| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 128 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 1 | அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே இரவுமுண்ணாது உறங்கி நீ போய் இன்றுமுச்சி கொண்டதாலோ வரவும் காணேன் வயிறசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய திரு வுடைய வாய் மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே–2-2-1 | அரவு அணையாய்,Aravu anaiyai - சேஷசாயி யானவனே! ஆயர் ஏறே,Aayar ere - இடையர்களுக்குத் தலைவனே! நீ இரவும் உண்ணாத,Nee iravum unnaadha - நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல் உறங்கிப் போனாய்,Urangip ponaai - உறங்கிப் போய் விட இன்றும்,Indrum - இப் போதும் உச்சி கொண்டது,Uchi kondathu - (பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது; ஆல்,Aal - ஆதலால் அம்மம் உண்ண,Ammam unna - முலை யுண்பதற்கு துயில் எழாய்,Thuyil ezhai - (தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்; வரவும் காணேன்,Varavum kaanen - (நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்! வயிறு அசைத்தாய்,Vayiru asaithai - (உனக்குப் பசியில்லை யென்போமென்றா) வயிறுந்தளர்ந்து நின்றாய்; வன முலைகள்,Vana mulaigal - (எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து) சோர்ந்து பாய,Sornthu paaya - பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க திரு உடைய,Thiru udaiya - அழகை உடைய வாய் மடுத்து,Vai maduthu - (உன்) வாயை வைத்து திளைத்து,Thilaithu - செருக்கி உதைத்து,Uthaithu - கால்களாலே உதைத்துக் கொண்டு பருகிடாய்,Parugidai - முலையுண்பாய். |
| 129 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 2 | வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலை யுணாயே–2-2-2 | எம் பிரான்,Em piran - எமது உபகாரகனே! வைத்த நெய்யும்,Vaitha neyyum - உருக்கி வைத்த நெய்யும் காய்ந்த பாலும்,Kaayndha palum - (ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும் வடி தயிரும்,Vadi thayirum - (உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் நறு வெண்ணெயும்,Naru vennaiyum - மணம் மிக்க வெண்ணெயும் இத்தனையும்,Ithanaiyum - (ஆகிய) இவை யெல்லாவற்றையும் நீ பிறந்த பின்னை,Nee pirandha pinnai - நீ பிறந்த பிறகு பெற்று அறியேன்,Petru ariyen - கண்டதில்லை; எத்தனையும்,Ethanaiyum - (நீ) வேண்டினபடி யெல்லாம் செய்யப் பெற்றாய்,Seyyap petraai - நீ செய்யலாம்; ஏதும் செய்யேன்,Edhum seyyen - (அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்; கதம் படாதே,Kadham padaadhe - நீ கோபியாதே கொள்; முத்து அனைய முறுவல் செய்து,Muthu anaiya muruval seydhu - முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி மூக்கு உறிஞ்சி,Mooku urinji - மூக்கை உறிஞ்சிக் கொண்டு முலை உணாய்,Mulai unai - முலை உண்பாயாக. |
| 130 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 3 | தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன் நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3 | தம் தம் மக்கள்,Tham tham makkal - தங்கள் தங்கள் பிள்ளைகள் அழுது,Aluthu - அழுது கொண்டு சென்றால்,Sendral - (தம் தம் வீட்டுக்குப்) போனால் தாய்மார் ஆவார்,Thaaymar aavaar - (அக்குழந்தைகளின்) தாய்மார்கள் தரிக்க கில்லார்,Tharikka killar - பொறுக்க மாட்டாதவர்களாய் வந்து,Vandhu - (தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து நன் மேல் பூசல் செய்ய,Nan mel poosal seiyya - உன் மேல் பிணங்க வாழ வல்ல,Vaazha valla - (அதைக் கண்டு) மகிழ வல்ல வாசு