின் கீழே
நின்றே ஆள் செய்ய,Nindre aal seiyya - நிலைநின்று அடிமை செய்வேனாம்படி
நீ கொண்டருள நினைப்பது தான் என்றே,Nee kondarula ninaippathu thaan endre - தேவரீர் அங்கீகரிக்கத் திருவுள்ளம்பற்றுவது என்றைக்கோ?
3477திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ப்ரஹ்மாதிகள் தஷாதிகள் உண்டாய் இருக்க நீர் என் செய்ய அஞ்சுகிறீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அவர்கள் உன்னுடைய ஸுகுமாரியாதிகளை அறியார்கள் -நான் என்னுடைய ஸ்நே ஹத்தாலே கலங்கி கதறா நின்றேன் என்கிறார்.) 9
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9
திருமால்,Thirumaal - திருமாலே!
நான் முகன் செஞ்சடையான் என்ற இவர்கள் யார்,Naan mugan senjadaiyaan endra ivargal yaar - பிரமனென்றும் ருத்திரனென்றும் சொல்லப் படுகிறவர்களில் யார்தான்
எம்பெருமான் தன்மையை,Emperumaan thanmaiyai - எம்பெருமானான வுன்னுடைய ஸௌகுமார்யாதி ஸ்வபாவத்தை
அறிகீற்பார்,Arigeerpaar - அறியவல்லார்?
பேசி என்,Paesi en - இது சொல்லி என்ன ப்ரயோஜனமுண்டு?
ஒரு மா முதல்வா,Oru maa mudhalvaa - விலகணான பரமகாரணமானவனே!
ஊழி பிரான்,Oozhi piraan - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் ஸ்வாமியானவனே!
என் காதல் கலக்க,En kaadhal kalakka - என்னுடைய ப்ரேமமானது நெஞ்சைக்கலக்க
என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன்,Ennai aaludai karu maa meniyan enban - என்னையடிமை கொண்ட கரியகோலத் திருவுருவனே! என்று இவ்வளவே யன்றோ நானும் சொல்ல வல்லேன்.
3478திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஆழ்வாருடைய அச்சத்தைப் பரிஹரிக்கைக்காக எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “நமக்கு ஸநகாதிகள் முக்தர்கள் நித்யஸூரிகள் ஆகிய விவர்கள் கிட்டிநின்று பரிகிறார்கள், அதுதவிர, நாமும் அரிய செயல்களும் செய்யவல்லோமான பின்பு நீர் நமக்கு அஞ்சும் வேண்டா காணும்“ என்றருளிச் செய்ய, ஆழ்வார் அச்சந்தீர்ந்து அத்தை யநுஸந்தித்து இனியாராகிறார்.) 10
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10
கலக்கம் இல்லா நல்தவம் முனிவர்,Kalakkam illaa nalthavam munivar - ஸம்ஸாரக் கலக்கமற்ற நல்ல தபஸ்விகளான ஸனகாதிமுனிவர்களென்ன,
கரை கண்டோர்,Karai kandoor - ஸம்ஸாரத்தைக் கடந்து அக்கரை சென்ற முக்தர்களென்ன,
துளக்கம் இல்லா வானவர்,Thulakkam illaa vaanavar - ஒருகாலும் ஸ்வரூப விபர்ய யமடையாதவர்களான நிர்யஸூரிகளென்ன,
எல்லாம்,Ellaam - ஆகய இவர்களெல்லாரும்
தொழுவார்கள்,Thozhuvargal - பரிவுபூண்டு மங்களாசாஸனம் பண்ணுமவர்களாயிராநின்றார்கள்,
மா கடல் தன்னை,Maa kadal thannai - பெருங்கடலை
மலக்கம் எய்த கடைந்தானை,Malakkam eitha kadaindhaanai - கலங்கும்படி கடைந்த பெருமானை
நாம் உலக்க புகழ் கிற்பது,Naam ulakka pugazh kirpathu - அற்பரான நாம் ஒரு முடிவுகண்டு புகழ்ந்தோமாவது
என் செய்வது,En seivathu - கைகூடுமதோ?
உரையீர்,Uraiyeer - சொல்லுங்கோள்.
3479திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுடைய தனிமைக்கண்டு அஞ்சவேண்டும் நிலமான ஸம்ஸாரத்திலே பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11
உரையா வெம்நோய் தவிர,Urayaa vemnoy thavira - வாய்கொண்டு சொல்லாவொண்ணாதபடி வெவ்விய கலக்கமாகிற நோயானது தீரும்படி
அருள்,Arul - க்ருபை செய்தருளின
நீள் முடியானை,Neel mudiyaanai - ஸர்வாதிக சேஷியானவனைக்குறித்து,
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன்,Varai aar maadam mannai kurukoor sadagopan - மலைபோன்ற மாடங்கள் பொருந்திய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய
உரை எய் சொல்தொடை ஓர்ஆயிரத்துல் இபத்தும்,Urai ey solthodai or aayiraththul ippaththum - ஸ்ரீ ஸூக்தியாயமைந்த ஆயிரம் பாசுரங்களினுள்ளும் இப்பதிகத்தை
நிரையே வல்லார்,Niraiye vallaar - அடைவுபட ஓதவல்லவர்கள்
நீடு உலகத்து பிறவா,Needu ulagaththu piravaa - கடல் சூழ்ந்த மண்ணுலகில் இனியொருநாளும் பிறக்க மாட்டார்கள்.
3774திருவாய்மொழி || 10-10 முனியே (நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில் எனக்கு அதுவே அமையாது – நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் ) 9
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9
அங்கும் இங்கும் முழு முற்று உறு, angum ingum muzhu mutru uru - எங்கும் ஸமஸ்த பதார்ததிருப்பதாய்