தேவா,Vasu deva - கண்ண பிரானே! உந்தையார்,Unthaiyar - உன் தகப்பனார். உன் திறத்தர் அல்லர்,Un thirathar allar - உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்; நான்,Naan - (அபலையான) நானும் உன்னை,Unnai - (தீம்பில் ..) உன்னை ஒன்று உரப்ப மாட்டேன்,Ondru urappa matten - சிறிதும் அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்; நந்த கோபன்,Nanda kopan - (இவையெல்லாங் கிடக்க) நந்த கோபருடைய அணி சிறுவா,Ani siruvaa - அழகிய சிறு பிள்ளாய்! நான் சுரந்த முலை,Naan surandha mulai - எனது பால் சுரந்திருக்கிற முலையை உணாய்,Unai - உண்பாயாக |
| 131 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 4 | கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய பஞ்சி யன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடுமென்று அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்தள வன்றாலோ கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை யுணாயே–2-2-4 | அமரர் கோவே,Amarar kove - தேவர்களுக்குத் தலைவனே! (நீ) கஞ்சன் தன்னால்,Kanjan thannal - கம்ஸனாலே புணர்க்கப்பட்ட,Punarppatta - (உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட கள்ளச் சகடு,Kallas sakadu - க்ருத்ரிம சகடமானது கலக்கு அழிய,Kalakku azhiya - கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்து போம்படி பஞ்சி அன்ன மெல் அடியால்,Panji anna mel adiyal - பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால் பாய்ந்த போது,Paindha pothu - உதைத்த போது நொந்திடும் என்று,Nondhidum endru - (உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று அஞ்சினேன் காண்,Anjinen kaan - பயப்பட்டேன் காண்; ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்,Aayar kootathu alavu andru aal - (என்னுடைய அச்சம்) இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்; கஞ்சனை,Kanjanai - (உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை உன் வஞ்சனையால்,Un vanjanaiyal - உன்னுடைய வஞ்சனையினாலே வலைப்படுத்தாய்,Valaipaduthai - (உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே! முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக. |
| 132 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 5 | தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து மாயந் தன்னால் வலைப் படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச் சொல் தருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா ஆயர் பாடிக் கணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை யுணாயே–2-2-5 | வாசுதேவா,Vasudeva - கண்ணபிரானே! தீய புந்தி,Theeya bundhi - துஷ்ட புத்தியை யுடைய கஞ்சன்,Kanjan - கம்ஸனானவன் உன் மேல்,Un mel - உன் பக்கலிலே சினம் உடையவன்,Sinam udaiyavan - கோபங்கொண்டவனாயிரா நின்றான்; சோர்வு பார்த்து,Sorvu paarthu - (நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து மாயம் தன்னால்,Maayam thannal - வஞ்சனையால் வலைப் படுக்கில்,Valaip padukkil - (உன்னை) அகப்படுத்திக் கொண்டால் வாழகில்லேன்,Vaazha killein - (நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்; தாயர்,Thaayar - தாய்மார்களுடைய வாய் சொல்,Vai sol - வாயினாற் சொல்லுவது கருமம் கண்டாய்,Karumam kandai - அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்; சாற்றி சொன்னேன்,Saatri sonnen - வற்புறுத்திச் சொல்லுகிறேன்; போக வேண்டா,Poga venda - (நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா; ஆயர் பாடிக்கு,Aayar paadikku - திருவாய்ப்பாடிக்கு அணி விளக்கே,Ani vilakke - மங்களதீபமானவனே! அமர்ந்து வந்து,Amarnthu vandhu - பொருந்தி வந்து என் முலை உணாய்,En mulai unai - முலை உண்பாயாக. |
| 133 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 6 | மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6 | மின் அனைய,Min anaiya - மின்னலை யொத்த நுண்,Nun - ஸூக்ஷ்மமான இடையார்,Idaiyar - இடையை யுடைய பெண்களின் விரி குழல் மேல்,Viri kuzhal mel - விரிந்த (பரந்த) கூந்தலின் மேல் நுழைந்த,Nuzhaindha - (தேனை உண்ணப்) புகுந்த வண்டு,Vandu - வண்டுகள் இன் இசைக்கும்,In isaiyum - (தேனை யுண்டு களித்து) இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலே இனிது,Inidhu - போக்யமாக அமர்ந்தாய்,Amarnthai - எழுந்தருளி யிருப்பவனே! உன்னை கண்டார்,Unnai kandar - உன்னைப் பார்த்தவர் இவனை பெற்ற வயிறு உடையாள்,Ivanai petra vayiru udaiyaal - இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ,Enna nonbu notraal kolo - என்ன தபஸ்ஸு பண்ணினாளோ! என்னும்,Ennum - என்று கொண்டாடிச் சொல்லுகிற வார்த்தை,Varthai - வார்த்தையை எய்துவித்த,Eythuvitha - (எனக்கு) உண்டாக்கின இருடீகேசா,Irudheekesa - ஹ்ருஷீகேசனே! முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக. |
| 134 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 7 | பெண்டிர் வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுது மென்னு மாசையாலே கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7 | கண்டவர்கள்,Kandavargal - (உன்னைப்) பார்த்தவர்களான பெண்டிர் வாழ்வார்,Pendir vaalvar - (தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள் நன் ஒப்பாரை,Nan opparai - உன்னைப் போன்ற குழந்தைகளை பெறுதும்,Peruthum - பெறுவோம் (பெற வேணும்) என்னும்,Ennum - என்கிற ஆசையாலே,Aasaiyale - ஆசையினாலே போக்கு ஒழிந்தார்,Pokku ozhindar - (உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்; வண்டு உலாம்,Vandu ulaam - வண்டுகள் ஸஞ்சரிக்கிற பூ,Poo - புஷ்பங்களை யணிந்த குழலினார்,Kuzhalinar - கூந்தலை யுடையவர்கள் கண் இணையால்,Kan inaiyaal - (தமது) இரண்டு கண்களினாலும் கலக்க நோக்கி,Kalakka nokki - (உனது) திருமேனி முழுவதும் பார்த்து உன்,Un - உன்னுடைய வாய் அமுதம்,Vai amudham - அதராம்ருதத்தை உண்ண வேண்டி,Unna vendi - பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய் கொண்டு போவான்,Kondu povaan - (உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு வந்து நன்றார்,Vandhu nandrar - வந்து நிற்கிறார்கள்; கோவிந்தா,Govinda - கோவிந்தனே! நீ முலை உணாய்.,Nee mulai unai - நீ முலை உணாய். |
| 135 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 8 | இருமலை போலெதிர்ந்த மல்லர் இரு வரங்கம் எரி செய்தாய் உன் திருமலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குலேறி ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–2-2-8 | இரு மலை போல்,Iru malai pol - இரண்டு மலை போலே (வந்து) எதிர்ந்த,Ethirntha - எதிர்த்து நின்ற மல்லர் இருவர்,Mallar iruvar - (சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய அங்கம்,Angam - உடம்பை எரி செய்தாய்,Eri seithai - (பயத்தாலே) எரியும்படி செய்தவனே! வந்து,Vandhu - (நீ) வந்து என் அல்குல் ஏறி,En alkul eri - என் மடிமீது ஏறிக் கொண்டு உன்,Un - உன்னுடைய திரு மலிந்து திகழும் மார்வு,Thiru malindhu thigazhum maarvu - அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது தேக்க,Thekka - (முலைப் பாலால்) நிறையும்படி ஒரு முலையை,Oru mulaiai - ஒரு முலையை வாய் மடுத்து,Vai maduthu - வாயிலே வைத்துக் கொண்டு ஒரு முலையை,Oru mulaiai - மற்றொரு முலையை நெருடிக் கொண்டு,Nerudik kondu - (கையினாலே) நெருடிக் கொண்டிருந்து ஏங்கி ஏங்கி,Engi engi - (மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்) இளைத்திளைத்து இரு முலையும்,Iru mulaigal - (இப்படி) இரண்டு முலையையும் முறை முறை ஆய்,Murai murai aai - மாறி மாறி இருந்து,Irundhu - பொருந்தியிருந்து உணாய்,Unai - உண்பாயாக. |
| 136 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 9 | அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினாற்போல் செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம அங்கமரர்க் கமுதளித்த அமரர் கோவே முலையுணாயே–2-2-9 | அம்ம,Amma - தலைவனே! அங்கு,Angu - (அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த) அக் காலத்திலே விம்ம,Vimm - (அவர்கள் வயிறு) நிரம்பும்படி அமரர்க்கு,Amararkku - (அந்த) தேவர்களுக்கு அமுது அளித்த,Amudhu alitha - (க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த அமரர் கோவே,Amarar kove - தேவாதிராஜனே! அம் கமலம் போது அகத்தில்,Am kamalam podhu agathil - அழகிய தாமரைப் பூவினுள்ளே அணி கொள் முத்தம் சிந்தினால் போல்,Ani kol mutham sindhinal pol - அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி செம் கமலம் முகம்,Sem kamalam mugam - செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது வியர்ப்ப,Viyarpa - வியர்த்துப் போக இ முற்றத்தூடே,I mutraththude - இந்த முற்றத்திலேயே தீமை செய்து,Theemai seithu - தீம்பைச் செய்து கொண்டு அங்கம் எல்லாம் புழுதி ஆக,Angam ellam puzhudhi aga - உடம்பெல்லாம் புழுதி படியும்படி அளைய வேண்டா,Alaiya venda - புழுதி யளையாதே; முலை உணாய்,Mulai unai - முலை யுண்ண வாராய். |
| 137 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 10 | ஓட வோடக் கிங்கிணிகள் ஒலிக்கு மோசைப் பாணியாலே பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன் ஆடி யாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை யாடி ஓடி யோடிப் போய் விடாதே உத்தமா நீ முலையுணாயே–2-2-10 | ஓடஓட,Odaoda - (குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால் ஒலிக்கும்,Olikkum - சப்திக்கின்ற கிண் கிணிகள்,Kin kinigal - பாதச் சதங்கைகளினுடைய ஓசைப் பாணியாலே,Osai paaniyale - ஓசையாகிற சப்தத்தால் பாடிப் பாடி,Paadi paadi - இடைவிடாது பாடிக் கொண்டு அதனுக்கு ஏற்ற கூத்தை,Athanukku etra koothai - அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை அசைந்து அசைந்திட்டு,Asaindhu asaindhittu - வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து ஆடி ஆடி,Aadi aadi - ஆடிக் கொண்டு வருகின்றாயை,Varugindraiyai - வருகின்ற உன்னை பற்பநாபன் என்று இருந்தேன்,Parpanapan endru irundhen - (வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்; நீ,Nee - நீ ஆடி,Aadi - ஆடிக்கொண்டே ஓடிஓடிபோய் விடாதே,Odi odipoi vidaathe - (என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே முலை உணாய்.,Mulai unai - முலை உணாய். |
| 138 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 11 | வாரணிந்த கொங்கை யாய்ச்சி மாதவா உண் ணென்ற மாற்றம் நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே–2-2-11 | வார் அணிந்த,Vaar anintha - கச்சை அணிந்து கொண்டிருக்கிற கொங்கை,Kongai - ஸ்தநங்களையுடைய ஆய்ச்சி,Aaychi - யசோதை மாதவா,Maadhavaa - மாதவனே! உண்,Un - முலையை (உண்பாயாக) என்ற,Endru - என்று (வேண்டிச்) சொன்ன மாற்றம்,Maatram - வார்த்தையைக் குறித்தனவான நீர் அணிந்த குவளை,Neer anintha kuvalai - நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின் வாசம்,Vaasam - நல்ல வாசனை நிகழ நாறும்,Nigazha naarum - ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும் பார் அணிந்த,Paar anintha - பூமி முழுவதும் அழகாகப் பரவிய தொல் புகழான்,Thol pugazhaan - பழமையான கீர்த்தியை யுடையவருமான பட்டர்பிரான்,Pattaripiraan - பெரியாழ்வார் அருளிச் செய்த பாடல்,Paadal - பாசுரங்களை வல்லார்,Vallar - ஓத வல்லவர் சீர் அணிந்த,Seer anintha - குணங்களாலழகிய செம் கண் மால் மேல்,Sem kan maal mel - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில் சென்ற,Sendra - பதிந்த சிந்தை,Sindhai - மநஸ்ஸை பெறுவர்,Peruvaar - அடைவார்கள் |
| 3013 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.) 9 | கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து, ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்; வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9 | அரவு அணையாய்,Aravu anaiyaay - சேஷசாயியான பெருமானே!, நீ,Nee - நீ நின் குரை கழல்கள்,Nin kurai kazhalkal - (அபிமதரான சிலரை) ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே கூட்டுதி,Kootuthi - சேர்த்துக் கொள்ளுகிறாய்; இமையோரும்,Imayorum - (திருவுள்ள மில்லையாகில்) (ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும் தொழா வகை செய்து,Thoza vakai seydhu - கண்டு அநுபவியாதபடி பண்ணி ஆட்டுதி,Aattuthi - அலைக்கின்றாய்; அஃது,Ahdhu - இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை அடியேனும்,Adiyenum - நானும் அறிவன்,Arivan - அறிந்தேயிருக்கின்றேன்; என்னை,Ennai - எனக்குண்டான வேட்கை எல்லாம் விடுத்து,Vedkai ellaam viduthu - விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து உன் திரு அடியே,Un thiru ade - உனது திருவடிகளையே சுமந்து உழல,Sumanthu uzhal - நான் தலையால் சுமந்து திரியும்படி கூட்ட அரிய திரு அடிக்கண்,Kootu ariya thiru adikkan - துர்லபமான திருவடிகளிலே கூட்டினை,Koottinai - சேர்த்துக் கொண்டாய்; நான் கண்டேன்,Naan kandeen - இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன் |
| 3096 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து, இப்படி இவர்கள் படுகிற துக்கங்களைப் போக்கி யருள மாட்டாயாகில், என்னை யாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறர்.) 2 | சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை? ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே! கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2 | சாம் ஆறும்,Saam aarum - திடீரென்று மரண மடைவதும் கெடும் ஆறும்,Kedum aarum - பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக) தமர்,Thamar - தாயாதிகளும் உற்றார்,Urraar - உறவினர்களும் தலைத்தலைப்பெய்து,Thalai thalaipeythu - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து நான்காம்பத்து ஒன்பதாந்திருர்ய்மொழி,Naankaam pathu onpathaandhirury mozhii - நண்ணுதாத்முறுலலிப்ப ஏமாறி கிடந்து அலற்றும் இவை உலகு இயற்கை என்ன,Emaari kidaanthu alatrum ivai ulagu iyarkai enna - ஏங்கிக்கிடந்து கதலும் படியான இந்த லோக யாத்ரைகள் என்னே! அரவு அணையாய் அம்மானே!,Aravu anaiyaam ammaane! - சேஷசாயியான ஸ்வாமியே! நான்,Naan - அடியேன் ஆம் ஆறு ஒன்று அறியேன்,Aam aarum ondru ariyen - உய்யும்வகையைச் சிறிது மறிகின்றிலேன்; அடியேனை குறிக்கொண்டு கூம் ஆறு,Adiyenai kuri kondhu koom aarum - இப்படிப்பட்ட அடியேனை திருவுள்ளம் பற்றி (திருவடிவாரத்திலே) அழைத்துக்கொள்ளும்படி விரை,Virai - விலைந்தருயவேணும். |